Thursday, April 28, 2022

திருப்பதி செல்ல இருப்போருக்கு..

 திருப்பதி தங்குமிடம்.


திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம்.


Tirumala Sri Kasimath,

Ring road, Near S.V.Meseum,

Tirumala - 517507 (A.P)

Ph : 0877-2277316


திருமலையில் தங்குவதற்கு  ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால், 

இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள். கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன.


மூல் மட் மின்: +918772277499 0877-2277499.

புஷ்பா மண்டபம் : 0877-2277301.

ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.

உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.

ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316.


ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட்  Ph-0877-2277302.

ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை 

Ph: 0877-2277282.


ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் 

Ph : 0877-2277370.

ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.

ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.

உடுப்பி மட் Ph-0877-2277305.


ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் : 0877-2277826.


ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.

ஸ்ரீ திருப்பதிஸ்ரீமன்னாரயன 

ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.


ஸ்ரீ சிருங்கரி சாரதா மடம்

Ph: 0877-2277269, 2279435.

ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.


ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316

உடுபி மட் பி: 0877 222 77305


ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் Ph : 0877 222 77301)


ஸ்ரீ காஞ்சி காமகோடி 

பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் , 

Ph : 0877 222 77370


ஸ்ரீ வல்லபச்சரிய மடம் 

தொலைபேசி: 222 77317

மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் Ph : 0877 222 77302

ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி

Ph  : 0877 222 77436


ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி 

ஆதித்யான் ஆஷ்ரம் 

Ph : 0877 222 77826

ஸ்ரீ வைகநாத ஆசிரமம்

Ph : 0877 222 77282

ஸ்ரீ அஹோபில மட்  

Ph : 0877-2279440

ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் Ph : 0877 222 77269

ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால் பன்சிலால் தர்மசாலா Ph : 0877 222 77445


ஹோட்டல் நரிலமா சௌல்ரி Ph : 0877 222 77784

ஸ்ரீ சீனிவாச சொல்ரி 

Ph : 0877 222 77883

ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின் 

Ph : 0877 222 77240


கர்நாடகா விருந்தினர் 

மாளிகை 

Ph : 0877 222 77238

தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் 

அறநெறிகள் 

Ph : 0877 222 77245


ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் 

Ph : 0877 222 79435

ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் Ph : 0877-2220015


வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளுவது என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.


65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?


நிபந்தனைகள் :

******************


1) ஆதார் அட்டை அவசியம்.

2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்

3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.

4) காலை 10 மணி முதல் 

மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.

5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.

6.) உதவி செய்வதெற்கென 

உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.

7) காலை உணவு பால் இலவசம்.

8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.

9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப் படுவர்.

10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ! 


🙏 ௐ நமோ நாராயணா....!


🤲 திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!


🤲 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்...


🤲 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.


🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.


🤲 திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..


🤲 ஸ்ரீராமானுஜர் யந்திர சக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .


🤲 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும் போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.


🤲 பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது , இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.


🤲 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.


🤲 வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..


🤲 செல்வம் மலை போல குவியும்.


🤲 உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.


🤲 அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.


🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.


🤲 மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.


🤲 வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத் திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.


🤲 இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.


🤲 கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.


🤲 குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்கு கிறார்கள்.


🤲 நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.


🤲 நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.


🤲 சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள்,

தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு இத் திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.


🤲 திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.


🤲 திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.


🤲 அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..


🤲 அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்


🤲 அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


🤲 அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .


🤲 மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.


🤲 அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.? மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.


🤲 வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.


🤲 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " 


ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”


ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,

வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!


🤲 பொதுப் பொருள்: 


🤲 திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே,   நமஸ்காரம். 

அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, 

வேண்டுபவர் வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, 

மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே  நமஸ்காரம். 

மகாலட்சுமி வசிக்கும் அழகிய மார்புடையவரே, 

துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா 

நின் திருவடிகளே 

சரணம் ! சரணம் !! சரணம் !!!

*

Saturday, April 23, 2022

பொருளறியக் கண்ணீர் பெருகும்..

 காசி கயா போன்ற புன்னிய ஷேத்திரங்களில்  ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது


அப்போது  அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்...  


சிறிது நிதானமாகப் படியுங்களேன் .. உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்.. உங்கள் தாயை நினைத்து..♥♥♥♪♥♥♥


கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர்  தனது தாயின் கடைசி காலத்தில் தான்  வாக்கு கொடுத்தபடி  அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு  அவளது அந்திம கிரியைகளை செய்து  இயற்றிய  மனம் நெகிழும்  மாத்ரு பஞ்சகம்    5 ஸ்லோகங்கள்


விஷ்ணு பாதம் 


பித்ரு ஸ்ரார்தம் கயாவில்  செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே  பிண்ட பிரதானம் செய்வது ஒரு  வழக்கம்.  

 

''கயா  கயா கயா. என்று  சொல்வது  நமது பித்ருக்களுக்கு  ஸ்ரத்தையோடு  அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம்  செய்யும்  கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும்  வாழ்வில்  ஒரு தடவையாவது செல்ல வேண்டிய  இடம் கயா.  குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.


ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும். 


ஜீவதோர்  வாக்ய கரணாத்

ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்  

கயாயாம் பிண்ட தாணாத்

த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய


'' அடே பயலே,  அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே  அவர்கள் சொல்படி நட.  அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம்  தான் உன்  படிப்பு மூலம் கிடைக்கும்  சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு  அந்தந்த திதியில்  அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்  தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .

 

 “அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை  காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம்  64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம். 

ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு,  நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத'  என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு  (திருவாலங்காடு -  வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)


இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம்  இடுவார்கள்.  இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த  16 பிண்டங்களை  அம்மாவுக்காக  ஒவ்வொரு வாக்யமாக  சொல்லி  இடுகிறோம்.  அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”. 

 

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''கொஞ்சமா நஞ்சமா  நான்  உன்னை  படுத்தியது.  ஒரு பத்து மாத காலம்  எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக  நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட  நீ  பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக  என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக  தடவி கொடுத்தாயே.   இதோ நான் செய்த பாவங்களுக்காக  உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?


2.   மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''ஏன்  சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம்  கஷ்டமானது தான்.  மாசா மாசம் நான் வளர வளர  உனக்கு  துன்பத்தை தானே  அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன்.  இந்தா அதற்கு பரிகாரமாக  நான்  இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.


3.     பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


அம்மா,  நான்  அளித்த வேதனையில் நீ  பல்லைக் கடித்துக்கொண்டு  பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத  துன்பம்  நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக  இந்த 3வது  ஸ்பெஷல்  பிண்டம் உனக்கு. என் தாயே. 


4.     ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''அம்மா,  இந்த 4 வது பிண்டம்  உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட  வேதனைக்காக  -- ஒரு பரிசு --  என்றே  ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை  எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன். 


5.     சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''ஏண்டி  மூச்சு  விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ'' .என்று  உன்  உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே  மனமுவந்து நான்  விளைத்த துன்பத்தை, வேதனையை  நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான்  இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''


6.   ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம்.  அப்புறமா  சாப்பிடறேன்''  என்று  உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான்  நோயற்று வளர, வாழ  எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான்  இந்த ஆறாவது பிண்டம். அம்மா  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'


7.    அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''நான்  குவா குவா  என்று பேசி  பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது  நீ  பசியை அடக்கி  வெறும் வயிற்றோடு  எத்தனை நாள் சரியான  ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  பால் நேரம் தவறாமல்  கிடைத்ததே.  அந்த  துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த  7வது பிண்டம்..\


8.     ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


இப்போது நினைத்தாலும்  சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்துக்கொண்டே  வேறு துணி எனக்கும்  மாற்றினாய். இதற்கு நான்  உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த  8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \


9.  ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''நான்  சுகவாசி.  எனக்கு  எப்போது தாகம், பசி,  தூக்கம்,  எதுவுமே தெரியாது.நீ  தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக  நீ  இதெல்லாம் செய்தாயே.  இந்த  பெரிய மனது பண்ணி என்னை  வளர்த்த  உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  9வது பிண்டம். 

.

10.   திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''ஒரு சின்ன செல்ல  தட்டு  என்  மொட்டை மண்டையில்.  ''கடிக்காதேடா..'' .  நான்  பால் மட்டுமா  உறிஞ்சினேன்.  என்  சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு.  இந்தா  அதற்காக  ப்ளீஸ்  இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா


11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''வெளியே  பனி,  குழந்தைக்கு ஆகாது.  இந்த  விசிறியை  எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து.  ஜன்னலை மூடு. எனக்கு  காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.''  காலத்திற்கேற்றவாறு என்னை  கருத்தில் கொண்டு  காத்த  என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த  சிறு பிண்டம், 11வதாக  எடுத்துக்கொள்.'


12.   புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


எத்தனை இரவுகள்,  எத்தனை மன வியாகூலம்.  குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று  வருந்தி,   நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி  மடியில் போட்டு  ஆட்டி, தட்டி,  என்னை வளர்த்தாயே,    கண்விழித்து உன் உடல்  . அதற்காகத்தான் இந்த  12வது பிண்டம் தருகிறேன்.


13.   யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான்  இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு .   ஆனால்  இதெல்லாம் அனுபவிக்காமல்  நீ  யமலோகம்  நடந்து சென்று  கொண்டிருக்கிறாயே.  என் கார்  அங்கு வராதே.  வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு  துன்பம் தராமல் இருக்க நான்  தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான்  அம்மா. 


14.    யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான் இப்போது, பெரிய  டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால்  நானே  எது.? ஏது?  ஆதார காரணமே, என் தாயே,  இந்த 14வது பிண்டம் தான்  அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால்  தர முடிந்தது. 


15.   ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


திருப்பி திருப்பி சொல்கிறேனே.  நான்  வளரத்தானே  நீ  உன்னை வருத்திக்கொண்டாய்.  நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான்  ''தன்னலமற்ற''   தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை  பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள்.  எனக்காக நீ கிடந்த  பட்டினி, பத்தியம்  எல்லாவற்றிற்கும் உனக்கு  நான் தரும் பிரதிஉபகாரம் இந்த  15வது பிண்டம்  ஒன்றே. 


16.    காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான்  சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான்  உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு  தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே.  தெய்வமே.  என்னை மன்னித்து ஆசிர்வதி.


 மஹா பூதாந்தரங்கஸ்தோ

மஹா மாயா மயஸ்ததா

ஸர்வ பூதாத்மகச்சைவ

தஸ்மை ஸர்வாத்மனே நமஹ


( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )

Monday, April 18, 2022

இதையும் தெரிந்து கொண்டு.....

 Hello. I am Arvind Nayak (Mumbai).

We had booked Kuwait Airways flight Mumbai-Milan-Mumbai from *MakeMyTrip* site in December 2019 for a Pharma conference. Our visit dates were from 11th October 2020 to 18th October 2020. But due to COVID, we had to cancel the tickets from the MakeMyTrip app in August 2020.

Kuwait Airways deducted a nominal amount and returned a large amount of our refund to MakeMyTrip in September 2020 itself. But, since then, we had to run from pillar to post between MakeMyTrip and Citibank since our Refund amount never got credited to the credit card account as promised. There was no response to numerous phone calls and mails sent to MakeMyTrip.


Then, on 09th July 2021, I discovered the CPGRAMS site. *CPGRAMS* means *Centralized Public Grievance Redress & Monitoring System*. From that I got Direct *PMO* - Prime Minister's Office site - https: //www.pmindia.gov.in/en/main/


From the site given above, in a few words, I wrote my Grievance to the PMO office, attached the relevant documents (there is such a facility on the site) and a miracle happened.

1. I immediately received a registration no. in my email with all details of my complaint.

2. I got the name, email ID and direct phone number of the officer to whom my complaint has been forwarded. It all happened in 1-2 days.

3. On 13th July I received an email from MakeMyTrip (on instructions of the Ministry of Tourism) asking for a few details.

4. Everyday, I could track the progress of my complaint myself by entering the registration number-complete Transparency!!


And then, another MIRACLE happened on *19th July 2021*. The refund amount was CREDITED to the bank account by NEFT from MakeMyTrip!!


Really COMMENDABLE!! No words to praise this fantastic initiative by the government- and it REALLY WORKS!!

It just shows the efforts of the government towards bringing full transparency in their working and their genuine concern for the citizens and their grievances! 


KUDOS to all concerned!!

*Putting up this post so that it can help genuinely aggrieved citizens!!*


*CPGRAMS* stands for *Centralized Public Grievance Redress & Monitoring System*

PMO site- https: //www.pmindia.gov.in/en/main/

*A Centralized* 

*Public Grievance* *Redress* *And Monitoring System* *(CPGRAMS)* 

has been established by the Government of India at https://www.pgportal.gov.in 


Can you imagine this is happening in INDIA ? 


The govt. wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like

1) Railways

2) Posts

3) Telecom

4) Urban Development

5) Petroleum & Natural Gas

6) Civil Aviation

7) Shipping , Road Transport & Highways

8) Tourism

9) Public Sector Banks 

10) Public Sector Insurance Companies

11) National Saving Scheme of Ministry of Finance

12) Employees' Provident Fund Organization

13) Regional Passport Authorities

14) Central Government Health Scheme

15) Central Board of Secondary Education

16) Kendriya Vidyalaya Sangathan

17) National Institute of Open Schooling

18) Navodaya Vidyalaya Samiti

19) Central Universities

20) ESI Hospitals and Dispensaries directly controlled by ESI Corporation under Ministry of Labour.


Many of us say that these things don't work in India . 

A few months back, the Faridabad Municipal Corporation laid new roads in an area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dug up the newly laid roads to install new cables which annoyed all the residents. A resident used the above listed grievance forum to highlight his concern. To his surprise, BSNL and Municipal Corporation of Faridabad were served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all. 


So use this grievance forum and let all the country men/women/youth who don't know about this facility. 

This way we can at least raise our concerns instead of just talking about the 'System' in India . 


Invite your friends to register their grievances at this portal and ensure that citizens are heard and get the responses that are their due 


PLEASE SPREAD THIS MESSAGE IF U WANT OUR INDIA TO HAVE A BETTER TOMORROW & FORWARD THIS MESSAGE TO AS MANY AS POSSIBLE.

Very Useful Site for Any Grievances 👍

Sunday, April 17, 2022

தமிழிலும்....

 கொரியாப்படம் போல மலையாளப்படம் போல நேர்த்தியாய் ஒரு படம் தமிழில் எப்போது வரும் என அங்கலாய்பவர்களே....அப்படி ஒரு படம் தமிழிலும் வந்தாச்சு....தவறாமல் பார்த்துவிடுங்கள்..


Saturday, April 16, 2022

அறிந்து கொண்டாடுவோம்...

 அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!


எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். 


திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.


மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.


எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.


மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று - அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.


அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?


சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. 


சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.


சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. 


முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். 


மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். 


அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.


கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். 


அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.


நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். 


இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.

சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.


வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.


ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது.


 ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். 


ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.


தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், 


ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.


எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். 


பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.


காவல் ஜமீன்!


அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு. இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர். 


அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


கோவிந்தோ....


நன்றி :சாமிநாத பாரதி

Wednesday, April 13, 2022

A good posting worth reading for seniors

 A lady (85) is thinking of leaving Mumbai and shifting to a senior citizens colony near Pune. Her husband passed away many years ago. 

She educated and married her three daughters who are now US citizens. They have two kids each of who is now in High School/College. The lady travelled to the US on her many times. She lived there for six months or more on six occasions when her daughters delivered babies.

The other day she became emotional and disclosed her plan to settle for assisted living in an old age home here and that she had no intention to go back to the US for some reason. One feels very sorry for her life in sunset years.


Please read the article below. The lady was feeling the same way as the author of the article. 


'Relocating to Nursing Home (in Western Countries, Retirement Homes are called Nursing Homes):*


This is an article on the internet that has caused many to reflect on their own lives. The author is a retired writer, and she expressed emotion when she was about to go to a nursing home.


I'm going to a nursing home. 

I have to. 

When life gets to where you are no longer able to take care of yourself completely, your children are busy at work and have to take care of their children and have no time to take care of you, this seems to be the only way out.


The nursing home is in good condition, with clean single rooms equipped with simple and practical electrical appliances. All kinds of entertainment facilities are complete, the food is fairly delicious, the service is also very good. The environment is also very beautiful, but the price is not cheap.


My pension is poorly able to support this. But I have my own house. If I sell it, then the money is not a problem. I can spend it on retirement, and the rest will be left as an inheritance for my son. 


The son understands very well: "your money and your property should be enjoyed by you, don't worry about us." 

Now I have to consider preparing to go to a nursing home.


As the saying goes: Breaking a family is worth tens of thousands, which refers to many things. Boxes, bags, cabinets, and drawers are filled with all kinds of daily necessities: clothing for all weathers and beddings for all seasons.


I like to collect. I have collected a lot of stamps. I have also hundreds of purple clay teapots. There are many small collections, and such small items as pendants of emerald and walnut amber, and two small yellow croakers. 

I am especially fond of books. The bookshelves on the wall are full.


There are also dozens of bottles of good foreign wine. There are full sets of household appliances; various cooking utensils, pots and pans, rice, oil, salt, noodles, flour, spices, various seasonings the kitchen is also full. There are also dozens and dozens of photo albums..., looking at the house full of things, I'm worried!


The nursing home has only one room with a cabinet, a table, a bed, a sofa, a refrigerator, a washing machine, a TV, an induction cooker and a microwave oven -- all the things I will need. 

There is no place to store the wealth that I have accumulated throughout my life.


At this moment, I suddenly feel that my so-called wealth is superfluous, and it doesn't belong to me. I just take a look at it, play with it, use it. It belongs to this world. The wealth that comes in turns is just passing by. 

Whose palace is the Forbidden City? The Emperor thought it belonged to him, but today it belongs to the people and society.


You look at these, you play with these, you use these but you can't take them with you in death.


I want to donate the things in my house, but I can’t get it done. To deal with it has now become a problem. Very few children and grandchildren can appreciate what I have collected. I can imagine what it will be like when my children and grandchildren face these painstakingly accumulated treasures of mine: all the clothes and bedding will be thrown away; dozens of precious photos will be destroyed; books will be sold as scrap. Collections? If you are not interested, you will dispose of them. The mahogany furniture is not practical and will be sold at a low price.


Just like the end of the Red Mansion: only a piece of white left, so clean.


Facing with the mountain of clothes, I only picked a few favourites; I only kept a set of pots and pans for kitchen supplies, a few books that are worth reading; a handful of teapots for tea. 

Bring along my ID card, senior citizen certificate, health insurance card, household register, and of course a bank card. Enough!


It's all my belongings!  I'm gone. I bid farewell to my neighbours, I knelt at the door and bowed three times and gave this home back to the world.


Yes! In life, you can only sleep in one bed, live in one room. Any more of it is merely for watching and playing!


Having lived a lifetime, people finally understand: we don’t need much. Don’t be shackled by superfluous things to be happy!


It's ridiculous to compete for fame and fortune. Life is no more than a bed.


*For people over 60 years old, shouldn’t we think carefully about how to take the last journey in life? *

*Let go of fantasies and baggage, and of those things that can't be eaten, worn, used.*


*Be healthy and be happy*


A GOOD POST WORTH READING..

புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

 தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும் தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே

வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்  
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே (அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.)

அரிச்சுவடி..

 இந்த 26 வார்த்தைகள்! 

எவ்வளவு அழகு


*A - Appreciation*

மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.


*B - Behaviour*

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.


*C - Compromise*

அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.


*D - Depression*

மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.


*E - Ego*

மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.


*F - Forgive*

கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.


*G - Genuineness*

எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.


*H - Honesty*

தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.


*I - Inferiority Complex*

எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.


*J - Jealousy*

பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.


*K - Kindness*

இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.


*L - Loose Talk*

சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.


*M - Misunderstanding*

மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.


*N - Neutral*

எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.


*O - Over Expectation*

அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.


*P - Patience*

சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.


*Q - Quietness*

தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.


*R - Roughness*

பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.


*S - Stubbornness*

சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.


*T - Twisting*

இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.


*U - Underestimate*

மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.


*V - Voluntary*

அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.


*W - Wound*

எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.


*X - Xerox*

நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.


*Y - Yield*

முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.


*Z - Zero*

இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்🌹💐🌷

படித்ததில் பிடித்தது🌹💐🌷🙏

Thursday, April 7, 2022

இருப்பது போலவே இருப்போம்..சும்மா படித்து மட்டும் வைப்போம்..

 An American visited India and went back to America

Where he met his Indian friend who asked him

How did u find my Country

The American said it is a great country

With solid ancient history

And immensely rich with natural resources.


The Indian friend then asked.

How did u find Indians??


Indians??

Which Indians??

I didn't find or meet  a single Indian there in India.


What nonsense??

Who else could u meet in India then??

The American said..


In Kashmir, I met a Kashmiri...

In Punjab a Punjabi,

In Bihar a bihari,

In Karnataka Kannadiga,

in Maharashtra Marathi,

in Rajasthan Marwadi,

in Bengal Bengali,

in TamilNadu Tamilian,

in Kerala Malayali, 

in Telangana Telugu,


Then i met

A Hindu,

A Muslim,

A Sikh

A Christian,

A Jain,

A Buddhist,

......

But nøt a single Indian did I meet ....

EXCEPT

The Indian Army,

The Indian Air Force & 

The Indian Navy.......

...The only identifiable entity. 


Think höw serious this joke is..😒

The day would not be far when indeed we would

Become a collection of polarized states!


The Indian Army/Navy/Air Force are the ONLY adhesive holding the geographic entity of India together both in war & peace (collapse of civil adminstration in maintaining law & order/ natural calamities), and despite being slighted & short changed since independence. But for them, India as we know it would have ceased to exist long ago.


Fight back -

Always say I am Indian

...Be a true Indian.


A HUMBLE REQUEST👏

Forward to as many INDIANS as possible including NRIs. 


We need to chänge öur thinking not just öur pröfile picture. Only then  our Nation  will  change.

Wednesday, April 6, 2022

பணியில் இருக்கும் ஊழியர்களுக்காக.

 ஒரு நாட்டில் ஒரு வினோத பழக்கமிருந்ததாம்.


பரம்பரையாக அந்த நாட்டை ஒரு குடும்பத்தையே

ஆளவிடாது ஒவ்வொரு வருடமும் புதிதாக

ஒரு மன்னரைத் தேர்ந்தெடுப்பார்களாம்.


அவர் ஆட்சிக்காலம் ஒரு வருடம் முடிந்ததும்

அருகில் இருந்த  கொடிய மிருகங்கள் மட்டுமே 

இருக்கிற  ஒரு தனிச் சிறு தீவில்

நாடே கூடி இறக்கிவிட்டுவிடுவார்களாம்


ஒரு வருடத்தில் தின்று தின்று கொழுத்த

உடம்பை எதிர்பார்த்து கொட்டு மேளத்துடன்

மன்னரை அழைத்து வருவதைக் கண்டதுமே

மிருகங்கள் அதிக ஆர்வமாய் நாவில் எச்சில் ஊற

முகப்புக்கே வந்து விடுமாம்...


அதைக் கண்டு எவ்வளவு தைரியம் கொண்ட

மன்னராகினும் அழுதுபுலம்பி தப்பித்து

ஓடவே முயல்வார்களாம்..அதைக் கண்டு

இரசிக்கவே எப்போதும் ஒரு பெரும் கூட்டம்

அந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாம்...


அதைப் போலவே இந்த வருடமும் புதிய

மன்னரின் வருடம் முடிந்து இறக்கி விட

மக்கள் முயல்கையில் ஆரம்பம் முதல்

அந்த மன்னரிடம் எவ்வித பதட்டமும்

இல்லாததுடன் மிகுந்த உற்சாகத்துடன் கிளம்ப

எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியமாக

இருந்ததாம்..


அதே ஆச்சரியத்துடன் தீவின் அருகில் செல்ல

கொடிய மிருகங்கள் ஏதும் எதிர்பார்த்து 

இல்லாமல் இருந்ததும் ஆச்சரியத்தின்

உச்சிக்கே சென்று விட்டார்களாம்.


அதை விட ஆச்சரியமாய் அவரை

வரவேற்க அழகிய இளம் பெண்கள்

மலர்மாலையுடன் காத்திருக்க மன்னரின்

புலம்பலை எதிர்பார்த்து வந்த வந்த

எல்லோரின் முகத்திலும் அசடு டன்

கணக்கில் வழிந்ததும் மன்னர் 

புன்னகைத்தபடி இப்படிப் பேசினாராம்


"இதுவரை எல்லா மன்னர்களும்

வசதிகளை அனுபவித்தபடி வருடம் முடிந்ததும்

நடக்க இருக்கிற கொடுமையைப் பற்றி

யோசித்தார்களே ஒழிய அது குறித்து

என்ன செய்யலாம் என யோசிக்கவில்லை

நான் வசதிகளையும் அனுபவித்தேன்

அதே சமயம் வருடம் முடிந்ததும் அதே

வசதியுடன் வாழ முன்னதாகவே இரகசியமாய்

தீவுக்கு வீர்ர்களை அனுப்பி மிருங்களை

கூண்டில் அடைத்து காடுகளைத் திருத்தி

கழனிகளாக்கி ஒரு சிறு சாம்ராஜ்ஜியத்தையே

உருவாக்கிவிட்டேன் " என்றாராம்.


அதைப் போலவே பணியில் இருக்கும்

பணியாளர்களே (குறிப்பாக \

அதிகாரத்தையும் சுகத்தையும் அனுபவிக்கிற

அரசுப் பணியாளர்களே)நீங்கள் ஓய்வு பெற்று

ஜீப்பில் இறக்கி விட வருகையில் வெறுமையை

உணராமல் உங்களுக்கென ஒரு குட்டி 

அமைப்பு உங்களுக்கு உதவ 

உறுதுணையாய் இருக்கும்படியாய் ஏற்பாடு

செய்து கொள்ளுங்கள்.ஓய்வு பெற்றோர்

சங்கங்கள் ஏதுமிருப்பின் அந்த புத்திசாலி

மன்னரைப் போல தங்கள் பங்களிப்புடன்

அதனை சிறப்பாக்கி மகிழுங்கள்


(ஓய்வு  அமைப்பின் பொறுப்பாளர்களுக்கும்

ஒரு வார்த்தை..


ஆட்டம் தொடர்கிற வரையில்தான் செஸ் விளையாட்டில்

ஒவ்வொரு காயினுக்கும் ஒரு மதிப்புண்டு

பின் ஆட்டம் முடிந்துவிட்டால் பானும் ஒன்றுதான்

மந்திரியும் ராணியும் ஒன்றுதான்

அதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள் )

Monday, April 4, 2022

நம் தமிழக அரசியல் வியாபாரிகள் தவிர

 🔥🍀முன்பெல்லாம் உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு இடையே  பிரச்சினை என்றால் அந்த நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவை நோக்கி பயணம் மேற்கொள்வார்கள் ..

உலகின் மிகப் பெரிய ஆளுமை நான் ஒருவனே என்று #அமெரிக்காவும் அந்த நாடுகளுக்கு மத்தியஸ்தம் செய்து வைக்கும்.


ஆனால் இன்று உலக நாடுகளின்  (வல்லரசு  கூட ) தலைவர்களோ அல்லது அவர்கள் சார்பாகவோ இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவை நோக்கி வரிசையாக  படையெடுத்து வருகிறார்கள்.....


✈️சண்டை நடப்பதோ ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே ஆனால் இந்த சண்டையில் எந்தவித சம்பந்தமும் இல்லாத இந்தியாவை உலகநாடுகள் ஏன் எதற்காக  தொடர்பு கொள்கின்றன......


🐠பேரண்டத்தில் உள்ள ஒன்பது கோள்களும் சுற்றி வருகின்றன .......சுருக்கமாக சொல்வதென்றால் உலகம் சுற்றுகிறது என்பார்கள் .........


ஆனால் இன்று உலகமே இந்தியாவை நோக்கி இந்து மகா சமுத்திரத்தை  சுற்றி வருகின்றன .........


⚡ஆம் இன்று உலகில் வீசிக்கொண்டிருக்கும் மாபெரும் புயலில் அதன் மையப் புள்ளியாக இந்தியாவை மையம் கொண்டிருக்கிறது .......


உலகின் வல்லரசு என மார்தட்டிக் கொண்ட  நாடுகள் இந்தியாவிடம் அரசியல் பேசிக் கொண்டிருக்கின்றன.........


தங்களின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இந்தியாவின் உதவியையும் ஆதரவையும் கேட்டு வருகின்றன .........


🍓வளர்ந்த நாடுகள் இப்படி என்றால் .............


இந்தியாவை எதிரியாக பாவித்த நாடுகள் கொரனாவின் கோரப்பசிக்கு  தங்களைப் பழி கொடுத்த  அண்டை நாடுகள் மாபெரும் பொருளாதார சூழலில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றன ......


பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இலங்கை மியான்மர் வங்காள தேசம் மாலத்தீவு என வரிசையாக இந்தியாவிடம் உதவி கோரி நிற்கின்றன .....


ஒருபக்கம் வளர்ந்த நாடுகள் அரசியல் உதவி கோரி வருகின்றன .......


மறுபக்கம் இந்தியாவை சுற்றியுள்ள சிறிய நாடுகள் இந்தியாவிடம் பொருளாதார உதவி கோரி வருகின்றன .......


இந்தியா எந்த நாட்டையும் பகைத்துக் கொள்ளவில்லை .....


யாரையும் எதிரியாகவும் எண்ணவில்லை .....


உதவி கோரி வந்த அனைவருக்கும் இந்தியா உதவி செய்து கொண்டுதான் வருகின்றது .........


இந்தியாவின் இந்த ராஜதந்திர வெற்றிக்கு இந்தியாவின் இந்த மாபெரும் அரசியல் சாணக்கிய தந்திரத்திற்கு  யார் காரணம் .


நீர் நிலம் நெருப்பு ஆகாயம்  காற்று என பஞ்சபூதங்களையும் இந்தியா இன்று அடக்கியாண்டு கொண்டிருக்கின்றது........


🚀ஆயிரம் ஆண்டுகள் அடிமை கொண்ட தேசம் இன்று உலகையே அடக்கி ஆண்டு கொண்டு இருக்கிறது ......... 


💎பாகிஸ்தான் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் #இம்ரான் தோற்றாலும் அதற்கு மோடி தான் காரணம் என்கிறார்கள் .....


🍀அரசியல் தலைவர்களின் மோசமான பொருளாதார கொள்கையினால் #இலங்கையில் கலவரம் நடந்தாலும் (இலங்கை அதிபர் மாளிகை பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது)  அதற்கு மோடி தான் காரணம் என்கிறார்கள் .....


#ஆப்கானிஸ்தானில் 3 வேளை வயிறார சப்பாத்தி சாப்பிடுவதற்கும் மோடிதான் காரணம் என்கிறார்கள் .........


🌊ரஷ்யா உக்ரேன் மீது கடுமையான தாக்குதலை கொடுக்காமல் இருப்பதற்கும் இந்தியா தான் காரணம் என்கிறார்கள் ............


💔என்ன சொல்ல என்னத்த சொல்ல நிம்மதி இல்லை மனிதனுக்கு நிம்மதி இல்லை என்று #பைடன் பாடுவதற்கும் மோடி தான் காரணம் என்கிறார்கள் ........


🍓ஒன்றிய அரசு என்று கூறி மத்திய அரசாக மாறியதற்கும் மோடி தான் காரணம் என்கிறார்கள் .......


#அண்ணாமலை அசால்டாக அரசியல் பேசுவதற்கும் மோடி தான் காரணம் என்கிறார்கள் ....


உலகம் முழுவதும் மாபெரும் வலை படர்ந்து வருகின்றது ...........


அதில் மோடி எனும் உருவம் மெலிதாக  பரந்து விரிந்து வருகின்றது...... 


உலகின் எட்டுத் திசைகளும் இவரின் புகழை பேசத் தொடங்கி விட்டன ..............


உலகின் வரலாறு  புதிதாக எழுதப்பட்டு கொண்டிருக்கிறது .............


அதனை ஒருவர் அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறார் ..........


அவர் பேச மாட்டார் ஆனால் உலகமே அவரை பற்றி  பேசிக்கொண்டிருக்கிறது....... 


இந்தியாவின் பொருளாதார வெற்றிக்கும் அரசியல் சாணக்கியத்தனதிற்க்கும் பிரதமர் #மோடியுடன் இணைந்து  மாபெரும் பங்காற்றி வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் மற்றும் உள்துறை அமைச்சர் இவர்களின் தன்னலமற்ற சேவை அளவிட முடியாதது .... 


🔥ஒரு பத்திரிக்கையாளர்  குறிப்பாக மோடி எதிர்ப்பாளர் கடந்த வாரத்தில் அவரே சொல்லியிருக்கிறார் .......


அதாவது இதுவரை இவ்வளவு பெரிய ஆளுமைமிக்க பிரதமரை இந்தியா கண்டதில்லை ...........


தன் கொண்ட எந்த விஷயத்திலும் பின் வாங்காதவர்......


தன்னுடைய அதிகாரத்ததின் எல்லை எது என்பதை தெரிந்து அதனை நுனிவரை சுவைக்கக் கூடியவர்........


அதாவது அவரைப் பற்றி குறைவாக அனைவரும் மதிப்பீட்டு வந்துள்ளார்கள் என்று சொல்லியுள்ளார் ....


தேசத்தின் மீது முழுமையான பற்றுக்கொண்ட ஒருவனால் மட்டுமே தன் தேசத்திற்காக எந்த எல்லைக்கும் சென்று  இறுதிவரை களத்தில் நின்று போராட முடியும் ...........


💐உங்களின் சேவைக்கு இந்த தேசம் தலைவணங்கி  நிற்கின்றது ...........


🚩நாங்கள் சுவாமி விவேகானந்தரை கண்டதில்லை ..........


🚩நாங்கள் சத்ரபதி சிவாஜியை கண்டதில்லை ........


🚩நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை கண்டதில்லை..........


🚩சாவர்க்கரை கண்டதில்லை .......


ஆனால் இன்று காண்கிறோம் ..............


இவர்களின் மொத்த உருவமாக உங்களை ........... 


வரலாற்றில் பண்டைய ராஜேந்திரன் சோழ மன்னரை கடாரம் கொண்டான் என்று சொல்கிறார்கள் ...........


நிகழ்காலத்தில் உங்களை #காஷ்மீர் கொண்டான் #கச்சத்தீவு கொண்டான் என்று உலகம் சொல்லட்டும் ..............


உலகம் சொல்லட்டும் ........


நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகள் அனைத்தையும் பார்க்கும் பொழுது..... 


நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ...........என்ற பாடல்தான் நினைவுக்கு வருகின்றது .......


வந்தே மாதரம் 


ஜெய்ஹிந்த் 

Jai hind🙏🏼

அறியாதன அறிவோம்(விமானப் பயணம்.)..


 

Friday, April 1, 2022

யுகாதி...

 *நாளை* மிக விஷேட *யுகாதி பண்டிகை தெலுங்கு வருடப்பிறப்பு*   02.04.2022

இதன் *சிறப்பு பதிவுகள்* படித்து *தெரிந்து கொள்வோம்* 🙏🙏


( *Advance ugadhi* *wishes* 💐💐)


யுகாதிலு பண்டிகைலு 02.04.2022ஆந்திரா, கர்நாடகம், மற்றும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகை யுகாதி என்றழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு. 

உகாதி (Ugadi) அல்லது யுகாதி (தெலுங்கு: ఉగాది, கன்னடம்: ಯುಗಾದಿ) என்பது தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு தினத்தை கொண்டாடும் பண்டிகை ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா(गुढीपाडवा) எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவாறாகக் கொண்டாடுகின்றனர். உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின் படி மார்ச்சு அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்து சூரியசந்திர நாட்காட்டியின் படி, உகாதி சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாளாக கருதப்படுகிறது.


 யுகாதி என்றால் யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று பொருள். யுகத்தின் தொடக்கம் மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் இவ்வாறு அழைக்கப்படுது.   சைத்ர (சித்திரை)  மாதத்தின் முதல் நாளில் பிரம்மா இந்த  உலகத்தை படைத்ததாக பிரம்மபுராணத்தில் கூறப்படுது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிக்கின்றது.


 சம்ஹத்தர கௌரி விரதம் என்ற விசேஷ விரதம் அனுஷ்டிக்கப்படுது. நாம் எல்லோரும் வேத வராகக் கர்ப்பத்தில் இருக்கிறோம். அந்தக் கர்ப்பம் தொடங்கிய நாளும் தேவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. சூரியன் பன்னிரெண்டு ராசிகளில் நிற்பதைக் குறிக்கும் வகையில் சௌரமான மாதங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அதேப்போல் சந்திரன் நிற்கின்ற ஒரு மாதத்தின் நட்சத்திரத்தை வைத்து சாந்திரமான மாதங்கள் என்று தெலுங்கு சம்பிரதாயத்தில் குறிப்பிடப்படுகிறது.


யுகாதியின் சிறப்பு


ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.


பொதுவாய் யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில்  கொண்டாடப்படும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.


யுகாதி நாளன்று மாலையில், ஒரு பொது இடத்தில் மக்கள் கூடி இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், புராணங்கள் படிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். புதிய முயற்சிகளுக்கு வித்திடும் நாளாக இந்த நாள் அமைவதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே, இந்த நாளில் மங்களமான காரியங்களைத் தொடங்குகிறார்கள். 


யுகாதிப் பண்டிகையை யொட்டி திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள எல்லா ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் இந்த நாளில் நடைபெறும். புத்தாண்டாக மட்டுமன்றி இளவேனிற்காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் இந்த யுகாதி தினம் மராட்டிய, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது.


இனி பண்டிகை கொண்டாடும் முறை;


இப்பண்டிகைக்கும் , நமது தமிழ் வருடப்பிறப்பு கொண்டாட்டத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை.   காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி (சத் - ஏழு) பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.


விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். பின், ஏழை எளியோருக்கு நிவேத்திய பொருட்களை கொடுப்பது வழக்கம்.


பஞ்சாங்கம் படித்தல்; 


உகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது. திருமலையில் இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று உற்சவ மூர்த்திகளை தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து ஆஸ்தானம், பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.


யுகாதி பண்டிகையை வரவேற்று ஒரு துதி கூறிய பிறகு அந்தந்த மாதத்தின் பலனைக் குடும்பத் தலைவர் படிப்பார். இந்த ஆண்டின் இயற்கை வளம், மழைப் பொழிவு, அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் நன்மை, ஆட்சியாளர்களின் நிலை, நட்சத்திரங்களின் அடிப்படையில் முற்பாதி, நடுப்பகுதி, பின்காலப் பலன்கள், ஆண்டின் கந்தாய பலன்கள், நவக்கிரகங்கள் எந்தெந்த பொறுப்பில் இந்த ஆண்டு முதல் மந்திரிகளாகவும் அரசர்களாகவும் வருகிறார்கள் ஆகிய விவரங்களைப் பஞ்சாங்கப் படனத்தின் மூலம் அறியலாம்.


அவர்களால் இயற்கையிலும் மனித வாழ்க்கையிலும் ஏற்படும் மாறுதல்கள், குரு, சனி, ராகு, கேது கிரச்சார முறையில் இடம் மாறுதல்களால் பூமியிலும் மக்கள் மத்தியிலும் எவ்விதமான மாற்றங்கள், எந்தக் காலங்களில் நிகழும் என்ற குறிப்புகளைப் படித்தறிவது வழக்கம்.


யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலனகளையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான  அறிவிப்பாய் திகழ்கிறது.

மகாகவி காளிதாசரின் உத்தரகாலாமிருதம்

 என்னும் ஜோதிட நூலில் முப்பத்தியெட்டாம் பாடல் கீழ்வரும் வரிகள் மூலம் யுகாதிப் பண்டிகையைக் குறிப்பிட்டுள்ளது.


வருஷாதி பிரதிபந்தவேத சஹிதா க்ராஹ்யா ரக்ஷ்னாம் பதே:


மத்யாஹ்னே நவமி பிதௌ பகவதோ ஜென்மா பவத்சா திதி:


உகாதி சுலோகம்


உகாதி பண்டிகையான இன்று கீழ்கண்ட சுலோகம் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சிடியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இதனால் வைரம் போன்ற உடலும், அனைத்து ஸம்பத்தும் கிட்டும்


சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச |

சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம் ||.


விடியற்காலை குளியல்


பண்டிகையின் போது அனைவரும் விடியற்காலையில் குளித்து விடுவார்கள். அதன் பின் வீட்டின் முகப்பை மாவிலைகளால் அலங்கரிப்பார்கள். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் புதல்வர்களுக்கான விநாயகருக்கும் முருகனுக்கும் மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்று நம்பப்படுகிறது. அதனால் மாவிலைகளை கட்டினால், நல்ல தானியங்களை அளித்து குடும்ப நலனை அவர்கள் காப்பார்கள் என்று நம்பப்படுகிறது.


யுகாதித் திருநாள் புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டாடப்படுகிறது.


"யுகாதி'என்றால் "புதிய பிறப்பு'.


புதிதாக பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும், ஒற்றுமை உணர்வை தூண்டுவதாகவும் அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் சிறப்புப்பெறுகிறது.சந்திரனின் சஞ்சாரப்படி சித்திரை முதல்நாள் தான் யுகாதி 


கொண்டாடப்பட்டது.பிற்காலத்தில் சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் புத்தாண்டு பிறப்பு கணிக்கப்பட்ட போது, யுகாதி கொண்டாட்ட நாளில் மாற்றம் ஏற்பட்டது.யுகாதி நாளில் லட்சுமி குபேரருக்கு செல்வ அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நம்ம ஊர் மாவிளக்கு போல ஆந்திரத்தில் பிரபலமான இனிப்பான சலுவுடி என்னும் மாவுப்பண்டம் . தெலுங்கு வருடப்பிறப்பிற்கு வீட்டுக்கு வீடு அவசியம் செய்வார்கள் .


அதிரசம் யுகாதி அன்று செய்யடும் சிறப்பான இனிப்பு.

தெலுங்கு தேவதை ஒரு கையில் அமிர்த கலசம் மறுகையில் விவசாயிகளின் உயிர் “நெற்பயிர்” கொண்டு யுகாதி  யுகத்தின் தொடக்கம் (யுகம் + ஆதி = யுகாதி) என்று பொருள்.ஒரு சில இடங்களில், சந்திர நாட்காட்டியின் வழியே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது.சூரிய நாட்காட்டியின் வழியே, தமிழ் நாட்டில் தமிழ் புத்தாண்டாகவும், அசாமில் பிஹுவாகவும், பஞ்சாபில் வைசாஹியாகவும், ஒரிஸாவில் பாண சங்கராந்தியாகவும், மேற்கு வங்கத்தில் நாப பார்ஷாவாகவும் கொண்டாடப்படுகிறது.

மக்கள் தத்தம் வீடு வாசல்களை தூய்மையாக்கி, வெள்ளையிட்டு, புத்துணர்வு பெற என்னை குளியல், உற்சாகத்துக்கு புது துணிமணிகள் அணிந்து மிகவும் மகிழ்ச்சியாக புது வருடத்தை வரவேற்று பிரார்த்தனை செய்வர்.


எப்படிக் கொண்டாடுவது?


விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.


ரங்கோலி


சுற்றுச்சூழலை தூய்மையாக்க, நற்பதமான மாட்டின் சாணம் கலந்த நீரை கொண்டு வாசல் தெளிப்பார்கள். அதன் பின் ஒவ்வொரு வீட்டிலும் அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்படும்.


பஞ்சாக சரவணம்


வீட்டினுள் உள்ள அனைவரின் வருங்காலத்தை கணிக்க, புகழ் பெற்ற இந்த மரபு பின்பற்றப்படுகிறது. ஒரு ஜோதிடரை உகாதி தினத்தன்று வீட்டிற்கு வர வைத்து, அந்த வருடத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படி இருக்கிறது என்பது கணிக்கப்படும்.


கவி சம்மேளம்


உகாதி தினத்தன்று இலக்கியம் சார்ந்த கூட்டங்களும் நடைபெறும். இதில் கவிதைகள் படித்து, இலக்கியம் சார்ந்த விவாதங்களும் நடைபெறும். மேலும் வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு, பல விதமான சுவைமிக்க சைவ உணவுகளை சமைத்து போடுவதும் ஒரு வழக்கமாகும்.


யுகாதி பச்சடி;


யுகாதியன்று, எல்லார் வீடுகளிலும் யுகாதி பச்சடி செய்யப்படும்.  வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய பொருட்களால் ஆன பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறிவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், பேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது.


பிற உணவு வகைகள்


ஒப்பட்டு(ಒಬ್ಬಟ್ಟು) அல்லது பூரண போளி/பூரண போளி -ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, கருநாடகம், மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களில் உகாதி அன்று செய்யப்படும்.


கருநாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா வில் உகாதி அன்று செய்யப்படும் சிறப்பு உணவு வகை பூரண போளி ஆகும். இது மைதா மாவு, வெல்லம் மற்றும் தேங்காய் பயன்படுத்தி செய்யப்படும் சுவையான சிற்றுண்டி ஆகும். மக்கள் இதனுடன் நெய், பால் கலந்து உண்ணும் பழக்கம் உள்ளது. 


தமிழ் நாட்டில் உகாதி


தமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு மொழி பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர். 


யுகாதித் தினத்தில் , நல்ல காரியங்கள் துவங்கினால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்றும் நம்பப்பட்டு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


 அனைவருக்கும், “யுகாதி சுபக்காஞ்சலு”