முதலில் என்னையும் மதித்து பதிவிட அழைத்தமைக்கு
திருமதி ஆயிஷா பவுல் அவர்களுக்கு என் வணக்கத்தையும்
நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்
ஆரம்பம் முதல் இந்தத் தொடர் துவங்கியதில் இருந்து
அனைவரின் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன்
அனைவரின் கருத்துக்களும் ஒவ்வொரு வகையில்
சிறப்பாகத்தான் இருந்தன
என்னைப்பொறுத்தவரை பெண்களின் பிரச்சனைகள் குறித்து
பெண்கள் எழுதத் துவங்கியதைத்தான்
பெண்ணெழுத்து என்கிற அர்த்தத்தில் தான்
நான் இதை எழுதுகிறேன்
நான் ஏற்கெனவே ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டதைபோல
பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் எல்லாம்
ஆணாக இருந்த காலத்தைவிட
பெண்மருத்துவர்கள் வரத்துவங்கியபின்புதான்
பிரசவதில் பிரச்சனைகள் குறையத் துவங்கின
அதைப்போலவே பெண்கள் பிரச்சனை குறித்து
மிகப் பெரிய ஆண் எழுத்தாளர்கள் எல்லாம்
எழுதிய காலங்களில் அவர்கள் பெண்களை
ஆண்களுக்கென படைக்கப்பட்ட ஒரு பாண்டமாகவே
கருதி எழுதினார்களே ஒழிய அவர்களை ஒரு ஜீவனாகவே
மதித்து எழுதவில்லை.(ஒரு சிலரைத் தவிர)
அந்தக் குறை மட்டும் அல்ல
பெண்களின் மிகச் சரியான பிரச்சனைகள் குறித்து
மிகச் சரியாக (ஏன் நாகரீகமாகக் கூட) எழுதக்கூட
பெண்ணெழுத்தர்களின் வருகை அவசியமாக இருந்தது
பெண்களின் சிந்தனை முன்னேற்றத்திற்கும்
சமூக முன்னேற்றத்திற்கும் கூட
அவர்களது வருகை முக்கிய காரணம் என்றால்
நிச்சயம் அது மிகையாகாது
பெயர்பட்டியலோடு கதைப்பட்டியலோடு
பட்டியலிட்டு எனது வாதத்தை நிலை நாட்ட எனக்கு ஆசைதான்
ஆயினும் பதிவின் நீளம் கருதி இதை இத்துடன் முடிக்கிறேன்
பதிவிட அழைத்தமைக்கு மீண்டும் ஒருமுறை
நன்றி கூறி முடிக்கிறேன்