Thursday, November 19, 2015

பழைய பஞ்சாங்களுக்குப் பஞ்சாங்கம்.....

பழைய பஞ்சாங்களுக்குப் பஞ்சாங்கம் குறித்துத்
தெரியும் இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை

அது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்புஆரியப்பட்டர் என்பவரால் அறுபது
வருடங்களாகக்  காலத்தைப் பிரித்துக் 
கணிக்கப்பட்டது.

அது குறித்த முழுமையான விளக்கத்தை ஏதும்
எழுதப் போவதில்லை.எதேச்சையாக வேறு ஏதோ
ஒரு காரியத்திற்காகப் புரட்டுகையில் இது இப்படி
இருப்பதாக என் உறவினர் சொன்னார்

அதை அப்படியே பகிர்ந்துள்ளேன்

நம்புபவர்கள்  தொடர்ந்து நம்புவார்களாக

வழக்கம்போல் இது எதேட்சையான நிகழ்வு என
நம்புபவர்கள் அப்படியே தொடர்வார்களாக

வாழ்த்துக்களுடன்...............



9 comments:

”தளிர் சுரேஷ்” said...

ஆற்காடு பஞ்சாங்கத்தில் ரொம்ப வருடங்களாகவே இப்படி புயல் மழை பற்றியும் போடுகிறார்கள்! அதில் சில அப்படியே நடக்கிறது. ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பஞ்சாங்கம் வாங்குவதால் தெரியும். சிலசமயம் பொய்த்துப் போவதும் உண்டு.

Nagendra Bharathi said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமேலும் உலுக்காமல் இருந்தால் சரி...!

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் காட்டியுள்ள பஞ்சாங்கத்தில் கார்த்திகை - 6 [22.11.2015] ’புயல் பலமாக சென்னையை உலுக்கும்’ எனப் போட்டுள்ளதைப் பார்த்தேன்.

பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் 3 நாட்கள் இருக்கிறதே. !

ஒரு வாரமாகவே ஆங்காங்கே மழை வெள்ளமாக தமிழகத்தின் பல பகுதிகளை அமர்க்களப்படுத்தி வரும் இயற்கைச் சீற்றத்திற்கு மேல், இது வேறு பாக்கியுள்ளதா ! அட ஆண்டவா !!

Thulasidharan V Thillaiakathu said...

வந்துவிடுமோ?!! ஆனால் ரமணன் வராது என்றுதான் சொல்லி இருக்கின்றார். பார்ப்போம்...

KILLERGEE Devakottai said...

தகவல் நன்று தமிழ் மணம் 3

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

ஆதாரத்துடன் நிருபித்துள்ளீர்கள். த.ம4

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

பல சமயங்களில் உண்மையாகிவிடுகிறது இப்பஞ்சாங்கக் குறிப்புகள்....

Post a Comment