Wednesday, August 31, 2016

ரஜினி ,ரஞ்சித், கபாலி ( 8 )

                                      காட்சி  ( 7  )

(பண்ணை வீட்டை சுற்றி வந்த பின் டீ அருந்திவிட்டு
ஆசுவாசப்படுத்திக் கொண்டு புல் வெளியில்
போடப்பட்டிருந்த மர நாற்காலியில் அனைவரும்
அமரவும்...

(கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவராகவே )

ரஜினி:
தாணு சார் நாமளும் படம் சக்ஸஸ் ஆகணும்னு
எவ்வளவோ  மூளையைக் கசக்கி
எவ்வளவோ செலவழிச்சு எவ்வளவோ கஷ்டப்பட்டு
ஒரு படம் பண்றோம்

அப்ப்டியும் எப்படியும் ஒரு சில படம் ஃபிளாப்
ஆகிப்போகுது. படம் ஃபிளாப் ஆகணுன்னு
யாரும் படம் பண்றதில்ல

(சற்று நிறுத்தி )ஆனா அந்த சமயத்தில
மீடியாவா ஆகட்டும், டிஸ்ட்ரிபூட்டர்களாகட்டும்
கொடுக்கிற ஆண்டி ரியாக்ஸன்
ரொம்ப் ரொம்ப ஓவர் நான் ரெண்டு படத்தில
ரொம்ப அப்செட் ஆகிட்டேன்

ஆகையால இந்த முறை எப்பவும் போல்
நாம படத்தை வியாபாரம் பண்ணப் போறதில்லை
எல்லாம் வித்தியாசமா.. வித்தியாசமா செய்யப்போறோம்

(எனச் சொல்லியபடி இருவர் முகத்தையும் பார்க்கிறார்
இருவரும் ஒன்றும் புரியாமல்..ஆனால் ஆவலுடன்
தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்ததும்
உற்சாகத்துடன் மீண்டும் தொடர்கிறார் )

ஆமா ..எப்படி ஒரு பொருளுக்கு அதுக்கான
பெறுமான விலையை விட  கூடுதலா விக்கணும்னா
அந்த பொருளுக்கு செயற்கையா ஒரு டிமாண்டை
உருவாக்கி நினைச்ச விலைக்கு
வியாபாரி விக்குறாரோ
அதே  ஃபார்முலாவை இந்தப் படத்துக்குப்
பயன்படுத்தறோம்

எவ்வளகெவ்வளவு படத்தோட கதை லீக் ஆகாம
டீஸரை மட்டும் பயன்படுத்தமுடியுமோ

எவ்வளவுகெவ்வளவு எல்லா வகையான
மீடியாக்களையும் பயன்படுத்த முடியுமோ

அவ்வளவு பயன்படுத்தி அளவுக்கதிகமான
எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி எப்பவும் போல
முதல் வார கலெக்ஸன்னு இல்லாம

படம் வெளிவருவதற்கு முன்னாலேயே
அட்வான்ஸா எவ்வளவு கலெக்ஸன்
பண்ணமுடியுமோ அவ்வளவு பண்றோம்

எவ்வளவு காசு கொடுத்துன்னாலும் முதல் நாள்
பார்க்கறது முதல் வாரத்தில பார்க்கிறது
ஒரு கௌரவம்னு நினைக்கிற மாதிரி
ஒரு செயறகையா ஒரு சூழலை உருவாக்கறோம்
இதுவரை நம்ம தமிழ் பட உலகில யாரும்
செய்யாத மாதிரி.. இனி செய்ய முடியாத மாதிரி
அதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க

(என மூச்சு விடாமல் பேசி சற்று மூச்சு
வாங்க..)

(.தாணு தன் கை வசம் வைத்திருந்த
ஒரு சூட்கேஸைத் திறந்து சில
ஃபைல்களை வெளியே எடுத்தபடி.....)

தாணு:
சார்  நீங்க முதல் நாள் சொல்றப்போதே எனக்கு
கொஞ்சம் புரிஞ்சது சார்..அதை வைச்சு
பாலிவுட்ல் படத்தை ப்ரொமோட் பண்றவங்களை
வச்சு, வாரம் வாரம் செய்ய வேண்டியது
மாதா மாதம் செய்ய வேண்டியது
படம் ரிலீஸுக்கு முதல் வாரம் செய்ய வேண்டியது
முதல் நாள் செய்யவேண்டியன்னு
ஒரு பக்கா பிளான் ரெடி பண்ணிட்டேன் சார்

கிராமத்துல சின்ன சம்சாரி
எல்லா செலவும் செஞ்சு
கதிர்  பால்வைக்கிற நேரத்தில ,மேலுரத்துக்கும்
இரண்டு பாய்ச்சலுக்கும்  காசு இல்லாம
படற  கஷ்டம் மாதிரி நம்ம தயாரிப்பாளருங்க
எல்லாம்  இருக்கிற காசையெல்லாம்
தயாரிப்புக்கே செலவழிச்சுட்டு பிரிண்ட்டுக்கும்
விளம்பரத்துக்கும் இல்லாம படுகிற பாடுதான்
இங்கே வாடிக்கையாகிப் போச்சுசார்

நாம இந்தப் படத்துக்கு அப்படி இல்ல சார்
பட ப்ரோமோஷனுக்கே தயாரிப்புச் செலவு அளவு
பண்றோம் சார்

நிறைய ஸ்பான்ஸர் கூட நம்மளோட   சேர்ந்து  
 செலவு செய்யவும் ரெடியா இருக்காங்க சார்

(எனச் சொல்லி ஒரு ஃபைலை  எடுத்து
மெல்ல இருவர் முன் விரிக்கிறார் )

(தொடரும் )

6 comments:

ananthako said...

சமுதாய காதல் படுகொலைக்கு இந்த சிதறலே காரணம்.
பகுத்தறிவில்லா சுயநல பக்தி.
இந்துக்களே இந்த புதியஊர்வல பதட்டத்தை கைவிடுங்கள்.
நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போது
பக்தி இருந்தது. இறைபயம் இருந்தது.
இப்போது மிரட்டிபணம், ஆடம்பர விநாயகர், ஏழைகளுக்குஉதவாதஎதற்கும் உதவாத
கடவுள் அவமானம்.
ஜட்டியில் இறைவன் படம்போட்டு ஆணுறுப்புகாக்க, பெண்ணுறுப்பு காக்க என்பது பக்தி . அதற்கு எதிர்ப்பு.
ஆண்ட வன் ஜட்டி கற்பு பாதுகாக்கும்.
கீழே உள்ள கடவுள் அவமானம் மனிதர்களை சிதறடிக்கும்.
ஓம் கணேசனே போற்றி.
விநாயகா போற்றி,
உள்ளம் பதறுகிறது விநாயகா!
உன் நிலை கண்டு.

Avargal Unmaigal said...

ஹல்லோ சார் நீங்கள் உளவுத்துறையில் வேலை பார்கிறிங்க்களோ

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
உண்மை

”தளிர் சுரேஷ்” said...

தொடர்கிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

மதுரைத் தமிழனின் கேள்வி எனக்குள்ளும்... :)

தொடர்கிறேன் ஜி...

த.ம. +1

G.M Balasubramaniam said...

இப்போதும் அப்படித்தானே நடக்கிறது

Post a Comment