Tuesday, August 23, 2016

ரஜினி ...ரஞ்சித்...கபாலி ( 3 )

                                காட்சி 4

(தனது பிரத்யேக அறைக்குள்
ரஞ்சித் அவர்கள் நுழைந்ததும், ரஜினி அவர்கள்
மிக வேகமாக முன்வந்து அவரைக் கட்டி அணைத்து
கைக்குலுக்கி வரவேற்கிறார் )

ரஜினி;
வாங்க ரஞ்சித் வாங்க...
ரொம்பக் காக்க வைச்சுட்டேனோ சாரி.சாரி

ரஞ்சித்:
இல்லைங்க சார். இப்பத்தான் வந்தேன்

 (எனச் சொல்லியிபடித்  தான் கொண்டுவந்திருந்த
 மலர்ச் செண்டினைக் கொடுத்தபடித் தொடர்கிறார்)

உங்களைப் பார்க்க எத்தனை மணி நேரம்
வேணுமானாலும் காத்திரும்படியா
கோடிச் சனம் இருக்க என்னையும் மதிச்சு.....

ரஜினி:
நோ ஃபார்மாலிடீஸ் ரஞ்சித்..திறமை எங்கிருந்தாலும்
பாராட்டப்படணும் பாராட்டணும்.அதுதான் நல்லது
அதுதான் பாராட்டிறவன் வளரவும்
பாராட்டப்படறவன் வளரவும் உதவும்
சரி நேரடியா விஷயத்துக்கு வருவோம்
மேடம் போனில் சொன்னாங்களா ?

ரஞ்சித்:
ஆமாம் சார் என்னால நம்பவே முடியலை
அவங்க போனை வைச்ச அரை மணி நேரத்தில
நான் திரும்பவும் ஒரு முறை நானே பேசி
கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்
இப்ப கூட உங்க கூட உட்கார்ந்து பேசறது
நிஜந்தானான்னு குழம்பிக்கிடக்கு சார்.. நிஜமா...

ரஜினி
(தொடர்ந்து அவரைப் பேசவிடாதபடித் தடுத்து )

ரொம்ப எக்ஸைட் ஆகுறீங்க ரஞ்சித்..இப்ப முதல்ல
நாம சந்திக்கும்படியா இங்க ஏற்பாடு செஞ்சதே
இந்த ஃபார்மாலிடி பேரியரை உடைக்கத்தான்
கொஞ்சம் மனம் திறந்து பேசத்தான்
படம் பத்தியெல்லாம் அடுத்த மீட்டில் பேசலாம் சரியா

ரஞ்சித்
(தன்னை  மனரீதியாக சரிப்படுத்திக் கொள்வது போல்
மூச்சை இழுத்து விட்டு தன்னைத் தளர்த்தியபடி)
புரியுது சார் ...சொல்லுங்க சார்

ரஜினி:
நான் உங்க அட்டைக்கத்தி படம் பார்த்தேன்
கொஞ்சம் வித்தியாசமா கவனிக்கும்படியா இருந்தது
பிற்படுத்தப்பட்ட ஒருவனின் சூழல் ,
அவன் விடலைத்தனம்
எல்லாம் ரொம்பச் சிறப்பா இருந்தாலும்
ஒரு நிறைவு  ஏனோ இல்லை

ஒருவேளை முதல் படம் என்பதால கொஞ்சம்
கூடுதல் கவனத்தில சொல்ல வேண்டியதை
சொல்லத் தயக்கம் இருந்திருக்கலாம்
பட் வெரி நைஸ்  மூவி

ஆனால் மெட்றாஸ் .. சான்ஸே இல்லை
வெரி வெரி சூப்பர்..இப்படி வடக்குசென்னை
ஒரு குடியிருப்பைப் பத்தி, அவங்க வாழ்க்கைச்
சூழல்பத்தி,அவங்க வாழ்க்கையோட
விளையாடுற அரசியல் பத்தி ..ரியலி வெரி சூப்பர்
குறிப்பா ..தனியா ஒரு நைட் ஸாட் வைச்சிருத்தீங்களே
ஒரு லாங்க்  ஸாட் ..அந்த சுவத்து ஓவியத்தக் காட்டி
ஒரு ஸைலண்ட் சாட்...அதுவும்  கிரேன்சாட் ...

அந்த ஸாட்டைப் பார்த்ததும்
நிமிர்ந்து உட்கார்ந்தவன்தான்
அப்புறம் சாய்ஞ்சு உட்காரவே இல்லை

(இதைச் சொன்னவுடன் அவருக்கே உரித்தான
மௌனத்தில் சிறிது ஆழ்ந்து போகிறார்)

அப்பத்தான் எனக்கு உங்க டைரக்ஸன்ல
ஒரு படம் பண்ணனுனு முதல்ல தோணிச்சு
அந்தப் படம் மட்டும் இல்லாம
தொழில் ரீதியா நாம இணைஞ்சு படம் பண்ணினா
ஒரு பெரிய எதிபார்ப்பை உண்டாக்கும்னும் தோணிச்சு
அது எப்படின்னு உதாரணத்தோடச் சொன்னாத்தான்
கொஞ்சம் தெளிவாப் புரிஞ்சிக்க முடியும்

(எனச் சொல்லி கண்களை மூடி
 விஸுவலாக ஏதோ  ஒன்றைப் மனக் கண் முன்
பார்ப்பது போல் தலையாட்டி இரசிக்கிறார் )

நம்மைப் போலவே ரஞ்சித் அவர்களும் அது
என்னவாக இருக்கும் என்கிற ஆர்வத்தில்
ஸோபாவின் நுனிக்கு நகர்கிறார்


தொடரும்

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

அடுத்தது என்ன என்று தெரிந்து கொள்ள, தொடர்கிறேன்.

த.ம. +1

Bhanumathy Venkateswaran said...

சுவாரஸ்யமான கற்பனை, தொடர்கிறேன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல கற்பனை நாடகம். அருமையாக செல்கிறது. முதல் இரண்டு பகுதிகளையும் இதனுடன் சேர்ந்து சுவாரஸ்யமாக மடமடவென்று படித்து விட்டேன் தொடர்ந்து என்னவென்று அறியும் ஆவலுடன் இருக்கிறேன். தொடருங்கள். நன்றி!

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

G.M Balasubramaniam said...

இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமோ. தொடர்கிறேன்

”தளிர் சுரேஷ்” said...

தொடர்கிறேன்!

Unknown said...

வணக்கம், தொடரட்டும்

Unknown said...

வணக்கம், தொடரட்டும்

Thulasidharan V Thillaiakathu said...

தொடர்கின்றோம்...

Post a Comment