Thursday, August 11, 2016

பதிவர்களாய்..கவிஞர்களாய்

நம்
இளமைப் பருவத்தில்
தீமைகள் இல்லாமல் இல்லை

ஆயினும்
அவைகள் எல்லாம் எங்கோ
மிக மறைவாய்க்
கண்ணுக்குத் தெரியாதபடி..
கைகளுக்கு எட்டாதபடி
மிக மிக முயன்றால் மட்டுமே
அபூர்வமாய் கிட்டும்படி...

இப்போது
நல்லவைகள் இருக்கிறபடி...

நம்
இளமைப் பருவத்தில்
தீயவர்கள் இல்லாமல் இல்லை

ஆயினும்
அவர்கள் எல்லாம்
மிக ஒதுங்கியபடி
அனைவருக்கும் தெரியாதபடி
அன்றாடவாழ்வில் தட்டுப்படாதபடி
அளவை மீறுகையில் மட்டும்
இருப்புத் தெரியும்படி

இப்போது
நல்லவர்கள் உள்ளபடி

என்ன செய்வது ?

கள்குடித்தக் குரங்கதுப்
பாறையில் நின்றபடித்
தன் முட்டைவைத்து
விளயாடுவதைப்
பார்த்துத் துடிக்கிறப்
பெட்டைகளாய்...

நாகரீகக் காலம்
நுகர்வுக்கலாச்சாரத்தில்
இளமையைவைத்து
விளையாடுவதைப்
பார்த்துத் துடிக்கிறோம்
ஊமைகளாய்..

என்ன செய்யலாம் ?

மழையில்லை என
புலம்பிய படியும்
அழுதபடியும்
இருத்தலை விடுத்து
நமபிக்கையுடன்
உழுதுக் கொண்டிருக்கும்
புஞ்சை விவசாயியாய்

மாற்றும் வழியதுத்
தெரியவில்லையெனப்
புரியவில்லையெனச்
சும்மா இருத்தலைவிடுத்து
நம்பிக்கையுடன்
எழுதிக்கொண்டிருப்போம்
பதிவர்களாய்..கவிஞர்களாய்

23 comments:

KILLERGEE Devakottai said...

நமது எண்ணங்கள்தானே வண்ணங்களாய், பதிவுகளாகின்றது.

கவிஞர்.த.ரூபன் said...
This comment has been removed by the author.
கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

கத்தியை தீட்டத்தீட்டத்தான் கூர்மையாகும் அதைப்போல நாமும் தொடர்வோம் நமது எண்ணங்களை.பதிவாக

Sethuraman Anandakrishnan said...

நாம் பதிவோம். அது சி லர் உள்ளத்தில் பதியும்.
அக்னிக்குஞ்சுபோல் ஒரு சக்தி ஊதிப் பெரிதாக்கும் .
நல்லதே நடைபெறும் அல்து அவனியில் அதிகம் தானே
முள் அதிகம் மலர் ஒன்றே.
கதிர் ஒன்று மணி அதிகம் .

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

Sethuraman Anandakrishnan said...
"நாம் பதிவோம். அது சிலர் உள்ளத்தில் பதியும்." என்ற Sethuraman Anandakrishnan அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

எழுதுவோம்
எழுத்துகளை விரும்புவோர்
ஏற்றுக்கொள்வர்...
வாசகர் விருப்பத்துக்கு ஏற்ப
எழுதுவோர்
வெற்றி நடை போடுவர் இங்கே!

Dr B Jambulingam said...

எழுதுவோம், தொடர்ந்து.

G.M Balasubramaniam said...

அறிந்ததை பகிர்வது அத்தனை எளிதல்ல. நேர்காணலுக்குப் போய் விடை தெரிந்தும் சொல்ல முடியாமல் தவிப்போரே மிகுதிநேர்காணலும் தொடர்கிறது எழுதுவோர் எழுதுகின்றனர் மற்றையோர் வாசிக்கிறார்களா நாம் சொல்ல வந்தது போய்ச் சேருகிறதா என்று தெரியாமலேயே தொடர்ந்து எழுதுவோம்

Asokan Kuppusamy said...

போற்றுவோர் போற்றட்டும், பழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்ற கவியரசர் கண்ணதாசனின் வழியினை பின்பற்றுவோம். மிக்க நன்று

‘தளிர்’ சுரேஷ் said...

அருமையா சொன்னீங்க! வாழ்த்துக்கள்!

வலிப்போக்கன் said...

சும்மா இருத்தலைவிடுத்து
நம்பிக்கையுடன்
எழுதிக்கொண்டிருப்போம்
பதிவர்களாய்..கவிஞர்களாய்---

வலிப்போக்கன் said...

சும்மா இருத்தலைவிடுத்து
நம்பிக்கையுடன்
எழுதிக்கொண்டிருப்போம்
பதிவர்களாய்..கவிஞர்களாய்---

நம்பள்கி said...

சில மாநிலங்களில் பஸ் நம்பர்கள் கூட அந்த மொழியில் எழுதியுள்ளார்கள். இது இப்ப இல்லை. நான் மாணவனாக இருக்கும் போது, inter med college cultural festival-ல் எங்கள் கல்லூரி சார்பில் நாடகத்தில் நடிக்க சென்ற போது, அந்த ஊரில் சுற்றும் போது...பஸ்ஸை பிடிக்க கஷ்டப்பட்டோம்.

மொழியே தெரியாத போது, மொழியில் நம்பர் என்றால் எப்படி? நாங்கள் அப்ப பட்ட கஷ்டம் எங்களுக்கு இன்றும் நியாபகம் உள்ளது. எந்த மாநிலம் என்று நியாபகம் இல்லை! ஆனால், இந்த ஐந்தில் ஒன்று...டெல்லி, பாம்பே, பங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத், (பாண்டி --can be excluded! அங்கு தமிழ் தான்).

இந்த அழகில் அப்போ சோ ராமாசாமி வகையறாக்கள் அபேட்சகரை மாற்றியதர்க்கும், பஸ்ஸை பேரூந்து என்று மாற்றியதற்கும் நக்கல் நையாண்டி--அதை மொழி வெறி என்று கிண்டல். மற்ற மாநிலங்கள் செய்ததை தட்டிக் கேட்க துப்பில்லை. இதற்கு நம் ஜால்ரா தமிழர்களும் துணை!

பின்குறிப்பு:
அபேட்சகர் என்றால் இந்த இளம் தலை முறைக்கு தெரியுமா? அப்படி என்றால்...வேட்பாளர். ஏன் இந்த எரிச்சல் தமிழ் மொழி மீது அருவருப்பு---கூட அதை மாற்றியது மு.க.

Ramani S said...

KILLERGEE Devakottai //

உடன் முதல் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

கவிஞர்.த.ரூபன் //

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

Sethuraman Anandakrishnan said...//

முள் அதிகம் மலர் ஒன்றே.
கதிர் ஒன்று மணி அதிகம் .//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...//

எழுதுவோம்
எழுத்துகளை விரும்புவோர்
ஏற்றுக்கொள்வர்...
வாசகர் விருப்பத்துக்கு ஏற்ப
எழுதுவோர்
வெற்றி நடை போடுவர் இங்கே!//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

Dr B Jambulingam said...//
எழுதுவோம், தொடர்ந்து.//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

G.M Balasubramaniam said...//
அறிந்ததை பகிர்வது அத்தனை எளிதல்ல. நேர்காணலுக்குப் போய் விடை தெரிந்தும் சொல்ல முடியாமல் தவிப்போரே மிகுதி//
தொடர்ந்து எழுதுவோம்//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

Asokan Kuppusamy said...//
போற்றுவோர் போற்றட்டும், பழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்ற கவியரசர் கண்ணதாசனின் வழியினை பின்பற்றுவோம். மிக்க நன்று//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

‘தளிர்’ சுரேஷ் said...//
அருமையா சொன்னீங்க! வாழ்த்துக்கள்!//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

வலிப்போக்கன் //

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

நம்பள்கி //

இது அரசியல்வாதிகளின்
பொய்த் தமிழ் பற்றுக் குறித்து
எழுத வந்தது
கடைசி வரிகளில் அதை
குறித்துள்ளேன்
அதற்குத் தோதாக முன்னால்
அந்தப் பெயர் மாற்றத்தைக் குறிப்பிட்டுள்ளேன்
அவ்வள்வே

உடன் வரவுக்கும் விரிவான
அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

நம்பிக்கைதானே வாழ்க்கை. நம்பிக்கையுடன் எழுதுவோம் எடுத்துக் கொள்பவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்...நல்லது பலரை அடைந்தால் நல்லதுதானே.நம் எண்ணங்களை வடிப்போம்

Post a Comment