Thursday, November 12, 2015

நேரு மாமா பிறக்கும் முன்பும்....

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை  
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// தொடர்ந்து இருத்தல் அதுவே பெருமை
என்று உணர்ந்ததும் //

அருமை ஐயா...

KILLERGEE Devakottai said...

நேரு என்றால் ரோஜா நினைவு வருவது உண்மைதான் கவிஞரே அருமை
தமிழ் மணம் 3

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அற்புத வரிகள் நேருமாமா பற்றி... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா. த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

Yarlpavanan said...

'ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும் வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத் தந்தது' என்ற
உண்மையை
ஏற்றுத்தான் ஆகவேண்டுமே!

சீராளன்.வீ said...

அன்பும் அறிவும் அணைந்தே வாழ்ந்த
அமுதம் நேருதான் -அவரால்
துன்பம் அறுந்தோர் துயிலும் வரைக்கும்
தொடரும் பேருதான் !

மிக அழகான அர்த்தமுள்ள பாடல் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
தமிழ்மணம் +1

தி.தமிழ் இளங்கோ said...

முன் கூட்டியே தாங்கள் எழுதிய குழந்தைகள் தினம் கவிதைக்கு நன்றி. நாளைய குழந்தைகள் தினத்திற்கு , இன்றே எனது வாழ்த்துக்கள்.

நிஷா said...

நேருமாமா சூடியதால் தான் ரோஜா ராஜா ஆகியதோ? அருமையான சிந்தனை!

குழந்தைகள் தினம் நோக்கிய குழந்தைகளுக்காக கவிதை அழகு!

சென்னை பித்தன் said...

அருமை

சென்னை பித்தன் said...

தம 7

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
நன்றி
தம +1

Thulasidharan V Thillaiakathu said...

சிறப்பாக உள்ளது

Unknown said...

நன்று நண்பரே! நலமா!

ராமலக்ஷ்மி said...



குழந்தைகள் தின சிறப்புக் கவிதை அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

SOMASUNDARAM APPOOTHY said...

மோகன்மான மோதிலால் மைந்தன்
பாரென்றும் போற்றும் பஞ்சசீலத்தின் தந்தை
பாரத நாட்டின் நவயுக சிற்பி
ஆசிய ஜோதி அண்ணல் நேரு
ஆற்றிய தொண்டினை அன்பொடு நினைந்து
நன்றிப் பெருக்கில் நனைவோர் இன்றும்
இருப்பதை இரமணியின் கவிதை உணர்த்த
தேனாற்று வெள்ளத்தில் மிதந்ததென் நெஞ்சம்!

Post a Comment