Saturday, November 7, 2015

பிரம்ம இரகசியம்

அதிக அளவு உணவு
சத்தானதில்லை
அதில் சக்கைகளே
அதிகம் இருக்கும்

குறைந்த அளவாயினும்
சத்தானதே சரியானது
அது சுகமானதும் கூட
அது சரியானதும் கூட

அதிகம் நேரம் பேசுவது
சிறப்பானதில்லை
அதில் தேவையற்றவை
அதிகம் இருக்கலாம்

குறைந்த நேரமாயினும்
தேவையானதே சரியானது
அது முறையானதும் கூட
பயன்தருவதும் கூட

நாம் கதையை விட்டும்
கட்டுரையை விட்டும்
கவிதையை தேர்ந்தெடுக்கும்
இரகசியம் தெரிந்தவர்களுக்தானே
இந்த பிரம்ம இரகசியம் புரியும்
மற்றவர்களுக்குப் புரியுமா என்ன ?

11 comments:

உயிர்நேயம் said...

'அதிகம் நேரம் பேசுவது
சிறப்பானதில்லை
அதில் தேவையற்றவை
அதிகம் இருக்கலாம்'

சிலர் அதிகம் பேசினாலும் எழுதினாலும் அவற்றில் தேவையானவை அதிகம் இருக்கும். இன்னும் சிலர் கொஞ்சம் எழுதினாலும் அதில் சக்கைகளே மிகுந்திருக்கும்.

Yaathoramani.blogspot.com said...

தங்கள் மூன்று வலைத் தளத்திலும்
தங்கள் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக
பதிவுகள் இருக்கும் என எண்ணிப் போனேன்
ஏதும் இல்லாது இருந்தது
தங்கள் விரிவான அருமையான பதிவுகளை
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
வாழ்த்துக்களுடன்...

ஸ்ரீராம். said...

சில நேரங்களில் புரிவதில்லைதான்!
:)))
தம +1

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின்
பிரம்ம ரகசியத்தைப்
புரிந்து கொண்டேன் ஐயா
நன்றி
தம +1

Geetha said...

உண்மைதான் குறைவானச்சொற்களுடன் விரிவான செய்தியைக்கொடுக்கும் கவிதை..

வலிப்போக்கன் said...

பிரம்ம இரகசியத்தை புரிந்து கொண்டேன் அய்யா....

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை....

அருணா செல்வம் said...

உண்மை தான் இரமணி ஐயா.
ஆனால் கவிதைகளை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாதே.

”தளிர் சுரேஷ்” said...

அட்டகாசம்!

Thulasidharan V Thillaiakathu said...

ம்ம் பிரம்மரகசியம் புரிவதுதானே கடினமாக இருக்கின்றது!!!! சில சமயங்களில். அதனால் தான் அதைப் பிரம்ம ரகசியம் என்றும் சொல்லுகின்றார்களோ....(ப்ரம்மனின் படைப்பு ரகசியம்)

அருமை!

வெங்கட் நாகராஜ் said...

பிரம்ம ரகசியம்......

அருமை.

Post a Comment