Friday, September 30, 2022

நான் ஏன் இந்து ஆனேன்..

 *சற்றே நீண்ட பதிவு தான்.. பொறுமையாக வாசித்து விடுங்கள்.*


          நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை.


          நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.


           நீங்கள் கோவிலுக்குள் நுழையும் தருணத்தில்.. ஒரு பூசாரி உங்கள் நெற்றியில் (உங்கள் சம்மதம் இல்லாமல்) திலகம் வைத்து 10 ரூபாய் கேட்பார், அப்போது யாராவது உங்கள் நெற்றியில் மயில் தோகை அடித்து மேலும் 10 ரூபாய் கேட்பார்கள். பிறகு சாம்பலுடன் மற்றொரு திலகம் & 10 ரூபாய்.


          என் அம்மா மூடநம்பிக்கையால்.. அந்த பணத்தை சந்தோஷமாக செலவு செய்தார்கள் என்று நம்பிய  எனக்கு வெறுப்பாக இருந்தது. 


           இது போன்ற விஷயங்கள்.. என்னை கோவில்கள் மற்றும் கடவுள் நம்பிக்கைகள் இருந்து விலக்கி வைத்தது. 


          பின்னர் நான் வளர்ந்து, நான் விரும்பிய மதசார்பற்ற  அரசியலைப் பின்பற்ற ஆரம்பித்தேன். புரட்சி, புடலங்காய் என பல வேப்பிலைகள் எனக்கு அடிக்கப்பட்டன. சேகுவேராவின் படம் போட்ட டி-ஷர்ட்டை, பணியனை அணிந்துகொண்டு சுற்றுமளவு தீவிர முற்போக்கு மற்றும் பகுத்தறிவுவாதியாகி போனேன்.


       அன்று ஒருநாள் என்னை இளக வைத்த ஒரு செய்திக் கட்டுரையைப் பார்த்தேன்.


          ஆம் ஆத்மி கட்சியின் தலைவரின் அறிவிப்பின்படி, இமாம்களின் சம்பளம் மாதம் ரூ.10,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும். 


        அதேசமயம், உதவியாளர்களின் சம்பளம் மாதம் ரூ.9,000லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தப்படும்.டெல்லி வக்ஃப் வாரியத்தின் கீழ் வரும் தேசிய தலைநகரில் உள்ள 185 மசூதிகளுக்கு இந்த முடிவு பொருந்தும். மஸ்ஜித்களில் வசிக்கும் மௌலவிகள்,  மௌலானாக்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கணிசமான மாதச் சம்பளம் அரசு சார்பாக (மக்கள் வரிப் பணம்) வழங்கப்பட்டதை நான் உணர்ந்தேன்.


             கிருத்துவ தேவாலயத்தில்.‌ பங்குத் தந்தைகள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் மாத ஊதியம் வழங்கப்பட்டது. பல்வேறு நலத்திட்டங்கள் அவர்கள் எந்தவித கோரிக்கையும் வாய் திறக்கும் முன்பே நிறைவேற்றப் பட்டுவிட்டது. இந்த செயல்பாட்டை எல்லாம் நான் ஒரு நடுநிலையாளனாக வரவேற்றேன்.


        பிறகு தான் அந்த உண்மை எனக்கு சுட்டது. இந்துக் கோவில்களுக்கு என்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. உண்மையில் பெரும்பாலான கோவில்களில் பூசாரிகளுக்கு கிட்டத்தட்ட சம்பளம் என்று எதுவும் வழங்கப்படவில்லை.


            பக்தர்கள் கொடுக்கும் பணத்தை நம்பியே அந்த பூஜை செய்பவர்கள் இருந்தனர். அதை நான் பிச்சை என்று கேலி செய்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். அரசுகளின் வருமானம் பெரும்பாலும் இந்துக்களுடையது.


      மேலும் கோவில் சொத்துக்கள் நிறைய நிறைய உள்ளன. ஆனாலும் இந்துக்களின் கோவில்களை பராமரிப்போர், பூஜை செய்வோருக்கு சம்பளம் மறுக்கப்படுகிறது.


      எனது கோவில்களில் இருந்து என்னை விலக்கிய ஒரு மதமாற்றக் கட்டுக்கதையின் மறுபக்கம் பல்லிளித்த தருணம். உண்மையில் பூஜாரிகள் எந்த தவறும் செய்யவில்லை. 


         அவர்கள் குற்றவாளிகள் அல்ல. ஆனால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். எனது தர்மத்திற்கு ஆதாரமான வழிபாட்டுத் தலங்களைப் பராமரிப்பவர்கள்.  நான் வணங்கும்  எனது கடவுள் சிலைகளைத் தூய்மை செய்பவர்கள். இன்று கையேந்தும் பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டார்கள். அதனால் அவர்கள் மேலும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.


         நமது வரிப்பணத்தில்.‌ காசு வாங்கும் முல்லா, மௌலானாக்களுக்கு தரப்படும் மரியாதை கூட அல்ல ,, இவர்களுக்கு அவமானம் தரப்பட்டது.  "கருவறைக்குள் நீ நுழைய முடியுமா..? என்ற தர்ம சங்கடமான கேள்வி ஒன்றை முன் வைத்து என்னை மடக்கினார்கள். அது எனது வேலை அல்ல என எனக்கு அப்போது தெரியாது.


            ஆனாலும் எனது மாமா கோவில் ஒன்றில் கருவறையில் பூஜை செய்கிறார். 'பூஜாரி குடும்பம்' என்பதே ஊரில் அவருக்கு பெயர். ஆனால் அவர் பிராமணர் அல்ல. மெல்ல.. மெல்ல என்னைச் சுற்றி பின்னப்படும் பெரும் சூழ்ச்சி வலை ஒன்றை கண்டு கொண்டேன். அது *பிராமண வெறுப்பு!!*


          தெ(ளி/ரி)ந்த பிறகு இந்த மதமாற்ற அரசியலை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தேன்.


         முதலில் என் மனதில் எழுந்த கேள்வி, "ஏன்? இந்த பாகுபாட்டிற்கு என்ன காரணம்?"


         நான் மேலும் தோண்டினேன் ..


 பதில்..


 *அரசியல்.*


          ஆளும் கட்சி இந்து மதத்தை வளர்க்கவே  விரும்பவில்லை. மாறாக நமது தர்மத்தை அழிக்க செய்த நிறைய முயற்சிகள் ('அதற்காகத்தான்.. அவர்களுக்கு கோடி கோடியாக ஹவாலா பணம் வருகிறது' என்ற தகவலை.. பின்னர் தேடி அறிந்து கொண்டேன்) நம் கண்ணுக்குத் தெரியாமல் திறமையாக மறைக்கப்பட்டது.


            அவர்கள் மற்ற மதங்களை ஊக்குவிக்க விரும்பினர். (இந்த பணியும் அவர்களுக்கு கோடியோடியாகப் பணம் வாரி வழங்கும் அன்னிய சக்திகளின் அசைன்மென்ட் தான் என்பதும் புரிந்து கொண்டேன்) இவர்கள் வெளியில் நேர்த்தியாக வேஷம் போடுகிறார்கள். ( இந்த நடிப்பு தான் அவர்களது ஒரே முதலீடு)


           இந்து மதத்தை முடக்கிப் போட.. அவர்கள் கண்டுபிடித்ததே.. "மதசார்பற்ற அரசியல்."


         என்னைப் போலவே பெரும்பாலான இந்துக்கள் அதில் ஏமாந்து விட்டதை உணர்ந்தேன். அது அவர்களது வெற்றிகரமான செயல்பாடு.


       ஏனெனில் ஏமாந்து போன கோடிக்கணக்காணோரில் நானும் ஒருவன்.


"ஏன் அந்த 70 வருடங்களில் ராமர் கோவில் கட்டப்படவில்லை?" 


"ஏன் கங்கை தூய்மைப் படுத்தப்படவில்லை?"


"ஏன் காசி கோவிலின் ஆக்கிரமிப்புகள் நீக்கப்படவில்லை?"


"ஏன் சார்தாம் (கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் புனித ஸ்தலங்கள்) யாத்திரையின் பாதைகள் சீரமைக்கப்படவில்லை?"


"ஏன் கைலாய மலைக்கு இந்தியா நிலப்பரப்பினூடே வழிகள் உருவாக்கப்பட வில்லை?"


"ஏன் இந்துக்களின் (பெரும்பான்மையாக இருந்தும் கூட)  உணர்வுகள் மதிக்கப்படவேயில்லை?மாறாக தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டார்கள்? "


     என்ற.... என் எல்லா கேள்விகளுக்கும் எனக்கு பதில் கிடைத்தது.

            

  ‌          உண்மையிலேயே அவர்கள்.. இதில் எதையுமே, என்றுமே செய்ய விரும்பியதில்லை. இந்துக்களின் ஆலயங்களை மேம்படுத்துவது மதசார்பற்ற அரசியலுக்கு எதிரானது என்று எனக்கு கூறப்பட்டது.


ஆனால்..


         தெருவெல்லாம் மசூதிகள், சர்ச்சுகள் எழுந்த வண்ணம் இருந்தன. அப்படி இருந்தும் அவர்களுக்கு இந்துக்கள் ஓட்டுக்கள் விழுந்து கொண்டே இருந்தது. அதில் நானும் ஒருவன். இதை சொல்வதில் நான் தற்போது வெட்கப்படவில்லை.


ஏனென்றால்..


          இன்று நான் ஏமாறுவதிலிருந்து தப்பித்துக் கொண்டேன்.


        சில நாட்கள்.. தேர்தல்களில்.. நோட்டா கூட எனது  தெரிவாக இருந்தது. ஆனால் உண்மை என்ன தெரியுமா?? 


       நோட்டா வுக்கு ஓட்டுப் போட்டவர்களும் பெரும்பாலும் என்னைப் போன்ற விரக்தி அடை(யவைக்கப்பட்ட)ந்த இந்துக்களே. 


உண்மையில்..


          அந்நிய மத ஓட்டுக்கள் துல்லியமாக ஒருங்கிணைக்கப் பட்டு விட்டன. ஒட்டுமொத்தமாக யார்க்கு அவர்கள் ஓட்டு என்பது தீர்மானிக்கப் படுகிறது. ஆனால் இந்துக்கள் ஓட்டுக்கள் நோட்டா, இனவாதம், பகுத்தறிவு, பொதுவுடைமை மற்றும் மொழிவாதம் உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட காரணிகளால் சிதறடிக்கப் படுகின்றன. நான்(நாம்) இதை உணரும் முன் போலி மதசார்பற்ற கட்சி ஆட்சியில் அமர்ந்து.. தனது மதசார்பற்ற செயல்பாடுகளை மீண்டும் செய்ய ஆரம்பித்து விட்டது.


           நீங்கள் இதை உணர்ந்து பார்க்கும் தருணம் இருந்திருக்கும்.


               தாஜ்மகால்.. ஒரு அற்புதமான 'காதல் சின்னம்' என்று நமக்கு சொல்லப்பட்டது. ஆனால் மும்தாஜ் தொடர்ந்த கருத்தரிப்பால் தனது 14வது குழந்தையை பெற்றதால்.. இறந்தார் உண்மையில் ஷாஜஹானால் கொல்லப்பட்டார் என்று பிறகு தான் தெரிந்தது.


        தாஜ் மகாலை இப்போது காதலின் சின்னமாக பார்க்க முடியவில்லை. அது ஒரு கட்டமைக்கப்பட்ட.. திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு.. நிறுவப்பட்ட பொய்.

         அது இப்போது.. மறுக்கப்பட்ட பெண்ணுரிமையின் இரக்கத்திற்குரிய சின்னமாக எனக்கு புரிகிறது. 


           ஆனால் உங்களுக்கு  தஷ்ரத் மஞ்சி தெரியுமா?அவரது  முயற்சிகள் நம் வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப்படவில்லை. தன் 22 வருட கடின உழைப்பால் மலையை வெட்டி சாலை அமைத்தவர்.


         ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட.. ராஜ ராஜ சோழனின் தஞ்சை பெரிய கோயில் தான் ஒரு உலக அதிசயம்.


           இது நமது மண்டைக்குள்  உட்கார்ந்து கொண்டு வேறு  யாரோ செயல்படுவது போன்றது. இது ஒரு சின்ன உதாரணம்.


            இந்துக்களின் உணர்வுகள் மதிக்கப் படவில்லை என்பது கூட ஒரு பக்கம்.


   மாறாக..

        நமது மனம் புண்படுத்தப்பட்டது. 'இராமபிரான் ஒரு கற்பனை கதாபாத்திரம்' என்று காங்கிரஸ் கட்சி இந்திய அரசு சார்பாக அஃப்டவிட் தாக்கல் செய்தது.


          கோடிக்கணக்கான இந்துக்கள் இருந்தும் அவர்களை காங்கிரஸ் உட்பட எந்த கட்சியும் இதுவரை மதித்தது இல்லை.


        வேதனையின் உச்சமான தருணங்கள் தொடர்ந்தன. 70 வருடங்களில் எதுவும் மாறவில்லை. காங்கிரசுக்கு மாற்று என்று நான் நினைத்த கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மீ, திரிணமூல், ஜகன் காங்கிரஸ், திமுக போன்ற பிற கட்சிகள் இந்துக்களை அவமதிப்பதிலும் பிற மதத்தவரை காபந்து செய்வதில் ஒருபடி மேலே இருந்தன.


          கேரளா மற்றும் மே. வங்கத்தில் இந்துக்கள் மீது நடக்கும் கொலைவெறித் தாக்குதல்கள் பற்றிய தரவுகள் காங்கிரசே  பரவாயில்லை போன்ற தோற்றத்தை தந்தது.


           மீண்டும் மீண்டும் இந்துக்கள் ஏமாந்து போயினர். போலி மதசார்பின்மை.. ஒரு ஆபத்தான மதமாற்ற வலை என்று உணரும் வரை இது  தொடரும் என்பதை அறிகிறேன்.


ஆனால்...


        இவை எல்லாம் ஒருநாள் மாறி விட்டது!!!


*2014...!!*


      நான் அதுவரை இந்துக்களுக்கு மட்டுமே ஆதரவானது, மற்ற இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக இந்துக்களை வைத்து மதவாதம் வளர்க்கும் கட்சி என்று நினைத்திருந்த அல்லது எனது மனதில் விதைக்கப்பட்டிருந்த ஒரு கட்சி ஆட்சி அமைத்தது.


            அந்த நாளிலிருந்து எல்லாம் மாறி விட்டது. பேசுவதற்கு அஞ்சிய இந்துக்கள் தலை நிமிர்ந்து பேச ஆரம்பித்தனர்.


      அயோத்தி, காசி, கங்கை, சார்தாம் போன்ற சீரமைப்புகள் இந்துக்கள் யாரும் கோரிக்கை கேட்காமலேயே நடந்தன.


       இருந்தும் கூட எங்கும் முஸ்லீம் அல்லது கிறித்தவ விரோதம் வளர்க்கப்படுகிறது என்ற பேச்சே இல்லை.( ஆனாலும் இங்கொன்றும் அங்கொன்றும் சிறுபான்மையினருக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதாக பொய்ச் செய்திகள் கட்டமைக்கப்பட்டு கொண்டே இருந்தன.)


            நான் நினைத்தது தவறு. இத்தனை நாள் எனது முட்டாள்தனம் நிறைந்த போலி மதச்சார்பின்மையை உணர ஆரம்பித்தேன்.


       என்னில் பிற ஊடகங்கள் மூலமாக வளர்த்தெடுக்கப்பட்ட நடுநிலை என்னை இதுநாள் வரை ஏமாற்றுவதற்காக கட்டமைக்கப்பட்டது என்பதை உணர்ந்த தருணம்.


         எனது கண்களுக்கு முன்னே ஒரு கட்சி.. இந்துக்களின் நலனிற்காக செயல்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க நான் ஒன்றும் 'நடுநிலைக் குருடன்' அல்ல.


       பளிச்சிடும் விளக்குகள், சாலைகளுடன் கங்கை வரை நீளும் காசி விஸ்வநாதரின் அந்த வளாகம் எனது மனதைத் திறந்து சொல்லி விட்டது.


         இந்த ஆட்சியை ஒரு இந்துவாக நான் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதை. இந்த ஆட்சியின் சார்தாம் யாத்திரை, நமாமி கங்கா போன்ற திட்டங்களை அதன் விபரங்களை பிறகு நான் தேடிப் பார்த்தேன். உண்மை எனக்கு உறைக்க ஆரம்பித்தது.


         ஏன் இந்த ஆட்சி மிகமிக தீவிரமாக எதிர்க்கப்படுகிறது.? என்பதை புரிய இப்போது அதிக நேரம் எடுக்கவில்லை.


         ஆம். இப்போது எனது மதத்தை வளர்க்க விரும்பும் ஒரு கட்சி மையத்தில் உள்ளது. இதை சொல்லவோ ஆதரிக்கவோ உண்மை புரிந்த இந்நாட்டின் குடிமகனாகிய எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.


           இந்துக்களாகிய நான்/நாம் இதுவரை இவர்களை ஆதரிக்கவில்லை.


       அதனால்தான்.. சோனியா, கெஜ்ரிவால், ஸ்டாலின், ஜெகன்,  பினாரயி  போன்றவர்கள்.. பாதிரிகளின்/மௌல்விகளின் சம்பளத்தை உயர்த்த விரும்புகிறார்கள்.


          இந்துக்களாகிய நாம் போலி மதச்சார்பின்மையால் மூழ்கி இருந்தோம். அதனால் தான் கோவில்களின் இந்த தேவையை யாரும் பார்க்கவில்லை.


       நம் கண் முன்னே நமது கோவில் சொத்துக்களை அவர்கள் கொள்ளை அடிக்க முடிந்தது.


          இந்துக்களாகிய நாங்கள் எங்கள் மத அடிப்படையில் வாக்களிக்க முடியாமல் செய்யப்பட்டோம். ஆனால் மறுபக்கம் மற்ற மதஓட்டுக்கள் ஒருங்கிணைக்கப் படுகின்றன. 


           இந்துக்களின் பார்வை மட்டும் மதசார்பற்ற நோக்கு கொண்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க இந்துக்களுக்கு தவறான புரிதல்களும், வழிநடத்தல்களும் ஊட்டப்பட்டது. நமது வழிபாடுகள், நடைமுறைகள் திட்டமிட்டு நிறுத்த/தடை செய்யப்பட்டன.


       இது ஒரு கூடுதல் செய்தி.    ஈரமுள்ள மனதால் படிக்க வேண்டாம்.


           நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் படி மனு தாக்கல் செய்யும் போது நரசிம்ம கோபாலன் என்ற கோவில் குருக்களின் மாத சம்பளமாக ரூ. 750, உயர்த்தப்பட்டது.


         அதுவரை கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக (காலம் காலமாக) அவர் பெற்றுக் கொண்டிருந்த மாதச் சம்பளம் 250  ரூபாய்.


          நீதிமன்றம் வழங்கிய 750/- சம்பளத்தை, "3 மடங்கு சம்பள உயர்வு - இதோ உனக்கு..." என்று கிண்டல் தொனியில் அவருக்கு அந்தப் பணம் வழங்கப் பட்டது.


          கோயிலில்.. மேலும் ஆறு முழுநேர சேவை பணியாளர்கள் உள்ளனர்.


          அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெறும் மூன்று இலக்க சம்பளம். 900க்கு அருகில் என்று நினைத்து விட வேண்டாம்.  300, 400, 600 என்ற அளவில் தான். திருப்பூந்துருத்தி ஆலய உதவியாளரின் மாதச் சம்பளம் வெறும் 240ரூபாய்.


அதுவும் பல மாதங்களாகத் தரப்பட வில்லை.


         பத்தமடை அருகே உள்ள வில்வநாதர் கோவிலில் பூசாரிக்கு மாதம் ரூ.1000 சம்பளம் வழங்கப்படுகிறது.


        பிரம்மதேசத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் புராதனமான கைலாசநாதர் கோவிலில்‌. அர்ச்சகருக்கு மாதம் 19 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

 🤦🏻‍♂️


            இதெல்லாம் காணும்போது ஒரு இந்து தான் ஒரு ஆலய வழிபாட்டாளாராக  கலங்கினால்.. இதற்கு "காரணம்.. நீங்களும், நானும் தான்" என்பதை வலித்தாலும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

எனக்கு அதில் தயக்கமில்லை.  ஏனெனில் நான் உண்மை தெரிந்து கொண்டேன்.


        நிஜத்தில் கோவில் சொத்துக்கள் பல ஆயிரம் கோடிக்கணக்கில். சம்பளம் தாராளமாக தரலாம். ஆனால் இது திட்டமிட்டுக் காரணத்துடன் மறுக்கப் படுகிறது.


             இவர்களுக்கு ஆழமான உள்நோக்கம் இருக்கிறது. நமது கோவில்களை அழிய விடப்படவேண்டும்.


           நமது கோவில்களில் அர்ச்சகர்களின் நிலை மிகவும் மோசமாக ஆக்கப்பட்டு விட்டது. அவர்களை பிச்சைக்காரர்கள் போல் காட்டியது யார்?


          சம்பளம் இல்லாமல் கோவில் நடைமுறைகளுக்கு பணி செய்ய எவரும் முன்வரக் கூடாது. என்ற திட்டமிட்ட சதிச் செயல்பாடுகள்.


   ஆனால்..


         இது எல்லாம் மாறி விடும் என்று இன்று நான் நம்ப ஆரம்பித்து விட்டேன்.


       ஒரு இந்துவாக.. என்னை சாதரணமாக அல்ல, தலை நிமிர்வுடன் என்னை உணர ஆரம்பித்தேன். இந்த முறை  ""ஹிந்து வேறு ஹிந்துத்வா வேறு"" என்று ராகுல் காந்தி சொன்ன போது நான் ஏமாறவில்லை.


      திருப்பி கேலி செய்தேன் அதை ஒரு 'இந்து வெறுப்பாளன்' சொல்லக்கூடாது என்று உடனே பதிவிட்டேன்.


       அந்த தந்திரமான மதசார்பற்ற நிலை மனோநிலை மாறி சுதந்திரமான இந்து ஆதரவாளன் என உணர்ந்தேன்.


        போலிகளை, வேஷமிடுபவர்களை என்னால் இப்போது எளிதாக கண்டுபிடித்து விட முடிகிறது.


        மம்தா கோவிலுக்கு செல்வதும்,


      பிரியங்கா திலகமிடுவதும், 


       துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலாக ஏறி இறங்குவதும்..


ஜெகன் இந்துவாக மாறியதாக படித்ததையும் என்னால் போலித்தனம் என்று உடனே உணர முடிகிறது.


        இப்போது.. 


          *நான் மிகவும் பெருமையுடன் எனது கோயில்களுக்குச் செல்கிறேன்.*


         *கோவில்களில் என்னால் முடிந்த அளவு தானம் செய்கிறேன்.*


         அந்தணர்களுக்கு.. பிச்சை என்றல்ல.. தாராளமாக காணிக்கை இடுகிறேன்.


          நம் தெய்வங்களுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த.. நம் மரபைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு நன்றி செலுத்தும் பங்களிப்பாக இதை நான் கருதுகிறேன்.


            இப்போது அவர்கள் உருவத்தை கண்டு கேலி உணர்வு பொங்குவதில்லை. மாறாக அவர்களை காணும் போது மனத்தால் பணிகிறேன்.


         நமது தர்மத்தைக் காக்க நினைக்கும் அந்த தியாக உணர்வு.. என்னில் நமது தர்மத்தின் ஊற்றைப் பெருக்கெடுக்க வைக்கிறது.


        போலி வரலாறு மற்றும் ஆரிய படையெடுப்பை நம்பிய காலம் மலையேறிவிட்டதை அடுத்த முறை நீங்கள் கோவிலுக்குச் சென்று குருக்கள் அல்லது அர்சகரிடம் பணம் காணிக்கை அளிக்கும் போது.. அவர் பாதிக்கப்பட்டவர் & குற்றவாளி அல்ல என்பது உங்களுக்குத் தெ(பு)ரிய வேண்டும்.


       "மலிவான.. மதமாற்ற அரசியலுக்கு அவர் பலியாக்கபட்டார்" என்பதை உணரும் தருணம் அது.


        கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதையும், பக்தர்கள் கொடுக்கும் பணத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு சம்பளம் வழங்கப்படுவதையும் அரசுகள்  உறுதிப்படுத்த வேண்டும்.


         விரைவில்.. இந்த நிலை மாறி நன்மைகள் வந்து விடும் என்று உறுதியாக நம்புகிறேன். 


     எனக்குத் தெரியும். இந்து என்ற எனது உணர்வால் நான் யாரையும் புண்படுத்தவில்லை.


ஆனால்..


        இனி என்னை நான் இந்து என்பதற்காக யாரும் புண்படுத்தி விட முடியாது.


இந்து என்ற உணர்வில் எனது தர்மத்தை மதிக்கும், காப்பாற்றும் ஒரு ஆட்சியை தேர்ந்தெடுக்க நான் செயல்படுவேன்.


           பிறரால் என்மீது கட்டமைக்கப்பட்ட தயக்கங்களை நான் குப்பையில் தள்ளினேன்.


         இந்து என்றால் நடுநிலை அல்ல என்ற பொய்யை அடித்து நொறுக்கினேன்.


       என்னைப் போன்ற இந்துக்கள் நடுநிலையாக இருப்பதால் தான் பிற மதங்கள் இன்று இந்த நாட்டில் சுதந்திரமாக இருக்கின்றன. 


ஆனால்


          இன்று எனது கோவிலை இடித்தால் பொறுத்துக் கொள்வதே நடுநிலைமை என்று எவனாவது சொம்படித்தால் அதை நம்பும் மூடனல்ல!! அதுதான் நிச்சயமாக முட்டாள்தனம்.


        மதமாற்ற கட்சிகள் அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் இனி எனது ஆதரவைப் பெறுவதற்கு அவை இனிமேல் என்னை, எனது தர்மத்தை மதிக்க வேண்டும். மதித்தே ஆக வேண்டும். இதில் இனி மாற்றமில்லை.


*ஆம், நான் ஒரு இந்து!இந்துத்வனும் நானே!!


🙏🏻🙏🏻🙏🏻வாட்ஸ் அப் பகிர்வு..

Tuesday, September 27, 2022

தெரிந்து தெளிவோம்..

 


உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்த அதிசயம்!

உச்ச நீதிமன்றத்தில், அயோத்தி ராம ஜன்ம பூமி தொடர்பான வழக்கு விசாரணை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பிலும், வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.

இரு தரப்பிலும் சாட்சிகளாக பலர், நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.'அயோத்தி தான் ராம ஜன்ம பூமி' என தெரிவித்து, தன் வாதங்களை மூத்த வழக்கறிஞர்பராசரன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.அப்போது நீதிபதி குறுக்கிட்டு, 'ராமர் இருந்தார் என்பதற்கு, வேதங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை கூறுகிறீர்கள். ராமபிரானின் ஜன்ம பூமி பற்றி, எந்த வேதத்திலாவது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா?' என, பராசரனிடம் கேட்டார்.

நுாற்றுக்கு நுாறு சரி

இதற்கு பராசரனால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. அப்போது, சாட்சிகள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து, முதியவர் ஒருவர் எழுந்தார். அவரை தான், ராம ஜன்ம பூமிக்கு ஆதரவான முக்கியமான சாட்சியாக, பராசரன் தெரிவித்திருந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கிரிதர்.அவர் நீதிபதியைப் பார்த்து கூறியதாவது:மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே... ரிக் வேதத்தில்,'ஜைமினியா சம்ஹிதா' பகுதியில், ராம ஜன்ம பூமி பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், சரயு நதியின் கரையில், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து, ராம ஜன்ம பூமிக்கு செல்வதற்கான வழிகளும், துாரமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த வழிகளை பின்பற்றிச் சென்றால், ஒருவரால், ராம ஜன்மபூமிக்கு நிச்சயம் செல்ல முடியும்.இவ்வாறு, அவர் கூறினார். இதை அவர், எந்த புத்தகத்திலிருந்தும் படித்து காட்டவில்லை; எழுதியும் காட்டவில்லை. மடை திறந்த வெள்ளம் போல், மனதிலிருந்து கூறினார்.

கிரிதர் கூறியது சரிதானா என ஆய்வு செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கிரிதர் கூறியது நுாற்றுக்கு நுாறு சரி என தெரிந்தது. இதை அறிந்த நீதிபதி, 'இது ஒரு அபூர்வமான நிகழ்ச்சி; அதை, இன்று நான் நேரில் பார்த்தேன்' என, ஆச்சரியத்துடன் கூறினார்.இதைக் கேட்ட கிரிதர், மிகவும்அமைதியாக, எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருந்தார்.நீதிபதி இப்படி மிகவும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் கூறியதற்கு பின்னணியில், முக்கியமான காரணம் உள்ளது. இதற்கு நாம், இந்திய வரலாற்றை திருப்பிப் பார்க்க வேண்டும். அப்படி பார்த்தோமானால், வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய அவசியத்தை உணர்வோம்.உத்தர பிரதேசமாநிலம், ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பண்டிட் ராஜ்தேவ் மிஷ்ரா - சசிதேவி தம்பதிக்கு, 1950ம் ஆண்டு, ஜனவரி, 14ம் தேதி, மறக்க முடியாத நாளாக அமைந்தது. ஆம், அன்றைய தினம் அவர்களுக்கு, அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, 'கிரிதர்' என, பெயர் வைத்தனர்.இரண்டு மாதத்துக்குப் பின், குழந்தை கிரிதர், கடும் நோயால் பாதிக்கப்பட்டான். அது, குழந்தை கிரிதர் மற்றும் அவனது பெற்றோரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆம்... கிரிதருக்கு பார்வை பறிபோனது.

அபார ஞாபக சக்தி

குழந்தை வளர வளர, தன் மகனால் படிக்கவும், எழுதவும்முடியாது என்பதை, கிரிதரின்தந்தை ராஜ்தேவ் புரிந்து கொண்டார். ஆனால், கிரிதரிடம், எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையும், சொல்லிக் கொடுத்ததை மனப்பாடம் செய்யும் சக்தியும் இருப்பதை அறிந்தார். மேலும், கிரிதருக்கு மறதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல், அபார ஞாபக சக்தியும் இருந்தது.

இதனால், மகனில் அருகில் அமர்ந்து, அவனுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தார். வேதத்துக்கு அர்த்தமும் சொல்லி கொடுத்தார். கிரிதருக்கு, 8 வயதான போது, ராமானந்த் வழியைப் பின்பற்றும் மடம் ஒன்றில் சேர்த்தார். மடாதிபதி, கிரிதரை தன் சீடனாக ஏற்று, அவருக்கு, 'ராமபத்ரா' என்ற புதிய பெயரையும் வைத்தார். ராமபத்ராவுக்கு, புதிய வழியை காட்டினார். அவரது நினைவு திறனை அறிந்து, வேதங்கள், புராணங்கள், உபநிஷத்கள் என, அனைத்தையும் கற்பித்தார். குரு சொல்லச் சொல்ல, அதை மனப்பாடம் செய்து, நினைவில் வைத்துக் கொண்டார் ராமபத்ரா.

கல்வியில் ஆர்வம்

கல்வி மீது ராமபத்ராவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. படிக்க, எழுத முடியாவிட்டாலும், தன் நினைவுத் திறனால், 22 மொழிகளை கற்றுத் தேர்ந்தார்.நான்கு வேதங்கள், உபநிஷத்கள் அனைத்திலும் மாபெரும் புலமை பெற்றார். துளசிதாசர் மீது மிகவும் பக்தி கொண்டிருந்த ராமபத்ரா, அவர் ஹிந்தியில் எழுதிய ராமாயணமான, 'ராமசரிதமானஸ்' பற்றி, உபன்யாசங்கள் நிகழ்த்த ஆரம்பித்தார்.

கற்பனை செய்து பாருங்கள். படிக்கவும், எழுதவும் முடியாத ஒருவர், மற்றவர் படிக்கக் கேட்டு, அதை மனப்பாடம் செய்து, நினைவில் வைத்து, உபன்யாசங்கள் செய்துள்ளார். தன், 38வது வயதில், ராமானந்தஆசிரமத்தில், நான்கு ஜகத்குருக்களில் ஒருவராக, ராமபத்ரா பொறுப்பேற்றார். ஜகத்குரு ராமபத்ராச்சார்யா என, அழைக்கப்பட்டார்.

பல மொழி வித்தகர்

ராமபத்ராச்சார்யாவின் திறமையும், சாதனைகளும் நம்மை வியக்க வைக்கிறது. பல மொழி வித்தகர், ஆன்மிக தலைவர், கல்வியாளர், சமஸ்கிருத அறிஞர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், தத்துவஞானி, பாடகர், இசையமைப்பாளர். உபன்யாசகர், நாடக எழுத்தாளர் என, அவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவர், 'கீதா ராமாயணம், ஸ்ரீ பார்கவ ராகவ விஜயம், அருந்ததி, அஷ்டாவக்ரா, விதுரா' உட்பட 100க்கும் அதிகமான நுால்களை எழுதியுள்ளார். 'ஸ்ரீ சீதாராம சுப்ரபாதம்' என்ற சுலோகத்தையும் அவர் எழுதி இசையமைத்து உள்ளார். கவிஞரான ராமபத்ராச்சார்யா, ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும்பல கவிதைகளை எழுதி உள்ளார். ராமாயணம், மஹாபாரதம் உட்பட பல புராணங்களை, கவிதை வடிவில் எழுதியுள்ளார். தானே இசையமைத்து பாடி, ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். கல்வி மீது தீராத பற்று கொண்ட ராமபத்ராச்சார்யா, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக, ஜகத்குரு ராமபத்ராச்சார்யா பல்கலைக்கழகத்தை துவக்கினார். ஹிந்து மதம் பற்றி படித்து ஆய்வு செய்ய, துளசிதாசர்

பெயரில், 'துளசி பீடம்' என்ற குருகுலத்தை துவக்கினார். 2015ம் ஆண்டு, மத்திய அரசு, 'பத்மவிபூஷன்' விருது வழங்கி, ராமபத்ராச்சார்யாவை கவுரவித்தது. பிறந்து, இரண்டே மாதத்தில் பார்வையிழந்தும், மன தைரியத்துடன் போராடி, கல்வியிலும், அறிவிலும் உச்சம் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை, அனைவருக்கும் பெரும் ஊக்க சக்தியாக அமைந்துள்ளது.

சாபக்கேடு

பார்வையில்லாமல், மாபெரும் சாதனை படைத்த இந்த மாமனிதரை, நம் நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்?பார்வையற்றவர் படைத்த சாதனை என்றால், நம்மில் பலருக்கு, 'ஹெலன் கெல்லர்' தான் நினனவுக்கு வருவார். அவரை பற்றி, பள்ளி பாடப் புத்தகங்களில் பாடங்கள் கூட வந்து உள்ளன. ஆனால், நம் கல்வி முறையில், ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவின் பெயர் சிறிதும் இடம் பெறாதது வேதனை. ஏனெனில், அவரை புகழ்ந்து பேசினால், நம் நாட்டின் மதச்சார்பின்மை மாயமாகிவிடும் என, போலி மதச்சார்பின்மைவாதிகள் குற்றம்சாட்டி, முதலைக் கண்ணீர் வடிப்பர். இதுதான், நம் நாட்டின் சாபக்கேடு! 

- தினமலர்

Thursday, September 22, 2022

மதுரையும் செப்டம்பர் 22 ம்.

 மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் அமைந்திருக்கும் காந்தி அருங்காட்சியகம்


"அந்த அருங்காட்சியகத்தில் காந்தி சுடப்பட்டபோது வழிந்த இரத்தம் தோய்ந்த துணியை பார்வைக்கு வைத்திருக்கிறார்களே! பார்த்திருக்கிறீர்களா?"


1921 ஆம் ஆண்டு காந்தி தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார். அப்போதுதான், மேலாடை கூட அணியாமல் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்த மக்களைக் கண்டு மனம் வருந்தினார். அதுவரை சட்டையுடன் வலம் வந்த அவர், தன் மேலாடையைக் களைந்தார். அரை ஆடைக்கு மாறினார். 'இந்திய மக்கள் அனைவரும் என்றைக்கு முழு ஆடை அடைகிறார்களோ, அன்றுதான் நானும் அணிவேன்' என்று சூளுரைத்தார். அப்படிப்பட்ட வரலாற்று சம்பவம் நிகழ்ந்த ஊர் என்பதால் காந்தி சுடபட்டபோது அணிந்திருந்த ஆடையை இரத்தக்கறையுடன், அவர் ஆடையைத் துறந்த மதுரையிலே வைத்திருக்கிறார்கள்.

 

 காந்தியடிகளின் மறைவிற்கு பிறகு இந்தியா முழுவதும் ஏழு காந்தி நினைவு அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன. அதில் தென்னிந்தியா முழுமைக்கும் மதுரையில்தான் அமைக்கப்பட்டது. 


(இன்று செப்டம்பர் 22, காந்தி உடையைத் துறந்தநாள்)

Wednesday, September 21, 2022

புரிந்து தெளிவோமா..தெளிந்து புரிந்து கொள்வோமா..

 From one of the great talks of Kanchi Periyava – short, simple yet profound, lucid, humorous too.


நாம அத்வைதத்த எடுத்துட்டாலும், த்வைதமா இருந்தாலும், விசிஷ்டாத்வைதமா இருந்தாலும் ஒரு ஜீவனுக்கு இறுதி இலக்கு பரமாத்மா தான். இதுல 'செகண்ட் தாட்' டே கிடையாது. ஆனா என்ன ஒவ்வொரு மார்க்கமும், ஒரு ஜீவாத்மா எப்படி, எந்த சூழ்நிலைல, என்ன வழிமுறைல பரமாத்மாவை அடையும்கறதுல வேறுபடறது.


இங்கே இருக்கற நிறைய பேர் கணிதம் படிச்சிருப்பீங்க என்ற நம்பிக்கைல சொல்றேன்.


மத்வாசார்யாரின் த்வைத மார்க்கம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். சங்கரரின் அத்வைத மார்கத்துல பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு சதுரத்தின் பக்கத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு மாதிரி. அதாவது பக்கத்தை

மிகச் சரியாக நாலு மடங்கு செய்தால் அதன் சுற்றளவு வந்து விடும்.

நான்கு என்பது ஒரு RATIONAL நம்பர். எந்த Ambiguityயும் கிடையாது.


ஆனால் த்வைத மார்க்கத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு வட்டத்தின் விட்டத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு போன்றது.

விட்டத்தை பை (Pi)மடங்கு பண்ணா அதன் சுற்றளவு வரும். ஆனால் நீங்க படிச்சிருப்பீங்க பை என்ற நம்பர் ஒரு Irrational number என்று. அதாவது அதை இரண்டு முழு எண்களின் விகிதமாக எழுத முடியாது. இருபத்து இரண்டு by ஏழு அப்படீங்கறது ஒரு

approximation தான். பை (Pi) என்ற இந்த விகிதம் முடிவில்லாமல் அனந்தமாகப்

போய்க்கொண்டே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். மூணு புள்ளி ஒண்ணு நாலு

அப்படீன்னு எழுதி அதற்குப் பிறகு கோடி கோடி இலக்கங்கள் போட்டாலும் பை (Pi) என்ற எண் முடிவு பெறாது. எனவே வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தைப் போல இத்தனை மடங்கு அப்படீன்னு சரியாக, உறுதியா சொல்லவே முடியாது. விட்டத்தின் எல்லை அதன் சுற்றளவு தான். சுற்றளவு என்பது ஒரு முழுமையான எண். வட்டத்தின் விட்டமும் ஒரு முழுமையான எண். ஆனால் இவை இரண்டின் விகிதம் ஒரு முற்றுப்பெறாத எண். விட்டம் தான் ஜீவாத்மா, சுற்றளவு தான் பரமாத்மா என்று எடுத்துக் கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் இலக்கு என்றாலும் அது ஜீவனின் இத்தனையாவது படிநிலை என்று உறுதியாக சொல்ல முடியாது. விட்டத்தின் ஏதோ ஒரு முடிவிலி மடங்கில் சரியாக வட்டத்தின் சுற்றளவு வரலாம். ஆனால் எத்தனை துல்லியமாக கணக்குப் போட்டாலும் (Pi)பையை கோடி தசம ஸ்தானம் வரை எடுத்துக் கொண்டாலும் விட்டத்தின்

மடங்குக்கும் சுற்றளவுக்கும் ஒரு சிறிய மைன்யூட் வேறுபாடு இருந்து கொண்டே தான்

இருக்கும். அதே போல ஜீவனின் இலக்கு பரமாத்மா என்று சொன்னாலும் பரமாத்வை அடைய (பரமாத்மாவாக மாற) ஜீவாத்மா எண்ணிலாத, கணக்கற்ற படிகளை கடக்க வேண்டி

இருக்கிறது. ஒரு ஜீவன் சாதனைகளை செய்து படிப்படியாக எவ்வளவு தான்

முன்னேறினாலும் அது சுற்றளவை நெருங்கலாமே தவிர சுற்றளவாக மாற முடியாது. த்வைதம்

ஸ்ரீமன் நாராயணனை சுற்றளவாக நிர்ணயம் செய்கிறது. உலகின் எண்ணிறைந்த ஜீவன்கள் தான் வட்டத்தின் எண்ணிறைந்த விட்டங்கள். விட்டம் சுற்றளவாக மாற எண்ணிறைந்த

முடிவிலியான படிநிலைகளைக் கடக்க வேண்டும். இதை தான் அவர்கள் தாரதம்யம் என்று அழகாகச் சொல்கிறார்கள். அதாவது ஒரு ஜீவாத்மா பரமாத்மாவாக முழுவதும் மாறி விடுவதை எப்படி கணிதம் விட்டம் சுற்றளவாக மாறி விடுவதை தடை

செய்கிறதோ , அப்படி த்வைதத்தின் பஞ்சபேத தத்துவம் தடை செய்கிறது. விட்டம் சுற்றளவா மாறுது அப்படீன்னா பை (Pi) அப்படீங்கறது ஒரு Rational நம்பர் ஆயிரும். கணிதத்தின் முக்கிய எண்ணான பையின் அழகே அது கணிக்க

முடியாமல்  irrational ஆக இருப்பது தான். எனவே ஜீவன் மற்றும் பரமாத்வாவின் உறவும் இப்படி

நிச்சயமற்று Irrational ஆக இருக்கிறது என்கிறார் மத்வாச்சாரியார்.


ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு பற்றிய சமன்பாடுகளிலும்

இந்த பை அப்படீங்கற நம்பர் வருது. அப்படீன்னா நம்மால் பிரபஞ்சத்தில் எதையும் இது இதன் இத்தனை மடங்கு அப்படீன்னு சொல்ல முடியாது. எதிலும் ஒரு நிச்சயமின்மை இருக்கவே செய்யும். இதை தான் மத்வாச்சாரியார் பஞ்சபேதம், அதாவது சமமின்மை என்கிறார். ஒரு ஜடப்பொருளும் ஜீவாத்மாவும் பேதப்பட்டது, ஏன்

ஒரு ஜீவன் இன்னொன்றில் இருந்து பேதப்பட்டது. ஒரு ஜீவன் பரமாத்மாவிடம் இருந்து பேதப்பட்டது. என்கிறார். சங்கரர் மாதிரி சி இஸ் ஈக்குவல் டு ஃபோர் ஏ (C= 4A)அப்படீன்னு சொல்லிட்டா, பரமாத்வா ஜீவனின் இத்தனையாவது படி அப்படீன்னு

சொல்லிட்டா நாம பரமாத்மாவை வரையறை செய்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ள

அடைச்சுட்ட மாதிரி இருக்கும். ஆனால் வேதாந்தம் பரமாத்மாவை நி-சீமா, 

எல்லையற்றவன், வரம்பு வரையறை அற்றவன் என்று சொல்கிறது.


எனவே மத்வாச்சாரியார் ரொம்ப சைன்டிபிக்-கா சி இஸ் ஈக்குவல் டு பை டி அப்படீங்கறார். ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா திரிகோணமிதில சைன் (sine) மற்றும் காஸ் (cos) மதிப்புகளை கண்டுபிடிக்கும் 'டைலர்' சீரீஸை அப்பவே கண்டுபிடித்தவர் மத்வாசாரியார். அவர் ஒரு பெரிய கணிதவியல் மேதை கூட .அவர் எவ்வளவு அழகா தன் சித்தாந்தத்தை கணிதத்தில் இருந்து, கணிதத்தின் ஒரு அழகான எண்ணில் இருந்து எடுத்திருக்கார் என்பது அற்புதம்.


சரி இங்க விசிஷ்டாத்வைதம் ,அதாவது ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் நெறி என்ன அப்படீன்னா, பரமாத்மா என்பது வட்டம் போல மாயத்தோற்றம் காட்டும் ஒரு சதுரம்

என்பது. இந்த மார்க்கம் த்வைதம் மற்றும் அத்வைதம் இரண்டையும் ஓரளவு ஒத்துக்கொள்கிறது. அரிஸ்டாடிலின் கோல்டன் மீன் (Golden Mean) அப்படீன்னு சொல்வாங்களே அது மாதிரி .ஒரேயடியாக ஒரு ஜீவனிடம் நீ தான் பரமாத்மா அப்படீன்னு சொல்ல

முடியாது. அவனுக்கு மிதப்பு வந்து விடும். அதே போல உன்னால் எத்தனை சாதனை செய்தாலும் பரமாத்மாவாக எப்போதும் மாற முடியாது என்று சொன்னால் அவன் மனமுடைந்து விரக்தியாகி விடுவான். எனவே நீ அஞ்ஞானத்தில் இருக்கும் வரை பரம்பொருள் உனக்கு ஒரு குழப்ப வட்டம். நீ ஞானம் பெற்றால் அது உனக்கு ஒரு தெளிந்த சதுரம் என்று சொல்கிறது இந்த நெறி. அதாவது வெளியே குப்பன், சுப்பன், கந்தன்,  கண்ணன் என்று பலபேர்களில் அழைக்கப்படுபவர்கள் பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டருக்கு 'டிக்கெட்' ஆக மாறி விடுவது போல.


பெரியாவாளுக்கு நிகர் பெரியவாள்தான்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Tuesday, September 20, 2022

சமநிலை மகாத்மியம்...

 சக்தி

நேரம் 

செல்வம்


வாதம்

பித்தம்

கபம் ...


பருவம் பொருத்து

மூன்றில் ஒன்று

கூடுதலாக இருக்க

அதன் அருமை புரியாது..


மற்ற இரண்டின் அருமை உணரவே

அது எனப் புரியாது.


சம நிலை மகத்துவம் அறியாது

ஆடித் தீர்த்து முடிக்க.....


மூன்றும் 

ஒன்றை ஒன்று சார்ந்து

மெல்ல மெல்ல...

முடக்கிப் போட்டுச் சிரிக்கிறது...


முடிவில்....

துவங்கிய தொடர்ந்த தவறுகள்

புரியப் புரிய

வெறுமையே பரவிச் சிரிக்கிறது..

Sunday, September 18, 2022

திடமும் திரவமும்

சில ஆங்கில வார்த்தைகளில்

சில எழுத்துக்கள் இருந்தபோதும்

அது உச்சரிக்கப்படாமல் 

இருப்பதே சரியான உச்சரிப்பு என

பாடம் நடத்தினார் ஆங்கில ஆசிரியர்


" ஏன் அப்படி "என

நான் கேட்டபோது

"அது அப்படித்தான்" 

சில  வார்த்தைகளில் 

சில எழுத்துக்கள் இருந்தாலும்

அது சைலண்ட் ஆகிப் போகும் "

என்றார் ஆசிரியர்


குழப்பமாய் இருந்தது எனக்கு..


பின் அன்றைய செய்தித் தாளைப் படிக்கையில்


"போதைத் தடுப்பில் அரசு உறுதியாய் இருக்கிறது

அவசியமெனில் அதை ஒழிக்க நான்

சர்வாதிகாரி ஆவேன் " என

முதல்வர் முழங்கியது  இருந்தது


நான் ஏதும் புரியாது

"மதுவும் போதைப் பொருள்தானே

அரசே அதை விற்கிறதே " என்றேன்


நக்கலாய்ச் சிரித்தபடி என் நண்பன் 


" இங்கு திட என்பதே சைலெண்ட் ஆக்கும் " என்றான்.

Wednesday, September 14, 2022

பொறியாளர் தின நல்வாழ்த்துகள்...

 பொறியாளர்கள் தின வாழ்த்து.


(உறுதிமொழி)


பொறியாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.


அன்புடைய நண்பர்களே,


பண்டைய காலத்திலேயே மனிதன் உயரமான பாறைகளையும், மலைகளையும், மரங்களையும், குகைகளையும், தன்னுடைய பாதுகாப்பிற்காக வாழ்விடமாக பாவித்து வாழ்ந்து வந்தான்.


பின்னர் வேட்டையாடி உண்பதில் உள்ள சிரமத்தை அறிந்து நதிக்கரையினிலே விவசாயம் செய்து பயிரிட்டு அவைகளை உண்டு அதன் நதிக்கரையின் அருகிலேயே சிறுகுடில்கள் அமைத்து வாழ்ந்து வந்தான்.


அதன் தொடர்ச்சியாக மழைநீரை தேக்கி வைத்து அதன் மூலம் விவசாயம் செய்ய முடியும் என்பதை அறிந்து பிற நிலப்பரப்புகளுக்கும் அந்த மழைநீரை கொண்டு சென்று தேக்கி வைத்து விவசாயம் செய்து சிறு குடிசை வீடுகள் அமைத்து வாழ்ந்து வந்தான்.


பின்னர் விவசாயம் செய்த பெருமளவு பொருட்களை வேறு விவசாயம் செய்த இடங்களுக்கு பண்டமாற்று முறையாக தானியங்களை கொடுத்தும் தானியங்களை பெற்றும் அந்தந்த பகுதிகளில் வாழ்ந்து வந்தான்.


பின்நாட்களில் சேகரிக்கப்பட்ட பொருள்களின் அளவு கூடுதலாக இருப்பதினால் சாலை மார்க்கமாக மழை பெய்யும் பொழுது தானியங்களை அடித்து செல்லாமல் இருப்பதற்க்கு சற்று மேடான பகுதிகளை கண்டறிந்து தானிய சேகரிப்பு மையங்களை அமைத்து அதன் அருகிலேயே வீடுகள் அமைத்து வாழ்ந்து வந்தான்.


ஒரு கட்டத்தில் மின்சாரத்தை கண்டுபிடித்ததின் விளைவாக இன்று கிராமங்கள், நகரங்கள், மாநகரங்கள், நாடுகள் உலகமே தன்னுடைய வழக்கமான நடைமுறைகளில் இருந்து மின்சாரத்தை பயன்படுத்துதலின் வாயிலாக இன்றைய நவநாகரிகம் வரை மாறியுள்ளது அருமை பொறியாளர்களே.


இந்த நவநாகரிகத்தில் எண்ணற்ற சொல்ல முடியாத அளவிற்கு வளர்ச்சிகளை பெற்றுள்ளோம். ஆனால் நம்முடைய ஆதிமனிதன் வாழ்ந்த வாழ்வியல் முறையை மாற்றியமைத்ததன் மூலமாக நவநாகரிகத்தால் வாங்க முடியாத ஆனால் ஆதிமனிதன் அளவில்லாது பயன்படுத்திய காற்று, நீர் ஆகியவற்றை இன்று நாம் அளவான நீர், மாசுடைய காற்று ஆகியவற்றை நமக்கு நாமே உருவாக்கி கொண்டுள்ளோம்.


விழித்துக் கொள்வோம் பொறியாளர்களே! நண்பர்களே நாம் கட்டுகின்ற (அ) நாம் தீர்மானிக்கின்ற எதுவாக இருந்தாலும் இயற்கையை பால்படுத்தாமலும் இருக்கின்ற மரங்களை வெட்டாமலும், மரங்கள் அற்ற பகுதியிலே கட்டிடம் கட்ட இருந்தால் அந்த பகுதியிலே நல்ல இயற்கை சூழல்கள் உருவாகும் அளவிற்கு நமது நாட்டு மரங்களையும் மழைநீர் சேகரிப்பு களங்களையும், கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளையும், குப்பைகள் அகற்றக்கூடிய வழிகளையும் கண்டறிந்து அதை செயல்முறைபடுத்த நம்மால் ஆன அளவு முயற்சி செய்வோம். நமக்கு கட்டிடம் கட்ட வாய்ப்பு வழங்குகின்ற நம்முடைய வாடிக்கையாளர்களுக்கும் எடுத்துரைப்போம் என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொள்வோம். இந்த பொறியாளர் தின வாழ்த்துக்களையும் நமக்கு நாமே வாழ்த்திக் கொள்வோம்.

 ஏனென்றால் கட்டுமான துறை சார்ந்த பொறியாளர் படிப்பே அத்துனை பொறியியல் துறைக்கும் ஆதாரமான துறை அத்தகைய ஆதாரமான துறையை கொண்டுதான் நம்முடைய முன்னோர்கள் மின்சாரத்தை கண்டுபிடிப்பதற்க்கு முன்பாகவே வியத்தகு கட்டிடங்களை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் எல்லாம் இந்த நாளிலே போற்றப்பட வேண்டியவர்கள்.


அனைத்து பொறியாளர்களுக்கும் தோழமையுடன் பொறியாளர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலமாக பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.    


நன்றி! வணக்கம்!!


இப்படிக்கு,

லயன் பொறியாளர் நல் நாகராஜன்,

Raj Shree Builders & NR Consultancy,

Dindigul. 624003. Mob-9842170763.

Sunday, September 11, 2022

தமிழன்னை பாடும் பாட்டு..

 தர்பார் மண்டபங்களில்

மன்னனைக்  குளிர்விக்கும்
வெற்றுச் சாமரமாய் இருந்த என்னை

அந்தப் புரங்களில்
மன்னனுக்கு உண்ர்வூட்டும்
ஆண்மை லேகியமாய் இருந்த என்னை

கோவில் சன்னதிகளில்
ஆண்டவனுக்கும் அடியார்களுக்கும்
இடைத் தரகனாய் இருந்த என்னை

குறு நில மன்னர்கள்
வீட்டுத் திண்ணைகளில்
புலவர்கை திருவோடாய் இருந்த என்னை

அடிமையாய்க் கிடந்த என்னை
அடைக்கப்பட்டுக் கிடந்த என்னை
சிறைபட்டுக் கிடந்த என்னை
சிறப்பிழந்துக்  கிடந்த என்னை

கைவிலங்கொடித்துக் காத்தவனே
ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
பாழ்பட்டுப்  புதையுண்டுப்  போகாது
பாமரருடன் இணைத்து ரசித்தவனே

தன்னிகரில்லாக்  கவிஞனே
என தவப்புதல்வனே
உன்னை  இந்நாளில் நினவு கூர்வதில்
நானும் மகிழ்வு கொள்கிறேனடா
உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
நாளும் பெருமை கொள்கிறேனடா

Friday, September 9, 2022

கண்ணீருடன் கடைசிவரி வரை

 அதிர்ச்சியூட்டும் அரசியல் திருப்பம்..!!


எலிசபெத் மகா ராணியின் இறுதிக் கணங்கள் ..

............... 

லண்டன் பாக்கின்காம்  அரண்மனை . முதலாம் மாடியில் ராணியின் படுக்கையறையில் இருதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் கணிக்கும் கருவிகள் பொருத்தப் பட்ட நிலையில் கட்டிலில் படுத்திருக்கிறார் . அவரைச்சுற்றி இங்கிலாந்தில் சிறந்த வைத்தியர்கள் குழு ஒன்று அவரின் உடலின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தபடியிருக்கின்றார்கள் . இளவரசர் சார்ள்ஸ் சோகமாக மனைவி கமீலாவின் கைகளை பற்றியபடி நின்றிருக்க . அவரின் மகன் வில்லியம் அப்போ தான் உள்ளே வந்தவர். அப்பா ..தம்பி  ஹென்றிக்கு தகவல் சொல்லியாச்சா என்று கேட்க்கிறார் . சார்ள்ஸ் அதுக்கு ஆம் என்று தலையசைத்து விட்டு யன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்க்கிறார் . தகவல் பரவி உள்ளூர் பத்திரிகையிலிருந்து உலக பத்திரிகையாளர் எல்லோரும் அரண்மனை வாசலில் கூட தொடங்கியதோடு கேமராக்களை அரண்மனை பக்கம் நீட்டியபடியே செய்திகளை முந்திக்கொடுக்கும் வெறியோடு காத்திருக்கிறார்கள் .. 


மக்களும் கூடத் தொடங்க காவல்துறை தடுப்புக்களை அமைத்து அவர்களை ஒழுங்கு பண்ணத் தொடங்கியிருந்தனர் . அமெரிக்காவிலிருந்த பேரன் ஹென்றிக்கு பாட்டி நிலைமை மோசம் என்று தகவலறிந்ததுமே அவரின் மனைவி மார்க்கெல். என்னை அவமதித்த அந்த கிழவி முகத்தில் முழிக்க மாட்டேன்  நீ வேண்டுமானால் தனியாகப் போ . என்று கணவன் ஹென்றியிடம் கோபமாக சொல்லிவிட அவரும் அவசரமாக தனி விமானத்தில் லண்டன் புறப்பாட்டு விட்டிருந்தார் . 


ராணி இடைக்கிடை கண் விழிப்பதும் எதோ சொல்ல வருவதும் பின்னர் மயக்க நிலைக்கு போவதுமாக இருந்தார் . சார்ள்ஸ் வைத்தியர்களை பார்க்க . அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரியாமல் வைத்தியர்கள் கைகளை பிசைந்தபடி நிற்க .. இப்போ இரவாகி விட்டிருந்தது . வெளியே பொது மக்கள் எல்லோரும் மெழுகு வர்த்தி ஏந்தி ராணிக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்க ஒரு பாதிரியாரும் ராணியே எழுந்து வா .. என்று அருகில்நின்ற ஒரு பெண்ணின் தலையில் கை வைத்து செபித்துக் கொண்டிருந்தார் . 


ராணி கடைசியாக  எதோ சொல்ல நீண்ட நேரமாக போராடிக்கொண்டிருக்கிறார் அது என்னவென்று எல்லோரும் தவித்துக்கொண்டிருக்க . அப்போ வந்து சேர்ந்த ஹென்றிக்கு தான் அந்த யோசனை வந்தது. ராணியிடம் நீண்டகாலமாக உதவியாளராக இருந்த பிலிப் என்பவருக்கே ராணியின் அனைத்து அசைவுகளும் புரியும் ஆனால் வயதான அவரும் படுத்த படுக்கையாகி கிடக்கிறார் அவரை கொண்டு வந்தால் ராணி சொல்ல வருவதை புரிந்து கொள்வார் என்றதுமே ஒரு அம்புலன்ஸ் வண்டி வேகமாய் போய் பிலிப்பை அள்ளிப் போட்டுக்கொண்டு வந்தது . 


ராணிக்கு அருகில் இருந்த பிலிப் அவரின் கைகளை லேசாக தொட்டதும் லேசாக கண் விழித்த ராணியின் உதடுகள் அசைந்தது . உடனே சார்ள்ஸ் ஒரு பேப்பரையும் பேனையையும் பிலிப்பின் கைகளில் கொடுக்க நடுங்கிய கைகளால் பிலிப் அதில் எழுதினார் .. அதோடு ராணி கண்களை மூடினார் .  அவரில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் அனைத்தும் பீப் என்ற சத்தத்தோடு ஒரே நேர் கோட்டில்  இயங்க . எல்லோரும் தலை குனிந்து சிலுவை போட்டுக் கொண்டார்கள் .இங்கிலாந்திலிருந்த அத்தனை தேவாலயங்களினதும் மணிகள் ஒலிக்க விடப்பட்டிருந்தது ..



 பிலிப் தான் எழுதிய துண்டு காகிதத்தை சார்ள்ஸிடம் கொடுக்க கலங்கிய கண்களோடு அதை வாங்கியவர் மாடியின் பால்கனிக்கு வரவே அதுவரை காத்திருந்த அத்தனை மக்களும் ஊடகங்களின் காமராக்களும் பால்கனியை நோக்கித் திரும்பவே. இதோ மகா ராணியின் இறுதிச் செய்தி என்றபடி சார்ள்ஸ் கையிலிருந்த துண்டுக்காகிதத்தை உயர்திக் காட்டினார் .. அதில் சீமானுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை அவரை எனக்குத் தெரியாது என்று எழுதியிருந்தது ....வாட்ஸ் அப்பில் படித்து இரசித்தது..