Wednesday, August 24, 2016

ரஜினி இரஞ்சித் கபாலி 4

                                         காட்சி       ( 4  )     (தொடர்ச்சி )
ரஜினி :

(ரஞ்சித் ஆர்வமாக சோபாவின் முன் நுனி வர
ஆர்வமான ரஜினியும் முன் நகர்ந்து )

ரஞ்சித் உங்களுக்குத்தான் தெரியுமே...
நாடகக்கலையை இன்றளவும் கட்டிக் காக்கிறது
தென் தமிழகம் தான்
அதுவும் குறிப்பா சங்கரதாஸ் சுவாமிகளிருந்த மதுரை

அங்கெல்லாம் கிராமங்களில நாடகம் இல்லாம
திருவிழா இருக்காது அதுலயும் குறிப்பா
வள்ளித் திருமணம்

அங்கெல்லாம் நாடகத்துக்கு குழுக்கள் நிறைய
இருந்தாலும் கிராமத்துப் பெருசுங்க குழுவைக்
கூப்பிடமாட்டாங்க

போன வருஷம் எல்லா ஊர்லயும் நடந்த
நாடகங்கள்ல யார் சிறப்பா நடிச்சாங்கண்ணு
ஒரு லிஸ்ட் எடுப்பாங்க

வள்ளியா புதுக்கோட்டை சித்திரா தேவி
நாரதரா விராலிமலைக் கிட்டு
முருகரா தென்கரைக் கண்ணன்னு
பப்பூனா அவனியாபுரம் ராஜப்பா அப்படின்னு
ஒரு லிஸ்ட் எடுத்து அவங்களைப் புக்
பண்ணுவாங்க

லிஸ்ட்டைப் பார்த்ததும் சுத்துபத்து
கிராமங்கள்ல எல்லாம் சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்

காரணம் மேடை ஏறுகிறவரை இவங்க
ஒருத்தரை ஒருத்தர் சந்திருச்சுக்கமாட்டாங்க.
 ரிகர்ஸல் எல்லாம் கிடையாது
மேடைதான் முதல் சந்திப்பு

உங்களுக்த்தான் தெரிஞ்சிருக்குமே
வள்ளித் திருமண நாடகமே மூணு தர்க்கம்தான்

வள்ளி-நாரதர், நாரதர்-முருகர், முருகர் -வள்ளி
அம்புட்டுத்தான்

மூணு தர்க்கத்தில ஒவ்வொருத்தரும் தான்தான்
ஜெயிக்கணும்னு போடுகிற போட்டி இருக்கே

அது இருந்து பார்த்தாத்தான் தெரியும்

(பின் சிறிது நேரம் இடைவெளி விட்டு
மீண்டும் தொடர்கிறார் )

சினிமாவும் அப்படித்தான்

இதுவரை சேராத ஆனா தனித்தனியா
ஜெயிச்சவங்களை ஒண்ணு சேர்த்து ஒரு
படம் பண்ணஆரம்பிச்சா மக்கள்கிட்ட
ஒரு சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்

அப்படிப் பிடிச்ச நெருப்பை விடாம ஊதி ஊதி
ஊடகத்தால பெருசாக்கி பெருசாக்கி
படத்தை விட்டா அதன் மதிப்பே தனிதான்

நீங்க மெட்றாஸ் படம் மூலம் தனியா
ஒரு பெஸ்ட் டைரக்டரா இன்னைக்கு
முன்னால் நிக்குறீங்க

நானும் ஏதோ ஒரு முன்னணி நடிகர்னு
இத்தனி வருஷமா ஃபீல்டுல
குப்பைக் கொட்டிக்கிட்டு இருக்கேன்

தம்பி தாணுவும் ஒரு பெரிய தரமான
தயாரிப்பாளரா பேர் எடுத்து இருக்கார்

இந்த மூணு பேரும் சேர்ந்து ஒரு படம்
பண்றதாக ஒரு விளம்பரம் வந்தாலே
ஃபீல்டுல ஒரு சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்
மக்கள்கிட்டயேயும் ஒரு  எதிர்பார்ப்பு எகிரும்

அதை மட்டும் திருப்திபடுத்தும்படியா
ஒரு படம் பண்ணினா போதும்
தொடர்ந்து  எல்லோரும் உச்சத்தில்
நின்னுடலாம்

அதுக்கு முக்கியமா தேவை.......

(எனச் சொல்லி நிறுத்தியவர் சோபாவை விட்டு
எழுந்துத்  தன்னை ஆசுவாசப்படுத்திக்
கொள்ளும்படியாக சிறிது நேரம் நடக்கிறார்
பின் ரஞ்சித்தை நோக்கி .... )

ஆமா அதுக்கு முக்கியமா தேவை ஒரு கதை
எனக்கும் சரிப்பட்டும் வரும் படியா
உங்களுக்கும் திருப்தி தரும்படியா
என ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும்படியா

(இப்படி ஒட்டுமொத்தமாய் தன் நிலையை
ரஜினி அவர்கள் சொல்லியதைக் கேட்டதும்
ரஞ்சித் தான் எதையோ சொல்ல முயல்கிறார்
ரஜினி அவரைத் தடுத்து )

கொஞ்சம் ஃபிரியா அரை மணி நேரம்
ரெஸ்ட் எடுத்துச் சொல்லுங்க
ஒண்ணும் அவசரமில்லை

(எனச் சொல்லி செல்போனில் ஸ்னாக்ஸ்
மற்றும் டீக்கு யாருடனோ பேசுகிறார்
ரஞ்சித் யோசிக்கத் துவங்குகிறார் )


தொடரும்

5 comments:

Avargal Unmaigal said...

இன்றைய இந்த பதிவில் உள்ள விஷயங்களை எங்கோ எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறதே...ஹீஹீஹீ

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

கிராமிய நாடகங்களைப் பற்றிய விரிவான அலசல்களுடன் கதையை அற்புதமாக நகர்த்திச் செல்கிறீர்கள்,ரஞ்சித் எப்படி யோசிக்கிராறோ? நானும் அடுத்த பகுதிக்கு ஆவலுடன்
காத்திருக்கிறேன். தொடருங்கள்.

என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

G.M Balasubramaniam said...

சினிமா பற்றி நீர் நிறையவே சிந்திக்கிறீர்.

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

தொடர்கிறோம்...

Post a Comment