Friday, October 30, 2015

மழையைத் தொடரும் தூவானம் ( 3 )

நான் இந்தத் தொடரில்  முதலில் சொன்ன
பீர்பால் கதை, தொடர்ந்து முயன்று கொண்டிருந்தால்
எதையும் காரிய சித்தி ஆக்கிவிடமுடியும்
என்பதை வலியுறுத்தத்தான்

எவர் மனத்துள்ளும்  நம்  கருத்தை
நிலை நிறுத்திவிடமுடியும்  என்பதற்காகத்தான்

நம் பதிவர் சந்திப்புக்கென மைய அமைப்பு
நிச்சயம் வேண்டும் எனது அவா.
பெரும்பாலோரின் அவாவும் கூட..

ஐந்தறிவை ஆறறிவு அடக்கிப் பயன்படுத்திக்
கொண்டாலும் ஆறாவதை வழி நடத்த ஒரு ஏழாவது
அறிவு தேவைப்படுவதைப் போல

சிறந்த  மனிதர்களாயினும்   அவர்களை
ஒருங்கிணைத்து வழி நடத்திக் கொண்டு செல்ல
ஒரு ஏழாவது மனிதன் தேவைப்படுவதைப் போல

ஒரு சில மாவட்டங்களில் தனித்தனியாக
பதிவர்கள் அமைப்பு இருந்தாலும் கூட
தூண்டுதலுக்கு ஒரு மைய அமைப்பு இருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் அவா.

சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில்
மதுரைக்கும் ஈரோட்டுக்கும் அடுத்த சந்திப்பு
நடத்துவது தொடர்பாக ஒரு போட்டியே இருந்தது

மதுரைக்குப் பின் புதுகை என ஏக மனதாக
முடிவு செய்ய்ய்ப்பட்டது. புதுகைக்குப் பின் எது
என புதுகையில் முடிவு செய்யப்படவில்லை

ஒரு மைய அமைப்பு இருக்குமாயின் இதுபோன்ற
விஷயங்களில் கவனம் செலுத்த இயலும்

மேலும் இரண்டாவது தொடரில் அசரீரிக் குறித்து
விளக்கியதைப் போல அனைவர் மனதிலும்
மைய அமைப்புக்குத் தகுந்த தலைமையும்
செயல்வீரர்கள் படையும் புதுகையில்
அமைந்திருப்பதால்......

உடன் அங்கு ஒரு மைய அமைப்பு அமைப்பதற்கான
ஆயத்த வேலைகளைச் செய்யலாம் என்கிற ஒரு
திடமான குரல் ஒலித்துக் கொண்டே இருப்பது
நாம் அனைவரும் உணர்வதே.....

அந்தக் குரலை அலட்சியப்படுத்தாது
 ஒத்த கருத்துடைய பதிவர்களை
ஒருங்கிணைத்து உடன் பதிவர் கூட்டமைப்பு
ஏற்படுத்துவதற்கான ஆயத்த வேலைகளை
புதுகைப் பதிவ்ர்கள் ஐயா முத்து நிலவன் அவர்கள்
தலைமையில் உடன் செய்ய வேண்டும் என்பதை
வலியுறுத்தவே .....

மழையைத் தொடரும் தூவானமாய்
பதிவர் சந்திப்புத் தொடரைத் தொடர்ந்து
இந்தத் தொடர் பதிவு

தங்கள் வெளிப்படையான மனம் திறந்த
கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமாய்
பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்.... 

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வெகு விரைவில் மைய அமைப்பு அமைப்பதற்கான ஆயத்த வேலைகளை திரு. முத்துநிலவன் அவர்கள் ஆரம்பம் செய்வார்கள் என்று நம்புகிறேன்... காத்திருக்கிறேன்...

"ஒற்றுமை" வெறும் வார்த்தையில் இல்லாமல் செயலில் செயல்படுத்துவோம் ஐயா... நன்றி...

ஆனால் ஒன்று :-

வீடு கட்டிய கதைக்கும், பீர்பால் கதைக்கும் இப்படி சம்பந்தப்படுத்துவீர்கள் என்று சற்றும் கூட எண்ணம் வரவில்லை... வாழ்த்துகள் ஐயா...

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

முக்கியமான இப்பதிவை நம் தளத்தில் இணைக்காமல் விடுவேனா...?

மழையைத் தொடரும் தூவானம் மூன்றும் நம் தளத்தில் இணைத்தாகி விட்டது... நன்றி...

இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

KILLERGEE Devakottai said...

நல்ல செயல் இதை நான் வலியுருத்தியே எனது பதிவில் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் கவிஞரே நல்ல கருத்து செயல் படுத்துங்கள்
தமிழ் மணம் 3

G.M Balasubramaniam said...

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.....?

S.P.SENTHIL KUMAR said...

ஒரு அமைப்பு இருந்தால் நல்லதுதான். ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறிய வசதியாக இருக்கும்.
த ம 4

இளமதி said...

அருமையான யோசனை ஐயா!
செயற்படுத்தினால் நிச்சயம் நல்ல பலன் காணலாம்.

வாழ்த்துக்கள் ஐயா!

the poles "colonelpaaganesanvsm.blogspot.com" said...

Excellent idea.All registered Bloggers contribution can be published as a book for the the benifit of the posterity.Like "Pura Nanooru" is the contribution of many poets.A good number of Bloggers are arround Pudukkottai.It can be thought over by Mr.Muthunilavan sir.congratulations Mr.Ramani for thr the story and the idea.

அழகிய நாட்கள் said...

மதுரை பதிவர் சந்திப்பின் போது பெயர் கொடுத்து விட்டு பெல்லாரியினின்றும் வர முடியவில்லை. புதுக்கோட்டையில் அடுத்த பதிவர் சந்திப்பு என்று அங்கே தகவல் வெளியானதும் அதன் படியே புதுகையில் அட்டகாசமான முறையில் பதிவர் சந்திப்பை நடத்திமுடித்ததும் திட்டமிடலில் இருக்கிறது. மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிடுவது போல புதுகையில் அடுத்த நிகழ்வு எங்கே என்ற எதிர்பார்ப்பும் இந்த ஊரில் நாங்கள் இருக்கிறோம் நடத்த் என்று சொல்லும்படியாகவும் பதிவர்கள் முன் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Geetha said...

வணக்கம் சார்...நிச்சயம் நாங்களும் எதிர்பார்க்கின்றோம்..ஒன்றிணைந்த வலைப்பதிவர் அமைப்பை...புதுகையில் கணினித்தமிழ்ச்சங்கம் பதிவு ஏற்பாடு துவங்கியாகிவிட்டது...பெரியவர்களின் ஆலோசனையில் அது விரிவு படுத்தப்படலாம்...நிறைவேறட்டும் நமது ஆசை

தனிமரம் said...

நல்ல ஜோசனை செயல்படுத்தினால் புலம்பெயர் பதிவர்களும் இணையலாம். காலம் பதில்தரட்டும் ஐயா.

கோமதி அரசு said...

நல்ல யோசனை, வாழ்த்துக்கள்.

மீரா செல்வக்குமார் said...

முன்னத்தி ஏர்கள் தான் முடிவெடுக்கவேண்டும்...ரமணி அய்யாவுக்கு தெரியாததா...காத்திருக்கிறோம்....

”தளிர் சுரேஷ்” said...

மைய அமைப்பு உருவானால் மகிழ்ச்சிதான்!

கீதமஞ்சரி said...

பீர்பால் கதையின் கருவும் அசரீரீ போலொரு வாக்கும் பெரும் சாதனைகளின் முன்னோடியானதைப் போன்று இங்கு ஊன்றப்பட்ட விதையும் ஒருநாள் வளர்ந்து விருட்சமாகி விண்தொட விரையும். ஊர் கூடியிழுத்தால் நகராத தேரும் நகராதோ? கூடுவோம்.. பதிவென்னும் வடமிழுத்து .. வலையுலகை வலம் வருவோம். மனமார்ந்த வாழ்த்துகள் ரமணிசார்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் யோசனை.... செயல்வடிவம் கொடுக்க வேண்டும்....

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்த்துகள்

Post a Comment