Wednesday, August 3, 2016

அகத்தினை... புறத்தினை

அகப்பொருள்  எனில்
காதல் எனவும்
புறப் பொருள் எனில்
வீரம் எனவும்
நம் முன்னோர்கள் சொன்னதை
கொஞ்சம் கூடுதலாகப் ( ? )
புரிந்து கொண்டதால்...

காதலைக் காமமெனவும்
வீரத்தை வன்முறை எனவும்
மடைமாற்றி விட்டோம்

அதனால்
சிதிலமடைந்துக் கிடைக்கிறது
நம் அகமும் புறமும்

அதனால்
சீரழிந்துத் தொலைக்கிறது
நம் மனமும்  இனமும்

பாரதியின்
புதிய ஆத்திச் சூடிபோல்

அகத்தினைச் சீர்செய்ய
அறத்தினை வலியுறுத்தும்
புதிய அகப் பொருளை ..

புறத்தினை நேர்செய்யப்
பொறுப்பினை வலியுறுத்தும்
புதிய புறப்பொருளை ..

படைக்க முயல்வோம் வாரீர்
பண்டைப் பெருமைகளை
மீட்கத் துணிவோம் வாரீர்

4 comments:

G.M Balasubramaniam said...

பண்டைப் பெருமை பேசியே நிறையக் காலங்கழித்து விட்டோம் அதில்லாமலேயே அகம் புறம் புரிந்து கொள்ள முடியாதா

Thulasidharan V Thillaiakathu said...

ரசித்தோம் அகமும் புறமும்

தனிமரம் said...

புரிந்துகொள்ள வேண்டும் அகத்தையும் , புறத்தையும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு.

Post a Comment