பயிற்சி வகுப்புகள் ஸபா தீவில் முடிந்ததும்
மலேசியாவைச் சுற்றிப்பார்க்கும் விதமாக
மலேசியாவில் ஏற்கெனவே அறைகள்முன்பதிவு
செய்திருந்தோம்
எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு நிலைத் தகவலாக
என்னுடை பதிவில் நான் மலேசியா வருகிற
விஷயத்தையும், தங்குமிடத்தையும்
பதிவு செய்திருந்தேன்
தினமும் காலையில் சிற்றுண்டு முடித்ததும்
பகுதி பகுதியாக அவர்கள் அவர்களுக்குப்
பிடித்த இடத்தைப் பார்க்கக் கிளம்பினால்
மதிய உணவு மற்றும் இரவு உணவு முடித்து
ஓய்வெடுக்கத்தான் தங்குமிடம் திரும்புவோம்
அப்படி இரண்டாம் நாள் இரவு பத்து
மணி அளவில் அறைக்குத் திரும்புகையில்
வரவேற்பறையில் இருந்த என் நண்பர்
"காலையில் இருந்து உங்கள் மலேசிய
நண்பர் ஒருவர் உங்களைப் பார்ப்பதற்காகக்
காத்திருக்கிறார்.அவர் உங்களை ரமணி என
விசாரித்திருக்கிறார். அந்தப் பெயர் நம்
குழுவில் உள்ளோர் பலருக்கும் தெரியாததால்
அப்படி யாரும் வரவில்லையென்று
சொல்லி இருக்கிறார்கள்.ஆயினும் அந்த நண்பர்
உறுதியாக வந்திருக்கிறார் எனச்
சொல்லிக் கொண்டிருக்கையில் நல்ல வேளை
நான் வந்தேன். எனக்கு உங்கள் துணைப்பெயர்
தெரியும் என்பதால் நான் தான் நீங்கள் வந்த விவரம்
சொல்லி இரவுதான் வருவார்கள் எனச்
சொல்லி இருந்தேன்
அவர்கள் ஊர் தூரம் என்பதால் சென்று வருவதை விட
அருகில் அறை எடுத்துத் தங்குவதாகவும் எப்படியும்
இரவு பார்த்துவிட்டே ஊர் சொல்வதாகவும்
சொன்னார்கள் " என்றார்
மலேசியா வந்ததும் உடன் தற்காலிக போன்
இணைப்பு எடுக்காதது எவ்வளவு தவறு என
நினைத்தபடி வாயிலுக்கு வர அங்கே பதிவர்
நண்பர் ரூபன் அவர்கள் தன் நண்பருடன்
வாயிலியே காத்திருந்தார்.
என்னைக் கண்டதும் "தாங்கள் ரம்ணி ஐயா
தானே "எனக் கூறி கட்டிப் படிக்க எனக்குக்
கண் கலங்கிவிட்டது
எழுத்து மற்றும் பின்னூட்டத்தின் வாயிலாக
தொடர்பு கொண்டதன்றி பேசியோ பார்த்தோ
நாங்கள் தொடர்பு கொண்டதில்லை
அப்படி இருந்தும் நான் வந்திருக்கிற தகவல்
அறிந்து எப்படியும் பார்க்கவேண்டும் என
காலை முதல் காத்திருந்ததை எண்ண எண்ண
வலைத்தளம் மூல்ம் உண்டாகும் இணைப்பு
எத்தனை உண்மையானது, வலுவானது
அன்பானது எனப் புரிந்தது
பின் அவருடன் பின்னிரவு வரை பேசிக்
கொண்டிருந்துவிட்டு அருகில் இருந்த
சிற்றுண்டிச் சாலையில் உணவருந்திவிட்டுப்
பிரிந்தோம்
மறு நாளும் எனக்கும் என மனைவிக்குமாக
மதிப்பு மிக்க பரிசுப் பொருட்களுடன் வந்திருந்து
இரவு எங்களுடன் தங்கிவிட்டுச் சென்றது
இன்று வரை மற்க்கமுடியாத நிகழ்வாக
மலேசியாவில் மயக்க வைத்த பல இடங்கள்
தந்த சுகந்த நினைவுகளை விட
இன்றுவரை இந்த நினைவுதான் என் நெஞ்சில்
அதிகம் நிறைந்திருக்கிறது
இந்தச் சந்திப்பே பின்னாளில் ஊற்று என்கிற
இலக்கிய இணய தள அமைப்பை உருவாக்கக்
காரணமாகவும் இருந்ததது
நண்பர் பதிவர் ரூபன் அவர்களுடன் இருந்த
அந்த மகிழ்வான தருணங்களை இங்குப்
பதிவு செய்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்
இத்தனை நாள் கழித்து இந்த நெகிழ்சியானப்
பதிவு இப்போது எதற்கு ?
அதற்குக் காரணமிருக்கிறது..
அது அடுத்தப் பதிவில்
8 comments:
நல்ல அனுபவம். தம்பி ரூபன் பாசமானவர்.
வணக்கம்
ஐயா.
தங்களை சந்தித்து பேசியது ஒன்றாக இருந்த நாட்களை எண்ணிப்பார்க்கிறேன் ஐயா விரைவில் தமிழ்நாட்டில் சந்திப்போம் ஐயா.தொடருங்கள்.
Pisiranthaiyar
Pisiranthaiyar
'ஊற்று' இலக்கிய இணையக் குழுவின்
முதன்மை வழிகாட்டி தாங்களும்
'ஊற்று' இலக்கிய இணையக் குழுவின்
தலைவர் தம்பி ரூபன் அவர்களும்
சத்தித்த பட்டறிவு (அனுபவம்) நினைவுகள்
பகிர்ந்த தங்களுக்குப் பாராட்டுகள்
நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சிதான் அதேபோல் எதிர்பார்க்கும் நண்பர்களை சந்திக்க முடியாமல் போவதும் வருத்தம்தான்
சந்திப்புக்கு வாழ்த்துகள் காரணப்பதிவை அறிய காத்திருக்கிறேன்.
த.ம.
மீண்டும் சஸ்பென்ஸ்!! ரூபன் தம்பி மிகவும் அன்பானவர். பாசமிக்கவர்!!! இதோ அடுத்து...
Post a Comment