காட்சி ( 6 )
ரஜினி:
(ரஜினி அவர்களின் பண்ணை வீடு. முன் லானில்
தாணுவும் ரஞ்சித் அவர்களும் அமர்ந்திருக்க
ரஜினி அவர்கள் மிக வேகமாக வீட்டின் உள்ளிருந்து
வெளியே வந்தபடி... )
வாங்க தாணு சார் டைரக்டர் சார்
கொஞ்சம் முன்னாலயே வந்துட்டிங்களா
இது என் யோகா நேரம்..அதுதான் கொஞ்சம் லேட்
சாரி...சாரி
தாணு:
இது எங்க யோக நேரம்...அதுதான் கொஞ்சம்
முன்னாலய வந்துடோம் சார்....
ரஜினி (சிரித்தபடி )
என்னை விட நல்லா டைமிங்கா பஞ்ச் பேசுறீங்களே
ப்ரொடூஸர் சார்...சரி சரி டைரக்டர் கிட்டே
கதையைப் பத்தி பேசினீங்களா
தாணு:
இல்லை சார் நீங்க வந்த உடனே பேசிக்கலாம்னுதான்
நான்தான் சொன்னேன்
ரஜினி:
ஓ.கே டைரக்டர் சார்..கொஞ்சம் விரிவாவே
கதையோட அவுட் லைன சொல்லுங்க
முதல்ல ப்ரொடூஸருக்குப் பிடிக்கணும்
அதுதான் முக்கியம்...
ரஞ்சித்
சார்,, சார் ..போட்டுப் பேசறது கொஞ்சம்
அன் ஈஸியா இருக்கு..ரஞ்சித்ன்னே சொன்னீங்கன்னா
கொஞ்சம் கம்போர்டெபில பீல் பண்ணுவேன்
ரஜினி
ஓகே ஓகே டைரக்டர்ன்னு சொன்னா தன்னால
அந்த சாரும் ஒட்டிக்கிரும்...இனி ரஞ்சித்துன்னே
சொல்றேன்.. ஓகே யா
..ம்...சொல்லுங்க
ரஞ்சித்
(கைகளால் முகத்தை அழுத்தத் தேய்த்து
தன்னை ஆசுவாசப் படுத்திய பின் ...
சார் நடிச்சு ...இப்ப ஒரு மாஸ் கிட் கொடுக்கணும்னா
அதுக்கு ஒரு டாண் கதைதான் சரியா வருங்கிறது
என்னோட அபிப்பிராயம் சார்
டாண் கதைன்னா உலக சினிமா அளவுல
காட் ஃபாதரை மிஞ்சி ஒரு படமோ
தமிழ்ல நாயகனை மிஞ்சி ஒரு படமோ
இல்லை சார்.
எல்லோரும் அதைத் தழுவி படம் பண்ணி
இருக்காங்க சார்.. எனக்கென்னவே அதை
அடிப்படையா வைச்சு அதுன்னு தெரியாதபடி
அதுக்கு நேர்மாறா ஒரு கதை பண்ணினா
நல்ல வரும்னு எனக்கு ஒரு ஐடியா இருக்கு சார்
(தாணு அவர்களும் ரஜினி அவர்களும்
ஒருவரை ஒருவர்பார்த்துக் கொண்டு லேசாகத்
தலையாட்டிக் கொள்கிறார்கள்
ரஞ்சித் அவர்கள் இருவரின் முக பாவம் நேர்மறையாக
இருக்க பின் தொடர்ந்து பேசுகிறார் )
முதல்ல கதை சொல்ல ஆரம்பிக்கிறதில இருந்தே
கதையை மாத்தறோம் சார்
அதுல வேலு நாயக்கர் கதையை அவங்க
சிறு வயதில இருந்து ஆர்ம்பிச்சு டாணாகி
சாவு வரைன்னுக் கொண்டு போனா...
நாம டாணாகவே ஆரம்பிச்சு தொடர்ச்சியா
கதையைக் கொண்டு போகாம முன் பின்னா
போறோம் சார்
அதுல பேருல மட்டும் ஜாதி இருக்கும் சார்
மத்தபடி ஜாதிப் பிரச்சனை இருக்காது சார்
இதுல பேரே ஜாதி மாதிரி இருக்கும்
கதாப்பாத்திரமும் ஜாதியைத்தான் அதிகம்
பேசும் சார்
அதுல மனைவி சாவை கண் எதிரே
பார்ப்பாரு சார்
இதுல அப்படியில்ல செத்துட்டதாச் சொல்லி
தேடுறதா கதையை நகட்டுவோம் சார்
அதுல அப்பாவைக் கொன்னதுக்கு லூஸ்மகன்
பழி வாங்கக் கொல்றதா முடியும் சார்
இதுல கொஞ்சம் மாத்தி லூஸு மாதிரி
தனியா ஒரு கேரக்டரையும் அப்பனை
கொல்றதுக்குக் காரணம் ஆனதுக்குப்
பழி வாங்கறதா இன்னொரு கேரக்டரையும்
ஆக அதை இரண்டா ஒடைக்கிறோம் சார்
அதுல வேலு நாயக்கருக்கு உள்ளூர் உடைன்னா
இதுல கதா நாயகனுக்கு சஃபாரி டிரஸ் சார்
ஏன்னா அதுல வேலு நாயக்கர் இருக்கிறது
இந்தியான்னா இந்தப் படக் கதா நாயகன்
இருக்கிறது வெளி நாடு சார்
அதுல வில்லன் உள்ளூர்னா
இதுல வெளி நாட்டுக்காரன் சார்...
அதுல கதை நடக்கிற லொகேசன், சேரி
கடல்னா
இது சிட்டி, பெரிய ஹோட்டல் மால்
அப்படி சார்...
அதுல கதா நாயகனுக்கு நல்லவனா
கெட்டவனான்னு அவருக்கே ஒரு
குழப்பம் இருக்கும் சார்
இதுல அதுக்கு சான்ஸே இல்ல சார்
கதானாயகனுக்கு தான் நல்லவன்ற
கர்வமும் திமிருமே இருக்கும் சார்
ரஜினி:
(இரஞ்சித் தொடர்ந்து சொல்லிக் கொண்டு போக
சட்டென கைகாட்டி நிறுத்தியபடி...)
சரி சரி..இப்படி மாத்திக்கிட்டேப் போனா
நாயகன்னு தெரியாம வேணுமானா போகும்
ஒரு கட்டுக் கோப்பான முழுக்கதையா இது வருமா
முடிஞ்சா இதையெல்லாம் உள்ளடக்கி
ஒன் லைனா கதையைச்
சொல்லமுடியுமா ரஞ்சித்?
(ரஞ்சித் யோசிக்கத் துவங்குகிறார் )
ரஜினி:
(ரஜினி அவர்களின் பண்ணை வீடு. முன் லானில்
தாணுவும் ரஞ்சித் அவர்களும் அமர்ந்திருக்க
ரஜினி அவர்கள் மிக வேகமாக வீட்டின் உள்ளிருந்து
வெளியே வந்தபடி... )
வாங்க தாணு சார் டைரக்டர் சார்
கொஞ்சம் முன்னாலயே வந்துட்டிங்களா
இது என் யோகா நேரம்..அதுதான் கொஞ்சம் லேட்
சாரி...சாரி
தாணு:
இது எங்க யோக நேரம்...அதுதான் கொஞ்சம்
முன்னாலய வந்துடோம் சார்....
ரஜினி (சிரித்தபடி )
என்னை விட நல்லா டைமிங்கா பஞ்ச் பேசுறீங்களே
ப்ரொடூஸர் சார்...சரி சரி டைரக்டர் கிட்டே
கதையைப் பத்தி பேசினீங்களா
தாணு:
இல்லை சார் நீங்க வந்த உடனே பேசிக்கலாம்னுதான்
நான்தான் சொன்னேன்
ரஜினி:
ஓ.கே டைரக்டர் சார்..கொஞ்சம் விரிவாவே
கதையோட அவுட் லைன சொல்லுங்க
முதல்ல ப்ரொடூஸருக்குப் பிடிக்கணும்
அதுதான் முக்கியம்...
ரஞ்சித்
சார்,, சார் ..போட்டுப் பேசறது கொஞ்சம்
அன் ஈஸியா இருக்கு..ரஞ்சித்ன்னே சொன்னீங்கன்னா
கொஞ்சம் கம்போர்டெபில பீல் பண்ணுவேன்
ரஜினி
ஓகே ஓகே டைரக்டர்ன்னு சொன்னா தன்னால
அந்த சாரும் ஒட்டிக்கிரும்...இனி ரஞ்சித்துன்னே
சொல்றேன்.. ஓகே யா
..ம்...சொல்லுங்க
ரஞ்சித்
(கைகளால் முகத்தை அழுத்தத் தேய்த்து
தன்னை ஆசுவாசப் படுத்திய பின் ...
சார் நடிச்சு ...இப்ப ஒரு மாஸ் கிட் கொடுக்கணும்னா
அதுக்கு ஒரு டாண் கதைதான் சரியா வருங்கிறது
என்னோட அபிப்பிராயம் சார்
டாண் கதைன்னா உலக சினிமா அளவுல
காட் ஃபாதரை மிஞ்சி ஒரு படமோ
தமிழ்ல நாயகனை மிஞ்சி ஒரு படமோ
இல்லை சார்.
எல்லோரும் அதைத் தழுவி படம் பண்ணி
இருக்காங்க சார்.. எனக்கென்னவே அதை
அடிப்படையா வைச்சு அதுன்னு தெரியாதபடி
அதுக்கு நேர்மாறா ஒரு கதை பண்ணினா
நல்ல வரும்னு எனக்கு ஒரு ஐடியா இருக்கு சார்
(தாணு அவர்களும் ரஜினி அவர்களும்
ஒருவரை ஒருவர்பார்த்துக் கொண்டு லேசாகத்
தலையாட்டிக் கொள்கிறார்கள்
ரஞ்சித் அவர்கள் இருவரின் முக பாவம் நேர்மறையாக
இருக்க பின் தொடர்ந்து பேசுகிறார் )
முதல்ல கதை சொல்ல ஆரம்பிக்கிறதில இருந்தே
கதையை மாத்தறோம் சார்
அதுல வேலு நாயக்கர் கதையை அவங்க
சிறு வயதில இருந்து ஆர்ம்பிச்சு டாணாகி
சாவு வரைன்னுக் கொண்டு போனா...
நாம டாணாகவே ஆரம்பிச்சு தொடர்ச்சியா
கதையைக் கொண்டு போகாம முன் பின்னா
போறோம் சார்
அதுல பேருல மட்டும் ஜாதி இருக்கும் சார்
மத்தபடி ஜாதிப் பிரச்சனை இருக்காது சார்
இதுல பேரே ஜாதி மாதிரி இருக்கும்
கதாப்பாத்திரமும் ஜாதியைத்தான் அதிகம்
பேசும் சார்
அதுல மனைவி சாவை கண் எதிரே
பார்ப்பாரு சார்
இதுல அப்படியில்ல செத்துட்டதாச் சொல்லி
தேடுறதா கதையை நகட்டுவோம் சார்
அதுல அப்பாவைக் கொன்னதுக்கு லூஸ்மகன்
பழி வாங்கக் கொல்றதா முடியும் சார்
இதுல கொஞ்சம் மாத்தி லூஸு மாதிரி
தனியா ஒரு கேரக்டரையும் அப்பனை
கொல்றதுக்குக் காரணம் ஆனதுக்குப்
பழி வாங்கறதா இன்னொரு கேரக்டரையும்
ஆக அதை இரண்டா ஒடைக்கிறோம் சார்
அதுல வேலு நாயக்கருக்கு உள்ளூர் உடைன்னா
இதுல கதா நாயகனுக்கு சஃபாரி டிரஸ் சார்
ஏன்னா அதுல வேலு நாயக்கர் இருக்கிறது
இந்தியான்னா இந்தப் படக் கதா நாயகன்
இருக்கிறது வெளி நாடு சார்
அதுல வில்லன் உள்ளூர்னா
இதுல வெளி நாட்டுக்காரன் சார்...
அதுல கதை நடக்கிற லொகேசன், சேரி
கடல்னா
இது சிட்டி, பெரிய ஹோட்டல் மால்
அப்படி சார்...
அதுல கதா நாயகனுக்கு நல்லவனா
கெட்டவனான்னு அவருக்கே ஒரு
குழப்பம் இருக்கும் சார்
இதுல அதுக்கு சான்ஸே இல்ல சார்
கதானாயகனுக்கு தான் நல்லவன்ற
கர்வமும் திமிருமே இருக்கும் சார்
ரஜினி:
(இரஞ்சித் தொடர்ந்து சொல்லிக் கொண்டு போக
சட்டென கைகாட்டி நிறுத்தியபடி...)
சரி சரி..இப்படி மாத்திக்கிட்டேப் போனா
நாயகன்னு தெரியாம வேணுமானா போகும்
ஒரு கட்டுக் கோப்பான முழுக்கதையா இது வருமா
முடிஞ்சா இதையெல்லாம் உள்ளடக்கி
ஒன் லைனா கதையைச்
சொல்லமுடியுமா ரஞ்சித்?
(ரஞ்சித் யோசிக்கத் துவங்குகிறார் )
9 comments:
வணக்கம் சகோதரரே
ஒவ்வொரு பகுதியும் சுவாரஸ்யமாக செல்கிறது நான் சென்ற பகுதியையும் சேர்த்து வாசித்து விட்டு தொடர்கிறேன்.ஒரு திரைப்படம் எடுக்க எப்படியெல்லாம் சேர்ந்து யோசிப்பார்கள் என்று அற்புதமாக விளக்கி வருகிறீர்கள்.அடுத்தது என்ன என்று அறியும் ஆவலில் உள்ளேன். தொடருங்கள்! நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சுவாரஸ்யமாக செல்கிறது.
தொடர்கிறேன்.
த ம 2
கபாலியை விடுங்கள் சார், நீங்களே ப்ரொட்யு சருக்கு கதை சொல்லலாம்
படு சூப்பரா இருக்கு
அருமை
அட! ஸ்வாரஸ்யமாக இருக்கிறதே! அதுவும் நல்ல ஒப்பீடு....தொடர்கின்றோம்
நல்ல ஒப்பீடு....சுவாரஸ்யம் ஐயா
தம 3
அட்டகாசம்! தொடருங்கள்!
ஸ்வாரஸ்யம்.... தொடர்கிறேன்.
த.ம. +1
எல்லாமே தெரியாதவரை காப்பி செய்யும் முயற்சிதானா.
Post a Comment