Friday, December 31, 2021

சுகவாழ்வு கொள்வோம்..

 சக்தி இருந்தும்

சமாதானமாய்

வசதி இருந்தும்
எளிமையாய்

அதிகாரமிருந்தும்
பணிவாய்

அறிவிருந்தும்
அடக்கமாய்

நியாயமிருந்தும்
பொறுமையாய்

பாண்டித்தியமிருந்தும்
மிக இயல்பாய்

மொத்தத்தில் ....

சந்தோஷத்தில்
துள்ளாது

சஞ்சலத்தில்
துவளாது

இருப்பவன்
அகராதியில்

என்றும்

வெற்றியன்றி
தோல்வியில்லை

சுகமன்றி
சங்கடங்களில்லை

இயற்கையின்
என்றும் மாறா

நியதி  இதனை

மனதில் தெளிவாய்
மறையாய்க் கொள்வோம்

இன்றைய புத்தாண்டு நாள் முதல்

இனி வாழ் நாளெல்லாம்
சுகவாழ்வு கொள்வோம்

Thursday, December 30, 2021

வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்

 தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே

வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்  
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே (அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.)

Wednesday, December 29, 2021

சிகரமடைந்து மகிழ்வோம்..

 மனவெளிச் சாலைகளில்

கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பதும் எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகளை நொறுக்கி
சிகரம் தொட்டு  மகிழ்வோம்

Tuesday, December 28, 2021

சிரிப்பின் சுகமறிவோம்..

 சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்

மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

(பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்  இனிய
புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்  )

Monday, December 27, 2021

காணும் காட்சி யாவும்.....

 வானக் கடலில் பறவை ஒன்று

சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள்
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே

விளக்கம் வேண்டுமா என்ன.?


 

Sunday, December 26, 2021

இனி என்றும் வெற்றியே.

 சின்னச் சின்ன அடிகள் வைத்து

சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
துணிந்து  ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவா  லானது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

Saturday, December 25, 2021

மென்மேலும் உயர்வோம்..

 செய்யக் கூடாதை செய்து

பாழ்படுத்தியவர்களை விட
செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
 தெளிவாய்ப் இப்புத்தாண்டில் இதை நாம்  உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம் 

Friday, December 24, 2021

வாழ்த்துவோம்..வளம் பெறுவோம்..

 எதிர்படும் எல்லோருக்கும்

வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

Thursday, December 23, 2021

காலத்தை வென்றவரை..காவியமானவரை


 ஒரறிவு  உயிரினங்கள் முதல்

ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி  பெருமிதம் கொள்வோம்

Wednesday, December 22, 2021

இனிய பயணமே வாழ்க்கை..

 சங்கடங்களைச் சந்திக்க

 சங்கடப்படுவோன்....

சுகச் சூழல் விடச்
சஞ்சலப்படுவோன்....

சராசரித்தனம் தாண்டச்
 சாத்தியமே இல்லை

நினைவு அலையின்   மடியிலேயே
முழுமனம் பதித்தவன்...

அடி ஆழம் செல்ல
அச்சப்படுபவன்....

சாதனை முத்தெடுக்கச்
சத்தியமாய் வாய்ப்பே இல்லை

சூழல் மறந்த
நேர்ச்சிந்தனையும்

இழப்புகளைத் தாங்கும்
 மனவலிமையும்

கொண்டவனே
 சிகரத்திற்குப் பாத்தியப்பட்டவன் 

ஒவ்வொரு நாளையும்
புதிய நாளாகவே  கொள்வதும்

ஒவ்வொரு செயலையும்
புதிதெனச்  செய்தலுமே

தொடர்ந்து வெல்வதற்கான
கம்ப  சூத்திரம்

இழந்தவைகளையும்
கடந்தவைகளையும்
கனவெனவே  கொள்வோம் வா

நடப்பதையும்
நடக்க இருப்பதையும்
நினைவினில் கொள்வோம் வா

வெற்றியும் சாதனையும்
நாம் அடையும் இலக்கல்ல
கடக்க  ஒரு குறியீடு  அவ்வளவே

தொடர்ந்து  குறியீடுகள் கடப்பதில்
கவனம் கொள்வோம்  வா வா

 இனிய பயணமே வாழ்க்கை
இரசித்துப்  பயணிப்போம் வா வா


Tuesday, December 21, 2021

தனுஷ்கோடி..

 



வரலாற்றில் இன்று


பெரும் புயலால் தனுஷ்கோடி 

அழிந்த நாள்

டிசம்பர் 22, 1964.


    தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது.

   கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்க

வில்லை.

   வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

   அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது.

   புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை.

    புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.

    1964 டிசம்பர் 22 இரவு

ட்ரைன் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசஞ்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது.

    ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது.

   இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார்.

    தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அனைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன.

   ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை.

   டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 'பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும்' என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை.

    எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே, ரயில் வருவதை தெரிவிக்க.... தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார்.

   அந்த நிமிடம், அந்த நொடி,ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது.

    இரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும்(115) ஜலசமாதி ஆயினர்.

    ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது.

    ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசஞ்ஜெர் ரயில் நிலையத்தை அடைந்திருக்கும். அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும்.

   தனுஷ்கோடிக்கு முன்பே, புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள், தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது.

    தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின,

    ''இன்னது நடக்கிறது...'' என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லாமல் போனது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன.

    நடுநிசியில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும் ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர்.

    இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுத்த இந்த 'அபாய அறிவிப்பை' உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள்.

   அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள்.

    இதில், 'நீச்சல் காளி' என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்.

   அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும்.

    இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.

  ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது என்றால் மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது .

  பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இறுக மூடிக் கொண்டது.

    ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது.

   தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது.

   எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்ப்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது.

    இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. 

    அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை.

    அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது. படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே.

   மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

    புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன.

    ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடர்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது.

   குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி.

   விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம்

இந்திய அரசின் உதவியை நாடினார்.

   நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்க்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது.

   தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை ''தேசியப் பேரிழப்பு'' என்று அறிவித்தது.

   இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. 

    முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன.

    இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது.

   அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.

 ''காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம்'' என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

    எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது.

    உயிர் பிழைத்த மக்கள் அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

   மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு தெரிய வந்தது, 'ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை' என்று.

  மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர்.

    இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

   அதில் பயணித்த 115 பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர்.

    பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் 'ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது' என்று குறிப்பிடுகிறார்.

   தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது.

    இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது.

    தனுஷ்கோடியில் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னாரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது.

   விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து.

   ''ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக'' ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது.

    மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை ''மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்'' என்று அறிவித்தது.

    தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.

சிம்மாசனத்தில் பிச்சைக்காரனாய்..

 மக்கள் மனமறிய

ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?

இலட்சத்தில் ஒருவர்தான் யோசிக்கிறாரோ..

 *அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்படும் தொழில் வரி (Professional Tax)*

MLA,MP,மாநில மத்திய அமைச்சர்கள் தொழில் வரி கட்டுகின்றனரா?,,,,,,,,,,,,,,,,,,,,*

அரியலூர் மாவட்டம்,

செந்துறை ஒன்றியம், 

மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்  திரு. செல்வமணி. இவர் அக்கிராமத்தின் நாட்டார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நக்கம்பாடி பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் இளைஞர்.


அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்படும் தொழில் வரி எவ்வளவு என்பதற்கான அரசானையினை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன் கீழ் தலைமைச் செயலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். 

வழக்கம் போல தகவல் கிடைக்காததால் முதல் மேல் முறையீடும், ஆணையத்தில் 13-04-2017 அன்று இரண்டாவது மேல்முறையீடும் செய்திருந்தார்.


அதன் மீதான விசாரணை (SA 2886/B/17)  20-02-2018 அன்று காலை மாநில தகவல் ஆணையர் முனைவர் R. பிரதாப் குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 எதிர்தரப்பினராக 

(1) பொதுத் தகவல் அலுவலர், 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தலைமைச் செயலகம், 

சென்னை-9 மற்றும் 

(2) பொதுத்தகவல் அலுவலர், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 

சென்னை-15 ஆகியோர் ஆஜரானார்கள்.


ஆஜரானவர்கள் 

அரசு ஊழியர்களுக்கு 

தொழில் வரி ரூ 600/- என நிர்ணயம் செய்யப்பட்ட அரசானையினை காட்டினார்களாம். 

அதன் பிறகு அரசானை ஏதும் இல்லை என்றனராம். 

ஆனால் தற்போது ரூ.1180/-  தொழில் வரியாக வசூலிப்பதாக 

திரு. செல்வமணி அவர்கள் ஆணையத்தில் தெரிவித்தார்.


ஆணையர் அவர்கள், 

"இவர் அவருக்காக மட்டும் கேட்கவில்லை; எனக்காகவும் கேட்கிறார்; ஏன் உங்களுக்காகவும் கேட்கிறார்" என்று கூறினாராம். 

மேலும் திரு. செல்வமணி அவர்கள் 

HRA - வீட்டு வாடகைப்படி என்பது எல்லா அரசு ஊழியர்களுக்கும் ஒரே தொகையாக இல்லாமல் ஒவ்வொரு அலுவலருக்கும் 

அவரது அடிப்படை ஊதியம் அடிப்படையிலும் அவர் பனிபுரியும் அலுவலகம் உள்ள ஊர் மாநகராட்சி / நகராட்சி / கிராம ஊராட்சி அடிப்படையிலும்,  தனித்தனியாக வித்தியாசமாக அரசால் வழங்கப்படுகிறது. 


ஆனால் தொழில் வரி வசூலிப்பது மட்டும் தமிழகம் முழுவதும் 

ஒரே தொகை வசூலிக்கப்படுகிறது என்று ஆணையத்தில் முறையிட்டாராம். அதற்கு ஆணையர் நீங்கள் போராட்டம் நடத்துங்களேன் என ஆலோசனை வழங்கினாராம்.


ஆம் ஐயா,  சட்டப் போராட்டம் நடத்த போகிறேன் நீதிமன்றம் மூலம். அதற்காகத்தான் இந்த அரசானையின் நகலை கேட்கிறேன் என்றாராம். 


ஆணையர் உடனடியாக அரசு ஊழியர்களுக்கான தொழில்வரி சம்மந்தமாக இறுதியாக அளிக்கப்பட்ட அரசானையினை வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்தாராம்.


வழக்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு அரியலூருக்கு பல்லவன் விரைவு வண்டியில் வந்த அந்த வல்லவர் திரு. செல்வமணி அவர்களை சந்தித்து பேட்டி கண்ட பொழுது, "தொழில் நடத்துபவர்களே தொழில் வரி கட்டுவார்கள். 

உதாரணமாக ஒரு டீ கடை வைத்திருப்பவர் தொழில் வரி கட்டுவார். ஆனால் அக்கடையில் பணியாற்றும் டீ மாஸ்டர் தொழில் வரி கட்டுவதில்லை. ஏனென்றால் அவர் ஒரு கூலிக்காரர்.


 ஒரு xerox கடையின் உரிமையாளர் தொழில் வரி கட்டுவார். ஆனால் அக்கடையில் பணியாற்றும் பெண் தொழில் வரி கட்டுவதில்லை. 


அதுபோல அரசு ஊழியர்கள் அரசின் கீழ் பணியாற்றுபவர்கள். 

அவர்கள் தொழில் செய்பவர்கள் அல்லர். அவர்களுக்கான தொழில் வரியை அரசே கட்டவேண்டும் என்றும், ஆசிரியர் பணி (அல்லது அரசு ஊழியம்) என்பது தொழில் அல்ல" என்றும் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டி விரைவில் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தார்.


திரு. செல்வமணி அவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.


உண்மைதானே!

நாமும் வாழ்த்துவோம்

அவரது கரத்தை வலுப்படுத்துவோம்.

Pls share all govt servents

மன அழுத்தம் நீங்க..

 மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற‌ மனவியல் நிபுணர்கள் கூறும் 30 வழிமுறைகள்


வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடா மல் தடுக்கிற தயக்கம், எச்செயலை யும் செய்ய விடாமல் சோர்ந்து போகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின்


அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும். வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்த ங்களின் தாக்குத லுக்கு ஆளாகு ம் பலரும் ஆடிப்போய் விடுகி றார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர் பார்த்த விளைவு ஏற்படாதபோ தும், எதிர்பாராத எதிர் விளைவு கள் ஏற்படும் போதும் மன அழு த்தத்திற்கு ஆளாகிறா ர்கள்.


சிகிச்சை தேவைப்படும் அளவு மன அழுத்தத்தை முற்ற விடுபவர் களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் – மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரிசெய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழி முறைகளைக் கண்ட றிந்து ள்ளனர்.


பல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள், மன அழுத்தத்திலிரு ந்து உடனடி விடுதலை தருவதுடன் அடுத்தபடி நிலை நோக்கி நகர்வதற் கும் கை கொடுக்கின்றன.


மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக் கூடிய து என்பதை மறந்துவிடக் கூ டாது.


இனம் புரியாத காரணங்களால் மனச்சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத் திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வைக் கண்டடைவதும் எளிது.


மன அழுத்தத்திற்கு உடனடி நிவா ரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சி முறைகள் – இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது பார்க்கலா ம்



ஆழ்ந்த சுவாசம்:


கீழை நாடுகள், மேலைநாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின்மூலம் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவு அதி கரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்பு நிலை அடைகின்றது. அடி வயிற்றில்கையை லேசாக அழுத்தி க்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசை வுகளையும், உடலும் மனமும் தளர்வுநிலை அடைவதையும் கண்கூடாக உணர லாம்.


ககாட்சிப்படுத்துங்ள்:


பூப்பூவாய்த் தூவும் வென்னீர்‘ ஷவரின்கீழ் கண்மூடி நிற்பது போல வும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.


அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத் திருப்பதுபோன்ற காட்சியையும் உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.


மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்:


உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.


புன்னகையின் சக்தி:


மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடை கிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளை க்கும் கொண் டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் Dr. கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகை த்துத்தான் பாரு ங்களேன்.


கடைவாய் – ஒரு ரகசியம்:


மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்த படி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங் காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கி ன்ற வழி.


மனம் சொல்லும் மந்திரம்:


நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறை ப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக் கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையா து. “எல்லாம் செய்யக்கூடும்”, “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என் று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும். மந்திரங்களா ய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதி னைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.


அடுத்தது என்ன…..?


மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது? மற்றவ ர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல்திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக, அடுத்தது என்ன?” என்ற அணுகுமுறை யை கைக் கொள்கிறபோது, செயல்படவேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.


எழுதிப்பாருங்கள்:


மனஅழுத்தத்தை தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள் ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது.


அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொ டுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும் போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத் தது போன்ற மன நிறைவை எளிதில் எட்ட முடிகிறது.


தடாலடிகளைத் தள்ளிப்போடுங் கள்:


அழுத்தம் கொடுக்கும் பதட்டம்காரணமாக தடாலடியாய் சில தவறா ன முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப் பதட்ட த்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங் களை வளர்க்கும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும் போது முடிவெ டுப் பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக்குள்ளேயே எண் ணிவிட்டு, சிறிதுதூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறு மையாய் இருந்தால் ஆக்க பூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.


காபி குடிப்பதைக் குறையுங்கள்:


காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழு த்தம் ஏற்படும் நே ரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கி றார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய் வாளர்.


தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தரு வதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர் வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.


முடியாத விஷயங்களை மறு த்துச் சொல்லுங்கள்:


எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கே யோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்க ளையும் மேலே தூக்கி போட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் சிரித் தாலும், நம் உள்வட்டத்துக்குள் எரிந்து விழச் செய்கிறது. இக்கூடுதல் பாரம், மன அழுத்தத்தை வளர்த்து விடும் என்பதால், செய்ய முடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையு ம் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.


நறுமணங்களின் நலம் பெறுங்கள்:


தீயவாசனையை அடையாளம் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மனிதர்கள் நறுமணங்களின் சுகத்தில் ஈடுபட்டு அனுபவிப்பதில் லை. நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றி ன் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.


உங்கள் உஷ்ணமே உங்களுக்குதவு ம்:


டேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொ ன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவெ ன்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழ மாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள்வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.


மூன்று முக்கிய இடங்கள்:


பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத் தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.


1. புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல்.


2. பின் கழுத்தில் அழுத்தம் தருதல்.


3. கழுத்து சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல்.


அழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழு த்தத்தை எதிர்கொள்ளும் உந்து சக்தியை மூளைக்கு வழங்கும்.


கவலைக்கென்று நேரம் ஒதுக்குங் கள்:


மனதில் தோன்றும் கவலைகள் எல்லாநேரமும் உங்களை அரித்தெடுப் பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார் க்க ஒரு நேரம் ஒதுக்குவது, கால்மணி நேரம் என்று வை த்துக் கொண்டால், அக் கால் மணி நேரமும் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளை ஆராய்ந்து அவ ற்றை உ ங்கள் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அந்த நேரம் .


நொறுக்குத் தீனி நொறுக்குங்கள்:


கார்போஹைட்ரேட் கொண்ட நொ றுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலிருந்து செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.


வைட்டமின் வேண்டும்:


வைட்டமின் பி, மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களை சிறி தளவு சேர்த்துக்கொண்டே வருபவர்கள் அவ்வளவு எளிதாக மன அழு த்தத்திற்கு ஆட்பட மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


அடையாளம் என்ன?


மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப் பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப் படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக் கொண் டால், அறிகுறிகள் தென் படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்


ஆகாயம் பாருங்கள்:


அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெ ளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங் களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.


நடைப்பயிற்சி நலம் தரும்:


நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கி விட்டால் கொ ஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறா ர்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவார ணம் போன்றது.


வெந்நீர்க்குளியல்:


வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லை யென்றால் வெந்நீரில் கை கால்களையாவது கழு வுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.


இசையால் வசமாகும் இதயம்:


எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசை க்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது பாடுங்க ள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக் கொ ள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் பெருகவும் வழிவகுக்கி றது.


செல்லப் பிராணிகள்:


நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றி ல், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. முயன்று பாருங்கள்.


கவனம் குவியுங்கள்:


மனம் பதறுகிறபோது நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவி யாமல் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங் கள். ஒரு சிறு பென்சிலாகக் கூட இருக்கலாம். அதனளவு, வடிவம், வ ண்ணம், கூர்மை என்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங் குங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.


நண்பர்களை அழையுங்கள்:


மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்க ள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொது வான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.


வஜ்ராசனத்தின் வல்லமை:


மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என் று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டு மல்ல. நியூயார்க்கில் உள்ள எக்யூனாக்ஸ் ஃபிட்னஸ் சென்டரின் இயக்குநர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான்.


குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின்மீது சிறிதுநேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன்நெற்றியை நிலத் தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள்.(இதை இஸ்லாமியர்கள் தங்களின் ஒவ்வொரு தொழுகைகளிலும் க‌டை ப்பிடிக்கிறார்கள்)


பிரார்த்தனை:


மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்ட வை.


நிமிர்ந்து அமருங்கள்:


சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத் தான் மனது சொல்லும். முதுகுத் தண்டை நிமிர்த்தி நேராக, ஜோராக உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ் ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.


தாவரங்களோடு சிறிது நேரம்:


பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவ சக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர் கள்.


மகிழ்வித்து மகிழ்வோம்


அன்பால் அரவணைப்போம்..உபயம்.வாட்ஸ்அப்

Sunday, December 19, 2021

ஆருத்ரா தரிசனம்..

 *#ஆருத்ரா_தரிசனம்_என்றால்_என்ன?*


*ஆருத்ரா தரிசனம் 20.12.21 திங்கள்*


*பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும்* *இல்லாத பரம்பொருளுக்கு)* *சிவபெருமானுக்கு*

*உரிய நட்சத்திரம் #திருவாதிரை* *என்கிறார்களே எப்படி ?*


தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்

திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.


மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா  சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.


ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் - புனர்பூசம்;

கிருஷ்ணனுக்கு - ரோகிணி;

முருகனுக்கு - விசாகம்.


இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.


ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?


பிறவா யாக்கைப் பெற்றோன்  பெரியோன்

என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்

சிவ பெருமானைக் குறிக்கிறது.


சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.


சேந்தனார் ஓர் விளகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்


ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை.


எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார்


. சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.


சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமா

னுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.


ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்


 ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.


திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.


அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.


அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்


 இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது.


சேந்தனாருக்கும் , திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக  கொண்டாடப்படு

கிறது.


சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.

சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.

சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்.



*திருச்சிற்றம்பலம்.*🚩

Thursday, December 16, 2021

இன்றைய நாள்..

 


இன்று டிசம்பர் 17


ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day)


     இந்தியாவில்  ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுகிறது. 

    1982ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் 

குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் 

ஓய்வூதியர்களால் 

இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

    அரசுத் துறைகளில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நிலை குறித்து பல்வேறு ஓய்வூதியர் சங்கங்கள் தாக்கல் செய்த வழக்குகள் மீது 

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே சீரான வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தீர்ப்பளித்துள்ளது.

   இதில் ஓய்வு பெற்ற தேதியை அடிப்படையாக வைத்து ஓய்வூதியப் பலன்களை வழங்கு

வதில் பாகுபாடு செய்வது, ஓய்வூதியர்களைப் பிரிவினை செய்வதற்கு ஒப்பாகும் என்றும், மேலும் இவ்வாறு பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 14-ஐ மீறுவதாகும் என்று 

1982ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாளன்று உச்சநீதிமன்றம், டி. எஸ். நகரா என்ற ஓய்வூதியர் தொடுத்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    டி. எஸ். நகரா வழக்கில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் 

ஒய். வி. சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், 

17 டிசம்பர் 1982 அன்று அளித்த உரிமை சாசனத் தீர்ப்பின் ஒரு பகுதியில், ஓய்வூதியம் 

என்பது, உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும் எனவும், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவுகள் 139 மற்றும் 148 (5)-ன் படி ஓய்வூதியம் என்பது 

ஓய்வூதியர்களுக்கு 

சொத்துரிமை போன்ற நிலைத்த சட்டபூர்வமான உரிமையாகும் என்றும் தெரிவித்தது.

     எனவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் நாள் ஓய்வூதியர் நாளாக ஓய்வூதியர்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இப்படியும் இணையலாம்..

 *Received from an Income Tax Officer*


Now the time has come when an All India Organization of taxpayers should be formed.


Which will be the biggest Organization in the world!!


Now a Tax Payers Union should be formed in the country.  No matter which Government is ruling, without the approval of this Taxpayers Union, neither free electricity, nor free water, nor free distribution, or loan waivers, can be announced by anyone, nor can any Govt. implement anything like this.

Money comes from our tax payments, so we should also have the right to say how to use it.


Parties will keep luring by distributing freebies for votes, since it benefits them.  Whatever schemes are announced, first give its blueprint, take consent from the Union, and this should be applicable to even the salaries of MPs & MLAs and other benefits they get also.


Is democracy limited to just voting??

What rights do we have after that??


Right to Recall Any Such "Freebies" should also be implemented soon.


If you agree, please reach out to as many people as possible. To do this, share the post. .

Send it to atleast 10 of your  friends.

Please share to help it go viral 🙏🏼

கசக்கும் உண்மைகள்..

 ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்வதன் மூலம் தொழிலாளி வர்க்க எதேச்சதிகாரத்தை நிறுவ முயல்வதற்காகவே எப்போதும் பலமான கட்சியினை எதிர்ப்பதும் (தாம் வளர முயற்சிக்காது அப்போது காங்கிரஸ் இப்போது பாரதீய ஜனதா) நாட்டின் மீது உண்மையான அக்கறை கொள்ளாது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தகர்ப்பதற்காகவே  உழைக்கும் வர்க்கத்திடம் ஒரு பதட்டமான மனநிலையை உருவாக்கி அதன் மூலம் தொழிற்சங்கத்தை வளர்த்தெடுப்பதும் (பொது ஜன இயக்கமாக கட்சியை வளர்த்து  போராட இயலாத காரணத்தால்  தொழிற்சங்கங்கள் மூலம் அரசைப் பயமுறுத்த முயல்வதும் குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய காலங்களில்) முற்போக்கு என தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக் கொள்கிற அரசியல் கட்சிகளின்  அரசியல் தந்திரம்..இவர்கள் தந்திரம் புரிந்ததனால்தான் தொழிற்சங்க இயக்கத்தில் முன்னணியில் இருக்கிற ஊழியர்களின் வாக்குகள் கூட இவர்களுக்குப் பதிவாவதில்லை.(.ஆம் அப்போது டாடா பிர்லா இப்போது அம்பானி வகையறா..அப்போது காங்கிரஸ் இப்போது பா..ஜ.க..அவ்வளவே..கூட்டணிக்கான பேச்சு வார்த்தை என்பது கூட திரைமறைவில் கோடிகள் பெறும் வித்தையே)இதனைப் புரியாத சில நேர்மையானவர்கள்/நியாயமானவர்கள் தியாகம் என்கிற பெயரில் பலிகடா ஆவதே உச்சபட்ச அவலம்..

Tuesday, December 14, 2021

அந்த ஏழு நாட்கள்..

 *365 Days✈️With HFN St🌍ry*


♥️ Story-75 ♥️


_*Before reading... Gently close your eyes... Feel grateful for the Ocean of love that resides in your heart... Now continue reading...*_


*Last seven days of life*


Once upon a time, there was an _ashram_ , where a saint was giving a discourse to his disciples. Just then, a stranger entered the ashram and started abusing the saint. The saint looked at the man but did not say anything in reply and just remained silent. After a while, the man left.


One of the disciples present there got angry on hearing such words about his guru. He wondered why his guru didn't respond to that man and kept listening. 


After the discourse was over, the disciple approached his guru and asked, "Guruji, why did you stay quiet when that man was abusing you brutally and cursing you? Please tell me, how were you able to stay so calm and smiling in such a situation? Didn't it anger you even a bit? Nor did your facial expression change. What's your secret?"


The saint smiled and replied, "I will certainly tell you this secret, but first, I have something important to tell you." 


The disciple was surprised. He asked, "What is it, Guruji? Please tell me."


The saint replied, "You are going to die after a week. The end of your life is near."


The disciple was stunned to hear this. It was as if the ground had slipped away from under his feet... He would never have believed it if someone else had said it, but this was his Master, in whom he had complete faith and reverence. Therefore, he believed it to be true, that he only had seven days left to live.


The disciple was very depressed. He could not   think straight in his state of despair. But then he took a moment and became stable, and contemplated with a calm mind. He then resolved to live those last seven days of his life to the fullest and so, he left the ashram with the blessings of his Guru.


On his way, the disciple got engrossed in his thoughts as to how to make the most of those last seven days of his life! 


After a lot of contemplation, he finally made up his mind to spend the remaining seven days following his Guruji's teachings and living with humility, love, and devotion to God.


And from that very moment his temperament changed drastically! 


Now, he met everyone with utmost love in his heart and wouldn't get angry at anyone for anything! He would spend most of his time meditating and remembering God.


He repented for his sins, asked for forgiveness from all those people with whom there was a rift or whom he had hurt, knowingly or unknowingly. After wrapping up his routine, he would get absorbed in the remembrance of God. This went on for six days. On the seventh day, the disciple felt an urge to see and meet his Guru before meeting his end. 


He met his Guru and touched his feet with a feeling of satisfaction on his face and said, "Guru ji, my end is nearing, and I want to spend my last moments with you... Please give me your blessings for one last time."


The saint said, "My blessings are always with you. May you live a long and healthy life."


The disciple was utterly perplexed to hear such a blessing from his Guru's mouth, especially after what he had heard from him seven days ago. 


After blessing his disciple, the guru asked, *"So, tell me, what were the last seven days like? Were you as angry with people as before?"*


With folded hands, the disciple replied, *"No, not at all, guru ji. I only had seven days to live. How could I waste them with such useless behaviour? Instead, I spent my time greeting people with all the love in my heart and even apologized to those whom I had ever hurt."*


At this, the guru smiled and said, "See, now you know my secret, and you've experienced it too. When I'm aware of the fact that I can die at any moment, why would I waste my precious time harboring ill-will towards anyone? Instead, I try to make the most of my time by opening my heart to all. 


Life is too short to waste on regrets, grudges, fights, and arguments. Life is all about forgiving and moving on. The real purpose of life is happiness. When one truly understands the intensity of this secret of life, one remains calm in any situation. This is what wisdom is all about. Live every moment of your life as if it is your last."


The disciple immediately understood what this whole plot was about and learnt a profound secret to a peaceful and loving life that day! 


                ♾️


*"Only remove the hatred and universal love is there."*

*Babuji Maharaj* 


Heartfulness 

Received in  whatsapp

Monday, December 13, 2021

பிரதமரின் ராத்திரி ரவுண்ட் அப்..

 


மோடியின் #ராத்திரி ரவுண்ட் அப் 


நேற்று #காசி விஸ்வநாதர் கோயில் வளா கத்தை திறந்து வைத்த பிறகு் மோடி #டெல்லி செல்ல வில்லை. நேற்று இரவு பிஜேபி ஆளும் மாநிலங்களின்  முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் வைத்து #நிர்வாக ரீதியாக ஒரு  6 மணி நேரத்தி ற்கு மீட்டிங் நடத்தினார்


அதற்கு பிறகு நள்ளிரவில்  #யோகியுடன்  காசி ரயில்வே நிலையம் சென்று  சுத்த மாக இருக்கிறதா? என்று பார்வையிட்டு #ரயில்கள் சரியான நேரத்திற்கு வருகிறதா? என்று பயணிகளிடம் விசாரித்து விட்டு ரயில்வே #டிஜிட்டல் கிளாக் அருகேநின்று 70 வயதான நானே  நள்ளிரவு 1•13 மணிக்கு #தூங்காமல் இருக்கிறேன்


ஆனால் நீங்கள் தூங்குகிறீர்கள் என்று ரயல்வே #ஊழியர்களை தூங்க விடாமல் செய்து  இருக்கிறார்

ஒரு பிரதமர் அதிலும் அதிக #எதிரிகள் உடையவர் நள்ளிவில் ஒரு ரயில்வே ஸ்டேசனில் வந்து நிற்கிறார் என்றால் அவருக்கு அவருடைய ஆட்சி மீது எவ்வளவு #நம்பிக்கை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.


இனி மேல் தூங்கி எழுந்து நாளை மீண்டு ம் காசியில் உள்ள #மகாமந்திர் சத்குரு சதாபல்தியோ விஹான்கம் யோக சன்ஸ்தானின் 98 வது ஆண்டு விழாவில்  பங்கேற்க இருக்கிறார் பிரதமர்.


எல்லோராலும் 70 வயதிலும் #உழைக்க  முடியும் அந்த உழைப்பு என்பது அவர்களின் நடமாட்டமாகவே இருக்கும். ஆனால்மோடியின் உழைப்பு இந்த #தேசத்தின் நடமாட்டத்தை தொடக்க வைக்கும் உழைப்பாகும்.

Wednesday, December 8, 2021

ஊழலும் நம் நாடும்

 இன்று டிசம்பர் 9



சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்.


   ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், 2003ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி ஐ.நா. சபையால் டிசம்பர் 9ம் நாள் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, அன்று முதல் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    ஊழலை  தடுப்பதோடு அதுகுறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு நாட்டிலும் ஊழல் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்யும்  'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

   அதன்படி, ஒரு நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை, அந்த  நாட்டில் லஞ்சம், ஊழல் மற்றும் நடைபெறும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஆய்வுகள் நடத்துகிறது.

   இந்த ஆய்வின் மதிப்பீடுகளை வைத்து ஊழல் அதிகம் உள்ள நாடுகளை அந்த அமைப்பு பட்டியலாக  வெளியிடுகிறது. 

    ஆய்வின் அடிப்படையில் 100 மதிப்பெண்ணைப் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்றும், மதிப்பெண் எதுவும் பெறாமல் இருக்கும் நாடு ஊழல் அதிகமுள்ள நாடு என்றும் அர்த்தம்.

   இந்தியாவைப் பொறுத்தவரை 2016ல் 40 மதிப்பெண்ணைப் பெற்று 79வது இடத்திலும்,

    2017ல் அதே 40 மதிப்பெண்ணைப் பெற்றிருந்த போதிலும், 81வது இடத்தையும் பிடித்தது.

    2018ல் 41 மதிப்பெண்ணுடன் ஊழல்கள் நிறைந்த நாடுகளின்  பட்டியலில், இந்தியா 78வது இடத்தைப் பெற்றுள்ளது.

    இந்தியாவில் அரசு சார்ந்த வேலையை முடிக்க இரண்டில் ஒருவர் லஞ்சம் கொடுக்கிறார். 

    லஞ்சம் வாங்காமல், ஊழல் செய்யாமல் நேர்மையாக இருக்க விரும்பும் நபர் இந்த சமூகத்தில்  சந்திக்கும் பிரச்னைகளும், மனவேதனையும் அதிகமாக உள்ளது. 

   அந்த நபரைக் காட்டிலும் அவரது குடும்பத்தினரின் நிலை மிகவும் பரிதாபமானதாகவே உள்ளது.

    அரசு சேவைகளை காலதாமதமின்றி விரைவாக பெறுவதற்கு லஞ்சம் அல்லது  அன்பளிப்பு கொடுப்பது பெரிய தவறில்லை என்கிற மனநிலைக்கு பொதுமக்கள் மாறிவிட்டனர். 

   இந்த மனநிலை தங்கள் கடமையை செய்வதற்கு லஞ்சம் பெறுவதை பொதுமக்கள் அங்கீகரித்து விட்டனர் என்ற உணர்வை லஞ்சம்  வாங்குபவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

   லஞ்சமும், ஊழலும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. 

    எனவே லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

    பள்ளி, கல்லூரி மாணவர்கள்  உள்ளிட்ட இளைஞர் சமுதாயத்திடம் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடமும், பெற்றோரிடமும் உள்ளது.

    சிறுவயது முதலே நேர்மையாக இருக்க கற்றுக் கொடுத்தால் இனிவரும்  சமுதாயமாவது ஊழலற்றதாக இருக்கும்.

நரகமாகும் நாமிருக்கும் சொர்க்கம்

 ஆடைகளை

பகட்டும் நாகரீகமும் தீர்மானிக்க
நொந்து நூலாகிப்போகிறது உடல்

உணவினை
நாவும் மனமும் தீர்மானிக்க
வெந்துச் சாகிறது குடல்

செயல்பாடுகளை
உணர்வும் ஆசையும் தீர்மானிக்க
பாடய்ப்படுகிறது அறிவு

தேவைகளை
விளமபரங்களும் கௌரவங்களும் தீர்மானிக்க
ஓடாய்த் தேய்கிறது செழுமை

தொடர்புகளை
பயனும் "பசையும்" தீர்மானிக்க
போலியாகிப் போகிறது நட்பு

காதலை
சந்தர்பங்களும் காமமும் தீர்மானிக்க
கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு

வெற்றியினைப்
பணமும் ஜாதியும் தீர்மானிக்க
கேலிக் கூத்தாகிறது தேர்தல்

நியாயத்தை
பதவியும் செல்வாக்கும்  தீர்மானிக்க
இறந்து கொண்டிருக்கிறது தர்மம்

மொத்தத்தில்

தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
செயலிழந்து கிடக்க

கேடுகெட்டவை எல்லாம்
அரியனையேறிச்  சிரிக்க
நரகமாகிக் கொண்டிருக்கிறது....

சொர்க்கமாய் இருக்கவேண்டிய
நம் சுக வாழ்வு 

Tuesday, December 7, 2021

அன்று ஒரு நாள் ஆனந்தத் திருநாள்..

முன்பொரு சமயம் இதே நாளில் சென்னையில் நடைபெற்ற முகநூல் நண்பர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இனிய தருணம்...






 

Sunday, December 5, 2021

இம்முறையும் எப்போதும் போலவே..

 இம்முறையும் நாங்கள்

உறுதிமொழி   எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

இயற்கைக்கு எதிராக
எங்கள்  வசதியான வாழ்க்கைக்காக
நாங்கள்  செய்தக்  கொடுமைகளை

அது  தானாகத்  தன்னைச்
 சரிசெய்து கொள்ளச்
தன்னைச் சீர்திருத்திக் கொள்ள முயல

அது  எங்களுக்குப்   பேரிடராய்
பெரும் அழிவாய்
எம்  அன்றாட வாழ்வைப் பாதிக்க

இனியும் அது தொடர்ந்தால்
எம் நிலை அதோ கதிதான் என
மிகத்  தெளிவாய்ப் புரியக்

காடுகளை அழிப்பதில்லை
கண்மாய் குளங்களை ஆக்கிரமிப்பதில்லை மண்வளமகெடுப்பதில்லை
நீர் வளம் காக்கத் தவறுவதில்லை என

இன்னும் அற்புதமான
மிக மிக அவசியமான
உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

ஒவ்வொரு முறையும்
குடலும் உடலும்
குடியால் பாதிக்கப்பட

இனியும் குடித்தால்
உயிருக்கு உ த்தரவாதமில்லை என
மருத்துவர் கைவிரிக்க

இனி குடிப்பதில்லை என
மருத்துவருக்கு உறுதி தரும்
ஒரு மொடாக்   குடிகாரனைப்போலவே

இம்முறையும் நாங்கள்
உறுதிமொழி  எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

செயலால் துரும்பசைக்கக் கூடக்
சிறிது குனிந்து நிமிரும் சிரமம் இருக்கிறது என்பதால்

எண்ணத்தால் இமயம் அசைப்பதில்        வெற்றுச் சொல்லால்  சிகரம் தொடுவதில்
சிறிதும் சிரமம் இல்லை என்பதால்

இம்முறையும் .....

Saturday, December 4, 2021

மீண்டு வா...மீண்டும் வா எங்கள் அன்புச் சகோதரி

 


மகம் ஜெகம் ஆளும் எனும் ஆன்றோர் வாக்கினுக்கு நிரூபணமாய்  விளங்கிடும் அற்புதமே..அதிசயமே..அன்னையே..


படுத்துக் கொண்டே
ஜெயிப்பது என்கிற சொற்றோடர்
ஒரு வறட்டுவாக்கியமாய் இருந்ததை
நிஜமாக்கிக் காட்டிய
தமிழகத்து ஜான்ஸியே

நீ கொண்ட உச்சங்கள் எதுவும்
தங்கத் தட்டில் வைத்து
உனக்குப்
பரிசாகக் கொடுக்கப்பட்டதில்லை

பெண்ணாக இந்த உச்சம்தொட
நீ பட்டத் துயரங்கள்
இவ்வுலகில் எப்பெண்ணும்
இதுவரைப் பட்டதில்லை

உன் மீது இருந்த துரும்பினை
தூண் என்றார்கள்
உன் மீது விழுந்த அணுகுண்டை
மலர்ச் செண்டு என்றார்கள்

இரண்டடையும்
துச்சமென மதித்துக்
கடந்து சென்ற
தங்கத் தலைவியே

புராண நிகழ்வுகளின் எச்சமாய்
ஒரு சட்டசபை
கௌரவர் சபையாய்
தன் கொடூர முகம்காட்டி
கொக்கரித்தபோது
சினந்து புலியாய் நீ
சீறிவந்தக் காட்சி....

சனாதன ஆசாமிகள்
பிற்படுத்தப்பட்டவன் என்பதாலேயே
திறமையானவனை
ஒதுக்கிவைத்ததைப் போலவே

போலிப் பகுத்தறிவு ஆசாமிகள்
முற்படுத்தப்பட்டவள் என்பதாலேயே உன்னை
ஒதுக்க முயன்றபோது
நெருப்பில் பூத்த மலராய் நீ
வென்று நின்ற காட்சி...

காலப்பெட்டக்கத்தில்
ஜொலிக்கின்ற வைரங்கள்
வைடூரியங்கள்
சரித்திரப்புத்தகங்களில்
தங்க முத்திரைக் கொண்டு
தகதகக்கும் பக்கங்கள்

விழிமூடுகையில்
மனம் கொள்ளும் வைராக்கியங்கள்
உடலோடு போவதில்லை
ஆன்மாவோடு தொடர்ந்து
அடுத்த ஜென்மமெடுக்கும் என்பதை
நாங்கள் சொல்லி நீ
அறிய வேண்டிய நிலையிலில்லை

கோடிக் கோடியாய்
மதம் கடந்து இனம்கடந்து
மக்கள் செய்யும் பிரார்த்தனைகள்
நிச்சயம் வீணானதில்லை

அதனை மறுக்கும் அதிகாரம்
நியதிப்படி இயங்கும் இறைவனுக்கும்
இல்லையென்பதை
இயற்கையும் மறுப்பதில்லை

பதினேழாம் நூற்றாண்டில்
ராணி மங்கம்மாவாக

பதினெட்டாம் நூற்றாண்டில்
வேலு நாச்சியாராக

பத்தொன்பதாம் நூற்றாண்டில்
தில்லையாடி மணியம்மையாக

அவதரித்த நீயே

இந்த நூற்றாண்டில்
புரட்சித் தலைவியாய்
அவதரித்திருக்கிறாய் என்பதில்
எங்களுக்கு எள்ளளவும்
சந்தேகமில்லை

தமிழக அடித்தட்டு மக்களின்
வாழ்வை உன்னதமாக்குவதிலேயே
உண்மைமகிழ்ச்சிக் கொண்ட
அன்னையே

உன் வாழ்வை அர்ப்பணித்த
அம்மாவே

உன்னால் நிச்சயம்
சொர்க்கத்தில் வீணே ஓய்வெடுக்க இயலாது

மறுபிறப்பெடுத்து
தமிழகத்திலேயே
நிச்சயம் அவதரிப்பாய்
என்பதிலும் எங்களுக்கு
எள்ளளவும் சந்தேகமில்லை

அதுவரை
எங்கள் தலைமுறை
உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்

பிறவிப்பெருங்கடனை
உன்னதமாய் முடித்த
எங்கள் அன்புச் சகோதரியே

மனம் நிறைந்த சோகத்துடனும்
நீர் நிறைந்த கண்களுடனும்
உனக்குப் பிரியா விடை தருகிறோம்

சென்று வா எங்கள்
அன்புச் சகோதரி(மறைந்த நாாளில் எழுதியது )

முடிந்தால் வாழ்த்தலாமே..

 


மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை - அது ஒரு மிகப்பெரிய மருத்துவக் கடல். வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் என எப்போதும் ஜனத் திரளாய் இருக்கும் இந்த மருத்துவமனையில் யார் எங்கே அட்மிட் ஆகி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதே பெரிய காரியம். அதுவும் கிராமத்து மக்கள் மருந்து, ரத்தம் தேவை என அலைவதை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். இவர்களுக்கு எல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய் நிற்கிறார்கள் பிரசன்னாவும் அஜ்மல் ஹுசைனும்.

பிரசன்னா டெலி மார்க்கெட்டிங் கில் டெலிவரி பிரதிநிதி, அஜ்மல் ஹுசைன் வெப் டிசைனர். காலை ஒன்பது மணிக்கெல்லாம் இந்த இரு இளைஞர்களையும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பார்க்கலாம். உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் உள் நோயாளிகளுக்குத் தேவையான சிறு சிறு உதவிகளை செய்து கொடுப்பது. இயலாதவர்களின் அறுவைச் சிகிச்சைகளுக்கு தேவையான ரத்தத்தை டோனர்களிடமிருந்து பெற்றுக் கொடுப்பது இவைதான் இவர்களின் முக்கியப் பணி. மதியம் 2 மணி வரை மருத்துவமனையில் சேவையாற்றிவிட்டு அதன் பிறகுதான் தங்களது பிழைப்பைப் பார்க்கப் போகிறார்கள். போன பிறகும் யாருக்காவது அவசர உதவி தேவையெனில் இவர்களில் யாராவது ஒருவர் பறந்தோடி வந்துவிடுவார்கள். தங்களது சேவை குறித்து நமக்கு விளக்கினார் அஜ்மல் ஹுசைன்.

“எனக்கு முந்தி பிரசன்னா மட்டும்தான் ஜி.ஹெச்-சுக்குள்ள போயி அங்கிருக்கிற நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை செஞ்சு குடுத்துட்டு இருந்தார். ஒருநாள், அவருக்கு துணையாக நான் போனேன். அங்க இருந்த நிலைமைகளை பார்த்துவிட்டு அன்றிலிருந்து நானும் இந்த சேவையில இறங்கிட்டேன். தினமும் காலையில் போனதும் அனைத்து வார்டுகளிலும் இருக்கும் நோயாளி களை போய் பார்ப்போம். குறிப்பாக, உதவிக்கு ஆள் இல்லாமல் தனியாக வந்து அட்மிட் ஆகி இருக்கும் அப்பாவி ஜீவன்களுக்குத்தான் நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்.

போதிய அளவு ரத்தம் கிடைக்காததால் மதுரை ஜி.ஹெச்-சில் பல பேருக்கு அதிகபட்சம் மூணு மாசம் வரைக்கும் கூட ஆபரேஷன்கள் தள்ளிப் போயிருக்கு. இதைப் புரிந்து கொண்டு, சில புரோக்கர்கள் ஒரு யூனிட் ரத்தம் 1500 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வார்கள். அதைக் கொடுத்து ரத்தம் வாங்கமுடியாத மக்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்களே டோனர்களை தேடிப் பிடித்துக் கொண்டுவந்து ரத்தம் கொடுக்க வைக்கிறோம்.

நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை செய்துவிட்டு எங்களது மொபைல் எண்ணையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவோம். ஏதாவது அவசர உதவி தேவையெனில் அவர்கள் எங்களை போனில் அழைப்பார்கள். யாராவது ஒருவர் ஓடிப்போய் அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுப்போம்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு என்ன மாதிரி எல்லாம் பிரச்சினைகள் வருகின்றன, அவர்களுக்கு உதவி செய்ய எங்களைப் போன்ற ஆட்கள் இருந்தால் அது எந்த அளவுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்பது குறித்து இப்போது நாங்கள் ஒரு சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறோம். அது முடிந்ததும் இன்னும் சில நல்ல நண்பர்களை துணைக்கு சேர்த்துக் கொண்டு முழுவீச்சில் மதுரை ஜி.ஹெச்-சுக்குள் இயலாத நோயாளிகளுக்குத் தேவையான உணவு மற்றும் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கப் போகிறோம்.

அதற்கு முன்பாக கல்லூரி மாணவர்களை வாரம் ஒருமுறை இங்கே கூட்டி வந்து, இங்குள்ள நோயாளிகள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு நம்மால் எப்படி உதவி செய்யமுடியும் என்பதை அவர்கள் உணரும்படி செய்யப் போகிறோம். சில சமயம் காலையில் வீட்டிலிருந்து ஜி.ஹெச்-சுக்குக் கிளம்புவதற்கு லேட்டாகிவிட்டால், ‘ஏம்பா இன்னும் நீ கிளம்பலையா?’ என்பார் அப்பா. இரவு வீடு திரும்பும்போது, ‘தம்பி.. இன்னைக்கி எத்தன பேருக்கு ரத்த தானம் வாங்கிக் குடுத்தே?’ என்பார் அம்மா. ‘உன்னிடம் உதவி கேட்பவர்களிடம் நீ ஒரு கூல்டிரிங்க்ஸ் கூட வாங்கிக் குடிக்கக் கூடாதுப்பா’ என்று இருவருமே சொல்வார்கள். எல்லா பெற்றோரும் இப்படி இருந்துவிட்டால் சேவை செய்யும் இளைஞர்களுக்கு பஞ்சமே இருக்காது’’ அழகாய் சொன்னார் அஜ்மல். (தொடர்புக்கு: 9500001402).


நீதி: பிரார்த்தனை செய்யும் 💋உதடுகளை விட உதவும்  கரங்களே மேலானவை... 👍


நாமும் இவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்துவோமே.. 💐படித்ததும் பகிரப்பிடித்தது..

Thursday, December 2, 2021

அரசு சொல்லுது அதில் அர்த்தம் உள்ளது...

 சீன நகரில் இருந்து வந்த

வைரஸ் கேட்டது

மனிதா சௌக்கியமா..


யாரும் இருக்கும் விதத்தில்

இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே


இது அரசு சொல்வது

இதில் அர்த்தம் உள்ளது...


கூட்டம் தவிர்த்து விலகி இருந்தால்

கொரோனா கிருமி அடங்கும்

இதனை மறந்து மக்கள் கூடித் திரிந்தால்

அதுவே விரைந்து பெருகும்


முகக்கவசம் அணிந்திருந்தால் பரவாது என்று

நாட்டிலுள்ள மக்களுக்கு

அரசு சொல்லுது


அரசு சொல்வது

அதில் அர்த்தம் உள்ளது...


சோப்புப் போட்டு கைகள் கழுவும்

பழக்கம் என்றும் வேண்டும்

அந்தப் பழக்கம் மட்டும் இருந்தால் போதும்

கொரோனா அலறி ஓடும்


உடல்தூய்மை காத்தாலே நோய்த்தொற்று இல்லை

நாமறிய நாளெல்லாம்

அரசு சொல்லுது


அரசு சொல்வது

அதில் அர்த்தம் உள்ளது


பெயரை மாற்றி குணத்தை மாற்றி

கொரோனா வந்த  போதும்

நமது தூய்மைப் பேணும் குணத்தை நாளும்

தொடர்ந்து வந்தால் போதும்


வாராது நமக்கெந்த தொற்றுநோயும் என்று

அழகாக நம்பிக்கையாய்

அரசு சொல்லுது


அரசு சொல்வது

அதில் அர்த்தம் உள்ளது


(பிரச்சாரப் பாடலாகப் பயன்படுத்த

நம் தமிழக அரசுக்கு அனுப்புவதற்காக எழுதியது )

Wednesday, December 1, 2021

படித்துப் பயந்தது..நிஜந்தானா..

 #வெள்ளை_விஷம் ...


நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..

ரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்..

" முன்பெல்லாம் ஒரு தெருவிலே நிறைய வீடுகளில் பசு இருக்கும். மேய்ச்சலுக்கு ஆள் வரும். எருமைகளும் நிறைய ... பசும்பாலுடன் எருமை பாலை கலந்து விற்பது சாதாரணமாக நடக்க கூடியது. கூடிப் போனா தண்ணீர் கலப்பார்கள்..

மக்கள் தொகை குறைவாக இருந்த அந்த காலங்களில் கூட காலை, மாலை இரு வேளைகளில் தான் பால் கிடைக்கும். ஏதாவது கல்யாணம் காட்சி என்றால் ..  முன்பே சொல்லி வைக்க வேண்டும். சில வேளைகளில் பாலுக்கான Demand மிக அதிகமாக இருக்கும்.. குழந்தைக்கு பால் கிடைக்கவில்லை என்றால் நிறைய பால் பௌடர்கள் புழக்கத்தில் இருந்தன..

ஆனால் இப்போ நிலைமை வேறு.. எல்லா இடமும் அபார்ட்மெண்ட் வீடுகள் .. மேய்ச்சல் நிலம் எல்லாம் கான்க்ரீட் மயம்..விவசாய குடும்பங்களே மாடு வளர்ப்பதில்லை... என்னதான் வெண்மை புரட்சி , ஜெர்ஸி பசுக்கள், முர்ரா எருமைகள் என்றாலும் இப்போதுள்ள மக்கள் தொகைக்கு 24 X 7 பால் பாக்கெட் கிடைக்கிறது என்றால் logic இடிக்குதே.. கண்ணு போட்டா தானே மாடு பால் தரும். அவ்வளவு கண்ணு இருந்தா மாடுகள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கணுமே ... எப்படிங்க இவ்வளவு பால் கிடைக்குது ???

"" தம்பி.. நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க.. எல்லாம் 20:50:30 தான்.."

"அப்படின்னா "

" 20 % தாங்க மாட்டு பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் factory இருக்குதே .. தெரியாதா??.. இருக்குற மாடுகளை வச்சிட்டு மாட்டு பால் மட்டும் கொடுத்தா ஆளுக்கு ஒரு ஸ்பூன் பால் கூட கிடைக்காது.. நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பனும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்??"

எந்த தண்ணிய ஊத்துவீங்க ...

ஹி .. ஹி .. ஊருணி, குளம் , கம்மா தண்ணி தான்.. பின்ன Aquafina வாங்கியா ஊத்த முடியும்..

இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ??

பாப்பாங்க ..

அப்புறம்

பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற என்னென்னமோ டெஸ்ட் எல்லாம் பண்ராங்க இப்ப....

சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??

அப்படி சொல்ல முடியாது..

அதெல்லாம் ratio கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவு தான்.. ஆனா மாட்டு பால் 20% - 30% தான் தம்பி.. அது போக detergent, ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ ..

சின்ன புள்ளைங்க இந்த பாலை குடிச்சு ... யோவ் .. சோயாக்கே நிறைய side effects இருக்குய்யா .. கொஞ்சம் கூடுச்சின்னா ஆஸ்த்மா .. அலர்ஜி .. Erectile dysfunction, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு ஹார்மோன் imbalance ..

அதுக்கு ...??

அப்புறம் நாங்க சுத்தமான பசும் பால் சாப்பிடணும்னா ??

நீங்க தான் பசு மாடு வளர்க்கணும்..

சரி.. இதுக்கே இப்படி சொல்றீங்களே.. 

வெள்ளி செவ்வாய்க்கு கடை வாசல்கள்ல உடைக்கிற தேங்காய்களை அள்ளி ஹோட்டல்களுக்கு தர்ற கான்ட்ராக்ட் ., 

பெரிய ஹோட்டல்கள்ல ஓரு தடவை பூரி சுட்ட எண்ணெய் வாங்கி ரோட்டு கடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட், கோழி கடைகள்ல மிச்சமாகிற தலை, குடல் வாங்கி சால்னா கடைகளுக்கு கொடுக்குற கான்ட்ராக்ட் , கிராமங்கள்ல நோய்வாய் பட்ட ஆடுகளை சல்லிசா வாங்கி கறிகடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட் ... இப்படி நிறைய இருக்கு தம்பி.. முன்னாடில்லாம் ஊர்ல ஒருத்தன் ரெண்டு பேருக்கு கேன்சர் வரும்.. இப்போ ஒவ்வொரு பெரிய ஆசுபத்திரிலேயும் போய் பாருங்க ..

படித்துப் பயந்தது..

Sunday, November 28, 2021

எது ருசி...எழுத்தா ?..குழம்பா?

 *வத்தகுழம்பு:* 😇


வத்தகுழம்பு, இது இருந்து விட்டால் ஒரு ஆழாக்கு சாதம் கூட அசால்டாக இறங்கும். வத்த வத்த வைப்பதால் வத்தகுழம்பா இல்லை வத்தல் போட்டு வைப்பதால் வத்தகுழம்பா?


வத்தகுழம்பிற்கு ஏற்றது மணதக்காளி வத்தலோ சுண்டைக்காய் வத்தலோ தான். சின்ன வெங்காயம் கூட பரவாயில்லை. பூண்டு உண்பவர்கள் அதையும் வெங்காயத்துடன் சேர்த்து கொள்ளலாம். ஆனால் இவை எல்லாம் பஞ்சாங்கத்தை ஐபோனில் பார்ப்பது போன்ற உணர்வு. வத்தல் மட்டுமே ஓரிஜினல். மத்தபடி காய்கறி கூட நோ நோ தான்.


வத்தலுக்கு அடுத்தபடியாக முக்கியம் நல்லெண்ணை. மீதி எண்ணை எதற்குமே கட்டாயம் தடா. புது புளியும் வேண்டாம் பழைய புளியும் வேண்டாம். ஒரு டீன் ஏஜ் புளி அசத்தும். வத்தகுழம்பிற்கு கை பக்குவம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை வைக்கும் சட்டி. 


கும்பகோணம் கல்சட்டி பெஸ்ட். மங்களகரமாக வைக்கலாம் கமகம வத்தக்குழம்பு. கும்பேஸ்வரர் கோவில் கடைகளில் கட்டாயம் கிடைக்கும். 


குழம்பிற்கு வறுக்கப்படும் வத்தலை முதலில் வறுத்து அதிலேயே புளியிடாமல், தனியாக எடுத்து வைத்து கொண்டு கடைசியாக சேர்ப்பது குழம்பிற்கே புது அவதாரத்தை தரும். குழம்பு கொதிக்கும் பொழுது சேர்க்கப்படும் கறிவேப்பில்லை ஜன்ம சாபல்யம் பெறும். மூட கூடாது, அடுப்பை சிம்மில் வைத்து கொதித்து கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் அழகை பார்க்க கண் கோடி வேண்டும். எண்ணெய் பிரிந்த பின் இறக்கி வைக்கப்பட்ட வத்தகுழம்பு இங்கிலாந்து வரை இழுக்கும். பின்னர் அதில் வறுத்த வத்தலை சேர்த்ததோடு மட்டுமில்லாமல் ஒரே ஒரு ஸ்பூன் பச்சை நல்லெண்ணெய் சேர்த்தால் அந்த மணத்திற்கு எந்த மலரும் ஈடாகாது.


வத்தகுழம்பு வைக்க தெரிந்து இருப்பதை விட முக்கியம் அதை சாப்பிட தெரிவது. சாதத்தை அழுத்தி பிசைந்து, வத்தக்குழம்பு சாதம் சாப்பிடுபவன் அடுத்த ஜன்மத்தில் பல பாவத்திற்கு ஆளாவான். இன்று பிறந்த குழந்தையை தூக்குவதை போல் மிகவும் அழுத்தம் கொடுக்காமல், சாதத்தை பிசைய வேண்டும். பிசைய என்று வார்த்தையை கூட அழுத்தாமல் படிக்க வேண்டும். என்ன தான் சாப்பாட்டிற்கு நெய் என்பது மன்னனின் மகுடம் போல என்றாலும் இங்கே அதற்கு வேலை இல்லை. இது நல்லண்ணை ராஜாங்கம். சுடச்சுட சாத்தத்தோடு ஒரு தாராளமான ஸ்பூன் நல்லெண்ணை விட்டு சாதத்தை உதிர்த்த பின் அதன் மேலே வத்தகுழம்பை விட்டு நிற்க, சாம்பார் சாதம் மாதிரி மொத்தமாக பிசைய வேண்டாம். அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமாக பிசிறி பிசிறி சாப்பிட, நல்ல மழையில் SPB குரலில் இளையராஜா Melodies கேட்பது போல், Sidedish க்கு இங்கே வேலை இல்லை. இல்லாமல் முடியாது என்போர்க்கு அப்பளம் 0K. சுட்டது இன்னும் சூப்பர்.


இன்னும் சிறப்பு தயிர் சாதத்தை மையாய் மசித்து, கையில் சிறிது சாதம் எடுத்து கொண்டு நடுவிலே சிறு பள்ளமிட்டு அதை வத்த குழம்பால் நிரப்பி, அடடா சூப்பர் ஸ்டார் படத்தை அவருடனேயே உட்கார்ந்து பார்த்த பரவசம்.


சாத்திற்கு மட்டுமல்ல, அடைக்கு கூட வத்தகுழம்பு நல்ல combination.

வெங்கட்பிரபுவும் பிரேம்ஜியும் போல.


முடித்த பின் கடைசியாக தட்டில் ஒரே ஒரு கரண்டி மட்டும் விட்டு வழித்து நக்கப்படும் ஒரு நல்ல வத்தக்குழம்பின் மணமும், ருசியும், worldcupல் தோனி அடித்த 6 போலே என்றுமே நினைவில் நிலைத்திருக்கும்.

*படித்ததில் பிடித்தது*

*பகிர்வு*

*எழுத்தாளர் திரு.சுஜாதா  போல் எழுதியது யாராய் இருக்கும்... *🌷🕉️🚩

Friday, November 26, 2021

தியானம் குறித்து ஒரு தியானம்

 த்யானம் பற்றி .....எழுதியவர் "கடுகு " (படித்ததில் பிடித்தது...)


எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள் திடீரென்று எழுந்தது. 


கூடவே, 'உன்னால் முடியுமா...?' என்று உள் மனம் கேள்வி கேட்டது.


 'அதிகமில்லை ஜென்டில்மேன்!- ஜஸ்ட் ஐந்தே நிமிடம் பண்ணித்தான் பார்க்கறேனே... என்று அதற்குச் சவால் விட்டு விட்டுக் காரியத்தில் இறங்கினேன்.


கண்கள் திறந்திருந்தால், கண் வழியே மனம் சென்று விடுகிறது. எனவே, கண்களை இறுக மூடிக்கொண்டு மனத்தைக் கட்டிப் போட்டேன். சனியனே! எங்கும் நகராதே. இங்கேயே நில்.


"மாநில செய்திகள் வாசிப்பது ஜெயாபாலாஜி. சட்டசபையில் நேற்று மீண்டும் அமளி ஏற்பட்டது. மத்திய அரசின் மீது முதல்வர் புகார் கூறியிருக்கிறார்..."


"அட சட்! கமலா அந்த ரேடியோவைக் கொஞ்சம் ஆ·ப் பண்ணேன். ஒரே நியூஸை எத்தனை வருஷமாகக் கேக்கறது? ஒரு அஞ்சு நிமிஷமாவது தியானம் பண்ண விடு!"

ரேடியோ அணைக்கப்பட்டது. ஏன் கடவுள் காதுகளுக்குக் கதவு வைக்கவில்லை? உஸ்ஸ்... மனக் குரங்கே தேவையற்ற சிந்தனை வேண்டாம். ஒழுங்காகத் தியானம் செய்.


அமைதி. மின் விசிறியின் சப்தம் மட்டும் தான் கேட்கிறது. வாங்கிப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாற்றவேண்டும். ஐந்நூறு ரூபாயாவது ஆகும்.


 தியானம்... தியானம்... எங்கேயோ போகுதே.


கமலா வெங்காய சாம்பார் வைக்கிறாள் போலிருக்கிறது. சூடாக இட்லியும் இருந்தால் நன்றாக இருக்கும். 


சீ! தியானம் செய்யும் போது இட்லி சாம்பாரைப் பற்றி என்ன நினைப்பு! இந்த அல்பமான மனத்தை வைத்துக் கொண்டு எப்படி நான் மகானாவது?


தியானம் செய்வது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. 


அந்தக் காலத்தில் விஸ்வாமித்திரர் நூற்றுக் கணக்கான வருடங்கள் தவம் செய்திருக்கிறாரே.

அவரால் எப்படி முடிந்தது. பசியே எடுத்திருக்காதா? மனம் தவம் செய்தாலும் வயிறு சும்மா இருந்திருக்குமா? தவத்தைக் கெடுத்திருக்குமே! மடையா! முனிவருக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லை? நீ ஐந்து நிமிடங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தினால் ஐம்பது வருடங்கள் தவம் செய்ததற்குச் சமம். எதைப் பற்றியும் நினைக்காதே. தியானம் செய்.


"ஸார் தியானம் பண்றார் போலிருக்கு. சரி, நான் அப்புறம் வரேன்!"

எதிர்வீட்டு ஆசாமியின் குரல் கேட்டது.

"இருங்க, பேப்பர்தானே? நான் எடுத்துத் தரேன். ஏங்க?... கொஞ்சம் எழுந்திருங்களேன். பேப்பர் மேலே உட்கார்ந்து தியானம் பண்றீங்களே?"


கண்களைத் திறக்காமலேயே நகர்ந்து கொண்டேன். திறந்தால் தியானம் கெட்டுவிடும். கமலா பேப்பரை எடுத்து அவரிடம் கொடுத்து அனுப்பினாள்.

நானே இன்னும் பேப்பர் படிக்கவில்லை. லீவு நாள் தானே, தியானத்தை முடித்து விட்டுச் சாவகாசமாகப் படிக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டான் அந்த ஆள்.


சரி சரி... மனத்தைத் திருப்பு. தியான மார்க்கத்தில் போ. 


தியானம் செய்தால் மனம் அமைதி பெறும். 


அமைதியான நதியினிலே ஓடம்... அருமையான பாட்டு. 

சிவாஜி என்னமாய் நடித்திருந்தார்? அநாவசியமாய் அரசியலில் நுழைந்து வேண்டாத மனக் கஷ்டங்களை ஏற்படுத்திக் கொண்டார். சிவாஜி கணேசன் இல்லாத திரை உலகம் என்னவோ போலிருக்கிறது. ஏன் அவர் ஒரு படத்தை டைரக்ட் செய்யக்கூடாது? அடாடா தியானத்தை விட்டு விலகி விட்டோமே. மனமே... 


ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? அலையாமல் ஒரு இடத்தில் நில்லேன்!


ரமண மஹரிஷி மயக்க மருந்து போட்டுக் கொள்ளாமலேயே ஆபரேஷன் செய்து கொண்டாராம். அது அந்தக் காலம். இப்போது, மாத்திரை போட்டுக் கொண்டால் தான் பலருக்குத் தூக்கமே வருகிறது. உடல் வலிமை உணராமல் இருக்க ரமணரால் மட்டும் எப்படி முடிந்தது?


 உடல் வேறு, மனம் வேறு என்றால், உடல் அழிந்த பிறகு மனம் என்ன ஆகிறது, எங்கே போகிறது? 


அடடச்சீ! நமக்கு எதற்கு இந்த தத்துவ விசாரம்? கமலாவுக்கும் அம்மாவுக்கும் நடக்கிற சண்டைகளுக்கே தீர்வு சொல்ல முடியாத நமக்கு இவ்வளவு பெரிய தத்துவங்கள் எல்லாம் எப்படிப் புரியும்? போதும் மனமே சும்மா இரு-


தியானம் முடிந்த பிறகு எதைப் பற்றி வேண்டுமானாலும் நினை. ப்ளீஸ்... கொஞ்சம் ஒத்துழையேன்.


 அலைபாய்ந்து கழுத்தறுக்காதே.

'அலை பாயுதே கண்ணே...! 

என் மனம் அலை பாயுதே!' கமலாவைப் பெண் பார்க்கப் போனபோது அவள் இந்தப் பாட்டைத்தான் பாடினாள். அப்படியும் நான் அவளையே கல்யாணம் செய்து கொண்டுவிட்டேன். ஒரு பாட்டுக்காக ஒரு பெண்ணை நிராகரிப்பது எனக்குச் சரியானதாகப்படவில்லை.


அட, அடங்காப்பிடாரி மனமே! ஏன் இப்படி சண்டித்தனம் செய்கிறாய்? 


ஒரு ஐந்து நிமிடம் அசையாமல் இரு. அப்புறம் எங்கே வேண்டுமானாலும் போய்த் தொலை.


இப்போதுதான் புரிகிறது. மனம் என்பது விலைவாசி மாதிரி. யாராலும் கட்டுப்படுத்த முடியாதது. தறிகெட்டு செல்லக் கூடியது. அதன் இஷ்டத்திற்கு விட்டு விட வேண்டியதுதான். ஆட்சிக்கு வருபவர்கள் அப்படித்தான் செயல்படுகிறார்கள். அதுதான் மரபு.


முடியாது. என்னுடைய மனம் என் பேச்சைக் கேட்க மறுப்பதா? எவ்வளவு நேரமானாலும் சரி, 


ஒரு நிமிடமாவது மனத்தை அடக்காமல் விடுவதில்லை. அட்டென்ஷன். பல்லைக் கடித்து மனத்தை நிறுத்தினேன்.

ஆபீஸரின் முகம் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது. 


இந்த ஆள் இங்கே ஏன் வருகிறார்? போய்யா... 


நாளைக்கு ஆபீஸுக்கு வந்து பார்த்துக் கொள்கிறேன். 

லீவு நாள்ல கூட முகம் காட்டி எரிச்சலூட்டாதே!


திடீரென்று நான் என்னை மறக்க ஆரம்பித்தேன் ஓஹோ... இதுதான் தியானமா?


எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை.


யாரோ என்னை உலுக்கி எழுப்பினார்கள். கமலாதான்.

"ஏங்க... எழுந்திருங்க! தியானம் பண்ணும்போது குறட்டை என்ன குறட்டை

Thursday, November 25, 2021

அட ஆமா..இல்லை


 நம் வலைத்தமிழ் வல்லுநர்கள் நிச்சயமாக ஒரு வித்தியாசமான பதில் வைத்திருப்பார்கள் தானே..

Wednesday, November 24, 2021

வன் கொடுமை ஒழிப்பு நாள்..

 இன்று நவம்பர் 25


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள். 


   டொமினிக்கன் குடியரசில் 

1960 நவம்பர் 25 ல் 

மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர்.

    பாதிக்கப்படும் பெண்களுக்கெதி

ராகவே இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள்.

    'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில்   

பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 

   1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு 

எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது.

    ஐக்கிய நாடுகள் 

பொதுச்சபை 1999 

டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

    பெண்களுக்கு, சமுதாயத்தில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்திருந்தாலும், அவர்கள் மீதான வன்முறைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

    பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, போர்கள், கலவரங்கள், மோதல்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் மற்றும் பிற வடிவங்களினால் வன்முறைக் கொடுமைகளுக்கு உலகம் முழுவதும் பெண்கள் ஆளாகி வருகின்றனர். 

    உலகில் மூன்றில் ஒரு பெண், அவளின் வாழ்நாளில் ஒருமுறையேனும் கொடுமையான வன்முறைக்கு ஆளாகிறாள் என்று ஆய்வு கூறுகிறது.

     இவற்றைத் தடுத்து நிறுத்த உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய நாள் இன்று.


Tuesday, November 23, 2021

படிக்கக் கஷ்டமாக இருப்பினும்.....

 'Relocating to Nursing Home (in Western Countries, Retirement Homes are called Nursing Homes):*


This is an article on the internet that has caused many to reflect on their own lives. The author is a retired writer, and she expressed emotion when she was about to go to a nursing home.


I'm going to a nursing home. 

I have to. 

When life gets to where you are no longer able to take care of yourself completely, your children are busy at work and have to take care of their children and have no time to take care of you, this seems to be the only way out.


The nursing home is in good condition, with clean single rooms equipped with simple and practical electrical appliances. All kinds of entertainment facilities are complete, the food is fairly delicious, the service is also very good. The environment is also very beautiful, but the price is not cheap.


My pension is poorly able to support this. But I have my own house. If I sell it, then the money is not a problem. I can spend it on retirement, and the rest will be left as an inheritance for my son. 


The son understands very well: "your money and your property should be enjoyed by you, don't worry about us." 

Now I have to consider preparing to go to a nursing home.


As the saying goes: Breaking a family is worth tens of thousands, which refers to many things. Boxes, bags, cabinets, and drawers are filled with all kinds of daily necessities: clothing for all weathers and beddings for all seasons.


I like to collect. I have collected a lot of stamps. I have also hundreds of purple clay teapots. There are many small collections, and such small items as pendants of emerald and walnut amber, and two small yellow croakers. 

I am especially fond of books. The bookshelves on the wall are full.


There are also dozens of bottles of good foreign wine. There are full sets of household appliances; various cooking utensils, pots and pans, rice, oil, salt, noodles, flour, spices, various seasonings the kitchen is also full. There are also dozens and dozens of photo albums..., looking at the house full of things, I'm worried!


The nursing home has only one room with a cabinet, a table, a bed, a sofa, a refrigerator, a washing machine, a TV, an induction cooker and a microwave oven -- all the things I will need. 

There is no place to store the wealth that I have accumulated throughout my life.


At this moment, I suddenly feel that my so-called wealth is superfluous, and it doesn't belong to me. I just take a look at it, play with it, use it. It belongs to this world. The wealth that comes in turns is just passing by. 

Whose palace is the Forbidden City? The Emperor thought it belonged to him, but today it belongs to the people and society.


You look at these, you play with these, you use these but you can't take them with you in death.


I want to donate the things in my house, but I can’t get it done. To deal with it has now become a problem. Very few children and grandchildren can appreciate what I have collected. I can imagine what it will be like when my children and grandchildren face these painstakingly accumulated treasures of mine: all the clothes and bedding will be thrown away; dozens of precious photos will be destroyed; books will be sold as scrap. Collections? If you are not interested, you will dispose of them. The mahogany furniture is not practical and will be sold at a low price.


Just like the end of the Red Mansion: only a piece of white left, so clean.


Facing with the mountain of clothes, I only picked a few favourites; I only kept a set of pots and pans for kitchen supplies, a few books that are worth reading; a handful of teapots for tea. 

Bring along my ID card, senior citizen certificate, health insurance card, household register, and of course a bank card. Enough!


It's all my belongings!  I'm gone. I bid farewell to my neighbours, I knelt at the door and bowed three times and gave this home back to the world.


Yes! In life, you can only sleep in one bed, live in one room. Any more of it is merely for watching and playing!


Having lived a lifetime, people finally understand: we don’t need much. Don’t be shackled by superfluous things to be happy!


It's ridiculous to compete for fame and fortune. Life is no more than a bed.


*For people over 60 years old, shouldn’t we think carefully about how to take the last journey in life? *

*Let go of fantasies and baggage, and of those things that can't be eaten, worn, used.*


*Be healthy and be happy*



A GOOD POST WORTH READING..

Saturday, November 20, 2021

இவரே போற்றுதலுக்குரிய கலைஞர்..

 நியாயமாக "மானமிகு" என்கிற பட்டம் இவருக்குத்தான் வழங்கப்பட்டிருக்கவேண்டும். 


#கண்மணி_குணசேகரன் 


 #வஞ்சகரின்_காசை_வாங்கித்தான்... ... ...

#இந்தா_உன்_பணம்.

      #எலிவேட்டையிலிருந்து_ஜெய்பீம்



     #ஜெய்பீம் திரைப்பட இயக்குநர்  திரு த.செ.ஞானவேல் மற்றும் 2D ENTERTAINMENT நிறுவனத்தார் அவர்களுக்கு…


           விவசாயம், வேலை, எழுத்து என கிராமம் சூழ் வாழ்வியலில் இருப்பவன் நான். இச்சூழலில் வாசகராய் அறிமுகமாயிருந்த செந்தில் என்கிற தம்பி என்னை பார்க்க  வருவதாய் (சுமார் இரண்டாண்டுகளுக்கு [சூலை 2019] முன்) சொல்லியிருந்தார். அதன்படிக்கு நான் வீட்டில் காத்திருந்த வேளையில் நாலைந்து பேர்களாய் நீங்கள் (த.செ.ஞானவேல்) என் இல்லம் (மணக்கொல்லை)  வந்திருந்தீர்கள். உடன் வந்த செந்தில் தம்பி தங்களை  ‘இயக்குநர்’ என்று எனக்கு அறிமுகப்படுத்தினார். 


            எனது ‘அஞ்சலை’ நாவல் வாசிப்பின் மூலம் தொடங்கிய உரையாடல் மெல்ல தாங்கள் இயக்கவிருக்கும் திரைப்படம் பற்றி திரும்பியது. திரைப்படத்தின் கதையானது கம்மாபுரம் காவல்நிலையத்தில் வெகுசில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம். நானும் அதை கேள்விப்பட்டிருந்தேன். கதையின் களம் விருத்தாசலம், கம்மாபுரம் சார்ந்த பகுதி என்பதால் இங்கத்திய காட்சிகளில் வரும் உரையாடல் நடுநாட்டு  வட்டார மொழியில் இருந்தால் சிறப்பாக இருக்குமென்றும் பிரதியில் மாற்றி உதவிட வேண்டுமெனவும்  சொன்னீர்கள். 


           எனக்கு திரைக்கதையாடல் பரிச்சயமில்லாத துறையென்பதால் சற்று தயங்கினேன்.  ஆனபோதும் ஊருக்கே வந்துவிட்டதில் என்னால் தட்ட முடியவில்லை.  மேலும்  (உண்மை நிகழ்வில் குறவராக இருந்தாலும்) ஆதுபாதற்ற வாயில்லா சமூகமாய் நைந்து கிடக்கும் சமவெளி பழங்குடியினரான இருளர்களின் வாழ்வை சொல்கிற படமென்பதால் வட்டார வழக்கு மாற்றத்திற்கு சம்மதித்தேன். 


      எனக்கு காட்டப்பட்ட உரையாடல் பிரதியில் (திரைக்கதைப் பிரதி அல்ல) படத்தின் பெயர் இருளர்களின் தம் வாழ்வியலோடு கூடிய “எலி வேட்டை” என்றே இருந்தது. இப்பகுதி சார்ந்த காட்சிகளின்  உரையாடல்களும் சற்றேறக்குறைய இம் மக்களின் மொழிநடையாகவே இருந்ததில் சொற்ப இடங்களில்தான் மாற்றியமைக்குமாறு அமைந்தது.  மேலும் ஒட்டுமொத்த திரைக்கதையிலும் ஒன்றிரண்டு  பெயர்கள் தவிர வேறெதும் சிக்கலாக தெரியவில்லை. அந்த பெயர்களையும் சரிசெய்து கொள்வதாகவும் உறுதியளித்தீர்கள். படம் ‘எலி வேட்டை’ என பரிதாபம் கொள்கிற தலைப்பாக இருந்ததால் அதற்குமேலும் அந்த பிரதியில் நான் ஊன்றி கவனம் செலுத்தவில்லை. 


          கூடுதலாய் ஒரு ஒப்பாரிப் பாடல் வேண்டுமென்றீர். நான் எழுதிக்கொடுத்ததை விடவும் இன்னும் ஆழமாக பாடலை எதிர்பார்க்கவும் நான் தவிர்த்துவிட்டேன். வட்டார உரையாடல் மாற்றம் தொடர்பான பணிக்கு தாங்களாகவே ரூ 50000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பணம் எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கச் செய்தீர்கள். 


           இதனிடையில் கம்மாபுரம் பகுதி பச்சைப்பசேலென இருளர் வாழ்வியல் காட்சிக்கு பொருத்தமாக இராது என விழுப்புரம் பகுதியை தெரிவு செய்து படப்பிடிப்பை முடித்திருந்ததை அறிந்தேன்.


          பிறகொருநாள் படம் திடுமென (எலி வேட்டை யிலிருந்து) பெயர்மாற்றம் பெற்று “ஜெய்பீம்” என இதழ்களில் விளம்பரம் கண்டேன். தொடர்ந்து ‘தலைப்பை மனமுவந்து கொடுத்ததிற்கான கதாநாயகரது நன்றி நவிலல்’ செய்தியையும் பார்த்தேன். அப்போதே எனக்குக் கொஞ்சம் யோசனைதான்.


          அண்மையில் படத்தை பார்த்தவர்கள் எனது பெயர் நன்றி அறிவிப்பில் வந்தது கண்டு மகிழ்வோடு சொன்னார்கள். கூடவே வன்னியர்களின் அக்கினிக் கலச காலண்டர் வைத்த காவல் ஆய்வாளர் வீட்டுக் காட்சியையும் வருத்தத்தோடு பதிவு செய்தார்கள். எனக்கு பேரதிர்ச்சி. 


              என்னிடம் கொடுக்கப்பட்ட பிரதியில் வன்னியர் அக்கினிக் கலசம் போன்ற காட்சி குறியீடுகளெல்லாம் அப்போது அதில் இல்லை. மீறி இருந்திருந்தால் உண்மை நிகழ்விற்கு முற்றும் புறம்பான, தேவையில்லாத  அந்த பகுதியை  உங்களிடம் நீக்க சொல்லியிருப்பேன் அல்லது நான் வழக்குமொழியாக்க வேண்டுகோளை நிராகரித்திருப்பேன். 


       எனது வழக்குமொழியாக்கத்திற்குப் பிறகு அக்கினி கலசம், சாதிய பின்புல விவரிப்பு என எம் சமூகத்தை வன்முறையாளர்களாகவும் கொலையாளிகளாகவும் வலிந்து திணிக்கப்பட்ட வன்னியர் வெறுப்பரசியலை நீங்கள் கையிலெடுத்து திரைக்கதைப் பிரதியில் சேர்த்துவிட்ட குரூரம் குறித்து நெடும் பதிவொன்றை எனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தேன்.


      உடன் ‘பீரியட் படம் என்பதால் ஆர்ட் சைடில் தவறுதலாக வைத்துவிட்டார்களெனவும் அதற்கு உள்நோக்கம் எதுவும் இல்லையென்றும் அப்படியிருந்தால் உங்கள் வீடுதேடி வந்திருக்க மாட்டேன், குறிப்பாக என்மீது வருத்தம் வேண்டாமெனவும் சர்ச்சைக்குரிய அந்த காலண்டர் படத்தை நீக்கச்செய்து விட்டதாகவும்’  சொன்னீர்கள்.


     அதுபோலவே காலண்டர் காட்சியில் திருத்தம் செய்திருந்தாலும் பல இடங்களில் ஒட்டுமொத்த வன்னிய சமூகத்தையே கொலையாளிகளாக சித்தரித்தக் கொடூரத்தையும் வன்மத்தையும் என்னாலும் அதைப் பார்த்த எம் மக்களாலும் தாங்கிக்கொள்ள இயலவில்லை.


       நிலைமையின் தீவிரமுணர்ந்து எங்கள் அன்புமணி அண்ணன் கேட்ட நியாயக் கேள்விகளுக்கு பதிலேதும் சொல்லாமல் “உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்” எனும்படியாய் பிரச்சினையை திசைமாற்றிய உங்கள் நடிகர் சூர்யாவின் தெனாவட்டு விளக்கத்தை எம்மால் சற்றும் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.


       படைப்பாளி, கலைஞன் எனச் சொல்லிக்கொள்வோர்க்கெல்லாம் ஒரு நேர்மை வேண்டும். ‘எலிவேட்டை’ என என்னிடம் காட்டி ‘ஜெய்பீம்’ என நீங்கள் மாற்றுவது உங்களுக்கு சாதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் எலிவேட்டை என்கிற  தலைப்பில் இருக்கிற அதே சாதாரண உரையாடல், பெயர்கள், ஜெய்பீம் என அக்கினிக் கலச குறியீடுகளோடு வருகிறபோது உக்கிரம் கூடி வேறொரு குரூர ரூபம் கொள்கிறது. ஓட்டுமொத்தமாய் ஒரு பொய்த் தலைப்பை வைத்து என்னை வட்டார உரையாடலை எழுதச்சொல்லி பிறகு அவற்றை மாற்றிவிட்டு எனக்கு பச்சைத் துரோகம் இழைத்துவிட்டீர். 


      கூடுதலாய் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திற்கு என் பெயரையும் வைத்து இழிவுபடுத்திவிட்டீர்.


        பட வெளியிடு OTT தளம் என்கிற திமிரில் தெரிந்தே அக்கினி கலசக் குறியீடுகள், சாதியப் பின்புல விவரிப்புகள் என வைத்துவிட்டு அந்த தவறின் விளைவுகளை சற்றும் பொருட்படுத்தாமல் இரு சமூகங்களுக்கிடையே பெரும் பகையுணர்வை தூண்டும் விதமாக அணிதிரட்டி அதனால் காசு சம்பாரிக்க நாளும் அறிக்கை விடுகிற அற்ப வேலையை செய்து வருகிறார் தங்களின் நடிகர்.


     மறைந்த எம் மாவீரன் காடுவெட்டியார் அவர்களையும் ராசாக்கண்ணு கொலைக்கு நீதிகேட்டு நெடுங்காலம் போராடிய என் சமூகத்தாரையும் சிறுமைப்படுத்தி மற்றும் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திற்கு என் பெயரை வைத்துத் தாழ்த்தியும் உண்மைக்கு புறம்பான சித்தரிப்புக்கு விளக்கம் கேட்ட அண்ணன் அன்புமணியின் கேள்விகளை புறந்தள்ளியுமாய் மௌனம் காக்கும் நீங்களும் உங்கள் நடிகர் சூர்யாவின் செய்கைகளும் என்னைப் பெரும் மனஉளைச்சலாக்குகின்றன. 


       செய்த தவறை ஒத்துக்கொள்ள மனிதனாக இருந்தால் போதும். அந்த மனிதத் தன்மை இல்லாமல் கலை, கலைஞன், மயிரு மட்டை என என்ன வேண்டிக்கிடக்கிறது.  


       இருபத்திஐந்து ஆண்டுகாலம் எனது எழுத்தில் தவழ்ந்த எம் நடுநாட்டு மொழியை எம் இனத்திற்கு எதிராக என்னாலேயே திருப்ப செய்துவிட்ட உங்கள் ஏமாற்றுத் துரோகம் இனி எந்த படைப்பாளிக்கும் வரவே கூடாது.


        உங்களால் எனக்கும் எம் இனத்திற்குமாய் சுமத்தப்பட்ட இத்தனை இழிவுகளையும் தாண்டி உங்கள் இழிசெயலால் சம்பாரிக்கிற வருமானத்திலிருந்து நான் பெற்ற அந்த பாவத்தின் சம்பளத்தை வைத்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு கணமும் குற்ற உணர்வில் துடித்துக்கொண்டிருக்கிறேன்.  


    எனவே வட்டார மொழிமாற்ற பணிக்காக தாங்கள் அனுப்பிவைத்தத் தொகை ரூ 50000/-ஐ (ரூபாய் ஐம்பதாயிரம்) தங்களுக்கே திருப்பும் விதமாக அதற்கான காசோலையினை  இக்கடிதத்தில் இணைத்துள்ளேள்.


     என் படைப்பை படித்தவர்கள் ஒருபோதும் எனக்கு பழியை நினைக்கமாட்டார்களென நம்பி ஏமாந்துவிட்டேன். இனிவரும் காலங்களில் இதுபோன்று தூக்கிவிட்டு குலையில் குத்துகிற வஞ்சகர்களை வாழ்வில் ஒருபோதும் சந்திக்காத வண்ணம் என் குலதெய்வம் ‘முதனை  செம்பையனார்’ எனக்கு வழிநெடுகத் துணைநிற்க வேண்டும்.  


(கண்மணி குணசேகரன்)


#குறிப்பு: இந்த கடித நகலும் ரூ50000க்கான காசோலையும்  2D Entertainment நிறுவன முகவரிக்கு பதிவு அஞ்சலில்  இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.