Wednesday, November 25, 2015

குறைகளும் குற்றங்களும் ...

தவறு என்பது தவறிச் செய்வது
இவன் வருந்தியாகனும்

தப்பு என்பது தெரிந்து செய்வது
இவன் திருந்தியாகனும் என

தவறுக்கும் தப்புக்கும்
தெளிவான எளிமையான விளக்கத்தை
"பட்டுக்கோட்டையார்" அளித்ததைப்போல்

குறைகளுக்கும் குற்றங்களுக் கும்
யாரும்  சரியாக விளக்கம் அளிக்காததால்தான்

குறைகளைக்  குற்றங்களாகவும்
குற்றங்களைக்   குறைபோலும் மதிப்பிடும்
தவறுகளைத் தொடர்ந்து  செய்கிறோமோ ?

நிவாரணப் பணிகளில் தொய்வு
இவைகள்  குறைகளே

இது  இயற்கையின் பெரும் சீற்றம்
நிச்சயம்  அனுமானிக்க முடியாதவையே
ஆதலால்  பொறுத்துக் கொள்ளக் கூடியவை

கட்சிகள் அரசியல் செய்வதை
கண்டு கொள்ளவேண்டியதில்லை

மோசமான நகரமைப்பு
நிச்சயம்குற்றங்களே

அதிகாரம் அளித்திருந்தும்
முறையாக  செயல்படுத்தாததால்
மன்னிக்க முடியாதவைகளே

பொறுப்பில் இருந்த கட்சிகள் இரண்டும்
தண்டிக்கப் படவேண்டியவைகளே

எப்படிச் செய்யப்போகிறோம் ?

20 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எப்படிச் செய்யப்போகிறோம் ?//

மக்கள் இதை எப்படியும் செய்யப்போவது இல்லை.

ஏனெனில் இதுபோல அடுத்த பெரும் மழை அல்லது வெள்ளம் வரும்வரை, அனைவருமே இதை நிச்சயமாக மறந்து போவார்கள் அல்லது மறக்கடிக்கப்படுவார்கள்.

இப்போது ஏற்பட்டுள்ள வலி, நிவாரண மருந்துகளால் [நிவாரண நிதிகளால்] வலி ஏதும் இல்லாமல் மறந்துபோகுமாறு விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும்.

இதெல்லாம் இன்று நேற்றா .... கடந்த 50 ஆண்டுகளாகவே எவ்வளவு பிரச்சனைகளில் நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

இப்போதைக்கு நிவாரண நிதி (1) எப்போ கிடைக்கும்? (2) எவ்வளவு கிடைக்கும்? (3) யார் யாருக்குக் கிடைக்கும்? என்பதில் மட்டுமே அனைவரின் கவனமும் இருக்கக்கூடும்.

ரூபன் said...

வணக்கம்
ஐயா
எல்லோருடையஎதிர்பார்ப்பும்... இப்படித்தான் இருக்கும் ஐயா...அழகாக சொல்லியுள்ளீர்கள் த.ம 3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

வைகோ ஐயா சொன்னதே நடக்கும்...

ஸ்ரீராம். said...

ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனம்.

பழனி. கந்தசாமி said...

இப்போதைக்கு நிவாரண நிதி (1) எப்போ கிடைக்கும்? (2) எவ்வளவு கிடைக்கும்? (3) யார் யாருக்குக் கிடைக்கும்?

பாயின்டைப் புடிச்சிட்டீங்க.

ராஜி said...

ஒண்ணுமே செய்ய மாட்டோம். அதான் உண்மை

Ramani S said...

அப்படிச் சொல்றதை விட
திரும்பவும் தப்பாய்த்தான் செய்வோம்
எனச் சொல்லலாமா ?

நிஷா said...

குறைகளைக் குற்றங்களாகவும்
குற்றங்களைக் குறைபோலும் மதிப்பிடும்
தவறுகளைத் தொடர்ந்து செய்கிறோமோ ?

அப்படித்தான் நடந்து கொண்டுள்ளது. இனி என்ன இலவசங்களும் நிவாரணங்களும் நடந்தவைகள் குறையும் இல்லை, குற்றமும் இல்லை என நினைக்க கூட முடியாத படி அனைத்தினையும் மழுங்கடித்து விடும்.

கீத மஞ்சரி said...

மக்களிடத்தில் தெளிவிருந்தால் முன்னேறும் மார்க்கம் வகையாய்க் கண்முன் வாராதோ? ஊதும் சங்கை ஊதிக்கொண்டே இருக்கவேண்டும். தாங்களும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள் ரமணி சார்.

Thulasidharan V Thillaiakathu said...

ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனம். ஏனென்றால் எல்லாமே புரையோடிக் கிடக்கின்றது. தூர்வாரவே வருடங்கள் பிடிக்கும்.

நாமும் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றோம். சொல்லிக் கொண்டே இருப்போம். நம்பிக்கையுடன்...என்றைக்கேனும் ஒருநாள் இப்போது போடப்படும் விதைகள் விருட்சமாகாதோ என்ற நம்பிக்கையில்...நமது அடுத்த தலைமுறையினருக்கு நாம் சேர்த்து வைப்பது போல, இதையும் விதைத்தால், நாளை நம் சந்ததியினராவது நல்லவற்றை அனுபவிக்கட்டுமெ இல்லையா....நல்ல விதை...

நாங்களும் இதைத்தான் கணக்கு என்று சொல்லிப் பதிவு இட்டிருக்கின்றோம்...

G.M Balasubramaniam said...

நிவாரண நிதி நீர் மேலாண்மைக்குச் செலவிடப்படவேண்டும் எல்லாம் தனிப்பட்டவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கக் கூடாதுஇனி வருங்காலத்திலாவது சேதங்களையும் கஷ்டங்களையும் குறைக்கும் விதத்தில் இருக்கவேண்டும்

KILLERGEE Devakottai said...

நாமென்ன ? செய்யப் போகிறோம் வழக்கம் போல பணத்தை வாங்கி விட்டு ஓட்டு போடப்போகிறோம் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து... இதுதானே நடக்கின்றது செய்த தப்புக்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் அதுதான் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்,
தமிழ் மணம் 5

சீராளன் said...

வணக்கம் ரமணி ஐயா !

நல்ல கேள்விதான் சிந்திக்க வேண்டிய விடயம்தான் ஆனால் செய்வார்களா ???????

அருமை தொடர வாழ்த்துக்கள்
தம +1

நான் ஒன்று சொல்வேன்..... said...

நியாயமான கேள்வி...

வலிப்போக்கன் - said...
This comment has been removed by the author.
வலிப்போக்கன் - said...
This comment has been removed by the author.
வலிப்போக்கன் - said...

தவறு செய்தவன் வருந்தியதுமில்லை.. தப்பு செய்தவன் திருந்தியமுில்லை...அய்யா.

Srimalaiyappanb sriram said...

என்ன செய்தாலும் மாற்றம் உடனே ஏற்படப்போவதில்லை... முயற்சிப்போம்

yathavan nambi said...

மாற்று சிந்தனை மகத்தானது கவிஞரே!
யாரிடம் பொறுப்பை தருவது?
புறங்கையில் ஒட்டியிருக்கும் தேனை பாதுகாப்பதிலே ஐந்து வருடம் சென்று விடுகிறதே!
விதியிடம் மதியை ஒப்படைக்க வேண்டிய சூழலில் மக்கள் மனம்!!!

த ம +
நட்புடன்,
புதுவை வேலு

சென்னை பித்தன் said...

குற்றங்கள் ’குறை’ய வேண்டும்.குறைகள் அகலவேண்டும்.சிறப்பான பகிர்வு

Post a Comment