Thursday, November 5, 2015

நிஜமும் நிழலும்

வனவாசம் முடிந்து திரும்பும்
ஸ்ரீராமனுக்காக
மாலைக்குப் பின் முதன் முதலாய்
மீண்டும்
பகலைக் கண்ட அயோத்தி
ஒலி ஒளி வெள்ளத்தில் தத்தளிக்க

ஒழிய இடமில்லா
நிசப்தமும் இருளும்
ஒதுங்கியிருந்த அந்தப்புரத்துள்
புகைப் போல் மெல்லப் பரவி
திடப் பொருளாய் உருமாறத் துவங்க

தலைவிரி கோலமாய்
இருளோடு இருளாய்
இறுகிப் போய்க் கிடந்தாள்...

இளமையை யும்
அழகையும்
 உணர்வையும்
காலக் கரைசலில் கரையவிட்ட
 ஊர்மிளை

அடக்குமுறைக்குப்
பயந்திருந்த அடிமையாய்
அதுவரை அடங்கிக் கிடந்தப் 
பணிப்பெண் மெல்ல

"மகாராணி அச்சமாய் இருக்கிறது
மன்னரை வரவேற்கும் விதமாய்
ஒரு சிறு அகல் விளக்காவது ஏற்ற
அடிமையை அனுமதிக்க வேண்டும்"
எனப் பணிகிறாள்

மெல்ல உதடு  சுழித்துப் 
புன்னகைத்த ஊர்மிளை
"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "
என்கிறாள்

அரண்மனை வாயிலில்
ஸ்ரீ ராம ஜெய கோஷம்
விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது

13 comments:

ஸ்ரீராம். said...

மறை(ற)க்கப்பட்ட தியாகம்!

ஸ்ரீராம். said...

தம +1

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம+1

வெங்கட் நாகராஜ் said...

யாருமே நினைக்காத ஊர்மிளைக்கும் ஒரு கவிதை. பாவம் அவள்!

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வரலாறுகளிலும், புராணங்களிலும் கூட இந்த ஆண்களின் சாகசங்களுக்குப் பின்னால் சத்தமின்றிக் கேட்கும் பெண்களின் அழுகுரல் இவற்றைத் தொகுத்தால் நமது வரலாறுகளின் மறுபக்கம் மகத்தான சோகமாக விரியும். அய்யா..மறுவாசிப்பில் மனம் கசியச் செய்துவிட்டீர்கள். “பசித்தழும் குழந்தைக்குப் பார்வதி தேவியாய், கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை அவிழ்க்க ஆசைதான்..பார்வதி தேவி வேலைக்குப் போனாளா?” எனும் ஆண்டாள் பிரிய தர்ஷினியின் குரல் ஆண்சாதனையாளரின் முகத்தில் அறைந்த கவிதையை நினைவூட்டிவிட்டீர்கள் அய்யா நன்றி. தம3

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

ராஜி said...

ஊர்மிளை பாவம்தான்.

S.P.SENTHIL KUMAR said...

வித்தியாசமான கவிதை!
த ம 8

கோமதி அரசு said...

"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "
என்கிறாள்//

ஊர்மிளை சொன்னது அருமை.

அருணா செல்வம் said...

கவிதையைப் படித்ததும்
என் கைகள் ஊமையாகி விட்டது இரமணி ஐயா.

Unknown said...

அருமை!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

காவியக் காட்சியைக் கண்கள் களிப்புறவே
ஓவியம் செய்தீர் ஒளிர்ந்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை! ஊர்மிளையின் தியாகம் மகத்தானது!

Post a Comment