Thursday, June 30, 2022

வாழ்த்தி வணங்கலாமே...

 “


The day I got my postgraduate degree, I didn’t waste a minute– I rushed back to my village, Ausgrum in Bengal to become a teacher. Yes, I had higher salary offers from schools in bigger towns, but for me, the 169 Rs. I was offered at my school village meant everything; I was hungry to teach the students from my village who needed a good teacher the most.

And I taught at my school for 39 years and only retired because I’d hit my ‘retirement age’– 60, what a ridiculous concept!

So there I was at 60, retired and expected to spend my years drinking sugary tea and whiling away my time on the charpoy! But I was restless, I didn’t want to retire and kept asking myself, ‘What shall I do now?’ A few days later, I got the answer.

One morning, around 6:30 AM, I saw 3 young girls enter my house. I was shocked when they told me they’d cycled for over 23 kms to see the Master who’d retired! They were young tribal girls who were desperate to learn; with folded hands they asked, ‘Masterji, will you teach us?’ I immediately agreed and said, ‘I can teach you, but you will have to pay my school fees for the whole year–are you ready to pay?’

They said, ‘Yes, Masterji, we will manage the money somehow.’

So I said, ‘Yes, my fees are Rupee 1 for the whole year!’

They were so happy, they hugged me and said, ‘We will pay you 1 Rupee and 4 chocolates also!’

I was elated! So, after they left, I put on my dhoti and went straight back to my school and requested them to give me a classroom to teach…they refused. But I wasn’t going to stop– I had years of teaching left in me, so I went back home, cleaned my verandah and decided to start teaching there. 

That was in 2004–my Pathshala started with those 3 girls and today we have over 3000 students per year, most of whom are young tribal girls. My day still starts at 6 AM with a walk around the village and then I open my doors to students coming from all over– some of the girls walk for 20 plus kilometres; I have so much to learn from them!

Over the years, my students have gone on to become professors, heads of departments and IT professionals– they always call me and give me the good news and as always, I ask them to please give me some chocolates! And last year, when I won the Padmashree, my phone didn’t stop ringing; the whole village celebrated with me–it was a happy day, but I still didn’t allow my students to bunk class!

And my doors are open to all– come visit me and my Pathshala anytime; our village is beautiful and all my students are bright–I am sure you can learn something from them!

So that’s my story– I am a simple teacher from Bengal who enjoys his tea and evening naps on his charpoy. The highlight of my life is being called Master Moshai–I want to teach until my last breath; it’s what I was put on this planet to do!”


Sujit Chattopadhyay


President Kovind presents Padma Shri to Shri Sujit Chatterjee for Literature and Education. A retired school teacher from Purba Bardhaman, West Bengal, he is recognised over the state for his free coaching center named “Sadai Fakirer Pathsala”.

🌺🌺🌺

Sunday, June 26, 2022

Can we live mindfully ?

 *GOOD MORNING* 


AS I OFTEN QUOTE THE PLACE WE LIVE IN THIS WORLD IS LEASED OUT BY NATURE TO LIVING AND NON LIVING THINGS.


IRONY IS THE EARTH LIFE SYSTEM  CAN GO ON WITHOUT HUMANS.


PLEASE UNDERSTAND THIS TRUTH.


BUT IF BIRDS INSECTS ANIMALS GO EXTINCT THE ECO SYSTEM WILL SLOWLY LOOSE ITS ABILITY TO SUSTAIN AND MAKE THE EARTH BARREN.  NO LIFE CAN SUSTAIN IN EARH AND ECOLOGICAL CHANGES WILL DESTROY THE EARTH TOTALLY.


PROTECT EARTH BY NOT ABUSING THE RESOURCES LIKE WATER AIR ETC.


HERE COMES 


 *MINDFUL CONSUMPTION* 


I SHARE WHAT I READ FOR ALL OF MY FRIENDS.

A FEW IS ADDED HERE MANY MORE CAN BE THOUGHT OFF BY US


 *QUOTE* 


*Mindful consumption*


Over time, I have realised that I am taking far more from the universe than I will ever be able to give back. 


*The constant exercise of differentiating between needs and desire has been an eye opener.*  


Endeavour is to live responsibly, endeavour is to live with conscience. 


For eg:


*1. Do I really need the water that is being poured in my glass at the restaurant?* 

Will that water not go down the drain (literally) when I leave my table? Am I being fair to those who are walking miles for drinking water and yet what they get is hardly safe enough to consume?


*2. Do I really need to wrap that gift by buying ‘free’ gift wrapping paper?* 

Because that shiny/ non-biodegradable paper is going to be trashed (literally) once the gift is opened?


*3. Do I really need to buy gifts when I am not sure if they will be used and needed by the receiver because I want to look good?* 

Isn’t it wiser to buy fruits or dry-fruits with the same amount of money and with almost certainty that they will be consumed?


*4. What do I do when I am at buffet?* 

Do I listen to my stomach or do I fill my plate with everything available (either because its free or because I have paid for it all)?


*5. What do I do when the guy at Subway (the foodchain) offers me two forks and four tissue papers when I am going to be eating alone?* 

Do I return one fork and three tissue papers (or all four, if I carry my own hanky) to him or I just walk away from the counter and throw away unused forks and tissue papers? 


*6. Just because something is ‘bio-degradable’, should I use it?* 

Can I even avoid a paper bag or a cloth bag because a tree was chopped to make that paper and earth was subjected to atrocities to create the piece of cloth? Can I ‘reduce’ my consumption even before thinking of ‘reuse’ or ‘recycle’? 


*7. What happens when I go to eat Thaali*  

There are so many things I know I might not eat (for eg katori of Dahi or that Bengali mithai) .. Do I return it immediately so that it can be offered to someone else or do I let it sit on my plate and leave it untouched only to be thrown away later?


*8. Do I really need that cotton Kurti because it looks cool?* 

The fashion industry is far more evil than what meets our eye. From what it does to the environment while growing cotton and jute to how it treats humans to how it treats textiles and garment waste is mind-boggling ly dirty. 


*9. Do I really need that extra pair of shoes because I don’t have 'that' particular shade of orange?* 

Do I take into account that once processed, footwear is almost impossible to degenerate on face of the earth (including leather)?


*10. Do I need to cook elaborate meals when guests visit me?* 

Can I cook just enough so that everybody including myself can have a great time and no food is wasted (or we don’t continue to eat same food for next three days well after it has lost all its nutrients)


*11. Do I need to buy things just because they are in sale and they are cheaper?* 

Do I need to buy them because there is ‘return policy’? I was reading a case study on how big retail conglomerates dump returned goods in the ocean and its unbelievable how our oceans are constantly being subjected to waste created because of our greed. 


*12. Am I respectful when I am visiting a tourist destination?* 

Do I take rules such as ‘keep silence’, ‘do not litter’ seriously enough? 

Do I allow the place to consume me or my overbearing presence consumes the place? 


I have been asking these and such questions for a couple of years now. 


What else can I ask? 

*How else can I live mindfully?*


The Planet is choking.... make yourself count!


UNQUOTE


KUPPUSWAMY

Saturday, June 25, 2022

"பகுத்து அறிய வேண்டி.."

 ❇️⚡⭕⭕


*⭕"மதுவை" ஊற்றிக்கொடுக்கும் வேலைக்கு டிகிரி படிப்பை தகுதியாக வைத்தபோது உங்களுக்கு ரோஷம் மானம் எதுவும் பொ த்துக்கொண்டு வரவில்லை...!*


ஒப்பந்த அடிப்படையில் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு வெறும் 15000 சம்பளத்திற்கு Phd படிப்பை தகுதியாக வைத்தபோது உங்களுக்கு வெட்கம் சூடு சொரணை எதுவுமே வரவில்லை


ஒப்பந்த அடிப்படையில் 10000 ம் சம்பளத்திற்கு பாலிடெக்னிக் ஆசிரியர் வேலைக்கு ஆள் எடுத்தபோது எரியவில்லை. 


பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தபோது வருத்தப்படவில்லை நீங்கள்


ஓய்வு வயதை கடந்தும் சிலருக்கு பணிநீட்டிப்பு செய்தபோது எரியவில்லை. 


தமிழகத்தில்  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளே 1 கோடி பேருக்குமேல் வேலையின்றி இருப்பதை அறிந்தபோதும் எரியவில்லை.


வெறும் 10000 ம் சம்பளத்திற்கு இளைஞர்களை கோயில் பூசாரி வேலைக்கு அனுப்பும்போது எரியவில்லை.


ஆனால், 21 வயதுக்குள்ளாகவே ஒரு இளைஞனை மாதம் 30000 ம் ஊதியம் பெறவைத்து, 4 ஆண்டு முடிவில் 21 லட்சத்திற்கு அதிபதியாக்கி, உடல் மற்றும் மனவலிமையோடு வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லக்கூடிய அக்னிபத் திட்டம் வரப்போகிறது என்றதுமே உங்களின் அடிவயிறெல்லாம் பற்றி எரிகிறதென்றால் நீங்கள்தான் இந்த நாட்டின் முதல் எதிரி.


உங்களுக்கு படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைக்கவில்லை என்றாலும் கவலையில்லை.


டிகிரி முடித்தும் வேலை கிடைக்கவில்லையே என்று மாதம் 3000 ம் ரூபாய்க்கு உதவித்தொகை விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொண்டிருப்பவனைப் பற்றியும் கவலையில்லை.


BE படித்தும் கரும்பு_வெட்டும் கூலியாக போகும் இளைஞனைப்பற்றிய கவலையும் இல்லை.


படித்த படிப்புக்கேற்ற வேலையின்றி வறுமையில் தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்களைப் பற்றியும் கவலையில்லை.


ஆனால் தேசப்பற்று மிக்க வீரர்களாக பொருளாதார வலிமையோடு வரும் அக்னிவீரர்களை பற்றி நினைக்கும்போதே உங்களுக்கு கவலை தொற்றிக்கொள்கிறது என்றால், உங்களின் இளைஞர்கள் மீதான அக்கறை தெரியவில்லை. உங்களுக்குள் உண்டான பயமே தெரிகிறது.


நீங்கள் எதிர்பார்க்கும் ஆமாம்சாமி இளைஞர்களாக அக்னிவீரர்கள் ஒருபோதும் இருக்கமாட்டார்கள். உங்களுக்காக அவர்கள் கொடி  பிடிக்கமாட்டார்கள். உங்களுக்காக அவர்கள் கலவரம் செய்யமாட்டார்கள்...


*அக்னிபாத்_திட்டத்தை வரவேற்போம்..🇮🇳💪💪*

Friday, June 24, 2022

நம்பி...யார்...

 ❣️ #நம்பி_யார். ....??!!


சென்னையில் செய்தியாளர்களிடம்  நடிகர் மாதவன் #ராக்கெட்டரி திரைப்படத்தை அறிமுகம் செய்து பேசினார்.


இஃது முழுக்க முழுக்க நிஜத்தில் நடந்த கதை..... கிட்டதட்ட சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை ஒத்த விதத்தில் வந்திருக்கிறது. இத்திரைப்படம் நம் இந்திய விஞ்ஞானி திரு. நம்பி நாராயணனை குறித்து பேசுகிறது‌. 


நம் சமகாலத்தில் நம்மோடு  வாழும் நம் இந்திய விஞ்ஞானி திரு நம்பி நாராயணன் தான் சொந்தமாக கண்டடைந்த...... இந்த உலகின் ஆகச் சிறந்த க்ரையோஜனிக் இஞ்சினை.... இந்திய ராக்கெட் தொழில்நுட்பத்தின் உயிர் நாடியை...... இந்த சாதனையை செய்தற்காகவே அவர் பட்ட துன்பங்களை.... அனுபவித்த வேதனைகளை.... இத்திரைப்படத்தில் வாயிலாக நாம் அறிய சொல்ல இருக்கிறார்கள்......


செயற்கரிய செயல்களை செய்தால் இந்த உலகம் கொண்டாடும் என்பதற்கு மாறாக..... இவரது இந்தஅ ரிய கண்டுபிடிப்பிற்காக ....... செல்லரித்த நம் இந்திய அரசியல் கட்சி (காங்கிரஸ்) ஆட்சி காலத்தில்  படாதபாடு பட்டிருக்கிறார். இதனால் இவருக்கு மட்டுமே பாதிப்பு இல்லை..... ஒட்டுமொத்த தேசமும் சுமார் 17 ஆண்டு காலம் விண்வெளி துறையில் பின்தங்க நேர்ந்தது. ஆனால் இவை குறித்து நம் யாருக்கு சரியாக தெரியாது...... அல்லது அப்படி தெரியாமல் பார்த்து கொண்டார்கள்.


உதாரணமாக ஒன்று பாருங்கள்.....


இவரது கண்டுபிடிப்பில் உருவான இந்த க்ரையோஜனிக் இஞ்சின் இது நாள் வரை ஒரேயொரு முறை கூட ஃபெயிலியர் ஆனது இல்லை....... சரியாக சொன்னால் .0% கூட இயங்காமல் நின்றது இல்லை என்கிற ரெக்கார்ட் இருக்கிறது. இஃது மஹா உலக சாதனை. ஆனால் இவை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியே தெரிவிக்கப்பட்டதில்லை.


இவரது இந்த கண்டுபிடிப்பால் மட்டுமே மங்கள்யான் மற்றும் சந்திராயன் கனவிலும் நினைத்துப் முடியாத மிக குறைந்த செலவில் சாத்தியமாகி இருக்கிறது....... இதோ நாளைய நம் இந்திய தேசத்தின் மிக முக்கியமான ககண்யான் விண்வெளி திட்டமும் சாதிக்க காத்துக் கொண்டு இருக்கிறது.


இத்தனைக்கித்தனை சாதித்த இவரது தொழில்நுட்ப பண்புகளுக்காக இவர் பெற்ற பெயர் பெண் மோகத்தால் தேசத்தின் விண்வெளி திட்டத்தை அந்நிய சக்திகளுக்கு விற்றார் என்கிற ரீதியிலான கடும் குற்றச்சாட்டு.

இவர் நீதிமன்ற விசாரணையின் போது இவர் சொன்னது... குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை தன் வாழ்நாளில் இது நாள் வரை நேரில் பார்த்தது கூட இல்லை என்பது தான்........ அதுதான் உண்மையும் கூட...... இதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க அவருக்கு பதிமூன்று ஆண்டு காலம் பிடித்திருக்கிறது. அதாவது அத்தனை ஆண்டு காலம் நம் இந்திய தேசத்தின் விண்வெளி திட்டத்தை தள்ளி வைத்து விளையாட்டு காட்டி இருக்கிறார்கள் அந்நிய சக்திகள்.


1969 முதல் 2014 ஆண்டு காலம் வரை நடந்தவற்றை நடந்த விதமாகவே பதிவு செய்து இருப்பதாக இத்திரைப்பட குழு சொல்கிறது.


மிக முக்கியமாக மாதவனே இத்திரைப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார்....... அல்ல அல்ல..... வாழ்ந்து காட்டி இருக்கிறது. நேரிடையாக நம்பி நாராயணனோடு கலந்து ஆலோசித்து அவரோடு வாழ்ந்து இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கும் முதல் திரைப்படமும் இதுவே‌.... படத்தினை நேரிடையாக தமிழ் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எடுத்து இருக்கும் அவர்..... உலகளவில் எட்டு நாடுகளில் எட்டு மொழிகளில் நேரடியாக டப் செய்யப்பட்டு வரும் ஜூலை முதல் நாள் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.


கேரளாவில் வசித்து வரும் இவரை..... இந்த நம்பி நாராயணனை பலரும் மலையாள பிராமணர் என்றே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது தவறு. நம் தமிழகத்தில் நாகர்கோவில் பிறந்த சுத்தமான ஸ்ரீவைஷ்ணவ பிராமணர் இவர் . மாஞ்சேரி நாராயண நம்பி தெரிந்து வைத்துக் கொண்டு இருப்பவர்கள் கூட இவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை....... இந்த பெயரில் சொன்னால் கூட நமக்கு சரிவர புரியாது போகலாம்...... M.N. நம்பியார் உடனே தெரியும்.இவரது மகன் தான் பாஜகவின் முக்கிய பிரமுகர் சுகுமாரன் நம்பியார்.


போகட்டும் நம் விஷயத்திற்கு வருவோம்.... நம்பி நாராயணனை முழுவதுமாக தெரிந்த கொள்ள நம் இந்திய தேசத்தின் சமகால வரலாற்று பக்கங்களை புரட்டி பார்ப்பதற்கு சமமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியமான ஒன்றும் கூட தான் அது. அத்தனை முக்கியமான பல விஷயங்கள் அதில் பொதிந்து கிடக்கின்றன.

இன ரீதியாக.... ஜாதி வாரியாக..... பிரிந்து நின்று பார்த்தால் ஒன்றும் கிடையாது..... இந்தியனாக ஒன்றிணைந்து பார்த்தால் நம் தேசம் எத்தனை சூழ்ச்சி கரமான பாதையிலும் திறமையாக நடை போடுகிறது என்பது புரியும்.அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இவர்.


நம் கடந்த கால பதிவுகளில் இந்திய விமானங்களை பற்றியும்..... அது கடந்து வந்த பாதை பற்றியும் விவாதித்து இருக்கிறோம்..... அதனை ஒட்டிய ராக்கெட் தொழில்நுட்பத்தின் பங்களிப்பும் அதிலிருந்து பிரிந்த ஏவுகணை தொழில்நுட்ப பண்புகளுக்காக நாம் எதிர்கொண்டு சர்வதேச சதிவலையின் சோதனைகளும்...... இவர் போலான இந்திய விஞ்ஞானிகள் பட்ட துன்பங்களும் நம் மனக் கண் முன்னே காட்சிகளாக விரிவடையும்........ 


இது நாள் வரை இங்கு நம் இந்திய தேசத்தில் எதுவும் மாறவில்லையோ என்று எண்ணும் அளவிற்கே இங்கு காரியங்கள் நடைபெற்று வருகின்றன......


எந்த ஒரு இந்திய நலன் சார்ந்த திட்டங்களும் நம்மை வந்து சேர நெருப்பாற்றில் நீந்தி வர வேண்டி இருக்கிறது..... நம் கண் முன்னே நம்முடன் இருப்பவர்களை கொண்டே நம் கண்களை குத்துகிறார்கள். உதாரணத்திற்கு #அக்னி_பாத் திட்டம் ஒன்றே போதும். இஃது நம் தமிழகத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்த நம் இந்திய முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களின் கனவு திட்டங்களில் ஒன்று தான் இது என்பதே நம்மில் பலருக்கும் தெரியாத சமாச்சாரமாகவே இன்றளவும் இருக்கிறது.


நாம் நம் தேசத்தில் போர் விமானங்களை சொந்தமாக நாமே உருவாக்கி இருக்கிறோம்....... அவற்றை கொண்டு தாக்குதல் நடத்தி வெற்றியும் பெற்று இருக்கிறோம் என்பது வெறும் கடந்த கால வரலாறு மாத்திரம் அல்ல...... நாளைய சரித்திரமும் கூட....... அதற்கு சாட்சியாக.... சான்றாக.... மீண்டும் நாமே சொந்தமாக போர் விமானங்களை உருவாக்கி கொண்டு இருக்கிறோம்....... அதுவும் சர்வதேச தரத்திலான போர் விமானங்களை வெறும் சொகுசு படகுகளின் விலையில்....... இதனை வல்லரசு நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறார்கள்...... எப்பாடுபட்டாவது தடுக்க துடிக்கிறார்கள்....... இதற்கு இங்கு உள்ள சில புல்லுருவிகளும் மதத்தின் பெயரால் .... இனத்தின் பெயரால் துணை நிற்கின்றனர்.......


இதற்கு ஆகச் சிறந்த சான்று இந்த நம்பி நாராயணன். இதுநாள் வரையில் கூட இவருக்கு..... இவரது குடும்பத்தினருக்கு யாரும் துணை நிற்கவில்லை...... வெறும் ஆறுதல் வார்த்தைகள் கூட இல்லை என்பது இந்த தேசத்தின் சாபக்கேடு என்பதை மாற்றிட வேண்டும். தேசத்திற்காக உழைப்பவர்களை கொண்டாடவில்லை என்றாலும் கூட பரவாயில்லை...... அவர்களை அவர்களது அறிவு திறனை இந்த தேசத்தின் சொத்துக்களாக பாதுகாக்கப்பட வேண்டும்.


அதற்குண்டான அவதானிப்பை இத்திரைப்படம் நமக்கு ஏற்படுத்தலாம்.


பொறுத்து இருந்து பார்க்கலாம்.


💓 ஜெய் ஹிந்த்.


பதிவு Sri Ram ji

Thursday, June 23, 2022

சும்மா படிச்சு வைப்போம்..


 அரிஜனராக பிறந்து, பார்ப்பான் என கோஷமிடாமல் இருந்ததால் இன்று ஒரு தலித் சாதிய கட்சியிலும் இவர் படம் இல்லை, ஊரை அடித்து தன் ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் மந்திரிகள் இருக்கும் நம் தமிழகத்தில், சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன "உயர் திரு கக்கன் பிறந்த தினம்" இன்று....


தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்....


கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார். விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது...


கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார். 


கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். 


ராமசாமி தனது சுயமரியாதை எனும் ஏமாற்று இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான ராமரை உருவபடம் அவமதிக்கும் போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.... 


கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர் ஆவர். அவர்  இந்து இயக்கங்களின் தீவிர ஆதரவாளார் என்பது கூடுதல் தகவல் ...


இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். 


விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்ட அவர்  வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். 


மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். 

சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்... நினைவு திரும்பாமல் யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.


கக்கனை அரசியலுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் வைத்தியநாதய்யர். அதை உயர்ந்தநிலையை அடைந்தபோதும் கக்கன் மறக்கவில்லை. 


கக்கன் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது 1955- ம் ஆண்டு வைத்தியநாதய்யர் இறந்தார். தகவலறிந்து உடனே மதுரை கிளம்பினார் கக்கன். அவரது உறவினர்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். 


இறுதிச்சடங்கு செய்யும் நேரம் நெருங்கியது. வைத்தியநாதய்யரின் குழந்தைகளோடு கக்கனும் மொட்டையடித்து கொள்ளி வைக்க தயாரானார். இதனைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்த்தனர்.

 "இது முறையல்ல" என ஐயரின் பிள்ளைகளை அழைத்துப் பேசினார்கள். ஆனால் அவர்களோ, "நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். அவருக்கும் உரிமை இருக்கிறது" என்றனர். 


கக்கன் "இன்று நான் போட்டிருக்கும் கதராடை, இந்த உடல், இந்த பதவி எல்லாமே ஐயர் எனக்குத் தந்தது. நான் இன்றைக்கு மனிதனாக மதிக்கப்படுவதே அவர் காட்டிய மாந்தநேயம் தான். அத்தகைய ஐயருக்கு நான் இறுதி சடங்கு செய்யவில்லையென்றால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை.." என்றார். 


இவரின் நேர்மைக்கு ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம்...


அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு..


1968-ல நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். தேர்தல் பொறுப்பாளர் கக்கன். தேர்தல் முடிந்து நானும் தேர்தலுக்குக் கொடுத்த பணத்தை கணக்கு பார்த்தபோது நானூறு ரூபாய் குறைந்தது. கக்கனுக்கு தாங்கமுடியாத வருத்தம். நணபர்கள் என்னவெல்லாமோ சமாதானம் சொன்ன போதும் மனம் ஒப்பவில்லை அவருக்கு ... நண்பரை அனுப்பி அவரது மனைவி கையில் கிடந்த இரண்டு வளையல்களை வாங்கி வித்துட்டு வரச்சொன்னார். அப்போதும் நானூறு ரூபாய் தேறல்ல. வேறும் சில பொருட்களை விற்று நானூறு ரூபாய் தேத்திட்டாரு. பின்னர் சென்னைக்குப் போய் கட்சி பொருளாளரிடம் கணக்கை ஒப்படைத்து விட்டு . "கணக்கை ஒப்படைச்சிட்டேன்" என இவர் காமராசரிடம் போய் சொல்ல அவருக்கு கடுமையான கோபம் வந்தது. "யாரு உன்கிட்ட கணக்கு கேட்டா.." என சத்தம் போட்டாரு. "அது தானே முறை" என்றார் கக்கன். 

"நீங்க யாருன் எனக்குத் தெரியும் அது தான் தேர்தல் பொறுப்பை உங்கிட்ட ஒப்படைச்சேன்"ன்னாரு. அப்போது கூட மனைவி நகைகளை விற்று கணக்கை சரி செய்ததை கக்கன் சொல்லல்ல...


அது தாங்க கக்கன்" ...


பெருந்தலைவர் காமராஜர் தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்…


அவர்களில் ஒருவர் கக்கன்…


இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்…


போலீஸ்

பொதுப்பணி

விவசாயம்

சிறுபாசனம்

கால்நடை_பராமரிப்பு

உள்துறை

சிறைத்துறை

நிதி

கல்வி

தொழிலாளர்_நலம்

மற்றும்

மதுவிலக்கு…


இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் ..


பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போதும், வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்....


கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க… 


‘குறை சொல்ல முடியாத மனிதர்...,

’ 

என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயர்.....

 

- கு பண்பரசு

Monday, June 20, 2022

வேளிநாட்டுக்காரன் சொல்லீட்டானா..அப்ப சரி..

 💧தண்ணீர்...!? 


ஆன்மீகத்தின் படி தண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு...


சமீபத்தில் ஒ ரு நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு பல திசைகளுக்குச் சென்று ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வந்து நின்றது. ஆற்றுத் தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது,    மணல் திருட்டு, தண்ணீரை வீணாக்குவது என்று பேசிக் கொண்டிருந்த போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தாமிரபரணி உருவாகும் இடம் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன். அதைக் கேட்ட நண்பர்,


"ஏங்க அப்ப அங்க பெரிய பெரிய முனிவர்கள்ல்லாம் தவம் பண்ணிருப்பாங்களே" என்று பரபரக்க கேட்டார்.


"இருக்கலாம்ங்க... ஏன் கேக்குறீங்க" என்றதும்,


"டாக்டர் மசாரு இமோடோ பற்றி கேள்விப் பட்டிருக்கீங்களா?" என்று கேட்டு விட்டு சில யூடியூப் வீடியோ லிங்க்குகளை வாட்சப்பில் அனுப்பி வைத்தார்.


டாக்டர் மசாரு இமோட்டோ (Dr.Masaru Emoto).ஜப்பானைச் சேர்ந்த மிகப் பெரிய ஆராய்ச்சியாளர்.   தண்ணீர் பற்றிய இவரது ஆராய்ச்சிகள் உலகளவில் மிகவும் பிரசித்தம்.                   இவர் தண்ணீரைப் பல வகைகளில் ஆராய்ந்து தண்ணீருக்கு இருக்கும் அசாத்திய ஞாபகத்திறன் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை,   புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

 

தண்ணீர் தனக்கு தரப்படும்,                    தான் கடந்து செல்லும் பாதையில் தன் மேல் விழும் தகவல்களை அப்படியே தேக்கி தனக்குள் வைத்துக் கொள்ளும்.                அதை வெளிப்படுத்தவும் செய்யும்.


ஒரு ஜாடி நிறைய தண்ணீரை நிரப்பி அதற்கு முன் அமர்ந்து கொண்டு தியானம் செய்கையில்,அந்த தியானத்தை தண்ணீர் அப்படியே தனக்குள் வாங்கிக் கொண்டது.    அந்த தண்ணீரை எடுத்து அதனை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலமாக ஆராய்ந்ததில் தண்ணீர் மூலக் கூறுகளின் வடிவங்கள் மிக அழகாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.


அதே ஜாடி தண்ணீரை எடுத்து-எனக்கு நோய்கள் வர நீ தான் காரணம் என்று பழித்து, கோபத்தையும், கொடூரத்தையும் வெளிப்படுத்திய போது, அதன் மூலக்கூறுகளின் வடிவங்கள் மிகப் பயங்கரமானதாக இருந்தது.


இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் தண்ணீர் தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்தியதை டாக்டர் மசாரு இமோடோ வின் ஆராய்ச்சிகளில் நிருபணமாகியுள்ளது.


உலகளவில் எல்லா மதங்களிலும் தண்ணீருக்கு என்று தனி இடம் உள்ளது.


யோர்டான் நதிக்கரையில், இயேசுவிற்கு ஞானஸ்னானம் தரப்பட்டதும், தண்ணீரால்தான்! 


பள்ளிவாசல்களில் ஓதி விட்டு பின் தெளிப்பதுத் தண்ணீரால்தான்! 


இந்து மதத்தில் தண்ணீர் இன்றி எந்த சடங்கும் இல்லை.  யாகம் முடிந்து, ஹோமங்கள் முடிந்து தண்ணீரைத்தான் அனைத்து இடங்களிலும் தெளிப்பார்கள்.


பெரிய ஞானிகள், முனிவர்கள் தவம் செய்தது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் கரைகளில் தான்.


"தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காதே!?" என்று நம் முன்னோர் சொல்லி வைத்ததும் இதனால் தான்.


தண்ணீருக்கு ஞாபகத்திறன் உள்ளது.  அது தனக்குள் தரப்படும் நன்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு தந்துவிடும்.             பெரிய பெரிய முனிவர்கள் ஆற்றங்கரையோரத்தில் தவங்களைச் செய்து தங்களது ஆற்றலை அந்த தண்ணீரில் விட்டனர்.                     அந்த தண்ணீர் அது ஓடும் இடங்களில் எல்லாம் அந்த ஆற்றலைத் தந்தது.


ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.                        ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும் என்கிறது விஞ்ஞானம்.       அதாவது energy conversion law.


மழையும் கூட ஆற்றலின் வடிவம் தான்.                              அது தனக்குள் இயற்கை தரும் தகவல்களைக் கொண்டு வந்து பூமியில் தெளிக்கிறது.   அதனால் தான் பயிர்கள் செழிக்கின்றன.   உயிர்கள் செழிக்கின்றன.


அதே மழை அளவுக்கதிகமாக பெய்யும் போது வெள்ளம் வருகிறது.


எது அளவு,  எது அளவுக்கு அதிகம் என்று தீர்மானிப்பது இயற்கை தான்.         அந்த தீர்மானத்தை ஒரு தகவலாக மழையின் துளிகளில் பதிய வைத்து பூமிக்கு அனுப்பி வைக்கிறது இயற்கை.


"கெடுப்பதூஉம் கெட்டாருக்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை"-- வள்ளுவர்.  


கொடுப்பதும் மழை, கெடுப்பதும் மழை என்கிறார்.


இப்பேற்பட்ட சக்திகளைக் கொண்ட ஆற்றை அதன் தண்ணீரைத் தான் நாம் பல வழிகளில் பாழ் படுத்துகிறோம்.


எப்படியெல்லாம் கெடுத்து நாசமாக்குகின்றோம் என்பதை உங்களது முடிவுகளுக்கே விட்டு விடுகிறேன்! 


இறுதியாக, உறுதியாக ஒன்று,


மனித உடலும் 75% தண்ணீரால் ஆனது.   மனித மூளை 90% தண்ணீரால் ஆனது.


தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது.  அது தனக்குத் தரப்படும் தகவல்களை வைத்தே தன் குணத்தை அமைத்துக் கொள்ளும்.


எனில் நமது உடலின் சக்தியை சற்று நினைத்துப் பாருங்கள்.....


(The Magic of Water, Doctor Masaru Emoto என்று இணையதளத்தில் தேடிப்பாருங்கள்.)


✍️ கு பண்பரசு

Sunday, June 19, 2022

Thank god..you r in the lucky list.

 *Out of 100, Only 8 live >65 years of age.*


_Hats off to whoever has compiled this statistics! Read and understand how lucky you are!!


The current population of Earth is around 7.8 billion.

For most people, it is a large figure, that is all.


 However, someone has condensed the 7.8 billion in the world into 100 persons, 

and then into various percentage statistics. 

The resulting analysis is relatively much easier to comprehend.


*Out of 100 persons:*

11 are in Europe

5 are in North America

9 are in South America

15 are in Africa

60 are in Asia


*Out of 100 persons:*

49 live in the countryside

51 live in towns/ cities


*Out of 100 persons:*

77 have their own houses

23 have no place to live.


*Out of 100 persons:*

21 are over-nourished

63 can eat full

15 are under-nourished

1 ate the last meal, but did not make it to the next meal.


*Out of 100 persons:*

The daily cost of living for 48 is less than US $2.


*Out of 100 persons:*

87 have clean drinking water

13 either lack clean drinking water or have access to a water source that is polluted.


*Out of 100 persons:*

75 have mobile phones

25 do not.


*Out of 100 persons:*

30 have internet access

70 do not have conditions to go online


*Out of 100 persons:*

7 received university education

93 did not attend college.


*Out of 100 persons:*

83 can read

17 are illiterate.


*Out of 100 persons:*

33 are Christians

22 are Muslims

14 are Hindus

7 are Buddhists

12 are other religions

12 have no religious beliefs.


*Out of 100 persons:*

26 live less than 14 years

66 died between 15 - 64 years of age

*8 are over 65 years old*.


*Out of100 persons in the world, only 8 can live or exceed the age of 65.*


*Conclusion*

If you have your own home,

Eat full meals and drink clean water,

Have a mobile phone,

Can surf the internet, and

have gone to college,

You are in the miniscule privileged lot. 

(in the less than 7% category)


*If you are over 65 years old. Be content and grateful.  Cherish life, grasp the moment.*


*You did not leave this world before the age of 64 years like the 92 persons who have gone before you. You are already the blessed amongst mankind.*


Take good care of your own health because nobody cares more than you yourself!


*“Thank God *”

Friday, June 17, 2022

இன்று...அறிந்திருக்க வேண்டிய பழங்கதை

 *பழைய கதை... அறியாதவர்களுக்காக...*👇


*மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தொடங்கப்பட்ட *'அபிநவ பாரத்'* இயக்கத்தின் கிளையை தமிழகத்தில் துவங்க சங்கர கிருஷ்ணய்யரும் நீலகண்ட பிரம்மச்சாரியும்  வாஞ்சிநாதனை தங்களது இயக்கத்தில் சேர்த்தனர். சங்கர கிருஷ்ணய்யரின் சகோதரியை சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்திருந்த வாஞ்சிநாதன், இயக்கத்தின் பால் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்த சமயமது. அப்போது *வ.உ.சி* , *சுப்பிரமணிய சிவா* ஆகியோரை ( 12/03/1908 ) ஆங்கிலேய அரசு கைது செய்தது. அதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் போராட்டம் தீயெனப் பரவியது. துணைக்கலெக்டரான *ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ்* போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதன் பேரில் 4 போராட்டக்காரர்கள் பலியானார்கள். இதில் கோபமடைந்த அபிநவ பாரத் இயக்கத்தினர், அதற்கு காரணமானவனை பழிக்கு பழிவாங்க உறுதி பூண்டனர். 25 வயதேயான வாஞ்சிநாதன், தன் மைத்துனர் சங்கர கிருஷ்ணய்யர் மூலமாகவும் நீலகண்ட பிரம்மச்சாரி மூலமாகவும் புதுச்சேரியில் ஒரு மாத காலம் தங்கியிருந்து தன்னை உடலளவிலும் மனதளவிலும் தயார் செய்து கொண்டு, துப்பாக்கி சுடும் பயிற்சியையும் மேற் கொண்ட  வாஞ்சிநாதன், 1911 ஆம் ஆண்டு மே மாதம் திருநெல்வேலி வந்து சேர்ந்தார். அப்போது திருநெல்வேலி கலெக்டராக பதவி உயர்வு பெற்றிருந்த ஆஷ், *17-06-1911* அன்று  தன் மனைவியுடன் திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து காலை 10 மணிக்கு ரயிலில் புறப்பட்டு காலை 10-45 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்கி, தூத்துக்குடியிலிருந்து காலை 11 மணிக்கு வரும் ரயிலில் ஏறி கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க பயணிக்கும் தகவல் வாஞ்சிநாதனுக்குக் கிடைத்தது. கொடைக்கானல் வரை செல்லாமல் மணியாச்சியிலேயே ஆஷ் க்கு நிரந்தர ஓய்வு கொடுக்க திட்டமிட்ட வாஞ்சிநாதன். துப்பாக்கி, துண்டு பிரசுரங்கள் சகிதமாக காலை 10 மணியிலிருந்தே காத்திருக்கத் தொடங்கினார். கலெக்டர் திட்டமிட்டபடி தூத்துக்குடியிலிருந்து வந்த ரயிலில் ஏறி முதல்வகுப்பு பெட்டியில் அமர்ந்து ரயில் புறப்பட காத்திருந்தான். அவனுக்கு எதிரே அவனது மனைவி அமர்ந்திருந்தார். ரயில் புறப்பட சில நிமிடங்கள் இருந்த நிலையில் துப்பாக்கியுடன் பாய்ந்து சென்று, ஆஷ் இருந்த பெட்டியில் ஏறிய வாஞ்சிநாதன். சற்றும் காத்திருக்காமல் ஆஷை நோக்கிச் சுடத்துவங்கினார், முதல் குண்டு கலெக்டர் ஆஷின் இடது தோள்பட்டையில் பாய்ந்தது. அலறிய அவன், தனது துப்பாக்கியை எடுத்து வாஞ்சிநாதன் மீது வீசினான். அதிலிருந்து விலகிக் கொண்ட வாஞ்சிநாதன், அடுத்தடுத்து 2 குண்டுகளை ஆஷை நோக்கிச் சுட, அந்த இடத்திலேயே அவன் தன் மனைவி முன்னே சரிந்து விழுந்தான். கூச்சலிட்டுக் கொண்டே அவனது மனைவி கீழே இறங்கி நடைமேடையில் ஓட, வாஞ்சிநாதனை, ஆஷின் உதவியாளர் ஒருவரும் காவல்துறையினர் சிலரும் பிடிக்க முயல, *"வெள்ளையனை சுடுவதுதான் என் லட்சியம், என்னை பிடிக்க முயன்றால் உங்களையும் எமலோகம் அனுப்பிவிடுவேன்"* என்று துப்பாக்கியைக் காட்டி எச்சரிக்க, மொத்த கூட்டமும் பின்வாங்கியது. *தப்பியோட வாய்ப்பிருந்தும் அதை விரும்பாத வாஞ்சிநாதன், அங்கிருந்த கழிவறைக்குள் நுழைந்த அடுத்த வினாடி துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.* பீதியில் இருந்த காவல் துறையினர், ஒரு மணிநேரத்துக்கு பின்னர் உள்ளே நுழைந்து பார்த்தபோது,  *வாயில் துப்பாக்கியை வைத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தன் இன்னுயிரை தேசத்திற்காக தியாகம் செய்த நாள் இன்று....!* 

( நன்றி # தினமலர் )

Thursday, June 9, 2022

சமஸ்கிருதம் அறிந்தவர்கள்.....

 *நமஸ்காரங்கள்!!* 

நம்மில்சமஸ்கிருதம் அறிந்தவர்கள் வருடப் பெயர்களுக்கான அர்த்தம் அறிந்து பகிரலாமே..

 நாம் அனைவரும் ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையில் பிறந்த ஆண்டை உடனடியாக நினைவில் வைத்துக் கொள்கிறோம்.  ஆனால் பாரதிய இந்து பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்ட சம்வத்சரை நினைவுகூர நாங்கள் போராடுகிறோம்.  நீங்கள் பிறந்த சம்வத்சர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  நாம் பிறந்த பாரத வருடம் எது என்பதை அறியவும் நினைவில் கொள்ளவும் சில அறிவாளிகள் இதைத் தயாரித்துள்ளனர்.  தயவு செய்து இதைப் பாதுகாத்து தொடர்ந்து பயன்படுத்தவும்.


 

 *( 1867, 1927,1987,)*: பிரபாவா

 *(1868,1928,1988)*: விபாவா

 *(1869,1929,1989)*: சுக்லா

 *(1870,1930,1990)*: பிரமோதூதா

 *(1871,1931, 1991)*: பிரஜோத்பட்டி

 *(1872,1932,1992)*: அங்கீராசா

 *(1873,1933,1993)*: ஸ்ரீமுகா

 *(1874,1934,1994)*: பாவா

 *(1875,1935,1995)*:யுவா

 *(1876,1936,1996)*: தாதா

 *(1877,1937,1997)*: ஈஸ்வரா

 *(1878,1938,1998)*: பஹுதன்யா

 *(1879,1939,1999)*: பிரமாதி

 *(1880,1940,2000)*: விக்ரமா

 *(1881,1941,2001)*: வ்ருஷா

 *(1882,1942,2002)*: சித்ரபானு

 *(1883,1943,2003)*: ஸ்வபானு

 *(1884,1944,2004)*: தாராநா

 *(1885,1945,2005)*: பார்த்திவா

 *(1886,1946,2006)*: வியாயா

 *(1887,1947,2007)*: சர்வஜித்

 *(1888,1948,2008)*:

 சர்வதாரி

 *(1889,1949,2009)*: விரோதி

 *(1890,1950,2010)*: விக்ருதி

 *(1891,1951,2011)*: காரா

 *(1892,1952,2012)*: நந்தனா

 *(1893,1953,2013)*: விஜயா

 *(1894,1954,2014)*: ஜெயா

 *(1895,1955,2015)*: மன்மதா

 *(1896,1956,2016)*: துர்முகி

 *(1897,1957,2017)*: ஹெவிலம்பி

 *(1898,1958,2018)*: விளம்பி

 *(1899,1959,2019)*: விகாரி

 *(1900,1960,2020)*: ஷர்வரி

 *(1901,1961,2021)*: பிளாவா

 *(1902,1962,2022)*: சுபக்ருதா

 *(1903,1963,2023)*: ஷோபக்ருதா

 *(1904,1964,2024)*: க்ரோதி

 *(1905,1965,2025)*: விஸ்வவாசு

 *(1906,1966,2026)*: பராபவ

 *(1907,1967,2027)*: பிளவங்கா

 *(1908,1968,2028)*: கிலாகா

 *(1909,1969,2029)*: சௌமியா

 *(1910,1970,2030)*: SadharaNa

 *(1911,1971,2031)*: விரோதிக்ருதா

 *(1912,1972,2032)*: பரிதாவி

 *(1913,1973,2033)*: பிரமாதா

 *(1914,1974,2034)*: ஆனந்த

 *(1915,1975,2035)*: ராக்சசா

 *(1916,1976,2036)*: நாலா

 *(1917,1977,2037)*: பிங்கலா

 *(1918,1978,2038)*: கலாயுக்தி

 *(1919,1979,2039)*: சித்தார்த்தி

 *(1920,1980,2040)*: ரௌத்ரி

 *(1921,1981,2041)*: துர்மதி

 *(1922,1982,2042)*: துந்துபி

 *(1923,1983,2043)*: ருதிரோத்காரி

 *(1924,1984,2044)*: ரக்தாக்ஷி

 *(1925,1985,2045)*: க்ரோதானா

 *(1926,1986,2046)*: அக்ஷயா


 *தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்*

 [03/04, 8:12 am] +91 99801 67440: உங்களுக்குத் தெரியுமா, இந்திய *பஞ்சாங்* அமைப்பின்படி, ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பெயர் உள்ளது?  ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறதா?  வருடங்களின் *60* பெயர்கள் உள்ளன *(சம்வத்ஸர்கள்)*.  ஒவ்வொரு பெயரும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிக்கிறது.  ஆண்டு பொதுவாக *ஏப்ரல் நடுப்பகுதியில்* தொடங்குகிறது.*


 2019-20 ஆம் ஆண்டுக்கு *‘விகாரி’* என்று பெயரிடப்பட்டது, அது ஒரு *‘நோய்’ ஆண்டாக அதன் பெயருக்கு ஏற்றவாறு வாழ்ந்தது!*


 2020-21 ஆண்டுக்கு *‘ஷர்வரி’* என்று பெயரிடப்பட்டது, அதாவது *இருள்*, மேலும் அது உலகை இருண்ட கட்டத்திற்குள் தள்ளியது!


 இப்போது *‘பிளாவா’* ஆண்டு (2021-22) முடிவடைகிறது.  ‘பிளவா’ என்றால், *"அது - நம்மைக் கடக்கச் செய்கிறது".* *வராஹ சம்ஹிதை* கூறுகிறது: இது உலகத்தை தாங்க முடியாத சிரமங்களைக் கடந்து நம்மை மகிமை நிலைக்குச் செல்லும்.  மேலும் *இருளிலிருந்து வெளிச்சத்திற்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள்!*

 இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்


 2022-23 ஆம் ஆண்டுக்கு *‘சுப்க்ருத்’* என்று பெயரிடப்பட்டுள்ளது, அதாவது *சுபத்தை உண்டாக்கும்*.


 *நாம் இப்போது எதிர்நோக்கி, ஒரு சிறந்த நாளை எதிர்பார்க்கலாம்*


 இன்று இருக்கும் அனைத்து அமைப்புகளிலும் *சனாதன தர்மம்* இதுவரை *அறிவியல், நடைமுறை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியது* என்று நம்புங்கள்.

 நமது *ரிஷிகள்* மற்றும் *முனிகள்* நவீன கால கேஜெட்டுகள் மற்றும் உபகரணங்கள் இல்லாதபோது துல்லியமாக கணிக்க முடியும்.

 *பன்முகத்தன்மையும் சகோதரத்துவமும் நிறைந்த மண்ணை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்*

Tuesday, June 7, 2022

பாரதி கண்ணம்மாவின் இறுதி நொடிகள்..

 


உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது. எனக்குத் தெரியும். என் பெயர் விஜயா. பாரதியின் மூத்த பெண், தங்கம்மாவின் மகள் நான். என் பாட்டி கடையத்தில் வாழ்ந்த போது அவருடன் என் இளமைக் காலத்தைக் கழித்தேன். நான் திருநெல்வேலியில் கல்லூரியில் படித்த போது, என் பாட்டி வாழ்ந்த கடையத்தில்தான் என்விடுமுறைகளைக் கொண்டாடினேன். 

பாரதியின் மரணத்தின் போது என் பாட்டிக்கு முப்பதே வயது. இளம் விதவை. கல்வி கற்காத பெண். இரண்டு பெண்கள். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. சொத்து என்று இருந்ததெல்லாம் அவள் கணவரின் எழுத்துக்கள் மட்டுமே. கொஞ்சம் அவள் நிலையை எண்ணிப் பாருங்கள். அந்தக் காலத்தில், விதவைப் பெண்களின் வாழ்வு, அவள்உறவினர்களைச் சார்ந்தே இருந்தது. அதுவும் இரண்டு பெண்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு வேறு. என் பாட்டிக்கு, பாரதிதான் தெய்வம். அவர் மறைவுக்குப் பின், அவர் விரும்பிய புதுமைப் பெண்ணாகவே நடந்தாள் என் பாட்டி. தன்னிடம் இருந்த சில மூட

நம்பிக்கைகளையும், மனக்கலக்கங்களையும், தேவையில்லாத பழம்வழக்கங்களையும் விட்டு ஒழித்தாள். 

எதையும் சமாளிக்கும் மன தைரியமும், தீவிர கடவுள் பக்தியும்,  நல்ல காலம் பிறந்தே தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், விடா முயற்சியும் கொண்டு வாழ்ந்தாள். தன் பெண்கள் மற்றும் பேரக்குழந்தைகளின் கல்வி மட்டுமே அவளின் ஒரே குறிக்கோள். எப்படியாவது நாங்கள் அனைவரும் – முக்கியமாக பேத்திகள் – படித்து விட வேண்டும் என்று பாடுபட்டாள். நான் டாக்டர் பட்டம் வரை பெற்றதற்கு அவள்தான் ஓரே காரணம். தன் கணவன் பாரதியின் நினைவுகளே அவளின் சக்தி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் பாடல்களைப் பாடிக் கொண்டும், எங்களையும் பாட வைத்துக் கேட்டுக் கொண்டும் இருப்பாள். பாரதியும் எல்லாப் பாடல்களும் அவளுக்கு மனப்பாடம் என்று என் அம்மா சொல்லக் கேட்டு இருக்கிறேன். 

வறுமை என்பதை உணர விடாமலேயே என்னை வளர்த்தாள். நான் கல்லூரியில் இருந்து வரும் போதெல்லாம், என்னை வாசலில் இருந்தே கட்டி அணைத்து “வாடாக் குழந்தே.. கை கால் அலம்பிட்டு வா. சாப்பிடலாம்” என்று ஊட்டி விட்டுக் கொண்டே நான் என்னவெல்லாம் படிக்கிறேன் என்று ஆர்வமாய் கேட்பாள். 

1955 ஆம் வருடம். அவளுடன் என் கடைசி விடுமுறை. 

“வந்துட்டியாம்மா! உனக்காகத்தான் காத்துண்டு இருக்கேன்” என்று என்னை படுக்கையில் இருந்தபடியே வரச் சொல்லி கட்டி அணைத்துக் கொண்டாள். அவளுக்கு உடல் நலம் சரியில்லை என்பதை எனக்கு எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டாள். “லீவு விட்டதும் வந்தா போதும்”. அதற்குப் பிறகு, கோமாவில் விழுந்து விட்டாள். ஒரு அசைவும் இல்லை. உணவு செல்லவில்லை. டாக்டர் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று கை விரித்து விட்டார். எல்லோரையும் வரச் சொல்லி விட்டோம். பெண்கள், பேரன் பேத்திகள், உறவினர்கள் என்று வீடு முழுவதும் கூட்டம். நான் அவளின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். ஒரு முறையாவது கண் திறக்க மாட்டாளா என்ற ஏக்கம். கண் திறக்கவில்லை. விழி கூட அசையவில்லை. 

பின்னிரவு நேரம். வீடே அமைதியில் உறைந்து இருந்தது. இறுதி நிமிடங்கள் என்றுஎல்லோருக்கும் தோன்றி இருக்க வேண்டும். நீர் நிறைந்த கண்கள் எதுவும்உறங்கவில்லை. அவள் உதடுகள் மட்டுமே விரிந்தன. 

“திண்ணை வாயில் பெருக்க வந்தேன். 

எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்” 

என்று மெல்லிய குரலில் பாட்டி பாடினாள். நிறுத்தி விட்டாள். என் மனதுக்குள் அடுத்த வரிகள் எழுந்தன. ஏங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன். நித்தச் சோற்றினுக்கே ஏவல் செய வந்தேன்;

நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான்.

வித்தை நன்கு கல்லாதவள் என்னுளே

வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.

அதே இரண்டு வரிகளை இன்னும் ஒரு முறைப் பாடினாள். “திண்ணை வாயில் பெருக்க வந்தேன் 

எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்”

சில நொடிகள் மௌனம். மீண்டும் அவள் குரல். இன்னும் மெல்லியதாய். 

உடல் எழுப்பும் குரலாய் இல்லாமல், அதை விட்டு விலகிச் செல்லும் அவள் ஆத்மாவின் குரலாய்.. “திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்.  திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்”

அவள் மூச்சு நின்று விட்டது. அவள் அரசன் பாரதி சென்ற நாராயணனின் திருவடிகளுக்கே பாரதியின் செல்லம்மாவும் சென்று விட்டாள். 

என் பாட்டி செல்லம்மாள் பெரும் பாக்கியவதி. 

டாக்டர் விஜயா பாரதி, 1960களிலேயே, பாரதியின் கவிதைகளை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் கவிதைகளைப் பிழை நீக்கி நான்கு பகுதிகளாகப் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார்....படித்ததும் பகிரப்பிடித்தது..

Wednesday, June 1, 2022

A..B..C.......Z.

 இந்த 26 வார்த்தைகள்! 


எவ்வளவு அழகு




*A - Appreciation*


மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.




*B - Behaviour*


புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.




*C - Compromise*


அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.




*D - Depression*


மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.




*E - Ego*


மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.




*F - Forgive*


கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.




*G - Genuineness*


எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.




*H - Honesty*


தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.




*I - Inferiority Complex*


எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.




*J - Jealousy*


பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.




*K - Kindness*


இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.




*L - Loose Talk*


சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.




*M - Misunderstanding*


மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.




*N - Neutral*


எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.




*O - Over Expectation*


அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.




*P - Patience*


சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.




*Q - Quietness*


தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.




*R - Roughness*


பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.




*S - Stubbornness*


சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.




*T - Twisting*


இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.




*U - Underestimate*


மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.




*V - Voluntary*


அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.




*W - Wound*


எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.




*X - Xerox*


நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.




*Y - Yield*


முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.




*Z - Zero*


இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்🌹💐🌷


படித்ததில் பிடித்தது🌹💐🌷🙏