Wednesday, November 4, 2015

தேர்தல் விளையாட்டு

மைதானங்கள் எவையும்
இப்போது மைதானங்களாக இல்லை
போர்க்களங்களாகி வெகு நாளாகிவிட்டன

விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல
மீறப்படத்தான் என ஆகி
பழக்கப்பட்டும் போய்விட்டது

பார்வையாளர்கள் கூட
பார்வையாளர்களாக இல்லை
இரு அணிகளாகத்தான் இருக்கிறார்கள்

அணிகள் கூட
எதிரிகளாகக் களம் இறங்கி
பரம எதிரிகளாய் வெளியேறுகிறார்கள்

காவலர்களும்
மருத்துவர்களும் இன்றி
விளையாட்டுச் சாத்தியமில்லை என்றாகி
அதுவும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது

ஆயினும் கூட
விளையாட்டு துவங்கும் முன்பும்
விளையாட்டும் முடிந்த பின்பும்

"விளையாட்டு ஒன்றுதான்
மனித நாகரீகத்தின் உச்சம்
மனிதன் உயர்வுக்கு அச்சாணி "எனப்
பிரச்சாரம் செய்து போகிறார்கள்
விளையாடிச் செல்பவர்கள்

ஊட்டப்பட்ட போதையில்
ஆக்ரோஷ  அணிகளாகவே
ஆட்டம் போட்ட பார்வையாளர்கள்

"மிகச் சரி " என அதை அங்கீகரித்தபடி
ஆட்டம் முடிய போதை தெளிய
மீண்டும் சராசரியாய் உருமாறி
கடந்து போகிறார்கள்
தத்தம் பிழைப்புத் தேடி

இனி அடுத்த விளையாட்டு
எப்போது வரும்  என
ஆவலாய் விசாரித்தபடி ..

11 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை! ஒவ்வொரு வார்த்தைகளும் நிதர்சனம்! வாழ்த்துக்கள் ஐயா!

Thulasidharan V Thillaiakathu said...

ஆம் உண்மைதான்...அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

உண்மை...

KILLERGEE Devakottai said...

நடைமுறை உண்மை 100க்கு100 உண்மை கவிஞரே
தமிழ் மணம் 3

ananthako said...

தேர்தல் விளையாட்டு .

சதுரங்க காய்கள்
வட்டம் மாவட்டம் .
நகர்த்த கருப்புப்பணம்.
பேராசை .
இலவசம்

ananthako said...

fact

கீதமஞ்சரி said...

\\பார்வையாளர்கள் கூட
பார்வையாளர்களாக இல்லை
இரு அணிகளாகத்தான் இருக்கிறார்கள்\\ இதுதான் மிகவும் கொடுமை.. ஆதங்கத்தையும் ரசிக்கவைக்கும் வரிகளால் பதிவுசெய்வதுதான் உங்கள் பலம். ரசித்தேன். பாராட்டுகள் ரமணி சார்.

ஸ்ரீமலையப்பன் said...

அனைத்து வரிகளிலும் நிதர்சன உண்மைகள்... அய்யா நான் தங்கள் தளத்திற்கு புதியவன் என்னுடைய வலைப்பூ ethilumpudhumai.blogspot.in

S.P.SENTHIL KUMAR said...

இன்றைய உண்மைகளை அப்பட்டமாக சொன்ன கவிதை.
த ம 4

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

நாட்டின் நிலைமையைக் காட்டும் கவியடிகள்
வாட்டும் மனத்தை மடித்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

வெங்கட் நாகராஜ் said...

இன்றைக்கு விளையாட்டு பல சமயங்களில் வினையாக முடிகிறது....

கவிதை பிடித்தது.

Post a Comment