நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்
என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப் புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச் சுழிப்பு
நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்
என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி
நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்
உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "
"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்
கேட்டவன் குழப்பமடைகிறான்
சீரான வேகத்தில்
நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்
என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப் புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச் சுழிப்பு
நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்
என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி
நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்
உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "
"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்
கேட்டவன் குழப்பமடைகிறான்
சீரான வேகத்தில்
நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்
16 comments:
அருமை. தெளிவான சிந்தனை.
தம +1
தெளிவான சிந்தனை
வெற்றியைத் தேடித்தரும்
அருமை ஐயா
தம +1
நமக்கு நாம் மட்டுமே இலக்கு... அருமை ஐயா...
மிக மிக அருமை ஐயா..இந்த தெளிவுதான் அனைவருக்கும் தேவை.
தெளிந்த சிந்தனை.. அருமையான வரிகள் ஐயா. மிக்க நன்றி..
அருமை அடுத்தவரையே எண்ணியே அனைவரும் வீழ்கின்றனர்....இதை உணர்ந்தாலே போதும் சார்.
நாமே நமக்கு இலக்கு! சிறப்பான கருத்து! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
என்னையே நான் கடந்து இலக்கை மாற்றிக் கொண்டே இருக்கிறேனே
அருமையான இறுதி வரிகள்!
த ம 6
வேகம் முக்கியமென்று
கருதுவது விடலைகளின் நினைப்பு...
விவேகமே முதன்மையானது என
விளக்குவதே சிறப்பு..
தங்கள் அனுபவத்தில் பார்த்தறியாததா?
இந்த பிள்ளைகளின் பரிகசிப்பு...
அவர்கள் அறியாதவர்கள்
அவர்கள் தவறை அறியும் வரை...!
ஒவ்வொருவரும் தன்னைத்தானே அறிந்துகொள்ளவேண்டும்.
நான் யார் /?என்ற வினா ரமணனை ரமண ரிஷி ஆக் கியது.
நல்ல கருத்து.வாழ்க,
வணக்கம்
ஐயா
நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள்
எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கும்... கீதையில் சொல்வது போல.த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை அருமை! நல்ல நீரோடையைப் போன்று தெளிவான நீரோட்டம்...அதன் ஆழம் கூட தெரிகின்றதே!
பெரிய கருத்தைச் சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள்.ஸ்வாமி பித்தானந்தாவிடம் சொன்னேன்;மகிழ்ச்சியடைந்தார்
உங்களிடமிருந்து இதை எத்தனை முறை படித்தாலும் நிறைவாகத் தான் இருக்கிறது இரமணி ஐயா.
எனக்கு நானே இலக்கு......
நல்ல சிந்தனை.
Post a Comment