Monday, November 16, 2015

வளரும் சேவை இயக்கம்

நாங்கள்  இருக்கிற  சங்கத்தின் மூலம்  சேவைகளைத்
தொடர்வதுடன்  புதிதாக ஒவ்வொரு ஆண்டும்
ஒரு புதிய சங்கத்தைத் தோற்றுவிப்பதை  எங்கள்
தலையாயக் கடமையாகக்  கொண்டு செயலாற்றி
வருகிறோம்

அந்த வகையில்  இந்த ஆண்டு மதுரை திரு நகரில்
மதுரை திருநகர்  பெஸ்ட்   என்னும் பெயரில்  டாக்டர்
எம் சுப்ரமணியம் அவர்கள் தலைமையில்  சேவையில்
ஈடுபாட்டுடன் உள்ள   சமூகத்தில்  உயர்ந்த
அந்தஸ்தில் உள்ளவர்களாகத் தேர்ந்தெடுத்து
மாவட்ட  ஆளுநர் எஸ்  இராமசுப்பு பி.எம் ஜே  எப்
அவர்கள்மூலம்  உலக அரிமா சங்கத்தில்
ஒரு அங்கீ கரிக்கப்பட்ட சங்கமாக   இணைக்க
ஆவன செய்தோம்

அந்த நிகழ்வு  சில புகைப்படங்களை  இங்கு
பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

ஆளுநர்  ,புதிய தலைவர் டாக்டர் சுப்பிரமணியம்
மற்றும் அவர்களது சங்க உறுப்பினர்கள்





அங்கீகரி க்கப்பட்ட  பட்டயத்தைஆளு நர் வழங்கியதும்
வாழ்த்துக் கூறும்அமைச்சரவைச்
செயலாளர்லயன் எஸ்  ஸ்ரீதர்   அவர்கள்

பின் வரிசையில்  மோஹன் மண்டலத் தலைவர் ,
ஆளு நர் எஸ் இராம சுப்பு அவர்கள்
டிலைட்  அரிமா சங்கத் தலைவி
உமா மேடம் அவர்கள்,தலைவர்
டாக்டர் சுப்ரமணியம்  ,துணை
ஆளுநர்  தி தனிகோடி அவர்கள்
லயன்ஜெயக்கொடிஅவர்கள்
அடுத்தது அடியேன்

புதிய  நிர்வாகிகளுக்கும்  உறுப்பினர்களுக்கும்
வாழ்த்துக் கூறுவது  அடியேன் 

எங்கள் அரிமா  சங்க  வழிபாட்டில் "நான்
அரிமா கூட்டங்களில்  கலந்து கொண்டு
விருந்து உண்ணுகிற போது  ..." என்கிற  வாசகம்
உண்டு.அந்த வகையில் எப்போதும் கூட்டம் முடிந்து
ஒரு சிறப்பான விருந்து இருக்கும் .அதையும்
தாராள மனமுடைய    சிலர்  தாமாகவே முன் வந்து
பொறுப்பேற்றுக் கொள்வார்கள்

அந்த வகையில்  இன்றைய கூட்டத்திற்கான
மொத்த செலவையும்   தலைவர் டாக்டர் சுப்ரமணியம்
அவர்களும் செயலாளர் இராமதாஸ் அவர்களும்
பொருளாளர் மோஹன் நாராயணன் அவர்களும்
ஏற்றுக் கொண்டு சிறப்புச் செய்தார்கள்



இக்கூட்டத்தில்  கல்விச் சேவையாக
பொருளாதர நிலையில் பின்தங்கிய  நிலையில் இருந்த
பள்ளி மாணவிகளுக்கு  பண உதவியும்
ஏழை  கு டும்பங்களை மிகச் சரியாகத்   தேர்ந்தெடுத்து
உதவி செய்ததும்  மகிழ்வளிப்பதாக  இருந்தது

நான் என்பதை நாம் என மாற்றி

உறவுகளை வளர்ப்பது
சேர்ப்பதில் கொள்ளும் சுகத்தை
கொடுத்துக் காண்பது
ஜாதி மத குறுகிய எல்லைகள் கடந்து
மனித நேயம் வளர்ப்பது
இவைகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்பில்
இணைப்பில் இருப்பது
சுகமாகத்தான் இருக்கிறது


பக்கம் பக்கமாய்  பதிவு  எழுதவதை விட  இதுபோல்

சிறு சிறு   பொது நல காரியங்கள்  தவறாது  செய்வதுதான்
அதிக மகிழ்வளிப்பதாக  உள்ளது

நீங்களும் நிச்சயம் மகிழ்வீர்கள்  என்பதற்காகவே

இதை  இங்கு பகிர்கிறேன்

வாழ்த்துக்களுடன்...


10 comments:

KILLERGEE Devakottai said...

நல்லதொரு விடயம் புகைப்படங்கள் தெரியவில்லையே....?
தமிழ் மணம் 1

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயா... கவனிக்கவும்... படங்கள் எதுவும் தெரியவில்லை...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் இணைத்து விட்டேன்...

+1

நன்றி...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

வாழ்த்துக்கள் ஐயா... த.ம 3
படங்களை் விளங்க வில்லை ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அன்பே சிவம் said...

புகைப்படம் மழையுடன் புகை சூழ்ந்ததால் மறைந்திருக்குமோ!

அப்படியெனில் அது மறைப்படமோ!

தங்கள் அன்பை பதிவுகள் வழியே தினமும் தரி(ர)சிப்பதால்

எமக்கு அதைப் படமாக பார்க்க வரமி(வி)ல்லை போலும்!

தங்கள் ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பை படம் சொல்லாவிட்டாலென்ன

இப்பதிவு வழியே மனம் சொல்லிவிட்டது,

நன்றி அய்யா.

நிஷா said...

புகைப்படங்கள் தெரியவிலையே என் இணைய வேகத்தின் தடையோ என நினைத்தேன். பின்னூட்டம் கண்டால் இணைப்பில் தவறோ என தோன்றுகின்றது.

&பக்கம் பக்கமாய் பதிவு எழுதவதை விட இதுபோல்
சிறு சிறு பொது நல காரியங்கள் தவறாது செய்வதுதான்
அதிக மகிழ்வளிப்பதாக உள்ளது------

மிக அருமையான சிந்தனை தான். சொல்தலை விட செய்தல் சிறப்பென உணர்ந்து எழுதி இருக்கின்றீர்கள். நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பணி சிறக்க வாழ்த்துக்கள். நண்பர்கள்கூறுவதுபோல் புகைப்படங்கள் தெரியவில்லை.

Yaathoramani.blogspot.com said...

நெட் சரியாக வேலை செய்யாததால்
படங்களைச் சரியாக இணைக்க முடியவில்லை
இப்போது சரி செய்துள்ளேன்
வாழ்த்துக்களுடன்...

வலிப்போக்கன் said...

தகவலுக்கு நன்றி! அய்யா

Thulasidharan V Thillaiakathu said...

தங்களது சேவைப்பணி சிறக்க வாழ்த்துகள் சார்!

Post a Comment