Monday, November 23, 2015

இறுதிப் போட்டி ?

உடலே மத்தாக
மூச்சே வடமாக
ஐம்புலனும் பார்வையாளனாக

காலமும் உயிரும்  நடத்தும்
கயிறிழுக்கும் போட்டிதான்
நாம் வாழும் வாழ்வா ?

இழுத்து அலுத்து
ஓய்ந்த  உடலது
இயலாது தன் நுனியை
மெல்லத் தொய்யவிட

எரிச்சலுற்ற காலம் தன் நுனியை
காலனிடம் சேர்க்கும் நாள்தான்
நமக்கு கடைசி நாளா ?

வார்த்தைகளை எளிதாய் வெல்லும்
அதீத மௌனம் போல

ஹிம்ஸையின் பேயாட்டத்தை
எதிர்க்காதே வெல்லும்
சக்தி மிக்க அஹிம்ஸைபோல

ரூபத்தை வெட்டிச் சாய்த்து
அரூபம் வெல்லும்
அந்த    நாள்தான்
நமக்கெல்லாம் இறுதி நாளா ?

11 comments:

நிஷா said...

காலமும் இதயமும் நடத்தும் கயிறிழுக்கும் போட்டியில் சிக்கிக்கிட்டிருப்பது என்னமோ நாம் தான் !

இறுதி நாள் குறித்தே அனேகர் சிந்திப்பதை கடந்த சில நாட்களாஅக்தொடரும் பதிவில் காண்கின்றேன்!

மழையும் வெள்ளமும் ரெம்பத்தான் கஷ்டப்படுத்துகின்றது போலும்.

RAMJI said...

மந்தார மலையும் வாசுகி பாம்பும் கடையபட்டது போல் உலக வாழ்வில் நாம் கடையப்படுகிறோம்

ஸ்ரீராம். said...

அருமை.
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படித்தான் போல...

செந்தழல் செ சேதுபதி said...

நல்லதொரு கவிதை எழுதியவர்க்கும் பகிர்ந்தவர்க்கும் வாழ்த்துக்கள்!

சுந்தரா said...

அவ்வளவுதான் வாழ்க்கை...

KILLERGEE Devakottai said...

வாழ்வியல் உண்மை ரசித்தேன் கவிஞரே..
தமிழ் மணம் 4

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

வாழ்வியல் தத்துவத்தை உணர்ந்தேன் ஐயா...த.ம5

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

கவிதை அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான வரிகளில் வாழ்க்கையின் தத்துவம்...

'பரிவை' சே.குமார் said...

வாழ்வியல் உண்மை..
அருமை ஐயா...

Post a Comment