Sunday, October 15, 2023

படித்ததில் பிடித்தது..

 அவர் ஒரு பெரிய துறவி. இளம் வயதிலேயே ஐம்புலன்களை அடக்கி தவநெறி தவறாமல் ஞான ஜோதியாய் வாழ்ந்தார். ஊருக்கு வெளியே அவருடைய ஆஸ்ரமம் இருந்தது. ஏராளமான சீடர்கள் இருந்தார்கள்.


ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று, தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அதைத் துரத்த துறவியின் சீடர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள். அது அசைந்து கொடுக்கவில்லை.

"பரவாயில்லை, இருந்துவிட்டுப் போகட்டும். பன்றியும் இறைவன் படைப்புத்தானே! அது தன் வாழ்க்கையை வாழட்டும்! நாம் நம்

வாழ்க்கையை வாழ்வோம்,'' என்று சொல்லிவிட்டார் துறவி.

ஆனாலும், பன்றியோ அதன் குட்டிகளோ ஆஸ்ரமத்திற்குள் நுழைந்துவிட முடியாதபடி ஆஸ்ரமத்தின் வெளிப்புறக் கதவைப் பலப்படுத்தினார்கள்.

காலம் நகர்ந்தது. துறவி தினமும் காலையிலும் மாலையிலும் சீடர்கள் புடைசூழ சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார். அப்படிப் போகும்போதும் வரும்போதும் அந்தப் பன்றியின் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.

அசிங்கத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பன்றிக் குட்டிகளைப் பார்த்துத் துறவியின் சீடர்கள் முகம் சுளிப்பார்கள்.

""இறைவன் ஏன்தான் இந்த ஈனப் பிறவியைப் படைத்தானோ குருதேவா! பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டுகிறதே! பாருங்கள்!

பன்றிக்குக் கொஞ்சமாவது சுத்த உணர்வு இருக்கிறதா என்று !'' என்றான் பிரதான சீடன்.

""தவறு செய்கிறாய் மகனே! மனிதனின் கண்களைக் கொண்டு பன்றியின் வாழ்க்கையைப் பார்க்கிறாய். அதனால்தான் உனக்கு அருவருப்பாக தெரிகிறது. பன்றிக்கு அதன் வாழ்க்கை சொர்க்கம்தான். ஒருவேளை அந்தப் பன்றிகள் நம்மைப் பார்த்து, ""இறைவன் ஏன்தான் இந்த ஈனமான மனிதப் பிறவியைப் படைத்தானோ?'' என்று பேசிக்கொண்டிருக்கிறதோ என்னவோ! யாருக்குத் தெரியும்?''

துறவியை பன்றிகளின் வாழ்க்கை அதிகமாக ஈர்த்தது. அவை தினமும் உணவு தேடும் அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தார். பன்றியின் குடும்பம் பெருகியது. அவ்வப்போது அந்தப் பன்றிகளுக்கு ஆஸ்ரமத்திலிருந்து உணவும் அளிக்கச் சொல்வார் துறவி.

காலம் ஓடியது. துறவி நோய்வாய்ப்பட்டடார். இன்னும் சில நாட்களில் தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார். அவருக்கு இருந்த அபரிமிதமான யோக சக்தியால், தான் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறக்கப் போகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டார். அதுவும் ஆஸ்ரமத்திற்கு அருகில் வசித்து வந்த பன்றிக்கூட்டத்திலேயே பிறக்கப் போகிறோம் என்பதைத் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டார்.

திடுக்கிட்டார்... இறைவனை வேண்டினார். "வாழ்நாள் முழுவதும் தவநெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' என்று புலம்பினார்.

""நாளெல்லாம் நீ பன்றிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் ஒரு பிறவி மட்டும் நீ பன்றியாகப் பிறந்து பன்றி வாழ்க்கை வாழ வேண்டும். அந்த வாழ்க்கையை உடனே முடித்துக் கொண்டால், அதன்பின் உனக்குப் பிறவி கிடையாது. நேராக என்னிடம் வந்து

விடலாம். ஆனால், பன்றி வாழ்க்கையில் திளைத்து உன் உண்மை நிலையை மறந்தால் உனக்கு விமோசனமே இல்லை.'' என்று

இறைவன் மனமொழியாகப் பேசியருளினார்.

தான் இறக்கப் போகும் நேரம் நெருங்கியவுடன் மற்ற சீடர்களை வெளியே அனுப்பிவிட்டுப் பிரதான சீடனிடம் ரகசியக் குரலில் பேசினார்.

""அப்பனே! இது தேவ ரகசியம். வேறு யாரிடமும் சொல்லிவிடாதே. நான் இன்று இரவு சாகப் போகிறேன். உடனே எதிரே வசிக்கும் ஒரு பெண் பன்றியின் கருவில் நுழைவேன். குறித்த காலத்தில் ஒரு பன்றிக் குட்டியாகப் பிறப்பேன். நீ பன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நமது சாஸ்திரங்களின்படி ஒரு பன்றியின் கர்ப்பகாலம் 120 நாட்கள். இன்றிலிருந்து 120 நாட்களில் பிறக்கப் போகும் குட்டியை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் கொன்றுவிடு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பன்றியின்

வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து பார்த்துவிடுகிறேன்.''


அன்று இரவே துறவி மாண்டார். பன்றியின் கருவினுள் புகுந்தார். துறவியின் பிரதான சீடன் கையில் கத்தியுடன் காத்திருந்தான். குறித்த

காலத்தில் பன்றி குட்டி போட்டது. தன் குருவின் மேல் உள்ள கருணையினால் அந்தப் பன்றிக்குட்டி ஒரு வாரம் நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் சீடன்.

பிறகு ஒரு நாள், அந்தக் குட்டியைக் கொல்லக் கத்தியை ஓங்கியபோது பன்றியாக இருந்தும் யோக சக்தி நிறைந்த அந்தத் துறவி அழாத

குறையாகக் கெஞ்சினார்.

""பெரிய பிழை செய்துவிட்டேன். நான் சொன்னது எல்லாம் தப்பு. இந்தப் பன்றி வாழ்க்கைதான் எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா? இதை முழுமையாக வாழ விரும்புகிறேன்.''

""ஆனால் குருவே! நீங்கள் உடனே உயிரை விட்டால்தானே இறைவன் திருவடியை அடைய முடியும்?''

""இறைவன் திருவடி யாருக்கு வேண்டும்? இந்தப் பன்றிக்குட்டியின் வாழ்க்கையைப் போல் இறைவன் திருவடி சுகமாக இருக்குமா என்ன? இது சொர்க்கமாக இனிக்கிறதடா! இனி நான் எடுக்கப் போகும் எல்லாப் பிறவிகளிலும் ஒரு பன்றியாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன். என் கூற்றில் சந்தேகமிருந்தால் நீயும் வேண்டுமானால் ஒரு முறை பன்றியாகப் பிறந்துதான் பாரேன்.''

தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீடன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான். அந்தத் துறவி செய்த ஒரே தவறு. தான் பிறந்த

உடனேயே தன்னைக் கொன்றுபோட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்து பார்க்கிறேன் என்று சொன்னார். அதில் பற்று வந்துவிட்டது.


இந்தக் கதையில் ஒரு பெரிய வாழ்வியல் உண்மை ஒளிந்திருக்கிறது. இன்று பலரும் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள் தெரியுமா? அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆரம்பித்துத் பின்

அதைவிட்டு விலக முடியாத அளவிற்குத் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.

இன்றைய இளைஞர் கூட்டம் மது, புகைப்பிடித்தல், தவறான உறவு என்று அனைத்தையும் ஒரு முறையாவது சுவைத்துப் பார்க்க விரும்புகிறது. அது இரண்டு நாட்கள் பன்றியாக வாழும் கதைதான். பன்றியாக இல்லாத வரைக்கும் தான், பன்றியைக் கண்டால் அருவருப்பாக இருக்கும். பன்றியாகிவிட்டால் அதுவே சுவர்க்க லோகமாக தான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

விளையாட்டிற்குக் குடித்தாலும் விஷம், தன் வேலையைக் காட்டிவிடும். விஷம் என்று தெரிந்தபின் விலகி இருப்பது நல்லது.

Thursday, October 12, 2023

பகிரலாமே..

 கீழ்க்கண்ட பதிவை எழுதிய நண்பருக்கு நன்றி.


அரசு ஊழியர்களை, சபிச்சி, கொட்டும், அத்தனை நல்லெண்ணம் கொண்டவர்களே ,கொஞ்சம் மனச திடப் படுத்திகிட்டு படிங்க மேலும்!!!

இதயம் பலகீனமானவர்கள் படிக்க வேண்டாம்!!!

*மனதை நெகிழ வைக்கும் கண்ணை உறுத்தும் உண்மை, படித்தவுடன் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்... உங்கள் பணம் எங்கே போகிறது?!*

  இந்தியாவில் மொத்தம் 4120 எம்எல்ஏக்கள் மற்றும் 462 எம்எல்சிக்கள் என மொத்தம் 4,582 எம்எல்ஏக்கள் உள்ளனர்.


  ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் சம்பளம் உட்பட மாதம் 2 லட்சம்.  அதாவது மாதம் 91 கோடியே 64 லட்சம் ரூபாய்.


  இதன்படி ஆண்டுக்கு 1100 கோடி ரூபாய்.


  இந்தியாவில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மொத்தம் 776 எம்பிக்கள் உள்ளனர்.


  இந்த எம்.பி.க்களுக்கு சம்பளப்படியுடன் மாதம் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.  அதாவது எம்.பி.க்களின் மொத்த சம்பளம் மாதம் 38 கோடியே 80 லட்சம்.


  மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த எம்.பி.க்களுக்கு சம்பளப்படியாக ரூ.465 கோடியே 60 லட்சம் வழங்கப்படுகிறது.


  அதாவது, இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடியே 65 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிடுகிறார்கள்.


  இது அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் இதர கொடைகள்.  அவர்களின் தங்குமிடம், வாழ்வாதாரம், உணவு, பயணப்படி, மருத்துவம், வெளிநாட்டுப் பயணம் போன்றவை.  கூட கிட்டத்தட்ட அதே தான்.


  அதாவது சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகளுக்காக செலவிடப்படுகிறது.


  இப்போது அவர்களின் பாதுகாப்பில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களின் சம்பளத்தைக் கவனியுங்கள்.


  ஒரு எம்.எல்.ஏ.க்கு இரண்டு மெய்க்காப்பாளர்கள் மற்றும் ஒரு பிரிவு வீட்டுக் காவலர் என்றால் குறைந்தது 5 போலீசார், மொத்தம் 7 போலீசார்.


  7 காவலர் சம்பளம் (மாதம் ரூ. 35,000) ரூ.  2 லட்சத்து 45 ஆயிரம்.


  இதன்படி 4582 எம்.எல்.ஏ.க்களின் பாதுகாப்புக்கு ஆண்டுக்கு ஆண்டு செலவு 9 ஆயிரம் கோடியே 62 கோடியே 22 லட்சம்.


  அதேபோல், எம்.பி.க்களின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 164 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.


  இசட் பிரிவு பாதுகாப்பு தலைவர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 16000 பணியாளர்கள் பிரத்யேகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


  இதற்கான மொத்த ஆண்டு செலவு ரூ.776 கோடி.


  ஆளும் தலைவர்களின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.


  *அதாவது அரசியல்வாதிகளுக்கு ஆண்டுதோறும் குறைந்தது 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.*


  இந்தச் செலவுகளில் ஆளுநரின் செலவுகள், முன்னாள் தலைவர்கள், கட்சித் தலைவர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோரின் ஓய்வூதியம், அவர்களின் பாதுகாப்பு போன்றவை இல்லை.💃💃💃💃💃💃💃


  அதையும் சேர்த்தால் மொத்த செலவு சுமார் 100 பில்லியன் ரூபாய்.


  இப்போது யோசியுங்கள்.  ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் ரூபாய்களுக்கு மேல் அரசியல்வாதிகளுக்காக செலவிடுகிறோம், அதற்கு ஈடாக ஏழை மக்களுக்கு என்ன கிடைக்கும்?


  இது ஜனநாயகமா?


  (இந்த 100 பில்லியன் ரூபாய் நம் இந்தியர்களிடமிருந்து மட்டுமே வரியாக வசூலிக்கப்படும்.)


  இங்கும்  ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடக்கணும்.  இந்தியாவில் இரண்டு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.


  →முதல் - தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை

  தலைவர்கள் தொலைக்காட்சி மூலம் மட்டுமே விளம்பரம் செய்ய வேண்டும்.


  → இரண்டாவது - தலைவர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள்,பென்சன். போன்றவற்றின்மீதான தடை.....

  அப்போது தெரியும் அரசியல்வாதிகளின்  தேசபக்தி.


  இந்த வீண் செலவுக்கு எதிராக ஒவ்வொரு இந்தியனும் குரல் கொடுக்க வேண்டும்.

  கனிவான

  மாண்புமிகு பிரதமர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு,

  தயவு செய்து அனைத்து *திட்டமிடுதலை* நிறுத்தவும்.


  *ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் ஒரு பாராளுமன்ற வளாகம் போன்ற கேன்டீனை திறக்கவும்.*


  எல்லா சண்டைகளும் முடிந்துவிடும்.


  *ரூ.29க்கு முழு சாப்பாடு கிடைக்கும்..*


  80% மக்களுக்கு, குடும்பம் நடத்துவதற்கான போராட்டம் முடிந்துவிடும்.


  சிலிண்டர், ரேஷன்மிக குறைந்த செலவில் கொடுக்கலாம்

  இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.


  *நடுத்தர மக்கள் தங்கள் சொந்த வழியில் சொந்த வீட்டை நடத்த வேண்டும் என்று பிரதமர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


   மிகக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும்.

  டீ = 1.00

  சூப் = 5.50

  தோசை = 1.50

 பரோட்டா= 2.00

  சப்பாத்தி = 1.00

  கோழி = 24.50

மசால்  தோசை = 4.00

  பிரியாணி=8.00

  மீன் = 13.00

  இந்த பொருட்கள் அனைத்தும் ஏழைகளுக்கு இது போன்ற விலையில் வழங்கலாம்., இவை அனைத்தும் இந்திய பாராளுமன்ற கேன்டீனில் கிடைக்கும்.


  *ஏழைகளின் சம்பளம் மாதம் ரூ.1 லட்சத்து 80,000 அதுவும் வருமான வரி இல்லாமல்.* அந்த ஏழைப் பங்காளர்களின் வயிற்றுகு போகிறது


  உங்கள் மொபைலில் சேமித்துள்ள அனைத்து எண்களையும் ஃபார்வர்டு செய்யவும், இதன் மூலம் அனைவருக்கும் தெரியும்...

  அதனால் தான் ஒரு நாளைக்கு 30 அல்லது 32 ரூபாய் சம்பாதிப்பவன் ஏழை இல்லை என்று நினைக்கிறார்கள்.


  *ஜோக்குகள் தினமும் ஃபார்வேர்ட் செய்யப்படுகின்றன, இதையும் ஃபார்வேர்ட் செய்யுங்களேன்? அனைத்து இந்திய மக்களுக்கும் தெரிவிப்போம்.

Friday, October 6, 2023

யாரோ எழுதியது ..ஆயினும் அனைவருக்குமானது..

 *~நாம் எங்கே செல்கிறோம்~*


*_சற்றே யோசிக்கலாமே_* 


சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில்,  *'அம்மா’*  என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே,

*_ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!_*  என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும்  ~எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை~.


*_'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’_*  என்று சொன்ன  *பாட்டி*  ~வானிலை அறிவியல் படித்தது இல்லை~.


*_ஆடிப் பட்டம் தேடி விதை_*  என இன்றைக்கும் சொல்லும்  *வரப்புக் குடியானவன்* ~விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை~.


*_மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்_*  எனப் பாடிய *தேரன் சித்தர்*  ~மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை~.


*_செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்_*  எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் *சடையனுக்கு*  60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த ~வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை~.


_அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?_ 


_அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?_ 

_இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?_


*ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு*.


*வள்ளுவன்*

   சொல்லும்

*_மெய்ப்பொருள் காணும் அறிவும்_*


*பாரதி*

   சொன்ன

*_விட்டு விடுதலையாயிருந்த மனமும்_*

   சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.


*_மம்மி_*

   எனக்கு

_வொயிட் சட்னிதான்_

   வேணும்,

~க்ரீன் சட்னி~

வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,

_'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’_ என்றே மனம் பதறுகிறது.


அந்தக் குழந்தையிடம், *_'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’_*

எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.


   _ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை_.


இந்த _மௌனங்களும், அவசரங்களும்_ ~தொலைத்தவை தான்~ அந்த *அனுபவப் பாடம்!*


   *தொலைக்காட்சி விளம்பரங்கள்* சொல்லிக் கொடுத்து 

*_புரோட்டின், கலோரி, விட்டமின்_*  பற்றிய *ஞானம்*  பெருகிய அளவுக்கு,

~'கொள்ளு  உடம்புக்குச் சூடு~;

_எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி_.

*பலாப் பழம் மாந்தம்*.

~பச்சைப் பழம் கபம்~·

*~புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்~*

என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.


   ~'அதென்ன சூடு, குளிர்ச்சி?~

அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !

இந்த *தெர்மாமீட்டர்ல*  உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என _இடைக்கால அறிவியலிடம்_ ~தோற்றுவிட்ட~  அந்தக் கால *அறிவியலின் அடையாளங்களை,*  _வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது._


*_~விளைவு?~_*


   *'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’*  எனும் ~அம்மா~,

   *'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’*  என்று அக்கறை காட்டும் ~அப்பா.~


   *~'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’~*  என எரிந்துவிழும் *எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்* படித்த ~அண்ணன்~  போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.


   *_'வயிறு உப்புசமா இருக்கா?_*

   மாந்தமாயிருக்கும் கொஞ்சம் *ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’*  என்ற _அனுபவத்துக்குள்_ ~அறிவியல் ஒளிந்திருக்கிறது.~


   *ஏழு மாதக் குழந்தைக்கு ~மாந்தக் கழிச்சல்~ வந்தபோது,*  *_வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த ~தாய்க்கு இன்று திட்டு~ விழுகிறது_*.


   *~'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?~*

_குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’_ என்று ~கரித்துக் கொட்டுகிறார்கள்.~


   *வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள ~அசரோன்~ என்ற  பொருள் _நச்சுத்தன்மைக் கொண்டது_  என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த ~அசரோன்காணாமல் போய்விடும்~ என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.*


_பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும்_ மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா?

*'பிள்ளை-வளர்ப்பான்’!*


   *'சளி பிடிச்சிருக்கா?* _கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க_.

_மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;_


   *மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா?*

_ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;_


   *_சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;_*


   *வாய்ப் புண்ணுக்கு* _மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;_


   *பித்தக் கிறுகிறுப்புக்கு*

_முருங்கைக்காய் சூப்,_


   *மூட்டு வலிக்கு*

_முடக்கத் தான் அடை,_


   *மாதவிடாய் வலிக்கு*

_உளுத்தங்களி,_


   *குழந்தை கால்வலிக்கு*

_ராகிப் புட்டு,_


   *வயசுப் பெண் சோகைக்கு*

_கம்பஞ்சோறு,_


*வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு*

_வாழைத்தண்டுப் பச்சடி’_

     என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும்

சில நேரம் ~மருந்துகள்;~

பல நேரம் _மருத்துவ உணவுகள்._


     *_காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி._*


      *சுழியத்தைக்* _(ஜீரோவை)_

கண்டுபிடித்து *_இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது_*.


   *'பை’*  என்றால் _22/7_ என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.


   *'ஆறறிவதுவே அதனொடு மனமே’*

என மனதின் முதல் சூத்திரத்தை _சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு_ 30 தலைமுறைகள் முன்பே சொன்ன

*_தொல் காப்பியம்_*

எழுதிய ஊர் இது.


   *~இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?~*


யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய இந்த செய்தியை சிறந்த பாடமாகக்கருதி நண்பர்களுடன் பகிரவும்.

Wednesday, October 4, 2023

நுகர்ச்சிக் கலாச்சாரம்..

 நுகர்ச்சி ( consumption )


உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  என்னவென்று நினைக்கிறீர்கள் ? 


மக்கள் தொகைப் பெருக்கம்? இல்லை.


over-population அன்று, 


இன்று over-consumption தான் என்கிறார்கள். 


அதாவது ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம். 


ஆனால் 100 பேர் இருக்கும் தேசம் பேராசையுடன் பத்தாயிரம் பேர்களுக்கான resource களை படுவேகமாக நுகர்ந்து கொண்டிருக்கலாம். 


இப்போது இந்த இரு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மக்கள்தொகை கொண்டவை என்று சொல்லிவிட முடியும்.


 population is not exactly the issue. consumption is ! 


அமெரிக்கர் ஒருவர் இந்தியர் ஒருவரை விட சராசரியாக 32 மடங்கு அதிகம் consume செய்வதாகச் சொல்கிறார்கள்.


 அதாவது, 32 பேருக்கான சாப்பாட்டை ஒருவரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.


இந்த over consumption நம்மிடமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது . 


சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக, வெவ்வேறு சைஸுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். 


இதை எல்லாம் கூட வாங்குவார்களா என்று யோசிப்போம். 

வாங்குவதால் தானே வைக்கிறார்கள்?


 பிரியாணி மசாலா ஓகே, தக்காளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதத்துக்குக் கூட மசாலா வந்திருக்கிறது. 

ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.


 ' பூஜா kit' விலை 180 ரூபாய்! 


உள்ளே ஒரு காட்டன் துணி, இரண்டு விளக்குத் திரி பாக்கெட், ஊதுபத்தி, கொஞ்சம் கற்பூரம், குட்டியூண்டு பாட்டிலில் பன்னீர், அவ்வளவு தான்

180 ரூபாய்!


தேவையற்ற பொருட்களை, தயாரிப்புகளை வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம்! 


ஆணிகளை முதலில் விற்று விட்டுப் பிறகு சுத்தியலுக்கான தேவையை உருவாக்கும் வியாபார  யுக்தி !


 தேவையே இல்லாவிட்டாலும் ஒருவித ' fake demand' ஐ உருவாக்குவதிலும் கார்ப்பரேட்கள் வல்லவர்கள். 


சமீபத்திய உதாரணம் vegetable wash ! 


250-300 ரூபாய்க்கு விற்கிறார்கள். 

இதை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டு இருப்போமோ! 


பெரும்பாலும் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிவந்து   அப்படியே தான் பிரிட்ஜில் வைத்துக்கொண்டு இருந்தோம். 


எல்லா product களிலும் சகட்டு மேனிக்கு kills 99.9% germs என்று போட்டு விடுகிறார்கள்.


 'கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கிறது' என்று போடுகிறார்கள். 


எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்கள் போன்ற விவரங்கள் இல்லை. 


' கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டி கடவுளை வழிபடுவதற்கு எங்கள் ஊதுபத்தி சிறந்தது ' என்று கூடிய சீக்கிரம் விளம்பரங்கள் வந்து விடும்!


இந்த consumption எப்போதும் exponential ஆக இருக்கிறது


அதாவது நாம் நம் தாத்தாவை விட 8 மடங்கு அதிகம் நுகர்ந்தோம் என்றால் நம் பேரன் நம்மை விட 64 மடங்கு அதிகம் நுகர்வான். 


நம் தாத்தாவுக்கு இருந்தது ஒரே ஒரு option lifebuoy சோப் என்றால் நம் பேரன் முன்பு 64 சோப்புகள் கடை விரிக்கப்படும். 


எல்லா சோப்புகளும் more or less ஒன்றுதான் என்ற அறிவு நம்மிடம் இருப்பதில்லை. 


64 வகை சோப்புகள், சூப்பர் மார்க்கெட்டில் கால்வாசி இடத்தை அடைத்துக்கொண்டு! 


' selection time rule' என்ன சொல்கிறது தெரியுமா? 


இரண்டு பொருட்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க நமக்கு 10 நிமிடங்கள் ஆகிறது என்றால் மூன்று பொருட்களில் இருந்து தேர்ந்தெடுக்க நமக்கு 100 நிமிடங்கள் ஆகுமாம். 


நான்கு பொருட்கள் என்றால் ஆயிரம் நிமிடங்கள்!


நம்முடைய நேரத்தையும் சத்தமில்லாமல் திருடி விடுகின்றன இந்த ஹைப்பர் மார்க்கெட்டுகள்.


இது நல்லது தானே? நிறைய தயாரிப்புகள் என்றால் நிறைய வேலைவாய்ப்பு என்று நினைத்தால் தப்பு. 


அந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு எப்படி சந்தைக்கு வருகிறது என்ற விவரம் நம்மிடம் இல்லை. 

முழுக்க முழுக்க automated process சில் வந்திருக்கலாம். 

எந்த ஒரு தயாரிப்பும் அப்படியே வானத்தில் இருந்து குதித்து விடுவதில்லை. 


அது பஞ்சபூதங்களையும் கணிசமான அளவு பதம் பார்க்கிறது. அதற்கான தயாரிப்பில் எத்தனை தண்ணீர் உறிஞ்சப்பட்டது, எத்தனை ஏக்கர் மண் மலடானது, எத்தனை டன் காற்று மாசுபட்டது, அந்தத்தயாரிப்பு எத்தனை carbon footprint ஐ பூமியின் வளிமண்டலத்தில் வெளிவிட்டது என்றெல்லாம் நமக்கு தெளிவாகத் தெரிவதில்லை. 


மேலும் அந்தத் தயாரிப்பின் பின்புலத்தில் நசுக்கப்பட்டவர்கள் யார், மிரட்டப்பட்டவர்கள் யார், அதன் பின்புலத்தில் இயங்கும் socio, economic, political forces கள் எதுவும் நமக்கு விளங்குவதில்லை.


' கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்ற வாசகம் இப்போது எடுபடாது.


 எங்கே கடைவிரித்தாலும் எங்கிருந்தோ 'கொள்வார்' கள் வந்து விடுகிறார்கள். 


home-made என்று போட்டுவிடு, organic என்று எழுது, 100% hygienic என்று எழுது, good for liver என்று போடு, 

ஏதோ ஒரு வைட்டமின் இருக்கிறது என்று அளந்து விடு, கவரில் பற்கள் தெரியச் சிரிக்கும் ஒரு happy family யின் படத்தைப் போட்டுவிட்டு, அவ்வளவு தான், shit sells!!


ஓகே. இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் தானே என்றால் பொருட்களை மட்டும் அல்ல, சேவைகளையும் நாம் over consume செய்கிறோம் என்று தோன்றுகிறது. 


தினமும் 3 GB டேட்டா இலவசம். 

வேறு என்ன செய்ய? 

வீடியோக்கள் scroll செய்யச் செய்ய மேலெழும்பி வந்து கொண்டே இருக்கின்றன. 

இரவு முழுவதும் பார்க்கலாம். காலையில் நம் cognitive data base அப்படியே தான் இருக்கும். 

எதையும் புதிதாக கற்றுக்கொண்டு இருக்க மாட்டோம். எதுவும் நம்மை மாற்றி இருக்காது. 


' Stop making stupid people famous ' என்று சொல்வார்கள். 


அரைவேக்காடுகளை, கத்துக்குட்டிகளை நாம் தான் பிரபலம் ஆக்குகிறோம். 


மில்லியன் subscribers, லட்சக்கணக்கில் followers ! 


வாங்குவோர் இல்லையென்றால் விற்பனை செய்வோர் இல்லை. பார்ப்போர் இல்லை என்றால் பிரபலங்கள் இல்லை. 


data என்றில்லை, மின்சாரம், தண்ணீர்,எரிபொருள் எல்லாமே over consumption தான்.


 Buffet- வில் இலவசமாகக் கிடைக்கிறது என்று எல்லா அயிட்டங்களிலும் ஒன்றை எடுத்து உள்ளே தள்ளுகிறோம். 


விளைவு : வயிற்று வலி, இரண்டு நாள் வயிற்று உப்புசம், உபாதை! 


இலவச மருத்துவம் என்பதற்காக நோயை வலிய வரவழைத்துக் கொள்ளவும் செய்வோம் நாம்!


மூன்றாவதாக நாம் வாழ்க்கையையும் over consume செய்கிறோம்.


 ' நாளை என்பது நிச்சயம் இல்லை, இன்றே அனுபவித்து விடு ' என்பதெல்லாம் சரி தான்.


 ஆனால் வாழ்க்கையில் நம் அனுபவங்களை, சுகங்களை, சந்தோஷங்களை சரி சமமாக distribute செய்கிறோமா?


 40 வயதுக்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்து விட்டு போதும்டா சாமி என்று exhaust ஆகி விடுகிறோம்.


 8 வயது சிறுவன் 28 வயது இளைஞன் போலப்பேசுகிறான் 


'மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச' என்று ஆறு வயது குழந்தை ஒன்று பாடுகிறது.


 ' expression பத்தலை ' என்று ஜட்ஜுகள் (?!) தீர்ப்பு சொல்கிறார்கள்* .


 'ஆன்மிகம்' என்பது ஒருவருக்கு வயது முதிர்ந்தபின் தான் அர்த்தமுள்ளதாகும். 


50+...அந்தந்த வயதில் 

அது அது இனிக்கும். 


ஆன்மிகத்திற்கென்று ஓர் ஓய்வு, ஒரு விரக்தி, ஒரு களைப்பு, ஒரு சோர்வு, ஓர் அர்த்தமின்மை எல்லாம் தேவைப்படுகிறது. 


20 வயதில் எல்லாமே அர்த்தமுள்ளதாகத் தான் தெரியும். 


ஆனால் ஒரு curiosity க்காக, அனுபவத்துக்காக 20 வயதில் ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்கினால் அதில் ஆழம் இருக்காது. 


அது வெறும் over consumption ஆகவே இருக்கும்.


சின்னக் குழந்தைகள் ஆன்மிக கதா காலட்சேபம் செய்வது பொருத்தமாகுமா?


பத்து வயதில் காதலித்து, 20 இல் ஆன்மிகம் பேசி விட்டு, முப்பதில் முடித்து விட்டால் என்ன தான் செய்வது?


 40-இல், 50-இல், 60-இல் வாழ்க்கை என்னும் காலிபாட்டிலை வைத்துக்கொண்டு எதை அனுபவிப்பது?


நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம். 


நீரை, மின்சாரத்தை, கனிம வளங்களை, பெட்ரோலை நம் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டு வைப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை. 


அளவுக்கு மிஞ்சினால்.????

அமிர்தமும் நஞ்சன்றோ...???


சரி... இதற்கான தீர்வு தான் என்ன,..???,


மிகவும் எளிது.

விருப்பத்திற்காக நுகராதீர்கள். தேவையிருந்தால் மட்டும் நுகருங்கள்,


அப்படியென்றால், என் ஆசைகள் விருப்பங்கள் என்னாவது,,.???


உங்கள் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டதா என்று பாருங்கள், அதற்கு முன்னுரிமை தாருங்கள்,

அதன் பின் நீங்கள் விரும்புவதை நுகருங்கள், அந்த நுகர்வும் உடல் ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் உங்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டியது அவசியம். 


நீங்கள் விரும்பும், உங்களுக்கு அத்தியாவசிய தேவை இல்லாத எதையும் கடன் வாங்கி நுகராதீர்கள்

Sarayu Raghavan