Monday, August 29, 2016

ரஜினி ரஞ்சித் கபாலி ( 7 )

                                    காட்சி 6  ( தொடர்ச்சி )

ரஞ்சித் :
(ரஜினி அவர்கள் ஆர்வமாக  ரஞ்சித்தின் பதிலை
எதிர்பார்த்து முன் பக்கம் முகம் சாய்க்க...
ரஞ்சித் தொடர்கிறார் )

சார்.. ஒன் லைன்னா இப்படிச் சொல்லலாம் சார்
ஒரு ஒடுக்கப்பட்டவன் தாதாவாக எழுச்சி அடைவதும்
அதனால தாதாக்களிடையே உண்டாகும் பாதிப்புக்களும்
தனி மனிதனாக அவன் அடையும் பாதிப்புக்களும் ....

(இப்படிச் சொல்லிவிட்டு ரஜினி மற்றும் தாணு
அவர்களின் முகக் குறிப்பை அறிய முயல்கிறார்)

ரஜினி:
(சிறிது நேரம் யோசித்துப் பின்..)

வெரி நைஸ் ரஞ்சித்...ரொம்ப அருமை
ஆனா இதுல நாலு விஷயத்தை மிகச் சரியா
சொல்ல வேண்டி இருக்கும் இல்லையா

ஒடுக்கப்பட்டவனாக முதல்ல
பின்னால அவனோட எழுச்சி
அதனால தாதாக்களிடையே வரும் பிரச்சனை
அப்புறம் இவனோட தனி மனிதப் பாதிப்பு

இந்த நாலு விஷயத்தையும் மிகச் சரியா
ஒரு லீட் எடுத்து இணைக்கணும்

கொஞ்சம் எதிலாவது கூடக் குறச்சுப் போனா
நாலும் தனித் தனியா திட்டுத்  திட்டா
தெரிய ஆரம்பிச்சுடும்
படம் பார்க்க ஒரு நிறைவு இருக்காது

திரைக்கதைப் பண்ணும் போது அதுல ரொம்பக்
கவனமா இருக்கணும்

நீங்க அதைச் சரியா பண்ணீடுவீங்க
எனக்குச் சந்தேகமில்லை...
இந்த படத்தைப் பொருத்த வரை நான்
கதை விஷய்த்தில தலையிடப் போவதில்லை
முழுசா இது டைரக்ரோட படமா
இருக்கணும்னு நினைக்கிறேன்

ஆகையால என ரசிகர்களை மனசுல வச்சு
பஞ்சு டயலாக அது இது எல்லாம் வேணாம்
கதைக்கு எது தேவையோ அதை மட்டும்
சரியா செஞ்சா போதும் சரியா

ரஞ்சித் :
(நெகிழ்ச்சியுடன் ) என்னை ந்ம்பி இவ்வளவு
பொறுப்புத் தர்றது பெருமையா இருந்தாலும்
கொஞ்சம் பயமாகவும் இருக்கு சார்

ரஜினி ( முன் நகர்ந்து தோளைத் தட்டியபடி)
பயம் வேண்டியதில்லை. நல்லா சுதந்திரமா
சந்தோஷமா செய்ங்க..படம் நல்லாவே  வரும்
ஆனா ஒரு சில சஜ்ஜஸன்...இதை மட்டும்
கவனத்துல வைச்சுச் செய்ங்க...

(எனச் சொல்லி நிறுத்தி விட்டு மெதுவாக
முன் பின் யோசித்தபடி நடந்து விட்டு... )

நமப்ர் ஒன்
வெளி நாடுங்கிறது இலங்கை வேண்டாம்
எப்படிச் சூதானமா செய்தாலும் ஏதாவது
பிரச்சனை வர வாய்ப்பு இருக்கும்

இரண்டு
மெயின் ரோல் நடிகைகள்
தென் இந்தியாவில் வேண்டாம்
அது பாலிவுட்டா இருக்கட்டும்
அதுதான் எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படியா
இருக்கும்

மூணு
தாதான்னு எனக்கு அதிக உடல் சிரமம் தராம
பாத்துக்கங்க. வயசு உடல் நிலை இதையும்
கவனமா வச்சுகங்க.அதுக்கு வில்லன் ரோல்
பண்ணுகிறவர் வெளி நாட்டுக்காரரா இருந்தாலும்
ஸ்டைலா இருக்கிறவரைப் பாருங்க
பெரிய பாடி பில்டப் ஆசாமி வேண்டாம்
அது சரியா ஈகுவலா சூட் ஆகாது

நாலு
இதுதான் முக்கியம் படத்துல எல்லோருமே
கவனிக்கும்படியா விமர்சிக்கும்படியா ஒரு
கான்ரோவர்ஸியலான பிரச்சனையை லேசா
தொட்டு விடுங்க
அதுதான் தொடர்ந்து மீடியாவுல, மத்த
ஊடகங்கள்ல தொடர்ந்து நம்ம படத்தைப்
பத்திப் பேச அவல் மாதிரிப் பயன்படும்

ரஞ்சித் இப்போதைக்கு இவ்வளவுதான்
ஊடே எதுவும் தோணினா நானே உங்களுக்கு
தகவல் தாரேன்

நீங்க மூணு மாசத்தில முழு ஸ்கிரிப்ட் செய்யுங்க

( பின் தாணுவின் பக்கம் திரும்பி)

என்ன தாணு சார்...
நான் சொன்னதெல்லாம் சரிதானா
நீங்க எதுவும் சொல்லினுமா....

தாணு
சார் நான் நீங்க டைரக்டர்கிட்ட பேசப் பேச
நான் மலைச்சுக் கேட்டுக்கிட்டே இருந்தேன் சார்
இவ்வளவு தீர்க்கமா ஒவ்வொரு விஷயத்தில
இருக்கிறதுனால தான் நீங்க தொடர்ந்து
சூப்பர் ஸ்டாரா ஜொலிக்க முடியுது
இது வெளியில எத்தனைப் பேருக்குத் தெரியும்...

ரஜினி
(தாணு பேசுவதைத் தடுத்தபடி  )
தாணு சார்.. சப்ஜெட் தடம் மாறுது
படம் படம் மட்டும் பத்தியே பேசுங்க சரியா

(ரஞ்சித் பக்கம் திரும்பி ...)
ரஞ்சித் கொஞ்சம் டென்ஸனா இருக்கீங்கன்னு
நினைக்கிறேன்..வாங்க கொஞ்சம் ரிலாக்ஸுடா
தோட்டத்தில நடந்திட்டு வரலாம்
அப்புறம் ப்ரொடூஸர்கிட்டே ஒரு ரவுண்ட்
ஓபனா பேசலாம்

(எனச் சொல்லிய்படி ரஞ்சித்தை கைகொடுத்து
எழச் செய்கிறார்.பின் மூவரும் மெல்ல
தோட்டத்தை ரசித்தபடி நடக்கத் துவங்குகிறார்கள் )

4 comments:

சிவகுமாரன் said...

எனக்கென்னவோ நீங்கள் கதை டிஸ்கஷன் போது, ரஜினி கூட இருந்திருப்பீங்களோன்னு தோணுது.
கற்பனைன்னு கற்பனை பண்ண முடியாத அளவுக்கு கற்பனை , அருமை சார்

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன். நல்ல பகிர்வு...

bandhu said...

Sir, I think you are giving way more credit to them than they deserve.
இந்த அளவு அவர்கள் யோசித்திருந்தால் படம் நன்றாக வந்திருக்குமோ என்னவோ!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல கற்பனை! நான் இன்னமும் படத்தை பார்க்கவில்லை. (அதிமாக படத்திற்கெல்லாம் செல்வதில்லை.) ஆனால், தங்கள் கற்பனைக் கலந்த காட்சிகளை கொண்டே படம் பார்த்த திருப்தி வந்துவிட்டது.அந்தளவிற்கு காட்சிகளை நயம்பட சொல்லிச் செல்லுகிறீர்கள். தொடருங்கள். தொடர்கிறோம். நன்றி!

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Post a Comment