Thursday, September 30, 2021

கூகுள் பெற்ற கௌரவம்

 கூகுள் நம் நடிகர் திலகம் அவர்கள் பிறந்த நாளில் அவருக்குக் கொடுத்த கௌரவம் எனவும் சொல்லலாம்.பகிர்ந்ததன் மூலம் .கூகுள் பெற்ற கௌரவம் எனவும் கொள்ளலாம்.


Wednesday, September 29, 2021

டாங்க்ஸ் அண்ணே...

அண்ணே அண்ணே இரண்டு கையிலேயும்

வாட்ச் கட்டிக்கிட்டு போறாரே அவ்ரு யாருண்ணே


அவர் தாண்டா நம்ம ஊருக்கு புதிசா

வந்திருக்கிற வாத்தியாரு


ஏண்ணே ரெண்டு வாட்சு கட்டி இருக்காரு


புரோட்டத் தலையா அவருக்கு வசதி இருக்கு

கட்டிக்கிறாரு..இதில உனக்கு என்ன பிரச்சனை


அது இல்ல அண்ணே  காசு இருக்குண்ணா

தலைக்கு ரெண்டு தொப்பியும்

காலுக்கு நாலு செருப்பும் போடுவாங்களாஅண்ணே


வாத்தியாருண்ணா தெளிவாத்தான் இருப்பாங்க அண்ணே

காரணம் இல்லாம கட்டமாட்டாங்க அண்ணே 

காரணன் தெரிஞ்சிக்கிட்டா..நானும் கூட

கட்டிக்கலாம்னுதான்னே கேட்கறேன். அண்ணே

 .

ஓ நீ அப்படி வாரையா...


இவருக்கு இங்கே ,மட்டுமில்லை 

அமெரிக்காவுலயேயும். உறவுக்காரங்க இருக்காங்க

அந்த நேரத்தையும் தெரிஞ்சிக்கத்தான் கட்டி இருக்காரு

விளங்கிச்சாடா மாங்கா மடையா..


அப்படி இருக்காதுண்ணே.அடுத்த தெருவில

கை நாட்டு கந்த சாமி மகன் கூட அமெரிக்காவுலதானே

இருக்கான்..அவன் வாட்சே கட்றது இல்லை அண்ணே..

ஆனா கரெக்டா அந்த ஊர் டயத்தை 

சொல்லிப் புடுவாருண்ணே..

வேற ஏதாச்சும் காரணம் இருக்கும்ண்ணே


சரி விடு.. ஒன் வழிக்கே வாரேன்,

அவரு எப்படி அந்த ஊரு டயத்தை

சரியாய் சொல்றாரு...


அப்படி வாங்கண்ணே.. அவரு ஈஸியா

ஒரு வழி வச்சுருக்காருண்ணே..

இங்கே பகல்னா அங்க ராத்திரி

அங்கே ராத்திருன்னே இங்கே பகலு


என் கிட்டே டயத்தை கேப்பாருண்ணே

அப்படியே நம்ம் நேரத்தோட இரண்டு மணியை

கூட்டுவாருண்ணே...அம்புட்டுத்தான் அண்ணே


அட பிஸ்கோத் வாயா... நானும் நீயும் இப்படி

ரோட்லேயும் வெய்யிலிலேயும் அலையுரோம்

பகல் ராவு தெரியுது..அவுக எல்லாம்

ஏ.சிக்குள்ளேயே புழங்குறாவங்க

அப்படி  உள்ளேயே இருந்தா பகல் ராவு

எல்லாம் ஒண்ணாத்தான் தெரியும்

அப்புறம் எப்படி பொழுது தெரியும்


இப்படி அப்படின்னு மாத்தி கணக்குப் பண்ண முடியும்

நீ காசியைக் கண்டியா ஏ .சியைக் கண்டியா

தெரிஞ்சாத்தான் அவக கஸ்டம் உனக்குப் புரியும்


ஆமாண்ணே நீ சொல்றது  சரிதாண்ணே

நான் நீங்க சொல்ற மாதிரி மடையன் தாண்ணே

இல்லாட்டி இதை தெரிஞ்சுக்காம இருப்பேனா..


ஆனா இன்னொரு சின்ன சந்தேகம்ண்ணே


இரண்டு வாட்ச்சுல எது நம்ம வூருது

எது அவுக வூருது எப்படீண்ணே கண்டு பிடிப்பாங்க


அட முட்டாப்பயலே வலது கை நம்ம ஊரு

இடது கை அவக ஊருண்ணு வச்சுக்கிருவாங்கடா

இதுக்கு மேலே எதுவும் கேட்டே தொலைச்சுப்புடுவேன்

ஆமா...


அண்ணே அண்ணே கோவுச்சுக்காத அண்ணே

தெரியாமத்தானே கேக்றேன்.

பகல் ராவே தெரிஞ்சுக்க முடியாதவங்க

எப்படிண்ணே வலது இடது ஞாபகம் வச்சுக்க முடியும்

அந்த டவுட்டுதான் அண்ணே கேக்கறேன்


இதுக்கு எனக்கே  வழி தெரியும்

அவங்களுக்கு தெரியாதா....


எப்படி அண்ணே எப்படி அண்ணே

எனக்கும் சொல்லிக் கொடுங்க அண்ணே


எதுக்க வாடா எள்ளு மூக்கா

இப்ப  இப்படி எனக்கு எதுக்க  நின்னுக்கிட்டா

உன் வலது கை எது


இது அண்ணே


உம். இதுக்கு நேரே இருக்கிறது  என் எடது கை


இப்ப உன் இடது கை எது


இது அண்ணே


உம் இதுக்கு நேர இருக்கிறது

என் வலது கை... புரிஞ்சுதா.....


அருமையாச் சொன்னீங்க அண்ணே

உங்களுக்கே  இவ்வளவு தெரிஞ்சா

வாத்தியாருக்கு எவ்வளவு தெரியும்

தெரியாமலா ரெண்டு வாட்சு கட்றாங்க


கட்டட்டும் கட்டட்டும் நல்லா கட்டட்டும்

ரொம்ப கஷ்டமானதை ஈஸியா

புரிய வச்சதுக்கு ரொம்ப 

டாங்க்ஸ் அண்ணே

Monday, September 27, 2021

Our P.M...our Pride

 


இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல வேண்டும் என்றால் நேரடி விமானம் என்றால் 16 மணி நேரம் ஆகும். பணத்தை மிச்சம் செய்கிறேன் பேர்வழி என்று 2-3 விமானங்களை பிடித்து போனால் 24 மணி நேரத்திற்கும் மேலாக ஆகும். அதுவும் எகானமி கிளாஸ் பயணம் என்றால் கிட்டத்தட்ட தீபாவளி சமயத்தில் நம் ஊரு திருவள்ளுவர் பேருந்தில் பயணிப்பது எப்படி இருக்குமோ அது போல் தான் இருக்கும் நல்ல வேலையாக யாரும் நின்று கொண்டு வர மாட்டார்கள். அதுவே 90 ஆயிரத்தில் இருந்து 1.25 லட்சம் வரை செலவு பிடிக்கும் (2 வழி டிக்கெட்). 

இது போன்ற சிரமங்கள் எதுவும் மோடிக்கு கிடையாது, உண்மை தான். சொகுசான விமான பயணமாக தான் அமைந்திருக்கும். இருந்தாலும் 16 மணி நேர பயணம் என்பது உண்மையில் அனைவருக்குமே சிறிது அயர்வை கொடுக்கும். உண்மையான சிரமம் என்பது அமெரிக்காவில் பகல் நேரம் என்பது நமது இரவு நேரம். குறைந்தது 4 மணி நேரமும் அதிக பட்சமாக 10.30-12.30 மணி நேரமும் வித்தியாசம் வரும். போகும் மாகாணங்களை பொறுத்து இது மாறுபடும். அந்த கால சூழலுக்கு ஏற்ப நம் உடம்பு தயார் செய்து கொள்ளவே குறைந்த பட்சமாக 72 மணி நேரமும் அதிக பட்சமாக 1 வாரமும் தேவை படலாம். அதுவும் முதல் ரெண்டு நாட்கள் மிகவும் கொடுமையாக இருக்கும். இரவில் தூக்கமே வராது பகலில் தூங்கி வழிவோம். இது இயற்கை சாதாரண மனிதனோ, மோடியோ அனைவர்க்கும் இது பொருந்தி வரும். 

மோடி இந்தியாவில் விமானம் ஏறும் வரை பல மீட்டிங்களில் கலந்து கொண்டு விட்டு விமானம் ஏறுகிறார் விமானதில் ஓய்வு எடுப்பார் என்று பார்த்தால் நீண்ட விமான பயணம் என்றால் பைல் பார்க்க எதுவாக இருக்கும் என்று ட்வீட் செய்கிறார். அமெரிக்காவில் சந்திக்க போகும் மனிதர்கள் அவர்களிடம் பேச வேண்டியவை என்பதற்கு தன்னை தயார் செய்து கொள்கிறார். அமெரிக்காவில் இறங்கி அவர் இருந்த 64 மணி நேரங்களில் 25 சந்திப்புகள். அது அத்தனையும் வெற்றிகரமாக கையாள வேண்டும் என்றால் எத்தனை உழைப்பு இந்த மனிதருக்கு தேவை பட்டிருக்கும். இதில் QUAD தேச தலைவர்களுடன் சந்திப்பு, ஐ நா சபை மாநாட்டில் சிறப்புரை என்பது எல்லாம் உலகமே உற்று பார்க்க கூடியது அத்தனையும் வெற்றி கரமாக முடித்து நாடு திரும்பியவர், இன்று வந்தவுடன் பிஜேபி கட்சி ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்கில் கலந்து கொண்டார், அதற்கு பின் நேராக மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களோடு பேசுகிறார். அதற்கு பின் வழக்கமான பணிகள். இரவு 7 மணிக்கு தீடிர் என்று கிளம்பி போய் புதிதாக கட்டி வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வை இடுகிறார்.நாடி, நரம்பு என்று உடல் முழுவதும் ஒரு அர்ப்பணிப்பு உள்ள ஒருவரால் தான் இப்படி கருமமே கண்ணாக வேலை பார்க்க முடியும். அதனால் தான் சொல்கிறேன் என் பிரதமர் எனது  பெருமை என்று ( MY PM MY PRIDE). 

இங்கிவனை நாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்.

வரம் வேண்டா தவம் அறிந்து....

ஒவ்வொரு நொடியும்

எது தேவை எனப்

பார்த்துப் பார்த்துச் செய்த பின்னும்

தன் குழந்தை ஏன்

தன்னைச் சுற்றி சுற்றியே வருகிறது

என யோசித்தபடி

"பாப்பாவுக்கு என்ன வேணும் 

என்ன வேணும்" எனக் கொஞ்சுகிறாள் தாய்..


எதுவும் வேண்டாம்  என

தலையினை பக்கவாட்டில் அசைத்தபடி

தாயை அணைத்துக் கொள்கிறது குழந்தை


ஈன்றபொழுதினும் பெரிதுவந்து

கண்ணீர் மல்க

இறுகக் கட்டிக் கொள்கிறாள் அன்னை..


மகிழ்ந்து வாழவும்

செழித்து ஓங்கவும்

எல்லாம் வழங்கிய பின்னும்

எது வேண்டும் என

என் பிரஹாரம் சுற்றுகிறான் பக்தன்

என யோசித்தபடி

அவன் வேண்டுதலுக்கு

செவிசாய்த்து காத்திருக்கிறான் ."அவன்"


"குறையொன்றுமில்லை" எனப் பாடியபடி

"அவன்" பெயருக்கே அர்ச்சனை செய்துவிட்டு

நன்றியுடன் நகர்கிறான் பக்தன்


கொடுக்கையில் மகிழ்ந்ததற்காக அன்றி

முதன் முதலாக

கொடுத்ததற்காக மகிழ்ச்சி கொள்கிறான் "அவன் "

Saturday, September 25, 2021

கவிஞரும் கொத்தனாரும்..

 சிமெண்ட் கலவை

தயார் செய்யும் முன்

கலவை எந்தப் பயன்பாட்டுக்கு என்பதை

உறுதி செய்து கொள்கிறார் கொத்தனார்


அதைப் பொருத்தே

சிமெண்ட் மணல் தண்ணீரின்

விகித்தாச்சாரத்தை

மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறார் அவர்.


கரு அமைந்து

கவிதைப் புனையும் முன்

கவிதை எதனைத் திருப்திப்படுத்தவேண்டும் என்பதை

உறுதி செய்து கொள்கிறான் கவிஞன்.


அதைப் பொருத்தே

மொழி,உணர்வு அறிவின்

விகித்தாச்சாரத்தை

மிகக் கவனமாய் முடிவு செய்கிறான் அவன்..


காங்கிரீட்டுக்கு பூச்சுக் கலவை

பூச்சுக்கு காங்கிரீட் கலவை

நிச்சயம் கட்டுமானத்தின்

உறுதித் தனமைக்கு ஊறுவிளைவிக்கும்


ஊணர்வுப்பூர்வமான கருவுக்கு தர்க்கமும்

தர்க்கரீதியான கவிதைக்கு அதீத உணர்வும்

நிச்சயம் கவிதையின்

தரத்தைப் பாழ்ப்படுத்திவிடும்


ஆம்..

கலவையின் கூர் அறிந்து

கட்டுமானம் செய்கின்ற

நல்ல கொத்தனாரும்

சிறந்த கவிஞரே


ஆம்

"கலவையின் "சீர் அறிந்து

கவிதை கட்டுகிற

நல்ல கவிஞரும்

சிறந்த கொத்தனாரே

Thursday, September 23, 2021

விதைப்பந்துகள்

 அனுபவத்தில்

விளைந்து முதிர்ந்த
பயனுள்ள வீரியமிக்க விதைகளை
வீணாக்கிவிட விரும்பாது
அறிந்தவர் தெரிந்தவர் அனைவரிடத்திலும்
பயன்பெறட்டும் எனக் கொடுத்துப் போகிறேன்...

மரியாதை நிமித்தம்
பணிவுடன் கனிவுடன்
பெற்றுக் கொண்ட போதிலும்
எவரும் விதைக்கவோ விளைவிக்கவோ
இல்லையெனத் தெரிந்த போது
மிக நொந்து போகிறேன்

இப்போதெல்லாம்
விதைகளை யாரிடமும் கொடுத்தலைத் தவிர்த்து
விதைப் பந்துகளாக்கி
வெளிதனில் வீசிப் போகிறேன்

அது மெல்ல முளைவிட
முகமறியாதவர்கள் ஆயினும்
அதன் மதிப்பறிந்தவர்கள்
அதனைப் போற்றிப் பாதுகாக்க
மிக மகிழ்ந்து போகிறேன்..

Wednesday, September 22, 2021

நிறைவின் சூட்சுமம்

நிறைவின் சூட்சுமம்


எடுப்பதை விட வைப்பது

கூடுதலாய் இருக்க வேண்டும் என்பதில்

கவனமாய் இருக்கிறேன்


இருப்பது எப்போதும்

நிறைவாகவே இருக்கிறது


பெறுதலை விட கொடுப்பது

அதிகமாயிருத்தல் அவசியம் என்பதில்

தெளிவாய் இருக்கிறேன்


இருப்பது எப்போதும்

குறையாதே இருக்கிறது


கூலியை விட உழைப்பது

மிஞ்சி இருக்கவேண்டும் என்பதில்

உறுதியாய் இருக்கிறேன்


வளர்ச்சி எப்போதும்

என் வழியிலேயே குடியிருக்கிறது


பதவியை விடத் தகுதி

உயர்ந்திருக்கவேண்டும் என்பதில்

சமரசம் கொள்ளாதிருக்கிறேன்


பதவிகள் எமையடைய

நாளும் தவமிருக்கின்றன


பேசுதலை விட கேட்பது

கூடுதலாய் இருக்கவேண்டும் என்பதில்

சரியாய் இருக்கிறேன்


கேட்பதற்கெனவே ஒரு கூட்டம்

எப்போதும் காத்திருக்கிறது


எழுதுவதை விட படிப்பது

அளவு கடக்க வேண்டும் என்பதில்

அதிக அக்கறை கொள்கிறேன்


எழுதுவதற்கு விஷயங்கள்

வற்றாது பெருகுகிறது


கடந்ததை விட கடப்பதில்

கவனம் அவசியம் என்பதில்

கவனமாகவே இருக்கிறேன்


வாழ்க்கை என்றும் எப்போதும்

இனிதாகவே கடக்கிறது( இங்கு நான் என்பதும்  எனக்கு என்பதும்

என்னை மட்டும் குறிப்பதில்லை

வாழ்வின் சூட்சுமம் அறிந்தவர்கள்

அனைவரையும்தான் )

Tuesday, September 21, 2021

Who am I

 *Who am I?*


Once, a beggar while begging in a train, noticed a well-dressed businessman wearing a suit and boots. He thought that this man must be very rich, so he will surely give good money if I ask him. So he went and asked that man for alms. 


The man looked at the beggar and said, "You always beg and keep asking from people, do you ever give anything to anyone?"


The beggar said, "Sir, I am a beggar, I can only keep asking people for money. How will I be able to give anything to anyone?"


The man replied, "When you can't give anything to anyone, then you don’t have any right to ask as well. I am a businessman and believe in transactions only - if you have something to give me, then I can also give you something in return.”


Just then, the train arrived at a station, and the businessman got down and left.


The beggar started thinking about what the man had said. His words somehow reached the beggar’s heart.


He started thinking that maybe I do not get much money in alms because I am not able to give anything to anyone in return. But I am a beggar, I am not even worth giving anything to anyone. But for how long will I keep asking people without giving anything.


After thinking deeply, the beggar decided that whenever he gets something on begging, he will definitely give something back to that person in return.


But now the question was, what could he give others in return for begging? The whole day had passed thinking about this but he could not find any answer to his question.


The next day while he was sitting near the station, his eyes fell on some flowers blooming on the plants around the station. He thought, why not give some flowers to the people in return for alms.


He liked this idea and plucked some flowers from there and went to the train to beg.


Whenever someone gave alms to him, he would give some flowers to them in return. People used to keep those flowers happily with them.


Now the beggar used to pluck flowers everyday and distribute those flowers among the people in return for the alms.


Within a few days he realized that now a lot of people have started giving him alms. He used to pluck all the flowers near the station. As long as he had flowers, many people used to give him alms. But when no more flowers were left with him, he wouldn’t get much. And this continued every day.


One day when he was begging, he saw that the same businessman was sitting in the train, because of whom he was inspired to distribute flowers.


The beggar immediately reached out to him and said, "Today I have some flowers to give you in return for alms."


The man gave him some money and the beggar gave him some flowers in return. The man liked his idea very much and was quite impressed.


He said, "Wow! Today you too have become a businessman like me." Taking flowers from the beggar, he got down at the station.


But once again, his words had reached deep into the beggar’s heart. He kept thinking again and again about what the man had said and started becoming happy.


His eyes started shining now, he felt that he had now got the key to success by which he could change his life.


He immediately got down from the train and excitedly looked up at the sky and in a very loud voice said, “I am not a beggar anymore, I am a businessman now, I can also become like that gentleman, I can also become rich.”


When people saw him, they thought that maybe this beggar has gone mad. From the next day that beggar never appeared at that station again.


Four years later, two men dressed in suits were traveling from the same station. When both of them looked at each other, one of them bowed to the other with joined hands and asked, "Do you recognize me?"


The other replied, "No! Maybe we're meeting for the first time."


The first one again said, "Sir, try to remember, we are not meeting for the first time but for the third time".


Second person, "Well, I can't remember. When was it that we met before?"


Now the first person smiled and said, "We have met twice in the same train before. I am the same beggar whom you had told in the first meeting what I should do in life, and in the second meeting you told me who I really am."


"As a result, today I am a very big flower merchant and I am going to another city in respect of the same business."


"You told me the law of nature in the first meeting... according to which we get something only when we give something.

This rule of transaction really works, I've felt it very well, but I always thought of myself as a beggar, I never thought to rise above it. 


When I met you for the second time, you told me that I have become a businessman. Thanks to you, from that day onwards, my perspective changed and now I have become a businessman, I’m not a beggar anymore.”


Indian sages probably put the most emphasis on ‘knowing yourself’.


As long as the beggar considered himself a beggar, he remained a beggar and when he considered himself as a businessman, he became one. 


We Become what we Believe....(.thanks to Solomon karunakaran )

Monday, September 20, 2021

மிக எளிமையான விளக்கம்

 In a mother’s womb were two babies. One asked the other: “Do you believe in life after delivery?”The other replied, “Why, of course. There has to be something after delivery. Maybe we are here to prepare ourselves for what we will be later.”


“Nonsense,” said the first. “There is no life after delivery. What kind of life would that be?”


The second said, “I don’t know, but there will be more light than here. Maybe we will walk with our legs and eat from our mouths. Maybe we will have other senses that we can’t understand now.”


The first replied, “That is absurd. Walking is impossible. And eating with our mouths? Ridiculous! The umbilical cord supplies nutrition and everything we need. But the umbilical cord is so short. Life after delivery is to be logically excluded.”


The second insisted, “Well I think there is something and maybe it’s different than it is here. Maybe we won’t need this physical cord anymore.”


The first replied, “Nonsense. And moreover, if there is life, then why has no one ever come back from there? Delivery is the end of life, and in the after-delivery, there is nothing but darkness and silence and oblivion. It takes us nowhere.”


“Well, I don’t know,” said the second, “but certainly we will meet Mother and she will take care of us.”


The first replied “Mother? You actually believe in Mother? That’s laughable. If Mother exists then where is She now?”


The second said, “She is all around us. We are surrounded by her. We are of Her. It is in Her that we live. Without Her, this world would not and could not exist.”


Said the first: “Well I don’t see Her, so it is only logical that She doesn’t exist.”


To which the second replied, “Sometimes, when you’re in silence and you focus and listen, you can perceive Her presence, and you can hear Her loving voice, calling down from above.”


Maybe this was one of the best explanations of the concept of GOD....படித்ததும் பகிரப்பிடித்தது

Sunday, September 19, 2021

தோழர் பி.ஆர்


 இன்று செப்டம்பர் 20


C P M தலைவர் P. ராமமூர்த்தி பிறந்த நாள்.


பிறப்பு:செப்டம்பர்20,1908 

மறைவு:டிசம்பர் 15, 1987


      இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.

       தமிழக சட்டமன்றத்தில் 1952 ஆம் ஆண்டின் எதிர்க்கட்சித் தலைவர்.

      மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்பதவியில்

1967–1971ல் இருந்தார்.

     பி.ஆர். என்று கட்சிக்காரர்களாலும், தோழர் பி.ராமமூர்த்தி என்று அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு சுவாரசியமானது.

     1908ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தவர்.          

     இவருக்கு மூன்று வயதாகும் போது பஞ்சாபகேச சாஸ்திரி காலமாகிவிட்டார். 

     சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். 

      இளம் வயதில் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்து பாரதி பக்தரானார்.

     1920ல் மகாத்மா காந்தி இந்திய இளைஞர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறி சுதந்திரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது, இவர் தனது படிப்பை நிறுத்திவிட்டு வட இந்தியா பயணமானார். 

     வீட்டுக்குச் சொல்லாமல் வெளியேறி இவர் அலகாபாத் நகரத்தை அடைந்தார். 

     வார்தா சென்று காந்திஜியைச் சந்தித்தார்.அவருடைய ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார்.

      அப்போது அங்கு இருந்த ராஜாஜி, இவரை ஊருக்குப் போய் படிப்பை முடித்துவிட்டு வா என்று திரும்ப அனுப்பி வைத்தார். 

      ஊர் திரும்பிய ராமமூர்த்தி 1926ல் பள்ளி இறுதி வகுப்பு தேறினார்.

       சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். 

     இவரது கவனம் அரசியலில் ஈடுபட்டதால் படிப்பு இவருக்குப் பிடிக்கவில்லை. 

     மறுபடி இவர் வட இந்தியா சென்றார். காசியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார்.

      மதன்மோகன் மாளவியா எனும் பெரும் காங்கிரஸ் தலைவர் தொடங்கிய இந்தப் பல்கலைக் கழகம் இவரது அரசியல் ஆர்வத்துக்கு இடமளித்தது.

     பனாரஸ் பல்கலைக் கழகத்தில் படித்து முடித்த பின் ராமமூர்த்தி அயல்நாட்டுப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். 

      அங்கு விடுதலை ஆன பிறகு சென்னைக்கு வந்து இங்கு அரசியல் போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.

       1927ல் பம்பாயில் சைமன் வந்து இறங்கியதும் ஒரு மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும், போலீஸ் தடியடியும் நடந்தது. லாலா லஜபதி ராயைத் தடியால் அடித்த சார்ஜெண்ட் சாண்டர்ஸ் லாஹூரில் கொலை செய்யப்பட்டார். அதில் சம்பந்தப்பட்ட பகத் சிங் தொடங்கிய பாரதி நவ ஜவான் சபா எனும் அமைப்பில் ராமமூர்த்தி ஓர் உறுப்பினர் ஆனார்.

     1932ல் சட்ட மறுப்பு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். அதில் ராமமூர்த்தி கலந்துகொண்டு ஒன்பது மாத சிறை தண்டனை பெற்றார்.

    1933ல் கல்கத்தா நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். அந்த மகாநாட்டை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. தடையை மீறி மகாநாட்டுக்குச் சென்ற தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. குதிரை மீதமர்ந்து போலீஸ் நடத்திய தடியடியில் ராமமூர்த்தி தாக்கப்பட்டார். 

     அங்கு இருந்த காலகட்டத்தில் கம்யூனிச இயக்க நூல்களையும் காரல் மார்க்ஸ் நூல்களையும் படிக்க நேர்ந்தது. 

      பி.சுந்தரையா எனும் கம்யூனிஸ்ட் தோழரின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. 

      அவரோடு சேர்ந்து கொண்டு ஒரு சதி வழக்கிலும் இவர் பங்கு பெற்றார்.              ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடுடன் தொடர்பு ஏற்பட்டது. 

      சென்னை திரும்பிய ராமமூர்த்தி ஏ.எஸ்.கே.ஐயங்காருடன் சேர்ந்து சென்னை மாகாண புரட்சிகர மாணவர் இயக்கத்தைத் தொடங்கினார். 

      அதில் பி.சுந்தரையா கலந்துகொண்டு பேசினார்.

       1936ல் இரண்டாவது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மகாநாடு மீரட் நகரில் நடந்தது. அதில் ராமமூர்த்தி கலந்து கொண்டார். 

      1934ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஆகையால் அந்த கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்ற பெயரில் செயல்படத் துவங்கினர்.

      சென்னை மாகாண காங்கிரஸ் சோஷலிஸ்ட் இயக்கத்தை ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். 

      அந்த இயக்கம் சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள் உருவாகின. 

     மெல்ல மெல்ல இவரது தொழிற்சங்க, அரசியல் பணி தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

    1937ல் இவர் காங்கிரசை விட்டு வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 

   1939ல் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு சுபாஷ் சந்திர போசுக்கும் பட்டாபி சீதாராமையாவுக்கும் இடையே போட்டி. மகாத்மா காந்தி பட்டாபியை ஆதரித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஆதரவாக ராமமூர்த்தி சென்னை மாகாணத்தில் ஆதரவு திரட்டினார். அவரும் வெற்றி பெற்றார். காந்தி பட்டாபியின் தோல்வி தன் தோல்வி என்று ஒப்புக் கொண்டார். 

    1939ல் ஜெர்மனி போர் தொடுத்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. ஹிட்லரின் இந்த யுத்தம் ஏகாதிபத்திய யுத்தம் என்று முதலில் கம்யூனிஸ்டுகள் வர்ணித்தனர். யுத்த எதிர்ப்புக் கொள்கைக்காக பல கம்யூனிஸ்டுகள் கைதானார்கள்.

     1940ல் கம்யூனிஸ்டுகள் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 

      யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். 

    சென்னை சதி வழக்கு என்ற ஒன்று 1932ல் நடைபெற்றது.  இது இரண்டாவது சதி வழக்கு. வீட்டுக் காவலில் இருந்த ராமமூர்த்தி தப்பி தலைமறைவானார். அங்கிருந்தபடி இவர் கட்சிப் பணியாற்றி வந்தார்.

     சென்னையில் இவர்கள் ஒரு முகாம் அமைத்து, அங்கிருந்து அரசுக்கு எதிரான வெளியீடுகளை சுற்றுக்கு விட்டும், பிரச்சாரங்களில் ஈடுபட்டும் கட்சிப் பணியில் ஈடுபட்டனர். இதைக் கண்காணித்த போலீஸ் இவர்களைக் கூண்டோடு கைது செய்து சிறைக்கு அனுப்பியது. இவர்கள் மீது ஒரு சதி வழக்கு பதிவாகியது. இதில் பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானார்கள். ஏ.எஸ்.கே.ஐயங்கார், மோகன் குமாரமங்கலம், உமாநாத், ராமமூர்த்தி போன்றவர்கள் இதில் பாதிக்கப்பட்டவர்கள்.

     முந்தைய நிலையில் பிரிட்டிஷ் அரசுக்கு போர் முயற்சிகளில் ஒத்துழைப்பு கிடையாது என்று இருந்த நிலையை ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு கம்யூனிஸ்டுகள் மாற்றிக் கொண்டு பிரிட்டிஷுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கலாயினர். 

     அதனால் இவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட்டனர். ராமமூர்த்தியும் சிறையிலிருந்து வெளி வந்து சுதந்திர மனிதரானார்.

    நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது.

      ராமமூர்த்தி மறுபடியும் தலைமறைவானார். இவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்.

    1952ல் முதல் சுதந்திர இந்திய தேர்தல். ராமமூர்த்தி மதுரை வடக்கிலிருந்து போட்டியிட்டு சிறையில் இருந்தபடி வெற்றி பெற்றார்.

     அந்த தேர்தலில் காங்கிரசுக்கு சென்னை மாகாண சட்டசபையில் மெஜாரிடி கிடைக்கவில்லை. உடனே காங்கிரசார் ராஜாஜியை அழைத்து மந்திரிசபை அமைக்கச் சொன்னார்கள். அவரும் சில எதிர் கட்சி உறுப்பினர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைத்தார்.

     பி.ராமமூர்த்தி

தான் அப்போது எதிர் கட்சித் தலைவர். 

    மாகாண முதல்வராக ராஜாஜியும், எதிர்கட்சி வரிசையில் ராமமூர்த்தி முதலான பிரபல கம்யூனிஸ்டுகளும், அந்தக் கால சட்டசபை நடவடிக்கைகளும், விவாதங்களும் சிறப்பாக இருந்தன.

     பின்னர் பல சித்தாந்த போராட்டங்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. 

     இவர் மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். அங்கு 

சி ஐ டி யூ தொழிற்சங்கம் அமைந்தது.  அதன் தலைவர்களில் ஒருவரானார் ராமமூர்த்தி.

    தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கி வளர்த்ததிலும், பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியதிலும் பி.ஆருக்கு மகத்தான பங்கு உண்டு.

    கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஜனசக்தி ஏட்டை உருவாக்குவதில் பி.ராமமூர்த்தி சிறந்த பங்காற்றினார்.

    குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்நடத்திய போராட்டத்திலும் பி.ராமமூர்த்தி அவருக்கு துணை நின்றார்.

     சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலய தர்மகர்த்தா தேர்தலில் அருந்ததிய மக்களை வாக்களிக்கச் செய்த பெருமையும் அவருக்கு உண்டு.

    மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்ட வேண்டுமென நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் தோழர் பி.ராமமூர்த்திதான்.

     தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்து தமிழில் பேசிய முதல் தலைவரும் அவரே.

     தமிழகத்தில் தமிழே ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டுமென்று சட்டமன்றத்தில் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை ஆற்றினார்.

     தீக்கதிர் பத்திரிகையை நிலை நிறுத்தியத்திலும், மதுரையில் தீக்கதிர் உள்ள இடத்தை கட்சிக்கு பெற்று தந்ததிலும் தோழர் பி ஆர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது.

     தோழர் பி.ராமமூர்த்தி, இயக்க குடும்பத்தை சேர்ந்த அம்பாள் என்பவரை கலப்பு திருமணம் செய்து, அந்த தம்பதியினருக்கு பொன்னி, வைகை என இரு மகள்கள் உள்ளனர். பொன்னி மருத்துவர். தோழர் வைகை தொழிலாளர்களின் மதிப்புமிக்க வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.            

                  "விடுதலைப்போரும் திராவிடர் இயக்கமும் "

         "காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து "

ஆகிய நூல்கள் இவர் எழுதியவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

     1987, டிசம்பர் 15 அன்று காலமானார்.

ஜாடியைக் குலுக்குவோனை அறிவோம்..

 100 கருப்பு எறும்புகளையும் 

100 சிவப்பு எறும்புகளையும் 

சேகரித்து..... 

ஒரு கண்ணாடி ஜாடியில் வைத்து அமைதியாக விட்டால் 

எதுவும் நடக்காது...ஒரு பிரச்சினையும் வராது.


ஆனால், நீங்கள் அந்த ஜாடியை எடுத்து பலமாக குலுக்கி, ஒரு மேஜையில் வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்....அடுத்தது என்ன நடக்கும்?


நீங்கள் குலுக்கிய வேகத்தில்,

ஒன்றும் புரியாத அந்த எறும்புகள் 

ஒன்றுக்கொன்றுத் தாக்கி....

ஒன்று மற்றொன்றைக் கொல்லத் தொடங்கும்.


சிவப்பு கறுப்பை எதிரி என்றும் 

கருப்பு சிவப்பை எதிரி என்றும் நம்பும்.... 

ஆனால் உண்மையில்....எதிரி 

அந்த ஜாடியை அசைத்தவர்....யார் என அதற்கு தெரியாது...தெரியவும் வாய்ப்பில்லை. 


அப்படி செய்தவர்...

ஹாயாக ஒரு நாற்காலியில் 

உட்கார்ந்துக் கொண்டு 

அந்த ஜாடியை ஆனந்தமாகப்

பார்த்துக்கொண்டிருப்பார்.


இந்த சிக்கலான சமுதாயத்திலும் 

இதே நிலைதான்.


ஆண்கள் Vs பெண்கள்

இடது Vs வலது

பணக்காரன் Vs ஏழை

நம்பிக்கை Vs அறிவியல்


எங்குப் பார்த்தாலும் வதந்திகள். வதந்திகள் மட்டும்தான்...

பற்ற வைக்க ஆளாளுக்கு அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.


எந்த விஷயத்திலும் 

பொது புத்தியோடு அணுக வேண்டாம்.


நாம் ஒருவருக்கொருவர்  சண்டையிடுவதற்கு முன், 

நம்மை நாமே 

ஒரு கேள்வியை 

கேட்டுக்கொள்ள வேண்டும்.


அந்த ஜாடியை உலுக்கியது யார்?      (படித்ததும் பகிரப் பிடித்தது) 

Saturday, September 18, 2021

நடிகவேள்...ஒரு சகாப்தம்..

 இத்தனை வருடங்களில் இப்படியொரு படம் வந்ததே இல்லை’ என்று சொல்லும்படியான படங்கள் வந்திருக்கின்றன. பாசத்தைச் சொன்ன படம், காதலைச் சொன்ன படம், கண்ணியத்தைச் சொன்ன படம், கடவுளைச் சொன்ன படம், சமூகத்தைச் சொன்ன படம், சமூக அவலத்தைச் சொன்ன படம், கலையைச் சொன்ன படம் என எத்தனையெத்தனை படங்களோ வந்து நம் மனம் தொட்டிருக்கின்றன. மகத்தான வரிசையில் இடம்பிடித்திருக்கின்றன. தனி மனித ஒழுக்கத்தையும் ஒழுக்க மீறலால் உண்டான சீர்கேட்டையும் சொன்னவகையில், ஆனந்தக் கண்ணீருடன் தனியிடம் பிடித்து நிற்கிறது ‘ரத்தக்கண்ணீர்’.

இளம் வயதிலேயே நாடகத்துறைக்குள் நுழைந்து, அந்த நாடகத்திற்குள் சமூகக் கருத்துகளைச் சொல்லிக்கொண்டே வந்தார் எம்.ஆர்.ராதா. நாடகம், கலை என்பது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் அல்ல என்பதில் உறுதியாக இருந்தவரை, அவரின் நடிப்புத்திறன் கண்டு, திரையுலகம் வரவேற்று அழைத்துக்கொண்டது. 37ம் ஆண்டில் திரையிலும் உலா வந்தவர், நான்கைந்து படங்கள் நடித்தார். பிறகு ‘சினிமாவே வேண்டாம்’ என்ற முடிவுக்கு வந்தார். ‘நாடகமே போதும்’ என்று தொடர்ந்து மேடையேறினார்.


பிறகு பனிரெண்டு ஆண்டுகள் ஓடிய நிலையில், ‘சினிமாவுக்கு வாங்கண்ணே’ என்று பலரும் சொன்னார்கள். ‘ராதாண்ணே வாங்கண்ணே’ என்று சிவாஜி உட்பட பலரும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். திருவாரூர் தங்கராசுவும் வலியுறுத்தினார். ஒருவழியாக, பனிரெண்டு வருடங்கள் கழித்து, எம்.ஆர்.ராதா மீண்டும் திரையுலகிற்கு வந்தார். அவர் நடித்த படம் தீபாவளித் திருநாளுக்கு வந்தது. தீபாவளியென்றால் பட்டாசும் பாமும் சரவெடிகளும் இருக்கும்தானே. அப்படியொரு தெளசண்ட் வாலா பட்டாசாக, யானை வெடியாக, ஆட்டம்பாமாக வந்தது அவருடைய திரைப்படம். அதுதான் ‘ரத்தக்கண்ணீர்’.


ஒருபடத்துக்குள் என்னென்னவெல்லாம் சொல்லிவிடமுடியும்? என்போம். ‘ஒரேயொரு படத்துக்குள் இதைவிட என்ன சொல்லிவிடமுடியும்?’ என்பதுதான் ‘ரத்தக்கண்ணீர்’.


காசும்பணமும், வீடும் வாசலும் இருக்கலாம். அதற்காக பணத்திமிருடன் இருக்கக்கூடாது என்பதைச் சொல்லியிருந்தார்கள். வெளிநாட்டில் சென்று படிக்கலாம். அந்தக் கல்வியைக் கொண்டு நம் நாட்டுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதை இதில் வலியுறுத்தினார்கள். மேல்நாடுகளுக்குச் சென்றாலும் நம் நாட்டு நாகரீக, கலாச்சார, பண்பாடுகளை விட்டுவிடக்கூடாது என்பதை அறிவுறுத்தினார்கள். பெற்ற தாயை மதிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். மனைவியை நேசிக்க வேண்டும் என்று போதித்தார்கள் .மனைவிக்கு துரோகம் செய்யாதே, வேறொரு பெண்ணை நினைக்காதே என்பதை கோபத்தோடு உபதேசித்தார்கள். குற்றம் புரிந்தவனுக்கு நிம்மதியே இல்லை என்பதுதான் மிகப்பெரிய தண்டனை என்று படத்தில் பாடம் நடத்தினார்கள். இவை அனைத்தும் ஒரே படத்தில் செய்ததுதான் ‘ரத்தக்கண்ணீர்’ எனும் மூன்று மணி நேரப்படத்தை, மூன்று தலைமுறை கடந்தும் காவியமாக்கியிருக்கிறது.

மிகப்பெரிய பணக்காரராக மோகனசுந்தரமாக மோகனாக எம்.ஆர்.ராதா. பணத்திமிர், வெளிநாட்டில் படித்த திமிர், கலை என்பதையும் நாகரீகம் என்பதையும் தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டு லீலைகளில் தன்னையே மறக்கிற மோக குணம் என்பதன் மொத்த உருவம். படத்தின் நாயகன் எம்.ஆர்.ராதா தான். அநேகமாக, என்னதான் படத்தின் ஹீரோவாக இருந்தாலும் படம் முழுக்க, படத்தில் ஹீரோ வருகிற காட்சிகள் முழுக்க, ஒரு ஹீரோவுக்கு கைத்தட்டல் கிடைக்குமா, கிடைத்திருக்குமா... தெரியவில்லை. அப்படி, படம் முழுக்க கரவொலிகளை வாங்கிக்கொண்ட கலைஞன் எம்.ஆர்.ராதாவாகத்தான் இருக்கமுடியும்.


அம்மாவை, கவுன் போட்டுக்கொள்ளச் சொல்வதில் இருந்து, கூரை மேலே நெருப்பு இருந்தா அணைக்கிறே. மலையில் ஏத்தினா மட்டும் கும்பிடுறே என்று நாத்திகம் பேசுவது வரை இவரின் டயலாக் டெலிவரியில், வெடித்துச் சிரித்தார்கள் ரசிகர்கள். ஆத்திக நாத்திக பேதமின்றி ராதாவை ரசித்தார்கள்


அம்மாவை காயப்படுத்துவார். ‘துரை தூங்கறார், துரை சாப்பிடுறார்னு சொல்லு’ என்பார். மாமனாரைப் பார்த்து, ‘என்ன மிஸ்டர் பிள்ளை, இதென்ன கையில நெத்தில கோடு’ என்பார். ‘என்னடா தண்ணி இது, ‘கார்ப்பரேஷன் தண்ணி போல இருக்கு’ என்று கிண்டலடிப்பார். ‘ரோடு போடுறதுக்கு கல்லை மட்டும் கொண்டாந்து இறக்கிடுறானுங்க. அப்புறம் ரோடு எப்பவாவது போடுறானுங்க’ என்று இப்படித்தான் படம் நெடுக நக்கல் பேச்சு, நையாண்டி வார்த்தைகள், லூட்டி மாடுலேஷன்கள், அநாயசமான டயலாக் டெலிவரிகள்.


காசுத் திமிரில், காம வேட்கையில், மனைவியை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் உறவாடுவதும் அதனால் பெருநோய் எனப்படும் குஷ்டத்துக்கு ஆளாகி எல்லாவற்றையும் இழந்து, தெருவில் சுற்றித் திரிவதும், ஒருகட்டத்தில் கண் பார்வையையும் பறிபோய், வாழத் தகுதியற்றவனாகி நொந்து அலைவதும் என படம் முழுக்க ராதா ராஜ்ஜ்ஜியம்தான்.

தவறான பாதையில் செல்பவன் சீரழிவான் என்பதைச் சொல்லும் ஒன் லைன். ஆனால், திரைக்கதையாக்கிய விதத்திலும் கூர்மையான வசனங்களும் என படத்திற்கு பலம் சேர்த்திருப்பார் வசனகர்த்தா திருவாரூர் தங்கராசு. அந்த வசனங்களையும் கதையையும் மோகன் எனும் கேரக்டரையும் மொத்தப் படத்தையும் தூக்கிச் சுமந்திருப்பார் எம்.ஆர்.ராதா.


1952ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது ‘பராசக்தி’. நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார்தான் தயாரித்திருந்தார். சிவாஜியை அறிமுகப்படுத்தினார். சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் நாடகங்களில் ஒன்றாக நடித்தவர்கள் என்றாலும் ‘என் அண்ணன் அவர். எனக்கு ராதாண்ணன் குரு’ என்று மரியாதையுடன் சொல்வார் சிவாஜி . ஏற்கெனவே திரையில் நடித்து வந்து, சினிமாவே வேண்டாம் என்று விலகிச் சென்ற எம்.ஆர்.ராதாவை, 12 வருடங்கள் கழித்து, தன் நேஷனல் பிக்சர்ஸ் ‘ரத்தக்கண்ணீர்’ மூலம் மீண்டும் சினிமாவுக்குக் கொண்டுவந்தார் பெருமாள் முதலியார். 54ம் ஆண்டு தீபாவளிக்கு வந்தது ‘ரத்தக்கண்ணீர்’.


பராசக்தி’யை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு தான் இந்தப் படத்தையும் இயக்கினார்கள். சிதம்பரம் ஜெயராமன் என்கிற சி.எஸ்.ஜெயராமன் படத்துக்கு இசையமைத்திருந்தார். படத்தின் பின்னணி இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்று டைட்டிலில் இடம்பெறுகிறது.


தோற்றவனின் கதையைப் பெரும்பாலும் சினிமாவில் சொல்லுவதில்லை என்பார்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே, மொத்த வாழ்விலும் தோற்றுப் போய், வாழ்க்கையையே தொலைத்தவனின் கதையாக போதித்திருப்பதும் கூட ‘ரத்தக்கண்ணீர்’ படத்தின் அசுர சாதனை.

மனைவியாக ஸ்ரீரஞ்சனி, நண்பனாக எஸ்.எஸ்.ஆர், சந்திரபாபு முதலானோர் நடித்திருந்தனர். மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் மயங்கிச் சரியும் எம்.ஆர்.ராதாவை ஆட்டுவிக்கும் பதுமையாக எம்.என்.ராஜம் நடித்திருப்பார். இவரின் கேரக்டரை பிரமாதப்படுத்தியிருப்பார். இவரின் கேரக்டர் பெயரான ‘காந்தா’வும் எம்.ஆர்.ராதா பேசுகிற ‘அடியே காந்தா...’வும் ரொம்பவே பிரபலம். ரொம்பவே என்றால்... தலைமுறை கடந்தும் பிரபலம்!


படம் முழுக்க ப்ளாஷ்பேக் என்பதும் அப்போது ஆச்சரிய அதிசயம்தான். குஷ்ட உடலுடன் கையில் கோலுடன் பரதேசி போல் நிற்கும் எம்.ஆர்.ராதாவின் சிலை. அருகில் கூட்டம். அந்தக் கூட்டத்தில் இருந்துகொண்டு, எஸ்.எஸ்.ஆர்., தன் நண்பனைப் பற்றி, தன் நண்பன் சீரழிந்தது பற்றி கதை போல் பிரசங்கம் செய்வதில் இருந்துதான் ப்ளாஷ்பேக் விரியும்.


மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் இது. இதன் பின்னர், எம்.ஆர்.ராதாவுக்கு வரிசையாக படங்கள் வந்தன. வில்லன், குணச்சித்திர கேரக்டர், காமெடி ரோல் என்று வெரைட்டி வெரைட்டியாக வந்தன. வெளுத்து வாங்கினார் அவரும்! ‘நான் ‘ரத்தக்கண்ணீர்’ ல ஹீரோவா நடிச்சவன். அதனால ஹீரோவாத்தான் நடிப்பேன்’ என்று முரண்டுபிடிக்காத, அந்த முன் கோப எம்.ஆ.ராதாவிடம் நடிப்புடன் சேர்த்து பலதையும் கற்றுக்கொள்ளவேண்டும் நடிகர்கள்.


பதினேழு ரீல் ஓடுகிற படம் இது. இந்த பதினேழு ரீலுக்குள், எம்.ஆர். ராதா போடுகிற பட்டாசுகளும் அவர் சிகரெட் பிடிக்கிற ஸ்டைலும் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பினால், வந்து வந்து ஆடுகிற சுருள்முடியும், நடையும் தோரணையும் நக்கல் பேச்சும் என நடிப்பு ராட்சஷனாக உச்சம் தொட்டிருப்பார் எம்.ஆர்.ராதா.

54ம் ஆண்டு, அக்டோபர் 25ம் தேதி வெளியானது ‘ரத்தக்கண்ணீர்’. படம் வெளியாகி 67 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் இன்னும் 33வருடங்களாகும் போது ‘ரத்தக்கண்ணீர் நூற்றாண்டு’ என்று எழுதிக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். பேசிச் சிலாகித்துக் கொண்டிருப்பார்கள்.


காதலை, இல்வாழ்க்கையை, பணத்திமிரை, காமத்தின் பிடியில் சிக்குண்ட அவலத்தை, மேல்நாட்டு கலாச்சாரத்தில் மோகம் கொண்டு வீழ்ந்ததை, சமூகத்தை, அரசியலை, ஆத்திக நாத்திகத்தை, தனி மனித ஒழுக்கமே முக்கியம் என்பதை ஒரு படத்தில், ஒரேயொரு படத்தில், பாடமாகவே நடத்திய ‘ரத்தக்கண்ணீர்’ படத்தை எவரால்தான் மறக்கமுடியும்?


நன்றி தி இந்து நாளிதழ்Friday, September 17, 2021

தற்கொலையை ஆதரிப்போரை தள்ளிவைப்போம்..அதன் மூலம் அனைத்து அவலங்களையும் தள்ளிவைப்போம்

 செய்தி. 

தற்கொலை நடப்பதால் NEET தேர்வில்  இருந்து விலக்கு கோரும் தீர்மானம். தமிழக சட்டசபையில். 


+2 தேர்வில் தோல்வி.


மனம்  உடைந்து மாணவர் தற்கொலை.


+2 தேர்வை தடை செய்யலாம். 


10 th தேர்வு. தோல்வி அல்லது எதிர் பார்த்த மதிப்பெண் வர வில்லை. 


தற்கொலை.


10th தேர்வை தடை செய்யலாம். 


அரசியல் கட்சிகளில் முன்னேற முடியாமல் பலர் தற்கொலை. 


தான் சார்ந்த கட்சி தோல்வி அடைந்தாலோ, தன் கட்சி தலைவர்களை கைது செய்தாலோ 

தொண்டர்கள் தீக்குளித்து தற்கொலை.


அரசியல் கட்சிகளை தடை செய்து விடலாம். 


TNPSC தேர்வில் தோல்வி. 


தற்கொலை. 


அந்த TNPSC தேர்வுகளை தடை செய்து விடலாம். 


சினிமா துறையில் பலர் தற்கொலை. 


சினிமா,OTT, TV serialகளை தடை

செய்து விடலாம். 


சினிமாவே இல்லாத போது தியேட்டர்கள் எதற்கு?


தடை செய்து விடலாம். 


வேலை கிடைக்காமல் பலர் தற்கொலை.


வேலை வாய்ப்பையே தடை செய்து விடலாம். 


IIT, IIM தேர்வில்  தோல்வி. 


தற்கொலை. 


அந்த படிப்புகளை தடை செய்து விடலாம். 


JEE entrance,Tancet, CAT,MAT, SAT நுழைவுத் தேர்வுகளில் தோல்வி. 


தற்கொலை. 


அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தடை செய்து விடலாம். 


எனஜினீயரிங் பட்ட படிப்பு தேர்வில் தோல்வி. 


தற்கொலை. 


அந்த பட்ட படிப்புகளை தடை செய்து விடலாம். 


திருமணம் நடக்காமல் ஏக்கம்.

தற்கொலை. 


திருமணங்களை தடை செய்து விடலாம். 


குழந்தை பெற முடியவில்லையே. 


தற்கொலை. 


குழந்தை பெறுவதையே தடை செய்து விடலாம். 


குடும்ப தகராறு. தற்கொலை. 


குடும்பங்களை தடை செய்து விடலாம். 


கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி. 


ரசிகர்கள் தற்கொலை. 


கிரிக்கெட்டை தடை செய்து விடலாம். 


வங்கி கடனை கட்ட முடியாமல் தற்கொலை. 


வங்கிகள் கடன் கொடுப்பதால்தானே கட்ட முடிவதில்லை. 


கடன் கொடுப்பதை தடை செய்து விடலாம். 


காதல் தோல்வி.


தற்கொலை. 


காதலையே தடை செய்து விடலாம். 


போலிஸ் தற்கொலை. 


காவல் நிலையங்களை மூடி விடலாம்.


வக்கீல் டாக்டர் ஆடிட்டர் எதிர் பார்த்த முன்னேற்றம் இல்லை. 


தற்கொலை. 


அந்த தொழில்களையே தடை செய்து விடலாம். 


நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பால் பாதிப்படைந்த மனுதாரர் தற்கொலை. 


நீதி மன்றங்களை தடை செய்து விடலாம்.


NEET தேர்வு மட்டும் என்ன தவறு செய்தது? அதை மட்டும் தடை செய்ய?

Wednesday, September 15, 2021

பொறியாளர் தினம்..

 


இன்று செப்டம்பர் 15


கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டிய பொறியாளர் 

எம். விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள்.


பிறப்பு:செப்டம்பர்15,1860 

இறப்பு:ஏப்ரல் 14,1962


     விஸ்வேஸ்வரய்யா கர்நாடக மாநிலத்தில் முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் சீனிவாச சாஸ்திரிக்கும், வெங்கடலக்ஷ்மியம்மாவுக்கும் மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

      பதினைந்து வயதில் தந்தையை இழந்த விஸ்வேஸ்வரய்யா அவர்கள், தன்னுடைய ஆரம்ப கல்வியை சிங்கபல்லபுராவிலும், உயர் கல்வியை பெங்களூரிலும் பயின்றார். 

     1881 ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்டப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்த அவர், பின்னர் தன்னுடைய கட்டடப் பொறியியல் கல்வியை “புனே அறிவியல் கல்லூரியில்” முடித்தார்.

       சிறந்த பொறியாளராக

தன்னுடைய பொறியியல் படிப்பை முடித்த பிறகு, மும்பை பொதுப் பணித்துறையில் ஒரு பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார்.

       பின்னர், “இந்திய பாசன ஆணையத்தில்” பணியைத் தொடங்கிய அவர், தானியங்கி வெள்ளமடை மதகை வடிவமைத்து, 1903ல் புனேவிலுள்ள “கடக்வசல” நீர்தேக்கத்தில் அதை செயல்படுத்தி வெற்றியும் கண்டார். 

      வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்க “வெள்ளத்தடுப்பு முறை அமைப்பையும்” மற்றும் துறைமுகங்களை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் “தடுப்பு அமைப்பையும்” வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

      பின்னர், ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்க அணைகளில் ஒன்றாகக் கருதப்படும் “கிருஷ்ணராஜ சாகர் அணையை” காவிரியின் குறுக்கே உருவாக்கி பெரும் புகழ்பெற்றார்.

       இது மட்டுமல்லாமல், திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலையமைக்கவும் மற்றும் மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் நீர் மின் உற்பத்தி ஆலை அமைக்கவும் உறுதுணையாக இருந்தார்.

      1912 ஆம் ஆண்டு, மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்ட அவர், மாநில கல்வி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு அயராது உழைத்தார்.

       ஸ்ரீ ஜெயசாமராஜெந்திரா பாலிடெக்னிக், மைசூர் பல்கலைக்கழகம், சாண்டல் எண்ணை நிறுவனம், உலோக தொழிற்சாலை, குரோமிய வழி பதனிடுதல் தொழிற்சாலை, பத்ராவதி இரும்பு மற்றும் ஸ்டீல் தொழிற்சாலை, கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம், பெங்களுரு அரசு பொறியியல் கல்லூரி என பல நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். 

     1923 ஆம் ஆண்டு, இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராகவும் பணியாற்றினார். 

     1934 ஆம் ஆண்டு, ‘இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற நூலை எழுதிய விசுவேசுவரய்யா பொருளாதாரத் திட்டமிடுதலை கூறிய முதல் அறிஞரும் ஆவார்.   

       இவர் பெற்ற விருதுகளும் அங்கீகாரங்களும்:

      1904 ஆம் ஆண்டு “லண்டன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் சிவில் இன்ஜினியரிங்கில்” கௌரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

     1921 ஆம் ஆண்டு டி.எஸ்சி-ல் முனைவர் பட்டம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது.

      இந்திய அறிவியல் நிறுவனத்தில் “ஃபெல்லோஷிஃப்” வழங்கப்பட்டது.

      1923 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

     1931 ஆம் ஆண்டு எல்.எல்.டி-ல் முனைவர் பட்டம் மும்பை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

      1937 ஆம் ஆண்டு டி.லிட்-ல் முனைவர் பட்டம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

      1943 ஆம் ஆண்டு இந்திய பொறியியல் நிறுவனத்தின் கௌரவ உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.

      1955 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிகஉயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

      1918 ஆம் ஆண்டு திவான் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தன்னுடைய ஓய்வுக்குப் பிறகும் கடுமையாக உழைத்தார். நூறு வயத்திற்கும் மேல் அயராது பாடுபட்ட 

எம். விஸ்வேஸ்வரய்யா 

1962 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் நாள் தன்னுடைய நூற்றியொன்றாவது வயதில் காலமானார்.

Tuesday, September 14, 2021

உண்மைதான்..ஆனாலும்...ஒப்புக் கொள்ள மாட்டோம்..

 


Monday, September 13, 2021

NEET - The truth & The political drama of DMK - நீட் தேர்வு

 NEET - The truth & The political drama of DMK


பாஜக மாநில தலைவரின் கடிதம்.-4

#தமிழக_பாஜக_தலைவர்_கடிதம்நீட் தேர்வு அண்மைக் காலத்தில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது மக்களுக்குத் தொண்டாற்றும் மகத்தான பணி மருத்துவப்பணி. அந்த மருத்துவப்பணியில் ஈடுபட நீட் தேர்வு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 சட்டப் பிரிவு 10(D) மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஒவ்வொரு மாணவரும், நீட் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. தமிழகம் தவிர மற்ற அனைத்துக் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆளும், மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும்,. நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எதிரானது என்ற தவறான கருத்தும் திமுகவினரால் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.

முன்பெல்லாம், மருத்துவம் படிக்க நாடு முழுக்க மாநில வாரியாக கல்லூரி தனித்தனியே நடக்கும் பல்வேறு வகையான நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். 

இதனால் மாணவர்களுக்குக் கூடுதல் பணச் செலவு, அதிகரித்தது. “நீட்” தேர்வு எழுதுவதன் மூலமாக, நாடு முழுவதும் உள்ள எந்த மருத்துவக் கல்லூரிக்கும் அவர்கள் படிக்க முடியும். இதனால் பண செலவுகளும், நேர விரயங்களும், மன உளைச்சலும் குறையும்.

நான்கு வகையான பாடத்திட்டம் நமது நாட்டில் பயன்பாட்டில் உள்ளது.. 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் சேர்த்தனர். அதன் மூலம் தங்கள் பிள்ளைகள் கல்வித்தரம் உயரும் எனப் பெற்றோர்கள் நினைத்தனர். நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால், நீட் தேர்வுக்கு என ஒரு பாடத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதில் கொடுக்கப்பட்ட பாடத் திட்டத்திற்கு ஏற்ப கேள்விகள் தேர்வில் கேட்கப்பட்டது.

எனவே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்குப் பதில் அளிப்பது சுலபமாக இருந்தது. தமிழகப் பாடத்திட்டம் தரத்தை உயர்த்தி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட, மிகவும் உயர்ந்த தரத்தில் ஏற்படுத்தினால், அதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு கிட்டும்.

நீட் தேர்வை எதிர்ப்பது போல, கல்வித் தரத்தை உயர்த்தக் கூடிய, புதிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தின் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் எதிர்ப்பது கவலைக்குரியது.

ஏழை, பணக்காரர் பாகுபாடு இன்றி, சரி சமமான வாய்ப்பை நீட் தேர்வு அனைத்து மாணவருக்கும் வழங்குகிறது.. 

பணம் கொடுத்து மருத்துவப் படிப்பு முடியும் என்ற நிலையை நீட் தேர்வு மாற்றியுள்ளது. நல்ல மதிப்பெண் இருந்தால் மட்டுமே, மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் படிக்க முடியும் என்ற நிலையை நீட் தேர்வு ஏற்படுத்தி இருக்கின்றது.

நீட் தேர்வுக்கு முன் பணத்தை வைத்துக் கொண்டு மருத்துவக் கல்லூரி சீட்டுக்கு அலையும் வியாபாரச் சந்தை இருந்தது. இப்போது தகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது. சில தனியார் கல்லூரிகளும், மருத்துவப் படிப்புக்கான சீட்டை வாங்கித்தரும் வணிகர்களே நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

நீட் தேர்வில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு 85% இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 15% மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மாணவ  மாணவியர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. 

தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவதன் மூலம், நிறைய இடத்தைத் தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும். மேலும், தமிழக மாணவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள 15 சதவீத இடங்களுக்கும் போட்டி போட முடியும். நீட் தேர்வு குறித்து இங்கே இவர்கள் அவதூறு பரப்பும் அளவிற்கு மறைமுகமாக எந்த ரகசியமும் இல்லை, இதில் வெளிப்படைத் தன்மையுடன் மருத்துவப் படிப்பிற்கான ஒதுக்கீடு மேற்கொள்ளப் படுகின்றது.

நீட் வழங்கும் சமவாய்ப்பினால் உண்மையில் நுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் 2-வது ஆண்டாக அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நீட் தேர்வை 1,017 பேர் தமிழ் மொழியில் எழுதினர். 2020ஆம் ஆண்டு 17,101பேர் தமிழ் மொழியில் தேர்வை எழுதியுள்ளனர். தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 17 மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரித்துவருகிறது. 2019-ம் ஆண்டில் 9 சதவீதம் அதிகரித்தது. 2020 ஆண்டும் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2019 ஆண்டு தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 57.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு சார்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட 412 இலவச நீட்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 6,692 பேர் நீட் தேர்வை எதிர்கொண்டனர். 

இதில் 1,615 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் திறமையான பங்களிப்பு இருக்கும் தேர்ச்சி விகிதம் கூடுதலாக அதிகரிக்கும் என்று கல்வி வல்லுநர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், நீட் தேர்வைக் குறித்த தவறான பொய்யுரைகளைத் தேர்தல் நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், எடுத்து வைத்தது. நீட் தேர்வை மோடி அரசுதான் கொண்டு வந்தது போலவும், தமிழ் நாட்டு மாணவர்களுக்கு, நீட் தேர்வு எதிரானது போலவும் ஒரு போலித் தோற்றத்தை உருவாக்கியது.

திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இருக்காது என்ற கட்டுக்கதை தேர்தல் வாக்குறுதியாக தரப்பட்டது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு வராது என்று தேர்வுக்குத் தயாராகாமலிருந்து விட்டனர். வராது ஆனால் வரும், வரும் ஆனால் வராது என்று மாற்றி மாற்றி பேசிய திமுக தலைவர்கள், கடைசி நேரத்தில் மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராகும்-படி கூறியபோது மாணவர்கள் ஏமாற்றத்தாலும் அச்சத்தாலும் துவண்டு போயினர்.

திமுகவின் வாக்குறுதியை நம்பிய அந்த ஏமாற்றத்தின் தொடர்ச்சியே, இன்று சேலத்தில் மாணவர் தனுஷ், தன் உயிரை மாய்த்துக் கொண்டது. தன்னுடைய தேர்தல் வெற்றிக்காக மாணவர்களின் உயிரோடு விளையாடும் திமுகவைக் காலம் ஒருபோதும் மன்னிக்காது. அரசியல் லாபத்துக்காக அப்பாவி மாணவர்களைத் தற்கொலைக்குத் தூண்டும் விதத்தில் நீட் எதிர்ப்பாளர் செயல்பாடு அமைந்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரானவர்களாக நாடகமாடும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தது என்ற உண்மை எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது.

2010 டிசம்பர் திமுக அங்கம் வகித்த மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, திமுகவைச் சேர்ந்த செ.காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக (Minister of state for Health and Family Welfare) இருந்தார்.

அப்போது திமுகவைச் சேர்ந்த செ.காந்திசெல்வன் மருத்துவக் கல்விக்கான நெறி முறைகளில் (Regulations on Graduate Medical Education, 1997) மாற்றம் செய்திருப்பதாக அறிவித்தார்.

ஆகவே காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் காலத்தில், மருத்துவத் துறை இணை அமைச்சராக  காந்திசெல்வன் இருந்தபோதுதான், எம்.பி.பி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (eligibility cum entrance test) நடத்துவது என்று நெறிமுறைகள் மாற்றப்பட்டன. அப்போது இந்த நுழைவுத் தீர்வு "Regulations on Graduate Medical Education, 2010" என்று அழைக்கப்பட்டது.

புதிய கொள்கைகளின் படி அடிப்படையில் MCI (Medical Council of India) 2012ஆம் ஆண்டு மே மாதம் நுழைவுத் தேர்வு நடத்தத் தயாரானது. ஆனால் தங்களுடைய பாடத்திட்டத்திற்கும், MCI அறிவித்துள்ள பாடத்திட்டத்திற்கும் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் அல்லாத சில மாநிலங்கள் இதை எதிர்த்தன.

மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று மருத்துவத் தகுதி மற்றும் நுழைவு (நீட்)தேர்வு ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது.

மத்தியில் முதல் முறை பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் 26.05.2014.  முதல் நீட் தேர்வு நடத்தப்பட்ட நாள் 05.05.2013. அப்போது பாஜக ஆட்சிக்கு வரவே இல்லை. ஆக  நீட் தேர்வைக் கொண்டு வந்து, முதல் தேர்வை நடத்தியது திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு.

திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தை, தான், திமுகவின் எம்.பி. அமைச்சராக இருந்தபோது, அதுவும் மருத்துவத்துறை துறையின் அமைச்சராக இருந்தபோது, திமுக கொண்டு வந்த சட்டத்தைத்தான் தற்போது திமுக எதிர்க்கும் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

முதல் நீட் தேர்வு 2013ஆம் ஆண்டு மே 5, 2013ல்  நடத்தப்பட்டபோது பாதிக்கப்பட்டது மாணவர்கள் இல்லை. பணபலம் மிக்க சில தனியார் மருத்துவக் கல்லூரிகளே. சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் நீட் வழக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

ஜூலை 18, 2013 அன்று  நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் கொண்ட அமர்வு  பல்வேறு மாநிலங்களில் தனியார் கல்லூரிகளில் பலவகையான தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்காகத் தனித்தனியே பல தேர்வுகளை எழுதவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

ஆகவே நாடுமுழுவதும் தனித்தனியே பல நுழைவுத்தேர்வு நடத்துவதற்குப் பதிலாக ஒரே தேர்வு நடத்துவது... திறமை வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு நிதிச் சுமை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் என்பதால் நீட் தேர்வு வரவேற்கத் தக்கது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதை எதிர்த்து சில தனியார் கல்லூரிகள், மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மேல் முறையீடு செய்தன. அதை அன்றைய தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், ஏ.ஆர். தவே கொண்ட அமர்வு விசாரித்தது.

மூவர் கொண்ட அமர்வில் மூவரும் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கபீரும், சென்னும் நீட் தேர்வுக்கு எதிராகவும், தவே நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்துக் கொண்டிருந்தனர். எனவே தீர்ப்பு ஒருமனதான தீர்ப்பாக இல்லாமல் பெரும்பான்மைத் தீர்ப்பாக அமைந்தது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சாதகமான இந்தத் தீர்ப்பு. 2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி வழங்கப்பட்டது.

2014 மே வரை திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வைக் கட்டாயமாக்க நினைத்தது. எனவே நீட் தேர்வு தேவையில்லை என்ற கபீரின் தீர்ப்பை எதிர்த்து, 2013 அக்டோபர் 23ஆம் தேதி மேல்முறையீடு  செய்தது திமுக காங்கிரஸ் கூட்டணி மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான்.  

அதன்பின் அமைந்த மோடி அரசு நீட் தேர்வை இரண்டாண்டுகளாக அமல்படுத்தவில்லை. 

அப்போது உச்சநீதிமன்றம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி, நீதிபதி கபீர் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பைத் திரும்பப் பெற்றது. 2010 டிசம்பரில் வெளியிடப்பட்ட  முதல் அறிவிக்கை செல்லும் என தீர்ப்பளித்தது.  உச்சநீதிமன்ற உத்தரவால் மோடி ஆட்சியில் நீட் தேர்வு மீண்டும் உயிர் பெற்றது.

பின்னர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காகத் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 85 சதவீத இடங்களைத் தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தின் கீழ் ஒதுக்கி மாநில அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் வழக்குத் தொடுத்தார்கள்.

அப்போது தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 85 சதவீத இடம் தரக்கூடாது சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இடம் தரவேண்டும் என்று தமிழ் மாணவர்களுக்கு எதிராக வழக்காடிய வழக்கறிஞர்கள்... காங்கிரஸ் சார்புடைய மூத்த வழக்கறிஞரும், திரு.ப.சிதம்பரத்தின் மனைவியுமான திருமதி.நளினி சிதம்பரம், திமுக சார்புடைய,  திமுக அரசில் அட்வகேட் ஜெனராலாகப் பணியாற்றிய பி.எஸ்.ராமன் ஆகியோரும் ஆஜரானார்கள்.

நீட் தேர்வில் 27% பிற்பட்ட வகுப்பினர்களுக்கும், 10% பொருளாதார ரீதியாக பிற்பட்டவர்களுக்கும், 15% பட்டியல் இன (SC) மக்களுக்கும், 7.5% பழங்குடியின (ST) மக்களுக்கும், 5% மாற்றுத் திறனாளிகளுக்கும் என ஒதுக்கப் படுகின்றது. இதில் தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும், எந்தவிதக் குந்தகமும் இன்றி, சரியான முறையில், மாணவர்களுக்கு நீட் தேர்வில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

2019 தமிழ்நாட்டு MBBS மாணவர் சேர்க்கை தரவுகள் (தோராயமாக)

aமொத்தத் தமிழ்நாட்டு அரசு கல்லூரி மாநில இடங்கள் -3050
bபொதுப் பிரிவிற்கு (open category) ஒதுக்கப்பட்ட இடங்கள் -945
(i) பொதுப்பிரிவில் BC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679
(ii) பொதுப்பிரிவில் MBC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 110
(iii) பொதுப்பிரிவில் SC மாணவர்கள் எடுத்த இடங்கள் -20
(iv) பொதுப்பிரிவில் (Un Reserved) மாணவர்கள் எடுத்த இடங்கள் வெறும் 136 மட்டுமே. (இந்த 136 இடங்களில் பிராமணரைத் தவிர வேறு பல சாதிகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

c) பிற்படுத்தப்பட்டவருக்கு (Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -915
(பிற்படுத்தப்பட்ட பிரிவிற்குக் கிடைத்த மொத்த இடங்கள் -1594)
dமிக பிற்படுத்தப்பட்டவருக்கு (MBC) ஒதுக்கப்பட்ட இடங்கள் -610
(மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்குக் கிடைத்த மொத்த இடங்கள் -720)
e) தாழ்த்தப்பட்டவருக்கு (Scheduled caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -579
(தாழ்த்தப்பட்ட பிரிவிற்குக் கிடைத்த மொத்த இடங்கள் -600)
ஆக 2019ல் சமூக வாரியாக தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட MBBS இடங்கள், (iFC-136, (iiBC-1594, (iiiMBC-720, (ivSC/ST-600, சமூக நீதி வழங்கும் நீட் தேர்வை நீக்க முடியுமா?

கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், “நீட் தேர்வை நீக்குவோம்”, என்ற கோரிக்கையைத் தமிழக மக்களிடம் முன் வைத்தது. தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளில், 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும். நீட் தேர்வை நீக்கி விட்டார்களா..? 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதே பொய்யைத் திரும்பச் சொன்னார்கள். இந்த வருடமும், நீட் தேர்வு நடைபெறுகின்றது.

சமூக நீதி காக்கும் நீட் தேர்வை,, ஏழை மாணவர்களுக்கு உதவும் நீட் தேர்வை, பணத்தால் மருத்துவப்படிப்பை வாங்க முடியாமல் செய்த நீட் தேர்வை, தமிழக மாணவர்களுக்கு அதிக இடம் பெற்றுத் தரும் நீட் தேர்வை,  வேண்டாம் என்று அரசியல் மற்றும், பொருளாதாரக் காரணங்களுக்காக நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று திமுக போன்ற கட்சிகளின் பேச்சைக் கேட்பது நல்லதா என்று வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும்.

நீட் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எதிர் கட்சிகள் ஒன்று கூடி வழக்குத் தொடுத்தாலும், நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. நீட் தேர்வு, செப்டம்பர் 12 அன்று, நிச்சயமாக நடைபெறும் என்று வழிகாட்டி உள்ளது. மத்திய அரசைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்ற ஒற்றை கொள்கையில், மாணவர்கள் நலனுக்கு எதிராக , உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிராக, பாராளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக, அறிவுடைமையாகுமா என்று சிந்தியுங்கள்.

தேசியக் குடியுரிமைச் சட்டம் எதிர்த்துத் தீர்மானம், விவசாயிகள் நலன் காக்கும் சட்டம் எதிர்த்துத் தீர்மானம், தற்போது நீட் தேர்வை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றுவதால், சிறுபான்மையினருக்கோ, விவசாயிகளுக்கோ, மாணவர்களுக்கோ ஒரு பயனும் இல்லை. சட்டமன்றத்தின், காலத்தையும், மக்கள் வரிப்பணத்தையும் விரயமாக்கி, தங்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி. திமுக தன் கண்களை மூடிக் கொள்ளும். மக்கள்தான் விழித்துக் கொள்ள வேண்டும்.

என்றும் தாயகப் பணியில்

உங்க அண்ணா.

K.அண்ணாமலை
மாநிலத்தலைவர்