Saturday, October 30, 2021

தமிழ் வான் அவை..

 மீண்டும் நினைவுபடுத்தல் 31.10.21 அன்று தமிழ் வான் அவை நடத்த இருக்கின்ற மாதாந்த இணைய வழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பி‌ல்   பாரதி விழாநடக்க இருக்கின்றது. 15 நிமிடங்களுக்கு முன்னமே   இணைந்து

கொள்ளுங்கள்


இந்நிகழ்வில் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் உரையாற்ற இருக்கின்றார். 


சிறப்பு விருந்தினர்களாக  மகாகவி பாரதியாரின்  கொள்ளுப் பேரன் பேத்திகளாகிய வைரபாரதி அவர்கள், நிரஞ்சன் பாரதி அவர்கள், திருமதி. நீலா  நடராஜன் , Dr.ஜெயந்தி கிருஷ்ணன் அவர்கள்  கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்கள். 


கலை நிகழ்வுகள் 


ஆடற்கலாலய மாணவன் நிமலன் சத்தியகுமார் நடனம்,


தனுசன் சிவராஜா  மெல்லிசைப் பாடல் 


கொ/விவேகானந்த கல்லூரி மாணவர்கள் மெல்லிசைப் பாடல் 


கீழுள்ள இணைப்பை அழுத்தி அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்


https://us02web.zoom.us/j/2509770769?pwd=M0kyckx0aHdVL0xNeGR4MnRzYkVGdz09

Friday, October 29, 2021

தேசமும் தெய்வீகமும்..

 தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்த தலைவர் ஐயா முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளான இன்று அவரை

வணங்கிப்


போற்றிடுவோம்.தேசத்திற்கும் ஆன்மீகத்திற்கும் எதிராக திட்டமிட்டு செயல்படுவோரின் முகத்திரைக்கிழிக்க இந்நாளில் உறுதி ஏற்போம்..

Thursday, October 28, 2021

வாலி...நீ வாழீ

 இன்று அக்டோபர் 29


கவிஞர் வாலி அவர்களின் 

பிறந்த நாள்.


      கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன்)


பிறப்பு:29அக்டோபர்,1931

மறைவு:18 ஜூலை, 2013


   தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். 

   இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.

    ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது.

    வாலி திரைப்படங்களுக்கு 

15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 

    இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

    மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார்.                 

     ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்தது திருப்பராய்துறையில், வளர்ந்தது திருவரங்கத்தில்.

    ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, வாலி என்ற பெயரைச் சூட்டினான்.

    தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

    திருவரங்கத்தில் 

வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.       

    இவர் சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார்.

    அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். 

   வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது.

      இவரது பாடல்களில் குறிப்பிடத்தக்க

பாடல்கள் சில:


" ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... "( ஆயிரத்தில் ஒருவன் 1968)


" மல்லிகை என் மன்னன் மயங்கும்... " (தீர்க்க சுமங்கலி 1974)


" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... "( இரு மலர்கள் 1967)


நான் ஆணையிட்டால் (எங்க வீட்டு பிள்ளை 1965)


காற்று வாங்க போனேன் - (கலங்கரை விளக்கம் 1965)


சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- (சந்திரோதயம் 1966)


வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - (எதிர்நீச்சல் 1968)


இறைவா உன் மாளிகையில்- (ஒளிவிளக்கு 1968)


அந்த நாள் ஞாபகம் - (உயர்ந்த மனிதன் 1968)


புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- (இருகோடுகள் 1969)


ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி (சுபதினம் 1969)


மதுரையில் பறந்த மீன்கொடியை- (பூவா தலையா 1969)


     இவர் பெற்ற விருதுகள்:

     பத்மஸ்ரீ விருது-2007

         

     1973-ல் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாரத விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.

     வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்.

     கவிஞர் வாலி ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். "வடை மாலை" (1982) என்ற படத்தை ஒளிப்பதிவாளர் மாருதிராவுடன் இணைந்து இவர் (வாலி) இயக்கியுள்ளார். இப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை இவர் எழுதியுள்ளார். 

     2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் நாள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் 18 ஜூலை 2013 அன்று காலமானார்...நன்றி வாட்ஸ் அப்


Wednesday, October 27, 2021

சூரியனுக்கு காப்புரிமை.?????

 


இன்று அக்டோபர் 28


போலியோ தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனஸ் எட்வர்ட் சால்க் (Jonas Edward Salk) பிறந்த நாள்.


பிறப்பு:அக்டோபர்28,1914

இறப்பு:ஜூன் 23, 1995.


     இவர் அமெரிக்க மருத்துவ ஆய்வாளரும், நச்சுயிரியலாளரும் ஆவார். 

     அமெரிக்க யூதப் பெற்றோருக்கு நியூயார்க் நகரில் பிறந்தவர். 

      இவரே முதன் முறையாக போலியோ தடுப்பூசியைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக சோதித்தவர்.

     அமெரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சியாளரும், நச்சுயிரியல் ஆய்வாளருமான ஜோனஸ் எட்வர்ட் சால்க், தனது முதல் போலியோ தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து அறிமுகம் செய்தார்.

    ஜோனஸ் சால்க், மருத்துவ ஆராய்ச்சி படிப்பை முடித்து, 1947 ஆம் ஆண்டில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணியில் அமர்ந்தார். 

   1948 ல் போலியோவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் இறங்கினார்.

     1952 ஆம் ஆண்டில் கொள்ளை நோய்க்கு 58,000 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3,145 பேர் உயிரிழந்தனர். 

21,269 பேர் முடக்குவாதத்திற்

குள்ளாயினர்.

     இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். 

    இதனால் தனது ஆய்வை தீவிரப்படுத்திய சால்க், 1952ஆம் ஆண்டு போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்தார்.

    பின்னர் இதனை மேம்படுத்தி, 1953ஆம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி குழந்தைகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தார்.

    1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று சால்க் தடுப்பூசி(சொட்டு மருந்து) வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. 

     பின்னர் 1957ஆம் ஆண்டு சால்க் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது.

    அந்நாள் ஏறத்தாழ ஒரு பொது விடுமுறையாகவே கணிக்கப்பட்டது. 

    தனது தனிப்பட்ட வளத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை.இந்த மருந்துக்கான காப்புரிமையை அவர் கோரவில்லை.

    இத்தடுப்பூசிக்கான கண்டுபிடிப்பு உரிமம் யாரிடம் உள்ளது என தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சால்க்கிடம் கேட்கப்பட்ட போது, அவர் "ஆக்கவுரிமை எதுவும் கிடையாது. சூரியனுக்கு நீங்கள் ஆக்கவுரிமை கோர முடியுமா?" எனக் கேட்டார்.

   1960-ல் கலிபோர்னியாவில்

உயிரியல் படிப்புகளுக்கான சால்க் கல்வி நிறுவனத்தை சால்க் நிறுவினார்.

   இந்நிறுவனம் இன்று மருத்துவ, அறிவியல் ஆய்வுகளுக்கு மையமாகத் திகழ்கிறது.

    சால்க் தனது இறுதி நாட்களில் எச்.ஐ.வி.க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார். 


   

நிழல்கள் நிஜங்களாய்..நிஜங்கள் நிழல்களாய்..


 

Thursday, October 21, 2021

நவீன உரைகல்

தலைப்பின்றி

எழுதியவர் பெயருமின்றி

ஒரு கவிதையைக் கொடுத்து

வாசிக்கச் சொன்னார்

எம் பத்திரிக்கை ஆசிரியர்


படித்துப் பார்த்தேன்

எதுவும் புரியவில்லை


"எதுவும் புரிந்ததா ?" என்றார்


"இல்லை " என்றேன்


பின் தலைப்பை மட்டும் சொல்லி

"இப்போது புரிகிறதா ? " என்றார்.


"புரிவது போலவும் இருக்கிறது

புரியாதது போலவும் குழப்புகிறது "

என்றேன்


பின் மெல்லச் சிரித்தபடி

எழுதியவர் பெயரைக் காட்டி

"இப்போதாவது புரிகிறதா ? " என்றார்.


அவர் பிற(ர)பலக் கவிஞராய் இருந்தார்


மீண்டும் "இப்போது..."என்றார் ஆசிரியர்


நானும் இப்போது மெல்லச் சிரித்தபடி

"புரிவதோடு மட்டும் இல்லை

மிகச் சிறந்த கவிதையாகவும்..."என்றேன்

படித்ததும் பகிரப்பிடித்தது..

 M 1921

Courtesy Dinamalar

📰 ஏன் மோடி அரசால் ஊழல்வாதிகளை தண்டிக்கமுடியவில்லை என்பதற்கு தினமலர் திரு எஸ்.ராமசுப்ரமணியம் ஆராய்ந்து கூறும் பதிலை படியுங்கள்.


😭 நாட்டை குட்டிச்சுவராக்கியது காங்கிரஸ் !


'ஊழல் உலகளாவியது என்றார், காங்கிரசைச் சேர்ந்த, மறைந்த பிரதமர் இந்திரா.


பட்டி தொட்டியெங்கும் பரவி இருக்கும் ஊழலையும், முறைகேட்டையும், சொத்து குவிப்புகளையும், மத்தியில் ஆளும் கட்சிக்கு, 'மெஜாரிட்டி' பலம் இருந்தும், கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தான் உச்சகட்ட சோகம்.


* நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருந்த காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடிந்தது.


* எல்லை தாண்டி வந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த சீனாவை, தடுத்து நிறுத்த முடிந்தது.


* திமிரிய பாகிஸ்தான் நாட்டை போர் செய்யாமலே நசுக்க முடிகிறது.

 

ஆனால், நாட்டை சூறையாடி, கொள்ளையடித்து, இந்தியாவில் மட்டுமல்லாது, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட, சொத்துக்களை வாங்கி வாங்கி குவித்துக் கொண்டிருப்பவர்களை தண்டிக்க முடியவில்லை.


தண்டிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, தங்களை இந்த நாட்டிலுள்ள சட்டங்களால் தண்டித்து விட முடியாதபடி, சட்டப் பாதுகாப்பையும் வைத்துக் கொண்டு, ஆட்சியாளர்களுக்கே சவால் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.


வெள்ளையும், சொள்ளையுமாய் அணிந்து, வீதியுலா வந்து, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், நாட்டு சட்டங்களுக்கும் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.


இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து போன போதே, இந்த நாட்டை, 'இந்துஸ்தான்' என்று அறிவித்து இருந்தால், இந்தியா இவ்வளவு இன்னல்களை சந்திக்க நேர்ந்திருக்காது.


உலகில் பல நாடுகளும் பின்பற்றாத, பின்பற்ற துணியாத, பின்பற்ற முனையாத, 'மத சார்பின்மை' என்ற போர்வையை போர்த்திக் கொண்டு நின்றதால், வந்த வினை.


அதனால்விளைந்து கொண்டிருக்கும் விளைவை, இந்த நாட்டில் பிறந்த ஒவ்வோர் இந்தியனும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.


நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததாக பீற்றிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியானது, அரசியல் நிர்ணய சட்டத்தை கேலிக்குரியதாக்கி, சிரித்துக் கொண்டிருக்கிறது.


இங்குள்ள திராவிடக் கட்சிகள், மத்திய அரசு நிர்வாகத்தில் பார்ப்பனர்களே அதிகம் நிறைந்து, ஆதிக்கம் செலுத்தி ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றனர்' என, 'கதை' அளந்து கொண்டிருக்கின்றன.


அந்த கதையில், 1 சதவீதம் கூட உண்மை கிடையாது என்பதை விளக்குவதே, இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.


பொதுவாகவே அரசு அலுவலர்களும், அதிகாரிகளும், ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருப்பர் என்பது இயல்பு. 

அதற்காக, அதிக விசுவாசம் காட்டி, தாள் பணிந்து கொண்டிருந்தால், நாட்டின் நிர்வாகம் மட்டுமல்ல, மக்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகும் என்பது அவர்களுக்குத் தெரியாதா ? தெரியும். தெரிந்து தான் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.


 டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்பது வரை, தேர்தல் கமிஷனருக்கு உள்ள அதிகாரம் என்னவென்று ஒருவருக்கும் தெரியாது. 


தேர்தல் கமிஷனரே யார் என்று, அப்போது பலருக்கும் தெரியாது.

தேர்தல் கமிஷனரின் அதிகாரத்தையும், கமிஷனின் அதிகார வரம்பையும் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உணர்த்திய, டி.என்.சேஷன், ஓய்வு பெற்றதும் என்ன செய்தார் தெரியுமா ?


அப்போது நடந்த லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம் லக்னோ தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு, பா.ஜ., தலைவர் அத்வானியிடம் தோல்வியடைந்தார். 


அதுவரையில் அவர் மீது கொண்டிருந்த மதிப்பும், மரியாதையும் சுக்கு நுாறாக நொறுங்கிப் போனது. சேஷன், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தால் கூட, அதை சகித்துக் கொண்டிருக்க முடியும்.


 ஆனால், ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசம் காட்டியதால் தான், அவரது, 'இமேஜ் டேமேஜ்' ஆனது.


ஜோசப் குரியன் என்று ஓர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, 'ஹிந்துக்களுக்கு எதிராக தீர்ப்பளிப்பதற்காகவே, காங்கிரஸ் கட்சி என்னை, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக்கியது' என்று பேட்டியளித்ததாக ஒரு செய்தி வெளியானது. 


ஓரிரு நாட்களிலேயே, அப்படி நான் பேட்டி அளிக்கவே இல்லை என்று மறுப்பும் வெளியானது. 


கடந்த, 2018 ஜனவரி 12 ல், நம் நாட்டில், ஒரு வரலாற்று சம்பவம் பதிவானது. 


உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த செல்லமேஸ்வரரும், மேலும் மூன்று நீதிபதிகளும் இணைந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, அரசை எதிர்த்து போராட்டம் மாதிரியான ஒரு நிகழ்வை பதிவு செய்து வேடிக்கை காட்டினர்.


நாடு சுதந்திரம் அடைந்தது முதல், 2018 ஜனவரி வரை, ஏதாவது போராட்டங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றுள்ளனரா, சிந்தித்து பாருங்கள். இந்த போராட்டத்தின் பின்னணியிலும், காங்., தான் இருந்ததாக அப்போது கூறப்பட்டது.


இது போன்ற தேச விரோத செயல்களால் தான், தேர்தல்களில் தோல்வி அடைந்து, காங்கிரஸ் என்ற கட்சியே கால போக்கில் காணாமல் போய் விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  


நாடு முழுவதும், நாளுக்கு நாள் ஊழல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாக உள்ளது. நேர்மையானவர்கள் குறைந்து, லஞ்ச, ஊழல் பேர்வழிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.


மத்திய அரசால் ஏன் அந்த ஊழல் பேர்வழிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்பதற்கு, கீழ் காணும் புள்ளிவிபரங்களே சான்று.


கட்டடம், 'ஸ்ட்ராங்காக' இருந்தாலும், 'பேஸ்மென்ட்' எவ்வளவு, 'வீக்'காக உள்ளது என்பதை, இதை வாசிப்பவர்கள் ஊகித்துக் கொள்ள முடியும்.


* ஜனாதிபதி அலுவலகத்தில் செயலர்களாக இருப்பவர்கள், 49 பேர். அவர்களில், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை, 45 பேர். ஹிந்துக்கள் வெறும், நான்கு பேர் மட்டுமே.  அந்த, 45 பேரை பின்னே தள்ளி, இந்த நான்கு பேரால் என்ன செய்து விட முடியும் ?


* துணை ஜனாதிபதி அலுவலக செயலர்கள் ஏழு பேர். அந்த ஏழு பேருமே முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் மட்டுமே, ஒரு ஹிந்து அதிகாரி கூட கிடையாது.


* கேபினட் செயலர்களின் எண்ணிக்கை, 20 பேர். அவர்களில், 19 பேர்கள் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் தான். ஒரே ஒரு செயலர் மட்டுமே ஹிந்து ஆவார்.

 

 * பிரதமரின் அலுவலக செயலர்கள், 35 பேர். அவர்களில், 33 பேரும், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் தான். வெறும் இரண்டு பேர் மட்டுமே, ஹிந்து அதிகாரிகள். அந்த, 33 பேரை மீறி, இந்த இரண்டு ஹிந்து அதிகாரிகளால் என்ன செய்து விட முடியும் ?


* மத்திய அரசின் விவசாயம் மற்றும் நீர் பாசனத் துறை அதிகாரிகளின் எண்ணிக்கை, 274. அவர்களில், 259 பேர் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களே. மீதமுள்ள, 15 பேர் மட்டுமே ஹிந்துக்கள்.


* மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை, 1,379, அவர்களில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள், 1,331 பேர். ஹிந்து அதிகாரிகள், 48 பேர் மட்டுமே. 


* சுகாதாரத் துறை அதிகாரிகளின் எண்ணிக்கை, 209, அவர்களில், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள், 192 பேர். மீதமுள்ள, 17 பேர் தான் ஹிந்து அதிகாரிகள்.


* நிதித் துறையில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை, 1,008, அவர்களில், 952 அதிகாரிகள் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் ஆவர். ஹிந்து அதிகாரிகளின் எண்ணிக்கை வெறும், 52 மட்டுமே.


* அப்படியே, திட்டக் கமிஷன், ரசாயனம் மற்றும் உரத் துறையிலும், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை தான் அதிகம். 


* மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்திய துாதர்களின் எண்ணிக்கை, 140, அவர்களில், 130 பேர், முஸ்லிம், கிறிஸ்துவர் மட்டுமே. 

 

* இந்தியாவில் உள்ள, 3,600 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில், 3,000 அதிகாரிகள் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் தான். வெறும், 600 அதிகாரிகள் மட்டுமே ஹிந்துக்கள்.


* பி.டி.ஐ., எனப்படும், 'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா' செய்தி நிறுவனத்தில் உள்ள மொத்த பதவிகள், 2,700. அதில், 2,400 பதவிகளை ஆக்கிரமித்துள்ளவர்கள் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களுமே.


இத்தனை பேரும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது நியமிக்கப்பட்டவர்கள்.


இதில் ஒரு நபரை டிரான்ஸ்பர் பண்ணிணால் கூட, போச்சு, போச்சு எல்லாம் போச்சு மோடி ஆட்சியில் சிறுபான்மையினரை நசுக்குகிறார்கள் என்று சோனியா காந்தி குடும்பம் கத்தும். இந்திய ஊடகங்கள் குதிக்கும். வெளி நாட்டு ஊடகங்கள் கொந்தளிக்கும்.


இப்படி பட்ட நிலையில் தான் இந்தியா உள்ளது.


நாடு சுதந்திரமடைந்த நாள் முதலாக, எந்த அரசும், இந்த அளவுக்கு, நம் அரசியல் அமைப்பை மீறி செயல்பட்டதில்லை. 


முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களைத் தவிர, இந்தியாவில் உள்ள வேறு எந்த இனத்திலும் உயர்ந்த, நேர்மையான, கல்வியறிவு பெற்ற, அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இல்லையா. இல்லை அவர்கள், அந்த காங்கிரஸ் கட்சியின் கண்களுக்குத் தெரியவே இல்லையா ?


உலகில் உள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ நாடுகளில் கூட அனுபவிக்க முடியாத,- அனுபவிக்க இயலாத மத சுதந்திரத்தை, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால், அப்படியொரு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டே, ஆட்சியில் அமர்ந்துள்ள கட்சிக்கு, மதவாதக் கட்சி என்று திருநாமம் சூட்டி, குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர்.


இப்படி, நம் இந்திய பார்லிமென்ட் ஜனநாயகக் கட்டடத்தின் அஸ்திவாரத்தை பலவீனமாக்கி, அதன் மேல் பலமான கட்டடத்தை கட்டி உள்ளனர்.


இப்படி நம் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்திருப்பதால் தான், 'சீனாவுடன் போர் நடத்த முடியுமா; பாகிஸ்தானை முடக்கி வைக்க முடியுமா ? என்று, காங்., முன்னாள் தலைவர் ராகுல், மத்திய அரசை கேலி செய்து கொண்டிருக்கிறார்.


மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மட்டும் நீடித்திருந்தால், அயோத்தி பிரச்னை இன்னும், 100 ஆண்டுகளுக்கு இழுத்து சென்றிருக்கும். 


தான் விதைத்த விதையின் பயனை, அறுவடை செய்து கொண்டிருக்கிறது காங்கிரஸ்.


இந்த நாடு கெட்டு சீரழிய என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும், அட்சரம் பிசகாமல் செய்து விட்டு, மிச்சம் உள்ளதையும் கெடுக்காமல் விட மாட்டோம் என்று, சவால் விட்டுத் திரிபவர்களை என்னவென்று சொல்வது ? பாஜக ஆட்சிக்கு வந்ததும் சில பதவிகள் இந்துக்களுக்கு கொடுத்ததம் சோனியா கும்பல் இந்த இந்துமக்களை உயர் பதவியில் அமர்த்த அதிகாரம் வழங்கியது யார்? என வினவினர். 

 மக்களை ஏழ்மையில் தள்ளி மக்கள் பணத்தை கொள்ளையடித்த  சோனியா, சிதம்பரம் மற்றும் உள்ள காங்கிரஸ், திமுக எம்பிக்கள் உலகம் முழுவதும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். தமிழ்நாட்டின் ஸ்டாலின், ஜகத் ரட்சகன் போன்ற திமுக எம்பி எம்எல்எக்கள் உலகம் முழுவதும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். அதிமுகவினரும் வாங்கி குவித்துள்ளதாக கூறுகின்றனர். பாடுபட்டு சுதந்திரம் வாங்கி நாடு பன்றிகள் வசம் சென்றுவிட்டது.


எஸ்.ராமசுப்ரமணியன், தினமலர்.

Sunday, October 17, 2021

சிந்தனைக்கு...

 *Whoever wrote , it is wonderfully written. 


 I never understood one thing that what do these film actors or actresses do that they get 50 crores or 100 crores for each film?


 In a country where top scientists, doctors, engineers, professors, officers etc. get 10 lakh to 20 lakh rupees per year, in that country a film actor earns 10 crore to 100 crore rupees per year.  


What does he do after all?


 What is their contribution in the development of the country?  After all, what does he do that he earns so much in just one year that it might take 100 years for the top scientist of the country!


 Today, the three areas which have fascinated the new generation of the country are cinema, cricket and politics.


 The earning and prestige of the people belonging to these three fields is beyond all limits.


 These three areas are the ideals of modern youth, while their credibility is currently under question.


 So it is useless for the country and the society.


 Drugs and prostitution in Bollywood, match fixing in cricket, hooliganism and corruption in politics.  Money is the main reason behind all this and it is we who bring this money to them.


 We are doing our own harm by burning our own money.  This is the height of stupidity.


 Till 70-80 years back, famous actors used to get normal salary.


 Till 30-40 years ago, the earnings of cricketers were also not special.


 Till 30-40 years ago, there was not so much loot in politics.


 Slowly they started robbing us and we kept robbing ourselves happily.

 

 By getting caught in the clutches of these mafia, we are destroying the future of our children and our country.

 

Till 50 years back, movies were not made so vulgar and sloppy.  Cricketers and politicians were not so arrogant.  Today he has become our God (?).  Now there is a need to lift them from the head and slam them so that they can know their status.


 Once , when the then Vietnamese President Ho-Chi-Minh came to India, in a meeting with Indian ministers, he asked - "What do you guys do?"


 These people said - "We do politics."


 He could not understand this answer, so he asked again - "I mean, what is your profession?"


 These people said - "Politics is our profession."


 Ho-Chi Minh got a little annoyed and said - "Maybe you people do not understand my meaning. I do politics too, but by profession , I am a farmer and I do farming. Farming makes my livelihood. In the morning and evening I go to my fields.  I work. I do my responsibility for the country as President during the day."


 When Ho-Chi-Minh asked the same thing again, a member of the delegation shrugged and said - "Politics is our profession."


 It is clear that Indian leaders had no answer to this.  Later a survey revealed that the livelihood of more than 6 lakh people in India was supported by politics.  Today this number has reached in crores.


 Just a few months ago, when Europe was being devastated by Corona, the doctors were not getting even a little leave for several months in a row, then a Portuguese doctor said angrily - "Go to Ronaldo, to whom you would give millions of dollars to watch. I only get a few thousand dollars."


I firmly believe that in a country where the ideals of young students are not scientists, researchers, educationists, but actors, politicians and sportsmen, they may have their own economic progress, but the country will never progress.  


Socially, intellectually, culturally, strategically, the country will always remain backward.  The unity and integrity of such a country will always be in danger.


 The country in which the dominance of unnecessary and irrelevant sector continues to grow, that country will be weakening day by day.  The number of corrupt and anti-nationals will continue to increase in the country.  Honest people will be marginalized and nationalists will be forced to lead a difficult life.


We need to create an environment to groom and promote talented, honest, conscientious, social worker, belligerent, patriot citizens .

கவியரசன்..

 இன்று அக்டோபர் 17


‘கவியரசு’ கண்ணதாசன் நினைவு நாள்.


பிறப்பு:ஜூன் 24,1927

இறப்பு:அக்டோபர்17,1981

                  கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.

        இவர்

காரைக்குடி அருகே 

சிறுகூடல்பட்டி என்ற ஊரில் சாத்தப்பன் -விசாலாட்சி ஆச்சி இணையருக்கு 8வது மகனாக பிறந்தார்.

     ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், 

அமராவதிபுதூர் 

உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

    சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் ‘கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கினேன்..’ என, அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கவிஞன்.

     சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கதையும் எழுதினார். 

    ‘கிரகலட்மி’ பத்திரிகையில் வெளியான ‘நிலவொளியிலே’ என்பதுதான் இவரது முதல் கதை. 

    புதுக்கோட்டையில் 

ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில நாட்களில் ஆசிரியராக உயர்ந்தார். அப்போது வைத்துக்கொண்ட பெயர் தான் கண்ணதாசன்.

      ‘சண்டமாருதம்’, ‘திருமகள்’, 

‘திரை ஒலி’, 

‘தென்றல்’ 

உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.

    கம்பர், பாரதியாரிடம் ஈடுபாடு கொண்டவர். பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். 

    காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார்.

    சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை, வசனம் எழுதுபவராக சேர்ந்தார்.

   ‘கன்னியின் காதலி’ படத்துக்கு பாடல் எழுதினார். தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.

    இதற்கிடையே பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் இலக்கண, இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார்.

     'பாகப்பிரிவினை’ படத்தில் பாடல் எழுதியதைத் தொடர்ந்து ‘பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘படிக்காத மேதை’ உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் பிரபலமாகின.

   தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் ஈடு இணையற்ற கவிஞராகத் திகழ்ந்தார். 

    4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள்,

 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதியுள்ளார்.

    ‘பராசக்தி’, ‘ரத்தத் திலகம்’, ‘கருப்புப் பணம்’, ‘சூரியகாந்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

   சொந்தமாக படம் தயாரித்ததுதான் இவருக்கு கைகொடுக்கவில்லை.

    அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.

     தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

    மேலே யாரோ எழுதிவைத்ததை கடகடவென்று படிப்பதுபோல அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கொட்டும் என இவர் பாட்டெழுதும்போது உடனிருந்தவர் கூறுவர்.

    ‘இயேசு காவியம்’, ‘பாண்டிமாதேவி’ உள்ளிட்ட காப்பியங்கள், பல தொகுதிகளாக வெளிவந்த ‘கண்ணதாசன் கவிதைகள்’, ‘அம்பிகை அழகு தரிசனம்’ உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் படைத்தார்.

    கவிதை நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், நாடகங்கள், உரைநூல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் மட்டுமின்றி, ‘வன வாசம்’ என்பது உள்ளிட்ட சுயசரிதைகளையும் எழுதினார். 

    இவரது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ 10 பாகங்களாக வெளிவந்தது. 

    ‘சேரமான் காதலி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

    ‘குழந்தைக்காக’ திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது பெற்றார்.

    ஆழமான, புதிரான வாழ்வியல் கருத்துகளை திரைப்பாடல்கள் வழியாகப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் கவியரசர் கண்ணதாசன்.

    அமெரிக்காவில் நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்த போது உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24ல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17அன்று மரணமடைந்தார்.

    அக்டோபர் 20ல் 

அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் 

கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 

அக்டோபர் 22ல் எரியூட்டப்பட்டது.

    தமிழ்நாடு அரசு 

கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி

யில் கவியரசு 

கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது.

     இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

     மேல்தளத்தில் அரங்கமும், 

கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது.

    கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

    அன்னாரது நினைவைப் போற்றுவோம்.


Wednesday, October 13, 2021

A.V.M..

 


வரலாற்றில் இன்று


ஏவி.எம் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் அக்டோபர் 14,1945.


    ஏவி.மெய்யப்பன் 1934-ம் ஆண்டிலிருந்து திரைப்படத் துறையில் இருந்தாலும், 1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதிதான் முதன்முதலில் ‘ஏவி.எம் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

    சென்னை, மைலாப்பூரில், சாந்தோம் பகுதியில், தெற்கு தெரு, எண் - 60 என்ற முகவரியில் இருந்த ஒரு வாடகை கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏவி.எம் புரொடக்சன்ஸ் நிறுவனம், முதலில் மின்சாரத் தேவையின் காரணமாக காரைக்குடியில் இயங்க ஆரம்பித்தது. 

     முதலில் ‘நாம் இருவர்' படத்தை தயாரித்து 14.01.1947-ல் வெளியிட்டார் ஏவிஎம். இதில் பாரதியாரின் பாடல்கள் காட்சிகளாக இடம் பெற்றிருந்தன. இதற்காக பாரதியார் பாடல்களின் உரிமையை முறைப்படி பெறப்பட்டு பின்னர் அது நாட்டுடமையாக்கப்பட்டதென்பது வரலாறு.

     1948-ல் ‘வேதாள உலகம்' படத்தை காரைக்குடியில் இருந்து வெளியிட்டவுடன், ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்றினார் ஏவி.எம். செட்டியார்.

    சென்னையில் 1948 முதல் இன்றுவரை ஏவி.எம் ஸ்டூடியோஸ் கால மாற்றங்களுக்கு ஏற்ப தன்னையும் புதுப்பித்து நிலைத்து நின்று, இந்தியாவின் பழமையான ஸ்டூடியோ என்ற புகழைப் பெற்றுள்ளது. 

     தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் சிங்கள மொழிகளிலும் 175-க்கும் மேற்பட்ட படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

     1937-ல் பின்னணி பாடும் முறையை ‘நந்தகுமார்' என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார் ஏவி.மெய்யப்ப செட்டியார். பிரபல பாடகி லலிதா வெங்கட்ராமன் இந்தப் படத்தில் பாடல்களை பாடியிருந்தார்.

    அதேபோல படங்களை டப்பிங் செய்யும் முறையையும் ஏவி.எம். நிறுவனம்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. முதல் டப்பிங் படம் 1938-ல் ‘ஹரிச்சந்திரா' என்ற கன்னட படம் ஏவி.எம். நிறுவனத்தால் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் ‘டப்பிங்' படமாகும்.

      அடுத்தது ‘இணையம்'தான் உலகை ஆளப் போகிறது என்பதை உணர்ந்து, அதற்காக ‘இதுவும் கடந்து போகும்' என்ற படத்தையும் தயாரித்து இதை இணையத் தளங்களில் மட்டுமே வெளியிட்டது ஏவி.எம். 

     1980-ம் ஆண்டுகளில் சின்னத்திரையான தொலைக்காட்சியும் வளரத் தொடங்கியபோது சின்னத்திரைத் தொடர்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பெரும் வெற்றியைப் பெற்றது ஏவி.எம். நிறுவனம். 

     இப்படி இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை படைத்த ஏவி.எம். நிறுவனம் தனது வெற்றிகரமான கலை உலகப் பயணத்தில் வெற்றி நடை போடுகிறது.

Tuesday, October 12, 2021

"செம்மொழி "

 இன்று அக்டோபர் 12


தமிழுக்கு "செம்மொழி" அங்கீகாரம் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்ட  நாள் அக்டோபர் 12,2004.


       1999 ஜனவரி 16ஆம் நாள், சென்னையில்

நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர், “தமிழ்செம்மொழியா, இல்லையா? என்ற விவாதம், இனிமேலும் தேவை இல்லை. தமிழ் செம்மொழிதான். நடுவண் அரசு அதைஉடனடியாக அறிவிக்கவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

       கலைஞர் வலியுறுத்தலுக்கு இணங்க, 2004-ம்ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் நடைபெற்ற நடுவண் அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழை செம்மொழியாக அறிவிக்க முடிவுசெய்யப்பட்டது.

       அதற்கான ஆணை, 2004ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் வெளியிடப்பட்டது.     

        தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை இன்று நேற்று ஏற்பட்டதல்ல.

        திமுகவின் மூதாதையர் தம் அமைப்பான நீதிக்கட்சி 1918 மார்ச் 30, 31 தேதிகளில் நடத்திய தஞ்சை, திருச்சி பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டிலேயே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

       1918 மார்ச் 18-ம் நாள் சென்னை பச்சையப்பன்  கல்லூரியில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டிற்காக கூடிய புலவர்கள் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி இருந்தனர்.

         “உலகில் பிற நாட்டாரின் தாய்மொழியாய்த் தமிழ் இருந்திருக்குமே யானால் அது இந்நேரம் உலகப் பொது மொழியாய் அமைந்திருக்கும்” என்றார் நமது தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

         திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த அற்புதமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.

         தலைவர் கலைஞரது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 12.10.2004 அன்று தமிழைச் செம்மொழியாக அறிவித்து ஆணை பிறப்பித்தது. 

         இந்திய மொழிகளிலேயே அதிகாரப்பூர்வமாக செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்மொழி தான். 

        30.6.2008 அன்று முதலமைச்சர் கலைஞர் சென்னை திருவல்லிக்கேணியில் செம்மொழி தமிழ் ஆய்வு மைய நிறுவனத்தினை திறந்து வைத்தார்கள்.


Sunday, October 10, 2021

கொடுமுடி கோகிலம்

 இன்று அக்டோபர் 11


தமிழிசைப்பாடகி 

கே. பி. சுந்தராம்பாள் பிறந்த நாள்.  


பிறப்பு:அக்டோபர் 11,1908 கோகிகோ கோ


இறப்பு:செப்டம்பர்19,1980


    தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர்.   

   இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.. அறிஞர் அண்ணா இவரை கொடுமுடி கோகிலம் என்று புகழ்ந்தார். 

    ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார்.

    இவர்  இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். 

    'கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி'யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.

    வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். 

   அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். பசிக்குதே! வயிறு பசிக்குதே என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ரசிகர்களிடன் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார்.

   தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார்.

   1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார்.

   வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.

   மீண்டும் கே.பி.எஸ். 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது.

    அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். 

    கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார்.

    1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. 

    இருவரும் பின்னர் திருமணம் புரிந்து கொண்டனர்.

    பல்வேறு இசைத் தட்டுகளில் கேபிஎஸ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின.

    1933 டிசம்பர் 2ல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25.

  அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலை கட்டத்தொடங்கினார்.

   எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார்.

    நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். 

   தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவைகளில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.

     பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். 1935ல் இப்படம் வெளிவந்தது.

     அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார்.1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.

   தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.

      தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. 

     'பொறுமை யென்னும் நகையணிந்து' , 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலவே' போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கேபிஎஸ் பாடியவை 30.

     1964ல் பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.

    மகாகவி காளிதாஸ் (1966), 

    திருவிளையாடல் (1965),     

    கந்தன் கருணை (1967), 

உயிர் மேல் ஆசை] (1967), துணைவன் (1969),

சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), 

திருமலை தெய்வம் (1973) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.

     காங்கிரஸ் 

பிரச்சாரங்களில் சுந்தராம்பாள் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார்.

    காமராஜர் 

ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை 

உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     இவருக்கு 1966ஆம் ஆண்டு தமிழிசை சங்கம் இசைப்பேரறிஞர் விருது வழங்கியது.

    1970ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

     துணைவன் திரைப்படத்திற்காக சிறந்த தேசிய பின்னணிப் பாடகர் - விருது பெற்றுள்ளார். 

     1980 செப்டம்பர் 19ஆம் நாள் இயற்கை எய்தினார்.

நம் தனியார் மருத்துவமனைகள்.

 இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன்,


அங்குள்ள மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். 


அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக் கொண்டார். 


குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது. 

முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. 


மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு  விற்பனை செய்ய முடிந்தது". 


இளைஞன், ஒருவருக்கு விற்பனை செய்ததாக சொன்னான். 


முதலாளிக்கு கோபம் வந்து விட்டது.

"இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். விரைவில் உன்னுடைய விற்பனையை அதிகரிக்கா விட்டால், 

உன் வேலை பறி

போய் விடும்"

என்று எச்சரித்தார். 


"சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?"


இளைஞன் சொன்னான்,

"933005  பவுண்டுகள்".  


அதிர்ச்சியடைந்த  முதலாளி,

"அப்படி என்ன விற்றாய்"


வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."


"ஆனால்,  அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?" 

இது முதலாளி.


"உண்மைதான்.  இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்கப் படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால், 


நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஓர் இருபது அடி நீளப்

படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4  x  4  ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன்  காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்குத் தங்க இடம் இல்லாததால், மிகப்

பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்"


"அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார். 


"இல்லை, அவர், தனக்குத் தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான்,

தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுது போக்கு என்று சொன்னேன்."


முதலாளி கேட்டார்,

 "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?"


"அங்கு தனியார் மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப் பிரிவு ஆலோசகராக இருந்தேன், 

ஏன் ?"


"இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்தக் கடையைப் பார்த்துக் கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்து விட்டு வருகிறேன்".


 படித்ததில் கவர்ந்தது.


இப்படித்தான் இருக்கிறது...


*இன்றைய மருத்துவ உலகம்.*


(சிரிப்பதற்கு மட்டுமன்று... சிந்திப்பதற்கும் !)


பகிர்வு

Tuesday, October 5, 2021

அருட்பெருஞ்ஜோதி..


 இன்று அக்டோபர் 5


திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த நாள்.


பிறப்பு:அக்டோபர் 5, 1823 

மறைவு:ஜனவரி 30, 1874


    இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மருதூரில்  கருணீகர் குலத்தில் பிறந்தவர்.

    பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார்.

    இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள்.

    இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார்.

   தாயார் குழந்தைகளோடு 

பொன்னேரி சென்று வாழ்ந்தார்.

    பின்னர் 

சென்னையில் 

ஏழுகிணறு பகுதி 

39, வீராசாமி பிள்ளை தெரு என்ற முகவரியில் உள்ள வீட்டில் குடியேறினார்.

    அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

   அவர் தன் தம்பி இராமலிங்கம் பெரிய அளவில் படித்து  முன்னேற வேண்டும் விரும்பினார்.

    ஆனால், இராமலிங்கத்திற்கு கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். 

   அவரை நல்வழிப்படுத்துவதற்

காக, தன் குருநாதரான  மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார்.

    இராமலிங்கம்  அங்கும் சரியாக படிக்கவில்லை. 

   வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார்.

    ஒருநாள் இராமலிங்கத்தை  கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார்  மகாவித்துவான் சபாபதி முதலியார். 

    அங்கே முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த இராமலிங்கம்,

“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”

என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார்.

   பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்கம் பாடுவதைக் கண்ட  மகாவித்துவான் சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார்.

   அவரது அண்ணனிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி, அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.

   அதன் பிறகு இராமலிங்கம் தனது இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார்.

    எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்" என்று பெயரிட்டார்.

    உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார்.

   அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.

   தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். 

   அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். 

    அறிவுநெறி விளங்க சிதம்பரம் 

அருகே உள்ள 

வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார்.

    இத்தகு உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். 

   1867ஆம் ஆண்டில் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார். 

   அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

    இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு,திருவருட்பா

என்று அழைக்கப்

படுகிறது.

     இவரது முக்கியமான கொள்கைகள்:

#இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்

#எதிலும் பொது நோக்கம் வேண்டும்

#எந்த உயிரையும் 

கொல்லக்

கூடாது

#எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது

#சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது

#பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்

#புலால் உணவு 

உண்ணக்

கூடாது

#கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்

#சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது

#மத வெறி கூடாது


    இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். 

    இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.

   தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது. 

    மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். 

    இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது.

   வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

   1874ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் அன்று ஒரு அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு தான் மறையப்போவதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது.

    ஜனவரி 30 முதல் மூடப்பட்டிருந்த அந்த அறையின் கதவு, 

மே மாதத்தில் அரசு உத்தரவுப்படி உடைக்கப்பட்டு திறக்கப்பட்டதாகவும், அங்கு அவர் இல்லை என்றும், எங்கு சென்றார் என்பதற்கு எந்த வித சாட்சியங்களும் இல்லை எனவும் கூறப்படுகிறது.  

  1906ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட கெஜெட்டில் இவர் 

ஜனவரி 30,1874 அன்று மறைந்து விட்டதாக விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

      இந்திய அரசு இவரது சேவையைக் கருத்தில் கொண்டு 2007 ஆகஸ்ட் 17ல் அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்தது.

Monday, October 4, 2021

வடிவமைத்தது எந்த IIT மாணவனாயிருக்கும்.

 Who made it?


An engineer, an architect or a

mathematician ?


Rani ki Vav (Queen's stepwell) 

Its construction is attributed to Udayamati, daughter of Khengara of Saurashtra, Queen of the 11th century Chaulukya Dynasty and spouse of Bhima I. It listed in UNESCO's world heritage sites.


Gujarat 💓


#ancient #positivevibes #stepwellsofindia #LostTemple #stepwell


Saturday, October 2, 2021

ம.பொ.சி

 


இன்று அக்டோபர் 3


ம.பொ.சி. அவர்கள் 

நினைவு நாள்.


பிறப்பு:ஜூன் 26,1906 

இறப்பு:அக்டோபர்3,1995.


      பத்திரிகையாளர், எழுத்தாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர். தமிழ்நாடு விடுதலைப் போராட்டத் தமிழர். தமிழுலகம் கண்ட சிறந்த தமிழ் அறிஞர். சிலப்பதிகாரத்தின் மீது தன்னிகரற்ற ஆளுமை. சிலம்புச் செல்வர் என சிறப்புப் பெயர். 

     தமிழகத்திற்கு வெளியே திருவிதாங்கூர், தென் ஆப்பிரிக்கா, மலேசியா, இலங்கை போன்ற இடங்களில் தமிழர்கள் படும் அவலங்களை வெளியுலகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்ற தமிழர் இன உணர்வாளர்.

     மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே முழுப்பெயர். 

ம. பொ. சி. என்று 

பிற்காலத்தில் அழகு பெற்றது. 

      சென்னையில் பிறந்தவர். ஏழ்மையான குடும்பம். வறுமையின் காரணமாக மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.

       குழந்தைப் பருவத்திலேயே நெசவுத்  தொழிலாளியாக வேலை. பின்னர் அச்சுக் கோக்கும் பணி. 

      இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபாடு. அதனால் எழுநூறு நாட்களுக்கும் மேலாகச் சிறைவாசம்.

      காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். 

      சிறையில் இருக்கும் போது சிலப்பதிகாரத்தைக் கற்றுக் கொண்டார். 

      இருப்பினும் அந்தச் சிறைவாசத்தால் தீராத வயிற்றுவலி தொற்றிக் கொண்டது. வாழ்நாள் இறுதிவரை வயிற்று வலியால் அவதிப்பட்டார். 

      மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு எனும் பெயரை வைக்க அரும்பாடு பட்டார். 

      மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டார்கள். அதை எதிர்த்துப் போராடினார். தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்பேன் எனும் போராட்டம்.

       ஆந்திராவில் கூட்டங்களில் அவர் பேசிய போது 'கிராமணியே திரும்பிப்போ...!' என தாக்குதல் நடத்தி ம.பொ.சி. அவர்களை விரட்டி அடித்தார்கள்.

      திருப்பதியைத் தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் அவருடைய போராட்டத்தால் திருத்தணி தமிழகத்திற்குக் கிடைத்தது பெரிய விஷயம். 

      குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்திற்கு கிடைக்கப் போராடியவர். இருந்தாலும் பீர் மேடு, தேவிக்குளம் கிடைக்கவில்லை. 

     வீரபாண்டிய கட்டபொம்மன்; கப்பலோட்டிய தமிழன்; இருவரைப் பற்றியும் வெளி உலகிற்கு அறியச் செய்தவர்.

      வ. உ. சி. செய்த தியாகங்களைக் 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூலின் வடிவத்தில் கொண்டு வந்து 

வ. உ. சிதம்பரனாருக்குப் பெருமை செய்தார். 

       அதன் காரணமாகத் தான் பின்னாட்களில் வ.உ.சி.யின் பெயர் 'கப்பலோட்டிய தமிழன்' என்று தமிழ்நாடு முழுவதும் அறியப் பட்டது.

    ம.பொ.சி. எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் எனும் வரலாற்று நூல் கட்டபொம்மனின் புகழை உலகம் எங்கும் பரவச் செய்தது.

     1962-ஆம் ஆண்டு ம.பொ.சி. எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு எனும் நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. 

     1972 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்தது.

    2006-ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருடைய நூல்களை நாட்டு உடைமையாக்கிச் சிறப்புச் செய்தது. 

    "விடுதலைப் போரில் தமிழகம்" எனும் நூலின் மூலம் இந்திய விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய பங்கை இந்திய மக்களுக்கு எடுத்து உரைத்தார். 

     சென்னை மாநிலத்திற்குத் "தமிழ்நாடு" எனும் பெயர் மாற்றம் கொண்டுவர பெரிதும் பாடுபட்ட தமிழர். 

     தமிழர் தாயகத்தைப் படைக்க தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தை 1946-ஆம் ஆண்டு தொடங்கினார். 

     தமிழக மேலவையின் தலைவராகப் பணியாற்றினார்.

     சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராகப் பணியாற்றினார்

    எப்போதும் தமிழ், தமிழர், தமிழகம் என தன் இறுதி மூச்சுவரை தமிழ்த் தொண்டு புரிந்த ம.பொ.சி., அவர்கள் தம் 89 வயதில் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 3 அன்று சென்னையில் காலமானார்.

Friday, October 1, 2021

கிராமசபை....சிறு அறிமுகம்..

 *கிராம சபை கேள்வி பதில் :*


*அவசியம் படியுங்கள்*


*1. எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?*


*1. ஜனவரி 26 (குடியரசு தினம்)*

*2. மே 1 (உழைப்பாளர் தினம்)*

*3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)*

*4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)*


*2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?*


*ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.*


*3. கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?*


*உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.*


*4. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?*


*கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.*


*5. கிராம சபையின் தலைவர் யார்?*


*கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.*


*6. கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும்?*


*உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொட்டப்படும். அதேபோல, உங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். 3001 முதல் 10,000 பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும் , 10,000 க்கு மேல் மக்கள் தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை. [அரசாணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள் 25.09.2006 ]*


*7. தேவையான குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபையின் நிலை என்ன?*


*அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபை கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.*


*8. கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?*


*சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.*


*9. எந்தெந்த விசயங்களுக்காகக் கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?*


*உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம். பக்கத்துக்குக் கிராமத்தின் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது. உதாரணமாக, உங்கள் கிராமத்தில் இருக்கும் மதுக்கடையை மூடத் தீர்மானம் கொண்டுவரலாம். ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது. மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும். அதாவது மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனி நபர் உரிமை போன்ற விசயங்களை மீறுவதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்கக் கூடாது.*


*10. தீர்மானம் இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என வரைவு ஏதும் உள்ளதா?*


*இல்லை. இயல்பான வாக்கியங்களைக் கொண்டே கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை.*


*11. மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா?*


*முடியாது. கிராம சபை மக்களுக்கான சபை. பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.*


*12. கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் பெறமுடியுமா? அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?*


*கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும். அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.*


*13. கிராம சபையில் எத்தனைத் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்?*


*இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை. முக்கியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தி பயன்பெற வேண்டும்.*


*14. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?*


*பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள். கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.*


*15. கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்குச் செல்லுபடி ஆகும் ?*


*கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து [மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ] வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும்.*


*16. சிறப்பு கிராம சபை என்றால் என்ன?*


*தமிழகத்தில் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடைபெறும்.* 

*[1. ஜனவரி 26 (குடியரசு தினம்)* *2. மே 1 (உழைப்பாளர் தினம்)*

*3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)] இந்தக் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம். அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.*


*17. சிறப்பு கிராம சபையைக் கூட்ட பஞ்சாயத்துத் தலைவர் முன்வராவிட்டால் என்ன செய்வது?*


*சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டப் பஞ்சாயத்து தலைவர் மறுத்தால், மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை நியமித்துக் கொண்டு [சிறப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் தலைவராக இருப்பர்] சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கலாம்.*


*18. கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும்?*


*கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பித் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.*

*19. முன்னுதாரண கிராம சபையில் காணப்படும் முக்கிய விசயங்கள் என்னென்ன?*


*மக்கள் சொல்வதை தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனமாக கேட்பது*

*மக்களின் சந்தேகங்களுக்கு முறையாகப் பதில் அளிப்பது*

*மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல்*

*பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்கை மக்கள் முன் வாசித்துக் காட்டுதல்*

*கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பது*


*20. கிராம சபையில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டுமா? அதிகாரிகள் வந்தால் நாற்காலியில் அமரலாமா?*


*அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில்தான் அமரவேண்டும்.*


*21. பக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்து கொள்ளலாமா?*


*கலந்துகொள்ளலாம். ஆனால், உங்களின் வாக்கு எந்தப் பஞ்சாயத்தில் உள்ளதோ அந்தக் கிராம பஞ்சாயத்தின் கிராம சபைக்கு மட்டுமே நீங்கள் உறுப்பினர். மற்றோரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.*


*22. இவர் கிராம சபையில் கலந்துகொள்ள கூடாது என யாரையாவது ஒதுக்கி வைக்க முடியுமா?*


*முடியாது. உங்கள் கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் அனைவரும் உங்கள் கிராம சபையின் உறுப்பினர் ஆவார்கள். எனவே, அவர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்துகொள்ள உரிமை படைத்தவர்கள்.*


நன்றி...