Friday, November 13, 2015

இது கொடுக்கிற இடமில்லை எடுத்துச் செல்கிற இடம்

நாங்கள் சன்னதியின் வாசலில் இருந்தோம்

 "இது முட்டாள்களின் சரணாலயம் "
எனச் சொல்லிப்போனார் 
ஒரு கருஞ்சட்டைக் காரர் 

"எல்லாம நீ  கொடுத்தது
உன்னிடம் எப்படிக்  கணக்குப் பார்ப்பது "
மொத்தமாக உண்டியலில்
பணத்தைக்  கொட்டிக்கொண்டிருந்தார்
ஒரு தொந்திப்  பெருத்த" கன "வான்

"உனக்கு எப்ப மனம் வருகிறதோ
அப்போது செய்
நான் விடாது வந்துகொண்டுதான் இருப்பேன்
நீயா நானா பார்த்துவிடுவோம் "
தானாகபுலம்பிக் கொண்டிருந்தார்
ஒரு கூன் விழுந்தபெரியவர்

"இதில் எது சரி
எல்லாமே சரியாய் இருக்க வாய்ப்பில்லையே "
குழப்பத்தில் இருந்தான்  நண்பன்

" நம்பி( க் )"கை"யின்றி வருபவர்கள்
எதையும் எடுத்துச் செல்ல வழியில்லை

நம்பி வெறுங் "கை "யுடன் வருபவர்கள்
கையளவே  கொண்டு போகிறார்கள்

முழுதும் நம்பி
அள்ளவென்றே அண்டாவுடன் வருபவர்கள்
அதிகம்  கொண்டு போகிறார்கள்
.
இது கொடுக்கிற இடமில்லை
அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துக் கொண்டு செல்கிற இடம் " என்றேன்

நண்பன்
கீழ் மேலாய்  தலையாட்டினான்
அது
ஏற்றுக் கொண்டது போலவும் இருந்தது
ஏற்றுக் கொள்ளாதது போலவும் இருந்தது

11 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா!!! அருமை அருமை...அவரவர் நம்பிக்கைதான்...தொழும் போது எந்தவித வேண்டுதல்களோ எதிர்பார்ப்போ இல்லாமல்...அன்பிற்காக அந்த அன்பினைத் தொழுவது சிறந்தது இல்லையா...

Yaathoramani.blogspot.com said...

நன்றி சொல்ல என்பதை விட நம்பிக்கை பெற என்பது சரியாக இருக்கும் தானே

கோமதி அரசு said...

அருமையான் விளக்கம் நண்பருக்கு கொடுத்தீர்கள்.
வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

அவரவர் சக்திக்கு ஏற்றது போல எடுத்துச் செல்லும் இடம்! உண்மையான வரிகள்! அருமையான தத்துவம்! வாழ்த்துக்கள் ஐயா!

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயா... உங்களின் பதில் என்ன...?

இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/All-is-god.html

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
உண்மையான வரிகள் ஐயா... நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அருணா செல்வம் said...

எடுத்துச் செல்கிற இடம்.... உண்டியலை உடைத்தா?

நிஷா said...

இது கொடுக்கிற இடமில்லை
அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துக் கொண்டு செல்கிற இடம் " என்றேன்

அருமையான் விளக்கம்

மீரா செல்வக்குமார் said...

அருமை.... வரிகள்

Yarlpavanan said...

சிந்திக்க வைக்கும்
சிறந்த பாவரிகள்

வெங்கட் நாகராஜ் said...

அவரவர் சக்திக்கு ஏற்ப எடுத்துச் செல்லுமிடம்.. அருமை.

Post a Comment