Thursday, November 12, 2015

முரண் சுவையும் நகைமுரணும்

"நெருப்பில் பூத்த மலர் "
அழகியச் சொற்றொடர்
இலக்கியத்தில் முரண் சுவை

நடைமுறைச் சாத்தியத்தில்
யதார்த்தத்தில் நகைமுரண்

"தண்ணீரில் நிற்கும்போதும் வேர்ப்பது "
இனிக்கிற வாக்கியம்
கவிதைக்கு முரண் சுவை

யதார்த்தமாய் சிந்திக்கையில்
நடைமுறையில் நகைமுரண்

"கட்சியே குடும்பமாய்.."
வித்தியாசமான அணுகுமுறை
அரசியலில் முரண்சுவை

"குடும்பமே கட்சியாய் .."
அரசியலில்  நகைமுரண்

வேறு கோணத்தில் பார்க்க
முரண்சுவை  நகைமுரணாவதை
சொல்லிப் போனவிதம் முரண் சுவை

இந்த விதண்டாவாதத்தை
ஒரு கவியாக்கிக் கொடுத்தது
 நிச்சயம்  நகைமுரண்

14 comments:

KILLERGEE Devakottai said...

மாறுபட்ட விடயம் அருமை கவிஞரே
தமிழ் மணம் 1

வெங்கட் நாகராஜ் said...

நகைமுரண் - ரசித்தேன்.

Geetha said...

ஆஹா "குடும்பமே கட்சியாய் .."
அரசியலில் நகைமுரண்
தான் சார்...

கோமதி அரசு said...

நகை முரண் அருமை.

kowsy said...

யதார்த்தமாய் சிந்திக்கையில் நடைமுறையில் நகைமுரண்

கீதமஞ்சரி said...

ஆஹா.. என்னவொரு அழகான விளக்கம்... பார்ப்பதற்கு ஒன்றுபோலத் தோன்றினாலும் இரண்டும் இருவேறு தளங்களில்! சிந்திக்கவைக்கும் வரிகள். பாராட்டுகள் ரமணி சார்.

கரந்தை ஜெயக்குமார் said...

நனை முரண்
அருமை ஐயா
தம+1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அற்புதமான விளக்கம்..சிந்திக்கவைக்கு கருத்துக்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் ஐயா...

”தளிர் சுரேஷ்” said...

வித்தியாசமான சிந்தனை! அருமை!

ananthako said...

சிறந்த முரண்
நகை முரண் நடப்பது இயற்கை
அருமை முரண்
கீழே விழுந்தவனைப் பார்த்து நகைப்பு

ananthako said...

சிறந்த முரண்
நகை முரண் நடப்பது இயற்கை
அருமை முரண்
கீழே விழுந்தவனைப் பார்த்து நகைப்பு

Thulasidharan V Thillaiakathu said...

நகை முரண் ரசித்தோம்....

Unknown said...

அருமை...

Post a Comment