Sunday, October 18, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 4 )

பதிவர் குழு திருமிகு சகாயம் அவர்களைச் சந்தித்து
அவருடைய ஒப்புதல் பெற்று வெளிவந்த பின்தான்
நான் அவர்களைச் சந்திக்க முடிந்தது

சுய அறிமுகங்களுக்குப் பின்  பதிவர் விழா
ஏற்பாடுகள் குறித்து கொஞ்சம் பேசினோம்

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குழு அமைத்திருப்பது
குறித்தும் விழா மண்டபம் முடிவு செய்திருப்பது
 குறித்தும்இன்னும் செய்ய வேண்டிய
பணிகள் குறித்தும்முத்து நிலவன் ஐயா அவர்கள்
விளக்கினார்கள்

அவர்களின் தெளிவான திட்டமிடுதல் குறித்து
அறிய நான் பிரமித்துப் போனது நிஜம்

ஆரம்பச் செலவுக்காக புதுகைப் பதிவர்கள்
பலரும் ஒரு குறிப்பிட்டத் தொகையைப் போட்டு
செலவு செய்து கொண்டிருப்பதாகவும்
நிதி திரட்டுதல் குறித்துதான் ஒரு மிகச் சரியான
ஆலோசனையும் செயல்திட்டமும்
வேண்டி இருக்கிறது எனச் சொன்னார்கள்

பொது விஷயத்திற்காக நிதி திரட்டுவதில்
குறித்து எப்போதும் இரண்டு வித கருத்துக்கள் உண்டு

அது போல எளிதான விஷயம் ஒன்றுமில்லை
என்பது ஒன்று

அதுபோல மிகக் கடினமான விஷயம் வேறேதுமில்லை
என்பது மற்றொன்று

உண்மையில் இந்த இரண்டுமே  சரியான கருத்துதான்
என்பது என் கருத்து

அது நமது நோக்கம் குறித்தும், நாம் நிதிக்காக
தொடர்பு கொள்பவர்களைப் பொறுத்துத்தான்
எது சரி என்பது முடிவாகும்

அந்த வகையில் பதிவர் சந்திப்புக்கு நிதி திரட்டுவது
நிச்சயம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது
என உறுதி சொல்லிவிட்டு,அது விஷயமாக
மதுரைப் பதிவுக்கு நிதி கொடுத்தவர்கள் பட்டியலை
தமிழ்வாசி அவர்களிடம் பெற்றுத் தருகிறேன்
கொடுக்கக் கூடியவர்களை அறிந்து கேட்க அது
உதவும் எனக் கூறினேன்

பின் தொர்ந்து சந்திப்பில் இருப்போம் எனக் கூறி
விடைபெற்றோம்

அந்த அவசரகதியிலும் முத்து நிலவன் ஐயா அவர்கள்
அவருடைய அற்புதமான புத்தகங்கள் இரண்டை
கையொப்பமிட்டு அன்பளிப்பாகக்
கொடுத்துச் சென்றது நெகிழச் செய்தது

மதுரை சந்திப்புக்கான கணக்குகளைக்
கொடுக்கவில்லைஎன்பதால் , வரவு குறித்தாவது
தெரிந்து கொள்வோம் எனத்  தமிழ்வாசி
அவர்களைத் தொடர்பு கொண்ட போது
அது பதிவாகியிருந்த  டிஸ்க் கரப்ட்டாகி
அழிந்து போனதாக சொல்ல  வேறு
என்ன செய்யலாம் என யோசிக்கத் துவங்கினேன்.

( சென்னைப் பதிவர்கள் அவர்கள் பதிவர் சந்திப்பை
முடித்து அதில் மீதமான தொகையென பத்தாயிரம்
ரூபாயை மதுரைப்பதிவர் சந்திப்பில்
கொடுத்தார்கள் என்பதை நன்றியுடன்
இங்கு நிச்சயம் குறிப்பிட்டாகவேண்டும் )

தொடரும்....

14 comments:

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன்.

KILLERGEE Devakottai said...

தொடர்கிறேன் கவிஞரே..
தமிழ் மணம் 2

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

தகவலுக்கு நன்றி தொடருங்கள் ஐயா த.ம 3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா வணக்கம்.
தங்களின் அற்புதமான நினைவாற்றல் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
”பொது விஷயத்திற்காக நிதி திரட்டுவதில்
குறித்து எப்போதும் இரண்டு வித கருத்துக்கள் உண்டு அது போல எளிதான விஷயம் ஒன்றுமில்லை என்பது ஒன்று, அதுபோல மிகக் கடினமான விஷயம் வேறேதுமில்லை என்பது மற்றொன்று உண்மையில் இந்த இரண்டுமே சரியான கருத்துதான் என்பது என் கருத்து“ எனும் தங்கள் கருத்தின்படியே நிதித் தேவை குறித்துத் தங ்களிடம் பேசினேன். ஆனால், தாங்களும் நானும் நினைத்தது போல மற்றவர்களின் ஒத்துழைப்பு இருந்திருந்தால் எனது “குறை“பற்றிய பதிவுக்கே தேவையேற்பட்டிருக்காது. சரி அய்யா, என்ன செய்ய? நல்லபடியாக எல்லாம் நடந்தது. அதில் தங்கள் ஆலோசனையும் கிடைத்தது. இதை மேலும் கிளற வேண்டாம் என்றே நினைக்கிறேன். தங்கள் ஆலோசனைக்கும் உதவிகளுக்கும் நன்றி. தாங்கள் அந்த நமது முதல் சந்திப்பின்போதே ரூ.2000 தந்ததையும் பின்னர் ரூ.3000தந்து புரவலர் ஆனதையும் தாங்கள் குறிப்பிடாவிட்டாலும் எமது விழாக்குழுவுக்குத் தங்களின் மேன்மை புரியும். நம் நட்பு தொடரவேண்டும் அய்யா.நன்றி வணக்கம்

Yaathoramani.blogspot.com said...

Muthu Nilavan //

..கீத மஞ்சரி said...//
மிக அழகான தொகுப்பு... ஒரு நிகழ்வின் வெற்றிக்குப்பின்னால் இருக்கும் சிரத்தையும் திட்டமிடலும் பலரும் அறியாமலேயே போய்விடும் ஆபத்து இருக்கிறது. உங்களைப் போன்று அறிந்தவர்கள் அவற்றை வெளியிடும்போது எங்களைப் போன்று அறியாதவர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்து சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி ரமணி சார்.

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் ஐயா
நன்றி
தம +1

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் அனுபவத் தொடர் , இனிவரும் வலைப்பதிவர் சந்திப்பிற்கு மட்டுமன்றி மற்றைய நிகழ்ச்சிகள் நடத்துபவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன் ஐயா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும்.

திரு. முத்துநிலவன் சாரின் கருத்துக்கள் இங்கு மிகவும் பெருந்தன்மையுடனும், அழகாகவும், நாகரீகமாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அவருக்கும் தங்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

.நல்லதைப் பாராட்டும்
பெருந்தன்மையும் வேண்டும்
அது அல்லாததைச் சொல்லும்
துணிவும் வேண்டும்

இல்லையெனில் இரண்டுக்கும்
வித்தியாசம் இல்லாமல் போய்விடும்
என்பதற்காகவே இதை எழுதுகிறேன்

(பாராட்ட வேண்டியதை
கொஞ்சம் தாராளமாகவும்
அதற்கு எதிரானதை கொஞ்சம்
சுட்டிக் காட்டி மட்டும்... )

சசிகலா said...

அது போல எளிதான விஷயம் ஒன்றுமில்லை
என்பது ஒன்று

அதுபோல மிகக் கடினமான விஷயம் வேறேதுமில்லை
என்பது மற்றொன்று//
மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஐயா.
சென்னைப்பதிவர் சந்திப்பில் மீதத்தொகையை அடுத்த பதிவர் சந்திப்பிற்கு கொடுத்ததையும் நினைவுபடுத்தியமைக்கு நன்றிங்க ஐயா.

S.P.SENTHIL KUMAR said...

வலைப்பதிவர் சந்திப்புக்கு முன்னும், சந்திப்புக்கு பின்னும் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தாங்கி வரும் தங்களின் தொடர் மிகவும் அருமை. தொடருங்கள். தொடர்கிறேன்.
த ம 8

அணில் said...

( சென்னைப் பதிவர்கள் அவர்கள் பதிவர் சந்திப்பை
முடித்து அதில் மீதமான தொகையென பத்தாயிரம்
ரூபாயை மதுரைப்பதிவர் சந்திப்பில்
கொடுத்தார்கள் என்பதை நன்றியுடன்
இங்கு நிச்சயம் குறிப்பிட்டாகவேண்டும் )

இதைக் குறிப்பிடாமல் போனால், இவை வெளியில் தெரியாமலே போயிருக்கும். சென்னைப் பதிவர்கள் முன்னோடி பதிவர்களாய் இருக்கின்றனர். தருமமிகு சென்னை வாழ்க.

Geetha said...

தங்களின் ஆலோசனைகள் விழாவிற்கு மெருகூட்டியது சார்..

Post a Comment