Tuesday, March 28, 2023

கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம்..

 கிடைக்கிற மூன்று கற்களை

சமமாய அடுக்கி
சுற்றி கிடைக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி
பற்றவைத்து
பேப்பருக்குள் எடுத்து வந்த
 மளிகைச்சாமானகளை வைத்தே
சமைக்கத் துவங்குகிறாள் ஆச்சி

சமமற்ற தரையோ
சுழன்றடிக்கும் காற்றோ
எடுக்க மறந்த பொருட்களோ
அவளுக்கு ஒரு பொருட்டாய் இல்லை
கொதிக்கிற குழம்பின் வாசம்
கோவில் வெளியெங்கும்
பரவி விரிகிறது
என்றுமில்லா பசி
குடலுக்குள் உருண்டு புரள்கிறது

நிழலிருக்கும் இடத்தைப் பெருக்கி
சமதளம்ற்ற தரையில்
இலையைப் போடுகிறாள் ஆச்சி
ஊட்டினாலும் முகம் திருப்பும்
பேரப்ப்பிள்ளைகளெல்லாம்
போட்டி போட்டு இலை நிரப்பி
சப்புக் கொட்டி உண்ணுகிறார்கள்

நவ நாகரீக அடுப்படி
அனைத்துப் பொருட்களும் உள்ள
அஞ்சறைப்பெட்டி
சுத்தீகரிக்கப் பட்ட தண்ணீர்
தேக்காலான சாப்பாட்டு மேஜை
இவைகளின்றி ஏதும் செய்ய இயலாத
மருமகள் கள் எல்லாம்
வரிசையாய் அமர
பரிமாறத் துவங்குகிறாள் ஆச்சி

சட்டிக் குழம்பும்
அண்டாச் சோறும்
கற்பூரமாய்க் கரைய
ஏனோ கண்கலங்குகிறாள்
வீட்டில் கேஸ் அடுப்பு கூட
பற்றவைக்கத் தெரியாத
 "அந்த க் காலத்து ஆச்சி "

Railway information

 RAILWAY INFORMATION*

🚂🚂🚂🚂🚂🚂🚂

=======================

*From July 1* these 10 rules of railways changed....

=======================

*1*) The hassle of waiting list will end. Passengers will be given the facility of confirmed tickets in Suvidha trains run by the Railways.

...................................

*2*) From July 1, 50 percent amount will be refunded on cancellation of Tatkal tickets.

...................................

*3*) There has been a change in the rules of Tatkal tickets from July 1. Ticket booking will be done for AC coach from 10 am to 11 am while Sleeper coach will be booked from 11 am to 12 pm.

...................................

*4*) Paperless ticketing facility is being started in Rajdhani and Shatabdi trains from July 1. After this facility, paper tickets will not be available in Shatabdi and Rajdhani trains, instead the ticket will be sent on your mobile.

........................

*5*) Soon railway ticketing facility is going to start in different languages. Till now, tickets are available in Hindi and English in the railways, but after the new website, now tickets can be booked in different languages.

......................

*6*) There is always a fight for tickets in the railways. In such a situation, from July 1, the number of coaches in Shatabdi and Rajdhani trains will be increased.

......................

*7*) An alternate train adjustment system, Suvidha Train and Duplicate Train running of important trains are planned to provide better train comfort during rush hours.

......................

*8*) The Ministry of Railways will run Suvidha trains on the lines of Rajdhani, Shatabdi, Duronto and Mail-Express trains from July 1.

........................

*9*) Railway is going to completely stop premium trains from 1st July.

......................

*10*) 50% of the fare will be refunded on refund of tickets in Suvidha trains. Apart from this, Rs.100/- will be deducted on AC-2, Rs.90/- on AC-3, Rs.60/- per passenger on Sleeper.

Issued in public interest

........................................

*sleep carelessly in the train*, the railway will wake up on arrival at the destination station....

=======================

You will have to activate the Wakeup Call-Destination Alert facility on your PNR by calling 139.

...................................

Railway has started wakeup call-destination alert facility for the passengers traveling in the train at night before reaching the destination station.

.........................

*What is Destination Alert*

=======================

> This feature is named *Destination Alert*.

======================

On activation of the facility, the alarm will sound on the mobile even before the destination station arrives.

........................

> To activate the feature

...................

After typing *alert*

...................

 *PNR Number* has to be typed

And send it to 139.

...................

> 139 *have to call*.

After making the call, select the language and then dial 7.

...................

After dialing *7, the PNR number has to be dialed*. After that this service will be activated

...................................

> This feature is named as *Wake-up Call*.

......................

Mobile bell will ring till it is received

......................

On activating this service, the mobile bell will ring before the arrival of the station. This bell will keep ringing until you receive the phone. On receipt of the phone, the passenger will be informed that the station is about to arrive.

........................................

🙏🏻 *Please send this message to everyone.*🌺😎

Saturday, March 25, 2023

காணும் காட்சி யாவும்...

 வானக் கடலில் பறவை ஒன்று

சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள்
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே

Friday, March 24, 2023

பயிற்சி குறித்து விளக்க ஒரு சிறு முயற்சி.

தொண்டனுக்கு எதற்கு பயிற்சி ?


அவன் தொண்டனாகவே

தொடர்ந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்

அவன் ஒரு கேடராக

மாறவேண்டும் என்பதற்காகத்தான்..


கேடருக்கு எதற்குப் பயிற்சி ?


அவன் கேடராகவே

தொடர்ந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்

அவனும் தலைவனாக

உருவாகவேண்டும் என்பதற்காகத்தான்..


தலைவனுக்கும் எதற்குப் பயிற்சி ?


தலைவன் தலைவனாகவே

தொடரக் கூடாது என்பதற்காகத்தான்

அவன் ஒரு சிறந்த தொண்டனாக

உணர்ந்து  இயக்கத்தில் தொடரத்தான்


தொண்டனான தலைவனுக்கு எதற்குப் பயிற்சி ?


இயக்கமே பிரதானம் என்பதை உணர்ந்து

இயக்கத்தின் உயிராய்த் தொடரத்தான்.

எந்த நிலையிலும் இயக்கத்தை

உயிர்ப்புடன் தொடர வைக்கத்தான் 

Thursday, March 23, 2023

வாட்ஸ் அப்பில் வந்த வாத்தியாரின் புலம்பல்

 *இப்படி ஒரு கவிதையை ஒரு ஆசிரியராக படிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை*

👇👇👇


*பள்ளிக்கூட* 

வகுப்பறையில்

*சல்லித்தனம்* 

நடக்குது!


*சொல்லித்தரும்* 

வாத்தியார

*சுள்ளானெல்லாம்* 

அடக்குது!


*வீணைன்னு* 

நெனச்சதெல்லாம்

*விசிலடிச்சுத்* 

திரியிது!


*தூணுன்னு* 

நெனச்சதெல்லாம்

*துருப்பிடிச்சு* 

உரியுது!


*முத்தலாக* 

விளையும் பயிர்

*முளையிலயே* 

தெரியுது!


*பெத்தவங்க* 

அடிவயிறு

*பெட்ரோலா* 

எரியுது!


*குத்து விளக்கு*

எல்லாம்

*கூட்டம் சேர்ந்து* 

குடிக்குது!


*கத்துத் தரும்* 

வாத்தியார

*சுத்தி கும்மி* 

அடிக்குது!


*முடி வெட்ட* 

சொன்னதுக்கே

*முறுக்கிக்கிட்டு* 

மொறைக்குது!


*அடிபட்ட* 

நாயப்போல

*ஆத்திரத்தில்* 

குறைக்குது!


*தேர்வெழுத போகும்* 

கையில்

*பீர் பாட்டில்* 

நுரைக்குது!


*போற பாத* 

தெரியாம

*போத கண்ண* 

மறைக்குது!


*வால் இல்லா* 

வானரங்க

*வகுப்பறைய* 

கெடுக்குது!


*மேல்நிலைப் பள்ளி* 

மேசைகள

*மேல ஏறி* 

ஒடைக்குது!


*பாடம் வகுப்பில்* 

நடக்கும்போதே

*பாட்டுப்பாடி* 

ஆடுது!


*தோரணையா* 

படுத்துத் தூங்க

*தோழி மடியத்* 

தேடுது!


*படிக்கச் சொன்ன*

வாத்தியார

*அடிக்க கைய* 

ஓங்குது!


*மாணவ* 

சமுதாயத்தோட

*மானத்தையே* 

வாங்குது!


*சமுத்திரமா* 

நினைச்சதிப்போ

*சாக்கடையா* 

தேங்குது!


*சமுதாய* 

நலன்களுக்கு

*மிகப்பெரிய* 

தீங்கிது!


*வருங்காலத்* 

தூண்களெல்லாம்

*வளஞ்சு போயி* 

கெடக்குது!


*பெரம்பெடுத்து* 

திருத்தலாம்னா

*சட்டம் வந்து* 

தடுக்குது!


படித்ததில் பிடித்தது....

Wednesday, March 22, 2023

தண்ணீர் தினம்

 சொட்டு நீரைக் கூட வீணே

விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்
(இன்று உலக தண்ணீர் தினம்)

Tuesday, March 21, 2023

யுகாதி தின நல்வாழ்த்துக்கள்

 செய்யக் கூடாதை செய்து

பாழ்படுத்தியவர்களை விட
செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
 தெளிவாய்ப் இப்புத்தாண்டில் இதை நாம்  உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம் 

Wednesday, March 15, 2023

விந்தையே கவிதை..

 யானைகளைக் கட்டி

பலசமயம்
இழுக்க இயலாதுப்  போனக்
கவிதைத் தேரது

ஒரு சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை

குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது

ஒரு சிறு சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது  விந்தை

படித்து
அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு

மனமளக்க
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை

விதம் விதமாய்
வேடிக்கைகள் காட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை

எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது

நிச்சயம் ........

 அதிசயமே அசந்து போகும்
அதிசயம் போலவே
 விந்தையதே வியக்கும் விந்தைதான்

Monday, March 13, 2023

பெற்றோர்களின் கவனத்திற்கு...

அன்பார்ந்த பெற்றோர்களே!*


*உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.*


*பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.*


*எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.*


*தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களில்*

*ஒரு கலைஞன் இருப்பான்*


*அவனுக்கு கணிதம் தேவைப்படாது.* *அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்* *அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.*


*ஒரு இசைஞானி இருப்பான்* *அவனுக்கு இரசாயனவியல் அவசியமிராது.*


*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்* *அவனது உடல் நலனே முக்கியமன்றி* *பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.*


*பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..* 


*எடுக்காவிட்டால்  தரம் குறைந்த மாணவன என்று*


*தயவு செய்து அவர்களது தன்னம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.*


*அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.* 


*நீ வாழ்க்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.*


*உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.*


*என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.*


*வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.*


*மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.*

 

மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்..

Friday, March 10, 2023

நிஜமாகும் கட்டுக்கதை

 ஏழுகடல் தாண்டி

ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம்
சாத்தியமற்றதென்றும்
அது ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து

சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ  இருக்கும்  உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது

அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
கட்டுக்கதை என நம்பிக்கைகொண்டிருந்த
அரக்கன் கதை  கூட
நிஜமாயிருக்கவும்
சாத்தியமென்றே படுகிறது

Wednesday, March 8, 2023

சங்கல்ப்பம்..

 தேடுதலையே...

நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொள்வதால்
அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போதும்

இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.

Wednesday, March 1, 2023

திரு "வோட்டை " க் கொண்டு..

 ஒரு பிச்சைக்காரனுக்கு சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சைஓடு மட்டுமே. தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். யார் வந்தாலும் பிச்சை கேட்பான். ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.


முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.


சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான்.  ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.


பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன்.


இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு 

காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..


எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம். 

யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.


அந்த துறவி  “அடப்பாவிகளா! மூணு  தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் கோபமாக கேட்க..


பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.


துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.


பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

“சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து 

அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!” என பரிதாபமாக கேட்க...


துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்.


பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

“ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி” என அலறினான்.


துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...


மெள்ள மெள்ள...


மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!


பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.


ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.


பிச்சைக்காரனின் கையில் அந்தத் 

தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!


“அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.


இன்றைய தமிழக மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான். தங்களிடம் இருக்கும் தங்க திரு *ஓட்டில்* (Vote)  பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்.


*ஓட்டின்* மகிமையை என்று உணர்வார்களோ. அன்றே தமிழகம் உலகில் உயர்ந்து விளங்கும்.


சிந்திப்போம்...படித்ததில் பிடித்தது..