Tuesday, November 10, 2015

மூலம் அறியும் ஞானம்....

பயணத்தின் தூரமே
வாகனத்தை முடிவு செய்யும்

வாகனமே பயண
வேகத்தை முடிவு செய்யும்

வாகன வேகமே
காலத்தை முடிவு செய்யும்

காலமதைப் பொருத்தே
இலக்கடைதலும் இருக்கும்

இதை புரியாதவன்
நல்ல பயணியும் இல்லை
சுகமாய் இலக்கடைதலும் இல்லை

கருவின் நோக்கமே
வடிவத்தை முடிவு செய்யும்

கொள்ளும் வடிவதுவே
வார்த்தைகளை முடிவு செய்யும்

வார்த்தைகளைப் பொருத்தே
உணர்வும் உள்ளடங்கும்

உணர்வின் உள்ளடக்கமே
படைப்பினைச் சிறப்பிக்கும்

இதைப் புரியாதவன்
நல்ல படைப்பாளியும் இல்லை
அவன் படைப்பு சிறப்படைதலும் இல்லை

எச் செயலுக்கும்
மூலம் அறியும் ஞானம் பெறுவோம்
எச் செயலிலும்
எளிதாய் சுகமாய்ச் சிகரம் தொடுவோம்

9 comments:

Geetha said...

ஆஹா ..காலமும்மூலமும் அறிந்து செயல்படுவோம்...அழகான நடை...

திண்டுக்கல் தனபாலன் said...

அழகாக (எளிதாகவும்) சொல்லி விட்டீர்கள் ஐயா...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வெற்றி பெற சூட்சுமத்தைக் கூறியுள்ளீர்கள். நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான தத்துவம்! நன்றி!

KILLERGEE Devakottai said...

நல்லதொரு விடயங்கள் கவிஞரே
தமிழ் மணம் 3

S.P.SENTHIL KUMAR said...

அருமையான உவமை!
த ம 4

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி.

அருணா செல்வம் said...

ஞானிகளும் தேடிடும் மூலத்தை
நயமாகச் சொல்லி விட்டீர் இரமணி ஐயா.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
இரசிக்கவைக்கும் வரிகள் ஐயா பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment