Friday, December 30, 2022

வளரட்டும் படரட்டும் நிலைக்கட்டும்..

 தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்

தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்  
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே 

Monday, December 26, 2022

படித்ததும் பகிரப் பிடித்தது..

 நமது வயிற்றில் எந்த மிக்ஸி, கிரைண்டர் அல்லது அம்மி கல் இது போன்ற எதுவும் இல்லை, ஆனால் நாம் அவசர அவசரமாக கொஞ்சம் கூட மெல்லாமல் முழுசு முழுசா முழுங்குற எல்லாத்தையும் இந்த வயிறு பெர்பக்ட்டா அரைச்சு வெளியே தள்ளுதே எப்படினு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா? 


உணவை ஜீரணம் செய்றதுக்காகவே வயித்துல இயற்கையாகவே HCL ஆசிட் சுரக்குது. அந்த ஆசிட்ல ஒரு சேவிங் ப்ளைட போட்டீங்கனா கூட அது கரைஞ்சு போய்டும்,  அந்த அளவுக்கு பவர் புல்லான ஆசிட் அது.


வயித்துல சுரக்குற HCLலுக்கும் கெமிக்கல் லேப்ல இருக்குற HCLக்கும் ஒரே வேதியியல் வாய்ப்பாடு தான்,  ஒரே குறியீடு தான், ஒரே பண்புகள் தான் ஆனால் லேப்ல இருக்குற HCL ல்ல வயித்துகுள்ள இன்ஜக்ட் பண்ணா என்ன ஆகும்னு தெரியுமா? 


வயிறு, குடல் பூரா வெந்து போய்டும்.  ஏன்னா வயித்துல சுரக்குறது Bio அமிலம், லேப்ல தயாரிச்சது உயிர்ச்சத்து இல்லாத கெமிக்கல்.


இதே மாதிரி தான்,  உடம்புல விட்டமின் இல்ல, புரோட்டின் இல்ல, கால்சியம் இல்ல,  மக்னீசியம் இல்ல அப்படின்னாலும் அத உணவு வழியா தான் உடம்புக்கு கொடுக்கனுமே தவிர


பன்னாட்டு மெடிக்கல் மாபியாக்கள் தயாரிக்கும் ஆய்வக மருந்து மாத்திரைகள் மூலமாக அல்ல.


அப்படி லேப்ல தயாரிச்ச மருந்து மாத்திரை தின்னா என்ன ஆகும்னா... லேப்ல தயாரிச்ச HCL ஆசிட்ட ஒரு சிரஞ்சி வழியா வயித்துக்குள்ள இன்ஜக்ட் பண்ணா என்ன ஆகுமோ அதே தான் ஆகும். என்ன ஆசிட் அதோட தீவிரத்தால உடனே குடல வேக வைச்சுடும், இந்த மருந்து மாத்திரைகள் ஸ்லோவா, அலுங்காம குலுங்காம உங்க குடல காலி பண்ணிடும்.


அப்பறம் ஒரு அஞ்சு ஆறு வருசம் கழிச்சு One Fine day ல உங்களுக்கு இத்தன நாள் மருந்து மாத்திரை எழுதி கொடுத்த அதே டாக்டர் சொல்லுவாரு...


"தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்புட்டதால உங்க குடல் புண்ணாயிடுச்சு, ஒரு வேற கேன்சரா கூட இருக்கலாம், எதுக்கும் ஒரு பயாப்சி பண்ணி மும்பை லேப்க்கு அனுப்பி செக் பண்ணிடலாம்னு"


அப்பறம்...?


அப்பறம் என்ன? 

அதே டாக்டர், கீமோ தெரபி ன்ற பேருல மறுபடி மருந்து உங்கட்ட காஸ்ட்லியான மருந்து மாத்திரைகள விக்க ஆரம்பிப்பாரு.


இதுக்கு மேல என்ன நடக்கும்னு நான் சொல்ல முடியாது. நீங்களே யோசிச்சு பாருங்க. உங்க பக்கத்து வீட்டுல, சொந்த பந்தம் வீட்டுல இத நடக்குதா இல்லையானு கவனிங்க.ப்ளீஸ்.


மருந்து மாத்திரைகளை புறக்கணிங்கள். 


பசித்தால் மட்டும் உண்ணுங்கள் 


தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துங்கள் (காய்ச்சல் சளி இருமல் தொந்தரவுகள் இருந்தால் மட்டுமே லேசான சூட்டில் வெந்நீர் அருந்த வேண்டும்)


உடலுக்கு தேவையான ஓய்வு அளியுங்கள் 


உறக்கம் வருகையில் உறங்குங்கள், குறிப்பாக இரவில் நீண்ட நேரம் விழித்து இருக்காதீர்கள்


 பழங்கள், காய்கறிகள், கீரைகள் நிறைய எடுத்து கொள்ளுங்கள்


பழச்சாறு, சூப், தண்ணீர் நிறைய குடியுங்கள்


நிதானமான மனநிலையில் உங்களை வைத்திருங்கள்


நோய்கள் நிச்சயம் குணமாகும், உடல் கண்டிப்பாக மீண்டு வரும். அதற்கான சக்தி உடலுக்கு தரப்பட்டுள்ளது. 


இது நம்புங்கள் நடக்கும் என்கிற பூச்சாண்டி லாம் கிடையாது. நம்பிக்கையே இல்லாமல் மேலே சொன்னவற்றை பின்பற்றினாலும் குணமாதல் நிச்சயம்.


ஏனெனில் இந்த ஆங்கில வணிக மயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளின் வயது வெறும் 150 ஆண்டுகள் தான்


ஆனால் மேலே சொன்ன முறைகளின் அடிப்படையில் தான் மனித சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளாக நோய்களிலிருந்து மீண்டு வாழ்ந்து வந்துள்ளது என்பதே இதற்கு சாட்சி.

Friday, December 23, 2022

காலத்தை வென்றவன்.

 ஒரறிவு  உயிரினங்கள் முதல்

ஆறறிவு மனிதர்வரை
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி "கர்ஜிக்கும்
காலன் தோற்றது.....

மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விட திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை......

அவர்தானே
வசூல் " சக்கரவர்த்தித் திருமகனாய் " இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை....

அவர்தானே
"மன்னாதி மன்னனாய்த்" திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமென

"எங்கள் தங்கமென"   அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?

எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும் புதிராய் இருப்பினும்
"நல்லவன் வாழ்வான் "
"தர்மம் தலைகாக்கும் "எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை

இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ்
"இன்றுபோல்  என்றும் வாழ்க" என
வாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோம்

Thursday, December 22, 2022

கணித நாளில்...

 



*இன்றைய சிந்தனை*

.......................................................

*"கணிதத்தின் அடிப்படை மெய்யியல்''*

..................................

தலைசிறந்த  மெய்யியல் கற்றறிந்தவரும், கணிதப் பேராசிரியராகவும் சமூகப் போராளியாகவும் திகழ்ந்த பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறினார்:  


''கணிதம் உண்மையைக் கூறுவது மட்டுமல்ல, அளவிலா அழகு படைத்தது, ஓர் ஒப்புயர்வற்ற சிற்பம் போலக் கணிதம் அழகுமிக்கது." - என்று


மற்றொரு கணித அறிஞர் ஹார்டி கூறினார்: 


'கணிதம் அழகின் உருவம். அழகிலா கணிதம் என்று ஒன்றில்லை என்று...!"


கணிதம் என்பது எல்லோருக்கும் பொதுவானதொரு மொழியாகும்...!


"நாம் அன்றாட வாழ்வில் சந்திப்பவர்களின் நடவடிக்கைகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே, அல்லது., ஏதேனும் ஒரு கலையில் சிறிதளவாயினும் திறைமையாக இருப்பதை நன்கு காணலாம்..


ஆனால், பொதுவாக கணிதக் கலையானது எல்லோருடைய அன்றாட வாழ்வில் இணைபிரியாதாக இருக்கிறது...!


கணிதத்தின் அடிப்படைத் தத்துவமானது...


+ கூட்டல், - கழித்தல், × பெருக்கல், % வகுத்தல்

இந்த நான்கு மெய்யியலை விழிப்புடன் பயன்படுத்த

வேண்டும்...!


அப்படிப் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக் கனியாகவே வைத்துக் கொள்ளலாம்...


வாழ்வில் அன்பை கூட்டிக் கொள்ள வேண்டும்...!

அந்த (+)கூட்டல்கள் ஈட்டித் தரும் மகிழ்ச்சியை நமக்கு...


வாழ்வில் நட்புகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்...!

அந்த (× )பெருக்கல்கள் நம் வாழ்வு முடிந்த பின்பும் வாழும் அவர்கள் மனதில்...


வாழ்வில் வாழும் முறைகளை (÷ )வகுத்துக் கொள்ள வேண்டும்...!

அந்த வகுத்தல்கள் நம் வாழ்வை வளர்பிறை ஆக்கும்...


வாழ்வில் சோகத்தை கழித்துக் கொள்ள வேண்டும்...!

அந்த (-)கழித்தல்கள் நம்மை அழித்தல்கள் இல்லாத ஓவியமாய்க் காட்டும்...


வாழும் வாழ்வினை நிகராக்கிக்(சமம்) கொள்ள வேண்டும்...!

(=) அது வேறுபாடு இல்லாத சமூகம் வேரில்

கிளை தழைக்க அது பயன்படும்...


வாழ்வின் ஏற்ற இறக்கங்களைக் கண்டுகொள்ள வேண்டும்...!

(< >) அது நம்மை வார்த்தெடுத்த பொன்னாய்

மாற்றியமைக்கும்...


வாழ்வின் குறைநிறைகளைக் கண்டு அறிந்து கொள்ள வேண்டும்..!

(+-)அது வசந்தமாய், நம் வாழ்வு மாற அது வகை செய்யும்...


*ஆம் நண்பர்களே...!*


மேலே கண்ட கணித இலக்கணத்தை நன்கு திட்டமிட்டு வாழப் பழகிக் கொண்டால், எந்நாளும் பொன்நாளாக மாற்றிக் கொள்ளலாம்...


ஆக, கணிதம் எனும் அழகினை வழிபடுங்கள். கணிதம் இனிக்கும், ஆனால் தெவிட்டாது...


நன்றி...தகவல் உலா..

ராமானுஜம்...தி கிரேட்

 M no. 371#சாஸ்திரங்களை கண்டுபுடிச்சவனை பத்தி பேசி பேசியே...


#சூத்திரங்களை கண்டுப்புடிச்சவனை மறக்கடிக்க செஞ்சுட்டீங்களே..


ஏ.டி.எம். இயந்திரம் நாம் கார்டை சொருகியவுடன் பணத்தை தருகிறதே… ராமானுஜம் கண்டுபிடித்த தேற்றத்தின் அடிப்படியில் தான் அது இயங்குகிறது என்பது தெரியுமா?


உலகமே கொண்டாட வேண்டிய ஒரு மாபெரும் கணித மேதை எப்படி வாழ்ந்தார் என்பதை படியுங்கள். இன்றைக்கு அனைத்து சௌகரியங்களும் கிடைக்கப்பெற்றுள்ள நம் மாணவர்கள் நம் சகோதரர்கள் நம் பிள்ளைகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்.


இராமானுஜனின் தந்தை சீனிவாச அய்யங்கார், கும்பகோணத்தில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மாத ஊதியம் ரு.20 ஆகும். இராமானுஜனின் தாயார் கோயில்களில் பஜனைப் பாடல்களைப் பாடுவதன் வாயிலாக மாதம் ருபாய் 10 சம்பாதித்து வந்தார்.குடும்பமே போதிய வருமானமின்றித் தவித்தது. பல நாட்கள் உண்ண உணவின்றித் தண்ணீரை மட்டுமே குடித்து வளர்ந்தவர் இராமானுஜன்,


ஒரு நாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னசாமி அம்மா எப்படியும் மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து வைக்கிறேன் இரவு சாப்பிடலாம். அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினாள். இராமானஜனோமறு வார்த்தை பேசாமல் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு. அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று கூறி பள்ளிக்குச் சென்று விட்டான்,


ஆனால் அன்று மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்ப வில்லை, கவலையில் கண்ணீர் விழிகளுடன் கோமளத்தம்மாள் இராமானுஜனைத் தேட ஆரம்பித்தாள், எங்கு தேடியும் காணவில்லை. அச்சமயம் இராமானுஜனின் நண்பன் அனந்தராமனின் தாயார் அங்கு வந்து விசாரிக்க, இராமானுஜனைக் காணவில்லை எனக் கூறி, தன் மகன் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை, மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறி அழத் தொடங்கினாள், கோமளத்தம்மாளை சமாதானம் கூறி வீட்டில் அமரவைத்து விட்டுத் தானும்,அனந்தராமனும் ஆளுக்கொரு பக்கமாக இராமானஜனைத் தேடத் தொடங்கினர்.


அனந்தராமன் பல இடங்களில் தேடி அலைந்தான். எங்கும் இராமானுஜனைக் காணவில்லை, திடீரென்று அனந்தராமனுக்கு ஒரு சந்தேகம். ஒரு வேளை சாரங்கபாணிக் கோயிலுக்குச் சென்றிருப்பானோ? என்று. உடனடியாக கோயிலுக்குச் சென்று தேடினான், கோயிலின் ஒரு மண்டபத்தில் கணக்குப் புத்தகங்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு இராமானுஜன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் படுத்திருந்த தரை முழுவதும் சாக்கட்டியால் கணக்குகள் போடப்பட்டிருந்தன, அனந்தராமன் அவனைத் தட்டி எழுப்பினான், திடுக்கிட்டு எழுந்த இராமானுஜன், என்ன அனந்தராமா அதற்குள் எழுப்பிவிட்டாயே, நேற்று நமது கணக்கு வாத்தியாருக்கே விடை கண்டுபிடிக்கத் தெரியாத. அந்தக் கணக்கை நான் மனதிலேயே போட்டுப் பார்த்தேன். போட்டு முடிப்பதற்குள் எழுப்பிவிட்டாயே, என்றவன், இரு கனவில் நான் போட்ட பாதிக் கணக்கையாவது இந்த நோட்டில் எழுதிவைத்துவிட்டு வருகின்றேன் என்று கூறி எழுதத் தொடங்கினான்,


எழுதி முடித்தவுடன் அனந்தராமன், இராமானுஜனைத் தன்வீட்டிற்கே அழைத்துச் சென்றான், இராமானுஜனைக் காணாமல் அனந்தராமனும் சாப்பிடாமல் இருக்கின்றான் என்ற செய்தியைக் கூறி, அனந்தராமனின் தாயார் தன் வீட்டிலேயே இராமானுஜனுக்கும் உணவிட்டாள்,


இராமானுஜன் கணிதத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதால் கும்பகோணம் அரசு கல்லூரியிலும், தொடர்ந்து சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் கணிதத்தைத் தவிர மற்ற பாடங்களில் தோல்வியையே சந்தித்தார்,


இராமானுஜனின் இல்லம்


1910 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளர் இராமச்சந்திர ராவ் அவர்களை இராமானுஜன் சந்தித்தார். இராமானுஜனின் கணிதத் திறமையினைக் கண்டு வியந்த இராமச்சந்திரராவ் அவர்கள் இராமானுஜனைப் பார்த்து தற்சமயம் உமது தேவை என்ன? என்று கேட்க, இராமானுஜன் ஓய்வு தேவை என்று பதிலளித்தார், அதாவது உணவு பற்றிய கவலையின்றி கணிதம் பற்றிய கனவு கான ஓய்வு தேவை என்றார். யாருக்குமே விளங்காத கணக்குகள் எல்லாம் இராமானுஜனிடம் கைக்கட்டி சேவகம் செய்தாலும், உணவு மட்டுமே அவர் இருக்குமிடத்தை அனுகாதிருந்தது.


பிப்ரவரி 27 இல் ஹார்டிக்கு இராமானுஜன் எழுதிய கடிதம், படிப்போரை நெகிழச் செய்வதாகும். நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக வைப்பதெல்லாம் ஒன்றுதான், நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க . எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும் என்று எழுதினார், இராமானுஜனின் உண்மை நிலையை, வறுமையில் உழன்ற அவல நிலையை விளக்க இக்கடிதம் ஒன்றே போதுமானதாகும்.


இராமானுஜன் இளமைக் காலம் முதல் தான் கண்டுபிடித்த கணக்குகளை நான்கு நோட்டுகளில் பதிவு செய்துள்ளார். ஊதா நிற மையினால் கணக்குகளை தாளில் எழுதிவரும் இராமானுஜன், ஒரு பக்கம் முடிந்ததும், அடுத்த பக்கத்தில் எழுதாமல், அதே பக்கத்திலேயே, மேலிருந்து கீழாக, ஊதா நிற வரிகளுக்கு இடையே சிகப்பு நிற மையினால் எழுதுவார். நோட்டு வாங்கக் கூட காசில்லாத நிலையில் இராமானுஜன் இருந்தமைக்கு இந்த நோட்டுகளே சாட்சிகளாய் இருக்கின்றன.


ஐந்து வருடம் இலண்டனில் தங்கி உலகையேத் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமையுடன் தாயகம் திரும்பினார் இராமானுஜன். அவருடன் இரண்டறக் கலந்து காசநோயும் வந்தது. காச நோயால் பாதிக்கப் பட்டு எழும்பும் தோலுமே உள்ள உருவமாய் இளைத்த இராமானுஜன், அந்நிலையில் கூட தனது கணித ஆய்வை நிறுத்தவில்லை.


கணிதத்தையும் கணிதமேதையும் கொண்டாட ஒரு வாய்ப்பு. மிக எளிய குடும்பத்தில் பிறந்து “கொடிது கொடிது வறுமை கொடிது” என அவ்வை பாடிய இளமையில் வறுமையோடு வளர்ந்து கணித உலகின் சக்கரவர்த்தியாகப் பிரகாசித்த ராமானுஜம் ஒரு கணிதமேதை என்று மட்டும் தெரியும். 


ஆனால் கல்லுரி மாணவர்க்கு அவரது கணித பங்களிப்பு பற்றி எதுவும் தெரியாது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததுபோல் ராமானுஜம், ராமானுஜம் நம்பர் என்கிற ஒன்றை கண்டுபிடித்தார் என்று சில பேராசிரியர்களே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அவலம் ஒரு புறம். அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை அவர் ஊர்க்காரர்களாலேயே அடையாளம் காட்ட முடியாமல்போன அவமானம் ஒரு புறம்.


பாரதி… ராமானுஜம்… இவர்களை போன்றவர்களை இறைவன் செல்வந்தர்களாக படைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் பசித்தால் சாப்பிட சோறு கிடைக்கும் நிலையிலாவது படைத்திருக்கக்கூடாதா? 


ஒரு வாய் சோறு பாரதிக்கும் ராமானுஜத்துக்கும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்திருந்தால் இன்னும் எத்தனை எத்தனையோ பொக்கிஷங்களை அவர்கள் இந்த உலகிற்கு தந்திருப்பார்களே…..


ஏன் கிடைக்கவில்லை? இவர்களுக்கு அப்படி செய்தததன் மூலம் நமக்கு ஏதாவது சொல்ல வருகிறானா இறைவன்? இங்கே தான் இறைவனை புரிந்துகொள்ளமுடியாது தவிக்கிறேன்...


உணவிற்கே வழியின்றி வாழ்வில் வறுமையை மட்டுமே சந்தித்த போதும், கணிதத்தையே சிந்தித்து, சுவாசித்து, சாதித்துக் காட்டிய கணித மேதை சீனிவாச இராமானுஜனின் நினைவினைப் போற்றுவோம்.


கணித மேதை சீனிவாச இராமானுஜனின் பிறந்த தினம் இன்று..


நன்றி ரைட் மந்த்ரா சுந்தர்...

Monday, December 19, 2022

Work from Home office..

 One of the most dreaded experience to the business world in recent times is the Covid pandemic. Yet, if there was one sector that was least impacted it was IT. Information technology is one industry where it is not mandatory for employees to sit next to each other to run their business as usual reason being not much physical labor intensive and machinery involved. Remote working came as a blessing in disguise giving both employees and employers a win win situation. There are two adages worth quoting at this point. “Change is the only constant” and “Nothing is permanent”. Times changed and the organizations started adopting a hybrid work model involving certain hours certainly in office a week. While some did not receive it in the joyest of their moods some others were elated. White collar workers started commuting to the work place. When it comes to boss subordinate relationship, subordinates does not have much to say. However it does not mean there are no grievances at all.


                                        Many corporations view some countries as market for their global ambitions and the workers as low cost labours. While the economic aspect is not a point of discussion let us view some uneasiness of an average Indian commuting to work. Most of the companies are located in the metros and A grade cities across India where millions of vehicles ply on the road on any given day. A two wheeler rider a case in point has to get stuck in the snarls for several minutes. This is an age of time, where your entire worthy life is being calculated in seconds and minutes rather than years you have lived!


The rational minds that calculate the net productive hours at work doesn’t care about the time spent on traffic snarls. The honkings are certainly no music to the ears. Every rider applies his mind in maintain the least possible space between two vehicles. The evolution for Indian lungs is need of the hour to convert carbon monoxide and sulphur dioxide to oxygen. The road sense in India is a seventh sense mandatory for human life in India. The scorching sun tans the skin and adds on to the melanin pigmentation. The skimming of the newspaper everyday reveals at least two mishaps on the way to work wherein the blood flows on the road. The condition of the vehicle and paper work has to be the best to avoid any occurrences of breakdown and police booking under traffic related offences. The thinking of all the riders are not in an array there by changing the lanes haphazardly resulting in dastardly altercations on the road sometimes manhandling as well.


                 The musculoskeletal system of an office commuter has to be the flawless at least up to an age of fifty eight. The wearing out of the spine health during the commute is unaccounted for. Over a period of time, the money involved in physiotherapy and herniated disc disappears in infinite universe. One is forced to believe that the cost fuel that is spent is compensated in the name of commute allowance. Cost of fuel in India is a different ball game altogether. The climate warriors ask us to travel in public transport to office thereby making less carbon foot print. Travelling in public transport in India is like jam sandwiched between two slices of bread. There is no guarantee that one can alight without the clothes getting torn and the feet getting smashed. It takes special skills to hang on the foot board to save the life.


                    Most of the staff were comfortable at their homes with good work productivity are shattered with relocation plans. Some are concerned about the money spent on house rents and PG fees. The taste buds have to be altered from home food to unhygienic tasteless food leave alone the freedom of phone usage and clothing chosen while working at home. There are several surveys indicating good productivity at home in fact it is more than the office. The employers have had a good time in work from period as well saving various overhead costs.


  In recent times, all these reasons are outweighed by words like “better collaboration” and “team work”. The most perpetual question which remains unanswered is "If a bread winner suddenly disappears whom is it likely to impact the most the organization or the family?”

Sunday, December 18, 2022

ஆயாசம்..

 அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தபடி

"கொஞ்சம் சீக்கிரம் 
அடுத்த காரியத்துப் போகவேண்டும் "
அவசரப் படுத்தினார் சாஸ்திரிகள்


"ஜங்ஷனுக்கு அரை மணி நேரத்தில்
போய் விடலாம் இல்லையா"
பக்கத்திலிருந்தவரிடம் பதட்டத்துடன்
கேட்டுக் கொண்டிருந்தார் சித்தப்பா"


ப த்து மணிதான் அதுக்கு மேலே தாங்காது
படபடன்னு வந்திரும்
சாப்பிட்டு மாத்திரை போட்டாகனும் " என
யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார் சம்பந்தி


தூரே மொத்தமாய் நின்றபடி
இன்றைய அரசியல் நிகழ்வு குறித்து
சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தனர்
அலுவலக நண்பர்கள்


"குளத்துத் தண்ணி ரொம்ப மோசம்
வீட்டில் போய் நன்றாகக் குளிக்க வேணும் "என
அவனாகவே முனங்கிக் கொண்டிருந்தான
"அவரின் "  மூத்த மகன்


கண் கலங்கியபடி பேரன் மட்டுமே 
"அவரையே "பார்த்துக் கொண்டிருந்தான்


"அதுக்குக் "கூட
"அதன் "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது

Friday, December 16, 2022

இன்று.....

 இன்று டிசம்பர் 17


ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day)


     இந்தியாவில்  ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுகிறது. 

    1982ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் 

குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் 

ஓய்வூதியர்களால் 

இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

    அரசுத் துறைகளில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நிலை குறித்து பல்வேறு ஓய்வூதியர் சங்கங்கள் தாக்கல் செய்த வழக்குகள் மீது 

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே சீரான வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தீர்ப்பளித்துள்ளது.

   இதில் ஓய்வு பெற்ற தேதியை அடிப்படையாக வைத்து ஓய்வூதியப் பலன்களை வழங்கு

வதில் பாகுபாடு செய்வது, ஓய்வூதியர்களைப் பிரிவினை செய்வதற்கு ஒப்பாகும் என்றும், மேலும் இவ்வாறு பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 14-ஐ மீறுவதாகும் என்று 

1982ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாளன்று உச்சநீதிமன்றம், டி. எஸ். நகரா என்ற ஓய்வூதியர் தொடுத்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    டி. எஸ். நகரா வழக்கில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் 

ஒய். வி. சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், 

17 டிசம்பர் 1982 அன்று அளித்த உரிமை சாசனத் தீர்ப்பின் ஒரு பகுதியில், ஓய்வூதியம் 

என்பது, உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும் எனவும், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவுகள் 139 மற்றும் 148 (5)-ன் படி ஓய்வூதியம் என்பது 

ஓய்வூதியர்களுக்கு 

சொத்துரிமை போன்ற நிலைத்த சட்டபூர்வமான உரிமையாகும் என்றும் தெரிவித்தது.

     எனவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் நாள் ஓய்வூதியர் நாளாக ஓய்வூதியர்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.


Wednesday, December 14, 2022

உணவு ...முழுவதையும் வாசிப்போம்..இனியேனும் யோசிப்போம்..

*சிந்திக்க வைத்த பதிவு*


*இலுமினாட்டிகளின் தந்திர செயல்களால் தமிழக மக்களின் வாழ்வு உணவு சீர்குலைவு ஏற்பட்டது என்பதை சிந்தித்து செயல்படுங்கள்*.



*"உங்கள் ஆரோக்கியம் உங்கள் நாவு தேடும் சுவையால் கெடும்".*


*இம்முறை தமிழகப் பயணத்தில் நான் பார்த்து மிகவும் அஞ்சிய விடயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.*


*அது வேறொன்றும் இல்லை எங்கு நோக்கிலும்*

*உணவு, உணவு, உணவு.*


*தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது.*


 *எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌*


*அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது.*


 *உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவை ஏளன உணவு பொருளாகப் பார்க்கப்படுகிறது. பல உணவகங்களில் இவை இல்லை.*


*ரொட்டி வகைகளும், கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது*. 


*மதிய வேலைகள் கூடச் சோற்றை விடப் பிரியாணி வகைகள், பரோட்டா வகைகள் அதிகம் காணப்படுகிறது.*


*இந்த வரிசையில் காலை உணவு மட்டும் பெரிதும் பாதிக்கப்படவில்லையென நம்புகிறேன்.*


*விரைவில் அதனையும் ஓட்ஸ், பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவு வகைகளால் நிரப்பப்படலாம். தொடர் தொலைக்காட்சி விளம்பரங்கள் அதனைத் தான் புகுத்திக் கொண்டிருக்கிறது.*


*ஒரே ஒரு வகை உணவு பரிமாறப்பட்ட என் சொந்தங்கள் வீட்டில் அனைத்திலும் இரண்டு மூன்று வகை சேர்த்து பரிமாறப்படுகிறது.*


*இந்த மாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இவையெல்லாம் கடந்த ஐந்து வருடங்களில் நடந்தேறியிருக்கிறது.*


*அதனை அவர்கள் உணரவே இல்லை. யூடியூப் போன்ற வலையொலிகளின் உணவு நிகழ்ச்சிகள் இதற்குக் காரணம் என்று சொல்லலாம்*.


*ஒரு கடையில் 99 வகை பரோட்டாக்கள் கிடைக்குமென்ற பலகையைப் பார்த்து இதுவரை குழம்பிக் கொண்டே இருக்கிறேன்.*


 *ஐஸ்கிரீமை கூடப் பொரித்து தின்கிறார்கள். சிஸ்லர் என்னும் நெருப்பு கல்லில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது. ஏன்.*


*உலகில் உள்ள அனைத்து வகை உணவுகளும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பிசா(சு), சவ(ம்)ர்மா போன்ற கடைகள் எல்லா ஊரிலும் தென்படுகிறது.*


*திக்கு எங்கிலும் பேக்கரி, அதிலும் விற்கப்படும் பொருட்கள் அங்குச் செய்வதில்லை, யாரோ ஒருவர் செய்து அனைத்திற்கும் வழங்குகிறார்.*


*சுவை என்பது கூடப் பழைய சுவை இல்லை, அதிகப்படியாக டால்டா கலப்பு போன்றவை இருக்கிறது. நாக்கில் வைத்தவுடன் கரைய வேண்டும்.*


*ஊரில் எவனுக்கும் பல் இல்லை கடிக்கவேண்டிய அவசியமில்லை என்கிறது அடுமனை. கடினமாகக் கடிக்கும் பொருள்கள் விற்பனையில் இல்லை.*


*இனிப்பு வகைகள் கேக்கு வகைகள் பெருகிவிட்டது. இனிப்பு பெருகிவிட்டு நிலத்தில் பல் மருத்துவமனையும் பெருகி இருக்கிறது.*


*அண்ணாச்சி கடைகளிலும் பாய் கடைகளிலும் தமிழ் பொருள்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வட இந்திய பொருள்கள்தான் விற்பனைக்கு இருக்கிறது.*


*ஏன் தின்பண்டங்கள் கூடக் கல்திராம்ஸ் பாக்கெட்டுகள் தான் இருக்கிறது. ஒரு காலத்தில் தூ என்று துப்பிய சுவை. இன்று விமான நிலையம் முதல் பொட்டிக்கடை வரை மக்களுக்கு வழக்கப்படுத்தி விட்டனர்.*


*இதற்கு அடிப்படைக் காரணம் பெருகிவரும் D-MART போன்ற கடைகள் தான். அவர்கள் பெருமளவில் கொள்முதல் செய்தால் மட்டுமே குறைந்த விலைக்குக் கொடுக்க முடியும். ஆகையால் அவர்கள் பெரும் வணிக நிறுவனங்களின் பொருட்களைத் தான் விற்கிறார்கள்.*


*அதன் நாகரீக தோற்றத்தைப் பார்த்து. அங்குச் சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்று மக்கள் செல்லத் தொடங்குகிறார்கள்.*


*அந்த மக்களைத் தங்கள் கடைக்கு அழைக்க அண்ணாச்சிகளும் அதே பொருளை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள்.*


*இதனால். தமிழ் பொருட்களை உற்பத்தி செய்த பல குடும்பங்கள் அழிந்து இருக்கும். எங்கள் ஊரில் கூட மெட்ரோ என்ற பெரும் கடை மற்ற அனைத்தையும் உண்டு வளர்கிறது.*


*100 ரூபாய் டிக்கெட்டை வாங்கி நான்கு மணி நேரம் செல்லும் ரயில் பயணத்தில் பத்துக்கு மேற்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. மக்கள் அதற்கு நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறார்கள்.*


*உணவிற்காகச் செய்யும் செலவு வீண் செலவாக யாரும் கருதுவதில்லை. அதுதான் இந்த வணிகத்தின் அடிப்படை மூலதனம்.*


*உணவை மக்கள் முதலில் விழி வழி உண்கிறார்கள், கண்களால் தின்கிறார்கள். பிறகு கண்டதையெல்லாம் வாங்கி பிடித்ததை தின்றுவிட்டு பிடிக்காததை தூக்கி எறிகிறார்கள்.*


*முன்பெல்லாம் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைக்க நேரம் இல்லாத காரணத்தினால் வெளியே உணவருந்தும் பழக்கம் இருந்தது.* 


*ஆனால் இப்போது எந்த நேரத்திலும் அதனை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து விடுமென்று பட்டி தொட்டிகளில் எல்லாம் swiggy zomoto தூதுணவு வந்துவிட்டது.*


*இங்குப் பசி பேசப்படுவதில்லை, ருசி மட்டுமே பேசப்படுகிறது,*

*ஒவ்வொரு நிலப்பகுதியின் உணவும் அந்தந்த நில சூழலுக்கு ஏற்ற மாதிரி உருவாக்கப்பட்டது.*


*ஆனால் அவை அனைத்தையும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பது. மனிதர்களின் மரபணுவைச் சிதைக்கும் பெரும் போர்.*


*அறுசுவை உணவு கூட அடுத்த நாள் மலம் ஆகிவிடும் என்று கமலஹாசன் ஒரு பேட்டியில் கூறியது எனக்கு ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.*


*தமிழர்கள் காலம் கடந்துதான் தமிழ் மொழியில் கலந்திருக்கும் பிற மொழி சொற்களை அகற்ற போராடினார்கள், அது இன்றளவும் வெற்றி பெறவில்லை என்பதனை ஊரெங்கும் இருக்கும் எழுத்து பலகையும், மக்கள் பேச்சும் தெளிவுபடுத்துகிறது.*


*தமிழ்மொழி அழிகிறது என்பதுதான் உண்மை. அதேபோல் அந்நிய உணவால் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.*


*சுவை எனும் நஞ்சிலிருந்து வெளியேறிப் பசி எனும் இயல்புக்கு மருந்திடும் தமிழர் உணவு வகைகளுக்குத் திரும்ப வேண்டும்.*


*அந்நிய உணவுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.*


*இது நடக்காவிட்டால். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த பத்து வருடங்களில் ஊரெங்கும் புற்றுநோய் மருத்துவமனை பெருகிவிடும்.*


 *இளம் வயதில் மரணம், எடை பருமனான குழந்தைகள், மாரடைப்பு என அனைத்தும் தலைவிரித்தாடும்.*


*இனிய இரவு வணக்கம்*🙏😴

Tuesday, December 13, 2022

பட்டா மாறுதல் மகாத்மியம்..

 


பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்குவது பிடிபடுவது அன்றாடச் செய்தியாக வந்தும் (நிச்சயம் இதுபோல் தைரியமாக புகார் தருவது மாட்டுவது எல்லாம் ஆயிரத்தில் ஒன்றாகத்தான் இருக்கும் என்றாலும்) அரசு இது குறித்து ஏன் கவனம் செலுத்தாது இதைத் தொடரச் செய்கிறது...இதனால் அரசு அதிகாரிகளுத்தான் லாபம்...அரசுக்கு கெட்ட பெயர் எனத் தெரிந்தும் ஏன் இதைத் தடுக்க ஆவன செய்யக் கூடாது...குறைந்த பட்சம் முதல் முயற்சியாக பட்டா மாறுதலுக்கு நான் யாருக்கும் லஞ்சம் தரவில்லை என்கிற சான்றிதழை பட்டா மாறுதல் கோருபவரிடம் பெற்று இணைக்க வேண்டும் எனத் துவக்கினால் என்ன...லஞ்சம் கேட்கிறவர் கொஞ்சம் சங்கடப்படவாவது வாய்ப்பிருக்குமே..இது குறித்து தொடர்பவர்கள் தங்கள் கருத்தைப்  பதிவு செய்யலாமே..அதைப்போல லஞ்சம் கேட்கிற பெருமக்களுக்களும் தங்கள் நியாயத்தை அநாமதேயமாகக் கூடப் பதிவு செய்யலாமே...

Monday, December 12, 2022

எண்ணமே வாழ்வு..

 மனவெளிச் சாலைகளில்

கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பதும் எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகளை நொறுக்கி
சிகரம் தொட்டு  மகிழ்வோம்

Saturday, December 10, 2022

இன்றும் புதிதாய்ப் பிறந்தோனை...

 "நல்லதோர் வீணையாய் "

 அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து
புது விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "
அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி
 நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை "
என்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை
 விடுவித்துக் கவிதையை
அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே "
 கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு
அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"
 சோராதிருந்தான்
அதனால்தானே காலத்தை வென்றவனாய்
காவிய மானவனாய்
"இன்று புதிதாய் பிறந்தவனை" ப் போல்
என்றென்றும்  எப்போதும்
பரிமளிக்கவும் முடிகிறது

Happy health day

 *Happy Health Day to all*

🄷🄰🄿🄿🅈 🄸🄽🅃🄴🅁🄽🄰🅃🄸🄾🄽🄰🄻 

🄷🄴🄰🄻🅃🄷   🄳🄰🅈

Important things to keep in mind:

  1. BP: 120/80

  2. Pulse: 70 - 100

  3. Temperature: 36.8 - 37

  4. Breath: 12-16

  5. Hemoglobin: Male -13.50-18

Female - 11.50 - 16

  6. Cholesterol: 130 - 200

  7. Potassium: 3.50 - 5

  8. Sodium: 135 - 145

  9. Triglycerides: 220

  10. Amount of blood in the body: PCV 30-40%

  11. Sugar level: For children (70-130) adults: 70 - 115

  12. Iron: 8-15 mg

  13. White blood cells WBC: 4000 - 11000

  14. Platelets: 1,50,000 - 4,00,000

15. Red blood cells RBC: 4.50 - 6 million.

  16. Calcium: 8.6 -10.3 mg/dL

  17. Vitamin D3: 20 - 50 ng/ml.

18. Vitamin B12: 200 - 900 pg/ml.

*Special tips for seniors are 40/50/60 years:*

*1- The first suggestion:* drink water all the time even if you are not thirsty or needy, the biggest health problems and most of them are due to lack of water in the body.  At least 2 liters per day.

*2- Second instruction:* do as much work as possible from the body, there should be movement of the body, such as walking, swimming, or any kind of sport.

*3-3rd tip:* Eat less... Let go of the craving to eat too much... Because it never brings good.  Do not deprive yourself, but reduce the quantity.  Use more of protein, carbohydrate-rich foods.

  *4- Fourth instruction:* do not use the vehicle unless it is absolutely necessary.  If you're going anywhere to pick up groceries, meet someone, or do some work, try to walk on your feet.  Climb the stairs instead of using elevators, escalators.

  *5- 5th Instruction* Quit anger, stop worrying, try to ignore things.  Don't indulge yourself in troublesome situations, they spoil all health and take away the glory of the soul.  Talk to positive people and listen to them.

*6- Sixth Instruction* First of all, give up the attachment to money

Connect with the people around you, laugh and talk! Money is made for survival, not life for money.

*7-7th Note* Don't feel sorry for yourself, or about anything you couldn't achieve, or something you couldn't resort to.

  Ignore it and forget it.

*8- Eighth Notice* Money, position, prestige, power, beauty, caste and influence;

All these things increase the ego.  Humility brings people closer with love.

*9- Ninth Tip* If your hair is white, it does not mean the end of life.  This is the beginning of a good life.  Be optimistic, live with memory, travel, enjoy.  Create memories!

*10- 10th Instructions* Meet your little ones with love, empathy, and affection!  Don't say anything sarcastic!  Put a smile on your face!

No matter how big a position you have held in the past, forget it in the present and mingle with it all!


*Happy healthy Day*

Monday, December 5, 2022

நுகர்ச்சி...

 


*உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  என்னவென்று நினைக்கிறீர்கள்* ? 


மக்கள் தொகைப் பெருக்கம்? 


இல்லை.


over-population அன்று, 


*இன்று over-consumption* தான் என்கிறார்கள். 


அதாவது ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம். 


ஆனால் 100 பேர் இருக்கும் தேசம் பேராசையுடன் பத்தாயிரம் பேர்களுக்கான resource களை படுவேகமாக நுகர்ந்து கொண்டிருக்கலாம். 


இப்போது இந்த இரு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மக்கள்தொகை கொண்டவை என்று சொல்லிவிட முடியும்.


 *population is not exactly the issue. consumption is* ! 


அமெரிக்கர் ஒருவர் இந்தியர் ஒருவரை விட சராசரியாக 32 மடங்கு அதிகம் consume செய்வதாகச் சொல்கிறார்கள்.


 *அதாவது, 32 பேருக்கான சாப்பாட்டை ஒருவரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்*.


*இந்த over consumption நம்மிடமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது* . 


சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக, வெவ்வேறு சைஸுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். 


இதை எல்லாம் கூட வாங்குவார்களா என்று யோசிப்போம். 

வாங்குவதால் தானே வைக்கிறார்கள்?


 பிரியாணி மசாலா ஓகே, தக்காளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதத்துக்குக் கூட மசாலா வந்திருக்கிறது. 

ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.


 ' *பூஜா kit' விலை 180 ரூபாய்*! 


உள்ளே ஒரு காட்டன் துணி, இரண்டு விளக்குத் திரி பாக்கெட், ஊதுபத்தி, கொஞ்சம் கற்பூரம், குட்டியூண்டு பாட்டிலில் பன்னீர், அவ்வளவு தான்

180 ரூபாய்!


*தேவையற்ற பொருட்களை, தயாரிப்புகளை வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம்*! 


*ஆணிகளை முதலில் விற்று விட்டுப் பிறகு சுத்தியலுக்கான தேவையை உருவாக்கும் வியாபார  யுக்தி* !


 தேவையே இல்லாவிட்டாலும் ஒருவித ' *fake demand*' ஐ உருவாக்குவதிலும் *கார்ப்பரேட்கள் வல்லவர்கள்*. 


சமீபத்திய உதாரணம் *vegetable wash* ! 


250-300 ரூபாய்க்கு விற்கிறார்கள். 

இதை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டு இருப்போமோ! 


பெரும்பாலும் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிவந்து   அப்படியே தான் பிரிட்ஜில் வைத்துக்கொண்டு இருந்தோம். 


எல்லா product களிலும் சகட்டு மேனிக்கு *kills 99.9% germs* என்று போட்டு விடுகிறார்கள்.


 'கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கிறது' என்று போடுகிறார்கள். 


எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்கள் போன்ற விவரங்கள் இல்லை. 


' *கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டி கடவுளை வழிபடுவதற்கு எங்கள் ஊதுபத்தி சிறந்தது* ' என்று கூடிய சீக்கிரம் விளம்பரங்கள் வந்து விடும்!


*இந்த consumption எப்போதும் exponential ஆக இருக்கிறது*


அதாவது நாம் நம் தாத்தாவை விட *8* மடங்கு அதிகம் நுகர்ந்தோம் என்றால் நம் பேரன் நம்மை விட *64* மடங்கு அதிகம் நுகர்வான். 


நம் தாத்தாவுக்கு இருந்தது ஒரே ஒரு *option lifebuoy* சோப் என்றால் நம் பேரன் முன்பு 64 சோப்புகள் கடை விரிக்கப்படும். 


எல்லா சோப்புகளும் *more or less* ஒன்றுதான் என்ற அறிவு நம்மிடம் இருப்பதில்லை. 


64 வகை சோப்புகள், சூப்பர் மார்க்கெட்டில் கால்வாசி இடத்தை அடைத்துக்கொண்டு! 


' *selection time rule*' என்ன சொல்கிறது தெரியுமா? 


இரண்டு பொருட்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க நமக்கு 10 நிமிடங்கள் ஆகிறது என்றால் மூன்று பொருட்களில் இருந்து தேர்ந்தெடுக்க நமக்கு 100 நிமிடங்கள் ஆகுமாம். 


நான்கு பொருட்கள் என்றால் ஆயிரம் நிமிடங்கள்!


நம்முடைய நேரத்தையும் சத்தமில்லாமல் திருடி விடுகின்றன இந்த ஹைப்பர் மார்க்கெட்டுகள்.


இது நல்லது தானே? நிறைய தயாரிப்புகள் என்றால் நிறைய வேலைவாய்ப்பு என்று நினைத்தால் தப்பு. 


அந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு எப்படி சந்தைக்கு வருகிறது என்ற விவரம் நம்மிடம் இல்லை. 

முழுக்க முழுக்க *automated process* சில் வந்திருக்கலாம். 

எந்த ஒரு தயாரிப்பும் அப்படியே வானத்தில் இருந்து குதித்து விடுவதில்லை. 


அது பஞ்சபூதங்களையும் கணிசமான அளவு பதம் பார்க்கிறது. அதற்கான தயாரிப்பில் எத்தனை தண்ணீர் உறிஞ்சப்பட்டது, எத்தனை ஏக்கர் மண் மலடானது, எத்தனை டன் காற்று மாசுபட்டது, அந்தத்தயாரிப்பு எத்தனை *carbon footprint* ஐ பூமியின் வளிமண்டலத்தில் வெளிவிட்டது என்றெல்லாம் நமக்கு தெளிவாகத் தெரிவதில்லை. 


மேலும் அந்தத் தயாரிப்பின் பின்புலத்தில் நசுக்கப்பட்டவர்கள் யார், மிரட்டப்பட்டவர்கள் யார், அதன் பின்புலத்தில் இயங்கும் *socio, economic, political forces* கள் எதுவும் நமக்கு விளங்குவதில்லை.


' *கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்ற வாசகம் இப்போது எடுபடாது*.


 *எங்கே கடைவிரித்தாலும் எங்கிருந்தோ 'கொள்வார்' கள் வந்து விடுகிறார்கள்*. 


*home-made* என்று போட்டுவிடு, *organic* என்று எழுது, *100% hygienic* என்று எழுது, *good for liver* என்று போடு, 

ஏதோ ஒரு வைட்டமின் இருக்கிறது என்று அளந்து விடு, கவரில் பற்கள் தெரியச் சிரிக்கும் ஒரு *happy family* யின் படத்தைப் போட்டுவிட்டு, அவ்வளவு தான், *shit sells*!!


ஓகே. இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் தானே என்றால் *பொருட்களை மட்டும் அல்ல, சேவைகளையும் நாம் over consume செய்கிறோம்* என்று தோன்றுகிறது. 


*தினமும் 3 GB டேட்டா இலவசம்*. 

வேறு என்ன செய்ய? 

வீடியோக்கள் scroll செய்யச் செய்ய மேலெழும்பி வந்து கொண்டே இருக்கின்றன. 

இரவு முழுவதும் பார்க்கலாம். காலையில் நம் *cognitive data base* அப்படியே தான் இருக்கும். 

எதையும் புதிதாக கற்றுக்கொண்டு இருக்க மாட்டோம். எதுவும் நம்மை மாற்றி இருக்காது. 


' *Stop making stupid people famous* ' என்று சொல்வார்கள். 


அரைவேக்காடுகளை, கத்துக்குட்டிகளை நாம் தான் பிரபலம் ஆக்குகிறோம். 


*மில்லியன் subscribers, லட்சக்கணக்கில் followers* ! 


*வாங்குவோர் இல்லையென்றால் விற்பனை செய்வோர் இல்லை. பார்ப்போர் இல்லை என்றால் பிரபலங்கள் இல்லை*. 


data என்றில்லை, மின்சாரம், தண்ணீர்,எரிபொருள் எல்லாமே over consumption தான்.


 *Buffet*- வில் இலவசமாகக் கிடைக்கிறது என்று எல்லா அயிட்டங்களிலும் ஒன்றை எடுத்து உள்ளே தள்ளுகிறோம். 


*விளைவு* : வயிற்று வலி, இரண்டு நாள் வயிற்று உப்புசம், உபாதை! 


இலவச மருத்துவம் என்பதற்காக நோயை வலிய வரவழைத்துக் கொள்ளவும் செய்வோம் நாம்!


மூன்றாவதாக நாம் வாழ்க்கையையும் over consume செய்கிறோம்.


 ' *நாளை என்பது நிச்சயம் இல்லை, இன்றே அனுபவித்து விடு* ' என்பதெல்லாம் சரி தான்.


 ஆனால் வாழ்க்கையில் நம் அனுபவங்களை, சுகங்களை, சந்தோஷங்களை சரி சமமாக distribute செய்கிறோமா?


 40 வயதுக்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்து விட்டு *போதும்டா சாமி என்று exhaust* ஆகி விடுகிறோம்.


 8 வயது சிறுவன் 28 வயது இளைஞன் போலப்பேசுகிறான் 


'மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச' என்று ஆறு வயது குழந்தை ஒன்று பாடுகிறது.


 ' *expression பத்தலை* ' என்று ஜட்ஜுகள் (?!) தீர்ப்பு சொல்கிறார்கள்* .


நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம். 


நீரை, மின்சாரத்தை, கனிம வளங்களை, பெட்ரோலை நம் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டு வைப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை. 


அளவுக்கு மிஞ்சினால்.????

அமிர்தமும் நஞ்சன்றோ...???


சரி... இதற்கான தீர்வு தான் என்ன,..???,


*மிகவும் எளிது*....!!!!

*விருப்பத்திற்காக நுகராதீர்கள்*. *தேவையிருந்தால் மட்டும் நுகருங்கள்*,


அப்படியென்றால், என் ஆசைகள் விருப்பங்கள் என்னாவது,,.???


உங்கள் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டதா என்று பாருங்கள், அதற்கு முன்னுரிமை தாருங்கள்,

அதன் பின் நீங்கள் விரும்புவதை நுகருங்கள், *அந்த நுகர்வும் உடல் ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் உங்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டியது அவசியம்*. 


*நீங்கள் விரும்பும், உங்களுக்கு அத்தியாவசிய தேவை இல்லாத எதையும் கடன் வாங்கி நுகராதீர்கள்*. 🔍🔍🔍🔍🔍🔍🔍🔍🔍🔍🤷‍♂️ 


( *Excellent analysis of today's lifestyles and it's impact & Dangerous of Over Consumption* )


WA

Sunday, December 4, 2022

நினைந்து..நினைந்து.

  


மகம் ஜெகம் ஆளும் எனும் ஆன்றோர் வாக்கினுக்கு நிரூபணமாய்  விளங்கிடும் அற்புதமே..அதிசயமே..அன்னையே..


படுத்துக் கொண்டே
ஜெயிப்பது என்கிற சொற்றோடர்
ஒரு வறட்டுவாக்கியமாய் இருந்ததை
நிஜமாக்கிக் காட்டிய
தமிழகத்து ஜான்ஸியே

நீ கொண்ட உச்சங்கள் எதுவும்
தங்கத் தட்டில் வைத்து
உனக்குப்
பரிசாகக் கொடுக்கப்பட்டதில்லை

பெண்ணாக இந்த உச்சம்தொட
நீ பட்டத் துயரங்கள்
இவ்வுலகில் எப்பெண்ணும்
இதுவரைப் பட்டதில்லை

உன் மீது இருந்த துரும்பினை
தூண் என்றார்கள்
உன் மீது விழுந்த அணுகுண்டை
மலர்ச் செண்டு என்றார்கள்

இரண்டடையும்
துச்சமென மதித்துக்
கடந்து சென்ற
தங்கத் தலைவியே

புராண நிகழ்வுகளின் எச்சமாய்
ஒரு சட்டசபை
கௌரவர் சபையாய்
தன் கொடூர முகம்காட்டி
கொக்கரித்தபோது
சினந்து புலியாய் நீ
சீறிவந்தக் காட்சி....

சனாதன ஆசாமிகள்
பிற்படுத்தப்பட்டவன் என்பதாலேயே
திறமையானவனை
ஒதுக்கிவைத்ததைப் போலவே

போலிப் பகுத்தறிவு ஆசாமிகள்
முற்படுத்தப்பட்டவள் என்பதாலேயே உன்னை
ஒதுக்க முயன்றபோது
நெருப்பில் பூத்த மலராய் நீ
வென்று நின்ற காட்சி...

காலப்பெட்டக்கத்தில்
ஜொலிக்கின்ற வைரங்கள்
வைடூரியங்கள்
சரித்திரப்புத்தகங்களில்
தங்க முத்திரைக் கொண்டு
தகதகக்கும் பக்கங்கள்

விழிமூடுகையில்
மனம் கொள்ளும் வைராக்கியங்கள்
உடலோடு போவதில்லை
ஆன்மாவோடு தொடர்ந்து
அடுத்த ஜென்மமெடுக்கும் என்பதை
நாங்கள் சொல்லி நீ
அறிய வேண்டிய நிலையிலில்லை

கோடிக் கோடியாய்
மதம் கடந்து இனம்கடந்து
மக்கள் செய்யும் பிரார்த்தனைகள்
நிச்சயம் வீணானதில்லை

அதனை மறுக்கும் அதிகாரம்
நியதிப்படி இயங்கும் இறைவனுக்கும்
இல்லையென்பதை
இயற்கையும் மறுப்பதில்லை

பதினேழாம் நூற்றாண்டில்
ராணி மங்கம்மாவாக

பதினெட்டாம் நூற்றாண்டில்
வேலு நாச்சியாராக

பத்தொன்பதாம் நூற்றாண்டில்
தில்லையாடி மணியம்மையாக

அவதரித்த நீயே

இந்த நூற்றாண்டில்
புரட்சித் தலைவியாய்
அவதரித்திருக்கிறாய் என்பதில்
எங்களுக்கு எள்ளளவும்
சந்தேகமில்லை

தமிழக அடித்தட்டு மக்களின்
வாழ்வை உன்னதமாக்குவதிலேயே
உண்மைமகிழ்ச்சிக் கொண்ட
அன்னையே

உன் வாழ்வை அர்ப்பணித்த
அம்மாவே

உன்னால் நிச்சயம்
சொர்க்கத்தில் வீணே ஓய்வெடுக்க இயலாது

மறுபிறப்பெடுத்து
தமிழகத்திலேயே
நிச்சயம் அவதரிப்பாய்
என்பதிலும் எங்களுக்கு
எள்ளளவும் சந்தேகமில்லை

அதுவரை
எங்கள் தலைமுறை
உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்

பிறவிப்பெருங்கடனை
உன்னதமாய் முடித்த
எங்கள் அன்புச் சகோதரியே

மனம் நிறைந்த சோகத்துடனும்
நீர் நிறைந்த கண்களுடனும்
உனக்குப் பிரியா விடை தருகிறோம்

சென்று வா எங்கள்
அன்புச் சகோதரி(மறைந்த நாாளில் எழுதியது )

டிசம்பர் 3

 


நினைவிருக்கிறதா..

1984-டிசம்பர் 3-ம் தேதி...??


போபால் ரயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் குலாம் தஸ்தகிர் (Ghulam Dastagir). என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். 


எப்படியாவது லக்னோ டு

மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில்

ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது.  அதில் இருந்து இறங்கிய

பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள்.


கொஞ்ச நேரத்தில் போபால் ரயில்

நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக்

கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை

ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கினார்.


அதையும் மீறி வரும் ரயில்கள் ஜன்னலை மூடிக் கொண்டு போபால் ஸ்டேஷனில் நிற்காமல் வேகமாகப் போய் விடுமாறு அறிவுறுத்தினார். மூக்கிலும் வாயிலும் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, இரவு முழுவதும்

விழித்திருந்து வேலை பார்த்தார். அந்த இரவு விடிந்தது. 


அடுத்த நாள் சிக்னல் அறையைத்

திறந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் துருவே வாயில் ரத்தம் வழிந்த நிலையில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையால் பிடித்தபடி இறந்து கிடந்தார்.

துருவே மட்டும் இல்லை எனில், போபால் விஷ வாயுக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்கள் கூடியிருக்கும்.


’துருவே’ போன்ற தேச வீரர்களின் தியாகம் ஏனோ அங்கீகரிக்கப் படுவதும் இல்லை. மக்களுக்கு ஞாபகம் இருப்பதும்

இல்லை. மதத்தின் பாகுபாட்டால் ஓர் மகத்தான மனிதரின் தியாகம் மறக்கடிக்க செய்யப்படுகிறது, அதை நாமாவது நினைவூட்டுவதோடு அவரின் தியாகத்தையும் போற்றுவோம். குறைந்த பட்சம் படித்ததை பகிரவாவது செய்வோம்.

Wednesday, November 23, 2022

தெரிந்து கொள்வோம்..


 நம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏழைகள் பயன்படுத்திக் கொள்ளும்படியான ஒரு திருமணத்திட்டம் இதுபோல் ஒன்று உள்ளது...நாம் அறிந்த ஏழைகளுக்காக இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வோம் பகிர்வதன் மூலம் தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளச் செய்வோம்....

Monday, November 21, 2022

ஆவணங்கள் தொலைந்தால்...

 *12 வகை முக்கிய ஆவணங்கள் தொலைந்தால்...*

*எப்படி திரும்பப் பெறுவது...?* 


எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.


*1.  #இன்ஷூரன்ஸ்__பாலிசி தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல். 


எவ்வளவு கட்டணம்...? 


ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும் இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். 


நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும் அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும். 


*2. #கல்வி_மதிப்பெண்_பட்டியல் தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி. 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது. 


எவ்வளவு கட்டணம்...? 


உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. 


கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள். நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். 


அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். 


தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும். 


*3. #ரேஷன்_கார்டு தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள 

அட்டை. 


எவ்வளவு கட்டணம்...? 


புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும். 


கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும். 


நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். 


*4. #டிரைவிங்__லைசென்ஸ் தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


மாவட்டப் போக்குவரத்து அதிகாரி. 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண். 


எவ்வளவு கட்டணம்...? 


கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்). 


கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம். 


நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம். 


*5. #பான்கார்டு தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை. 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்? அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய். 


கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள். 


நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 


*6. #பங்குச்சந்தை_ஆவணம் தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். 


எவ்வளவு கட்டணம்...? 


தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். 


கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள். 


நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். 


இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும் பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும். 


*7. #கிரயப்பத்திரம் தொலைந்ததால் யாரை அணுகுவது...?* 


பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். 


இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய். 


கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும். 


நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும். 


*8. #டெபிட்கார்டு தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


கணக்குத் தொடர்பான விவரங்கள். 


எவ்வளவு கட்டணம்...? 


ரூ.100. கால 


வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள். 


நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும். 


*9. #மனைப்பட்டா தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


வட்டாட்சியர். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்..? 


*நகல் பட்டா கோரும் விண்ணப்பம். எவ்வளவு கட்டணம்...?* 


ரூ.20. 


கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும். நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும். 


*10. #பாஸ்போர்ட் தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம். 


எவ்வளவு கட்டணம்...? 


ரூ.4,000. கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும். 


நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 


20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். 


இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள். 


*11. #கிரெடிட்கார்டு தொலைந்தால் கிரெடிட் கார்டு யாரை அணுகுவது...?* 


நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள். 


எவ்வளவு கட்டணம்...? 


ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்). கால வரையறை: 15 வேலை நாட்கள். 


நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். 


தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும். 


*12. #ஆதார்_அட்டை தொலைந்து போனால்...?* 


உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள் அதன் பிரதியை பெற்றுக்கொள்வதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்ய எளிமையான வழிகள் உள்ளது. 


இருப்பினும் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 


அதற்கு காரணம் அதில் உள்ள உங்கள் தகவல்களை கொண்டு உங்கள் நிதி சார்ந்த தரவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். 


உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் நினைவிருந்தால் மற்றும் / அல்லது பதிந்த போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை ஒப்புகை சீட்டு உங்களிடம் இருந்தால், ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையின் பிரதியை எடுத்துக் கொள்ளலாம். 


தொலைந்த ஆதார் அட்டை அல்லது அதன் பிரதியை ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிக்க கீழ்கூறிய வழிமுறைகளை பின்பற்றவும்....


ஈ-ஆதார் ஆன்லைன் முகவாயிலுக்கு செல்லவும். ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள பதிவீடு விவரங்களை (பதிவு எண் மற்றும் தேதி நேரம், குடியிருப்பவரின் பெயர், மற்றும் பின்கோட்) நிரப்ப வேண்டும். 


மாறாக, உங்களுக்கு உங்கள் ஆதார் அட்டை எண் தெரிந்திருந்தால், மேலே உள்ள "I have" தேர்வில் உள்ள "Aadhaar" என்ற ரேடியோ பட்டனை அழுத்தவும். நீங்கள் பதிந்துள்ள கைப்பேசி எண்ணில் ஓ.டி.பி. (ஒன் டைம் பின்) கடவுச்சொல் ஒன்றை குறுந்தகவல் மூலம் பெறுவீர்கள். 


கடவுச்சொல்லை உள்ளீடு செய்தவுடன் ஆதார் அட்டையின் பிரதியை தரவிறக்கம் செய்யும் தேர்வை நீங்கள் காணலாம். இந்த கோப்பு பி.டி.ஃஎப். வடிவத்தில் இருக்கும். மேலும் பாதுகாப்பிற்காக அது கடவுச்சொல் மூலமாக பாதுகாக்கப்பட்டிருக்கும். 


கடவுச்சொல் தெரியவில்லையே என பயப்பட வேண்டாம் உங்கள் பின் கோடே உங்கள் கடவுச்சொல்லாகும். அசலை போலவே அச்சிடப்பட்ட பிரதியும் அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும்.

Tuesday, November 15, 2022

எம் படைப்புகள்...

 எம் படைப்புகள் எல்லாம்...


ஆற்று நீரை எதிர்த்துப்போகும் எனும்
அதீத  எண்ணம் ஏதும் எங்களில்
நிச்சயம் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
எரியாது சிரிக்கும் என்கிற
நினைப்பும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச் செய்யவோ
அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ
 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லை

சராசரித்  தேவைகளை அடையவே
அன்றாடம்  திணறும் கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
நாங்கள் படும் அவதிகளை
எமக்குத் தெரிந்த பாமர மொழியில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை
மனம் கீறிப்போகும்
சின்னஞ் சிறு அல்லல்களை
அதிக மசாலாக் கலக்காது
பகிர்ந்துண்டு மனப் பசியாறுகிறோம்

எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
விஞ்ஞானம்  ஈன்றெடுத்த
புதிய  இனிய இனமே
எங்கள் கைகளில்தான் இருக்குது
புதியதோர் உலகு செய்யும்
அதீத அசுர  பலமே

Sunday, November 13, 2022

ரோஜாவின் ராஜா...

 நேரு மாமா பிறக்கும் முன்பும்

ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை 
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

Saturday, November 12, 2022

காந்தி கிராமம் அறிவோம்..அப்படியே ...

 'காந்திகிராமம்' துவங்கிய புரட்சிப்பெண்

டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரன்!அவர்களையும்...


1904, ஆகஸ்ட் 18 அன்று புகழ்பெற்ற டிவிஎஸ் குழுமத்தின் டி.வி.சுந்தரம் ஐயங்காருக்கு மகளாக நெல்லையில் பிறந்தார் சௌந்தரம். 


சுட்டிப் பெண்ணாக சுற்றித்திரிந்த தன் மகளுக்கு, தனக்கு மிகவும் விருப்பமான உறவுக்காரர் டாக்டர் சௌந்தரராஜனை 1918-ஆம் ஆண்டு, மணம் முடித்து வைத்தார் சுந்தரம்.  மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்தார் சௌந்தரராஜன். 


அந்தக் காலத்தில் பிளேக் நோய் தாக்கி மக்கள் பலரும் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். தன் உயிரை துச்சமென மதித்து அவர்களுக்கு சிகிச்சை தந்தார் சௌந்தரராஜன்.அதே பிளேக் நோய் அவரையும் தாக்கியது; மரணப் படுக்கையில் விழுந்தார். 


செய்வதறியாது திகைத்த தன் மனைவி 14 வயது  சௌந்தரத்தை அழைத்தார் சௌந்தரராஜன். "தொடர்ந்து நீ படிக்க வேண்டும். எக்காரணம் முன்னிட்டும் கல்வி கற்பதை நிறுத்தி விடாதே. குறிப்பாக மருத்துவப் படிப்பை படித்து முடித்து மக்கள் சேவையில்  ஈடுபட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். "எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், நீ என்னையே நினைத்துக் கொண்டிராதே. என்னை மறந்துவிட்டு, வேறொரு திருமணம் கண்டிப்பாகச் செய்துகொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தவர், 1925-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.


வேறு எந்தக் குடும்பத்தில் இதுபோன்ற மரணம் நிகழ்ந்திருந்தாலும், சிறுமிக்கு அதுதான் வாழ்க்கையின் எல்லையாக இருந்திருக்கும். சுந்தரம் ஐயங்கார் குடும்பமோ, புரட்சிகரமான சிந்தனைகள் மற்றும் காந்திய சிந்தனைகளுக்கு உதாரணமாக அன்றே சுட்டிக்காட்டப்பட்ட குடும்பம். 


கணவரை மிக இளம் வயதிலேயே பறி கொடுத்த சௌந்தரம், கல்வியைத் தொடர வசதியும் வாய்ப்பும் அமைத்துத் தந்தது குடும்பம். பள்ளிப் படிப்பு முடித்து, இறந்துபோன கணவரின் ஆசைப்படி டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் அடியெடுத்துவைத்தார் சௌந்தரம். 


இங்குதான் விடுதலைப் போராட்ட வீரரும் காந்தியடிகளின் மருத்துவருமான சுசீலா நய்யரின் அறிமுகம் சௌந்தரத்துக்குக் கிடைத்தது. காந்தியை சுசீலாவுடன் சென்று சந்தித்தார் சௌந்தரம். அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சந்திப்பு அது!


காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, உடனடியாக விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க எண்ணிய சௌந்தரத்தைத் தடுத்து நிறுத்தினார் காந்தி." முதலில் மருத்துவப் படிப்பைப் படித்து முடி.பிறகு

இங்கு வா"என்று கூறினார்.


லேடி ஹார்டிங் கல்லூரியின் தங்கப் பதக்கத்தை வென்ற சௌந்தரம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மகளிர் நோய் மற்றும் மகப்பேறியல் பட்டமும் பெற்றார். 1936-ஆம் ஆண்டு, தன் 32-ஆவது வயதில் மருத்துவப் படிப்பை முடித்தார். 


அடுத்து அவர் சென்ற இடம் காந்தியின் சேவா கிராம் ஆசிரமம். தமிழகத்தின் செல்வமும் செல்வாக்கும் பெற்ற குடும்பத்தில் பிறந்த சௌந்தரம், காதி உடுத்தவும் நூல் நூற்கவும் இங்கு கற்றுக்கொண்டார்; வெறும் தரையில் படுத்து உறங்கினார்; கழிவறைகளைச் சுத்தம் செய்தார்; கிராம வாழ்க்கை முறைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டார்.


இங்குதான், கேரள மாநிலத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரான  ஜி.ராமச்சந்திரனை சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். 


ராமச்சந்திரன் 35 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொள்வதாகக் காந்தியிடம் ஏற்கெனவே பிரமாணப் பத்திரம் எழுதி கையெழுத்திட்டுத் தந்திருந்தார். எனவே காதல் ஜோடி மணமகனுக்கு 35 வயதாகும் வரை காத்திருந்தது. 


ஒருவழியாக திருமணம் செய்து கொள்ளும் தங்கள் எண்ணத்தை காந்தியிடம் சொன்னார்கள். காந்தியும் ராஜாஜியும் சுந்தரம் ஐயங்காரிடம் மகளின் மறுமணத்துக்கு அனுமதி கோரினர். சுந்தரம் ஐயங்கார் திட்டவட்டமாக முடியாது என்று இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 


`ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடாது, கடிதப் போக்குவரத்து கூடாது’ எனக் கடும் விதிகளை விதித்து, ஓர் ஆண்டு முடிந்ததும் அதே காதல் இருந்தால் உங்கள் திருமணத்தை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நடத்தி வைக்கிறேன் என்று சொல்லி ஓராண்டு கழித்து தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லி அனுப்பினார் காந்தி.


ஓர் ஆண்டு அவ்வாறு இருவரும் சந்திக்காமல் இருந்தார்கள். பின்னர் காதலர் இருவரும் வந்து சந்திக்க, அவர்கள் மன உறுதியைப் புரிந்துகொண்டார் காந்தி. 1940 நவம்பர் 2 அன்று, ராஜேந்திர பிரசாத் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் தம்பதிக்கு சேவாகிராமில் உள்ள காந்தி ஆசிரமத்தில் எளிமையாக திருமணம் செய்துவைத்தார் காந்தி. 


மனைவி கஸ்தூரிபா காந்தி நூற்ற கதர் சேலையை சௌந்தரத்துக்குப் பரிசளிக்க, அதையே உடுத்திக்கொண்டு திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். விதவை மறுமணம், வெவ்வேறு சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு மொழிப் பின்புலம் கொண்டவர்கள்; வேறு மாகாணத்தவர்கள்; பெற்றோர் சம்மதமின்றி திருமணம் என்பதால், இந்தத் திருமணம் அன்றைய காலகட்டத்தில் பெரும் புரட்சியாகப் பார்க்கப்பட்டது.


1942 தொடங்கி சௌந்தரம் நேரடியாக சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் கேரளப் பகுதியெங்கும் சுற்றுப் பயணம் செய்து நாட்டு விடுதலைக்குப் போராடினார். தேச விடுதலைக்காக சிறை சென்ற தியாகிகளின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தார். இவரது நடவடிக்கையைக் காரணம் காட்டி திருவிதாங்கூர் சமஸ்தானம் இவரை சமஸ்தானத்தை விட்டு வெளியேற்றியது.

ஆங்கிலேய அரசால் தடைசெய்யப்பட்ட சாவர்க்கர் ஆங்கிலத்தில் எழுதிய

'எரிமலை' என்ற நூலை இவர் மொழி பெயர்க்க அது காரைக்காலில் அச்சாகி

எங்கும் ரகசியமாக வினியோகமாகி சுதந்திரக் கனலை எங்கும் பரப்பியது.


1943-இல் டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரோடு சேர்ந்து பல சமூகப் பணிகளை மேற்கொண்டார். அன்னை கிராமிய மருத்துவப் பணி என்ற பெயரில் இவர் பல கிளைகளை அமைத்து மக்களுக்கு இலவச மருத்துவ உதவிகளை மேற்கொண்டார். 


காந்தியின் வழிகாட்டலில், காந்தி தொடங்கிய கஸ்தூரிபா டிரஸ்ட்டின் தென்னிந்திய நிர்வாகிகளாகப் பணியாற்றினர் தம்பதியினர். சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் சௌந்தரம் கையில் கஸ்தூரிபாவின் ஓவியத்தைத் தந்து, டிரஸ்ட்டின் தென்னிந்திய நிர்வாகியாக அவரை அறிவித்தார் காந்தி. 


எந்த வசதி வாய்ப்பும் இல்லாத பின்தங்கிய கிராமங்களில் தற்சார்புகொண்ட காந்தி கிராமங்களை இந்தியா முழுவதும் தொடங்க வேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்க எண்ணிய சௌந்தரமும் ராமச்சந்திரனும், திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி கிராமத்தை ஒட்டி, 1947 அக்டோபர் 7 அன்று ‘காந்திகிராமம்’ ஒன்றை நிறுவினர்.

 இரண்டு ஏக்கர் நிலத்துடன் அன்று ஆரம்பிக்கப்பட்ட காந்தி கிராமம் என்று 350 ஏக்கர் நிலப் பரப்பில் செயல்பட்டு வருகிறது. 


முழுக்க முழுக்க தங்கள் பணிகளைத் தாங்களே செய்ய இங்கு வந்த தன்னார்வலர்கள் பணிக்கப்பட்டனர். காய்கறி விளைவிப்பது முதல், சமைப்பது, துணி நெய்வது, சுத்தம் செய்வது என்று அத்தனையும் தாங்களே செய்தனர். இங்கு அமைக்கப்பட்ட கஸ்தூரிபா இலவச மருத்துவமனை மூலம் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி செய்தார் சௌந்தரம்.


 ‘ஆரோக்கிய சேவகர்’ என்று அழைக்கப்பட்ட தன்னார்வப் பெண்களுக்கு அடிப்படை மருத்துவம் சொல்லித்தரப்பட்டு, அவர்கள் கிராமப்புறப் பெண்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்ய வழிவகை செய்யப்பட்டது. பள்ளிகள் இல்லாத பகுதிகளில் ஆசிரியர்களாகவும், மருத்துவர்கள் இல்லாத பகுதிகளில் செவிலியர் களாகவும், கலவரங்கள் வெடித்த இடங்களில் சமூக நல்லிணக்கத்துக்குப் போராடும் களப் போராளிகளாகவும் இந்த ஆரோக்கிய சேவகர்கள் பணியாற்றினர். 


ஆரம்பப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட காந்திகிராமப் பள்ளி, கல்லூரியாக வளர்ந்து 1976-ஆம் ஆண்டு, காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக பிரமாண்ட வளர்ச்சியை அடைந்தது.


1952 மற்றும் 1957-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆத்தூர் மற்றும் வேடசந்தூர் தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சௌந்தரம். 

பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார்


1962-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சௌந்தரத்தின் நேர்மையும் திறமையும், மக்கள் நேசப் பாங்கும் நேருவை வெகுவாகக் கவர, கல்வித்துறை துணை அமைச்சராக அவரை நியமித்தார் நேரு. தமிழகப் பெண் ஒருவர் மத்திய அரசவையில் துணை அமைச்சர் பதவியில் அமர்ந்தது அதுவே முதன்முறை.


தொடக்கக் கல்வியை நாடு முழுவதும் இலவசமாக்கிய பெருமை, அப்போதைய கல்வி அமைச்சர் மற்றும் சௌந்தரத்தையே சேரும். நாட்டு நலப்பணித் திட்டத்தை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குக் கொண்டுவந்ததும் இவரது முக்கியப் பங்களிப்புதான். அதே ஆண்டு சௌந்தரத்தின் சமூகப் பணியைப் பாராட்டி அவருக்கு பத்மவிபூஷண் பட்டம் வழங்கிக் கௌரவித்தது மத்திய அரசு. இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது மத்திய அரசு.


1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார் சௌந்தரம். அதன்பின் அரசியலில் இருந்து விலகியவர், முழு நேர சமூக நலப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1984 அக்டோபர் 21- தன் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டார் சௌந்தரம். அவரது பெயரை இன்னமும் சொல்லியபடி கம்பீரமாக நிற்கிறது.... காந்திகிராமம்!

Thursday, November 10, 2022

அழகு..

 


பூமிக்கு நீர்நதி அழகு
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு மௌனமே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு வீரமே அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு

முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு

வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு

Monday, November 7, 2022

போதைக்காரனின் புலம்பல் (நிச்சமாய் நானில்லை)

 


மாலை நேரம் ஆனாப் போதும்
மனசு குளிருதே-இந்த
பாழாய்ப் போன உடம்பு மட்டும்
அனலாய் காந்துதே
கால்கள் இரண்டும் கடையைப் பார்த்து
தானாய் நடக்குதே-இந்த
பாழாய்ப் போன போதைப் பழக்கம்
பாடாய்ப் படுத்துதே

வேட்டி துண்டு விலகி கிடக்க
விழுந்து கிடந்ததும்-நடு
ரோட்டில் விழுந்து வாந்தி எடுத்து
நாறிக் கிடந்ததும்
வீடு போகும் வழியை  மறந்து
தெருவில் திரிந்ததும்-நினைவில்
கூடி வந்தும் என்ன செய்ய
உடம்பு கொதிக்குதே

வ்லியைப் போக்க நல்ல மருந்து
என்று சொல்லியே -ஒரு நாள்
வலிய எனக்கு ஓசி தந்து
உசுப்பு ஏத்தியே
குழியில் என்னைத் தள்ளிப் போனான்
சகுனி நண்பனே-இன்று
குழிக்குள் கிடக்கேன் குப்பை போல
நாறி அழுகியே

காசு கொடுத்து யாரும் முதலில்
குடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை
கேடு கெட்ட இந்தப் பழக்கம்
எவர்க்குமே வேண்டாம்-பின்னே
கூறு கெட்டு என்னைப் போல
புலம்பவும் வேண்டாம்
             

Sunday, November 6, 2022

நேர்மறை மகாத்மியம்

 புரியாது என புலம்பித் திரிவதைவிட.     புரிந்து கொள்ள முயன்றால்                கொஞ்சம் புரியத்தான் செய்யும்


கிடைக்காது என சோம்பித் திரிவதைவிட
தேட முயன்றால்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்யும்

முடியாது என முடங்கிக் கிடப்பதைவிட
அடைய முயன்றால்
கொஞ்சம் முடியத்தான் செய்யும்

மாறாது என மறுத்துத் திரிவதை விட
மாற்ற முயன்றால்
கொஞ்சம் மாறத்தான் செய்யும்

கிடையாது என அவநம்பிக்கைகொள்வதை விட
நமபத் துவங்கினால்
கொஞ்சம் உண்டெனத்தான் புரியும்

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருப்பதை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைப்பது
நிச்சயம் பலன் தரத்தான் செய்யும்..

Friday, November 4, 2022

வாழையடி வாழையாய்...

 முட்டாள் தொண்டர்களுக்கு

தலைவான அரைமுட்டாள்..


தொண்டர்கள் தொடர்ந்து

முட்டாளாக இருப்பதுவே

தன் தலைமைக்குப் பாதுகாப்பு

என்பதில் கவனமாகவே இருக்கிறான்..


அதன் காரணாமாகவே

காலங்காலமாய்..


அரைமுட்டாளாக

அவனும்...


முழுமுட்டாள்களாக

அவனைத் தொடரும் தொண்டர்களும்.....


புத்திசாலி தொண்டர்களுக்கு

தலைவனான அதீத புத்திசாலி...


தொண்டர்கள் தொடர்ந்து

தகுதி வளர்ப்பதுவே

தன் தகுதி வளர்க்கத் தூண்டுகோல்

என்பதில் கருத்தாய் இருக்கிறான்


அதன் காரணமாகவே

காலங்காலமாய்....


அதீத புத்திசாலியாய்

அவனும்...


புத்திசாலிகளாய்

அவனைத் தொடரும் தொண்டர்களும்.

Wednesday, November 2, 2022

தொள்ளாயிரமா...ஆயிரமா ?

 முன்பெல்லாம்

யார் பேசுகிறார்கள் என்பதை விட

என்ன பேசுகிறார்கள் என்பதில்

"அவர்கள் " கவனம் இருந்ததால்...


அவர்களும்

கவனமுடன் கவனித்தார்கள்

பேசுவோரும்

கவனமாய்ப் பேசினார்கள்


அதனால் பேச்சிற்கான

எதிர்வினையாற்றலும்

சரியாகவே இருந்தது...


இப்பொதெல்லாம்

என்ன பேசுகிறார்கள் என்பதை விட

யார் பேசுகிறார்கள் என்பதில்தான்

அவர்களின் முழுக்கவனமும் இருப்பதால்..


அவர்களும்

ஒழுங்காகக் கவனிப்பதில்லை

பேசுவோரும்

கவனமாய்ப் பேசுவதில்லை


அதன் காரணமாகவோ என்னவோ

அவர்களுக்கு "அதை " விட

"இதுவே " 

கூடுதல் அசிங்கமாய்ப் படுகிறது...


ஒருவகையில்

பின் இருக்கை மாணவனுக்கு

ஆயிரத்தை விட

தொள்ளாயிரம் பெரிதாய்ப் படுவதைப் போலவே

Monday, October 31, 2022

மீண்டும்...

 சமதளமாய்

காலடியில் கிடக்கிறது
எட்டிவிட்ட சிகரம்

ஒரு அடையாளமாய்
சேர்ந்தே இருக்கிறது
அடைந்துவிட்ட இலக்கும்

சிகரத்தை அடைவது
ஓய்ந்துச் சாய இல்லை

கொஞ்சம் ஓய்வெடுத்து
மீண்டும் துவங்கவே என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்

வெகு கவனமாய்
சிகரத்தில்  கிடைத்த
கிரீடங்களையும் மாலைகளையும்
உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
இறக்கி வைத்து
என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்

ஏனெனில்
ககமான பயணத்தை
சீரழிக்கும் முதல் எதிரி
 கூடுதல் சுமைகளே என்பதில்
எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை

தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி

ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை

இதில்  எனக்கு எவ்வித குழப்பமுமில்லை

மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்

எதிரே சவாலாய்த தெரிகிறது
வானை  முட்டி நிற்கும் 
அந்த நெடிய சிகரம்

Sunday, October 30, 2022

பேச்சு...

பேச வேண்டியவர்கள்

பேசித்தான் ஆகவேண்டும் என்பதை

பேசாது மௌனம் காப்பதுவும்


பேசத்தெரியாதவர்கள்

பேசக்கூடாததை பொதுவெளியில்

அன்றாடம் பேசித் தொலைப்பதுவும்


வாளைத் தூக்கியவன்

வாளாலேதான் அழிவான்

என்கிற முதுமொழிக்கேற்ப


பேச்சால் வளர்ந்தவர்கள்

பேச்சாலேயே  பதவி அடைந்தவர்கள்

பேச்சாலேயே ..........


என்பது இப்போது

எங்கும் பேசுபொருளாயிருக்கிறது


இனியாவது

பேசவேண்டியவர்கள் பேசுவார்களா ?


பேசத் தெரியாதவர்கள்

மௌனம் காப்பார்களா.. ?

Thursday, October 27, 2022

சும்மா ஜாலிக்கு ஒரு டெஸ்ட்..

.  

               

           

 நீங்கள் சுயநலவாதியா? பொது நல வாதியா? இதைப் படியுங்கள் தெரிந்துவிடும்...*


நாம் எல்லோருமே நமக்குப் பிறர் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வண்டி `பஞ்சர்' ஆகி நடுவழியில் அல்லாடிக் கொண்டிருந்தாலும் சரி, முன்பின் பழக்கமில்லாத இடத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாலும் சரி... தேடி வந்து யாராவது நமக்கு உதவாவிட்டால், `என்னடா உலகம் இது' என்று சலித்துக்கொள்கிறோம்.


ஆனால், பிறருக்கு உதவி செய்வதில் நாம் எப்படி என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா!


நீங்கள் சுயநலவாதியா.. இல்லையா? இதோ ஒரு `டெஸ்ட்'...


1. ஆளவரமற்ற சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு நபர், லிப்ட் கேட்டு கட்டை விரல் உயர்த்திக்கொண்டிருக்கிறார். அப்போது...


அ. வண்டியை நிறுத்தி, அவர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்பேன். நான் செல்லும் வழியில் அந்த இடம் இருந்தால் அவரை ஏற்றிச் செல்வேன்.


ஆ. வண்டியின் வேகத்தைக் குறைப்பேன். அவர் நாகரீகமாக, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராகத் தோன்றினால் லிப்ட் கொடுப்பேன். இல்லாவிட்டால் வேகமெடுத்து வண்டியை ஓட்டுவேன்.


இ. `ஓசி கிராக்கி' என்று மனதுக்குள் கடுகடுத்துக் கொண்டு நிற்காமல் சென்றுவிடுவேன்.



2. வண்டியில் செல்லும்போது ஒரு விபத்தைக் கண்டால்...


அ. நின்று, வண்டியை ஓரங்கட்டிவிட்டு, காயம்பட்டவர்களை மீட்டு உதவி செய்வேன்.


ஆ. விபத்தில் சிக்கிய வாகனங்களின் எண்களைக் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு நகர்வேன்.


இ. திரண்டிருக்கும் கூட்டத்தை `ஹாரன்' அடித்து ஒதுங்கவைத்துவிட்டு, போய்க்கொண்டே இருப்பேன்.



3. நாட்டிலோ, உங்கள் மாநிலத்திலோ இயற்கைப் பேரழிவு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?


அ. என் நேரம், பணம், வசதிகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டோருக்கு உதவுவேன்.


ஆ. பிரதமரின் நிவாரண நிதிக்குக் காசோலை அனுப்புவேன். நிவாரணப் பொருட்களைச் சேகரிப்போரிடம் பழைய ஆடைகளைக் கொடுப்பேன்.


இ. அதிகபட்சமாய் எனது ஒருநாள் சம்பளத்தை உதவியாய் அளிப்பேன்.



4. தெருவில் சில இளைஞர்கள் கடுமையான மோதலில் ஈடுபட்டிருப்பதைக் காணும் நீங்கள்...


அ. அவர்களை ஜாக்கிரதையாக நெருங்கி, சமாதானப்படுத்த முயல்வேன்.


ஆ. `கலைந்து போங்கள்... இல்லாவிட்டால் போலீசை கூப்பிடுவேன்' என்று எச்சரிப்பேன்.


இ. `எனக்கென்ன வந்தது?' என்று என் பாட்டுக்குப் போவேன்.



5. நடந்து செல்கையில், காயம்பட்ட ஒரு பிராணியைக் காண்கிறீர்கள். உடனே...


அ. அந்த பிராணியை அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வேன். அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சிப்பேன்.


ஆ. பிராணிகள் நல அமைப்பை தொலைபேசியில் அழைத்து, விவரம் சொல்வேன்.


இ. யாராவது கவனிப்பார்கள். எனக்கு வேலையிருக்கிறது என்று நடையைக் கட்டுவேன்.



6. உங்கள் கண் முன்னே கத்தியால் தாக்கி வழிப்பறிக் கொள்ளை நடக்கிறது. அவ்வேளையில்...


அ. கொள்ளையைத் தடுப்பதற்கு ஓடுவேன். ஆட்களைத் திரட்டி, கொள்ளைக்காரர்களால் காயப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவுவேன்.


ஆ. நைசாக நழுவி, போலீசுக்கு தகவல் கொடுப்பேன். கொள்ளைக்காரர்கள் அகன்றபின்பே, காயம்பட்டவர்களை நெருங்குவேன்.


இ. ஏன் `ரிஸ்க்' எடுக்கணும் என்று அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவேன்.



7. கூட்டத்தில் மின்சார ரெயில் பெட்டியில் ஏற அல்லாடிக் கொண்டிருக்கிறார் ஒரு முதியவர். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?


அ. அவருக்கு உதவுவேன். அதனால் நான் பிடிக்கவேண்டிய ரெயிலை தவற விட்டாலும் கவலைப்படமாட்டேன்.


ஆ. அந்தப் பெட்டியில் ஏறும் யாரையாவது அழைத்து, அந்த முதியவருக்கு உதவும்படி கூறுவேன்.


இ. என் ரெயிலைப் பிடிப்பதற்காக நான் போய்விடுவேன்.



8. உங்கள் பகுதியில் வீடற்ற பிளாட்பாரவாசிகள் சிலர் வசிக்கிறார்கள். நீங்கள்...


அ. வாரம் ஒருமுறை அங்கு சென்று, பிஸ்கட், பழைய துணி, குழந்தைகளுக்குப் பழைய விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து விட்டு வருவேன்.


ஆ. உள்ளூர் தொண்டு நிறுவனத்துக்கு எப்போதாவது ஒரு தொகை கொடுப்பேன். அவர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று நினைப்பேன்.


இ. போலீசாரை அழைத்து, பிளாட்பாரவாசிகளின் ஆக்கிரமிப்பு, தொல்லை குறித்துப் புகார் செய்வேன்.



*உங்களுக்கான முடிவு:*


* உங்கள் பதிலில் அதிகமாக `அ' என்றால்...


நீங்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர் மட்டுமல்ல, பிறருக்கு உதவி செய்வதற்காக ரொம்பவே விரும்புகிறவர். இது உயர்ந்த விஷயம், கட்டாயம் தொடர வேண்டியது என்றபோதும், உங்களுக்குக் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வும் வேண்டும். பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் நீங்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டு விடக் கூடாது. காரணம், உதவும் உள்ளம் கொண்டவர்களை உறிஞ்ச நினைப்பவர்கள் உலவும் உலகம் இது.


* அதிகமாக `ஆ' என்றால்...


பிறருக்கு உதவுவதில் நடைமுறை சார்ந்து யோசிப்பவர் நீங்கள். அடுத்தவருக்கு உதவி செய்வதில் எளிதானதைத்தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள். உங்களின் அதிகபட்ச எச்சரிக்கை உணர்வு, கூடுதலான பேருக்கு நீங்கள் உதவுவதைத் தடுத்து

விடும் என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள்.


* அதிகமாக `இ' என்றால்...


நீங்கள் நகரவாசியாக இருக்கக்கூடும். எந்திர வாழ்க்கையானது பிறரின் வறுமையையும், அவதியையும் கண்டுகொள்ளாத அளவு உங்களை மரத்துப் போகச் செய்துள்ளது. உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் செய்வது சிறிதாயிருந்தாலும், அவர்களுக்கு அது அந்த நேரத்தில் பெரிதா யிருக்கும் என்பதை உணருங்கள். உங்களுக்குக் கீழே உள்ளவர்களுக்கு உதவுவது, உங்களை நல்ல நிலையில் வைத்திருக்கும் கடவுளுக்கு நீங்கள் செலுத்தும் நன்றி என்று நினையுங்கள். உதவும் உள்ளமே உயர்ந்த உள்ளம்.

Saturday, October 22, 2022

அன்பிற்கும் வேண்டும் அளவு..

 *ஒரு அனுபவம் மிக்க தோட்டக்காரர் அவருடைய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பறவையின் சிறிய கூடு ஒன்றைக் காண்கிறார்..*

அதன் அருகில் போய் அந்த கூட்டில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்ட தோட்டக்காரர் அதன் அருகில் சென்று பார்த்த போது அதில் *பறவையின் சில முட்டைகள் இருப்பதைக் கண்டு அந்த கூட்டைப் பத்திரமாக எடுத்து வைத்துவிட்டுச் செல்கிறார்.*

அடுத்த நாள் வந்து பார்க்கிறார்..அந்த *முட்டைகளில் ஒரு சிறிய வெடிப்பு (cracks) ஏற்பட்டிருப்பதைக் காண்கிறார்.* அப்போது இந்த முட்டைகளிலிருந்து குஞ்சிப் பறவைகள் வெளிவரப்போகிறது என்பதை உணர்ந்த தோட்டக்காரர் சந்தோசத்தில் கூட்டை மேலும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்.

இப்போது தோட்டக்காரருக்குப் பயிர்களைப் பார்ப்பதைக் காட்டிலும் பறவையின் கூட்டையும் முட்டைகளையும் பார்ப்பதற்காகவே தோட்டத்திற்கு வரத் தொடங்கினார்.

மீண்டும் மீண்டும் வருகிறார்..முட்டைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு முறையும் *அந்த முட்டைகளில் ஏற்பட்ட வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாயிருப்பதை உணர்கிறார்.*

ஒவ்வொரு முறையும் அவர் அவற்றின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே செல்லத் தொடங்கினார்..

வழமை போன்று ஒரு நாள் கூட்டைப் பார்க்கத் தோட்டக்காரர் வந்தபோது முட்டைகள் அசைவதையும் முட்டையினுள்ளே குஞ்சுப் பறவைகளின் இறக்கைகள் விரிய வழியில்லாமல்

முட்டையின் சுவர்களிலே முட்டி மோதுவதையும் கண்டு உடைந்து போனார்..

*பாவம் அந்தப் பறவைக் குஞ்சுகள் கருவிலேயே கஷ்டப்படுகிறதே என்று உணர்ந்த தோட்டக்காரர் உடனே அந்த முட்டைகளிலிருந்த வெடிப்பை தன் கைகளால் கொஞ்சம் பெரிதாக்கி  குஞ்சுகள் வெளிவர* ஏற்றாற்போல் சௌகரியமாக முட்டைகளை வைத்து விட்டு வீடு சென்றார்..

மறு நாள் காலையில் புதிய பறவைகளைக் காண 

மிகுந்த ஆசையோடு கூட்டுக்கு அருகில் சென்ற தோட்டக்காரருக்கு ஏமாற்றமே எஞ்சிப்போனது.

*முட்டைகளில் ஒரு மாற்றமும் இல்லை...*

சரி நாளை பார்ப்போம்  என்று சென்று அடுத்த நாள் வருகிறார்... அன்றும் ஒரு மாற்றமும் இல்லை...

இப்படியோ நாளை நாளை என்று எதிர்பார்ப்புகள் தவணை முறையில் கடந்தன.

*சில நாட்களின் பின்னர் முட்டைகளைச் சூழ எறும்புகள் படை எடுத்தன...* பறவைக் குஞ்சுகள் செத்துப்போய்க் கிடந்தன...

இதைக்கண்ட தோட்டக்காரர் மனசெல்லாம் வலியோடு வாடிப்போனார்..அப்போது அந்த வழியால் தோட்டக்காரரின் நண்பர் ஒருவர் வந்தார்...

நடந்ததைக் கூறினார்...

"பாவம் உன் அவசரத்தாலும்

*அளவுக்கு மீறிய அன்பாலும் எல்லையற்ற எதிர்பார்ப்பாலும்  அந்த பறவைகளை அழித்து விட்டாயே"*

என்று நண்பர் கூறினார்...

"நானா ... "

"நீ தான்.. வேறு யாரு..."

அந்தப் பறவைகள் அந்த முட்டைகளில்

இருந்து வெளிவரும் போது

அதன் இறக்கைகள் மெதுவாக அசையும்,

கால்கள் துடிக்கும்,

முட்டைகளின் சுவர்களில் முட்டி மோதும்..

*இது தானே இயற்கை..*

அதை அப்படியோ விட்டிருந்தால்

இந்நேரம் அழகான பறவைகளாகப் பறந்திருக்கும்...

ஒரு சுப பிரசவம் நடந்து முடிந்திருக்கும்..

அழித்து விட்டாயே என்று நண்பர் கூறியதும்

தோட்டக்காரர் மீண்டும் உடைந்து போனார்..

சிதறிப்போனார்..

#இது_ஒரு_பறவையின்_கதையல்ல

*#நம்_பிள்ளைகளின்_வாழ்வியல்...*

இப்படித்தான் நாமும் *நம் பிள்ளைகளுக்கு  கஷ்டத்தையே காட்டக் கூடாது என்று தாங்கு தாங்கு என்று தாங்குகிறோம்...* வலிக்கவே கூடாது என்று வளர்த்தெடுக்கிறோம்..

உழைப்பின் பெறுமதியை

வியர்வையின் கனதியை

வெற்றியின் தடங்களை

உணரச் செய்யாமலேயே

உருவாக்கி விடுகிறோம்...

நாம் மறந்துவிடக்கூடாது..

#கண்டிப்பில்லாத_கனிவு

#நாளை_எங்கேயோ_ஓர்_இடத்தில்

#நம்_பிள்ளைகளை

#தண்டிக்க_வைக்கும்...

*எல்லோரும் பயணிக்கும் பாதையில் நமது பிள்ளைகளையும் பயணிக்கக்  கற்றுக்கொடுப்போம்*

பயணத்தைச் சரி செய்யவும் சொல்லிக்கொடுப்போம்

*அவர்களுக்கென்று தனியான ஒரு பாதையை அவர்களாக உருவாக்கட்டும்.*

நாம் தள்ளி நின்று தட்டிக்கொடுப்போம்..

*பிள்ளைக்கு விழவும் தெரிய வேண்டும் அப்போதுதான் எழும்புவது எப்படி என்று தெரிய வரும்..*

உங்கள் சுட்டு விரல்களைப் பிடித்துக்கொண்டே

எத்தனை காலம் தான் இன்னும் அவர்கள் நடை பயில்வது..?..படித்ததில் பிடித்தது..

அரைப்பைத்தியமும்..முழுப்பைத்தியமும்

 தொடர்பின்றிப் போன

பிறந்த ஊரின் நினைவுகளையும்

தொடர்பற்றுப் போன

உறவுகளின் நினைவுகளையும்

மறக்கவும் முடியாது

தொடரவும் முடியாது

சுமந்துத் திரிகிற

ஒவ்வொரு கணமும்...


என்றேனும் பயன்படும் என்று

பொறுக்கிப் பொறுக்கிச் சேர்த்த

எதற்கும் பயன்படாத

பொருட்கள் அடங்கிய

அழுக்கு மூட்டையை

சுமந்துத் திரிகிற

எங்கள் தெரு அரைப்பத்தியமே

நினைவில் வந்து போகிறான்..


பயனற்றதுதான் ஆயினும்

எப்போதேனும் யாரேனும் 

அவனை நெருங்குகையில்

பறித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில்

சட்டென அந்த மூட்டையை

நெஞ்சோடு நெருக்கி

சேர்த்து அணைத்துக் கொள்கிறான்

உயிரை அணைப்பதைப் போலவே....


தொடர்பில்லைதான் ஆயினும்

ஏனோ எதனாலோ

தனிமையோ வெறுமையோ

என்னுள் விரக்தியை,விதைக்கையில்

பயனற்ற நினைவுகளை

சேர்த்தணைத்து பெருமூச்சுவிடுகிறேன்

ஒரு வகையில்

அந்த அரைப்பைத்தியம் போலவே

Friday, October 21, 2022

அபுரிக் கவிதைகள்...

 தன் பாண்டித்தியம்

படிப்போருக்குப்

புரியவேண்டும் என்பதற்காக


படித்ததும்

புரிந்துவிடக் கூடாது என்பதற்காக

அவன் பட்ட சிரமம்


கவிதையைப் படித்ததும்

மிக எளிதாய்ப்

புரிந்துவிடுகிறது.


தமிழ்தான்....

தெரிந்த வார்த்தைகள் தான்

என்றபோதும்....


விடாது தொடர்ந்து

பலமுறை முயன்றபோதும்

கவிதைதான் புரியவில்லை..

Friday, October 14, 2022

சகிப்புத்தன்மை...?

 நேர்மறையான  

ஒரு விஷயத்தைச் சொல்வது

உங்கள்  நோக்கமாயின்

தவறியும்

அதில்

எதிர்மறையான

வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்


"நன்றாக இரு "

என்பதற்குப் பதில்

"நாசமாகிவிடாதே "

என்பதைப் போல....


"புரிந்து இணைந்திருக்கும் தன்மையை

மிகச் சரியாகச் சொல்வதாக நினைத்து

"சகிப்புத் தன்மை" எனச் சொல்லி

சகிக்க முடியாத ஏதோ ஒன்று

இனங்களுக்கிடையில் இருப்பதான

பிம்பத்தை உருவாக்கியதைப் போல..


நேர்மறையான விஷயத்திற்கு

எதிர்மறையான வார்த்தைகளை

எப்போதும் பயன்படுத்தாதீர்கள்..


ஏனெனில்

அது நம் நோக்கத்திற்கு

எதிரான பலனையே தரும்

இப்போதைய

"சகிப்புத் தன்மையைப் " போலவே..

Wednesday, October 12, 2022

ஆசிரியரின் மகத்துவம்..

 *ஒரு கதை*


ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் 


"தன்னைத் தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார். 


இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், 


"நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.


 " நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். 


" ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனைத் திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது. 


ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது. அவர் கூறினார், 


மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டுப் பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை. 


பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றிக் கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னைத் திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியைக் கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படித் தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" 


இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார். 


மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னைத் தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். 


"ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். ஆசிரியர் கூறினார், "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்....(படித்ததில் பிடித்தது...)