Tuesday, February 8, 2011

ரகசியங்களை அறியும் ரகசியம்

பூமி பாரக் குறைப்பையே
நோக்கமாகக் கொண்ட கண்ணன்
அனைத்து அதர்மங்களையும்
தர்மமாகவே செய்து போகிறான்

தன்பெயர் தரும் சக்தியாலேயே
அனுமன் அனைத்து சாகஸங்களும் செய்ய
தன் இன்னுயிர் மனைவியை மீட்க
பாலம் கட்டித்தான் போகிறான் இராமன்

இலக்கே வழியைத் தீர்மானிக்கிறது
என்கிற முற்போக்குச் சிந்தனையும்
இலக்கு மட்டுமல்ல
வழியும் பிரதானமே எனச் சொல்லும்
காந்தீயச் சிந்தனையும்
புராண காலங்களிலேயே
நம் மண்ணில்
செழித்தோங்கி வானம் தொட்டிருந்தன

கதைகளுக்குள் ஒளித்துவைத்த
ரகசியங்களை அறிய முயலாது
கதைகளை விமர்சித்தே நாம்
காலம்  பல கடந்து விட்டோம்

ஒளிந்து ஒளிந்து
மாயாஜாலம் காட்டும்
ரகசியங்களை அறியும்
ரகசியம் அறிந்து கொண்டாலே
நம்முள் பல அதிசயங்கள்
நிகழ்ந்து போகுமோ ?
இந்தத்  துயர்மிக்க பூமிகூட
சொர்க்கமாக மாறிப்போகுமோ ?


.


20 comments:

Chitra said...

கதைகளுக்குள் ஒளித்துவைத்த
ரகசியங்களை அறிய முயலாது
கதைகளை விமர்சித்தே நாம்
கால பல கடந்து விட்டோம்


......உங்கள் தெளிவான கருத்துக்கள், ஒவ்வொரு படைப்பிலும் மிளிர்கிறது. இந்த வரிகள், சிந்திக்க வைக்கிறது. சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

sakthi said...

வார்த்தையமைப்பு பிரமாதம்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஒளிந்து ஒளிந்து
மாயஜாலம் காட்டும்
ரகசியங்களை அறியும்
ரகசியம் அறிந்து கொண்டாலே
நம்முள் பல அதிசயங்கள்
நிகழ்ந்து போகும்.

தெளிவான சரியான வார்த்தை ரமணி சார்.

R. Gopi said...

Substance over form, missing the wood for the trees ஆகிய சொற்றொடர்கள் ஞாபகம் வருகின்றன.

மிக எளிமையாகக் கனமான விஷயங்களைப் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறீர்கள்.

எல் கே said...

எளிய வார்த்தைகளில் கடினமான விஷயங்களை சொல்கிறீர்கள்.. தொடரட்டும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒளிந்து ஒளிந்து
மாயஜாலம் காட்டும்
ரகசியங்களை அறியும்
ரகசியம் அறிந்து கொண்டாலே
நம்முள் பல அதிசயங்கள்
நிகழ்ந்து போகுமோ ?
இந்தத் துயர்மிக்க பூமிகூட
சொர்க்கமாக மாறிப்போமோ ?//

படிக்க மிகவும் நன்றாகவே உள்ளன உங்கள் வரிகள்.

ராமனும் கிருஷ்ணனும் வாழ்ந்ததாகச் சரித்திரம் சொல்வது எந்த யுகத்திலோ (பல கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு)..

அந்த மாயாஜால ரகசியங்களை முழுவதும் அறிந்து கொள்ள, நமக்கு வாழ்நாள் போதாது,

அந்த இதிகாசங்களில் சொல்லும் ராமன் போல யாராவது நல்லாட்சி தந்தாலும், அந்த நல்லாட்சிக்கு (அர்ஜுனனுக்கு குருவாக வாய்த்த ஸ்ரீ கிருஷ்ணன் போல) கண்ணன் போல ஆலோசனை சொல்லி பக்கபலமாக இருக்க ஒரு எதிர்கட்சி அமைந்தாலும், மட்டுமே, இந்த இதிகாசங்களில் நம்பிக்கை வைத்துள்ள நம் பாரத தேசமாவது சொர்க்கமாக மாறக்கூடும்.

இதெல்லாம் நடக்கிற கதையா என்று நீங்கள் கேட்பதும் எனக்குப் புரிகிறது.

நல்ல சிந்திக்க வைத்த பதிவு தான். பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

//"ரகசியங்களை அறியும்
ரகசியம் அறிந்து கொண்டாலே
நம்முள் பல அதிசயங்கள்
நிகழ்ந்து போகுமோ ?"//

சுவாரஸ்யம் கெட்டுப் போகும்!

MANO நாஞ்சில் மனோ said...

//இந்தத் துயர்மிக்க பூமிகூட
சொர்க்கமாக மாறிப்போமோ ?//

MANO நாஞ்சில் மனோ said...

//இந்தத் துயர்மிக்க பூமிகூட
சொர்க்கமாக மாறிப்போமோ ?//

உங்கள் கவிதைகளின் எழுத்தின் ரசிக மன்ற தலைவன் நான்...
சூப்பர் அண்ணா.....

Matangi Mawley said...

"இலக்கே வழியைத் தீர்மானிக்கிறது"... beautiful thoughts-- very well written...

intha line-- enakku Ayn Rand endra ezhuththaalarudaiya oru chinthanai ninaivootukirathu--


"Wealth is the product of man's capacity to think."

ithu ungalin antha varikku oru 'corollary' nnu sollalaam...

brilliant!

ShankarG said...

நல்ல கருத்தோடு இலக்கியமாய் எழுதும் ரகசியத்தை ரகசியமாய் எனக்கு கற்றுத் தாருங்கள் ரமணி! அற்புதம். வாழ்த்துக்கள்.

ஹேமா said...

திரும்பத் திரும்ப வாசித்துப் புரிந்துகொள்ள வைக்கிறது ஆழமான வரிகள் !

ஆயிஷா said...

நல்ல சிந்திக்க வைத்த வரிகள் !பாராட்டுக்கள்.

செல்வா said...

//கதைகளுக்குள் ஒளித்துவைத்த
ரகசியங்களை அறிய முயலாது
கதைகளை விமர்சித்தே நாம்
காலம் பல கடந்து விட்டோம்//

உண்மைதான் அண்ணா ... கதைகளையும் கதை ஆசிரியர்களையும் கூட சில சமயங்களில் விமர்சித்து விட்டு பின்னர் கதையின் நீதியை மறந்து விடுவது அதிகமாக இருக்கிறது ..

G.M Balasubramaniam said...

கதைகள் கூறும் செய்திகளை விட்டுவிட்டு கதை சொல்பவர் பற்றியே அதிகம் சிந்திக்கிறோம் என்று நம்மில் ஒருவர் எழுதியது நினைவுக்கு வருகிறது. கேட்கும் கதைகளின் கருவை, அது யார் கூறினதாயிருந்தாலும், ரகசியங்களை அறிந்து கொள்ள முயற்சித்தாலே நம்முள் அதிசயங்கள் நிகழும். ஆனால் நாம்தான் ரகசியங்களை ரகசியமாகவே ரசிக்க விரும்புகிறோம். தெரிந்த விடைகளுக்கு புதிது புதிதாய் கேள்விகள் கேட்பதில் நிபுணர்களாகிறோம். உங்கள் பதிவு என்னை இவ்வளவு எழுத வைத்து விட்டது. சிந்திக்க தூண்டியதற்கு நன்றி.

vanathy said...

எப்போதும் வித்யாசமா எழுதும் உங்கள் திறமை வாழ்க.

வெங்கட் நாகராஜ் said...

தங்கள் கவிதைகள் மூலம் சொல்லும் சுவைமிகு விஷயங்கள் என்னை சிந்தனையில் ஆழ்த்துகின்றன. கதைகள் சொல்லும் ரகசியங்கள் பற்றி நாம் சிந்திப்பதே இல்லையே எனவும் தோன்றுகிறது! நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி.

நர்சிம் said...

அற்புதம். இலக்கா, வழியா என்பதின் ஆதாரத் தத்துவம் இப்பொழுது புரிகிறது.

எளிதாய்ப் புரியவைத்ததற்கு நன்றி.

நர்சிம்

அன்புடன் நான் said...

கதைகளுக்குள் ஒளித்துவைத்த
ரகசியங்களை அறிய முயலாது
கதைகளை விமர்சித்தே நாம்
காலம் பல கடந்து விட்டோம்//

இதை மனிதம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இராஜராஜேஸ்வரி said...

இலக்கினை அடையும் வழியும்
ஆராயத்தக்கதே!

Post a Comment