Sunday, November 8, 2015

மனைவி கூட நமக்குப் புத்தன்தானே

நாலுவகைக் காய்கறியோடு
அப்பளம் வடையோடு
உண்ட சுகத்தோடு வரும்
ஒரு அசாத்தியக்  களைப்பைப்போல
அதைத் தொடர்ந்து வரும்
ஒரு அருமையான தூக்கத்தைப்போல.....

முன்பெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலே லயிக்கத் துவங்கிவிடுவேன்
அந்தச் சுகத்தில் சில நாள்
வெறுமனே இருக்கத் துவங்கிவிடுவேன்

அதிகாலையில் இருந்து
அடுக்களையில்  தினமும்
தனியாய்ப்  போராடி
அனைவருக்கும்  முகம்பார்த்து
இதமாகப்  பரிமாறி முடித்து .....

அவசரம் அவசரமாய் உண்டு
அது தரும்   அலுப்பில்
சிறிதும் ஓய்வெடுக்க முயலாது......

பாத்திரங்களை கழுவி முடித்து
சமயலறையை ஒழுங்கு செய்துவைத்து
மீண்டும் அடுத்த வேளைக்கென
அடுப்பதனை மீண்டும் பற்றவைக்கும்
அருமை மனைவியைப புரிந்தது  முதல்....

இப்போதெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலிருந்து உடன் விடுபட்டுவிடுகிறேன்
அடுத்ததில் உடன் லயிக்கத் துவங்கிவிடுகிறேன்

புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
அதைத் தருமிடமே போதிமரமெனில்
சமை யலறைக்கூட
 நமக்கு போதிமரம்தானே
அதைத் தன் செயலால் போதிக்கும்
மனைவி கூட
நமக்குப் புத்தன்தானே

14 comments:

sury siva said...

ஆஹா ஆஹா
என்ன ஞானம் !!

தீபாவளிக்கு மாமனார் வீட்டிலேந்து மயில் கண் வேஷ்டி , மாமிக்கு
காஞ்சிபுரம் எல்லாம் வந்தாகி விட்டதோ !!

தீபாவளி வாழ்த்துக்கள்

சுப்பு தாத்தா.

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்... சரியே தான்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
அதைத் தன் செயலால் போதிக்கும் மனைவி கூட
நமக்குப் புத்தன்தானே//

சமையலறை மட்டுமே எனக்கு போதிமரம் !

அதைத் தன் செயலால் போதிக்கும் என் மனைவி + மருமகள்(கள்) மட்டுமே எனக்கு புத்தர்கள்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா
தம+1

KILLERGEE Devakottai said...

மிகவும் ரசித்தேன் நன்று
தமிழ் மணம் 3

Yaathoramani.blogspot.com said...

தீபாவளிக்கு மாமனார் வீட்டிலேந்து மயில் கண் வேஷ்டி , மாமிக்கு
காஞ்சிபுரம் எல்லாம் வந்தாகி விட்டதோ !!//
நானே மாமனார்
ஆகிவிட்டதால் அந்த வரவெல்லாம்
இப்போது மாப்பிள்ளைகள் மூலம்தான்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனிய தீபாவளித் திரு நாள்
நல்வாழ்த்துக்கள்

Geetha said...

புரிதல் வந்துவிட்டாலே இனிமை தானே சார்.

ananthako said...

புத்தர் ஆசையைத்துற என்றார் .
சமையல் அறை புத்தன் என்ன சொல்லுவார் .

Yaathoramani.blogspot.com said...

"Sethuraman Anandakrishnan said..//.
சமையல் அறை புத்தன் என்ன சொல்லுவார் .//

அனைத்திற்கும் ஆசைப்படு என்பாரோ "

இராய செல்லப்பா said...

"சமை யலறைக்கூட / நமக்கு போதிமரம்தானே" என்ற வரிகள் அருமை. பணியிலிருந்து ஒய்வு பெற்றவுடன் அந்த போதிமரத்தின் ஞானத்தைப் பெறவேண்டி, சமையலறையில் அதிக நேரம் செலவிட்டேன். அதன் விளைவு, இப்போது நானே ஒரு போதிமரமாகிவிட்டதாக எதிர்வீட்டுக்காரர் கூறுகிறார்! - இராய செல்லப்பா

Thulasidharan V Thillaiakathu said...

புரிதல் என்று வந்துவிட்டால் எல்லா இடமும், மனிதர்களுமே போதிமரம்தானோ...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
த.ம 6

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஏக்கம் கலந்த தீபாவளி.:

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

சமையலறை போதிமரமும் புத்தனும் சொன்ன போதனைகள் அற்புதம்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

சமையலறை போதிமரமும் புத்தனும்.....

நல்ல பகிர்வு.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

Post a Comment