Monday, December 18, 2017

To R K nagar voters

R K நகர் வாக்காளர் பெருமக்களுக்கு

காட்டிக் கொடுத்தல் தவறே        
ஆயினும்                            
குற்றவாளியைக் காட்டிக்கொடுத்தல் பாராட்டுக்குரியதே

                          
துரோகம் வெறுக்கத்தக்கதே      
ஆயினும்                                    
துரோகிக்குத் துரோகம் போற்றத்தக்கதே
                        
ஏமாற்றுதல் அருவருக்கத்தக்கதே
ஆயினும்                                
 நயவஞ்சகனை ஏமாற்றுதல்    செய்யத் தக்கதே
                                  
பணம் பெற்றபின் மாறிச் செயல்படுதல்
நம்பிக்கைத் துரோகமே 
                           
ஆயினும்                                        
கொள்ளை அடித்த நம் பணத்தை
மீண்டும் கொள்ளை அடிப்பபதற்கே தருபவனுக்கு                                      
 மாறாக வாக்களிப்பது                      
நிச்சயம் நியாயமே
                        
இன்றைய நிலையில்                      
அதுவே அரசியல் தர்மமே

Tuesday, December 12, 2017

சராசரித்தனமும் அதீதமும்

சராசரித்தனம் எதையும் சாதித்ததில்லை
அதீதமே அனைத்து மாறுதலுக்கும்
மூலகாரணமாயிருக்கிறது

வெறித்தனம் அனைத்து அழிவிற்கும்
காரணமாதல் போலவே

காதல் எதையும் அழித்து இரசித்ததில்லை
காமமே அனைத்தையும் அழித்து
சுகம் காணவிழைகிறது

ஜாதி மத வெறி அனைத்து அழிவிற்கும்
காரணமாதல் போலவே

பாசம் மருமகனைக் கொன்று
மகளைக் கொள்ள நினைப்பதில்லை

ஜாதி வெறியே எதையும் அழித்து
நினைத்ததைச் சாதிக்க நினைக்கிறது

காதல் கூட பழிக்குப் பழிக்குப் பழி வாங்கி
கணக்கை நேர்செய்ய முயல்வதில்லை

காமமே தந்தையோடு பெற்றதாயையும்
பலி கேட்டு தன்முனைப்புக்குத் தீனியைத் தேடுகிறது

நற்சமூகம் எச்சிறு அழிவையும் இரசிப்பதில்லை
மன அழுக்குச் சமூகமே பிறர் அழிவில்
தன் கொடிக்கு வலுசேர்க்க நினைக்கிறது

அழிகிற இரண்டு குடும்பங்கள் குறித்த
எந்தப்  பச்சாதாபமும் இன்றி
இரு கூறாய்ப் பிரிந்து

பட்டிமன்றம் நடத்துகிற
ஊடகங்கள் போலவே
மதிகெட்ட ஜாதி அரசியல் தலைவர்கள் போலவே