Tuesday, August 9, 2016

இடத்தால் மட்டுமே பிரிந்திருக்கிறோம்..

பொதுச் சேவையில் ,சமூக இயக்கங்களில் எனக்கு
சிறு வயது முதலே அதிக ஈடுபாடு உண்டு

அந்த அந்த வயதில் அந்த அந்த சூழலில்
வய்து மற்றும் சூழலுக்கு ஏற்றார்ப் போல
ஒரு சமூக மனிதனாகவே வாழ எனக்குத் தொடர்ந்து
வாய்ப்புக் கிடைத்ததுக் கூடப் பாக்கியம்தான் என்கிற
நினைப்பும் எப்போதும் உண்டு

அதன் தொடர்சியாய் இப்போது  கூட உலகளாவிய
சேவை அமைப்பான அரிமா சங்கத்தில் தற்போது
மாவட்டத் தலைவராகத் தொடர்கிற எனக்குக்
கடந்த வருடம் வட்டாரத் தலைவராக
பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது

அதற்கான பயிற்சி வகுப்பு மலேசியாவில் உள்ள
ஸபா என்கிற அற்புதமான தீவில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. அந்தப் பயிற்சி முகாம்
அந்த அற்புதத் தீவு ,மற்றும் மலேசியச் சுற்றுப்பயண
அனுபவங்கள் எல்லாம் இன்னும் எழுதப்படாமலேயே
உள்ளது

(பயிற்சி முடித்து அதற்கானச்  சான்று பெறுதல் )

சமீபத்தில் நமது முன்னாள் ஜனாதிபதி
உடலால் மறைந்த அப்துல் கலாம் அவர்களின்
காணோளி ஒன்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது

அதிலொரு பள்ளி மாணவன் "தங்கள்
கண்டுப்பிடிப்புகளிலேயே சிறந்த கண்டுபிடிப்பாக
எதைக் கருதுகிறீர்கள் " எனக் கேட்க, அவர்
விண்ணாய்வுத் தொடர்பாக தான் உடன் இருந்து
கண்டுபிடித்தவைகளையெல்லாம் சொல்லி
முடிவாக, ஊனமுற்றவர்களுக்கு பயன்படும்படியாக
எடைக் குறைந்த செயற்கைக் காலணிகள்
செய்ததுதான்எனச் சொல்லி முடித்தார்

https://www.facebook.com/BalaajeeCares/videos/1060691787299933/

அதைப் போல சுற்றுலாவை மட்டுமே பிரதான
வருமானமாகக் கொண்டிருக்கிற அந்த அழகிய
ஸபா தீவு, அமெரிக்க  வேகாவை மிஞ்சும்படியான
மலேசிய காஸினோ,பத்துமலை முருகன் கோவில்
இன்னும் பல நினைவில் இருந்த போதும்
இவைகளையெல்லாம் மிஞ்சும்படியாக ஒரு
நினைவு தொடர்ந்து மனதில் பசுமையாய்த் தொடர்கிறது
என்றால் .....அது.....

( நீளம் கருதி அடுத்தப் பதிவில் 

16 comments:

ஸ்ரீராம். said...

அது.....?

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா...

நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.இந்த பயணத்தின் வழி தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.மிக்க மகிழ்வு வாழ்த்துக்கள் ஐயா

G.M Balasubramaniam said...

சஸ்பென்ஸ்....?

புலவர் இராமாநுசம் said...

தொடருங்கள்! எப்பொழுத் இந்தியா வருவீர்கள்!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உங்கள் பணிக்கு வணக்கங்கள்.
தொடர்கிறேன்..

Dr B Jambulingam said...

பணி தொடர வாழ்த்துகள்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிறு வயது முதலே
பொதுச் சேவையில் ,சமூக இயக்கங்களில்
அதிக ஈடுபாடு கொண்டு
தாங்கள் செய்த மக்கள் பணிக்கு
எனது பாராட்டுகள்
தங்கள் பணி தொடர
எனது வாழ்த்துகள்


குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

Ramani S said...

ஸ்ரீராம். //அது...

இரு பொருள் கொடுத்தது
மிகவும் இரசித்தேன்
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

கவிஞர்.த.ரூபன் //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

G.M Balasubramaniam //
விடுவிக்கப்பட்டது

தங்கள் வரவுக்கு மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

புலவர் இராமாநுசம் //

டிஸம்பர் முதல் வாரம் வர உள்ளேன்
பதிவர் சந்திப்புக் குறித்து நீங்கள்
தூண்டுதல் செய்தால்தான்
நடக்க வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன்

.

Ramani S said...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...
உங்கள் பணிக்கு வணக்கங்கள்.//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

Dr B Jambulingam said...
பணி தொடர வாழ்த்துகள்//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...///தங்கள் வாழ்த்து எனக்கு கூடுதல்
உற்சாகமளிக்கிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன்.....

Thulasidharan V Thillaiakathu said...

அது என்ன இதோ அடுத்த பதிவுக்குச் செல்கின்றோம்

Post a Comment