Friday, November 6, 2015

மாதாந்திர தொடர் சேவை


நான் சார்ந்திருக்கிற அரிமா சங்கத்தில்
அகில உலக அளவில் தலைவராக இருக்கிறவர்கள்
சில சேவைத் திட்டங்களை நிறைவேற்றும்படி
அறிவுறுத்துவார்கள்

மாவட்ட ஆளு நராக 
தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களும் தம்முடைய
மாவட்டத்திற்கு ஏற்றவகையில் சில 
சேவைத் திட்டங்களை நிறைவேற்றும்படி 
அறிவுறுத்துவார்கள்

அந்த வகையில் இந்த ஆண்டு மாவட்ட ஆளு நராகத்
தேர்ந்தெடுக்கப்ப்ட்டிருக்கிற 
லயன் இராம சுப்பு பி எம் ஜே ஃப் அவர்கள்
இளம் தலைமுறைகளை உருவாக்குவோம்,
கண்களை வாழ்வைப்போம்,பசிப்பிணி ஆற்றுவோம்
பசுமைகாப்போம் என்கிற திட்டங்களோடு
மாதந்திர தொடர் சேவைத் திட ஒன்றையும்
செய்தல் வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்

வட்டாரத் தலைவர் என்கிற முறையில்
எனது வட்டாரத்தில் உள்ள  சங்கங்களின்
சேவைத் திட்டங்கள் சிறப்பாக நடைபெற
தேவையான ஆலோசனைகள் வழங்குவதோடு
அந்த சேவைத் திட்டங்களில் கலந்து கொண்டு
சிறப்புச் செய்வதும் எனது பணியாகும்

அந்த வகையில் இன்று எனது வட்டாரத்தில்
உள்ள சிறந்த சங்கமான டிலைட் அரிமா சங்கப்
பொறுப்பாளர்கள் கள்ளிக்குடி கிராமத்தில்
ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு
இரத்தவகையை சோதித்து பதிவு செய்து 
கொடுத்ததோடு ஹீமோகுளோபின் 
சோதனையும் செய்து கொடுத்தார்கள்

இந்த நிகழ்வுக்கு என்னால் ஆன உதவிகளைச் 
செய்ததோடு கலந்து கொண்டு சிறப்பிக்க முடிந்ததும் 
மனதுக்கு மிகவும் நிறைவு தருவதாக இருந்தது

எண்ணத்தால் இமயம் அசைப்பதை விட
இதுபோல்  சிறு சிறு செயல்களால் துரும்பசைப்பதுவே
வாழ்வதற்கு அர்த்தம் கொடுப்பதாகவும் இருக்கிறது

...



9 comments:

ஸ்ரீராம். said...


வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் சார். வாழ்கவளமுடன்.

இளமதி said...

மிக மிக அருமை ஐயா!
சேவைகள் தொடரட்டும்!...

வாழ்த்துக்கள்!

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்!

சீரிய செய்கையால் சிந்தை புகுந்தீர்!பார்
வீரியம் மேவும் மிளிர்ந்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
தங்களின் சேவை வளர எனது வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீமலையப்பன் said...

நல்ல செயல்கள் அய்யா... வாழ்த்த வயதில்லை தொடரட்டும் உங்கள் பணி...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பணி! வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்த்துகள் தங்கள் பணி மேலும் சிறக்க...

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள். மகத்தான பணி தொடரட்டும்.

Post a Comment