ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்பு
நடந்த ஒரு சிறு சம்பவம்
அப்போது அரசுத் துறையில் பொறியியல் துறையில்
பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
என்னிடம் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த
அடிப்படை ஊழியர் தன் மகனுக்குத் தீவீரமாக
பெண்பார்த்துக் கொண்டிருந்தார்.
பையன் பார்க்கக் கொஞ்சம் லெட்சணமாகவும்
இருப்பான். தனியாக ஒரு மோட்டார் மெக்கானிக்
ஷாப் வைத்தும் நடத்திக் கொண்டிருந்தான்
எனவே நிறைய இடத்தில் இருந்து சம்பந்தம் பேச
வந்தார்கள்.
அவர்கள் கொஞ்சம் சீர் செனத்தி ஜாஸ்தி
கொடுக்கும் /வாங்கும் இனமாக இருந்ததால்
இவர்கள் எதிபார்க்கும் அளவு கிடைக்காததால்
நிறையச் சம்பந்தம் தட்டிப் போய்க் கொண்டிருந்தது
அந்த வகையில் ஒரு நாள் லீவு எடுத்து வெளியூரில்
பெண் பார்க்கப் போய் வந்திருந்தார்.
எப்போதும் எல்லோரும் என்னிடம் தங்கள் தனிப்பட்ட
விஷயங்களை மனம் திறந்து பேசுவார்கள்
நானும் மனம் திறந்து எனக்குத் தோன்றும் கருத்தை
அக்கறையோடுச் சொல்வேன்
அந்த வகையில் வெளியூர் பெண் பார்க்கச் சென்ற
விஷயம் குறித்து அவரிடம் விசாரித்தேன்
அவரும் " ,பொண்ணு அழகா இருக்கு
பையனுக்குப் பிடிச்சிருக்கு.பொண்ணுக்கும்
பையனைப் பிடிச்சிருக்கு.சீர் செனத்தியெல்லாம்
நாம் எதிர்பார்க்கிற அளவு செய்வார்கள்
ஆனாலும்.. " என இழுத்தார்
" என்ன ஆனால்.. இது இரண்டும் தானே
நீங்க எதிர்பார்த்தது .முடித்துவிடவேண்டியதுதானே"
என்றேன்.
" என் மனைவியும் அதைத்தான் சொல்கிறாள்
ஆனால் எனக்குத்தான் ஒரு சிறு குறை
அவர்கள் வசதி வாய்ப்பாக இருந்தாலும்
நகைப் பணம் சேர்த்திருந்தாலும் வாடகை வீட்டில்
இருப்பது எனக்கு ஒப்பவில்லை
சொந்த வீடு இல்லாத இடத்தில் எப்படிச்
சம்பந்தம் செய்வது " என்றார்.
எனக்குத் திக்கென்றது.
நானும் அப்போது வாடகை வீட்டில் இருந்தேன்
வீடு கட்டிக் கொள்ளும் அளவு இடமும்
பணமும் இருந்ததாலும்
பொறியியல் துறையிலேயே இருந்ததாலும்
எப்போது நினைத்தாலும் நம்மால் கட்டிக் கொள்ள
முடியுமே என்கிற அலட்சிய மனோபாவத்தில்
இருந்தேன்
இவர் இப்படிச் சொன்னது சட்டென என்னை
உலுக்கிப் போனது
அப்போது என் இரண்டு பெண் குழந்தைகளும்
உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்
நாளை நாமும் ஒரு நல்ல சம்பந்தம் பேச
இருக்கையில் சம்பந்திகளுக்கும் இப்படி ஒரு
எண்ணம் வந்தால் என்ன செய்வது ?
குழந்தைகள் கல்லூரிப் படிப்புக் கென
தயாராகையில் நாம் வீடு கட்டிக் கொண்டிருந்தால்
சரியாக வருமா என்றெல்லாம் யோசனை
மட மட வென எகிறியது
சரி ஆண்டவன் அசரீரி போல இவர் மூலம்
நமக்கு ஏதோ குறி காட்டுகிறார். இனியும்
அலட்சியம் காட்டக் கூடாது என அடுத்த
முஹூர்த்த நாளிலேயே தச்சு செய்து
ஆறு மாதத்தில் வீடு கட்டி முடித்து புதிய
வீட்டில் குடியேறி விட்டேன்
குழந்தைகள் புதிய வீட்டிலிருந்தே பொறியியல்
பட்டப் படிப்பும் முடித்து வேலைக்கும் சேர்ந்து
திருமணமாகியும் செட்டிலாகிவிட்டார்கள்
இப்போது நினைத்தால் கூட அந்த சமயத்தில்
அசரீரி போல அந்த வாக்கை எடுத்துக் கொள்ளாமல்
அசட்டையாக இருந்திருந்தால் நிச்சயமாக
வீடு கட்டி இருப்பேனா என்று சந்தேகமாகத்தான்
இருக்கிறது
அது சரி. நீங்கள் வீடு கட்டிய கதைக்கும்
இப்போது மழையைத் தொடரும் தூவானம் என்பதற்கும்
அந்தப் பீர்பால் கதைக்கும் என்ன சம்பந்தம்
என்கிறீர்களா ?
அடுத்த பதிவில் அவசியம் சொல்கிறேன்
( தொடரும் )
26 comments:
வீட்டுப் பதிவு அருமை
மணப்பெண் + மாப்பிள்ளை சம்பந்தம் பற்றி ஏதேதோ சுவாரஸ்யமாகத்தான் சொல்கிறீர்கள்.
ஆனால் தலைப்புக்கும், பீர்பால் கதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தமோ எனத்தெரியாமல் தலை வெடித்துவிடும்போல உள்ளது. :)
அடுத்த பகுதி படிக்க மிகுந்த ஆவலுடன் .......
வணக்கம்
ஐயா
தொடருங்கள் அடுத்த பகுதியில் சந்திக்கிறோம்... த.ம 2
எனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பலருடைய சொந்தவீட்டுக் கனவுகள் இவ்வாறுதான் நிறைவேறுகின்றன. மறுபடியும் பீர்பாலா?
நல்ல நேரத்தில் விழிச்சுக்கிட்டீங்க...
உடனே செயல் படுத்திய நல்ல முடிவு...
அசரிரீதான் கவிஞரே. அந்த நேரத்தில் உங்கள் உள் மனதும் அந்த கருத்தை (வீடு கட்டும் ஆசையை) உள் வாங்கிக் கொண்டதற்கு ஆண்டவனுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்.
முதல் பகுதி படிக்கவில்லை! படித்துவிடுகிறேன்! சில சமயம் பிறராலும் இப்படி நல்ல ஞானோதயங்கள் உதிப்பது உண்டு!
பலருடைய வாழ்விலும் இதுபோல சம்பவங்கள் இருக்கும் போல தொடர்கிறேன்
தமிழ் மணம் 6
பல அசரீரீ கேட்டும் இன்னும் எனக்கு வேளை வரவில்லை!
:))))))
ஸ்ரீராம். //.
பல அசரீரீ கேட்டும் இன்னும் எனக்கு வேளை வரவில்லை!//
இந்தப் பதிவே அசரீரி மாதிரிதான்
நிச்சயம் நடந்துவிடும்
கிரஹப் பிரவேசத்திற்கு கூப்பிடுவீர்கள் தானே !
KILLERGEE Devakottai //
பலருடைய வாழ்விலும் இதுபோல சம்பவங்கள் இருக்கும் போல ..//
நிச்சயமாக
இது தொடர்பான உங்கள் சுவாரஸ்யமான
பகிர்வை எதிர்பார்த்து...
வாழ்த்துக்களுடன்...
‘தளிர்’ சுரேஷ் //.
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்
தி.தமிழ் இளங்கோ //.
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
திண்டுக்கல் தனபாலன் said...//
உடனே செயல் படுத்திய நல்ல முடிவு...//
அடுத்து நீங்களும் செய்ய வேண்டும்
அதற்காகத்தான் இது
வாழ்த்துக்களுடன்...
Geetha M //
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நல்ல முடிவு.... சரியான நேரத்தில் எடுத்த முடிவு....
தொடர்கிறேன்.
Nagendra Bharathi //.
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வை.கோபாலகிருஷ்ணன் //உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஒவ்வொருவர் வாழ்விலும் வந்து போகும் கனவு!
தங்களை அசரீரி வடிவில் அழத்துச் சென்று,
புதுமனை புகு விழாவுக்கு விளக்கேற்றி விடிவு காண செய்துள்ளது!
உண்மை! எதார்த்தம்! சிறப்பு!
சாரீரம் வேண்டுமாயின்
சரீரம் நன்கு வேண்டும்
அசரீரி வர வேண்டுமாயின்
அய்யாவின் நினைவு வர வேண்டும்!
த ம +
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தொடர்பறியத் தொடர்கிறேன்
அன்புள்ள அய்யா,
‘வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்’ என்பார்கள்... இரண்டையும் இனிதே முடித்த திருப்தி தங்களுக்கு என்பதை எண்ணுகின்ற பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாளும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஏதாவது கற்றுக் கொண்டுதானே இருக்கிறோம்.
வாழ்க்கை என்பது இதுதானே!
நன்றி.
த.ம.9
சீக்கிரம் சொல்லுங்க!
எனக்கும் திக் என்றுதான் இருக்கிறது . :)
தொடர்ச்சியை அறியக் காத்திருக்கிறேன்.
நன்றி ஐயா.
உங்கள் முடிவு சரிதான். சரி என்ன தொடர்பு இந்த மூன்றிற்கும் என்பதை அறிய இதோ அடுத்த பதிவுக்கு ஜம்ப்..
அருமை..
Post a Comment