Monday, October 31, 2022

மீண்டும்...

 சமதளமாய்

காலடியில் கிடக்கிறது
எட்டிவிட்ட சிகரம்

ஒரு அடையாளமாய்
சேர்ந்தே இருக்கிறது
அடைந்துவிட்ட இலக்கும்

சிகரத்தை அடைவது
ஓய்ந்துச் சாய இல்லை

கொஞ்சம் ஓய்வெடுத்து
மீண்டும் துவங்கவே என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்

வெகு கவனமாய்
சிகரத்தில்  கிடைத்த
கிரீடங்களையும் மாலைகளையும்
உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
இறக்கி வைத்து
என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்

ஏனெனில்
ககமான பயணத்தை
சீரழிக்கும் முதல் எதிரி
 கூடுதல் சுமைகளே என்பதில்
எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை

தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி

ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை

இதில்  எனக்கு எவ்வித குழப்பமுமில்லை

மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்

எதிரே சவாலாய்த தெரிகிறது
வானை  முட்டி நிற்கும் 
அந்த நெடிய சிகரம்

Sunday, October 30, 2022

பேச்சு...

பேச வேண்டியவர்கள்

பேசித்தான் ஆகவேண்டும் என்பதை

பேசாது மௌனம் காப்பதுவும்


பேசத்தெரியாதவர்கள்

பேசக்கூடாததை பொதுவெளியில்

அன்றாடம் பேசித் தொலைப்பதுவும்


வாளைத் தூக்கியவன்

வாளாலேதான் அழிவான்

என்கிற முதுமொழிக்கேற்ப


பேச்சால் வளர்ந்தவர்கள்

பேச்சாலேயே  பதவி அடைந்தவர்கள்

பேச்சாலேயே ..........


என்பது இப்போது

எங்கும் பேசுபொருளாயிருக்கிறது


இனியாவது

பேசவேண்டியவர்கள் பேசுவார்களா ?


பேசத் தெரியாதவர்கள்

மௌனம் காப்பார்களா.. ?

Thursday, October 27, 2022

சும்மா ஜாலிக்கு ஒரு டெஸ்ட்..

.  

               

           

 நீங்கள் சுயநலவாதியா? பொது நல வாதியா? இதைப் படியுங்கள் தெரிந்துவிடும்...*


நாம் எல்லோருமே நமக்குப் பிறர் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வண்டி `பஞ்சர்' ஆகி நடுவழியில் அல்லாடிக் கொண்டிருந்தாலும் சரி, முன்பின் பழக்கமில்லாத இடத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாலும் சரி... தேடி வந்து யாராவது நமக்கு உதவாவிட்டால், `என்னடா உலகம் இது' என்று சலித்துக்கொள்கிறோம்.


ஆனால், பிறருக்கு உதவி செய்வதில் நாம் எப்படி என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா!


நீங்கள் சுயநலவாதியா.. இல்லையா? இதோ ஒரு `டெஸ்ட்'...


1. ஆளவரமற்ற சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு நபர், லிப்ட் கேட்டு கட்டை விரல் உயர்த்திக்கொண்டிருக்கிறார். அப்போது...


அ. வண்டியை நிறுத்தி, அவர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்பேன். நான் செல்லும் வழியில் அந்த இடம் இருந்தால் அவரை ஏற்றிச் செல்வேன்.


ஆ. வண்டியின் வேகத்தைக் குறைப்பேன். அவர் நாகரீகமாக, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராகத் தோன்றினால் லிப்ட் கொடுப்பேன். இல்லாவிட்டால் வேகமெடுத்து வண்டியை ஓட்டுவேன்.


இ. `ஓசி கிராக்கி' என்று மனதுக்குள் கடுகடுத்துக் கொண்டு நிற்காமல் சென்றுவிடுவேன்.2. வண்டியில் செல்லும்போது ஒரு விபத்தைக் கண்டால்...


அ. நின்று, வண்டியை ஓரங்கட்டிவிட்டு, காயம்பட்டவர்களை மீட்டு உதவி செய்வேன்.


ஆ. விபத்தில் சிக்கிய வாகனங்களின் எண்களைக் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு நகர்வேன்.


இ. திரண்டிருக்கும் கூட்டத்தை `ஹாரன்' அடித்து ஒதுங்கவைத்துவிட்டு, போய்க்கொண்டே இருப்பேன்.3. நாட்டிலோ, உங்கள் மாநிலத்திலோ இயற்கைப் பேரழிவு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?


அ. என் நேரம், பணம், வசதிகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டோருக்கு உதவுவேன்.


ஆ. பிரதமரின் நிவாரண நிதிக்குக் காசோலை அனுப்புவேன். நிவாரணப் பொருட்களைச் சேகரிப்போரிடம் பழைய ஆடைகளைக் கொடுப்பேன்.


இ. அதிகபட்சமாய் எனது ஒருநாள் சம்பளத்தை உதவியாய் அளிப்பேன்.4. தெருவில் சில இளைஞர்கள் கடுமையான மோதலில் ஈடுபட்டிருப்பதைக் காணும் நீங்கள்...


அ. அவர்களை ஜாக்கிரதையாக நெருங்கி, சமாதானப்படுத்த முயல்வேன்.


ஆ. `கலைந்து போங்கள்... இல்லாவிட்டால் போலீசை கூப்பிடுவேன்' என்று எச்சரிப்பேன்.


இ. `எனக்கென்ன வந்தது?' என்று என் பாட்டுக்குப் போவேன்.5. நடந்து செல்கையில், காயம்பட்ட ஒரு பிராணியைக் காண்கிறீர்கள். உடனே...


அ. அந்த பிராணியை அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வேன். அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சிப்பேன்.


ஆ. பிராணிகள் நல அமைப்பை தொலைபேசியில் அழைத்து, விவரம் சொல்வேன்.


இ. யாராவது கவனிப்பார்கள். எனக்கு வேலையிருக்கிறது என்று நடையைக் கட்டுவேன்.6. உங்கள் கண் முன்னே கத்தியால் தாக்கி வழிப்பறிக் கொள்ளை நடக்கிறது. அவ்வேளையில்...


அ. கொள்ளையைத் தடுப்பதற்கு ஓடுவேன். ஆட்களைத் திரட்டி, கொள்ளைக்காரர்களால் காயப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவுவேன்.


ஆ. நைசாக நழுவி, போலீசுக்கு தகவல் கொடுப்பேன். கொள்ளைக்காரர்கள் அகன்றபின்பே, காயம்பட்டவர்களை நெருங்குவேன்.


இ. ஏன் `ரிஸ்க்' எடுக்கணும் என்று அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவேன்.7. கூட்டத்தில் மின்சார ரெயில் பெட்டியில் ஏற அல்லாடிக் கொண்டிருக்கிறார் ஒரு முதியவர். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?


அ. அவருக்கு உதவுவேன். அதனால் நான் பிடிக்கவேண்டிய ரெயிலை தவற விட்டாலும் கவலைப்படமாட்டேன்.


ஆ. அந்தப் பெட்டியில் ஏறும் யாரையாவது அழைத்து, அந்த முதியவருக்கு உதவும்படி கூறுவேன்.


இ. என் ரெயிலைப் பிடிப்பதற்காக நான் போய்விடுவேன்.8. உங்கள் பகுதியில் வீடற்ற பிளாட்பாரவாசிகள் சிலர் வசிக்கிறார்கள். நீங்கள்...


அ. வாரம் ஒருமுறை அங்கு சென்று, பிஸ்கட், பழைய துணி, குழந்தைகளுக்குப் பழைய விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து விட்டு வருவேன்.


ஆ. உள்ளூர் தொண்டு நிறுவனத்துக்கு எப்போதாவது ஒரு தொகை கொடுப்பேன். அவர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று நினைப்பேன்.


இ. போலீசாரை அழைத்து, பிளாட்பாரவாசிகளின் ஆக்கிரமிப்பு, தொல்லை குறித்துப் புகார் செய்வேன்.*உங்களுக்கான முடிவு:*


* உங்கள் பதிலில் அதிகமாக `அ' என்றால்...


நீங்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர் மட்டுமல்ல, பிறருக்கு உதவி செய்வதற்காக ரொம்பவே விரும்புகிறவர். இது உயர்ந்த விஷயம், கட்டாயம் தொடர வேண்டியது என்றபோதும், உங்களுக்குக் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வும் வேண்டும். பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் நீங்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டு விடக் கூடாது. காரணம், உதவும் உள்ளம் கொண்டவர்களை உறிஞ்ச நினைப்பவர்கள் உலவும் உலகம் இது.


* அதிகமாக `ஆ' என்றால்...


பிறருக்கு உதவுவதில் நடைமுறை சார்ந்து யோசிப்பவர் நீங்கள். அடுத்தவருக்கு உதவி செய்வதில் எளிதானதைத்தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள். உங்களின் அதிகபட்ச எச்சரிக்கை உணர்வு, கூடுதலான பேருக்கு நீங்கள் உதவுவதைத் தடுத்து

விடும் என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள்.


* அதிகமாக `இ' என்றால்...


நீங்கள் நகரவாசியாக இருக்கக்கூடும். எந்திர வாழ்க்கையானது பிறரின் வறுமையையும், அவதியையும் கண்டுகொள்ளாத அளவு உங்களை மரத்துப் போகச் செய்துள்ளது. உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் செய்வது சிறிதாயிருந்தாலும், அவர்களுக்கு அது அந்த நேரத்தில் பெரிதா யிருக்கும் என்பதை உணருங்கள். உங்களுக்குக் கீழே உள்ளவர்களுக்கு உதவுவது, உங்களை நல்ல நிலையில் வைத்திருக்கும் கடவுளுக்கு நீங்கள் செலுத்தும் நன்றி என்று நினையுங்கள். உதவும் உள்ளமே உயர்ந்த உள்ளம்.

Saturday, October 22, 2022

அன்பிற்கும் வேண்டும் அளவு..

 *ஒரு அனுபவம் மிக்க தோட்டக்காரர் அவருடைய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பறவையின் சிறிய கூடு ஒன்றைக் காண்கிறார்..*

அதன் அருகில் போய் அந்த கூட்டில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்ட தோட்டக்காரர் அதன் அருகில் சென்று பார்த்த போது அதில் *பறவையின் சில முட்டைகள் இருப்பதைக் கண்டு அந்த கூட்டைப் பத்திரமாக எடுத்து வைத்துவிட்டுச் செல்கிறார்.*

அடுத்த நாள் வந்து பார்க்கிறார்..அந்த *முட்டைகளில் ஒரு சிறிய வெடிப்பு (cracks) ஏற்பட்டிருப்பதைக் காண்கிறார்.* அப்போது இந்த முட்டைகளிலிருந்து குஞ்சிப் பறவைகள் வெளிவரப்போகிறது என்பதை உணர்ந்த தோட்டக்காரர் சந்தோசத்தில் கூட்டை மேலும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்.

இப்போது தோட்டக்காரருக்குப் பயிர்களைப் பார்ப்பதைக் காட்டிலும் பறவையின் கூட்டையும் முட்டைகளையும் பார்ப்பதற்காகவே தோட்டத்திற்கு வரத் தொடங்கினார்.

மீண்டும் மீண்டும் வருகிறார்..முட்டைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு முறையும் *அந்த முட்டைகளில் ஏற்பட்ட வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாயிருப்பதை உணர்கிறார்.*

ஒவ்வொரு முறையும் அவர் அவற்றின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே செல்லத் தொடங்கினார்..

வழமை போன்று ஒரு நாள் கூட்டைப் பார்க்கத் தோட்டக்காரர் வந்தபோது முட்டைகள் அசைவதையும் முட்டையினுள்ளே குஞ்சுப் பறவைகளின் இறக்கைகள் விரிய வழியில்லாமல்

முட்டையின் சுவர்களிலே முட்டி மோதுவதையும் கண்டு உடைந்து போனார்..

*பாவம் அந்தப் பறவைக் குஞ்சுகள் கருவிலேயே கஷ்டப்படுகிறதே என்று உணர்ந்த தோட்டக்காரர் உடனே அந்த முட்டைகளிலிருந்த வெடிப்பை தன் கைகளால் கொஞ்சம் பெரிதாக்கி  குஞ்சுகள் வெளிவர* ஏற்றாற்போல் சௌகரியமாக முட்டைகளை வைத்து விட்டு வீடு சென்றார்..

மறு நாள் காலையில் புதிய பறவைகளைக் காண 

மிகுந்த ஆசையோடு கூட்டுக்கு அருகில் சென்ற தோட்டக்காரருக்கு ஏமாற்றமே எஞ்சிப்போனது.

*முட்டைகளில் ஒரு மாற்றமும் இல்லை...*

சரி நாளை பார்ப்போம்  என்று சென்று அடுத்த நாள் வருகிறார்... அன்றும் ஒரு மாற்றமும் இல்லை...

இப்படியோ நாளை நாளை என்று எதிர்பார்ப்புகள் தவணை முறையில் கடந்தன.

*சில நாட்களின் பின்னர் முட்டைகளைச் சூழ எறும்புகள் படை எடுத்தன...* பறவைக் குஞ்சுகள் செத்துப்போய்க் கிடந்தன...

இதைக்கண்ட தோட்டக்காரர் மனசெல்லாம் வலியோடு வாடிப்போனார்..அப்போது அந்த வழியால் தோட்டக்காரரின் நண்பர் ஒருவர் வந்தார்...

நடந்ததைக் கூறினார்...

"பாவம் உன் அவசரத்தாலும்

*அளவுக்கு மீறிய அன்பாலும் எல்லையற்ற எதிர்பார்ப்பாலும்  அந்த பறவைகளை அழித்து விட்டாயே"*

என்று நண்பர் கூறினார்...

"நானா ... "

"நீ தான்.. வேறு யாரு..."

அந்தப் பறவைகள் அந்த முட்டைகளில்

இருந்து வெளிவரும் போது

அதன் இறக்கைகள் மெதுவாக அசையும்,

கால்கள் துடிக்கும்,

முட்டைகளின் சுவர்களில் முட்டி மோதும்..

*இது தானே இயற்கை..*

அதை அப்படியோ விட்டிருந்தால்

இந்நேரம் அழகான பறவைகளாகப் பறந்திருக்கும்...

ஒரு சுப பிரசவம் நடந்து முடிந்திருக்கும்..

அழித்து விட்டாயே என்று நண்பர் கூறியதும்

தோட்டக்காரர் மீண்டும் உடைந்து போனார்..

சிதறிப்போனார்..

#இது_ஒரு_பறவையின்_கதையல்ல

*#நம்_பிள்ளைகளின்_வாழ்வியல்...*

இப்படித்தான் நாமும் *நம் பிள்ளைகளுக்கு  கஷ்டத்தையே காட்டக் கூடாது என்று தாங்கு தாங்கு என்று தாங்குகிறோம்...* வலிக்கவே கூடாது என்று வளர்த்தெடுக்கிறோம்..

உழைப்பின் பெறுமதியை

வியர்வையின் கனதியை

வெற்றியின் தடங்களை

உணரச் செய்யாமலேயே

உருவாக்கி விடுகிறோம்...

நாம் மறந்துவிடக்கூடாது..

#கண்டிப்பில்லாத_கனிவு

#நாளை_எங்கேயோ_ஓர்_இடத்தில்

#நம்_பிள்ளைகளை

#தண்டிக்க_வைக்கும்...

*எல்லோரும் பயணிக்கும் பாதையில் நமது பிள்ளைகளையும் பயணிக்கக்  கற்றுக்கொடுப்போம்*

பயணத்தைச் சரி செய்யவும் சொல்லிக்கொடுப்போம்

*அவர்களுக்கென்று தனியான ஒரு பாதையை அவர்களாக உருவாக்கட்டும்.*

நாம் தள்ளி நின்று தட்டிக்கொடுப்போம்..

*பிள்ளைக்கு விழவும் தெரிய வேண்டும் அப்போதுதான் எழும்புவது எப்படி என்று தெரிய வரும்..*

உங்கள் சுட்டு விரல்களைப் பிடித்துக்கொண்டே

எத்தனை காலம் தான் இன்னும் அவர்கள் நடை பயில்வது..?..படித்ததில் பிடித்தது..

அரைப்பைத்தியமும்..முழுப்பைத்தியமும்

 தொடர்பின்றிப் போன

பிறந்த ஊரின் நினைவுகளையும்

தொடர்பற்றுப் போன

உறவுகளின் நினைவுகளையும்

மறக்கவும் முடியாது

தொடரவும் முடியாது

சுமந்துத் திரிகிற

ஒவ்வொரு கணமும்...


என்றேனும் பயன்படும் என்று

பொறுக்கிப் பொறுக்கிச் சேர்த்த

எதற்கும் பயன்படாத

பொருட்கள் அடங்கிய

அழுக்கு மூட்டையை

சுமந்துத் திரிகிற

எங்கள் தெரு அரைப்பத்தியமே

நினைவில் வந்து போகிறான்..


பயனற்றதுதான் ஆயினும்

எப்போதேனும் யாரேனும் 

அவனை நெருங்குகையில்

பறித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில்

சட்டென அந்த மூட்டையை

நெஞ்சோடு நெருக்கி

சேர்த்து அணைத்துக் கொள்கிறான்

உயிரை அணைப்பதைப் போலவே....


தொடர்பில்லைதான் ஆயினும்

ஏனோ எதனாலோ

தனிமையோ வெறுமையோ

என்னுள் விரக்தியை,விதைக்கையில்

பயனற்ற நினைவுகளை

சேர்த்தணைத்து பெருமூச்சுவிடுகிறேன்

ஒரு வகையில்

அந்த அரைப்பைத்தியம் போலவே

Friday, October 21, 2022

அபுரிக் கவிதைகள்...

 தன் பாண்டித்தியம்

படிப்போருக்குப்

புரியவேண்டும் என்பதற்காக


படித்ததும்

புரிந்துவிடக் கூடாது என்பதற்காக

அவன் பட்ட சிரமம்


கவிதையைப் படித்ததும்

மிக எளிதாய்ப்

புரிந்துவிடுகிறது.


தமிழ்தான்....

தெரிந்த வார்த்தைகள் தான்

என்றபோதும்....


விடாது தொடர்ந்து

பலமுறை முயன்றபோதும்

கவிதைதான் புரியவில்லை..

Friday, October 14, 2022

சகிப்புத்தன்மை...?

 நேர்மறையான  

ஒரு விஷயத்தைச் சொல்வது

உங்கள்  நோக்கமாயின்

தவறியும்

அதில்

எதிர்மறையான

வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்


"நன்றாக இரு "

என்பதற்குப் பதில்

"நாசமாகிவிடாதே "

என்பதைப் போல....


"புரிந்து இணைந்திருக்கும் தன்மையை

மிகச் சரியாகச் சொல்வதாக நினைத்து

"சகிப்புத் தன்மை" எனச் சொல்லி

சகிக்க முடியாத ஏதோ ஒன்று

இனங்களுக்கிடையில் இருப்பதான

பிம்பத்தை உருவாக்கியதைப் போல..


நேர்மறையான விஷயத்திற்கு

எதிர்மறையான வார்த்தைகளை

எப்போதும் பயன்படுத்தாதீர்கள்..


ஏனெனில்

அது நம் நோக்கத்திற்கு

எதிரான பலனையே தரும்

இப்போதைய

"சகிப்புத் தன்மையைப் " போலவே..

Wednesday, October 12, 2022

ஆசிரியரின் மகத்துவம்..

 *ஒரு கதை*


ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் 


"தன்னைத் தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார். 


இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், 


"நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.


 " நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். 


" ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனைத் திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது. 


ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது. அவர் கூறினார், 


மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டுப் பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை. 


பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றிக் கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னைத் திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியைக் கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படித் தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" 


இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார். 


மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னைத் தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். 


"ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். ஆசிரியர் கூறினார், "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்....(படித்ததில் பிடித்தது...)

Tuesday, October 11, 2022

படித்ததில் பிடித்தது..

 Eternity is Forever


Larry and Harry, two homeless men were given a chance to travel to a third world country on an all-expenses paid trip.


They were told to carry nothing and return with nothing...


They were to make sure they spend all that was given to them.


Provision had been made for their expenses and welfare which they would get upon arrival at their destination.


The only caveat was that neither of them knew when they would be asked to return home.


As they arrived, they were both given a huge sum of money and a credit card with no limits, but reminded to spend it all before returning to their home country.


At this, they became instantly wealthy by local standards.


Harry thought to himself. "Wow! This is my opportunity to live like a king for I don't know how long this would last".


So he went and rented a Ferrari and rented the best room in the best hotel in town.


He went to the best stylist, shaved and transformed his looks. He had parties everyday. Everyone in the city thought the cars and the wealth were his and they loved and respected him for it.


But....


At the back of his mind, Harry knew he would go back home someday and leave all of it behind but he didn't want to think about it.


Right now he was living in the moment and enjoying himself to the fullest...


Larry, on the other hand rented a small Honda to get him around town and stayed in a modest inn.


He thought to himself. "This money will not last and I don't know when I am going back so I have to do something tangible with it."


He decided to use it to change some people's lives while there was still time.


So he got busy, went out on the streets and started making a difference.


He didn't just give away money, rather he tried to help people be self-sufficient.

He paid off all the school fees of some promising young ones to enable them get an education and take care of themselves and their families.


He found some responsible adults and funded them in a business that guaranteed they would be able to take care of their family and create employment.


He devised a means of helping some of the homeless people get off the street and getting them into a trade for he thought "I wish someone would do this for me when I get back".


In short, while Larry was there, he was busy changing lives...


Then after just two months they were suddenly notified that it was time to go back.


They hadn't even finished spending all the money but still had to leave it all.


They both said their goodbyes and headed for the airport.


At the airport they were given their original clothes to put back on before boarding the plane back to their country...


Harry reminisced on the good times he had but wasn't too happy that he was going back to his old life.

How would he readjust to being homeless?


Larry on the other hand felt good. He came with nothing and is leaving with nothing, but he at least helped others with a chance at life and that alone meant the world to him.


Readjusting to being a homeless person wouldn't be a problem because he never lived like the wealth was his anyway and always had it at the back of his mind that he would leave it all someday.


But... Little did they know that each moment they spent on vacation was being secretly recorded and they would be rewarded accordingly.


Now, which one do you think would be cast back out to the slums as a homeless person and which one would be entrusted with large sums of wealth and position of authority?


The same goes with our lives here on earth.


We are sent here on a mission and will return empty handed except for the recordings of our dealings here on earth.


Yet, many of us walk around thinking that the wealth we have is ours to keep forever.


We look at ourselves in the mirror and think that what we see will always be there, forgetting that we are wearing a temporary cloth, a human body, that would be required of us before we leave this world.


Our vacation on earth is but a short time while eternity is forever.


How we spend this vacation determines how we get to spend eternity.

Monday, October 10, 2022

அன்றும் இன்றும்

அன்று

பசிக்கு உணவின்றி

ஒவ்வொரு பொழுதும்

ஏங்கி ஏங்கித் தவித்தவர்களே

சபிக்கப்பட்டவனாய்த் தெரிந்தார்கள்


இன்று

உண்ண உணவிருந்தும்

உண்ணமுடியாது

பார்த்துப் பார்த்துத் தவிப்பவர்களே

பாவியாய்த் தெரிகிறார்கள்


அன்று

அதீதத் திறனிருந்தும்

பதவி அடைய முடியாது

பரிதவித்துப் புலம்பியவர்களே

பரிதாபமாய்த் தெரிந்தார்கள்


இன்று

போதியத் திறனுமின்றி

எதனாலோ பதவியடைந்தவர்கள்

அன்றாடம் படும்பாடே

பரிதாபமாய்ப் படுகிறது


அன்று

அன்றாட வாழ்வுக்காக

ஒவ்வொரு நாளும்

செத்துத் செத்துப் பிழைத்தவர்களே

பாவியாய்த் தெரிந்தார்கள்


இன்று

மரணப் படுக்கையில்

ஒவ்வொரு நொடியும்

சாகமுடியாது பிழைத்திருப்வர்களே..

பாவியாய்ப் படுகிறான். 

Saturday, October 8, 2022

அவசர உதவிக்கு..

 *நமது* *ஒவ்வொரு மொபைல் போனிலும்,  கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள்!*


1.அவசர உதவி அனைத்திற்கும்———— *911*


2.வங்கித் திருட்டு உதவிக்கு ———— *9840814100*


3.மனிதஉரிமைகள் ஆணையம் ————– *044-22410377*


4.மாநகரபேருந்தில *அத்துமீறல்* ———— *09383337639*


5.போலீஸ் SMS :- ——————— *9500099100*


6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—— *9840983832*


7.போக்குவரத்து விதிமீறல் SMS : —— *98400 00103*


8.போலீஸ் : —————— *100*


9.*தீயணைப்புத்துறை* :————— *101*


10.போக்குவரத்து விதிமீறல——— *103*


11.விபத்து :—————— *100, 103*


12. *ஆம்புலன்ஸ்* : ————— *102, 108*


13.*பெண்களுக்கான* அவசர உதவி : ———– *1091*


14.*குழந்தைகளுக்கான* அவசர உதவி :——– *1098*


15. *அவசர காலம் மற்றும் விபத்து : ——— *1099*


16.*முதியோர்களுக்கான* அவசர உதவி:—— *1253*


17.*தேசியநெடுஞ்சாலையில்* அவசர உதவி: *1033*


18.*கடலோர பகுதி* அவசர உதவி : ———— *1093*


19. *ரத்த வங்கி அவசர* உதவி : ————— *1910*


20.*கண் வங்கி* அவசர உதவி : ———— *1919*


21.*விலங்குகள் பாதுகாப்பு* —————— *044 -22354959/22300666*


22.நமது அலைபேசியில் *911* என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். *இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.*


பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— *93833 37639*

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- *180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828*

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- *044 – 26530504 / 26530599*

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– *044- 26184392 / 9171313424*

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: *044- 25353999 / 90031 61710 / 99625 00500*

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — *044-24749002 / 26744445*

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற *95000 99100* ( SMS ).


இதனை அலட்சிய படுத்தாமல் *அனைவருக்கும் பகிருங்கள், நன்றி....*

பங்குச் சந்தையான..நட்பு..

 ஆண்டுக்கொருமுறை

நிதி நிலைமைகளைச்

சரிபார்த்தலைப் போலவே

உறவு முறைகளையும்

சரிபார்த்துக் கொள்ளவேண்டியுள்ளது


உலகச் சந்தையின் அசாதாரணப் போக்கில்...


எதிர்பார்த்து முதலீடு செய்த

பங்குகள் சில

குழிபறித்து குப்புறத் தள்ள


எதிர்பாராதவை சில

எகிறிப் பாய்ந்து

துள்ளல் போட வைப்பதைப் போலவே


சந்தர்ப்பச் சூழலின் நெருக்கடியில்...


தெரிந்தவன் பழக்கமானவன் என

நினைத்திருந்தவன்

ஆத்ம நண்பனாய்

சமயத்தில் கைகொடுத்து உதவ


உயிருக்குயிரானவன் என

நம்பி இருந்தவன்

சமயம் பார்த்து

கழுத்தறுத்துத் தொலைக்க


இப்போதெல்லாம்

தவறாது

ஆண்டுக்கொருமுறையேனும்

அல்லது அவசியமெனில்

அன்றாடமேனும்


நிதி நிலைமைகளைக் கையாளுதலைப் போலவே

உறவு முறைகளையும்

மிகக் கவனமாய்

புதுப்பித்துக் கொள்ளவேண்டி இருப்பது

நிச்சயம் துரதிஸ்டமே..

Thursday, October 6, 2022

உயர்ந்தவை...எளிமையானவையே...

 *மன முதிர்ச்சி என்றால் என்ன?*

*What is Maturity of Mind ?*


01. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.

01. Correcting Ourselves without Trying to Correct Others.


02. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)

ஏற்றுக்கொள்வது.

02. Accepting others with Their Defects


03. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் 

கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

03. Understanding the Opinions of Others from Their Perspectives.


04. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

04. Learning to Leave what are to be Avoided.


05. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

05. Leaving the Expectations from Others.


06. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

06. Doing whatever We Do with Peace of Mind.


07. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.

07. Avoiding to Prove Our Intelligence On Others.


08. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் 

என்ற நிலையை விடுதல்.

08. Avoiding the status that others should accept our actions.


09. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

09. Avoid Comparing Ourselves with Others.


10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..

10. Trying to Keep Our Peace in Our Mind without Worrying for Anything.


11. நம் அடிப்படை தேவைக்கும்., நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

11. Understanding the Difference Between the Basic Needs and what We Want.


12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

12. Reaching the Status that Happiness is Not Connected with Material Things.


*இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.*

*Our Life will be Simple if Only We Practice 7 or 8 of the Above 12.*


Live Your Life & Love Your Life.

இந்துக் கடவுள்களை வணங்கினால் இந்துவா..?

 தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்வதற்கு முன்னால் சென்னை மாகாணம்தான் இருந்திருக்கிறது.. தமிழ்நாடு என்று ஏதும் இல்லை..மன்னர்கள் காலத்தில் கூட சேர/சோழ/பாண்டியநாடு /பல்லவ நாடு என்றெல்லாம் கூட இருந்திருக்கிறது...தமிழ்நாடு என்று ஒன்று இருந்ததில்லை..எனவே சோழர்கள் இருந்திருக்கிறார்கள்/பாண்டியர்கள் இருந்திருக்கிறார்கள்/சேரர்கள் இருந்திருக்கிறார்கள்...எனவே தமிழ் மொழி பேசினார்கள் என்பதற்காககத்  தமிழர்கள் இருந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை...சைவம்/வைணவம் எல்லாம் இருந்திருக்கிறது..சிவனும் திருமாலும் தெய்வங்களாக வணங்கப்பட்டிருக்கிறார்கள்.இந்து தெய்வங்களை வணங்கி இருக்கிறார்கள்  என்பதற்காக இந்து மதம் இருந்தது எனச் சொல்வதற்கில்லை..சோழர்கள் இந்து மதம் சார்ந்தவர்கள் எனச் சொல்லவும் முடியாது...சரிதானே...