Monday, May 30, 2022

முயல்களாகும் ஆமைகள்..

 தொடர்ந்து முயன்றால் ஆமைகளும் முயல்களை வெல்லலாம்  என்பதற்கு உதாரணமாக என்னை விட மிகச்சிறப்பாக எழுதக் கூடியவர்களில் பலர் தொடாத ஏழு இலட்சம் பார்வையாளர்களை வலைத்தளத்தில்  கடந்ததும் ... ...கூகுள் கைடின் பார்வையாளர்கள்  ஒரு கோடியை கடந்து கொண்டிருப்பதுவும் அதிக மகிழ்வளிக்கிறது...அதற்குக் காரணமான உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துகளும்..Saturday, May 28, 2022

நம்பிக்கை..

 சிறுவயதில் ஏதோ ஒரு உபன்யாசத்தில் கேட்ட கதை

கேட்ட இடம் வயது சொன்னவர் என எதுவுமே
சுத்தமாகஎன் நினைவினில் இல்லை.
ஆயினும் கதை மட்டும் எப்படியோ
என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டது
அதுவும் என்னை விடவில்லை
எனக்கும் அதை விட இஷ்டமில்லை
இன்றும் கடலுக்கடியில் பழைய இலங்கை
இருப்பதாகவும்அதை விபீஷணன்
ஆண்டு கொண்டிருப்பதாகவும் வருஷத்தில்
ஒரு குறிப்பிட்ட நாளில் ந்ள்ளிரவில் அரக்கர்கள்
 புடை சூழஇராமேஸ்வரம் வந்து ராமர் பாதம்
 தரிசித்துப்போவதாகவும்அந்த உபன்யாஸ்கர் மிக
அழகாக விளக்கினார்

அப்படி ஒரு சமயம் அவர்கள் ராமேஸ்வரம் வந்து
திரும்பிக் கொண்டிருக்கையில்அதை பார்த்துக்
கொண்டிருந்தகிராமவாசி ஒருவன் எங்குதான்
போகிறார்கள்எனப் பார்த்துவிடுவோம் என்கிற
ஆர்வ மிகுதியால்அரக்கர்கள் சுமந்து வந்த பெரிய
பூக் கூடைக்குள்ஏறி ஒளிந்து கொள்கிறான்
என்ன நடக்கிறது எங்கு போகிறார்கள்
எப்படிப் போகிறார்கள் என்பது எதுவும்
அவனுக்குத் தெரியவில்லை.இரவெல்லாம்
கடலோசை மட்டும்கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அப்படியே அசந்து தூங்கியும் போகிறான்

விடிந்து கூடைக்குள் இருந்து வெளியேறிப்
பார்த்தால் மிகப் பெரியதங்கத்தாலேயான ஆன
அரண்மனைக்குள் அவன் இருப்பது தெரிகிறது
அதன் பிரமாண்டம் அதன் வசீகரம் இவற்றில் மயங்கி
 வாய்பிளந்து
நின்று கொண்டிருந்தவனை காவல் புரிந்து
கொண்டிருந்த அரக்கர்கள்பார்த்துவிடுகிறார்கள்.
நரன் இங்கு வர சந்தர்ப்பம் இல்லையே
எப்படி வந்தான் எனத் தீவீரமாக விசாரிக்க
அவன் நடந்ததையெல்லாம்விரிவாகச் சொல்லி
அழ அவனை நேராக விபீஷன
மகாராஜாவிடம்கொண்டுபோய் சேர்க்கிறார்கள்

அவன் வந்த முழு விவரத்தையும் கேட்டறிந்த
விபீஷண மகராஜா"சரி ஏதோ ஆர்வ மிகுதியால்
இந்த மனிதன் எப்படியோ நம் நகருக்கு
வந்து விட்டான்.நம் நாடு வந்தவன் நமக்கு
விருந்தாளி போலத்தான்அவனுக்கு நம் நாடு
முழுவதையும் சுற்றிக் காண்பியுங்கள்
ஒருவாரம் முடிந்து அவனை நாமே
அனுப்பிவைக்கலாம் "என்றார்

ஒருவாரம் அவனுக்கு ராஜாங்க விருந்து
 உபச்சாரம் தடபுடலாக நடந்தது
அரண்மனை ,அசோக வனம் என என்ன என்ன
 பார்க்க முடியுமோஅதையெல்லாம்அவன் ஆசை
 தீரும் மட்டும் சுற்றிக் காட்டினார்கள்.
தொட்டிக்குள் மீனை நாம்வெளியில் இருந்து
பார்ப்பதுபோல் இவர்கள் வெட்டவெளியில் இருக்க
இவர்களைச் சுற்றி கடலிருப்பதைப் பார்க்க
மலைத்துப் போனான்என்ன புண்ணியம் செய்தோம்
எனத் தெரியவில்லையே எனஎண்ணி எண்ணி
மிகவும் குதூகலம் கொண்டான்அந்த கிராமவாசி.
இப்படியே ஒருவாரம் மிக மகிழ்ச்சியுடம் முடிந்ததும்
அரக்கர்கள் மீண்டும் அடுத்த உத்தரவுக்காக
மகராஜாவிடம் கொண்டு நிறுத்தினார்கள்

"மகிழ்ச்சியா " என விசாரித்த விபீஷண மகாராஜா
முதுகில்சுமக்கும் அளவுபொன்னும்
பொருளும் கொடுத்துஅரண்மனை வாயில் வரை
வந்து "சென்று வா " எனஅனுப்பிவைத்தான்.
அதுவரை மகிழ்ச்சியில்திக்கு முக்காடிக்கொண்டிருந்த
கிராமத்தானுக்கு மேலேகடல் இருப்பதும்
தான் கடலுக்கு அடியில் இருப்பதுவும்
அப்போதுதான் லேசாகப் புரியத் துவங்கியது

" மகாராஜா மன்னிக்க வேண்டும் தங்களுக்கு
தெரியாது இல்லைநான் சாதாரண மானிடன்.
இந்தப் பெரும் கடலை எப்படிக் கடந்து
கரை சேர இயலும் யாரையாவது துணைக்கு
அனுப்பினால்புண்ணியமாய்ப் போகும் "என்றான்

" ஓ அதை மறந்து போனேனோ " எனச் சொல்லி
அருகில்இருந்த அமைச்சரை அழைத்து
ஏதோ காதில் கிசு கிசுக்க
அவர் உள்ளே சென்று எதையோ எடுத்துவந்து
விபீஷணன் கையில் விபீஷண மகாராஜா அதை
அந்தக் கிராமத்தானின்கையில் மறைத்து மடக்கி
 "இதற்குள் ஒரு உயரிய பொருள் இருக்கிறது
அதை கரை சேரும் வரை திறக்காமல் போனால்
கடல் உனக்குவழிவிட்டுக் கொண்டே போகும்
எக்காரணம் கொண்டும் இடையினில்
திறக்கவேண்டாம் " என அறிவுறுத்தி
அனுப்பி வைத்தார்

கிராமத்தானுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை
அவன் நடக்க நடக்க  கடல்அவனுக்கு மிக அழகாக
அகலமான பாதை அமைத்துக் கொடுத்தது
இருபுறமும் கடலும் நடுவில் பாதையுமாக
நடக்க நடக்க அவனுக்கு
பெருமிதம் பிடிபடவில்லை.

பாதிக்கடல் கடக்கையில் அவனுக்கு கையில்
அப்படி என்னதான்உயரிய பொருள் இருக்கக் கூடும்
 என்கிற ஆவல்பெருத்துக் கொண்டே போனது.
உள்ளங்கையில் நடுவில்மிகச் சிறிதாக்
இருந்து கொண்டு இந்தக் கடலையே நகர்த்தி
வழி விடச் செய்யும் அந்த அதிசியப் பொருளை
அவசியம்பார்த்துதான ஆகவேண்டும் என்கிற
ஆசை வெறியாகக் கிளம்ப ஒரு வெறிபிடித்தவன்
 போல் அவன் உள்ளங்கையை விரிக்கிறான்

உள்ளங்கையில் "ஸ்ரீ ராமஜெயம்" என எழுதப்பட்ட
ஓலை மட்டு மே உள்ளது வேறேதும் இல்லை

அவன் ஏமாற்றமடைந்தவன் போலாகி
 "சே.இவ்வளவுதானா .." எனச்
சொல்லி முடிக்கவும் கடல் அவனை அப்படியே
அள்ளிக் கொண்டு உள்ளே கொண்டு போகவும்
சரியாக இருந்தது

இதைச் சொல்லி முடித்த உபன்யாசகர் "நீங்கள்
பெரியவர்கள் ஆகி அனைத்து விஷயங்களையும்
நீங்களே புரிந்து  கொள்கிற வரையில் பெரியவர்கள்
சொல்வதனை வேதவாக்காகக் கொள்ளுங்கள்
இல்லையேல் இந்தக் கிராமத்தான் கதைதான் "
எனச் சொல்லி முடித்தார்

மிகச் சிறுவயதில் இந்தக் கதையை கேட்டபோது
பெரியவர்கள் சொல்கிற எதையும் நம்பிச் செய்தால்
 நிச்சயம் நல்லது என்கிற நம்பிக்கைஎன்னுள்
 ஊறிப் போனதால் தைரியமாக எதையும் செய்யும்
துணிச்சல் எனக்கு இருந்தது

அறிவா அல்லது ஆணவமா என மிகச் சரியாகச்
சொல்லத் தெரியவில்லைகல்லூரி நாட்களில்
இக்கதையில் லாஜிக்கே இல்லாதது போலப் பட்டது
அந்த கிராமத்தான்தான் கடலோடு போய்விட்டானே
 பின்னே இந்தக் கதையை யார் அந்த உபன்யாசகருக்கு
 சொல்லி இருப்பார்கள்என நினைத்து
கேலியாகச் சிரித்திருக்கிறேன்

இப்போது யோசித்துப் பார்க்கையில்  இந்தக் கதை
தரும் ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையை
சிறுவர்களுக்கு அறிவும் லாஜிக்கும்தருமா
என்கிற எண்ணம்தான் தோன்றுகிறது

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Friday, May 27, 2022

தேனி இரயில் நினைவுகள்..(உறவுகள்.)

 என்பதின் துவக்கம் அப்போது நான்  உசிலம்பட்டியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன்.இன்றைக்கும் அனறைக்கும் காலக்கணக்கில்

முப்பது ஆண்டுகள்தான் இடைவெளி என்றாலும் கூட
உண்மையில் இன்றைய உசிலம்பட்டிக்கு அனறைய
உசிலம்பட்டிக்கும் அனைத்து நிலைகளிலும்
ஒரு நூற்றாண்டு வித்தியாசம் இருக்கும்

தாலுகாவாக உசிலம்பட்டியை தரம் உயர்த்திஇருந்தார்களே ஒழிய ஊழியர்கள் அங்கு தங்கிவேலை பார்ப்பதற்குரிய எந்த ஒரு வசதி வாய்ப்பும்
இருக்காது.வீடுகள் வாடகைக்கு இருக்காதுஇருந்தாலும் கழிப்பறை வசதி இருக்காதுநல்ல ஹோட்டலகள் இருக்காது.

உயர் அதிகாரிகள்யாரும் ஆய்வுக்கு வந்தால் கூட மதியம் திரும்பி
மதுரைக்கோஅல்லதுதேனிக்கோசாப்பாட்டுக்குசென்றுவிடுவார்கள்,
மொத்தத்தில் அரசு பணியாளகளைப்பொருத்தமட்டில் அனைத்து துறைகளிலும் அதைஒரு தண்டணை ஏரியாவாகத்தான் வைத்திருந்தார்கள்

எனவே அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும்பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகம் இருக்காதுஎன்பதாலும் மாறுதல் என்பது முயன்றுபெற்றால்தானே ஒழியஅவர்களாகமாற்றமாட்டார்கள்என்பதாலும்கொஞ்சம்
தெனாவெட்டாகத்தான்வேலை பார்ப்பார்கள்

அலுவகப் பணி நேரம்குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டர்கள்
.
அவர்களுக்கெல்லாம் ஏதுவாக வித்தியாசமாக
அந்த புகைவண்டியும் இருந்தது

மதுரையில் இருந்து போடிக்குச் செல்லும்படியாகமதுரை நிலையத்தில் காலை ஒன்பது மணிக்குஒரு புகைவண்டி கிளம்பும்.அந்த வழித்தடத்தில்
அது ஒன்றுதான்பயணிகள் வண்டி.

அது பல்கலைக் கழக மாணவர்கள் வசதிக்காகஅவர்கள் நேரத்திற்கு ஏற்றார்ப்போல புறப்படும்அதில் சென்றால உசிலம்பட்டி பணிக்கு செல்பவர்களுக்குகொஞ்சம் தாமதமாகத்தான் போகும்

ரயில் நிலையத்தில் இறங்கி அலுவலகம் வயல்வெளியில்நடந்துபோய்ச் சேர எப்படியும் தினமும் ஒருமணி நேரம்தாமதமாகத்தான் ஆகும் என்றாலும் அந்த ஊர் மக்களும்அதிகாரிகளும் அதற்கு அனுசரித்து இருக்க
பழகிக் கொண்டார்கள்.

அதைப் போல மாலையிலும்ஐந்து மணிக்கு அலுவலக்ம் முடியும் என்றாலும்
நாலு மணிக்கு அதே புகைவண்டி  வந்து விடும் என்பதாலும்
எல்லோரும் மூன்று நாற்பதிற்கே  அலுவலக்ம் விட்டுபுறப்பட்டுவிடுவார்கள்.இது அங்கு பழகிப் போன  ஒன்று

எல்லோரும் புகைவண்டிக்கு பாஸ் என்பதாலும்தினமும்செல்பவர்கள் என்பதாலும் மாணவர்களும் சரிஅலுவலகப்பணியாளர்களும் சரி.தினமுமே
ஒரு குறிப்பிட்ட பெட்டியில்தான்ஏறிக் கொள்வார்கள்.மாறி ஏறமாட்டார்கள்

கல்லூரி மாணவர்கள் வண்டியில் பாட்டும் கூத்தும்தூள் பறக்கும் என்றால் ஊழியர்கள் பெட்டியில்செட்டு செட்டாகசீட்டுக் கச்சேரி நடக்கும்.
ஒன்பது மணிக்கு ஏறி சீட்டில் அமர்ந்தால்உசிலம்பட்டி வரும் வரையில்
வேறு எதிலும் கவனம் போகாது

இப்படிஒருநாள்புகைவண்டிகிளம்பிக்கொண்டிருக்கையில்
எதிர்பாராதவிதமாகஎங்கள் பெட்டியில்  மாணவர்கள் கூட்டம்
கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது.எங்களுக்கு காரணம் தெரியவில்லை
பல்கலைகழகம்வரும்வரையில்நாங்களும்கண்டுகொள்ளவில்லை

பல்கலைக் கழகத்தில்கூட்டம் இறங்கியதும் எனக்கு எதிரில் இருந்த
நண்பர் சீட்டு விளையாட்டில் அதிகம்கவனம் செலுத்தாமல்முன்புறம் ஒரே பார்வையாகப்பார்ப்பதுவும் அடிக்கடி சீட்டைக் கவிழ்த்துவிட்டு
எதையோ வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தார்அப்படி என்னதான் இருக்கிறது என நான் முழுவதுமாகத் திரும்பிப் பார்க்கையில்
அங்கே ஒரு இளம் வயது பெண் இருந்தாள்

முதல் பார்வையிலேயே அவள் அப்படிப்பட்ட பெண்தான் எனத் தெரிந்த போதும் வயதும் முக  லட்சணமும்எதோ ஒரு தவிர்க்க முடியாத சூழலில்
அப்படிஆகிஇருக்கக்கூடும்என்கிறஎண்ணத்தைபார்ப்பவர்களுக்கு
தோன்றும்படியாகத்தான்அவள்  இருந்தாள்

எங்கள் பெட்டியில் அதிகமான மாணவர்கள் இருந்ததுஏன் எனவும்எனது எதிர்  இருக்கை நண்பர் ஏன் அடிக்கடிஅந்தப் பார்வை பார்த்தார் என்பதும் எனக்குஇப்போதுதான் புரிந்தது நாங்கள் தொடர்ந்துஆடத்துவங்க
எதிர் சீட்டு நண்பரோ எழுந்து போய்அந்தப் பெண் அருகிலேயே மிக நெருக்கமாகஅமர்ந்து கொண்டுகொஞ்சம் சில்மிசம்செய்யத் துவங்கிவிட்டார். எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது

சீட் ஆட்டத்தின் இடையில் பொழுதுபோகஅனைவரும்பல்வேறு விஷயங்களைப் பற்றிகாரசாரமாக விவாதித்து வருவோம்
சமூக அவலங்களும்  அரசியல்வாதிகளின்அசிங்கமானபக்கங்கள் குறித்தெல்லாம் மிக ஆழமாக ஆராய்ந்து பேசுவோம்

இவையெல்லாம் குறித்து அந்த எதிர் சீட் நண்பர்எல்லோரையும் விட மிக தெளிவாகவும்ஆணித்தரமாகவும்உணர்வு பூர்வமாகவும் பேசுவார்.
நாங்கள் எல்லாம் அவர்பேச்சில் உள்ளதார்மீகக் கோபம் குறித்து  அவர் இல்லாத போது பெருமையாகப் பேசிக் கொள்வோம்.
இப்போது அவரது செய்கைஎன்னுள் என்னவோ செய்தது.
சந்தர்ப்பம்கிடைக்காத வரையில்தான் நல்லவர்கள் என்றால்
அது எந்த வகையில் சேர்த்தி ?

நான்சடாரென எழுந்து அந்தப் பெண் அருகில் போனேன்
அவள் முகத் தளர்ச்சி நிச்சயம் சாப்பிட்டு இருக்கமாட்டாள்
எனத் தோன்றியது

அவள் பெயரைக் கேட்டுவிட்டு "சாப்பிட்டாயா " என்றேன்

"இல்லையண்ணே நேற்று பகலில் சாப்பிட்டது " என்றாள்
"எங்கே போகிறாய் " என்றேன்

" போடி " என்றாள்

உடனடியாக என் இருக்கைக்கு வந்து என் பையில் இருந்தமூன்று அடுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டிலைஅவளிடம் கொடுத்து
"இன்னும்  இன்னும் இருபது நிமிடத்தில்உசிலம்பட்டி வந்து விடும் நாங்கள் இறங்கிவிடுவோம்அதற்குள் சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸை
கழுவிக் கொடுத்துவிடு"எனச் சொல்லிக் கொடுத்தேன்.

அவள் பசியின் காரணமோ என்னவோசம்பிரதாயத்துக் கூட மறுக்கவில்லை.எனக்கும்  சாப்பிடக்கொடுத்ததின் மூலம் நண்பனின் சில்மிஷ சேஷ்டைகளைசெயய முடியாமல் போகச் செய்யவும் பசியில் இருந்த ஒருபெண்ணுக்கு உதவிய திருப்தியும் கிடைக்க இருக்கையில்
வந்து அமர்ந்து விட்டேன்.நண்பனும் எரிச்சலுடன் என்எதிரிலேயே வந்து விட்டான் .அந்தப் பெண்ணும்அவதி அவதியாகச் சாப்பிட்டுவிட்டு  நாங்கள்
இறங்குவதற்குமுன்பாகவே  டிபன் பாக்ஸைமிக நன்றாகக் கழுவியும் கொடுத்துவிட்டுஎங்கள் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்

நாங்கள் இறங்க்கும் வரை ஏதோ பெரிய உதவியைச்
செய்தது போலநிறையத் தடவை நன்றி சொன்னாள்.

நாங்கள் இறங்கி நடக்கத் துவஙகஎல்லோருக்கும் ஜன்னலோரம் உட்கார்ந்து நாங்கள்மறைகிறவரை கைகாட்டிக் கொண்டே இருந்தாள்
அதற்குப் பின் நான் அவளை என்றும் நினைத்ததும் இல்லை
எங்கும் பார்த்ததும் இல்லை

ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு நாள்அரசு ஆஸ்பத்திரியில் எனது உறவினர் ஒருவர்உடல் நலமில்லாமல்சேர்த்திருக்க அவரைப் பார்த்து
 நலம் விசாரித்துவிட்டுஊருக்குச் செல்வதற்காகபஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கையில்ஒரு கைக் குழந்தையுடன் யாரோ ஒரு பெண் என்னை
முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது
எனக்கு உண்மையில் யாரெனத் தெரியவில்லை

சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணே என்னருகில் வந்து "என்னைத் தெரிகிறதா " என்றாள்

உண்மையில் அதுவரை எனக்குத் தெரியவில்லை
பின் அவளே "உசிலம்பட்டி ட்ரெய்னில் ஒரு நாள்
சாப்பாடு கொடுத்தீர்களே ஞாபகம் இருக்கா அண்ணே " என்றாள்

அவளா இவள் என எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது
ஒரு நல்ல  ந்டுத்தரகுடும்பத்தைச் சேர்ந்த பெண் போலவே
 முற்றாக  மாறி இருந்தாள் .குழந்தையும் மிக அழகாக இருந்தது

பின் அவளே தொடர்ந்து பேசினாள்
"அன்னைக்கு அப்புறம் போடி போய் கொஞ்ச நாளிலேகேஸிலே மாட்டி கோர்ட்டுக்கு வந்தேன்அப்போஇவங்க அப்பாவும் ஏதோ செய்யாத குத்தத்திலேபிடிபட்டு கோர்ட்டுக்கு வந்திருந்தாங்க
இரண்டு  மூன்று முறை ஒரே நாளில் வாய்தா வந்தது
அடிக்கடி பாக்கிறது நாள இரண்டு பேரும் மனசு விட்டுபேசிக்கிட்டோம்.அப்புறம் அவர்தான் ஒரு நாள்
நாம இரண்டு பேரும் சேர்ந்து இருப்போமான்னு கேட்டாங்க
எனக்கும் ஒரு ஆதரவு வேண்டி இருந்ததுநானும்  சரின்னுசொன்னேன்.

வீரபாண்டி கோவிலிலேஇந்தத் தாலியைக் கட்டினாங்க.இப்ப சின்னமனூரில்
ரோட்டோரம் ஒரு டீக்கடை போட்டு நல்லா இருக்கோம்
வந்தா அவசியம் வாங்க "என்றாள்

அவள்சொல்வதைகேட்கக்கேட்கஎனக்குமிகுந்தசந்தோஷமாக இருந்தது.
ஆனாலும் நம்மிடம் ஏன்இவ்வளவையும் மன்ம் திறந்து கொட்டுகிறாள் என
ஆச்சரியமாகவும் இருந்தது

பின் அவளே கண்களில் லேசாகக் கசிய்த் துவங்கியநீரைத் துடைத்தபடி "எனக்கென்னவோ என்னைக்காவதுஉங்களைப் பாத்து இதையெல்லாம் சொல்லனும்னுதோணிச்சு சொன்னா நீங்க ரொம்ப
சந்தோஷப் படுவீங்கன்னு தோணிச்சு இரண்டு மூணூதடவை
ட்ரெயினுக்கு கூட வந்து பாத்தேன் " என்றாள்

எனக்கும் மனதில் லேசாக நீர் கசியத் துவங்கியது

ஒரு நாள் அன்புடன் கொடுத்த சாப்பாட்டைத் தவிரநானேதும் அவளுக்கு செய்தததில்லை.அது அவளுள்இத்தனை பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறதென்றால்அவள் அரவணைப்பு இன்றி  அது நாள்வரை
எப்படி அவதிப்படிருப்பாள் என  எண்ண எண்ண
என் கண்களும் லேசாக கலங்கத் துவங்கின

பேச்சை மாற்றும் நோக்கில் "பையனுக்கு என்ன பெயர் "என்றேன்

"அவங்க தாத்தா பேர்தான் வைத்திருக்கிறோம்.விருமாண்டி "என்றாள்

"சரி விருமாண்டிக்கு பிஸ்கெட் எதுவும் வாங்கிக் கொடு "என
கையில் கிடைத்த ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்

வெகு நேரம் வாங்க மறுத்து பின் வாங்கி கொண்டாள்
பின் தன் பையனின் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்து
"சாருக்கு வணக்கம் சொல்லு " என்றாள்

"சாரு என்ன சாரு மாமான்னு சொல்லு " என்றேன்

என்ன நினைத்தலோ இடுப்பில் சேலையை
இழுத்துச் சொருகிக் கொண்டு பையனை என் காலடியில் போட்டு
அவளும் தரையில் வீழ்ந்து கும்பிட ஆரம்பித்துவிட்டாள்

நான் விக்கித்துப் போனேன்

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கூட்டம் எங்களை
ஒருமாதிரி பார்க்கத் துவங்கியது

அவர்கள் கண்களில்  மட்டும்  ஏனோ இவர்கள்
என்ன உறவாயிருக்கும்
என்கிற கேள்வி ஆறாய்ப் பெருகிக்கொண்டிருந்தது

Thursday, May 26, 2022

நுண் அரசியல்...

 பிரதமர் மோடியின் நுண் அரசியல். . .

- - -

திரு . மாலன் நாராயணன்  அவர்களின் முகநூல் பதிவில் இருந்து நன்றியுடன் ...


Well done PM!

நுண் அரசியல், நுண் அரசியல் என்று பலர் அவ்வப்போது எழுதியும் பேசியும் வருவதுண்டு. அது என்ன என்பதை இன்றைக்கு நடைமுறையில் புரிய வைத்தார் மோதி.


மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது புறக்கணிக்கிறது என்று வாய் கூசாமல் தேர்தல் களங்களில் திமுக பேசுவது வழக்கம்.

இன்று திமுக தலைவரை மேடையில் வைத்துக் கொண்டே 31ஆயிரம் கோடி 500 லட்சம் ரூபாயில் நிறைவற்றப்பட்ட, தொடங்கப்பட உள்ள திட்டங்களை திறந்து வைத்தார் மோதி. இவையெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்த பின் தொடங்கப்பட்ட திட்டங்கள் அல்ல. அது ஆட்சிக்கு வரும் முன் தொடங்கப்பட்டு இப்போது நிறைவேறியிருப்பவை. திமுகவின் பச்சைப் பொய்களை அதன் தலைவரை மேடையில் வைத்துக் கொண்டு நயமாகத் தோலுரித்தார் மோதி .


செவித் திறன் இழந்தோர் ஒலிம்பிக்சில் வென்றோரில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிவீர்களா? என்று கேள்வி வீசி, அவர்களை நம் முதல்வர் சந்திக்கக் கூட இல்லை மறைமுகமாக நினைவூட்டினார்.


தமிழின் எதிர்காலம் அது அடுத்த தலைமுறையிடமும் தொடர்வதில் இருக்கிறது  வெறுமனே அதன் தொன்மையில் மட்டுமில்லை அதற்கு தாய் மொழி வழிக் கல்வி அதற்குத்தான் புதிய கல்விக் கொள்கை, அதை மறுக்கிறீர்களே என்று  நைசாக ஊசி சொருகினார். அதே நேரம் நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்த போது செம்மொழித் தமிழ் நிறுவனம் வாடகைக்கு ஒண்டுக் குடித்தனம் இருந்ததே என்பதை நினைவூட்டுவது போல, , இப்போது அது  முழுக்க முழுக்க  எங்கள் அரசின் நிதியில்  கட்டப்பட்ட நவீன கட்டிடத்தில் இயங்குகிறது என்பதை அடக்கத்தோடு குறிப்பிட்டார்.என் தொகுதியில் பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் அதன் முன்னாள் மாணவர் பாரதி பெயரில் தமிழ்த்துறை தொடங்கியிருக்கிறோம். நீங்க என்ன செய்தீர்கள் என்று கேட்காமல் கேட்டார்.


வளர்ந்து கொண்டிருக்கும் நாடு வளர்ந்த நாடாக வளர்ச்சி பெற வேண்டுமானால் உள்கட்டமைப்புகள் உருவாக வேண்டும், உள்கட்டமைப்பு என்பது சாலை, தண்ணீர், மின்சாரம் மட்டுமல்ல, அது குறித்த புதிய பார்வை அணுகுமுறை வேண்டும் என்று உணர்த்தினார். குழாயில் எல்லோருக்கும் தண்ணீர் வரும் போது பேதங்கள் தானே குறையும் என்பதை நினைவூட்டினார். 


யாழ்ப்பாணத்திற்குச் சென்ற முதல் பிரதமர் நாந்தான் என்பதை நினைவு கூர்ந்ததன் மூலம் நீங்கள் அங்கம் வகித்த அரசின் பிரதமர் மன்மோகன் சிங் போகதது பற்றி சொல்லாமல் சொல்லி அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்காமல் கேட்டார். உங்கள் கட்சிக்காரர்கள் போய் ராஜபக்ஷவுடன் விருந்துண்டு , நினைவுப் பரிசு பெற்றுக் கொண்டு வந்தீர்களே என வெளிப்படையாகக் கேளாததில் அவரது நாகரீகம் புலப்பட்டது.

அன்றைக்கு கச்சத்தீவை வாரிக் கொடுத்துவிட்டு இன்று  'மீட்பதற்கான தருணம்' எனப் பேச உங்களுக்கு நாக்கூசாதா என்றும் கேட்காதது அவர் பெருந்தன்மை.


புதிதாக ஏதுமில்லாத தமிழக முதல்வரின்  வழக்கமான பல்லவிக்கு பதில் ஏதும் சொல்லாமல்  ஒதுக்கிவிட்டது ஸ்மார்ட்னெஸ் .


மோதியின் நுண்ரசியலின் கிளைமாக்ஸ், சட்டமன்றத்தில் ஜெய்ஹிந்த் சொல்லாததைப் பெருமையாக பீற்றிக் கொண்ட கட்சியின் முதல்வரை மேடையில் வைத்துக் கொண்டே பாரத் மாதா கீ ஜெய், வந்தே மாதரம் இரண்டையும் முழங்கி அதையும் கூட்டத்தினரையும் திருப்பி முழங்கச் செய்தாரே அதுதான்! 

Well done Modi!

Wednesday, May 25, 2022

உண்மையாய் நடிப்பவர்கள்

 துடிப்பது தமிழ்... தமிழ் என்று... : நடிப்பது ஹிந்தி... ஹிந்தி நன்று!


பதிவு செய்த நாள்: மே 09,2022 


தமிழகத்தில் கடந்த ஓராண்டாக தமிழ்ப் பற்றும், ஹிந்தித் திணிப்பும் என பரபரப்பாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.


 தமிழுக்கு ஆதரவாகவும், ஹிந்தித் திணிப்புக்கு எதிராகவும் பல சினிமா பிரபலங்களும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.


தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அதன் மீது பற்றும், பாசமும் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 


தமிழுக்காகவே தங்களை அர்ப்பணித்தது போல பேசும் சிலர் வெளியில் தமிழ்…தமிழ்…எனப் பேசிவிட்டு, திரை மறைவில் ஹிந்திக்கு வலை வீசுவதையும் பார்க்க முடிகிறது.


தமிழ் சினிமாவில் இன்றல்ல கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி சினிமா நட்சத்திரங்கள்தான் முன்னணியில் இருந்து வருகிறார்கள். 


இங்குள்ள தமிழ் பேசத் தெரிந்த, தமிழ் நடிகைகளுக்கு பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வாய்ப்பளிப்பதே இல்லை.


 தமிழ் நடிகைகளுக்கு சில பல லட்சங்கள் சம்பளம் தந்தாலே போதும். 


ஆனால், பாலிவுட்டிலிருந்து வரும் நடிகைகளுக்கு கோடிகளில் சம்பளம், அவர்களுடன் வரும் உதவியாளர்களுக்கு சம்பளம் என எத்தனை கோடி செலவானாலும் தரத் தயாராக இருக்கிறார்கள்.


இங்கு வெற்றி பெற்று ஓரளவு பேரும், புகழும் அடைந்த சிலருக்கு உடனே ஹிந்திக்குப் போக வேண்டும் என்று ஆசை.


 இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலருக்கும் அந்த உண்டு. இங்கிருந்து அங்கு போக வேண்டும் என்ற ஆசையில் சிலர் இருக்க, இங்கு தங்களை நிலை நிறுத்திக் கொள்ள அங்கிருந்து இங்கு ஆட்களை அழைத்து வருபவர்களும் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். 


அது நடிகை, நடிகர்களுடன் நின்று விடாமல் தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் வரை கூடிக் கொண்டே போகிறது.


ஹிந்தியை தீவிரமாக எதிர்க்கும் திமுக.,வின் வாரிசு நடிகரான உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள படம் தான் நெஞ்சுக்கு நீதி. 


அந்த படம் ஹிந்தி படமான ‛ஆர்டிக்கிள் 15' படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.


அஜித்குமார் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹிந்தித் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் நடித்து வருகிறார். “நேர்கொண்ட பார்வை, வலிமை” படங்களைத் தொடர்ந்து தன் 61வது படத்தையும் அவர் தயாரிப்பில்தான் நடிக்கிறார் அஜித்.


தமிழில் தொடர்ந்து தன்னை ஒரு தனித்துவமான இயக்குனர் எனக் காட்டிக் கொள்ளும் பா.ரஞ்சித் கடைசியாகத் தயாரித்த 'ரைட்டர்' படத்திற்கு பாலிவுட் தயாரிப்பாளர்களுடன்தான் கூட்டு சேர்ந்துள்ளார்.


 'பிர்சா முண்டா' வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஹிந்தியில் இயக்குவதாக அறிவித்தார்.


தங்கள் குடும்பத்தையே தமிழ் ஆதரவாளர் குடும்பமாகக் காட்டிக் கொள்ளும் சூர்யா, அடுத்து ஹிந்திக்குச் சென்றுள்ளார். 


அங்கு அக்ஷய்குமார் நடிக்கும் 'சூரரைப் போற்று' படத்தை அவர் தயாரிக்கிறார். அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்களை ஹிந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை.


சர்ச்சைகள் வரும் போதெல்லாம் தன்னை தமிழுக்கு ஆதரவாகக் காட்டிக் கொள்ளும் ஏ.ஆர்.ரஹ்மான், ஹிந்தியில் இசையமைத்த படங்கள் தான் அதிக வெற்றியை ஈட்டியுள்ளன.


 அவரை உலக அளவிற்கும் கொண்டு சென்றுள்ளன. இப்போதும் ஹிந்தி சினிமாவை விட்டு அவர் விலகவில்லை.


'ஹிந்தி தெரியாது போடா' என்று டி ஷர்ட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமயத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ‛ஐயம் தமிழ் பேசும் இந்தியன்' என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்திருந்தார். 


இவரும் ஹிந்தியில் ராஜா நட்வர்லால் என்ற படத்தில் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளார்.


 அதேப்போன்று சமீபத்தில் ஹிந்தியில் டாப் டக்கர் என்ற ஆல்பம் வெளியானது. இதில் ராஷ்மிகா உடன் ஆடி, பாடி, நடித்து இசையும் அமைத்திருந்தார் யுவன்.


யுவனை போன்று 'ஹிந்தி தெரியாது போடா' என்று டி ஷர்ட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், 'டாடி' என்ற ஹிந்திப் படத்தில் நடித்திருக்கிறார்.


இப்படி முன் வாசலில் ஹிந்தியை எதிர்த்துப் பேசிவிட்டு, பின் வாசல் வழியாக ஹிந்திக்கு சால்வை அணிவித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் தமிழ் ஆர்வலர்கள். 


பேசுவது ஒன்று, செய்வது மற்றொன்றாக இருக்கிறது இவர்களது செயல்கள்.


(https://m.dinamalar.com/cinema_detail.php?id=104949)

Tuesday, May 24, 2022

நூல் அறிமுகம்..

 பத்திரிகையாளர் மணா-வின் ‘ஊடகம் யாருக்கானது?’ என்ற நூலின் விமர்சனம்-                    - ஆய்வாளர் பொ.நாகராஜன்


● ஊடகங்களில் பத்திரிகையாளராகவும், ஆசிரியராகவும், இயக்குனராகவும் 42 ஆண்டுகள் பணியாற்றியவரும்; இதுவரை 44 நூல்களையும் 14 ஆவணப் படங்களையும் படைத்தவரும்; பி. ராமமூர்த்தி நினைவு பரிசு மற்றும் வி. ஆர். கிருஷ்ணய்யர் பரிசு பெற்றவர் தோழர் மணா!


● இடதுசாரி சிந்தனையாளரும், கடவுள் மறுப்பாளரும்; சமரசமற்ற எழுத்தாளரும்; எல்லோரிடமும் இனிமையாக பழகுபவரும்; எனது அன்புத் தோழருமான மணா எழுதிய இந்த நூல் – ஊடகத்துறையை ஊடுருவி படம்பிடித்து உண்மையை தரும் படைப்பு! மணாவின் அனுபவ வெளிப்பாடு! அடுத்த தலைமுறைக்கான ஆவண நூல்!


● ஊடகம் யாருக்கானது? என்ற கேள்விக்கான தேடல் என்பதைவிட, ஊடகம் யாருடைய கையில் இருக்கிறது? என்பதற்கான விடையை தேடும் நூலாக இது அமைந்துள்ளது!


● ஊடகம் எப்போதுமே மக்களுக்கானது தான் ! ஆனால் அந்த ஊடகத்தை இன்று கார்ப்பரேட்டுகள் தங்கள் கைகளிலும், ஆட்சியாளர்கள் தங்கள் பைகளிலும் வைத்துள்ளார்கள்! வெகு ஜனங்களுக்கான தீனியையும் தீர்வையும் இவர்கள்தான் தீர்மானிக்கின்றார்கள்!


● இந்த சூழலில் இயங்கி வரும் ஊடகவியலாளர் தான் மணா! தன்னை ஒரு எளிய மக்களின் பிரதிநிதியாக எண்ணி, அவர்களின் வாழ்வியல், சூழல், அடிப்படை பிரச்சனைகளை நேரில் சென்று, கள ஆய்வு செய்து, பழகி, பேசி, பேட்டி எடுத்து, தான் பணியாற்றிய ஊடகங்களில் எழுதி சாதனை படைத்துள்ளார்!


● எத்தனையோ ஆளுமைகளை பேட்டியெடுத்து அவர்களைப் பற்றி அறிவதற்கு உதவியாக இருந்த மணாவையே ஒரு நீளமான பேட்டி ஏறத்தாழ 60 பக்கங்களை கொண்ட பேட்டி சிறப்பாக அமைந்துள்ளது! மணாவும் மனந்திறந்து பதில் தந்துள்ளார்!


● மணாவின் தொடக்க காலம், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், லா.ச.ரா.விடம் கொண்ட ஈர்ப்பு, மார்க்சியத்தை மனதுக்கு நெருக்கமாக கொண்டது, எழுதிய முதல் சிறுகதை, கவிதைத் தொகுப்பு, எழுத்தாளர் பிரமிளுடன் நட்பு, மாலன் நடத்திய பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக சேர்ந்தது இவ்வாறாக ஆரம்பிக்கிறது ஊடகப் பணியும் பயணமும்!


● புலனாய்வு செய்திகளை தேடி அலைந்த மணாவின் அனுபவங்கள் நம்மை அதிரச் செய்கிறது – வேடச்சந்தூர் அருகேயுள்ள கிராமம். தண்ணீருக்காக ஐந்து மைல் தொலைவுக்கு சென்று வரவேண்டியிருந்ததால், அவர்கள் தேர்தலை புறக்கணித்து, ‘ஓட்டுப் போட வேண்டாம்!’… என முடிவெடுத்திருந்தார்கள்.


● அவர்களை நேரில் சந்தித்து விவரங்களை அறிய சென்ற போது, அவர்கள் குடித்து வரும் கலங்கிய நீரைக் குடிக்க தன்னிடம் கொடுக்க, குமட்டலாக இருந்ததை சொல்கிறார் மணா!


தினம் தினம் அந்த தண்ணீரை குடிப்பவரின் மன நிலை எப்படி இருந்திருக்கும்? கள ஆய்வு செய்யாமல் இதை கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருப்பவர் எண்ண முடியுமா? எழுத முடியுமா?


● ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர் ஒன்றில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் சலூன் கடைக்குள் நுழைய முடியாதிருந்ததாம். அதை மீறி நுழைந்தவர்கள் கைகள் வெட்டப் பட்டனவாம். அந்தப் பிரிவினர் ‘வெளுத்து, இஸ்திரி போட்ட துணிகளை போடக் கூடாது’ என்ற கட்டுப்பாடும் இருந்ததாம்!


● அந்த ஊருக்குள் துணிவோடு உள்ளே சென்று, தகவல்களை சேகரித்து, திரும்பி வருவதற்குள் ஏராளமான கஷ்டங்களை சமாளித்து – அது பற்றிய கட்டுரையை எழுதி, ஜுனியர் விகடன் இதழில் வெளியிட்டதால் சில மாறுதல்கள் வந்ததாக மணா தனது பேட்டியில் கூறுகின்றார்!


● “எதிலும் தனக்கு என்ன பலன் கிடைக்கிறது என்பதை மட்டுமே பார்த்தால், சமூகம் தொடர்பான எந்தப் பிரச்சனைகளையும் தொட முடியாது!…” என்று சொல்கிறார் மணா ! சமூக கடமைகளிலிருந்து விலகி நிற்கும் மக்களை நோக்கி, பெரியாரும் அம்பேத்கரும் இதைத்தானே வலியுறுத்தினார்கள்? சமூக நீதியையும் சமத்துவத்தையும் அடைய அதுதானே வழி ?


● துக்ளக் இதழில் சோவுடன் 14 ஆண்டுகள் மணா பணியாற்றிருக்கின்றார். இருவரும் இருதுருவங்கள். அங்கும் தனது தனித்துவத்தை தக்க வைத்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை துக்ளக்கில் சோ ஆதரித்து எழுதிய பின்பு, மணா அதை எதிர்த்து எழுதி வெளிக்கொணர செய்துள்ளார் ! அதற்காக சோவுக்கு நன்றியும் தெரிவிக்கிறார் !


● சோவால் இவர் அடி வாங்கிய கதையும் உண்டு ! துக்ளக்கில் சிறப்பு செய்தியாளராக இருந்த போது, திருச்சியில் இருந்த இலங்கை அகதிகள் முகாமுக்கு செய்திகள் சேகரிக்க மணா போயிருந்தார் ! துக்ளக் சோவோ இலங்கை பிரச்சனையில் ஏகோபித்த தமிழக மக்களின் நிலைப்பாட்டுக்கு கடுமையான எதிர் நிலைப்பாட்டை கொண்டிருந்தவர் !


● மணாவோ ஈழ ஆதரவு நிலைப்பாட்டாளராக இருப்பினும், ‘துக்ளக்’ என்ற பெயரை கேட்டவுடன் சரமாரியாக தாக்கப் பட்டாராம். பின்பு ஒரு தனியறையில் அடைக்கப் பட்டாராம். அதன்பின்னே சில அதிகாரிகளின் உதவியோடு காப்பாற்றப் பட்டார். இதுபற்றி புகார் தர மறுத்ததோடு சோவிடம் பேசும் போது, “உங்கள் மீது இருந்த ஆத்திரத்தை என்னிடம் காட்டியிருக்கின்றார்கள்!” என்று உண்மையைச் சொன்னாராம்!


● கடந்த நாற்பதாண்டு காலப் பத்திரிகையாளர் பணி உங்களுக்கு திருப்தி தருகின்றதா? என்ற கேள்விக்கு,


“சந்தைப்படுத்துவது – உலகமயமாக்கிப் பல சுதேசித் தொழில்களையும், சிறு தொழில்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றது ! வாழ்வில் நம்பிக்கை கொள்வதற்கான காரணங்களை விட, நம்பிக்கை இழப்பதற்கான காரணங்கள் கூடுதலாக உயிர்ப்புடன் நமக்கு முன்னால் இருக்கின்றன!”… என மணா தந்துள்ள பதில் ஊடகதுறைக்கு மட்டுமல்ல எல்லா துறைகளுக்கும் பொருந்துவதாக உள்ளது ! விழித்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது!


● இது சம்பந்தமாக வேறு ஒரு தகவலையும் தருகிறார் மணா. இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருந்த, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான பி. பி. சாவந்த் சொன்னது – “இந்திய ஊடக சுதந்திரம் என்பது பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரம் அல்ல! பத்திரிகை உரிமையாளர்களுக்கான சுதந்திரம்!” மக்களை கைப் பொம்மைகளாக வைத்திருப்பதற்கே இந்த சுதந்திரம் பயன்படுத்தப்படுகிறது என்பது விளங்குகிறது !


● அரசியல் தலைவர்களையும் பல ஆளுமைகளையும் கண்டு, பழகி, உரையாடி, பேட்டி எடுத்த சுவையான அனுபவங்களை தருகிறார் மணா. கலைஞர் முதலைமைச்சராக இருந்த வேளை ஒருமுறை பேட்டி எடுத்து முடிந்த பின்பு, “எப்படியாவது என்னை மாட்ட வைக்கனும்னு நீங்க கேள்வியோடு வந்திருக்கீங்க…. எப்படியும் மாட்டக் கூடாதுன்னு நான் பதில் சொல்லி இருக்கேன்”… என தனக்கே உரித்தான சாதுர்யத்தோடு நிறைவு செய்தாராம், கலைஞர் !


● குமுதம் நிறுவனத்தை விட்டு வெளியேறி வேலையில்லாத போது, எழுத்தாளர் சின்னக்குத்தூசியை அவரது அறையில் மணா சந்தித்தார். “எதற்கும் தளர்ந்திடக் கூடாது… என்ன கண்ணா !” என ஒரு வாஞ்சையான தகப்பனைப் போல ஆறுதல் கூறி, சட்டைப் பையில் முப்பதாயிரம் ரூபாயை திணித்து, பணம் வந்த வேளை திருப்பி தந்தால் போதுமென்று கூறினாராம். அந்த நல்ல உள்ளத்தை மறவாமல் நினைவு கூறும் மாண்புதான் மணா !


● மணாவுக்கு தனது இளம்வயது நாயகன் ஜெயகாந்தனுடன் நல்ல நட்பிருந்திருக்கின்றது. இறுதியில் உடல்நலம் குன்றிய ஜெயகாந்தனை அவரது வீட்டில் சந்தித்த போது, “நான் இறந்தால் என்னைப்பற்றி ஒரு நூல் எழுதுவீயாய்யா?” …என்று சொன்ன கணம் நெகிழ வைத்ததையும் அவர் மறைந்து மூன்று வாரங்களுக்குள் அவரைப்பற்றிய ஒரு தொகுப்பு நூலை கொண்டு வந்ததையும் மணா நன்றியோடு நினைவு கூறுகின்றார் !


● அறிஞர் பெட்ரண்ட் ரசல் இவ்வாறு கூறினார் – “தான் பாதுகாப்பாக இருப்பதாக ஒரு அரசாங்கம் உணரும் போதுதான், கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பு இருக்கிறது!” ஊடகங்கள் தன்னை காப்பாற்றி கொள்ளவே கார்ப்பரேட்டுகளிடமும் கவர்ன்மெண்ட்களிடமும் கைகட்டி சேவகம் செய்கிறது ! அந்த காட்சிகளை நேரடியாக பார்த்து அனுபவித்த சாட்சியின் குரல் இந்த நூல் !


● பத்திரிகை உலகு மீது பத்திரிகையாளர் ஒருவரின் குற்றப் பத்திரிக்கை என்றும் கூறலாம்! தோழர் மணாவுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!


*****


ஊடகம் யாருக்கானது?

- எனது ஊடகப் பயணக் குறிப்புகள்


ஆசிரியர்: மணா


டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்.

முதல் பதிப்பு – ஏப்ரல், 2022

பக்கங்கள் – 216

செல்பேசி:85545 07070


விலை: ₹ 220/-


– பொ.நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.

Sunday, May 22, 2022

புதிய இலக்கிய இதழ்..

 நாசிக்கும் நாவுக்கும் திருப்தியும் குடலுக்கும் உடலுக்கும் தீங்கும் தருகிற துரித உணவு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிற சூழலில் நாசியையும் நாவையும் இரண்டம்பட்சமாக்கி உடலுக்கும் உணர்வுக்கும் அதன் காரணமாய் ஆன்மாவுக்கும் உரம் சேர்க்கிற நல்ல சிற்றுண்டிச்சாலையாய் வெளிவந்து "மிளிர்"கிற சிற்றுண்டி பவனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..


Wednesday, May 18, 2022

Intelligent Indians

 😧*Intelligent Indians*


Brushing with *Colgate*


Shaving with *Gillette*


Bathing with *Pears*


Aftershave with *Old Spice*


Wearing *Allen Solly* shirt


Wearing a *Levis* pant


Eating *Maggi* and 


Drinking *Nescafe*


Watching on a *SONY* 


Using *Vodafone*


Wearing a *Ray-ban*


Seeing time on *RADO*


Travelling in a *Toyota*


Using *Apple computer*


with *Coke* on the side


Finishing lunch at , 

*McDonald's* 


Buying Pizza  for the 

wife from *Dominos*


Drinking *Johnny Walker & Chivas Regale*


Shopping on *Amazon*

And...,


Then asking a question,

*"WHY IS THE INDIAN*

*RUPEE GOING DOWN*

*AGAINST THE DOLLAR*


*Eye opener Message for all intelligent Indians.* 


 *BE INDIAN, BUY INDIAN PRODUCTS*🙏

Tuesday, May 17, 2022

படித்தறிவோம்..பகிர்வோம்..

 Received on WhatsApp -Thought provoking....

--------------------------------

*Dr. Milind Kulkarni HR L&T*


Just because I am holding a senior position in HR with L&T, I have been getting many requests from my relatives, friends,  acquaintances, to help their sons or daughters, who have freshly passed out from engineering college, to get job in L&T. The number of requests are huge. So many fresh engineers are unemployed, I could hardly helped only few of them to get job in L&T or in some other companies where I have contacts. I feel bad to say NO to many of the requests or for those whom I can't help. They get disappointed... I can understand. Parents invest their life time earned money just to see their sons or daughters getting degree in engineering.


They think that jobs are easily available for engineers. After interviewing many of them, I can't even tell them  that your son or daughter do not even have minimum required technical knowledge. Getting first class or distinction has become so easy without having fundamental knowledge of engineering. *It's high time for parents to stop running behind engineering degrees.*


*USA produces around 1 lakh engineers per year for a $16 trillion economy.*


*India produces 15 lakhs engineers for a $2 trillion economy.* 


The earlier mass recruiting sector was Manufacturing. It used to recruit from the core branches like Electrical, Mechanical, Civil etc. But, Manufacturing is relatively stagnant at 17% of the GDP. So the core branch placements have become very difficult. 


The more recent mass recruiter was the IT sector. It grew from scratch to almost 5% of the GDP in a short time. IT Employed millions of engineers. 


Now, IT is also saturating. Only good, skilled IT Engineers are in demand. 


If you look at the sectoral composition of Indian economy, most of the sectors do not need engineers. Tourism is 10% of the GDP, does not require engineers. Financial sector, Trade, Hotels and Restaurants do not require engineers. Requirement of engineers in Health, Education, Agriculture is also negligible. 


*More than 50% of the GDP has no role for Engineers.* Still most of Indian youth are becoming Engineers. The situation is not sustainable . 


Demand is low while supply is high. Over and above this, skill level of an average engineer is poor, almost its non-existent in many cases. If we leave aside the top 100–200 colleges, most fresh engineers have no idea of what they studied. Ask a fresh mechanical engineer, can s/he design a simple frame? 


Today the situation is that most engineers are working in a field that has no connection to what they have studied in the college. This is a waste of resources. 


Engineering degree does not come cheap. It costs about 10-15 lakhs. For poor parents, its a huge burden. When their son / daughter is not able to secure a job, they are devastated. 


For the nation, you can calculate the loss. Leave around 1 lakh engineers that NASSCOM says are employable. The rest 14 lakhs have each wasted 10 lakhs of fees. That totals to around $20 Billion. Almost equal to the Government’s spending on healthcare. Over this, there is loss of human capital. 


India need to replan the whole engineering education system. Goverment need to  cut down on the number of colleges and improve the quality in the rest. 


*Also students should explore other career options than everyone becoming Engineers.* 


When it comes to education, a multitude of options are available today! From Aviation, to Hotel Management, Short Term Programs to big movie production courses, Data science, cyber security, Information Security, Cloud Technology Designing, Indian Armed Forces, Animation and VFX, Digital Marketing, Film Making, Technology Courses like SQL, PHP, Big Data, C, C++, etc. and much more! 

For a majority of courses like these, there are entrance exams too, such as the NATA, CEED, NID entrance, NIFT entrance, NDA entrance, MBA Entrance, Hotel Management entrance, CET, NEET and many more! Here, the right training goes a long way in getting your child admission to their dream institute! *Do you know what are the top career tracks of 2018 other than engineering??* See the following list.


1. Animation, VFX and Multimedia

2. Fashion Design, Event Management and Interior decoration.

3. Aeronautical and Aviation

4.  Film making, Script Writing and Acting.

5. IT, cloud and data science.

6. Networking, information security.

7. Beauty, Modelling and Cosmetology

8. Fitness, dietitian and nutritionist

9. Foreign languages.

10. Music and Dance.


So, plesse share this with your relatives /friends / 12th pass students and help them in planning their education and carrer appropriately than madly running after engineering admissions!!

Sunday, May 15, 2022

படித்ததும்...

 🌳🌨️🌳🌨️🌳🌨️🌳🌨️


*இனிய மாலை வணக்கம்*🙏🙏🙏🙏


*பணம் மட்டுமே* *தேவைகளை பூர்த்தி செய்கிறது என நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி*.....


*லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி.* *பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை  பார்த்துப் பார்த்துக் கட்டினார். சொந்தமாக ஒரு ஜெட் விமானம் உள்ளது. ஒருநாள் அது கடலில்* *விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிடிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. இறுதியில் விமானம் மட்டுமே கிடைத்தது.*


*அவர் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்ய கடைசிவரை அவரது உடல் கிடைக்கவே இல்லை.*


*பிரிட்டனைச் சார்ந்த பெரும்* *பணக்கார யூதர் ரூட் சைல்ட்* . *அவரிடமிருந்த அபரிதமான செல்வச் செழிப்பால்  சிலசமயம் பிரிட்டன் அரசுக்கே* *கடன் கொடுப்பாராம். ரொக்கமாக இருக்கும் செல்வத்தை சேமித்து வைக்க* *பாதுகாப்பு அம்சங்களுடன் தனியாக ஓர் அறையைக் கட்டினார்.*


*ஒருமுறை அங்கு நுழைந்தவர் அறியாமல் கருவூலக் கதவை* *அடைத்துவிட்டார். அவ்வளவுதான்! கடைசிவரை கதவு திறக்கவே இல்லை.* *சப்தமிட்டார்.. கத்தினார்.. யாருக்கும் கேட்கவில்லை.* *காரணம், அவர் தங்குவது வீடல்ல.. அரண்மனை. பெரும்பாலும் அரண்மனையிலிருந்து*....... *பலநாள் உல்லாசப் பயணம் சென்றுவிடுவார்*. *அன்றும் அவ்வாறே சென்றிருப்பதாக குடும்பத்தார் நினைத்தனர்.*


*பசியாலும் தாகத்தாலும் கத்திக் கத்தி கூச்சலிட்டு பணக்கட்டுகளுக்கு மேல் கிடந்து மரணித்தார்.* *மரணிக்கு முன் விரலைக் காயப்படுத்தி சுவரில் எழுதினார் இப்படி:* *உலகிலேயே பெரும் பணக்காரர் பசியாலும், தாகத்தாலும்  இறக்கிறார்..... என்று*


*சில வாரங்களுக்குப் பின்னரே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.*


*உலகில் பிறந்தவர்கள் என்றேனும் ஒரு நாள்  உலகைப் பிரிந்தே ஆகவேண்டும்.* *ஆயினும் எங்கே? எப்போது? எப்படி? என்பது மட்டும் யாருக்கும் தெரியாது*.... 


*எனவே மத, இன, *ஜாதி வேறுபாடுகளால்*

*யாரையும் வெறுக்காமல்,* *யாரையும் ஒடுக்காமல்,* *யாரையும் மனதால் காயப்படுத்தாமல், யாரையும் கேவலப்படுத்தாமல்,* *நாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கருதாமல் வாழ்பவர்களுக்கு வாழ்த்துக்கள்*!💐💐

*நல்லவன செய்வோம்.எங்கும் எதிலும் எந்நேரத்திலும் நம்மால் இயன்ற உதவியை செய்வோம்.*👍👍


படித்ததும் பகிரப்பிடித்தது..

Wednesday, May 4, 2022

கொஞ்சம் செவி கொடுப்போமா

 👆👆👆👆👆

தமிழர்களுக்கான உரிமைக்குரல்


பொய்யான குற்றம் சாட்டப்பட்டு அரசவையில் முன்னிறுத்தப்பட்ட கோவலனை முழுமையாக விசாரிக்காத பாண்டிய மன்னன், கோவலனுக்கு மரணதண்டனை அளித்தான். தன் கணவன் கொல்லப்பட்டதை அறிந்த கண்ணகி, பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று நீதி கேட்டு, மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கிவிட்டு அங்கிருந்து கோபத்துடன் வெளியேறுகிறாள். அங்கிருந்து 14 நாட்கள் நடந்து, தேனி மாவட்டம், கூடலூர் அருகிலிருக்கும் மலையுச்சிக்குச் சென்று, அங்கிருந்து தன் கணவனுடன் விண்ணுலகம் சென்றார்.


அதை நேரடியாகப் பார்த்த மலைவாழ் மக்களான பளியர் இன மக்கள், தாங்கள் கண்ட காட்சியை சேர மன்னன் செங்குட்டுவனிடம் தெரிவிக்க, சேர மன்னன் செங்குட்டுவன் வடக்கேப் படையெடுத்துச் சென்று, இமய மலையிலிருந்து கல் எடுத்து வந்து கண்ணகிக்குச் சிலை செய்து கோயில் கட்டினான். அந்தக் கண்ணகி கோயிலே, மங்கலதேவி கண்ணகி கோயில் என்று அழைக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், கூடலூர், பளியன்குடி எனுமிடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்கு நடைபாதை மட்டுமிருந்த நிலையில், 1976 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கோயிலுக்குச் சாலை அமைக்கத் திட்டமிட்டது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, கேரள அரசு குமுளியிலிருந்து கோயிலுக்குச் செல்வதற்காக 14 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சாலையமைத்தது. இந்தச் சாலை அமைக்கப்பட்ட பின்பு, இந்திய அரசின் தொல்லியல் துறை, கண்ணகி கோயிலை நிர்வகிக்கும் உரிமையைக் கேரள அரசிடம் வழங்கியது. தமிழக எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் கண்ணகி கோயில் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றதால், தமிழ்நாட்டு மக்கள் கண்ணகி கோயிலுக்குச் சென்று வழிபடும் உரிமையை இழந்து தவிக்கின்றனர். 


கேரள அரசு கண்ணகி கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல, ஆண்டுக்கொரு முறை, ஒரு நாள் (சித்திரை முழுநிலவு நாள்) மட்டுமே அனுமதிக்கிறது. 


இந்தக் கோயில் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்குச் செல்லத் தமிழ்நாடு அரசு சாலையமைக்க வேண்டுமென்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்காடிய வழக்கறிஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள், “மங்கலதேவி கண்ணகி கோயில்” குறித்து முழுமையான செய்திகளை உரையாக வழங்கவிருக்கிறார்.


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்தி வரும் “இணைய வழியிலான தமிழியல் உரை மற்றும் கலந்துரையாடல்” நிகழ்வில், வருகிற 8-5-2022, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு, சென்னை, வழக்கறிஞர் திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள், “மங்கலதேவி கண்ணகி கோயில்” எனும் தலைப்பில் வழங்கும் உரை, வெறும் உரையல்ல... அது தமிழர்களுக்கான உரிமை... குரல்.   


இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள், https://meet.google.com/hzr-ekri-gmf எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.

Sunday, May 1, 2022

ஒருமுறை வாசித்து வைக்கலாம்..

 'உங்கள் வங்கிக் கணக்கில் உங்களுடைய PAN எண்ணினை இணைக்க வேண்டும். இந்த இணைப்புச் சுட்டியைச் சொடுக்கி உள்ளிடவும்’ என்று மொபைலில் வந்த குறுந்தகவலைச் சொடுக்கி தனது வங்கிக் கணக்கு விபரங்களை உள்ளிட்டிருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர். அந்த இணைய தளம் அவருடைய வங்கியின் இணைய தளம் போலவே அச்சு அசலாக இருந்ததால் அவர் அது உண்மையான வங்கியின் இணைய தளம் என்று நம்பி ஏமாந்து விட்டார். அடுத்து அவருக்கு OTP வந்துள்ளது. அதையும் என்ன ஏதென்று சரியாகப் பார்க்காமல் உள்ளிட்டிருக்கிறார். ஒரு முறைக்கு மூன்று முறை வந்துள்ளது. மூன்று தடவையும் முடிந்த பிறகுதான் அவர் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டுள்ள விபரமே அவருக்குத் தெரிய வந்துள்ளது. 


புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளரும், பேராசிரியருமான ஒருவருக்கும் இதே போல சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. நன்கு படித்து, விபரம் புரிந்தவர்களுக்கே இப்படி என்றால்.. சாமானிய மக்களின் கதி என்ன?


நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் நம்முடைய கடமைதான். உங்கள் பெற்றோருக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் இப்போதே இது குறித்து தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். தொலைக்காட்சி, ஊடகங்களில் அடிக்கடி ஒளிபரப்பாகும் மொபைல் விளையாட்டுச் செயலிகளில் கூட நமக்குத் தெரியாமல் வினை ஒளிந்திருக்கலாம். எந்தவொரு மொபைல் செயலியைத் தரவிறக்கம் செய்யும் போதும் அது உங்கள் மொபைலில் என்னென்ன தரவுகளை எடுத்துக் கொள்கிறது என்பதைப் பார்க்கவும். மொபைலில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள், இதர சேமிப்பு ஆவணங்கள் என்று சகலத்தையும் பார்க்க அனுமதி கேட்டால் ஒன்றுக்கு லட்சம் முறை யோசித்து, அந்தச் செயலி கட்டாயத் தேவைதானா என்று முடிவெடுத்த பிறகே அனுமதியைத் தரவும். 


வங்கிக் கடன் உள்ளிட்டவை வாங்கும் போது நான்கைந்து பக்கங்களில் பொடி எழுத்துகளில் terms and conditions என்று உள்ளதை படித்துக் கூட பார்க்காமல் கையெழுத்திடும் அவசரத்தை இதிலும் காட்ட வேண்டாம். 


சமீபத்தில் பிரபல சிட்ஃபண்டு நிறுவனம் ஒன்றில் மாதாந்திர சீட்டு ஒன்றில் இணைந்தேன். வந்தவர் வரிசையாக கையெழுத்துகள் கேட்டார். எதிலுமே விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்யப்படவே இல்லை. கேட்டதற்கு, “ஆஃபீஸுக்குப் போய் பூர்த்தி செஞ்சிடுவேன் சார்” என்றார். “எனக்கு அவசரமே இல்லை. இங்கேயே பூர்த்தி செய்யுங்க. அப்புறம் நான் கையெழுத்து போடுறேன்” என்றேன். அதே போல கூடுதலாக சில படிவங்களில் கையெழுத்து கேட்டார். அது எதற்கு என்று கேட்டதற்கு, “ஏலத்திலே கலந்துக்கவோ, சீட்டு எடுக்கவோ நீங்க வரத்தேவையில்லை. அதையெல்லாம் நானே பார்த்துக்குவேன். அதற்கான அனுமதி ஒப்பந்தம்” என்றார். “இப்போதான் சீட்டுலேயே சேருறேன். அதுக்குள்ளே சீட்டு எடுக்கறதைப் பத்தி ஏன் யோசிக்கணும்? எனக்கு சீட்டு எடுக்கத் தேவை இருக்கும் போது, நானே வரேன். அப்படி இல்லைன்னா அப்போ கூப்பிட்டுச் சொல்றேன். நீங்க இந்தப் படிவங்களை எடுத்துட்டு வந்து கையெழுத்து வாங்கிக்குங்க” என்றேன். “எல்லாரும் இப்படித்தான் கையெழுத்து போட்டுக் கொடுத்துடுவாங்க சார்” என்றார். எல்லாரும் கிணத்திலே குதிக்கிறாங்கன்னு நாமளும் குதிக்க முடியுமா என்ன? நான் மறுத்து விட்டேன்.  எதுவாக இருந்தாலும் நாம் வாய் திறந்து கேட்க வேண்டும். கேட்டால் மட்டும்தான் விளக்கம் கிடைக்கும். லோன் கொடுக்கிறவன்கிட்ட கேள்வி கேட்டால் கொடுக்காம விட்டுடுவானோ.. கடைக்காரர்கிட்ட கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டாரோ.. என்று தயக்கத்திலும், கெளரவம் பார்ப்பதிலேயுமே இங்கே நாம் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடுகிறது.


நேரடியான விஷயங்களுக்கே இப்படி என்றால் மொபைல் செயலிகளில் இன்னமும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டாமா என்ன? 


நான் பலமுறை சொல்வதுதான்.. வங்கிப் பரிமாற்றங்களுக்காக தனியே ஒரு மொபைல் எண் / மொபைல் போன் வாங்கிப் பயன்படுத்துங்கள். அந்த எண்ணிற்கு தனியே டாப்-அப் செய்ய வேண்டியிருக்கிறதே என்று நூற்றுக்கணக்கில் கணக்கு பார்த்து லட்சக் கணக்கில் இழந்து விட வேண்டாம். அப்படி வாங்கி வைத்திருக்கும் எண்ணையும், வங்கிக் கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரியையும் ஏனைய பொதுப்பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம். 


ஒவ்வொரு முறை இணைய தளம் வழியாக உங்கள் வங்கிக் கணக்கை பார்க்கச் செல்லும் போது நீங்களே இணைய தள முகவரியை உள்ளிட்டு உள்ளே நுழையவும். மின்னஞ்சலிலோ அல்லது குறுந்தகவலிலோ வந்த இணைப்புச் சுட்டியைச் சொடுக்கி உள்நுழைய வேண்டாம். 


’அட்டை மேலே உள்ள 16 டிஜிட் நம்பர் சொல்லுங்கோ’ என்று கேட்டு மட்டும்தான் பணம் பறிபோகும் என்றில்லை. அதைத் தாண்டியும் பல புது டெக்னிக்குகள் உபயோகப்படுத்தத் தொடங்கி விட்டனர். 

கிரெடிட் / டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது மட்டும் ON செய்து வைத்துக் கொள்ளுங்கள். பயன்படுத்தி முடித்தவுடன் சோம்பல் படாமல் OFF செய்து விடவும். இதற்கான வழிமுறைகள் உங்கள் வங்கிச் செயலி / இணைய தளத்திலேயே இருக்கும். ஒரு நாளைக்கு நூறு முறை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டி இருந்தாலும் நூறு முறையும் இதைச் செய்யுங்கள். தவறில்லை.


அதே போல கிரெடிட் / டெபிட் கார்டுகளில் ஒவ்வொரு பரிமாற்றத்திலும் அதிகபட்சம் எவ்வளவு செய்ய விருப்பம் என்றொரு வசதி இருக்கும். அதையும் சொடுக்கி 5,000 அல்லது 10,000 என்பது போல வைத்துக் கொள்ளுங்கள். எப்போதாவது லட்சக் கணக்கில் உபயோகிக்க வேண்டிய தேவை இருந்தால் அப்போது மட்டும் அதை மாற்றி வைத்துக் கொள்ளலாம். தப்பித்தவறி எதாவது ஒரு வழியில் பண இழப்பு வந்தாலும் அந்த அதிகபட்சத் தொகையோடு போய் விடும். (அதுவே ஏழெட்டு முறை OTP வந்து கவனிக்காமல் அனைத்தையும் கொடுத்து பறிபோனால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது!)


இப்போதெல்லாம் கிரெடிட் / டெபிட் கார்டுகளை மெஷினில் தேய்க்காமல் அப்படியே தொட்டு செலவழிக்கும் முறை பிரபலமாகி வருகிறது. அதிலும் கூட அதிகபட்சத் தொகை என்று ஒரு சில ஆயிரங்களை மட்டும் வைக்கவும். 


இணைய தளம் வழியே பணப் பரிமாற்றம் செய்ய யாருடைய வங்கிக் கணக்கையாவது இணைத்திருந்தால், மாற்றி முடித்தவுடன் அதனை நீக்கி விடுங்கள். அடிக்கடி மாற்றத் தேவையுள்ள எண்ணை மட்டும் சேமிப்பில் வைத்திருந்தால் போதும். இல்லையென்றால் சமயத்தில் கை தவறுதலாக எதோ ஒரு எண்ணுக்கு மாற்றச் செய்ய நேரிடலாம். பணம் திரும்பப் பெறும் வரை மன உளைச்சல் வரும்.


சின்னச் சின்ன விஷயங்கள்தான்.. ஆனால் ஒவ்வொரு தடவையும் இதையெல்லாம் செய்து வந்தால் ஓரளவு நிம்மதியாக இருக்கலாமே!


- மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்

fb.com/mayavarathaan