Tuesday, November 28, 2023

ஆக்கப்பூர்வமான சிந்தனை

 டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் ஜாம்ஷெட்பூரில் டாடா ஸ்டீல் ஊழியர்களுடன் வாராந்திர சந்திப்பை நடத்திக் கொண்டிருந்தார்.


ஒரு தொழிலாளி ஒரு தீவிரமான பிரச்சினையை எடுத்துக் கொண்டார்.


தொழிலாளர்களுக்கான கழிப்பறைகளின் தரம் மற்றும் சுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளது என்றார்.


அதேசமயம், எக்ஸிகியூட்டிவ் கழிவறைகளின் தூய்மை மற்றும் சுகாதாரம் எப்போதும் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


அதைச் சரியாக அமைக்க எவ்வளவு நேரம் தேவை என்று டாடா தனது உயர் அதிகாரியிடம் கேட்டார்.


அதை சரி செய்ய நிர்வாகி ஒரு மாதம் கேட்டார்.


டாடா அவர்கள், "நான் அதை ஒரு நாளில் செய்துவிடுகிறேன். எனக்கு ஒரு தச்சனை அனுப்பு" என்றார்.


அடுத்த நாள், தச்சன் வந்தபோது, ​​*அவர் சைன் போர்டுகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டார்*.


தொழிலாளர் கழிப்பறையில் உள்ள அடையாள பலகை *"நிர்வாகிகள்"* மற்றும் நிர்வாகிகளின் கழிப்பறையில் *"தொழிலாளர்கள்"* என்று காட்டப்பட்டுள்ளது.


டாடா அவர்கள் *இந்த அடையாளத்தை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்* என்று அறிவுறுத்தினார்.


இரண்டு கழிப்பறைகளின் தரம் அடுத்த மூன்று நாட்களில் சம நிலைக்கு வந்தது.


*தலைமை என்பது நிர்வாகியாக இருப்பதை விட மேலானது**


ஒழுக்கம்:


*_பிரச்சினையை கண்டறிவதற்கு விமர்சன சிந்தனை தேவை_*


**ஆனால் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான சிந்தனை தேவை_*


இது கதையல்ல உண்மை சம்பவம்...

Sunday, November 12, 2023

பயன்படும் பதிவு..

 *🚊🚊Amazing railway service:-*


தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியன் ரயில்வேயின் அற்புதமான சர்வீஸ்:::


நாங்கள் குடும்பத்தோடு டெல்லியிலிருந்து பஞ்சாப் அமிர்தசரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச்சில் ஏறினோம்..


(காரணம் :-  AC COACH FULL BOOKING ) அந்த ரயில் பல ஊர்களை கடந்து தான் டெல்லி வருகிறது.. 


வட மாநிலங்களில் புக் செய்திருந்தாலும் அவர்கள் படுத்து கொண்டு வரும் போது நம்மால் எழுப்பி நம் சீட் என கூறவே முடியாது..


 நமக்கு மொழி பிரச்சினை வேறு..ஹிந்தி எனக்கு சுத்தமாக தெரியாது.. அவிங்களுக்கு ஹிந்தி தவிர வேற எதுவும் தெரியாது..


இரவு 9 மணி... குழந்தைகளோடு நானும் எவ்வளவோ போராடினேன்.. ஏற்கனவே மதுரையிலிருந்து 42 மணி நேரம் டிராவல் செய்து புதுடெல்லி வந்த அலுப்பு வேறு.. மதுரை டூ டெல்லி இரவு 7 மணிக்கு இறங்கி அடுத்து இந்த ரயிலில் ஏறி நிம்மதியாய் தூங்கலாம் என்றால் வடநாட்டுக்காரன் மனிதாபிமானம் இன்றி சிறிதும் இடம் தராமல் ஹிந்தியிலேயே எதேதோ பேசிகிட்டே இருக்கானுக.. 


கொடுமை என்னன்னா டிடிஆர் அங்கே வரவே இல்லை... எனவே என்ன செய்வதென யோசித்த போது ரயில்வே புகார் வெப்சைட் ஞாபகத்திற்கு வர உடனே தாமதிக்காமல் நான் போனை எடுத்து வெப்சைட் உள்ளே போய் PNR நம்பரை பதிவிட்டு என்னோட இடத்தை தராமல் அராஜகம் செய்வதை பதிவிட்டேன்.


.அடுத்த மூன்று நிமிடத்தில் IRCTC யிலிருந்து போன் வந்தது.. ஹிந்தி Or ஆங்கிலத்தில் பேசனும்..நாம் பேச நினைக்கற விஷயத்தை உடனே பதிவிட்டால் அடுத்த சில நிமிடத்தில் *RPF POLICE* உடனே நம் பெட்டியில் வந்து நம் குறையை கேட்டதுமே அவர்கள் உடனே செயலில் இறங்கியதும் அங்கே பெட்டியில் இருந்தவன் எல்லாம் எங்கிட்டு போனானே தெரியல..


 Rpf police க்கு வட நாட்டான் செமையா பயப்படுறான்... அடுத்து எந்த தொந்தரவும் இல்லாமல் நம்ம பயணம் மிக சுமுகமாக அமையும் .. தொலை தூர பயணம் செய்வோர் நிச்சயமாக இதை தெரிந்து கொள்ளவே இப்பதிவு.. நன்றி.


புகார் பதிவு மிக எளிது...

குரோம்ல *RAILMADAD* என பதிவிட்டதும் உங்கள் மொபைல் நம்பரை என்டர் செய்யவும்....மொபைல் நம்பருக்கு OTP வரும்....அதை என்டர் செய்ததும்

நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் TRAIN PNR NUMBER பதிவு செய்ததும் அதிலே உங்கள் ட்ரெயின் நம்பர்....உங்கள் கோச்... பெட்டி நம்பர்... எத்தனை பேர் நீங்கள் பயணிக்கிறீர்கள் என அனைத்து தகவலும் வரும்..


 அதன் கீழே உங்க புகாரை பதிவிட COMMENT BOX இருக்கும்.. அதிலே ரத்தின சுருக்கமா நீங்க உங்க குறையை பதிவிட்டால் போதும்.


உதாரணமாக *"MY SEATS OCCUPIED OTHERS* " என பதிவிட்டால் போதும்.. உடனே அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் உங்கள் பிரச்சினை தீரும்.. நிம்மதியாக குடும்பத்தோடு பயணம் செய்யலாம்.. 


என் அனுபவத்தை பகிர்ந்தேன்.. உங்களில் பலருக்கு எப்போதாவது இது தேவைப்படும் 

நன்றி..

Saturday, November 4, 2023

Retirement and cricket

 Retirement in India: How It Mirrors the Game of Cricket


Cricket isn't just a sport in India; it's an emotion, a religion, and a way of life. The strategies, patience, and perseverance required in cricket often mirror the journey of retirement planning in this diverse nation. Let's explore the fascinating parallels between retirement in India and the country's most cherished game.


1. The Opening Partnership and Early Investments


In cricket, a strong opening partnership lays the foundation for a big score. Similarly, starting your retirement savings early in India, perhaps with instruments like the Employees' Provident Fund (EPF) or the Public Provident Fund (PPF), can set a strong base for a sizeable retirement corpus.


2. Setting a Target: Runs and Rupees


Every cricket team has a target score in mind, whether they're batting first or chasing. Likewise, individuals should have a clear financial target for retirement, considering factors like inflation, healthcare costs, and desired lifestyle.


3. Diverse Playing XI and Investment Portfolio


A balanced cricket team has batsmen, bowlers, all-rounders, and a wicketkeeper. Drawing a parallel, a diversified investment portfolio in India could comprise equity, debt, real estate, gold, and more. Balancing high-risk and low-risk assets can help navigate the economic ups and downs, just like a cricket team navigates the challenges of varied oppositions.


4. Reading the Pitch: Market Conditions


A cricket captain assesses the pitch and conditions before deciding to bat or bowl. Similarly, understanding market conditions and economic forecasts is vital in deciding where to invest and when to shift assets.


5. The Test Match: Long-Term Planning


Test cricket requires patience, strategy, and a long-term vision. Retirement planning in India is similar. With joint family systems and cultural nuances, planning might extend beyond just the individual, requiring foresight and extended commitment.


6. Navigating the Yorkers: Unexpected Expenses


Just as batsmen must be prepared for unexpected yorkers, retirees might encounter unforeseen expenses. Having an emergency fund or liquid assets can help navigate these financial "yorkers."


7. The Role of a Captain: Financial Advisors


A cricket captain guides the team, making strategic decisions. In the retirement journey, a financial advisor plays a similar role, offering expert advice, helping navigate challenges, and ensuring the individual stays on track.


8. The Final Overs: Nearing Retirement


As a cricket match nears its conclusion, the strategies intensify. Similarly, as one approaches retirement in India, it's essential to reassess risk, consolidate savings, and ensure there's a steady income stream, like annuities or fixed deposits.


Conclusion


Cricket, with its complexities and strategies, offers insightful lessons for retirement planning in India. By understanding and drawing parallels between the two, individuals can approach retirement planning with the same passion, dedication, and strategy as a thrilling game of cricket. And just as in cricket, with the right planning and execution, one can hit the retirement phase for a 'six'!

Wednesday, November 1, 2023

தேவையான தகவல்..

 A letter from a former geriatric hospital orthopaedic director to all the elderly (60-1 00yars and above…


*I don't advocate the determination of bone density anymore, because the elderly will definitely have osteoporosis, and with the increase of age, the degree of osteoporosis will definitely become more and more serious, and the risk of fracture is bound to get bigger.*


*There is a formula:*


*The risk of fracture= external damage force/ bone density.*


*The elderly are prone to fractures because the denominator value (bone density) is getting smaller and smaller, so the risk of fractures will definitely increase.*


*Therefore, the most important measure for the elderly to prevent fractures is to do everything possible to prevent accidental injuries.*


*How to reduce accidental damage?*


*There are the seven characters of the so-called secret that I summed up, which is:*


*“Be careful, be careful, be careful again"!*


*Specific measures include:*


*1. Never stand on a chair or stool to get something, even a low stool.*


*2. Try not to go out on rainy days.*


*3. Take special care when bathing or using the toilet, to prevent slipping.*


*4. The most important, especially for women - dont wear underwear in bathroom, taking support of wall or other things... The commonest cause of slipping and fracture of hip joint... After bath, come back to your changing room.. Sit comfortably on either a chair or on  your bed and then put on underwear..*


*5. While going to toilet, ensure that bathroom floor is dry and not slippery.. Use only comod.. but at the same time fix a hand rest to hold it  while getting upright from the comod sit...  same is true while taking a bath sitting on bath stool*. 


*5.  Be sure to clean up the floor in the house before going to bed, and take double care when floor is wet...*


*5. When getting up in the middle of the night,  sit on the bed for 3-4  minutes, be sure to turn on the light first, and then get up.*


*6. At least in night or even during day time (if feasible), please, please do not close toilet door from inside..  If possible have an alarm bell fitted in toilet, to press it alarm family members in case of any emergency...*



*7. Seniors must sit on a chair or a bed  and wear pants.*


*8. In the event of a fall, you must stretch out your hands to support the ground. It is better to fracture the forearm and wrist than to fracture the femoral neck at the hip joint.*


*8. I strongly advocate exercise, at least walk, to the extent possible for you..*


*9. Especially for women.. be very, very serious to keep your weight in permissible limits... Diet control is the most important key... Eating leftovers, common behavior of women... just get away from it... feed leftovers to stray cows... keeping your weight in control is absolutely in your had and your mind, " always better to stop eating with half stomach full, rather than eat till have a satiety for having full stomach.*


*Regarding increasing bone mass, I also advocate dietary supplements (dairy products, soy products and seafood, especially small shrimp skins, which are high in calcium) rather than medicinal supplements.*


*The other is to do outdoor activities properly, because sun exposure (under UV light) converts the cholesterol in the skin into vitamin D.*


*It is beneficial to promote intestinal absorption of calcium and osteoblast activity has the effect of delaying osteoporosis.*


*2. Elderly health care:*


*(1) Summary After investigating more than 300 centenarians, I found astonishing data. Almost all centenarians, who have fallen will die within three months.*


*(2) A fall may not necessarily lead to a fracture, but the vibration and impact force of the fall will make the whole body function of the elderly in a state of disintegration, the meridians and collaterals are blocked, and they cannot become an organic whole to achieve self-balancing regulation, resulting in rapid failure of the functions of the viscera, and thus rapid death.*


*(3) Pay special attention to the non-slip of the bathroom. When going up the stairs, pay attention to the handrails and don't fall. Everyone, take care.*


*Therefore, the elderly must pay attention to anti-skid and anti-fall.* 


*One fall will cost ten years of life. Because all the bones and muscles are destroyed. Surgery is useless, and conservative treatment is also a drag. So, be careful.* 


**Avoid standing for too long**


*The message may look long, but it’s worth reading it especially for the seniors, and those taking care of seniors.* 



*Kindly post it in the group*

படித்ததில் பிடித்தது..

 அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம்  சரி மேல மாட்டுற கிளிப்பாவது (வெறும் 3 ரூபாய்) வாங்கி தாங்க என்று அழுதபோது ,

டேய் உனக்காவது இது கிடைத்தது ,

நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு வசதியில்லை என்று சொன்ன 

என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!


இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும்  மகளுக்கு exam board வாங்க போனபோது  150 ரூபாய் மதிப்புள்ள   examboardஐ பார்த்து உதட்டைபிதிக்கி 

இதவிட betterஆ வேற இல்லையா என்று கடைகாரரை பார்த்து கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது,, 


மகளிடம் பொருமையாக பாரும்மா, அப்பா படிக்கும்போது பரிட்சைஎழுத காலண்டர் அட்டையை தான் கொண்டு போவேன்,,  ink பாட்டில்  வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன்,

சில சமயம் பக்கத்தில் இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,

புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம்  இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்; bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை;;;; 

என்று  மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது

 நம்பாமல் நக்கலாக சிரிக்கிறாள்!!

 நான் அன்று என் தந்தையை பார்த்து சிரித்ததுபோலவே!!!!


நாசமா போறவ குடிக்கிறதண்ணீய குடம் நாலானா (25பைசா)  சொல்லுறா என்று புலம்பிக்கொண்டே பக்கத்து தெரிவிலிருந்து தண்ணீர் பிடித்த என் தாயாரை பார்த்த அதே கண்களால்

இன்று  அப்பா filter water கேன்

(2குடம் இருக்குமா?) வெறும் 35 ரூபாய்தானாம் என்று ஆச்சரியப்படும் என் மகளையும்  பார்க்கிறேன் 


நாய் கூட நடக்காத நண்பகல் வேளையில் நண்பர்களோடு  கண்மாய்கரையை ஒட்டிய groundல் கிரிக்கெட் விளையாண்டுவிட்டு 

தாகம் எடுத்தால்  ஏதாவது ஒரு வீட்டின் கதவை தட்டி ( அவங்க என்ன ஆளுங்க என்று எங்களுக்கு  தெரியாது, நாங்க என்ன ஆளுங்க என்று அவங்களுக்கும் தெரியாது! !)   அக்கா குடிக்க கொஞ்சம்தண்ணீ தாங்க, என்று கேட்டால் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள்


நாங்கள் எல்லாரும் போட்டிபோட்டு கொண்டு மூச்சிரைக்க சட்டை நனைய தண்ணீர் குடிக்கும்அழகை ரசித்துகொண்டே தம்பி போதுமா இன்னும் வேணுமா என்று கேட்பார்கள்!!

( ஆளுக்கு ஒரு சொம்பு என்றால் குறைந்தது 10 சொம்பு கிட்டத்தட்ட 4 லிட்டிர்) ; 


 இன்று என் வீட்டின் கதவை 10 பசங்க தட்டி தண்ணீர் கேட்டால் என் மனைவி தருவாளா? சந்தேகம்தான்?

 என்மனைவியிடம் கேட்டேன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் " நான் கதவையே திறக்க மாட்டேன்"!!!!!!!


இன்று  SIM ல் இலவசமாக பேசிக்கொண்டு 10 ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு இருக்கும் நாம் ,

 ஒரு காலத்தில் 1ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு 6 ரூபாய்க்கு போன் பேசி இருக்கிறோம் ( ஞாயிற்குகிழமை ஆப் charage என்று வரிசையில் நின்று இருக்கிறேன்)!!!! 


இன்று 64 gb memory  வைத்து இருக்கும் நான்  ஒரு காலத்தில் யாருடைய வீட்டில்லாவது டெக்கில் புது படம் போடுகிறார்கள் என்றால் பிச்சைக்காரனை போல வாசலில் தவம் கிடந்து இருக்கிறேன்; "!!!


இன்று ஒரு லிட்டர்  gold winner oil வாங்க ஓடும் நான் ஒரு காலத்தில் 100 milli எண்ணெய் வாங்க டானிக் பாட்டிலில் சரடை கட்டி  கொண்டு ஓடி இருக்கிறேன்

(கடைகார அண்ணாச்சி திரும்பி எண்ணை ஊத்துற கேப்புல முன்னாடி இருக்கும் கடல புண்ணாக்க எடுத்து லபக்குன்னு வாயில் போடுவது தனி சுகம்) 


Boost is the secerd of my energy என்று விளம்பரத்தில் சொன்ன கபில்தேவை பார்த்து வாழ்க்கையில் ஒரு முறையாவது boostஐ வாங்கி குடித்து விடவேண்டும் என்று நினைத்தேன்;


 இன்று பூஸ்ட் ,ஹார்லிக்ஸ், காம்பிளான் , பீடியா சுயர் ,என்று எதை வாங்கி குடுத்தாலும் taste சரியில்லை என்று பிள்ளைகள் சாப்பிடாமல் குப்பைக்கு போகிறது; 


நான்  சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்; 

இப்ப இருக்கிற புள்ளைங்க 

சாப்பாட்டிற்கு கஷ்டப்படுவதில்லை

சாப்பிடுவதற்கு  கஷ்டப்படுதுங்க.


இது தலைமுறை இடைவெளி என்று சொன்னாலும் சொல்லலாம் வாழ்க்கை முன்னேற்றம் என்று சொன்னாலும் சொல்லலாம். நாகரீக வளர்ச்சி என்று சொன்னாலும் சொல்லலாம்.