Thursday, November 19, 2015

அழகு .....

பூமிக்கு நீர் நதி அழகு 
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு அருளலே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு மணிமுடி அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு

முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு

வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அழகோ அழகு ஐயா...

ராமலக்ஷ்மி said...

வெகு அழகு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகு.... அழகு.... நீங்கள் எழுதினால் எதுவுமே அழகு !

”தளிர் சுரேஷ்” said...

அழகோ அழகு நீங்கள் எழுதிய கவிதை! அருமை! பாராட்டுக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

அழகு அழகு எல்லாமே அழகு தாங்கள் எழுதிய கவிதையும் அழகு!

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
சொல்லிய சொல் வீச்சும் அழகு ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

கண்ணுக்கு மை அழகு பாடல் ஏனோ நினைவுக்கு வந்தது.....

உங்கள் கவிதையும் அதில் பயன்படுத்திய சொற்களும் வெகு அழகு!

Post a Comment