என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும்எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை
போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை
தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை
உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை
வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய் நினைப்பதில்லை
வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை
7 comments:
மிகவும் சிறப்பு
அருமை ஐயா...
"நிறைவுக்கும் குறைவில்லை
கலைவாணி அருளுக்கும் குறைவில்லை."
அருமை.... அருமை...💐💐🙏🙏
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை
அருமை... அருமை. .💐💐🙏🙏
தொடரட்டும் எழுத்துப்பணி...
ஆஹா😃👍 🙏🏻🕉
வணக்கம் சகோதரரே
அருமையான கவிதை. ஒவ்வொரு வரிகளையும் மிகவும் ரசித்து படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Post a Comment