"உண்மைக்கும்
கவிதைக்கும்
அதிகத் தூரமோ ?
இல்லையெனில்
ஏன் கவிஞனை
பொய்யன் என்கிறார்கள் ? "
என்றாள் அவள்
"இல்லை இல்லை
தன் கூற்றுக்குக்
கொஞ்சம் அழுத்தம் கொடுக்க
சில வார்த்தைகளைச் சேர்ப்பான் அவன்
அது அவனைப் பொய்யனாக்கி விடுகிறது
மற்றபடிக் கவிஞர்கள் எல்லாம்
அரிச்சந்திரன் உறவுதான் " என்கிறேன்
கொஞ்சம் யோசிக்கும்
பாவனையில் இருந்த அவள்
"மிகச் சரியாகப் புரியவில்லை " என்றாள்
நான் சிரித்தபடிச் சொன்னேன்
"தங்களின் இந்த வாக்கியமே
அற்புதக் கவிதைதான்
நீங்கள் சிறந்த கவிஞர்தான் "
"புரியவில்லை " என்றாள்
"புரியவில்லை என்பது உண்மை
மிகச் சரியாக என்றது கவித்துவம்" என்றேன்
"புரிந்தது " என்றாள் நாணயமாக
கவிதைக்கும்
அதிகத் தூரமோ ?
இல்லையெனில்
ஏன் கவிஞனை
பொய்யன் என்கிறார்கள் ? "
என்றாள் அவள்
"இல்லை இல்லை
தன் கூற்றுக்குக்
கொஞ்சம் அழுத்தம் கொடுக்க
சில வார்த்தைகளைச் சேர்ப்பான் அவன்
அது அவனைப் பொய்யனாக்கி விடுகிறது
மற்றபடிக் கவிஞர்கள் எல்லாம்
அரிச்சந்திரன் உறவுதான் " என்கிறேன்
கொஞ்சம் யோசிக்கும்
பாவனையில் இருந்த அவள்
"மிகச் சரியாகப் புரியவில்லை " என்றாள்
நான் சிரித்தபடிச் சொன்னேன்
"தங்களின் இந்த வாக்கியமே
அற்புதக் கவிதைதான்
நீங்கள் சிறந்த கவிஞர்தான் "
"புரியவில்லை " என்றாள்
"புரியவில்லை என்பது உண்மை
மிகச் சரியாக என்றது கவித்துவம்" என்றேன்
"புரிந்தது " என்றாள் நாணயமாக
5 comments:
எனக்கும் அபுரி!
கபாலி என்ற குப்பையை குப்பை என்று சொன்ன உங்களுக்கும், உங்கள் தைரியத்திற்க்கும் நன்றி! ஜாக்கிரதை சிலர் உண்மையை எழுதியதற்கு இங்கு வந்து உங்கள் மேல் கழிவான்கள்.
எங்களுக்கும் புரிந்தது! அருமை! பாராட்டுக்கள்!
அருமையான பதிவு
தொடருங்கள்
தொடருகிறோம்
கற்பனையை விட சில நேரங்களில் உண்மை சுவாரசியமானது. அப்படி இருக்கும் போது கவிஞர்கள் ஏன் பொய்யர்களாகத் தெரியப்படுகிறார்கள்
Post a Comment