1254
Ambani vs Adani
கடந்த இரண்டு வருடங்களாக அசைக்க முடியாமல் வலுவாக இருந்த அதானியின் சாம்ராஜ்யத்தினை ஹிட்டன்பர்க் என்ற ஒரே அறிக்கை ஒட்டு மொத்தமாய் சாய்த்து விட்டது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அதானியின் கம்பெனிகளின் பங்குகள் அனைத்தும் 20 சதவீதத்திற்கும் கீழ் சரிந்தது.
இது ஹிட்டன்பர்கினால் தானா? ஹிட்டன்பர்க் அறிக்கை அதானியை கவிற்பதற்காகவே போலியாக ஏற்பாடு செய்யப்பட்டதா? இரண்டாம் உலகப்போருக்கும் ஹிட்டன்பர்க்குமே சம்பந்தம் இருக்கிறதாமே?
இது போன்ற விவாதங்களுக்கு நான் வரவில்லை. ஏனென்றால் நானே ஹிட்டன்பர்க் அறிக்கையினை இன்னும் படிக்கவில்லை. ஆனால் அதானியின் பங்குகள் சரிவடைந்ததற்கு காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த அளவிற்கு பங்குகளைப் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் வாங்கினார்களோ, அதே வேகத்தில் கடந்த இரண்டு நாட்களில் விற்றிருக்கின்றனர். இதில் பெரிய முதலீட்டாளர்கள், ரீடெய்ல் இன்வஸ்டர்ஸ் என எல்லாருமே அடங்குவார்கள். இதை தான் bear market என்று சொல்வார்கள். இந்த கரடி மார்கெட் அமைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதானிக்கு ஹிட்டன்பர்க் ரிப்போர்ட்.
இந்த பியரிஷ் மார்கெட்டை நான் எப்படி பார்க்கிறேன் என்றால்,
ஒன்று - ஹிட்டன்பர்க் அறிக்கையினால் அதானியின் பங்குகள் மீது நம்பிக்கை இழந்த மக்கள் அதை விற்று விட்டார்கள்.
இரண்டு - அதிக லாபம் பார்க்க வேண்டி (அ) அதானியை கவுக்க வேண்டி அவரின் எதிரிகள் (பியர் கேங் ஐ) வைத்து செய்த சதி.
ஆனால், அதானியின் எதிரிகள் அவரை கவுக்க சதி செய்து பங்குகளின் விலை பல மடங்கு குறைந்ததாக தெரியவில்லை. அதனால் 90% முதலாவதாக சொன்ன விசயம் தான் சரியாக இருக்க வேண்டும்.
2022 - நாடெங்கும் அதானி அலை அடிக்குது. காலகாலமா இருந்த ஆண்ட பரம்பர முகேஷ் அம்பானியவே சொத்து மதிப்புல ஓவர்டேக் செய்கிறார் அதானி.
ஒரு ஊர்ல தின்னைல கடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் கூட ஆகும். ஆனா பணக்காரன் ஆக முடியுமா? அப்படியே ஆயிட்டா, அவன் நேர்மையாக பணக்காரன் ஆகியிருப்பதற்கு வாய்ப்பு இருக்கா?
அப்படி செல்வந்தர் ஆன அண்ணன் தான் அதானி. அதானியின் கம்பெனிகளின் பைனான்சியல் இன்டிக்கேட்டர்களைப் பார்க்கும்போது எல்லாவற்றிலும், revenue மற்றும் valuation தான் ஏறியிருக்கிறதே தவிர, அவரின் நிகர லாபம் (net profit) பெரிதளவில் ஏறவில்லை. ஆனாலும் தன் நிறுவனத்திற்கு வந்த இன்வெஸ்ட்மென்ட்களை வைத்து கம்பெனியின் வேல்யூவேஷனை உயரத்திக்காட்டியிருக்கார். இது எல்லா நிறுவனங்களும் செய்யும் விஷயம் தான். ஆனால் அதானிக்கு கடன் கொடுத்தோர் பட்டியலில் அதிகமாக உள்ளது நம் தேசியமய வங்கிகள் தாம் என்பது தான் இங்கு வேடிக்கையான விசயம். இந்தக் கடன் எல்லாம் வாராக்கடனாகி, நீரவ், மல்லையா பட்டியலில் அதானி வருவாரா என்பது சொல்ல முடியாத விஷயம். ஆனால் போகிற நிலைமையைப் பார்த்தால் அப்படி வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது. அதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதில் அதானி பங்குகளின் விலை இறங்கியதற்கு இரண்டாவது காரணமாக ( அவரின் எதிரிகளால்) நடந்தது என்றால், இந்தியாவில் அப்படி நடப்பது இது முதன்முறை அல்ல.
ஏற்கனவே ஒரு நபருக்கு நடந்து இருக்கிறது. தற்போது அதானி இருக்கும் நிலையை விட பலமடங்கு அப்போது அவர் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார்.
அவர் வேறும் யாரும் அல்ல. துருபாய் அம்பானி தான்!
எனக்கு பொருளாதாரத்தின் மீது ஈர்ப்பு வந்ததற்கு காரணமே குரு மாதிரியான படங்கள் தான். உண்மையாலுமே பத்து பேர தூக்கி போட்டு ஒரு ஆளு அடிச்சா அந்த மாதிரியான படங்கள தூக்கி வச்சு கொண்டாடும் கூட்டம் மத்தியில எனக்கு குரு மாதிரியான படங்கள் தான் உண்மையாலுமே ஹீரோயிட்டாக தெரிந்தது. அந்த படத்தில் ஒரு சண்டை காட்சி இல்ல. படம் முழுக்க உண்மைனும் சொல்ல முடியாது. அதே சமயம் படம் முழுக்க கு(து)ருபாய நல்லவனாகவும் காட்டவில்லை. குரு படம் வந்து இருபது ஆண்டுகள் கழித்து ஹர்ஷத் மேத்தாவின் ஸ்காம் சீரியஸ் வெளிவரும் போது தான் நாம் கட்டிவைத்திருக்கும் ஹீரோ பிம்பம் உடைந்து, உண்மையில் ஹீரோயிஸம் என்றால் என்ன என்பதை வெகுஜனம் உணர ஆரமிக்கிறது. பல பேர் ஸ்காம் பார்ப்பதற்காக பங்கு சந்தை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர். பலர் ஸ்காம் பார்த்த பின் முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஒரு ஆய்வில், கோவிட் காலத்தில் பெரும்பாலான மில்லினியல்ஸ் என்று சொல்லப்படும் 90s kids பங்கு சந்தையில் டிமேட் அக்கவுண்ட் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணமாக ஸ்காம் 92 சீரியஸை நான் பார்க்கிறேன்.
சரி..வலவலனு போகாம மேட்டர்குள்ள போவோம். பொருளாதார கட்டுரை ஆதலால் கொஞ்சம் பொறுமையாக தான் போக வேண்டும். அதனால கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்க.
இந்தியால தற்போது இரண்டு ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இருக்கிறது. ஒன்று பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE) மற்றொன்று National Stock Exchange (NSE). இதற்கு நடுவில் பல ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்கள் இருந்தன. ஆனால் அவையனைத்தையும் முடிவிட்டன. இதில் NSE ஹர்ஷத் மேத்தா வழக்கிற்கு பின் ஆரம்பிக்கப்பட்டது. BSE ஆங்கிலேய காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டது. அதனால் ஒரு நிறுவனம் மக்களிடையே பணம் திரட்ட வேண்டும் என்றால், அந்த காலத்தில் BSE ஐ தான் அணுகுவார்கள். நம் துருபாயும் BSE யை தான் தேடி போனார். Reliance Industries Ltd. 1977 இல் பங்கு சந்தையில் இறங்கியது. ஒரு ஷேர் பத்து ரூபாய் என மொத்தம் 2.8 மில்லியன் ஷேரை ஷேர் மார்கெட்டில் இறக்கியது. அப்போது பத்து ரூபாய் என்றால் இப்போது இருநூறு ரூபாய் என்று இருக்கும். ஒரு வருடத்திலேயே ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குகள் ₹10 இல் இருந்து ₹50 ரூபாயை எட்டியது. இந்த தொகை சின்னதாக தெரியலாம். ஆனால் ஒரு வருடத்தில் ஐந்து மடங்கு அளவிற்கு பங்குகள் ஏறியிருக்கிறதென்றால் நினைத்துப் பாருங்கள். அதே பங்குகள் 1980 இல் ₹104 ரூபாயாகவும், 1983 இல் ₹186 ரூபாயாகவும் உயர்ந்தது. இந்த அசுர வேக வளர்ச்சி பலருக்கு பல சந்தேகங்களை கொடுத்தது. அதே சமயம் பல போட்டியாளர்களுக்கு பொறாமையினையும் கொடுத்தது.
குரு படத்தில் ஒரு காட்சி இருக்கும். மாதவன் குருவின் செயலை பற்றி செய்தி தாளில் எழுதியவுடன், சட்டென பங்குகள் சரிவை சந்திக்கும். முதலீட்டாளர்கள் (மக்கள்) எல்லாம் தங்கள் ஷேர் சர்டிபிகேட்'களை குருவிடம் காண்பித்து சண்டை போடுவது மாதிரியான காட்சிகள் இருக்கும். அதே போல் தான் தற்போது ஹிட்டன்பர்க் அறிக்கை அதானியை கவிழ்த்து விட்டிருக்கிறது.
நாம கதைக்கு வருவோம். இப்படி வீறு நடை போட்ட அம்பானியின் கம்பெனியை கவிழ்க்க ஒரு கூட்டம் பங்கு சந்தையில் களம் இறங்கியது. அது தான் "The Bear Cartel". கதையைப் பற்றி பார்க்குமுன் Bear cartel ஐ குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பங்கு சந்தையில் இருவிதமான மக்கள் உள்ளனர். Bulls and Bears. நான் ₹10 ரூபாய்க்கு ஒரு பங்கை வாங்குகிறேன். அது ₹20 ஏறினால், அதை விற்று விடுவேன். எனக்கு ₹10 ரூபாய் லாபம். கம்பெனிக்கும் பங்கு விலை உயர்ந்ததால் லாபம். பங்கு விலை உயரும் என்று optimistic mindset உடையவர்கள் தான் bulls. அதே பங்கு விலை இறங்கும் என்ற pessimistic mind set உடையவர்கள் தான் bears. கம்பெனி நஷ்டமானால் கரடிகளுக்கு கொண்டாட்டம். இந்த bear mind set உடையவர்கள் எல்லாம் ஒரு சேர இணைந்து மார்கெட்டை manipulate செய்வார்கள். அதை தான் bear cartel என்கிறோம்.
இப்போது இந்த bear cartel துருபாயின் பங்குகள் மீது கண்ணு வைத்துவிட்டனர். ரிலையன்ஸின் பங்குகளை சரிவடைய செய்து, லாபம் பார்க்கும் நோக்கில் சந்தையில் களம் இறங்கினர். அந்த சமயத்தில் ரிலையன்ஸ் பங்குகளை பல நடுத்தர மக்கள் வைத்திருந்தார்கள். பங்குகளின் விலை இறங்கினால், லாபம் பார்ப்பது இந்த bear cartel மட்டும்தான். ஆனால் நஷ்டத்தை சந்திக்க நேரிடுவது அம்பானியோடு சேர்த்து, அவரை நம்பியுள்ள லட்ச குடும்பங்கள்.
1982 - மார்ச் 18. Bear cartel தன் வேலையை துவங்க ஆரம்பித்தது. கடகடவென ரிலையன்ஸ் பங்குகளை மார்கெட் இல் விற்க ஆரம்பித்தது. ரிலையன்ஸ் பங்குகள் விற்று கொண்டே இருந்தன. அரை மணி நேரத்தில் 3 லட்சத்து ஐம்பதாயிரம் பங்குகள் விற்று தீர்ந்தது. வெறும் அரை நாளில் ரிலையன்ஸின் பங்கு விலை ₹131 இலிருந்து ₹121 ஆக சரிந்தது.
இப்போது ஒரு சில பங்கு சந்தை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வோம். இப்போ இன்னைக்கு நீங்க ஒரு கம்பெனியோட ஒரு பங்கை வாங்குறிங்கனா, அந்த பங்கு உங்களுக்கு T+2 நாளில் வந்துவிடும். அதாவது Trading day + 2 days. திங்ககிழமை டாடா மோட்டார்ஸ் ஷேர் ஆர்டர் போடுறிங்கனா, புதன்கிழமை உங்க அக்கவுண்டுக்கு டாடாவின் பங்குகள் வந்துவிடும். ஆனா அதுக்குள்ள நீங்க அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும். அப்போது இப்படி இல்லை. ஒரு பங்க நீங்க இப்போ ஆர்டர் போட்டா அது உங்களுக்கு ஒரு மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை தான் கிடைக்கும். அதற்குள் நீங்கள் செட்டில்மென்ட் எல்லாம் முடித்துவிட வேண்டும். இப்போது உள்ளது போல ஆன்லைன் முறையும் அப்போது அல்ல. In case, ஒரு வேளை அந்த second friday இன் போது உங்களிடம் shares இல்லையென்றால் நீங்கள் அதற்கான தனி அபாராத தொகையை செலுத்த வேண்டும். அதற்கு பெயர் தான் உந்தா பத்லா. கொஞ்சம் குழப்பமாக இருக்கும். கதைக்கு போனவுடன் புரிந்து விடும்.
சரி. அம்பானியோட shares எல்லாத்தையும் bear cartel வித்தாங்க. அப்போ, bear cartel ஏற்கனவே அம்பானியோட பங்குகளை வாங்கி வச்சிருந்தாங்களா?
அப்படினு கேட்டா, இல்ல!
அப்போ எப்படி இல்லாத ஒரு ஷேர்ஸை விக்க முடியும்?
ஹூம். முடியும். அதற்கு பேரு தான் short selling. அதை தான் இந்த bear gang பண்ணாங்க.
அவர்களிடம் இல்லாத ஒரு ஷேரை வாங்கி, அதன் விலையை இறக்கி, விலை இறங்கியவுடன் அதை விற்று லாபம் பார்ப்பார்கள். இந்த இடத்தில் உங்களுக்கு தெளிவாக குழம்ப வேண்டும். இப்போது மீண்டும் ஒரு முறை குழப்பினால், தெளிவாகி விடும்.
அதாவது, ஒரு ரிலையன்ஸ் ஷேர் உங்ககிட்ட இல்ல. அதே சமயம் நீங்க ஒரு bear ஆக trading பண்ணனும் னு ஆசை படுறிங்க. அதிக விலைக்கு விற்று, மீண்டும் குறைந்த விலைக்கு வாங்க ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு தான் sebi ஒரு விதிமுறை வைத்துள்ளது. அதற்கு பெயர் தான் MIS (Marginal Intraday Settlement).
ஒரு டாடா மோட்டார்ஸ் பங்கு ₹300 இல் இருக்கிறது. கண்டிப்பாக அது இன்று ₹200 ஐ தொடும் என்று உறுதியாக நம்புறீங்க. இப்போ நீங்க ₹300 ரூபாய் ஷேரை வித்து, அதை மீண்டும் ₹200 ரூபாய்க்கு வாங்கினால், உங்களது லாபம் எவ்வளவு?
₹100 ரூபாய்.
எல்லாம் ஓகே. ஆனா என்கிட்ட இல்லாத ஷேரை எப்படி நான் விக்க முடியும்? னு கேப்பிங்க.
அத பத்தி Sebi யே கண்டுக்கிறதில்ல. நீங்க ஏன் worry பண்றிங்க!
ஆனாலும் இதுல லாஜிக் உதைக்குதே பாஸூ னு தோணும். இப்போது லாஜிக்கை உடைக்கிறேன்.
நீங்க இல்லாத டாடா மோட்டார்ஸ் ஷேரை யாருக்கோ ₹300 ரூபாய்க்கு வித்துட்டிங்க. இங்க நீங்க seller. Buyer உங்கிட்ட இருந்து share ஐ இன்னும் வாங்கல. ஆனா பணம் கொடுத்துட்டான். இப்போ நீங்க அன்னைக்குள்ள buyer கிட்ட share அ ஒப்படைச்சே ஆகனும். இல்லாத share எங்க போய் வாங்குவிங்க? மார்கெட் ல. அன்னைக்கு சாயங்காலம் மார்கெட் மூடுறதுக்குள்ள share அ வாங்கி நீங்க buyer கிட்ட ஒப்படைச்சே ஆகணும். ஏன்னா, அதுக்கு தானே வாங்கிருக்கிங்க ₹300 ரூபா துட்டு. உங்க கணிப்புபடியே share இன் விலை ₹200 கிட்ட இறங்குது. டக்கனு அத ₹200 ரூபாய்க்கு வாங்கி buyer கிட்ட கொடுக்குறிங்க. .
இப்போ உங்க லாபம் எவ்ளோ? ₹100 ரூபாய். கணக்கு சரியா வரும். இதே நீங்க எதிர்பார்த்த மாதிரி பங்கோட விலை ₹200 க்கு போகாம ₹400 க்கு போச்சு னா?
உங்களுக்கு ₹100 ரூபாய் நட்டம். Buyer க்கு ₹100 ரூபாய் profit. ஏன்னா அவன் உங்க கிட்ட ₹300 ரூபாய்க்கு வாங்குவான். பங்கு விலை ₹400 க்கு போச்சுனா, அத அந்த ரேட்டுக்கு வித்துட்டு லாபம் பாத்துப்பான். அவன் bull. நீங்க bear.
சரி. இப்போ கதைக்குள்ள வருவோம். அம்பானியோட பங்குகளை எல்லாம் இப்படி தான் இந்த bear cartel விற்றுக்கொண்டிருந்தது. அவர்கள் கணிப்பு, இப்போ ₹131 ரூபாய்க்கு வித்துருக்கோம். பின்னாடி ₹121 ரூபாய்க்கு வாங்கிக்கலாம் என்பது தான்.
எவ்ளோ shares வித்துருங்காங்க?
கிட்டத்தட்ட 3 லட்சம் 50 ஆயிரம். ஒரு share ku 10 ரூபாய் லாபம் னா. 3,50,000 x 10 = 35, 00,000 வரை லாபம். அதுவும் அந்க காலத்துல. விலை இன்னும் இறங்குச்சுனா இன்னும் லாபம்.
ஆனா, அந்த இடத்துல யாருமே எதிர்பார்க்காத சம்பவம் ஒன்னு நடந்துச்சு. திடீர்னு ரிலையன்ஸோட பங்குகள் அனைத்தும் ஏற ஆரம்பிச்சிது.
Bear cartel எல்லாரும், "ஏய் எப்புற்றா" னு பாத்தாங்க. விலை ஏறி ஏறி ஆரம்ப விலை ₹131 க்கே வந்துச்சு. அதோட விட்டுச்சா னு பாத்தா அதான் இல்ல. இன்னும் ஏறுது ஏறுது ஏறிகிட்டே இருக்கு.
இப்போ bear cartel மட்டுமில்ல, whole இந்தியாவுமே சொல்லுச்சு, " Eppuuuraaa".
இது எப்படி சாத்தியமாச்சு. அம்பானிக்கும் அரசுக்கும் தொடர்பு இருந்துச்சா? , அம்பானிக்கும் Sebi க்கும் ஏதாச்சு உடன்படிக்கை நடந்துச்சா?
இல்லை!
இந்த இடத்தில் தான் துருபாய் எனும் பிஸினஸ் மேக்னேட்டை குறைவாக எடை போட்டுவிட்டார்கள்.
பங்கு விழுந்த அதே நேரத்தில், உடனடியாக பக்கத்திலிருந்த நாடுகளிலுள்ள பெரிய முதலீட்டாளர்களை அழைத்து , Friends of Reliance எனும் ஒரு நிறுவனம் மாதிரியான அமைப்பை உருவாக்கி, மலமலவென தன் கம்பெனி shares ஐ, தான் உருவாக்கிய கம்பெனியை வைத்தே ஆர்டர் செய்தார். கட கட கட வென buying order பறக்கிறது. இதெல்லாம் எதுவும் புரியாமல் மக்கள் திக்குமுக்காடினர். என்னடா இவ்ளோ வேகமா இறங்குது, திடீர்னு இவ்ளோ வேகமா ஏறுது னு யாருக்குமே ஒன்னும் புரியல.
₹131 ரூபாய் ஷேரை ₹121 ரூபாய்க்கு கொண்டு வந்து bear cartel லாபம் பார்க்க நினைத்தார்கள். ஆனால் அதை அம்பானி கடைசியில் ₹201 ரூபாய் க்கு கொண்டு வந்து நிறுத்தினார்.
"எதிர்ல வரவனோட பொருள புடுங்கி அவனையே போடணும் டா" என்று பாணியை அம்பானி கடைபிடித்தார்.
இப்போ இவ்வளவு பணம் கொடுத்து share ஐ settle செய்ய bear இடம் பணம் இல்லை. வெள்ளிக்கிழமை வந்தாகிவிட்டது, கால அவகாசம் கேட்டார்கள்.
"வரட்டும் அவன்.. இதுக்கு தான் நா காத்துகினுகிடந்தேன். என்ன கதி ஆவறன் பாரு."
ஒரு ஷேருக்கு உந்தா பத்லா ₹25 கொடுக்கனும் ஆர்டர் போட்டாரு அம்பானி. அப்போ எத்தனை ஷேர். எத்தனை பைசா. அம்பானிக்கு எவ்வளவு லாபம். நினைச்சு பாத்தாலே தலையெல்லாம் சுத்துது.
அடுத்த ரெண்டு நாளில் கிட்டத்தட்ட 10 கோடி அளவில் ஆர்டர் பண்ண ஷேர் வராததால் மார்கெட்டே ஸ்தம்பித்து நின்றது. இரண்டு நாட்கள் ஷேர் மார்கெடே க்ளோஸ். அடுத்த மூன்று நாட்கள் வரை வெறும் ரிலையன்ஸ் ஷேர் மட்டுமே மார்கெடில் ட்ரேட் ஆகியது.
இன்னைக்கு அதானியோட பங்குகள் சரிந்து வருவது அன்றைய அம்பானியோடு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை. அதே சமயம் அம்பானி போல ஏதாவது மாய மந்திரம் செய்து அதானி மீண்டு வந்திருவாரா என்றால், நிச்சயம் முடியாது. ஏனென்றால் நான் முன்னாடியே சொன்னேனே, தின்னை - கலியாணம் - பணக்காரன்.
இன்னும் ஓப்பானாக சொல்ல வேண்டுமென்றால், அதானியால் ஒரு போதும் அம்பானி ஆகவே முடியாது.
ஏன்னா....
இந்த துணியும் வளர்ச்சியும் கடுமையான உழைப்பால வந்தது.
நீ குருநாத் கூட மோதனும் னா கடுமையா உழைக்கனும்.
குருநாத் கூட சண்ட போட நீ குருநாத் ஆகணும்.
ஆனா...
குருநாத் இங்க ஒருத்தன் தான்! Thanks Vishnu)
PC ஜோதிஜி திருப்பூர்