Thursday, August 31, 2023

படி(கு )த்தறிவோம்

 உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.... விஞ்ஞானிகளின் கூற்று.....

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!


இந்துக்களின் காலக்கணக்கு,

உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்...

கி.பி.1947 - பாரத சுதந்திரம்

கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்

கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்

கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்

கி.பி 58 - சாலி வாகன சக வருசம்

கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்

கி.மு 509 - புத்தர் தோற்றம்

கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்

கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்

கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்

கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்

கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்

கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்

கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்

கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்

கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்

கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்

கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு

கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!

குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!

*உண்மை இதுதான்*

 

ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்... ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்...


நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்..


*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,

காிகாலனின் கல்லணை கட்டமுடியுமா?


சிதம்பரம்  நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்

பாா்க்கும்படி வைத்து

மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்..


இன்னும் இது போன்ற எத்தனையோ கட்டிடக்கலை..... தொியாமல் கட்ட முடியாது.!


*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.


*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.


*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.


*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.


*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.


*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.


*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.


*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.


*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.


*Bachelor/ Master of Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.


*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது. 


*Chartered Accounts* தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.


*Anomaly Scan / Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை எப்படியிருக்கும் என்று பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.


இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ, அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் நம் தமிழர்கள். நம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறியச் செய்யுங்கள்.. நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்..


இன்னும் சொல்ல வேண்டுமானால்,


ஒட்டுமொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் ஒரேயொரு மந்திரம் போதும்...


இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் Blood Test கிடையாது.


லேப் டெக்னிஸ்யன் (LAB technicient ) படிப்பு

கிடையாது.


ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில்  மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக  இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


அப்படி பல மில்லியன் உயிர் அணுக்கள் போராடி அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று  உயிா் உண்டாகிறது.


இதை இப்போது 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்..


ஆனால், இதை நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே,


*திருமூலா் பெருமகனார்* அற்புதமாக தன் ஞானத்தினால்,


*லட்சமாக உருவெடுத்து*  *ஆயிரம் ஆகி*

*நுாறாகி  பத்தாகி  பிறகு  ஒன்றாகி  உள்ளே சென்று  உயிரெடுத்தது தான்  உயிா்*


என்று சொல்லியிருக்கிறார்.


எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது  தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும்.


- இதைப் பகிர பெருமை கொள்கிறேன்.

அறிவோம் முன்னோர் மகிமை.!!!🙏🏻🌹🙏🏻

Wednesday, August 30, 2023

Yes..age is just a number

 C. Radhakrishna Rao, retired at the age of sixty and went to live with his daughter in America along with his grandchildren.  


There, at the age of 62, he became a professor of statistics at the University of Pittsburgh and at the age of 70, he became the head of the department at the University of Pennsylvania.


US citizenship at the age of 75. National Medal For Science at the age of 82, a White House honor.  


Today, at the age of 102, he received the Nobel Prize in Statistics. 


In India, the government has already honored him with Padma Bhushan (1968) and Padma Vibhushan (2001).


Rao says: No one asks after retirement in India.  Colleagues also respect power and not scholarship. 


At the age of 102, receiving a Nobel while in good physical condition, it is probably the first example. An event that should be taken into account by all of us ! 


Age is just a number. Willingness to work and excel always matter.


 *Harekrishna*

Thursday, August 10, 2023

அந்த நாள் ...

 அந்த. நாட்கள் மீண்டும் வந்திடாதோ?


1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே...WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF.


• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்.


• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.


• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.


• புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததிலலை.


• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.


• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.


• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.


• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.


• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.


• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.


• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.


• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.


• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள் நாங்கள்.


• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்.


• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல.


• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.


• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை.


• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.


• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.


• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.


• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர்.


• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை.


• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.


• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.


• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.--

Friday, August 4, 2023

தமிழைக் காப்போம்

 சமஸ்கிருதத்தால் அல்ல, ஆங்கிலத்தால்!

-முரளி சீதாராமன்

Murali Seetharaman 

பொருள் புதிது தளம்


தமிழகத்தில் அடிக்கடி சமஸ்கிருதத்துக்கு எதிராக முழங்குவது, எளிய அரசியல் உத்தியாகத் தொடர்கிறது. அந்த மேதாவிகளுக்காகவே இதனை எழுதி இருக்கிறார் கட்டுரையாளர்.  


நிதி, நீதி, விதி, வீதி, நியாயம், தர்மம், அக்கிரமம், அராஜகம், மனம் (மனஸ்), க்ராமம், நகரம், பந்தம், சம்பந்தம், சம்பத்து, மரியாதை, சன்மானம், பாபம், 


புண்யம், காரணம், விசேஷம், பாக்யவான், பாக்கியம், அதிர்ஷ்டம், துரதிருஷ்டம், திருஷ்டி, பாதம், சிரசாசனம், பாகம், பாத்யதை…  


காரியம், பலன், சுபகாரியம், மங்களம், சகுனம், ஸ்தாவர ஜங்கமம் (சொத்து) கீதம், வாசனை, பதவி, (மூன்று) போகம், யோகம், சாந்தி, குணம், கோபம், ரகசியம், சந்தோஷம், துக்கம், ஜனனம், மரணம், ஜன்மம், புனர் ஜன்மம், பூர்வ ஜன்மம்…


பழம் (फल), ரசம், வர்ணம், ஆகாசம், அவகாசம், அவசரம், அற்புதம், அதிகம், ஆதி, இஷ்டம், உற்சாகம், உத்வேகம், உத்யோகம், உதயம், ஏகம், ஏகாந்தம், ஐக்கியம், பஞ்சபூதம், மூலம், மூலாதாரம், பலம், குணம், லாபம், நஷ்டம், பலாபலன், சிந்தனை (சிந்தனா) கற்பனை (கல்பனா), ரௌத்ரம், சாந்தம், 


ஆச்சரியம், உபயோகம், பிரயோகம், பிரயத்தனம், தனம், தானம், லட்சியம், கணிதம், சாஸ்திரம், சரித்திரம், சம்பவம், சாதகம், பாதகம்,


சதுரங்கம், சமர்த்து, சாமர்த்தியம், சேனை, சேனாபதி, உதார குணம், மூர்த்தி, முஹூர்த்தம், மௌனம், மோகம், காமம், கஷ்டம், கவனம், கணம், கோஷ்டி, கோஷம், கோ தானம், பாதம், பங்கஜம், ஸ்தூபம், தீபம், அக்னி, தவம் (தபம்), தாபம், பிரதாபம், புஸ்தகம், போஜனம், விரதம், வியர்த்தம், விஸ்வரூபம், விசேஷம்… 


தைரியம், பயம், பீதி, சௌக்கியம், சௌகரியம், சுந்தரம், சுந்தரி, சௌந்தர்யம், சொப்பனம்,  


நதி, சமுத்திரம், பூலோகம், லோகம், நட்சத்திரம், சூரியன், சந்திரன், கிரகம், 


வாசம், வசனம், உச்சம், நீசம், மத்தி, மத்யமம், மத்ய, புஷ்பம், பீஜம், விருட்சம், 


புத்தி, ஆலோசனை, அபிப்ராயம், ஆதி, அந்தம், ஜன்மம், புனர் ஜன்மம், தோஷம், தீரம், லட்சணம், உதரம், சிரம், அங்கம், 


உத்தமம், அந்தரங்கம், பகிரங்கம், பிரியம், தாம்பத்யம், சயனம், சாபம், சங்கீதம், குசலம், போஷணம், பட்சணம், பட்சி, பாலகன், நடனம், நாட்டியம், சலனம், நிஸ்சலனம், நிர்வாணம், நேத்ரம், கதி, அதோகதி, ஸ்தானம், சாமான்யம்…


சித்தாந்தம், தத்துவம், கதை (கதா), கவிதா (கவிதை), காவியம், நாடகம், நிதர்சனம், தத்ரூபம், தாட்சண்யம், தனநாசம், நாசம், விருத்தி, அபிவிருத்தி…


தேகம், தேசம், தெய்வம், தேவாலயம், துஷ்ட, ஜந்து, அல்பம், ஆரோக்கியம், அலங்காரம், அவதாரம், அஞ்சனம், 


சரம், சஞ்சலம், சந்தேகம், நிவாரணம், நிர்மூலம், பரிபாலனம், பூர்ணம், போதனை, பரிசோதனை, பரிவர்த்தனம்,  


முக்தி, பக்தி, வியாபாரம், வியாபாரி, மோட்சம், விமோசனம், ஸ்வதந்திரம் (சுதந்திரம்), சுயதரிசனம், விஸ்வாசம்,


பூமி, பிரபஞ்சம், மேகம், பூலோகம், சொர்க்கம், நரகம், பாதாளம், பவித்ரம்,


இப்படி நம்மையும் அறியாமல் நாம் பேசும் சமஸ்கிருதச் சொற்கள் ஆயிரக்கணக்கில்!  


இதெல்லாம் எந்த ஞானமும் – அடடே இதுவும் சமஸ்கிருதம்! – இல்லாத கும்பல்தான் தமிழை அழித்துவிடும் என்று புலம்புகிறார்கள்! 


இத்தனை சொற்கள் – இவை உதாரணம்தான் – (உதாரணம் – இதுவும் சமஸ்கிருதம்தான்!)  கலந்ததால் தமிழ் என்ன அழிந்தா போயிற்று?


 அதே சமயம்,


“என் டாட்டரை ஸ்கூல் என்ட்ரன்ஸ் கிட்ட டூவீலர்ல கொண்டு ட்ராப் பண்ணிட்டேன்!”… 


 “என் ஹஸ்பெண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்ட்ரன்ஸ்ல டென் மினிட்ஸ் வெயிட் பண்ணினால் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்னு மெஸேஜ் கொடுத்திருக்காரு!”


– என்பது மாதிரி  ‘தங்கிலீஷை’ வேண்டுமென்றே ஊக்குவிக்கிறார்கள்! 


நமது குழந்தைகள் தமிழில் எழுதாமல், ஆங்கில எழுத்துகளைக் கொண்டு டிரான்ஸ்லிட்டேஷன் (TRANSLITERATION) முறையில் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள்.


தமிழ் அழிவதும் – அழியப் போவதும்


சமஸ்கிருதத்தால் அல்ல, ஆங்கிலத்தால்!வாட்ஸ் அப் பகிர்வு