Wednesday, December 30, 2020

புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

 இன்றோடு.......

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
நாளைமுதல்
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும் 
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

இருளோடு
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
ஒளியோடு
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

அடியோடு
உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
அழகோடு
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

நிலையாக
கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
விளைவாக
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Friday, December 25, 2020

மின்சாரச் சிக்கனம்...தேவை இக்கணம்

 ❇ விழிப்புணர்வு பதிவு...


🌐 மின்சாரக் கட்டணம் உயர்கிற இந்த நேரத்தில் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை எத்தனை  மணி நேரம் உபயோகித்தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது...


பெரும்பாலானவர்களுக்கு நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை...


💢 உதாரணமாக..


🔘 இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.


▪ ஆனால்

 

 🔘  அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக 15 வாட்ஸ் கொண்ட 2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் உபயோகித்தால் மாதம் 4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.


▫ அதுபோல


🔘 40 வாட்ஸ் திறன் கொண்ட 2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும்.


🔘 750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.


🔘 150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும்.


🔘 2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப் படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்.


🔘 அதுவே 200 வாட்ஸ் ஏர்கூலர் என்றால்  மாதம் 30 யூனிட் செலவாகும்.


🔘 75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம் 36 யூனிட் செலவாகும்.


🔘 400 வாட்ஸ் வாஷிங்மெஷின் தினமும் ஒரு மணி நேரம் உபயோகப்படுத்தினால் மாதம் 12 யூனிட் செலவாகும். 100 வாட்ஸ்டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும்.


🔘 500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும்,  300 வாட்ஸ் வெட் கிரைண்டர் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.


🔘 200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கினால் மாதம் 6 யூனிட் மின்சாரமும், 740 வாட்ஸ்குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால்,  மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும்.


🔘 7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும்.


🔘 இந்த அளவீடுகளைத் தெரிந்து மின்சாரத்தைச் சிக்கனமாக  உபயோகிக்கக் கற்றுக்கொண்டால் மின் கட்டணம் அதிகரிக்காது...


📌 மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்...

Sunday, December 6, 2020

ரஜினி ஒரு கிரியா ஊக்கி மட்டுமே

 நான் பள்ளியில் படித்த கிரியா ஊக்கிக் குறித்த

விளக்கம் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.


"தான் எவ்வித மாறுதலையும் அடையாமல்

தான் பக்கத்தில் இருப்பதாலேயே

மாறுதலைத் தூண்டும் பொருளுக்கு

கிரியா ஊக்கி எனப் பெயர்."


நிச்சயமாக தேர்தல் முடிந்தபின்னும்

தான் சார்ந்த அணிகள் ஜெயித்தால்

அது மக்களின் வெற்றி எனவும்.


தோற்றால் அது மக்களின் தோல்வி எனவும்

பேட்டிக் கொடுத்துவிட்டு இப்போது இருப்பது

போலவே....


அரசியலில் இருப்பது போலவும்

தமிழக மக்கள் வாழ்வில் அதீத அக்கறை

உள்ளவர் போலவும் காட்டிக் கொண்டபடியே


சினிமாவில் நடிக்கக் கிளம்பிவிடுவார்..


அதன் காரணமாகவே எந்தக் கட்சியையும்

எதிர்த்து அரசியல் செய்யாதபடி தான்

ஆட்சிக்கு வந்தால் இதை இதைச் செய்வேன்

என மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு....


அதை ஆன்மீக அரசியல்

காந்தீய அரசியல் எனவும் 

புதுக் கதை விட்டு விட்டு..


தன் ரசிகர்களை மீண்டும் இரசிகர்களாகவே

இருக்கவிட்டு விட்டு அரசியலுக்கு நிச்சயம்

முழுக்குப் போட்டுவிடுவார்..


அதன் காரணமாகவே தன் இரசிகர்கள்

யாரையும் ஒருங்கிணைப்பாளராகவோ

ஆலோசகராகவோ நியமிக்காது சில நூறு

பேருக்கு மட்டும் தெரிந்தவர்களை அந்தப்

பதவிகளில் சாமர்த்தியமாக நியமித்திருக்கிறார்.


இந்த விசயம் அவர்களுக்குத் தெரியாததில்லை

அவர்களைப் பொருத்தவரை அவர்களுக்கு முன்னால்

ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும்

கண்கொள்ளாக் காட்சியினை வாழ்வில் 

ஒருமுறை பார்த்த திருப்தி ஒன்றே 

அவர்களுக்குப் போதும்

ஆம் அதுவே அவர்கள் வாழ்நாள் சாதனை

ஆகிப் போகும்.


(ஒரு வகையில் புரட்சித் தலைவருடன் 

தோழர் கல்யாணசுந்தரம்

அவர்கள் அனுபவித்த சுகத்தைப் போல )


மற்றபடி இரஜினி அவர்கள் அரசியல் கட்சித்

துவங்குவதால் தமிழக அரசியலில் பெரும்

மாறுதல் ஏதும் ஏற்பட்டு விடப் போவதில்லை

அது அவருக்கும் தெரியும்...


அவர் வருகையால் சில லட்சம் ஓட்டுகள்

இடம் மாறி சில கணக்குகள் மாறும்.


கொள்கை கூட்டணி என சொல்லிக் கொண்டு

தான் எதிர்பார்த்தது கிடைக்காத கட்சிகள் சில

இருந்த இடம் விட்டு மாறும்...ஆம் நிறம் மாறும்


தன்னை இயக்குபவர்கள் எதிர்பார்ப்புக்கு

ஏற்றார்ப்போல இந்த மாறுதல்களுக்கெல்லாம்

தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பதன் மூலம்

அவரே முழு முதற்காரணமாய் இருந்துவிட்டு...

...

தான் எவ்வித மாறுதலும் அடையாது...


ஆம் கிரியா ஊக்கிபோல்..பழைய இரஜினியாய்

இயமலைக்கும்...பண்ணைவீட்டுக்கும்...

ஸ்டுடியோவுக்கும்..இடையிடையே பயணித்தபடி...

 

இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக

முக்கியப் பிரச்சனைகளுக்கு சிறு சிறு

சுவாரஸ்யப்பேட்டிக் கொடுத்துக் கொண்டும்

அதன் காரணமாக தன் பிராண்ட் வேல்யூ

குறைந்துவிடாது சினிமாவில் தொடர்வார்

என்பதே என் கருத்து...


ஆம் இரஜினி ஒரு கிரியா ஊக்கி மட்டுமே

என்பது என் ஆணித்தரமான கருத்து...

Thursday, December 3, 2020

எதுக்கும் படிச்சு மனசில் வச்சுக்குவோம்..

 என்கிட்ட 20 ரூவாதான் இருக்கு உங்க 

        ஆட்டோவுல வரலாமா .?  இப்படி கேட்டுவிட்டு தன்னுடைய ஆட்டோவில் 

       ஏறிய முன்னாள் எம்.எல்.ஏ குறித்து .,


              ஆட்டோ டிரைவர் ஒருவர் வியந்து எழுதிய முகநூல் பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது.


                          மதுரை முனிச்சாலையை சேர்ந்தவர் பாண்டி. பட்டதாரியான இவர், சொந்தமாக ஆட்டோ ஓட்டித் தொழில் செய்து வருகிறார். 


           கடந்த 27-ம் தேதி காலையில் இவர் மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி சென்ற போது, 


                   அரசு மருத்துவமனை அருகே பேருந்தில் ஏற முயன்ற பெரியவர் ஒருவர் தன்னுடைய ஒற்றைக்கால் செருப்பை தவற விட்டுவிட்டார்.


           உடனே பேருந்தில் இருந்து இறங்கி செருப்பை அவர் தேடிக்கொண்டிருப்பதை கண்ட பாண்டி, 


                     அந்த பெரியவர் மதுரையின் முன்னாள் எம்.எல்.ஏ என்பதை அடையாளம் கண்டு வியந்திருக்கிறார்.


                  பேருந்தைத் தவறவிட்ட அந்த பெரியவரிடம் போய், தன்னுடைய ஆட்டோவில் ஏறச் சொல்லி கேட்டார் பாண்டி. 


                      அதற்கு அவர், 'என்னிடம் 20 ரூபாய்தான் இருக்கிறது. கொண்டுபோய் விட்டுவிடுவீர்களா?' என்று கேட்டிருக்கிறார். 


                      'சரிங்கய்யா' என்று சொல்லி அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற பாண்டி, ஆட்டோவில் இருந்த அந்த முன்னாள் எம்.எல்.ஏவுடன் ஒரு செல்ஃபி எடுத்து அதனை முகநூலில் பதிவிட்டார்.


                 கூடவே, 'வெறும் 20 ரூபாயுடன், ஒற்றைக் கால் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு மறு செருப்பை தேடித் திரிந்த அந்த பெரியவர் .


                   மதுரை கிழக்குத் தொகுதியில் இருமுறை எம்.எல்.ஏவாக இருந்த எளிமையின் சிகரமான நன்மாறன் அய்யா. 


                    கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும் மிகவும் எளிமையான, நேர்மையான, மனிதநேயம் கொண்ட மனிதரான அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்' என்று எழுதியிருந்தார்.


                       இதுகுறித்து முனிச்சாலை பாண்டியிடம் கேட்டபோது, 'முதலில் வயதானவராக இருக்கிறாரே என்றுதான் உதவுவதற்கு முன் வந்தேன். 


                    அப்புறம்தான் அவர் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் என்று கண்டுகொண்டேன். 'எங்கே போகணும் அய்யா, ஆட்டோவில் ஏறிக்கோங்க' என்றபோது, 


                     தயங்கியபடி 'கருப்பாயூரணி போகணும். என்னிடம் 20 ரூபாய்தான் இருக்கிறது, கூட்டிட்டுப் போவீங்களா?' என்று கேட்டார். 


                   எனக்குக் கண் கலங்கிவிட்டது. நான் பசும்பொன் தேசியக் கழகத்தின் மதுரை மாநகர் இளைஞரணி செயலாளராக இருக்கிறேன். 


                            ஆட்டோ ஓட்டிக்கொண்டே அரசியலிலும் இருப்பதால், மதுரையில் பொதுவாழ்வில் இருப்போரை நன்கு அறிந்தவன் நான்.


          சைக்கிள் வாங்கவே காசில்லாமல் இருந்த பலர், இன்று டொயோட்டா, பார்ச்சூன் கார்களில் பறக்கிறார்கள். 


             சமீபத்தில் மதுரையின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்துக்குச் சீர்வரிசையாக மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொடுத்தார். 


                       ஆனால், நன்மாறனோ கட்சி வாங்கி கொடுத்த ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போட்டாலே கட்டுப்படியாகாது என்று, 72 வயதிலும் பேருந்தில் போய்க் கொண்டிருக்கிறார். 


                   எம்.எல்.ஏவாக இருந்ததற்கான பென்ஷன் தொகை ரூ.20 ஆயிரத்தில் பாதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தில் வாழ்கிறார். 


                     ஆட்டோவை விட்டு இறங்கும் வரையில் நான் முன்னாள் எம்.எல்.ஏ என்பதை அவராகச் சொல்லவே இல்லை' என்றார்.


             நன்மாறனைத் தொடர்பு கொண்டு இந்தச் சம்பவம் உண்மையா என்று கேட்டோம். 'ஆமாம், உங்களுக்கு எப்படித் தெரியும்?' என்றார். 


                      முகநூல் பதிவு விஷயத்தை சொன்னதும், 'அதை எல்லாம் செய்தியாக்க வேண்டாம். 


             டெல்லி விவசாயிகள் போராட்டம் போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டார்.


                          தற்போது ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார் நன்மாறன். 


            அவரது மூத்த மகன் குணசேகரன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பாண்டியன் (தமிழ்நாடு) கிராம வங்கியில் பணியாற்றுகிறார். 


         இளைய மகன் ராஜசேகரன், மதுரை அரசு மருத்துமனையில் தற்காலிக பணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


-- Hindu tamil --

Amudhan maheshvarma .

Friday, November 20, 2020

படித்ததும் பகிரப்பிடித்தது..

 *இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!*

*திருப்பூர் கிருஷ்ணன்*

...........................................................

 `தம்பீ! நூறு ரூபாயை நீயே வைத்துக் கொள். நாளை இந்தப் பாதையில் வரும்போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புகிற மாதிரி நானும் உன்னை நம்புகிறேன். நான் வயசானவள். திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகி விட்டால் நேரே கடவுளிடம் போய்ச் சேர வேண்டும். உன் எழுபது ரூபாயைத் திரும்பத் தருவதற்காக நான் மறுபிறவி எடுக்கக் கூடாது!`

...........................................................


 *உலகில் எத்தனையோ தீமைகள் இப்போது அதிகரித்துள்ளன. லஞ்சம், ஊழல், பாலியல் வன்முறை என இன்று நம்மை வந்துசேரும் செய்திகள் பல நம் மனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. ஆனால் இதே உலகில் இன்றைய காலகட்டத்திலேயே பல நல்ல செயல்களும் நடைபெறத்தான் செய்கின்றன. அவை அதிகம் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை. அவற்றைப் பற்றிப் பலர் அறிவதில்லை. 


 அத்தகைய செயல்களைச் செய்யும் நல்லவர்களால்தான் இன்றும் மழைபெய்கிறது! `நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!` என்பதல்லவா தமிழ் மூதாட்டி அவ்வையின் திடமான தீர்மானம்!....


 *நண்பரொருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ரயிலில் வந்து இறங்கினார். வடபழனி தாண்டிப் போகவேண்டும். ஆட்டோ பிடித்தார். நான்கரைக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ கட்டணம் ரூ 230. 


 பர்ஸை எடுத்துப் பார்த்தார். என்ன சங்கடம். ஐநூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார்.


 `நீங்கள்தான் முதல் சவாரி ஐயா. என்னிடமும் சில்லரை இல்லையே?` என்றார் ஓட்டுநர். 


 அதிகாலை நான்கரை மணிக்கு எந்தக் கடையும் திறந்திருக்காது. யாரிடம் போய்ச் சில்லரை வாங்குவது? யோசித்த நண்பர், பெருமூச்சுடன், `சரி. மீதி உன்னிடமே இருக்கட்டும்` எனச் சொல்லிவிட்டார். ஆட்டோ ஓட்டுநர் அவரின் செல்பேசி எண்ணைக் கேட்டு வாங்கிக் கொண்டார். 


 காலை பத்தரை மணி இருக்கும். நண்பரின் செல்பேசியில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. குறுஞ்செய்தி அனுப்பியவர் அந்த ஆட்டோ ஓட்டுநர்தான். குறுஞ்செய்தியில் இடம்பெற்றிருந்த தகவல் என்ன தெரியுமா? 


 `உங்களுக்கு நான் தரவேண்டிய மீதித்தொகை ரூ 270 க்கு உங்கள் செல்போனில் ரீசார்ஜ் செய்துவிட்டேன்! நன்றி.`


 மிகுந்த வியப்படைந்த நண்பர் தன் செல்போனையே தன் கண்ணில் ஒற்றிக்கொண்டார். 


  ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டருக்கு மேல் பணம் கேட்பதையே முன்னிலைப் படுத்திச் சொல்கிறோம். அவர்களிடையே இப்படிப் பட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் சொல்வதில்லை....


 *இன்னொரு நண்பர் குடும்பத்தோடு காரில் பெங்களூர் புறப்பட்டார். வழியில் சாப்பிடுவதற்கு உரிய சாப்பாட்டை டிபன் கேரியரில் எடுத்துக் கொண்டார். 


 சாப்பாட்டு நேரம் வந்தபோது காரை நிறுத்தி எங்காவது அமர்ந்து சாப்பிட முடிவு செய்தார்கள். ஒரு வயல்வெளியும் ஒரு கிணறும் அதன் அருகில் ஓர் ஆலமரமும் தென்பட்டன. 


  அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட எண்ணிய குடும்பத்தினர் காரைச் சாலையோரமாக நிறுத்திவிட்டு டிபன் கேரியரோடு மரத்தடிக்குச் சென்றார்கள். 


 மரத்தடியில் ஏற்கெனவே அந்த வயலுக்குச் சொந்தக்காரரான ஒரு விவசாயி தன் சாப்பாட்டைச் சாப்பிட ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். கீழே ஒரு தட்டு. பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர். மற்றும் உணவுப் பொட்டலம். 


 இவர்களை அன்போடு வரவேற்ற விவசாயி, இங்கேயே நீங்கள் சாப்பிடலாம் என்று கூறி அருகேயிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுத்து அவர்களுக்கு உதவினார். 


 குடும்பமும் சாப்பிட்டு முடித்தது. அந்த விவசாயியும் தன் உணவை உண்டு முடித்தார். நண்பர் ஒரு விஷயத்தைக் கவனித்தார். அந்த விவசாயி தான் பருகுவதற்குத் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த தண்ணீரைத்தான் பயன்படுத்தினாரே அன்றி அந்தக் கிணற்று நீரைப் பயன்படுத்தவில்லை. நண்பருக்கு வியப்பு. விவசாயியிடம் கேட்டார்:


 `கிணற்று நீர் உப்புக் கரிக்காமல் நன்றாகத் தானே இருக்கிறது? கிணறும் உங்களுடையது தானே? அப்படியிருக்க நீங்கள் ஏன் கிணற்று நீரைப் பயன்படுத்தாமல் உங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள்?` 


 தன் மேல் துண்டால் கையைத் துடைத்துக்கொண்டே கள்ளங்கபடமில்லாமல் சிரித்தவாறு விவசாயி சொன்ன பதில் இது:


 `ஐயா! இந்தக் கிணறு என்னுடையதுதான். இதை வெட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினேன். அந்தக் கடன் இன்னும் தீரவில்லை. அது தீரும்வரை வயலில் பாய்ச்சுவதற்கு மட்டுமே கிணற்று நீரைப் பயன்படுத்துவது என்றும், வயல் பயன்பாட்டுக்குத் தவிர சொந்தப் பயன்பாட்டுக்கு இந்த நீரை எடுப்பதில்லை என்றும் நானும் என் மனைவியும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். 


  இப்படி இருந்தால்தான் கடனைச் சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற புத்தி வரும் என எனக்கு அறிவுறுத்தியவள் என் மனைவிதான். 


  ஆயிற்று. இன்னும் மூன்று நான்கு மாதங்களில் வங்கிக் கடனை அடைத்துவிடுவேன். அதன்பிறகு உங்களைப் போல் நானும் ஆனந்தமாக இந்தக் கிணற்று நீரைப் பருகத் தொடங்குவேன். அப்போது வீட்டிலிருந்து தண்ணீர் கட்டிக் கொண்டுவரும் பாடு இருக்காது!`


  இதைக் கேட்டு நண்பரும் நண்பர் குடும்பத்தினரும் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. கோடிகோடியாய் வங்கிப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு வெளிநாட்டிற்கு ஓடுபவர்கள் இருக்கும் இதே நாட்டில்தான், இதே காலகட்டத்தில்தான் இத்தகைய நேர்மையான விவசாயிகளும் இருக்கிறார்கள். 


  *இரு சக்கர வாகனத்தில் வழக்கமான பாதையில் அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்த நண்பருக்கு தன் மனைவி பூ வாங்கிவரச் சொன்னது திடீரென ஞாபகத்திற்கு வந்தது. சாலையோரத்தில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பூக்காரக் கிழவியைப் பார்த்தார். 


 இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அந்த மூதாட்டியிடம் இரண்டு முழம் மல்லிகைப் பூ வாங்கினார். முழம் பதினைந்து ரூபாய். அந்தப் பெண்மணிக்கு முப்பது ரூபாய் கொடுக்க வேண்டும்.


   இவரிடம் சில்லரை இல்லை. நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். அந்தப் பாட்டியிடமும் எழுபது ரூபாய் திருப்பிக் கொடுப்பதற்குச் சில்லரை இல்லை. 


  `நூறு ரூபாயை இன்றைக்கு வைத்துக் கொள்ளுங்கள் பாட்டி. நாளை இதே வழியில்தான் வருவேன். அப்போது உங்களிடம் மீதி எழுபது ரூபாயை வாங்கிக் கொள்கிறேன்!` என்றார் நண்பர். 


 `தம்பீ! நூறு ரூபாயை நீயே வைத்துக் கொள். நாளை இந்தப் பாதையில் வரும்போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புகிற மாதிரி நானும் உன்னை நம்புகிறேன். 


  நான் வயசானவள். திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகி விட்டால் நேரே கடவுளிடம் போய்ச் சேர வேண்டும். உன் எழுபது ரூபாயைத் திரும்பத் தருவதற்காக நான் மறுபிறவி எடுக்கக் கூடாது!`


  பூவிற்றுப் பிழைக்கும் எளிய மூதாட்டியின் எண்ணப் போக்கு நண்பரை திகைப்பில் ஆழ்த்தியது. 


  வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி லட்ச லட்சமாகப் பணம் வாங்கிக் கொண்டு ஊரைவிட்டே ஓடிப்போய்விடும் மனிதர்கள் நிறைந்த இதே உலகில்தான், சாலை ஓரமாக ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வாழ்க்கைத் தரத்தில் அமைந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இந்த மூதாட்டி பூ விற்றுக் கொண்டிருக்கிறார். 


  இவரைப் போன்றவர்களால் அல்லவா உலகில் நல்ல குணங்களின் நறுமணம் கமகமவென வீசிக் கொண்டிருக்கிறது! 


 *நண்பர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கினார் இன்னொருவர். இரண்டு மாதங்களில் கடனைத் திருப்பித் தந்துவிடுவதாகச் சொன்னார். எல்லாம் பேச்சுவார்த்தை தானே தவிர எழுத்து பூர்வமாக எதுவும் எழுதிக் கொள்ளப் படவில்லை. 


 கடன் வாங்கிய நண்பர் திடீரென இதய அதிர்ச்சி ஏற்பட்டுக் காலமாகி விட்டார். கடன் கொடுத்தவர், தான் கடனாகக் கொடுத்த தொகையைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. 


  அது போனால் போகிறது. ஆனால் அந்த நண்பர் காலமாகிவிட்டாரே! இந்தச் சூழலில் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கிறதோ எனப் பதறியவாறு அவர்கள் இல்லத்திற்குச் சென்றார். 


 இறந்தவரின் மனைவி அவரைத் தனியே அழைத்துப் பேசினாள்:


 `நீங்கள் சரியான சமயத்தில் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து என் கணவருக்கு உதவியதை என் கணவர் இறப்பதற்கு முன் என்னிடம் சொன்னார். சடலத்தை எடுப்பதற்கு முன் ஐயாயிரம் ரூபாயை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. நான் கடனாளியாக இறக்கக் கூடாது என்று கூறிவிட்டுக் காலமானார். 


  அவர் ஆத்மா சாந்தி அடையவேண்டும். அதனால் மறுக்காமல் இந்த ஐயாயிரம் ரூபாயை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்!` 


 அந்த சகோதரி ஐயாயிரம் ரூபாய் கொண்ட கவரை நண்பரிடம் கொடுத்தபோது நண்பர் விழிகளிலிருந்து வழியத் தொடங்கிய கண்ணீர் நிற்க நெடுநேரமாகியது....


 *அந்த ஆட்டோ ஓட்டுநர் போல, அந்த விவசாயி போல, அந்தப் பூக்கார மூதாட்டி போல, அந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்தவர் போல இன்னும் நம்மிடையே சிற்சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். 


 நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போவதாகச் சொல்கிறாரே அவ்வை மூதாட்டி, அப்படி இவர்களுக்காகப் பெய்யும் மழைநீரைத் தான் நாம் எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம். இத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது உலகம் சொர்க்கமாகும். வானகம் இங்கு தென்படும். 


(அண்மையில் ராணி வார இதழில் வெளிவந்த கட்டுரை)

 ...........................................................

Wednesday, November 18, 2020

இது ஒரு மழைக்காலம்...

 வீட்டில் மின் பாதுகாப்பு 

 வழி முறைகள் .


1.எர்த் லீக்கேஜ் சர்குட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும்.


2.வீட்டிலுள்ள வீனாய் போயுள்ள, பழைய சுவிச்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும்.


3.தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிச் போர்ட்,வாஷிங் மிஷின்,ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.


4.எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு,

 வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும்,இதயம் இடது புறத்தில் உள்ளதால்.


4.பாத் ரூம் சுவிச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு,அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.


5.மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால்,

 அதன் விஷயத்தில் மிகவும் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.மும்பையில் ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம்.

தண்ணீர் இல்லாததால்,ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து ஃபேட்டல் ஆகியிருக்கிறார்.

ஹீட்டருக்கு கொடுக்க கூடிய

இன்லெட், அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது.

அவுட்லெட் ,ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னர் ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும்.

ELCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும்.


6.ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின்,கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது,சுவிச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ,மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.


7.இவ்வளவு கவனமாக இருந்தும்,

ஆக்சிடெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால்,

நேர்ந்து விட்டால்,

அருகிலுள்ளவர் ஒரு கம்பால், 

பாதிக்கப் பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி,விக்டிமை நேரடியாக தொடவே கூடாது.

கிரைண்டர் ஷாக் அடித்த மருமகளையும், பேத்தியையும் காப்பாத்த அவர்களை தொட்டு இழுத்து ,இறந்து போன மாமியாரையும்,

பல வருடங்களுக்கு முன்பு,

திருநெல்வேலி அருகே,இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு

 ,கீழே வீழ்ந்து கிடந்த டிவி  ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்ப் போன கணவன் 

தொடர்ந்து தொட்ட மகன், மகள், உறவினர்களென்று கிட்டத்தட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது.

இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல்,அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும்.செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல்.அதனால்,அடித்துக் கூட காப்பாற்றலாம்.


தண்ணீரில் வீழ்ந்தவரைக் காப்பாற்றப் போய் தானும் உயிர் விடற மாதிரி ஆகிவிடக் கூடாது.


8.கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது.


9.சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர்,

இரு முனை அயன்கிளாட் சுவிட்ச்சும்,

3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிட்ச்சும் வைத்திருக்க வேண்டும்.

நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்;

ஃப்யூஸ் போடக் கூடாது.

நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.


10.முதலில் சொன்னதையே இறுதியிலும் சொல்கிறேன்,ELCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள். 


 Lion  க நெடுமாறன் TNEB

 நாச்சியார்கோயில் பிரிவு

 கும்பகோணம் வடக்கு

Wednesday, November 4, 2020

ஆணிவேர் இங்கிருக்கு...

   கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள் எந்த மதத்தவராயினும் ஒன்றாக இருத்தல் தானே இயற்கை..மாறாக கடவுளை மறுப்பவர்களுடன் இணைந்திருப்பது எந்த விதத்தில் சரி...இந்தச் சிந்தனை கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வந்தால் போதும்.மதப்பிரச்சனை வரவே வராது..ஆனால் மதத்தை வைத்து ஆண்டவனுக்கும் பக்தனுக்கும் இடையில்  நிறுவனமாகி பெரும் வியாபாரம் நடத்தும் நிறுவனத் தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார்கள்...திருமணமோ மரணமோ அவர்களது ஒப்புதலின்றி நடத்தமுடியாது என்கிற நிலை இருக்கும் வரை இவர்களின் போக்கு பிடிக்கவில்லை ஆயினும் கூட அவர்கள் மதத்தில் உள்ள  சாமான்யர்களால்   இவர்களை விலக்கி ஒதுக்கவும் முடியாது..இதற்கெல்லாம் ஒரே தீர்வு பொதுச் சிவில் சட்டம் ஒன்றே...அது நிறைவேற்றப்பட வேண்டியது ராஜ்யசபாவில் மெஜாரிட்டி மட்டுமே..அது கூடிய விரைவில் ஆகச் சாத்தியமே....அது மட்டும் ஆகிவிட்டால் எல்லாம் சரியாக ஆவதும்  நிச்சயம் சாத்தியமே...

Sunday, October 25, 2020

கற்றலின் கேட்டலே சிறப்பு

 மூன்றாவது 

கவிதை நூலுக்கான வேலைகளில்

மிகத் தீவீரமாய் இருந்தான் என் நண்பன்


ஏற்கெனவே வெளியிட்ட

இரண்டு நூல்களும் பெருவாரியாய்

அறையை அடைத்துக் கிடக்க

மீண்டும் இவன் படும் அவஸ்தை

என்னை ஆச்சரியப்படுத்தியது


"எதற்காக எழுதுகிறாய்

உன்னை உலகுக்கு நிரூபிக்கவா ?

சொல்லவேண்டியவைகளை

உலகுக்கு சொல்லித்தான் ஆகவேண்டும்

எனும் உந்துதலை திருப்திப்படுத்தவா ? "

என்றேன்


நான் எதிர்பார்த்தைப் போலவே

ஒருவிதத்தில் 

எல்லா இலட்சிய எழுத்தாளர்களைப் போலவே

இரண்டாவது காரணத்தைத்தைத்தான் சொன்னான் அவன்.


"சரி ஒருமுறை

எத்தனைப் பிரதிகள் வெளியிடுவாய்"என்றேன்


"முதலில் ஆயிரம் அடுத்தது ஐநூறு

இப்போது முன்னூறு " என்றான்


"ஏன் குறைந்து கொண்டே போகிறது "எனக் கேட்க


"அவ்வளவுதான் போகிறது " என்றான்


தயாரிப்புச் செலவு

வெளியீட்டுச் செலவு எல்லாம் 

அவன் சொல்லச் சொல்ல

மலைப்பாக இருந்தது


"நானும் சில விஷயங்களை

உலகுக்கு சொல்லத்தான் நினைக்கிறேன்

அதற்காகவே பதிவுகளாக

என் பாணியில் எழுதுகிறேன்


குறைந்த பட்சம் நாளொன்றுக்கு

இருநூறு பேர் வாசிக்க

வருடத்திற்கு அறுபதாயிரம்  கணக்கில்

இப்போது பத்து வருடத்தில்

ஆறு இலட்சத்தைக் கடந்து கொண்டிருக்கிறேன்

அதுவும் உள்ளூரில் மட்டுமல்ல

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில்..."

நெட் செலவு தவிர வேறு செலவில்லை..."

எனச் சொல்லி நிறுத்த....


அதை ஹாலில் அமர்ந்து

கவனிக்காதது போல் இதுவரை

கவனித்துக் கொண்டிருந்த

அவருடைய மனைவி

சட்டென எழுந்து உள்ளே போய்

தட்டுடன் திரும்பி வந்து.....


"முறுக்கு நான் செய்து அண்ணே

சாப்பிட்டுக் கொண்டே பேசுங்க அண்ணே " 

என்றார்


அவரின் குறிப்பு எனக்குப் புரிந்தது


குறிப்பை என் இலட்சிய நண்பனுக்கும்

புரிய வைக்க முயன்று கொண்டிருக்கிறேன்...

Thursday, October 22, 2020

வெல்லும் தலைவர்கள்...

மூடத்தனத்தால்

பதிந்த நம்பிக்கையின் பலம்

பகுத்தறிவினால்

விளைந்த நம்பிக்கையில் இல்லை


சடங்கு சம்பிரதாயங்களால்

மனதுள் பதிந்த செயல்கள்

பயனறிந்து செய்ய முயல

அதன் சுவடுகளே தட்டுப்படவில்லை


விவரமறியா வயதில்

இணைந்த நட்பின் இறுக்கம்

விவரமறிய தொடரும் நட்பில்

துளியும் இல்லவே இல்லை.


இவையெல்லாம் இப்படி

என ஆகிப் போனதால்தானோ என்னவோ.

இந்தச் சூட்சுமத்தை.

நன்கு புரிந்து கொண்டதால் தானோ என்னவோ


பயனுள்ள தேவையான

விஷயங்களைவிட...

பயனற்ற சுவாரஸ்யங்க்களே

இங்கு அதிகம் விற்பனையாகின்றன


கடமையை பொறுப்பினை 

உணர்த்தும் தலைவர்கள்

செல்லாக் காசாக்கிப் போக


உணர்வினை ஆசையினைத்

தூண்டும் தலைவர்களே

வெல்லும் தலைவர்களாகிப் போவதைப் போலவே... 

Monday, October 12, 2020

மனம் நிறைந்த மனோ..


 SPBக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று திருவண்ணாமலையில் அவரது தங்கை S.P.சைலஜா விளக்கேற்றி வேண்டியுள்ளார்.. 


இதில் நெகிழ வைத்த நபர், நெற்றி நிறைய விபூதியுடன், வேட்டி சட்டையில் பயபக்தியுடன் விளக்கேற்றிய மனோ தான்..


பிறப்பால், பழக்க வழக்கத்தால் இஸ்லாமியரான அவரது இந்த சைகை தான் நம் சமூகத்தின் நிஜமான பிரதிபலிப்பு.. '


“வணக்கம் சொல்ல மாட்டேன்', 'பிற மதக் கடவுளுக்குப் பூஜை செய்ததைச் சாப்பிட மாட்டேன்' என்பதெல்லாம் நம் சமூகத்திற்கும் நம் பண்பாட்டிற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாத வந்தேறி வழக்கங்கள்.. 


சகமனிதன், வேறு நம்பிக்கை கொண்டிருந்தாலும் அதையும் மதிப்பது தான் நம் மண்ணின் மாண்பு.. மனோ அதைத் தான் கச்சிதமாகச் செய்து காட்டினார்..


வேறு மதங்களைப் பின்பற்றினாலும், அவற்றின் வந்தேறி வழக்கத்தைப் பிடித்துத் தொங்காமல், சக மனிதனின் நம்பிக்கைகளை மதிக்கும் மனோ, யேசுதாஸ் போன்றோர் தான் இந்த மண்ணின் மைந்தர்கள்.. 


இவர்கள் தான் சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இருக்க வேண்டியவர்கள்.. 


மாறாக திராவிட & கம்யூனிச ஆட்கள், தாங்கள் தான் செக்யூலரிசத்தின் ஒரே அத்தாரிட்டி என்பது போல் செயல்படுவதால் தான் இங்கு ஒருவருக்கொருவர் இத்தனை முட்டல் மோதல்கள்..


எந்த இந்துவும் சர்ச்சுக்குள்ளோ மசூதிக்குள்ளோ போக யோசிப்பதில்லை.. சிவன், பெருமாள் மாதிரி ஏசு & அல்லாவும் அவனுக்கு ஒரு கடவுள் தான்.. அதனால் தான் அவன் உருத்தாக பிரியாணி கேட்கிறான், வேளாங்கண்ணி மாதா படம் போட்ட மோதிரம், எண்ணெய் கேன் என பயன்படுத்துகிறான்.. 


இதையே பதிலுக்குச் செய்யும் மனோவும் யேசுதாஸும் தான் இந்தச் சமூகம் சமநிலையாக இருக்க முழுபலத்தோடு உதவுபவர்கள்.. 


மனோக்களும் யேசுதாஸ்களும் அதிகரிக்கும் போது தான் செக்யூலரிசம் எத்தனை போலியானது என நமக்குத் தெரிய வரும்..


துரதிர்ஷ்டவசமாக, மனோக்களையும் யேசுதாஸ்களையும் என்றும் அதிகரிக்க விடாது திராவிட & கம்யூனிச அரசியல்.. 'சிறுபான்மை, ஒடுக்குமுறை, பார்ப்பனீயம்' என்றெல்லாம் தூண்டிவிட்டு அவர்களை எந்நேரமும் பயத்திலேயே இருக்க வைத்து, பெரும்பான்மைக்கு எதிராகக் கொம்பு சீவி விடுவது மட்டுமே இவர்களின் குறிக்கோள்.. 


மனித குலத்தின் நோய் கம்யூனிசம் என்றால், தமிழ் இனத்தின் நோய் திராவிடம்.. இந்த நோய்க்கான மருந்து, மனோ, யேசுதாஸ் போன்ற இந்திய பாரம்பரியத்தை மதித்து வாழும் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமே


நன்றி Ram Kumar

Sunday, October 11, 2020

ஆம் பதிவர் சந்திப்பில் உச்சம் இதுவே...

  நான் சிறுவனாக இருக்கையில்

எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையாக
இருந்தவர்கள் எல்லாம்  சிவாஜி
எம்.ஜி.ஆர் விஷயத்தில் இரண்டாகப்
பிரிந்து விடுவோம்

யாராக இருந்தாலும் இரண்டில் யாராவது
ஒருவர் பக்கம் நின்றாகவேண்டும்

இரண்டு பக்கமும் என்பதற்கெல்லாம்
அப்போது வாய்ப்பே கிடையாது

எப்படித்தான் அருமையாக சண்டைப்
போட்டாலும்  எம்.ஜி ஆர்அவர்களுடன்
ஒப்பிட்டுப் பேசுதல் என்பது கிடையாது
அவர் லெவலே வேறு

ஆனால் புதிதாக நடிக்க வந்தவர்கள்
யாராக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்தால்
அவரை சிவாஜி அவர்களுடன் ஒப்பீடு
செய்வோம்.அனேகமாக அது
சிவாஜிக்கு முக்கால்  வருவார்,அரை வருவார்
கால் தூசி பெறமாட்டார் என்பதைப்
போலத்தான் எப்போதும் இருக்கும்

எனக்குத் தெரிய அந்த லிஸ்டில் மேஜர்
சவுந்திரராஜன்,ஏ.வி எம் ராஜன் எல்லாம்
 வந்து போனதுண்டு

ஆனால் யாரும் சிவாஜி அவர்களுக்கு
இணையாக வந்ததில்லை

அதைப் போலவே இனி பதிவர் சந்திப்பு
என்றால் புதுகைப் பதிவர் சந்திப்புத்தான்
நிச்சயம் ஒரு அளவுகோலாக இருக்கும்
புதுகைப் பதிவர் சந்திப்புப் போல் வராது
அல்லது புதுகைச் சந்திப்பைப்போலச்
சிறந்தது,அல்லது புதுகைப் பதிவர் சந்திப்பை
விட மிகச் சிறப்பாக இருந்தது
என்பதைப் போலத்தான் நிச்சயம் இருக்கும்

அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக பதிவர்
சந்திப்பை நடத்தி முடித்த அனைவருக்கும்
அதற்கு முழுமையாக அனைத்து விதத்திலும்
ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும்
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்வதோடு...

இந்த ஒற்றுமையும்,அமைப்பும் பதிவர்
சந்திப்பு நடத்துவதற்காகக்த்தான்
என்பதற்காக மட்டும் இல்லாது,

பதிவர்களுக்குள் எப்போதுமே ஒரு
இணப்புப் பாலமாக இருக்கும்படியான
ஒரு அமைப்பாக மாற்றினால்...

கூட்டு முயற்சியில் பொதுவாக ஒரு
வலைத்தளம்(தமிழ்மணம் போல் )
உருவாக்கும்படியான முயற்சியில் ஈடுபட்டால்...

புத்தகமாக தமது படைப்புகளை வெளிக்
கொணர விரும்புவோருக்கு  உதவும் ஒரு நல்ல
அமைப்பாக மாறினால்...

தொழில் நுட்ப ரீதியாக ஆலோசனை
வேண்டுவோருக்கு எப்போது வேண்டுமானாலும்
உதவும் ஓர் அமைப்பாக மாறினால்..

நல்லதோர் வீணையை  நலங்கெடாது
அதற்குரிய உயரிய பீடத்தில் வைத்தது போலாகும்
எனக் கூறி எனது இந்தத் தொடர்பதிவை
மகிழ்வுடன் நிறைவு செய்கிறேன்

வாழ்த்துக்களுடன்....(ஆம் இதே நாளில் 2015 ல் பதிந்தது )
























Thursday, October 8, 2020

வெற்று உரலை இடித்தபடி

 கண்டதும்

கண்களை இமைக்கவிடாது
சுண்டி இழுக்கும்படியாய்
ஒரு அருமையான தலைப்பும்..

ஆரம்பமே
அமர்க்களமாய் இருக்கிறதே என
எண்ண வைக்கும்  படியாய்
சுவாரஸ்யமான பல்லவியும்

கருவிட்டு விலகாது
சங்கிலிக் கண்ணியாய்த்
தொடர்ந்து மயக்கும்
அசத்தலான சரணங்களும்

மூன்றையும்
மிக நேர்த்தியாய் இணைத்து
அட டா என தலையாட்டவைக்கும்
அருமையான முடிவும்

மிகச் சரியாய் அமைந்தால்
ஒரு கவிதை எழுதி விடலாம் என
அனுதினமும் காத்திருக்கிறேன்

என்றும் போல இன்றும் 
வெற்று உரலை 
வேதனையுடன் இடித்தபடி....

Tuesday, October 6, 2020

கண்டேன் சீதையை....

என் சிறு வயதில் ஏறக்குறைய

ஓராண்டு காலம் செவ்வாய் மற்றும்

சனிக்கிழமைகளில் இராமாயண உபன்யாசம்

கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.


உபன்யாசம் கேட்கப் போகாவிட்டால்

இரவு உணவு பாதிக்கப்படும் எனும்

நிலையில் வீட்டின் கண்டிப்பு இருந்ததாலும்

உபன்யாசகர் வெகு சுவாரஸ்யமாகக்

கதை சொல்லிப் போனதாலும் நான்

கூடுமானவரையில் உபன்யாசம் 

கேட்கப் போவதைத் தவிர்ப்பதில்லை


அன்று சிறு வயதில் கேட்ட இராமாயணக் கதை

மட்டுமல்ல சில குறிப்பிட்ட காட்சிப் படிமங்களும்

அன்று என்னுள் பதிந்தது இன்று வரை என்

நினைவில் இருப்பது என்பாக்கியம் எனத்தான்

சொல்லவேண்டும்


அவற்றுள் முக்கியமானது சீதையை

இலங்கையில் சந்தித்து பின் இராமனை

அனுமன் சந்திந்த நிகழ்வை அந்த

உபன்யாசகர் உபன்யாசம் செய்த விதம்...


அனுமனைத் தவிர அனைவரும் பல்வேறு

திசைகளில் சீதையைத் தேடிச் சென்று

எவ்வித நேர்மறையான தகவலும் இன்றித் திரும்ப

மீதம் நம்பிக்கையூட்டும்படியாய் இருந்தது

அனுமன் வருகைமட்டுமே என்றிருந்த நிலையில்..


அனுமன் வருகிற செய்தி அறிந்து இராமன்

கொள்கிற பதட்டத்தையும் அவன் என்ன சொல்லப்

போகிறாரோ என கொண்ட அதீத எதிர்பார்ப்பையும்

இராமானாகவும் அனுமனாகவும் அவர்

கதாப்பாத்திரமாகவே மாறி மாறி உபன்யாசம்

செய்து கேட்போருக்குள் பதட்டத்தைக் கூட்டி.....


சீதையைக் கண்டேன் எனச் சொல்லாமல்

கண்டேன் சீதையை எனச் சொன்னதன்

முக்கியத்துவத்தை கேட்போரும் உணரச்

சொன்னவிதம், அந்தக் காட்சி ஏன் அந்தச்

சூழல் கூட இன்று என்னுள் நிழற்படமாய்

இருக்கிற சூழலில்.....


இந்த கொரோனா காலத்தில் முக நூல்

மற்றும் வலைத்தளங்களில் வருகிற

சில பதிவுகளும் அதே தாக்கத்தை

ஏற்படுத்திப் போகிறது என்றால்

அது மிகையில்லை


பிறந்த நாள் வாழ்த்து மண நாள் 

வாழ்த்துகளைப் பதிவு செய்கிறவர்கள்

எல்லாம் முதலில் வாழ்த்துச் செய்தி 

என்று பதிவு செய்யாமல் சம்பத்தப்

பட்டவரின் புகைப்படத்தைப் பதிவு செய்துவிட்டு

பின் அவர் குறித்த சிறப்பான விஷயங்களை

எல்லாம் பதிவு செய்துவிட்டு பின் 

கடைசியாக பிறந்த நாள் வாழ்த்து எனவோ

மணநாள் வாழ்த்து எனவோ பதிவிடுவதற்குள்

ஏற்கெனவே பல்வேறு எதிர்மறைச் செய்திகளால் தகவல்களால் பாதிக்கப் பட்டிருக்கும் நம் மனம் எதையோ கற்பனை செய்து

படபடத்து முடிவைப் படித்ததும் தான்

ஆசுவாசம் கொள்கிறது..


எனவே இந்தக் கொரோனா கொடூரம்

முடிகிறவரையிலாவது முதலில் சம்பத்தப்பட்டவரின்

புகைப்படத்தைப் பதிவு செய்யும் முன்

சொல்லின் செல்வர் அனுமன் 

கண்டேன் சீதையை எனச் சொன்னதைப் போல

பிறந்த நாள் வாழ்த்து என்றோ

மண நாள் வாழ்த்து என்றோ பதிவிட்டுவிட்டு

பின் புகைப்படத்தைப் பதிவு செய்தால்

தேவையற்ற சில நிமிடப் பதட்டம் குறையும்

எனபதோடு இந்தச் சாக்கில் இராமனையும் அனுமனையும் சில நிமிடங்கள் நினைக்கிற பாக்கியமும் 

புண்ணியமும் நிச்சயம் வந்து சேரும்

என்பது என் அபிப்பிராயம்...


 சரிதானே.....

Monday, October 5, 2020

சிம்மாசனம் அமர்ந்த பிச்சைக்காரனாய்...

 மக்கள் மனமறிய

ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?

Saturday, October 3, 2020

ஜன்னலும் விண்டோஸும்

பால்கனியே பூங்கா ஆகிப் போக

காரிடரே வீதியாகிப் போக 

கிச்சனே ஸ்டார் ஹோட்டலாக 

ஹாலே கூட்ட அரங்காக 

வெறுமையில் தகிக்கும் மனதிற்கு...

அதிகாலையில் ஜன்னல் திறக்க

விரும்பி விரைந்து விருந்தாளியாய் நுழையும்  
குளிர்ந்த காற்றும் மஞ்சள் வெய்யிலும்

மனச் சுளுக்கெடுத்துப் போகிறது... 

ஒருவகையில் தனிமைத் துயர் நீக்க.. 

முக நூலாய்   
வாட்ஸ் அப்பாய் 
வலைத்தளமாய் 
வந்து மகிழ்வூட்டிப் போகும் 
விண்டோஸைப் போலவே...

Friday, October 2, 2020

காந்தி 80

 வாழிய நீ எம்மான்....


1. காந்தியின் முழுமையான பெயர் என்ன?

➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி

2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?

➯  கரம் சந்த் காந்தி

3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன? 

➯ புத்திலிபாய்

4. காந்தியடிகள் எப்போது பிறந்தார்?

➯  02-10-1869

5. காந்தியடிகளின்  எத்தனையாவது பிறந்தநாளை 02-10-2018 அன்று நாம் கொண்டாடுகிறோம்?

➯ 149 வது பிறந்தநாள்

6. காந்தியடிகள் எங்கு பிறந்தார்?

➯ குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர்

7. காந்தியடிகளுக்கு உண்மையின் மீது பிடிப்பு ஏற்படுத்திய நாடகம் எது?

➯ அரிச்சந்திரன் நாடகம்

8. காந்தியடிகள் எங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்தார்?

➯ சமல்தாஸ் கல்லூரியில் மெட்ரிகுலேசன் முடித்தார்

9. காந்தியடிகள் எப்பொழுது திருமணம் செய்துகொண்டார்?

➯ மே 1883

10. காந்தியடிகளுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு வயது என்ன?

➯ 13க்கும் 14க்கும் இடையில்

11. காந்தியடிகளின் துணைவியார் பெயர் என்ன?

➯ கஸ்தூரிபாய்

12. காந்தியடிகள் லண்டன் செல்லும் முன்பு தனது தாயாருக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்கள் என்னென்ன?

➯ மது, மாது, மாமிசம் தவிர்ப்பேன்

13. காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்கு எந்த ஆண்டு சென்றார்?

➯ 1888

14. காந்தியடிகள் தன்னுடைய எத்தனையாவது வயதில் தென்னாப்பிரிக்கா சென்றார்?

➯ 24ம் வயதில்

15. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

➯ 21 ஆண்டுகள் (1893-1914)

16. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தகைய கொடுமைக்கு ஆளானார்?

➯ நிறவெறி கொடுமைக்கு

17. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எந்த இடத்தில் இரயிலில் பயணம் செய்யும் போது அவமதிக்கப்பட்டு இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?

➯ பீட்டா்மெரிட்ஸ்பர்க்

18. காந்தியடிகள் எப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்?

➯  09-01-1915

19. காந்தியடிகள்  தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்?

➯ வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (09-01-1915)

20. காந்தியடிகளின் இந்திய அரசியல் குரு யார்?

➯ கோபால கிருட்டின கோகலே

21. காந்தியடிகள் இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தகைய கொள்கையை பின்பற்றினார்?

➯ மிதவாதகொள்கை

22. காந்தியடிகள் எந்த விடுதலைப்போராட்ட  கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்?

➯ இந்திய தேசிய காங்கிரஸ்

23. காந்தியடிகள் 1917ல் மேற்கொண்ட  முதல் சத்தியாக்கிரக போராட்டத்தின் பெயர் என்ன?

➯ சாம்பரான் சத்தியாகிரகம் (பீகாரில் தொடங்கப்பட்டது)

24. காந்தியடிகளின் 1918ல் குஜராத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பெயர் என்ன?

➯ கேதா ஆர்ப்பாட்டம்

25. காந்தியடிகள் 1918ல் அகமதாபாத்தில் நடத்திய போராட்டம் எது?

➯ அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம்

26. காந்தியடிகள்1919ல் நடத்திய அகில இந்திய போராட்டம் எது?

➯ ரௌலட் சட்டத்திற்கு எதிரானது சத்தியாகிரகப் போராட்டம்

27. காந்தியடிகள் 1920ல் நடத்திய போராட்டம் எது?

➯ ஒத்துழையாமை இயக்கம்

28. காந்தியடிகள் 1930ல் நடத்திய போராட்டம் எது?

➯ சட்டமறுப்பு இயக்கம்

29. காந்தியடிகள் 1942ல் நடத்திய போராட்டம் எது?

➯ வெள்ளையனே வெளியேறு இயக்கம்

30. காந்தியடிகளுக்கு 1920ல் தென்னாப்பிரிக்காவில் வழங்கப்பட்ட கெய்சர் ஜ ஹிந்த்  என்ற பட்டத்தை எந்த போராட்டத்தின் போது துறந்தார்?

➯ ஒத்துழையாமை இயக்கம்

31. காந்தியடிகள் 12 மார்ச் 1930ல் என்ன போராட்டத்தை மேற்கொண்டார்?

➯ உப்புசத்தியாகிரகம்

32. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் எங்கு தொடங்கப்பட்டது?

➯ அகமதாபாத்தில் தொடங்கி தண்டியில் முடிவடைந்தது

33. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை) எவ்வளவு நாள் நடந்தது?

➯  12-03-1930 முதல் 06-04-1930 வரை தூரம் 388 கிலோமீட்டர்

34. காந்தியடிகள் மேற்கொண்ட  தண்டியாத்திரையை அவர் எவ்வாறு பயணம் செய்தார்?

➯ 388 கிலோ மீட்டரும் பாதயாத்திரையாக

35. காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு (1942) இயக்கத்தின் போது எவ்வாறு முழங்கினார்?

➯ செய் அல்லது செத்துமடி (do or die)

36. காந்தியடிகள் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாது வேறு எதற்காக போராடினார்?

➯ குழந்தைகள் திருமணம்,  திண்டாமை ஒழிப்பு,  விதவைகளுக்கு எதிரான கொடுமைகள் 

37. காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு அழைத்தார்?

➯ ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்)

38. காந்தியடிகள் நாதுராம் கோட்சே என்று சுட்டுக் கொன்றார்?

➯  30-01-1948

39. காந்தியடிகள் இறந்ததினத்தை இந்தியாவில் எவ்வாறு கொண்டாடுகிறோம்?

➯ தியாகிகள் தினம்

40. காந்தியடிகள் இறந்த தினத்தை ஐ.நா.சபை எவ்வாறு அறிவித்துள்ளது?

➯ சர்வதேச அகிம்சை தினமாக (International day of Non–violence )

41. காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்?

➯ நவஜீவன்

42. காந்தியடிகள் தன் சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார்?

➯ குஜராத்தி மொழியில்

43. காந்தியடிகள் தன் சுயசரிதையை என்ன பெயரில் எழுதினார்?

➯ சத்தியசோதனை

44. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் யார்?

➯ மன்மோகன் தேசாய்

45. காந்தியடிகளின் வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் அந்த நூலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன? 

➯ My Experiments with Truth.

46. காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய ஆங்கில இதழ் எது?

➯ யங் இந்தியா

47. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில இதழில் பெயர் என்ன?

➯ இந்தியன் ஒப்பீனியன்

48. காந்தியடிகளை முதன்முதலில் “ மகாத்மா ”  என்று அழைத்தவர் யார்?

➯ இரவீந்திரநாத் தாகூர்

49. காந்தியடிகளை முதன்முதலில்  “தேசப்பிதா ” என்று அழைத்தவர் யார்?

➯ நேதாஜி சுபாசு சந்திரபோஸ்

50. காந்திஜீ யை தமிழில் காந்தியடிகள்  என்று எழுதும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் யார்?

➯ திரு.வி.க

51. காந்தியடிகள் தன் வாழ்நாளில் மொத்தம் எவ்வளவு நாட்கள் சிறையில் கழித்தார்?

➯  2338 நாட்கள்

52.  காந்தியடிகள் அதிக நாட்கள் இருந்த சிறை எது?

➯ எரவாடா சிறை (பூனா)

53. காந்தியடிகள் மரணமடைந்த போது அவருக்கு வயது என்ன?

➯ 78 வயது

54. தில்லி செங்கோட்டை அரியணையோடு மீண்டும் தொடர்பு படுத்தப்படும் பெயர்

➯ காந்தி

55. காந்திஜியின் மனைவி பெயர் என்ன?

➯ கஸ்தூரிபாய்

56. காந்திஜிக்கும் கஸ்தூரிபாவிற்கும் பிறந்த மகன்கள் யார் யார்?

➯ ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ்

57. எந்த அரியணைக் கனவோடும் வளர்க்கப்படாதவர்கள் யார்?

➯ காந்திஜியின் பிள்ளைகள்

58. தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட காந்திஜியின் மகன் யார்?

➯ ஹரிலால்

59. தென் ஆப்பிரிக்காவில் கைகளில் விலங்குபூட்டி தெருக்களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர் யார்?

➯ ஹரிலால்

60. தன் புதல்வர்களையும், தன் பேரப்பிள்ளைகளையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் யார்?

➯ காந்திஜி

61. 388 மைல்கள் நடந்த தண்டி யாத்திரையில் தன் பேரப்பிள்ளையான சிறுவனை (ஹரிலால் மகன்) நடக்க வைத்து அழைத்துச் சென்றவர்?

➯ காந்திஜி

62. தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் தன் குடும்பத்தை ஈடுபடுத்தியவர் யார்?

➯ காந்திஜி

63. தன் பிள்ளைகள் என்பதற்காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உறுதியாக இருந்தவர் யார்?

➯ காந்திஜி

64. லண்டனில் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவரை அனுப்ப மறுத்தவர்

➯ காந்திஜி

65. தான் சிறையில் இருந்தபோது சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவுதர வேண்டிய பொறுப்பை மகன் மணிலாலிடம் ஒப்படைத்தவர்

➯ காந்திஜி

66. மிகுந்த வறுமையில் வாடிய காந்திஜியின் மகன்

➯ ஹரிலால்

67. மணிலாலை தன்னுடைய மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே ஒரு வருடத்துக்கு நீ உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு தன் மகனை அனுப்பியவர்

➯ காந்திஜி

68. சென்னையில் மூட்டைகள் தூக்கியும் நடைபாதையில் படுத்தும் உறங்கிய காந்திஜியின் மகன்

➯ மணிலால்

69. காந்திஜியைவிட அதிக ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டவர்

➯ மணிலால்

70. உப்பு சத்தியாக்கிரகத்தில் தலையில் எலும்புமுறிவு தாக்குதலுக்கு ஆளான காந்தியின் மகன்

➯ மணிலால்

71. மண்டை உடைக்கப்பட்டு மூளையில் காயத்துடன் சுயநினைவின்றி சிறைக் கைதியாக வாழ்நதவர்

➯ மணிலால்

72. 25 முறை மொத்தம் சுமார் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்

➯ மணிலால்

73. தெருப்பிச்சைக்காரனாக இருந்த காந்தியின் மகன்

➯ ஹரிலால்

74. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதி வாழ்க்கை  நடந்த இடம்

➯ சிறைச்சாலை

75. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதிச் சடங்குகள் நடந்த இடம்

➯ சிறைச் சாலை வளாகம்

76. 6 முறை - சுமார் 2 ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தவர்

➯ கஸ்தூரிபாய்

77. தமது 69வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் இருந்தவர்.

➯ கஸ்தூரிபாய்

78. இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு பியுன் வேலையைக் கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை விரும்பாதவர்

➯ காந்திஜி

79. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியவர்

➯ காந்திஜி

80. விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்று கஸ்தூரிபாயிடம் கூறியவர்

➯ காந்திஜி.

Monday, September 28, 2020

கொஞ்சம் முயன்றால் எல்லோரும் கவிஞர்களே

சீர்மிகு கவிகள் செய்ய.                                                                                                    சிந்தனை அதிகம் வேண்டாம்

கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்

Sunday, September 27, 2020

Yes..B.B (1 ) படித்ததும் பகிரப் பிடித்தது..

 பாடகர் SP  பாலசுப்ரமணியம் கடந்து வந்த பாதை..! 


என்ன மனிதர் இவர்..? 


இளையராஜாவை அறிமுகப்படுத்தினேன் என்று இதுவரை இவர் வெளிப்படுத்தியதே இல்லை.அவரும் வெளிக்காட்டியதில்லை. 


70 வயதிலும் கடவுள் ஆசியில் எனக்கு சுகர், பி.பி., என்று எந்த பிரச்னையும் இல்லை. 60 வயதுக்கு மேல் ஒவ்வொரு நாளும் போனஸ் தானே..?


50  வருடம் பாடினாலும் 48 வருடம் கடனுடன் வாழ்ந்தேன் ...! 


2017, ஏப்ரல், குமுதம் நேர்காணலில்

தன் மனதுக்குள் இருந்த உணர்வை வெளிப்படுத்தினார் எஸ்.பி.பி.,


------------------------------------


50 வருட திரை இசை வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்த திருப்தியுடன் பௌர்ணமி நிலவாக ஜொலிக்கிறார் பாடும் நிலா பாலு. பொறியியல் படிக்க நெல்லூரில் இருந்து சென்னை வந்த சிறுவனை தமிழ் சினிமா இசையின் தவிர்க்க முடியாத குரலாக கொண்டாடித் தீர்த்தவர்கள் தமிழர்கள். அவர்களை சந்தித்து நன்றி நவிலும் பணியில் மும்முரமாக இருக்கிறார். அதற்காக உலகம் முழுவதும் சுற்றி எஸ்.பி.பி. லைவ் நடத்திக் கொண்டிருக்கும் இந்த உலகம் சுற்றும் பாடகனை ஒரு காலை வேளையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். 


உங்கள் அப்பாவின் கனவை நிறைவேற்றிய மகனாக ஒரு வாழ்க்கையை இளம் வயதில் உங்களால் வாழ முடிந்ததா?


நான் ஒரு இஞ்ஜினியர் ஆகணும் என்பது தான் என் அப்பாவின் கனவு. ஐ வாஸ் எ வெரி குட் ஸ்டூடண்ட். ஸோ, எனக்கும் அந்த கனவு இருந்தது. ஆனா நம்ம முயற்சி இல்லாமலேயே, நமக்குத் தெரியாமலேயே நான் ஒரு பாடகனாக வந்ததால கடவுள் தந்த பரிசா தான் இந்த வாழ்க்கையை நினைக்கிறேன். 

தெலுங்கில் என் முதல் பாடலை நான் பாடின பிறகு அப்பாவிடம் போய் விஷயத்தை சொன்னேன். ‘யாரோ தயவு பண்ணி உனக்கு படத்துல பாட சான்ஸ் கொடுத்திருக்காங்கடா...! கண்டசாலா முன்னால நீ எல்லாம் ஒரு எலி. அவர் ஒரு ஐராவதம் மாதிரி இருக்கார். எதோ வாய்ப்பு கிடைச்சிருக்கு பவ்யமா இரு. தொடர்ந்து வாய்ப்பு கிடைச்சா நல்லா ப்ராக்டீஸ் பண்ணி மேல வா. ஆனா படிப்பை மட்டும் விட்டுடாத’ என்றார். 

நான் என் இன்ஜினியரிங்கை தொடர்ந்து படிச்சுகிட்டே தான் பாடிகிட்டும் இருந்தேன். ஒரு கட்டத்துல காலேஜூக்கே போக முடியாத அளவுக்கு நான் மியூஸிக்ல பிஸி ஆன பிறகு, காலேஜில் அட்டென்டன்ஸ் பிரச்னை எல்லாம் வந்தது. மியூசிக்கா, படிப்பானு முடிவு செய்ய வேண்டிய நிர்பந்தம். அப்பாகிட்டயே போய் ஐடியா கேட்போம்னு முடிவு பண்ணினேன். ஒருவேளை அப்பா, ‘போய் படிக்கிறதை பாருடா’னு சொன்னா, மியூசிக்கை ஏறகட்டிட்டு இன்ஜினியரிங்கை தொடரலாம் என்பது தான் என் ஐடியா. அவர் அப்படித் தான் சொல்லுவார் என்றும் எதிர்பார்த்து போனேன். 

ஆனால் அவரோ, ‘நீ நல்ல பையன். நல்லா படிச்ச. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. வருங்காலத்துல உனக்கு எது சாப்பாடு போடும்னு உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. ஆனா ஒன்ணு. ஒரே சமயத்துல ரெண்டு குதிரையில சவாரி செய்யணும்னு மட்டும் எப்பவும் நினைக்காதே. உனக்கு எது பிடிக்குதோ அதுல மனசு வச்சு நல்லா உழைச்சு மேல வா. நீ இதை தான் செய்யணும்னு நான் சொல்லமாட்டேன்’ என்று தெளிவாக சொல்லிவிட்டார். 

சரி... ரெண்டு வருஷம் பார்ப்போம். மியூசிக் சரியா வர்லனா திரும்ப பையை தூக்கிட்டு காலேஜூக்கே போயிடலாம் என்ற முடிவோட தான் இசைத் துறைக்கு வந்தேன். ஆனா அப்புறம் திரும்பிப் பார்க்க கூட கடவுள் எனக்கு நேரம் கொடுக்கல.  

எங்கப்பாவோட அந்த கனவை நிறைவேற்ற முடியாம போச்சு. ஆனா எங்க அப்பா இருக்குற வரைக்கும் நான் செய்யுற வேலையை பார்த்து சந்தோஷப்பட்டுட்டு தான் இருந்தார். 


நீங்கள் ஏன் இப்போது வரை முறையாக சங்கீதம் பயில முயற்சிக்கவில்லை?


சினிமாவில் நான் பாட ஆரம்பித்த பிறகு, நான் முறையா சாஸ்திரீய சங்கீதம் பயின்று கச்சேரி பண்றதை பார்க்கணும் என்று அப்பா ரொம்பவே ஆசைப்பட்டார். கண்டிப்பா பண்றேன்னு சொல்லி இருந்தேன்.  ஆனா மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் ஒரு நாளுக்கு ஆறேழு ரிக்கார்டிங்கெல்லாம் பாடிட்டு இருந்ததால, அவரோட அந்த ஆசையை மட்டும் கடைசி வரை நிறைவேற்ற முடியாமலேயே போச்சு.

இப்ப வரைக்குமே சாஸ்திரீய சங்கீதம் கற்றுக்கொள்ள முயற்சி செஞ்சுகிட்டே தான் இருக்கேன். நேரம் கிடைக்கும்போது, ‘எனக்கு ஆதார ஸ்ருதியில இருந்து சங்கீதம் கற்றுக் கொடுங்க’னு யார்கிட்டயாவது போய் கேட்டா, ‘விளையாடாதீங்க சார். உங்களுக்கு தெரியாத சங்கீதமா’னு கேட்டு திருப்பி அனுப்பிடறாங்க. நான் என்ன செய்யுறது சொல்லுங்க? பிஸியா இருக்குறதுனால கத்துக்க முடியலனு சொல்றது எனக்கு நானே துரோகம் பண்ணிக்கிறேனோனும் தோணுது. இனிமே கத்துக்க முடியுமோ முடியாதோ? அதை காலத்துகிட்டயே விட்டுட்டேன். 


இளையராஜா?


வயசுலயும், வித்தையிலயும் எனக்கு சீனியர். சினிமாவில் எனக்கு ஜூனியர். இளையராஜாவுக்கு முன்னாலயே பாரதிராஜா தான் எனக்கு ஃப்ரெண்ட். அவன் பெட்ரோல் பங்க்ல வேலை பார்க்கும்போது தற்செயலா எனக்கு அறிமுகமானான். அவன் நாடகத்துக்கு போய் நான் லைவ்வா பாட்டு பாடுவேன். எனக்கு கொஞ்சம் புல்லாங்குழல் வாசிக்க வரும். அதனால அவன் நாடகத்துக்கு வாசிச்சிருக்கேன். இப்படி நாங்க நண்பர்களானோம். 

அப்ப நான் ஒரு சின்ன கார் வாங்கி இருந்தேன். நானே தான் டிரைவிங். கச்சேரிக்காக எங்க வெளியில போனாலும் பாரதிராஜா என் கூடவே இருப்பான். நிறைய கதைகள் சொல்லுவான். எல்லாமே ரொம்ப அட்வான்ஸ்டு திங்கிங்கா இருக்கும். அவனோட 16 வயதினிலே கதையை நானும் அவனுமே சேர்ந்து தயாரிக்கிறதா முடிவு பண்ணினோம். அப்ப எந்த மொழிப் படமா இருந்தாலும் பெங்களூர்ல ஷூட்டிங் நடத்துனா மானியம் கொடுத்துட்டு இருந்தாங்க. அதுக்காக பெங்களூர்ல ஒரு கம்பெனி ஆரம்பிச்சு வேலை பார்த்தோம். ஆனா ஆரம்பகட்ட ஷூட்டிங் நடத்தக்கூட எங்களால காசு புரட்ட முடியல. அப்புறம் நாலஞ்சு வருஷம் கழிச்சு தான் அவனுக்கு சான்ஸ் கிடைச்சது.

இதுக்கு இடையில நான் நிறைய மேடை கச்சேரிகள்ல பாடிகிட்டு இருந்தேன். அனிருத்தா என்கிறவர் தான் எங்க டீம் லீடர். அவர் தான் முதல் முதலா எனக்கு மேடையில பாடுற வாய்ப்பு தந்தவர். அவர் ஒரு ஹார்மோனியம் ப்ளேயர். கார்பரேஷன்ல வேலை பார்த்துகிட்டு இருந்தார். 

எங்க வீட்டுல நாங்க ஒருநாள் பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தப்ப ‘நாங்க  பாராதிராஜா ஊர்காரங்க. அண்ணன் தான் உங்கள பார்த்துட்டு வர சொல்லி அனுப்பினாருனு மூணு பசங்க வந்தாங்க. ‘யார் யார் என்னென்ன இன்ஸ்ட்ரூமென்ட் வாசிப்பீங்க’னு கேட்டதும், ‘தம்பி ராசய்யா ஹார்மோனியம் வாசிப்பான்’ என்றார் பாஸ்கர். எங்க வாசிப்பானு சொன்னேன்.

ரெண்டு கையிலயும் பெல்லோஸ் போட்டு ரெண்டு கையாலயும், டாக்டர் ஷிவாகோ படத்துல வர்ற லாராஸ் மெலடி தீம் வாசிச்சான்... அசந்துட்டேன் நான். ‘எங்க மியூசிக் படிச்சீங்க’னு கேட்டேன். ‘எங்கயும் படிக்கல’ என்றார். ‘அப்புறம் எப்படி வெஸ்டர்ன் வாசிக்கிறீங்க’னு கேட்டதும், ‘என்னை அறியாமயே வாசிக்கிறேன் சார். எனக்கு மியூசிக் தெரியாது’ என்றார். அடடா இந்த பையனை விட்டுடக் கூடாதுனு மனசு அடிச்சுகிட்டது. ஆனா ஹார்மோனியத்துக்கு ஏற்கெனவே அனிருத்தா இருக்காரேனு சொன்னதும், ‘நான் கிடார் கூட வாசிப்பேன்’ என்றார். அதிலிருந்து எங்கள் குழுவின் கிடார் ப்ளேயர் ஆனார் ராஜா.

அதன்பிறகு அனிருத்தா வேலை காரணமாக எல்லா கச்சேரிக்கும் வரமுடியாமல் போனதால் ராஜா ஹார்மோனிய ப்ளேயர் ஆனார். அமர் சிங் என்ற கங்கை அமரன் கிடாரிலும், பாஸ்கர் ட்ரிபிள் காங்கோவிலும் அமர்ந்தனர். குழு பெயரை ‘பாவலர் சகோதரர்கள்’னு வச்சோம். ஆயிரக்கணக்கான கச்சேரிகள் பண்ணோம். 

அதுக்கு அப்புறம் தான் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட கிடாரிஸ்டா சேர்ந்தார். அப்ப ராஜா கம்போஸ் பண்ணின நிறைய பாடல்கள் ஜி.கே.வெங்கடேஷ் பேரில் வந்தது. அப்பவே ரொம்ப டிசிப்ளினா இருப்பார். அந்த நோட் சரியா வாசிக்கலனு ரிக்கார்டிங்ல யாராவது சொன்னா, ‘திரும்ப போட்டு கேளுங்க. நான் சரியா தான் வாசிச்சிருக்கேன்’னு போல்டா பேசுவார். அவர் இசை மேல அவருக்கு அப்படியொரு நம்பிக்கை எப்போதுமே உண்டு. அவருடைய attitude அப்படி. இப்போது கூட ராஜாவை சில நேரங்களில் தவறாக சிலர் நினைப்பதற்கு அந்த attitude தான் காரணம். 


ராஜாவிடம் பிடித்ததும் பிடிக்காததும்?


ரொம்ப பிடிச்சது அவனோட முயற்சி, டெடிகேஷன், டிசிப்ளின். புயலே அடிச்சாலும் ரிக்கார்டிங்குக்கு அவன் லேட்டா வந்தது இல்ல. 

பிடிக்காதது... அவனை சுத்தி ஒரு சின்ன வட்டம் போட்டுகிட்டு அதுக்குள்ளயே இருந்துட்டான். யாரையுமே கிட்ட நெருங்கவிட்டது இல்ல. அதுக்கு என்ன காரணம்னு அவனுக்கு தான் தெரியும். நாங்க ஆர்கெஸ்ட்ரா வெச்சிருக்கும்போது எவ்வளவு ஜாலியா இருந்தோம். எத்தனை அழகான நாட்கள் அவை. அப்பகூட அவன் ரொம்ப டிசிப்ளினா தான் இருப்பான். மேடையில நான் ஒரு ராங் நோட் பாடிட்டாகூட ‘என்னய்யா நீ... அந்த காந்தாரம் ஸ்ருதி சேராம பாடிட்டியே’னு கோவிச்சுப்பான். தொழில் ரீதியா இது.

பர்சனலா பார்த்திங்கன்னா நானும் பாரதிராஜாவும் தான் இன்னுமே அவனை வாடா போடானு பேசுற ஃப்ரெண்ட்ஸ். அதுவும் நாங்க அவன் கூட தனியா இருக்கும்போது ரொம்ப ஜாலியா ஜோவியலா பேசுவான். மேடைனு வந்துட்டா அவன் வேற. 

எனக்கு என்ன தோணும்னா இவன் கலகலப்பான வாழ்க்கையை மிஸ் பண்றானேனு தோணும். நிறைய பேரை சந்திச்சு, கருத்துக்களை பரிமாறிகிட்டு இன்னும் மகிழ்ச்சியா இவன் இருக்கலாமே. சன்னியாசி மாதிரி எல்லாரையும் விட்டு தூரமா இருக்கானேனு தோணும். அது அவனைப் பொறுத்தவரை கரெக்டா இருக்கலாம். ஆனா ஒரு ஃப்ரெண்டா எனக்கு அப்படி தோணும். 


பாடகர், நடிகர், இசையமைப்பாளர்.. இதில் முழு திருப்தி தந்தது எது?


சார்... நான் ஒரு பாடகராக வரவில்லை என்றால் இது எதுவுமே நடந்திருக்காது. என்னோட ஸ்பெஷல் குவாலிட்டியா எல்லோரும் சொல்றது ஐம் எ வெரி குட் எக்ஸ்பிரசிவ் சிங்கர். அதனால இயல்பாவே எனக்குள்ள ஒரு நடிகன் எப்பவும் இருக்கான். ரிக்கார்டிங்ல பாடும்போது நான் மைக் முன்னால எப்பவுமே நடிக்கத் தான் செய்வேன். 


உங்களுக்குள் இருந்த நடிகனை முதலில் எப்படிக் கண்டுகொண்டார் கே.பாலசந்தர்?


நான் என்னோட ஆந்திரா ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து மேடையிலே ஒரு  20 நிமிஷ மைம் செஞ்சேன். அதை பார்த்த கே.பி. சாருக்கு ஒரே ஆச்சர்யம். டேய்... பெரிய நடிகன்டா நீ. உனக்கொரு கேரக்டர் கொடுக்கணுமேனு சொல்லிகிட்டே இருந்தார். அதன் விளைவா கிடைச்சது தான் ‘மனதில் உறுதி வேண்டும்’ டாக்டர் கேரக்டர்.  

அந்த படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முதல் நாள் எங்கப்பா இறந்துவிட்டார். நான் முறைப்படி மொட்டை அடிச்சு அப்பாவுக்கு எல்லா சடங்குகளும் செஞ்சேன். 15 நாட்கள் கழிச்சு தான் என்னால வீட்டைவிட்டே வெளியில வரமுடியும்ங்கிற நிலை. ஆனா சத்யா ஸ்டூடியோவுல ஆஸ்பிட்டல் செட் போட்டு ரெடியா இருந்தார் கே.பி. சார். அப்ப சுஹாசினி ரொம்ப பிசியான ஆர்ட்டிஸ்ட். அவங்க டேட்ஸ் வேற வாங்கி வச்சிருந்தார். ‘என்னால இந்தப் படம் பண்ண முடியுமானு தெரியல சார்’னு அவருக்கு போன் செஞ்சு சொன்னேன். எனக்காக எல்லா டேட்ஸையும் மாத்தி 15 நாட்கள் காத்திருந்தார் பாலசந்தர் சார். அந்த படத்துல பார்த்திங்கனா கூட மொட்டை அடிச்சு லேசா வளர்ந்த முடியோட தான் இருப்பேன். அதுக்கப்புறம் தமிழ், தெலுங்கு, கன்னடம்னு 65 படம் நடிச்சிட்டேன். 


டைரக்ஷன் பக்கம் இன்னும் வரலியே?


ஆசை இருக்கு. ஒரு படமாவது டைரக்ட் பண்ணிடனும். ஆனா அதுக்கு முன்னால யாருகிட்டயாவது ஒரு படமாவது அசிஸ்டென்ட்டா வேலை பார்த்து சினிமாவை முழுசா கத்துக்கணும். நான் ஒரு இன்டிபென்டன்ட் டைரக்டரா இருக்கணும்னு நினைக்கிறேன். எல்லா டெக்னிக்கல் விஷயங்களையும் கத்துகிட்டு டைரக்டர் ஆகணும். நிச்சயமா டைரக்ட் பண்ணுவேன். 


எத்தனையோ பேருக்கு பாடி இருக்கீங்க. யாருக்கு உங்க குரல் அப்படியே பொருந்திப் போனதா நினைக்கிறீங்க?


ஒரு குரல் யாருக்குமே 100 சதவீதம் பொருந்திப் போகாது. நிச்சயமா இருக்கவே இருக்காது. முதல்லயே பாட்டு ரெக்கார்ட் பண்ணிடறோம். அதுக்கு ரொம்ப அழகா அவங்க நடிக்கும்போது எனக்கும் பேர் கிடைக்குது, அவங்களுக்கும் பேர் கிடைக்குது. அதே சமயத்துல நல்ல பாட்டை கெடுத்த நடிகர்களும் இருக்காங்க. ரிக்கார்டிங்ல உயிரை கொடுத்து பாடியிருப்போம். ஸ்கிரீன்ல அது வரலைனா எல்லாமே வேஸ்ட். ஆடியோவுல கேட்டு தான் சந்தோஷப்படணும்.

காமெடியன்சுக்கு பாடும்போது மட்டும் தான் குரலை மாத்தி ட்ரை பண்ணுவேன். எம்.ஆர்.ராதா அண்ணனுக்கு பாடியிருக்கேன், சுருளிராஜனுக்கு, தேங்காய் சீனிவாசனுக்கு பாடி இருக்கேன். அப்ப மட்டும் தான் லேசான மாற்றம் செய்துப்பேன். மத்தபடி வேற யாருக்குமே குரலை மாற்றிக் கொண்டது இல்லை.  


ஏர்.ஆர்.ரஹ்மான் முதல் சந்தோஷ் நாராயணன் வரை எப்படி இருக்கிறது இன்றைய இசை?


இன்றைய தலைமுறையிடம் திறமைக்கு எந்தக் குறையும் இல்ல. ஆனா அவங்க தங்கள் மனசை டெக்னாலஜி மேல வைக்கிற அளவுக்கு இசை மீது வைக்கிறது இல்ல. அந்த பாடலில் அதன் ஆத்மா வெளிப்படுவதில்லை. அதனால் தான் அந்த காலத்து பாட்டு மாதிரி இல்லனு நிறைய பேர் சொல்றதை இன்றும் கேட்க முடியுது. 

ஒரு படத்துக்காக கம்போஸ் செய்யப்படுகிற பாடல் சார்ட் பஸ்டரில் இருந்தால் போதும்னு நினைக்குறாங்க. அது நீண்ட நாட்கள் நிலைச்சு நிக்குமானு யோசிக்கிறதில்ல. 

அதுக்கு மியுசீஷியன்ஸை மட்டும் குறை சொல்லவும் முடியாது. பாலசந்தர், கே.விஸ்வநாத், மணிரத்னம் போன்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு பாடலை மிஸ் பண்ணினா கதையில் ஒரு லிங்கை தவறவிட்டுவிடுவோம். அந்த அளவுக்கு அது படத்துடன் கலந்து இருக்கும். அந்த அளவுக்கு சேலஞ்சிங்கான சிச்சுவேஷன்கள் கொடுப்பாங்க. இன்றைக்கு அப்படிப்பட்ட பாடல்கள் அதிகம் வருவதில்லை. சாங் ஃபார் த சேக் ஆஃப் சாங். அந்த இடத்தில் ஒரு பாடல் இருந்தாலும் பரவாயில்லை. இல்லையென்றாலும் ஒன்றும் தவறில்லை என்பது போன்ற சிச்சுவேஷன்கள் தான் அமைக்கப்படுகின்றன. அது தான் பிரச்னையே. திறமையான பாடகர்கள், மியுசீஷியன்கள் இருந்தும் நல்ல பாடல்கள் இன்றைக்கு அரிதாகத் தான் அமைகிறது. 


இன்றைய இளம் தலைமுறையின் கம்போசிஷன்களில் பாடுவதற்கு முன் அவர்களை எப்படி கணிக்கிறீர்கள்?


முதலில் பாட்டை எனக்கு அனுப்ப சொல்லிடுவேன். அது அவர்களின் தகுதியை எடை போடுவதற்காக இல்லை. அந்த பாட்டை என்னால பாட முடியுமா முடியாதானு என்னை நானே எடை போட்டுக்க அப்படி சொல்லுவேன். சிலது ஸ்ருதி ரொம்ப ஜாஸ்தி வச்சிருப்பாங்க. என்னால் அந்த உயரத்தை தொட முடியாமல் போகலாம். சில பாடல்களில் இந்த வயசுல நான் பாடக்கூடாத வரிகள் இருக்கும். சிலது சின்னப் பசங்க பாடினா தான் நல்லா இருக்கும், என் குரலுக்கு செட் ஆகாது. இதையெல்லாம் ஜட்ஜ் பண்ண தான் முன்னாடியே பாட்டை அனுப்ப சொல்லி கேட்டுட்டு அப்புறமா முடிவு பண்றேன். ஒரு நல்ல விஷயம் என்னன்னா... இன்னைக்கும் தினமும் ஒரு பாட்டாவது ரிக்கார்ட் பண்ணிடறேன். அது போதும். 


இசையமைப்பாளராக தொடராததற்கு ஏதாவது தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறதா?


அதெல்லாம் ஒன்ணும் இல்ல சார். யாரும் சான்ஸ் கொடுக்கல அவ்வளவு தான். இப்பக்கூட நிறைய பேர் ஏன் சார் பாடுறதை குறைச்சுட்டீங்கனு கேட்குறாங்க. நான் எங்க கம்மி பண்ணேன். யாரும் கூப்பிடறதில்ல. நிறைய திறமையான யங்ஸ்டர்ஸ் பாட வந்துட்டாங்க. நேச்சுரலா வாய்ப்பு குறையத்தான் செய்யும். ஒருகாலத்துல நான் வந்தேன்ல. அப்படித்தான். நெக்ஸ்ட் ஜென்ரேஷனுக்கு ஹேப்பியா வழிவிடணும். 

ஆனா மியூசிக் டைரக்ஷன் ஏன் குறைஞ்சதுன்னு எனக்கு ஐடியாவே இல்ல. தமிழ், தெலுங்கு, கன்னடம் சேர்த்து 70 படங்களுக்கு மேல இசையமைச்சுட்டேன். எந்த படத்துலயும் எனக்கு திருப்தி இல்லாத வேலையை செய்யவே இல்ல. சிகரம் முடிச்சதும் அழகன் பண்ண சொன்னார் கே.பி. சார். ஒரே சிட்டிங், 15 நாள்ல பாட்டு ரெக்கார்ட் பண்ணி வேணும்னு கேட்டார். என்னால முடியாதுன்னு சொல்லி நானே அறிமுகப்படுத்தி வச்சது தான் மரகதமணி. என்னைவிட திறமையானவர்கள் இருந்ததால எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வராம போயிருக்கலாம்னு நினைக்கிறேன். 


பல வருடங்களாக புகைப் பிடிச்சுகிட்டு இருந்த நீங்க ஒரு கட்டத்துல அதை நிறுத்தினீங்க. ஒரு பாடகரா அந்தப் பழக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?


காலேஜ் படிக்கும்போது ஸ்மோக் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் சிங்கர் ஆகி நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த போது, இந்தப் பழக்கத்தை நிறுத்திடணும்னு பல முறை யோசிச்சிருக்கேன். ஆன  அந்தப் பழக்கத்தை விட முடியாம 30 வருடங்கள் தவிச்சேன். கடைசியில என் பொண்ணு தான் அந்தப் பழக்கத்தை நிறுத்த வச்சா. ஒரு நாள் எனக்கு ஏதாவது பிராமிஸ் பண்ணிக் கொடுங்கப்பா என்று கேட்டாள். என்ன வேணும்டானு கேட்டேன். நாளையில இருந்து சிகரெட் பிடிக்கக் கூடாது என்றாள். சரிடானு கையில் அடிச்சு சத்தியம் செஞ்சு கொடுத்தேன். அவ்வளவு தான். அன்னியோட அந்த பழக்கத்தை விட்டுட்டேன். 

நிறைய பாடகர்கள் குரலை பாதுகாப்பதற்காக ஜில்லுனு எதுவும் சாப்பிடாம, புளிப்பு சாப்பிடாம அப்படியே குரலை கடைசி வரை பாதுகாப்பாங்க. என்னைப் பொறுத்தவரை ஜில்லுனு சாப்பிடறதுக்கும் வோக்கல் கார்ட்சுக்கும் சம்மந்தமே இல்ல. முகமது ரஃபி, கச்சேரிக்கு நடுவுலயே அரைகிளாஸ் ஐஸ்கட்டி போட்டு கூல் டிரிங்ஸ் குடிப்பதை பழக்கமாவே கொண்டிருந்தவர். பாலமுரளி சாருக்கு ஐஸ் வாட்டர் இல்லாம இருக்கவே முடியாது. என்னைப் பொறுத்தவரை நம் குரலை பாதிப்பவைகள் புகை, குறைவான தூக்கம், தூசி இவைகள் தான். 

ஒரு சிங்கர் புகைப்பதும், குடிப்பதும் தவறு. நீங்க செஞ்சீங்களேன்னா... நான் செஞ்சேன் தான். அதுக்கு இப்ப என்ன பண்ண முடியும்? என் வாழ்க்கையை திரும்ப ரீவைண்ட் பண்ணி வாழ முடியுமா? நான் தப்பு பண்ணிட்டேன், அதே தப்பை நீங்களும் பண்ணாதீங்க. 


50 ஆண்டு கால இசைப் பயணம் கற்றுக் கொடுத்தது என்ன?


இன்னும் கற்றுக்கிட்டே இருக்கேன். இந்த 50 வருடங்களில் நேர்த்தியை நெருங்கி வந்திருக்கிறேனே தவிர. இன்னும் நேர்த்தியை தொட்டுவிடவில்லை. செய்கிற கலையில் குறைவான தவறுகளை செய்பவன் தான் உலகிலேயே மிச்சிறந்த கலைஞன். 

எனக்கு இருக்குற மிகச்சிறிய ஞானத்துக்கு எவ்வளவு புகழை கொடுத்திருக்கிறார் இறைவன். அதனால் வாழ்க்கையில் எனக்கு அதிருப்தி என்பதே கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். இந்த 70 வயதிலும் கடவுள் ஆசியில் எனக்கு சுகர், பி.பி., என்று எந்த பிரச்னையும் இல்லை. 60 வயதுக்கு மேல் ஒவ்வொரு நாளும் போனஸ் தானே.

இந்த 50 வருடங்களில் தன்னிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். நிறைய பணம் சம்பாதிச்சேன். நிறையவே இழந்தேன். இந்த 50 வருட இசை வாழ்க்கையில் 48வது வருடம் தான் கடனில் இருந்தே வெளியே வந்தேன். தினமும் 5 பாட்டு பாடிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது வீட்டுல சேட்டு காத்துகிட்டு இருப்பான். ஒரு நாள் கூட இன்னிக்கு பணம் இல்ல நாளைக்கு வா என்று சொல்லக்கூடிய நிலைமையை கடவுள் எனக்கு கொடுக்கல. ஐஸ்வர்யம் என்பது பணத்தால வராது. கடன் இல்லாத வாழ்க்கை வாழுறவன் தான் உண்மையான பணக்காரன். 

என் இசையை கேட்டு என்னை வளர்த்துவிட்டவர்களுக்கு நான் நன்றி சொல்ல இந்த ஒரு ஜென்மம் போதாது. இன்னொரு ஜென்மம் வேண்டும். அதிலும் நான் எஸ்.பி.பாலசுப்ரமணியனாகவே பிறக்க வேண்டும். ஒரு நல்ல மனிதானக வாழ்ந்த திருப்தி இருக்கிறது. என் கல்லறையில் ஒரு நல்ல மனிதன் இங்கு உறங்குகிறான் என்று எழுதுங்கள். அது போதும்.


- அருண் சுவாமிநாதன்

Thanks Nishandi

நிஜமாவேவா...

 விளமதும் மாவும் தேமா

வகையென அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
இலகுவாய்ப் புரியு மாறு
இயற்றிட நானும் நாளும்
பலமுறை முயன்றுப் பார்த்தேன்
பயனிலை தோற்றே வீழ்ந்தேன்

தினம்தினம் இதுபோல் நானும்
தவித்திடும் நிலையைக் கண்டு
மனக்குறைப் போக்கும் வண்ணம்
மகிழ்வது கொள்ளும் வண்ணம்
எனதுயிர் நண்பன் ஓர்நாள்
ஒருவழி எனக்குச் சொன்னான்
வினவிடக் கேட்டு நானே
வியப்பினில் உச்சம் போனேன்

"கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்

"இதந்தரு மனையின் நீங்கி"
எனவளர் கவிதை தன்னை
சுதந்திரத் தாபம் கூட்டும்
சுடர்கவி பாடல் தன்னை
நிதமொரு முறையே நீயே
நயம்பட படித்தால் போதும்
மதகதைக் கடக்கும் நீராய்
கவியது பாயும் " என்றான்

தினம்தினம் காலை மாலை
திருத்தமாய் பாடல் தன்னை
மனனமே செய்தல் போல
மகிழ்வுடன் சொல்லச் சொல்ல
தனத்தனத் தான தான
எனுமொலி இயல்பாய் என்னுள்
இணக்கமாய் இணைந்து கொள்ள
உடன்கவி பிறக்க லாச்சு

இங்கணம் இப்போ தெல்லாம்
எப்பொருள் குறித்தும் பாட
சங்கடம் கொள்வ தில்லை
சந்தமே முதன்மை யென்னும்
சங்கதி அறிந்த தாலே
சஞ்சல மேதும் இல்லை
இம்முறை முயன்றால் நாளும்
இன்கவி பெறலாம் யாரும்

Friday, September 25, 2020

YES.B.B......யே.

 தனிமையில்

ஏகாந்த சுகத்தை

சுவைக்க நிலைக்க

முயன்ற போதெல்லாம்

உன் குரலே எமக்குப்

பற்றுக்கோடாய்ப் பிரணவமாய் ....


வெறுமைப் பாலையில்

வெம்பிக் கிடந்து

சோர்ந்த வேளையில்

திசைதெரியாது தவித்தச் சூழலில்

உன் பாடலே எமக்குச் 

சாமரமாய் பெரும் சாரலாய்....


களிப்பு மிகக்

கூட்டமாய்

கொண்டாடிய தருணங்களில்

சுப வேளைகளில்

உன் தீந்தமிழே எமக்குள்

சுக ஊற்றாய்..தென்றல் காற்றாய்..


பேரிழப்புச் சுழலில்

சிக்கித் திணறிச்

செய்வதறியாது

சின்னாபின்னமாகித் தவிக்கையில்

உன் மென்ராகமே எமக்கு

மயிலறகாய்..தாயின் அரவணைப்பாய்.


இன்னும்.......


வெகு தூரப் பயணத்தில்.

உற்ற தோழனாய்


தூக்கம் வரா

பின் இரவுகளில்

அன்புத் தாதியாய்...


நகராப் பொழுதுகளை

நகர்த்தி எறியும்

நெம்பு கோலாய்...


இப்படி

உன்னோடு நாங்கள் கொண்ட

உறவுகளை

உளப் பாங்கான

உணர்வுகளை

எண்ண எண்ண...


இதயம் கிழிபடுவதை

கண்களில்

குருதி பெருகுவதைத்

தவிர்க்க இயலவில்லை...


அடிமைப்பெண்ணில்

துவங்கி

அண்ணாத்தை வரை என

தரவினை வேண்டுமானால்

காலன் முடித்து வைக்கலாம்


தேனூறிய குரலால் 

செவி வழி

அன்பு தோய்ந்த சிரிப்பால் 

விழிவழி

நுழைந்து...

இதயத்தில் நிலைத்திட்ட 

உன்னை காலனால்

உலகிலிருந்து எப்படிப் பிரித்துவிட முடியும்


எண்ணத்தால்

பேச்சால்

செயலால்

எப்போதும்

நேர்மறையாகவே வாழ்ந்த

Y.ES.பி,பியே


காற்றில்

பிராணவாயு இருக்கும் வரை

நீயும் இருப்பாய்.....


ஆம்

தமிழாய்

இசையாய்

எஸ்.பி.பி யாய்

என்றென்றும்....


ஆம்

இன்று போல் என்றென்றும்

Tuesday, September 22, 2020

முனை சேரா முக்கோணம்.

இறக்கைகள் இன்னும்

கொஞ்சம் வளரணும்

அப்போதுதான்

வெகுதூரம் பறந்து தப்பிக்க இயலும்

என எண்ணியபடி

சீட்டை எடுத்து கொடுத்து

கூண்டுக்குள் அடைந்தது

சோலையை மனதில் கொண்ட

அந்த ஜோதிடக் கிளி...


இறக்கைகள் இன்னும்

கொஞ்சம் வளரணும்

அப்போதுதான்

பிய்த்தெடுக்கத் தோதாகும்

என எண்ணியபடி

சீட்டைப்படிக்கத் துவங்கினான்

கிளிஜோதிடம் தவிர்த்து 

வேறு ஏதும் அறியா 

அந்தக் கிளி ஜோதிடன்


கெட்ட நேரம் விலக

இன்னும் ஆறுமாதம் ஆகும்

அப்போதுதான் நினைத்த காரியம்

பலிதமாகும் என்ற

ஜோதிடனின் வாக்குக் கேட்டு

உடன் போதலை

ஆறுமாதம் தள்ளிப் போடத் தீர்மானித்தாள்

பொறுப்பற்ற பெற்றோருக்குப் பிறந்த

சித்தாள் செண்பகம்

Sunday, September 20, 2020

படித்தால் உங்களுக்கும் பிடிக்கலாம்

 மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.


 அந்த நேரத்தில், ஒரு மனிதன் தனது ஒன்பது முதல் பத்து வயது மகளுடன் வந்து முன் மேஜையில் அமர்ந்தார்.


 அவரது சட்டை சேறும் சகதியுமாக இருந்தது, முதல் இரண்டு பொத்தான்கள் காணவில்லை.  சாலையின்  வேலை செய்யும் ஒரு தொழிலாளி போல் இருந்தது, சிறுமியின் ஃபிராக் கழுவப்பட்டு சுத்தமாக இருந்தது, அவள் தலைமுடியை எண்ணெயிட்டு சுத்தமாக வைத்திருந்தாள்.


 அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தோன்றியது.  ஹோட்டலின் முழு அழகையும் அவள் ரசிப்பதை நாங்கள் கவனித்தோம்.  மேலே இருந்து குளிர்ந்த காற்றை வழங்கிய விசிறியின் மீது அவள் கண்கள் ஒரு கணம் ஓய்வெடுத்தன.


 குஷன் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சற்று எழுந்து அவள் அதை ரசிப்பதைக் கண்டோம்.


 பணியாளர் இரண்டு பெரிய கண்ணாடி குளிர்ந்த நீரை அவர்களுக்கு முன்னால் வைத்தார்.


 அவர் தனது மகளுக்கு ஒரு மசாலா தோசை கூறினார்.  அவன் அதைக் கேட்டதும், அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மீண்டும் தெளிவாகியது.


 உங்களுக்கு என்ன வேண்டும்?  என்று பணியாளர் கேட்டார்.


 எனக்கு எதுவும் தேவையில்லை: அவர் பதிலளித்தார்.


 சற்று நேரத்தில், சட்னி மற்றும் சாம்பருடன் ஒரு சூடான, காரமான மசால் தோசை வந்தது,

 சிறுமி தோசை சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தாள், அவர் அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே குளிர்ந்த நீரைப் பருகினார்.


 பின்னர் அவரது அலைபேசி ஒலித்தது.  இது பழைய மாடல்.   மறுபக்கம் அவரது நண்பர் என்று தோன்றியது.  

இன்று தனது மகளின் பிறந்த நாள் என்றும் அவர் அவளுடன் ஹோட்டலில் இருப்பதாகவும் கூறினார்.


 பள்ளியில் முதல் இடத்தை வென்றால், பிறந்தநாளன்று ஹோட்டலில் இருந்து தனது மசாலா தோசை வாங்கி தருவதாக  முன்பு உறுதியளித்ததாகவும், அவர் முதல் இடத்தை வென்றதால் இப்போது அவர் தனது வார்த்தையை கடைப்பிடிக்கிறார் என்றும் அவர் கூறினார்.


 (அவர் பேசியது தெளிவாக கேட்டது)… இல்லை, நாங்கள் இருவரும் எப்படி சாப்பிட முடியும்?  எங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?  சில நாட்களாக எனக்கு எந்த குறிப்பிடத்தக்க வேலையும் இல்லை, வீட்டில் என் மனைவி தயாரித்த சாப்பாடு  உள்ளன. எனக்கது போதும்.


 இதற்கு முன் காட்சியையும் உரையாடலையும் கேட்ட நான், எனது தேனீரை என் உதடுகளுக்கு கொண்டு வந்த சூடான தேநீர் நாக்கு எரிந்தபோது அவர்களிடமிருந்து கண் அகற்றப்பட்டது. 


 யார் பணக்காரராகவோ அல்லது ஏழையாகவோ... தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வர் என்பதை நான் உணர்ந்தேன்.


 நான் எழுந்து கவுண்டருக்குச் சென்று எங்கள் ஐஸ்கிரீம் மற்றும் தேநீருக்கான பணத்தைத் தவிர இரண்டு மசாலா தோசைகளுக்கான பணத்தை ஒப்படைத்தேன்.


 அவர் தந்தையையும் மகளையும் சுட்டிக்காட்டி மெதுவாக கடைக்காரரிடம் கூறினார்


 'அந்த மனிதனுக்கு இன்னொரு தோசை கொடுங்கள், அவர் பணம் கேட்டால்,' இன்று உங்கள் மகளின் பிறந்த நாள், அவள் பள்ளியில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறாள், எனவே இது ஹோட்டலில் இருந்து உங்கள் மகளுக்கு கிடைத்த பரிசு.  இதை இன்னும் சிறப்பாகப் படிப்பதற்கான ஊக்கமாக இதை நாம் கருத வேண்டும்.  அவருக்கு இலவசம் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், அது அவரது நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும். "


 ஹோட்டல் உரிமையாளர் புன்னகைத்து, "இந்த பெண்ணும் அவளுடைய தந்தையும் இன்று எங்கள் விருந்தினர்கள். அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. இந்த பணத்தை வேறு சில தொண்டு நிறுவனங்களுக்கும் அல்லது இது போன்ற பிற தேவைக்கும் பயன்படுத்தலாம்."


 பணியாளர் மற்றொரு தோசை மேசையில் வைத்தார், நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.

 சிறுமியின் தந்தை திடீரென்று அதிர்ச்சியில் அவரிடம், "நான் ஒரு தோசை சொன்னேன், எனக்கு இது தேவையில்லை" என்று கூறினார்.


 பின்னர் ஹோட்டல் உரிமையாளர் அருகில் சென்று, “உங்கள் மகள் பள்ளியில் முதலில் வருவதற்கு இது எங்கள் பரிசு,

 நீங்கள் ஒவ்வொருவருக்கும், மசாலா தோசை இன்று ஹோட்டலின் வகை. '


 தந்தையின் கண்கள் விரிந்தன, அவர் தனது மகளை நோக்கி, "பார், மகளே, நீ கடினமாகப் படித்தால் வாழ்க்கையில் இது போன்ற பல பரிசுகளைப் பெறலாம் என்று பாருங்கள்."


 அவர் ஒரு பேக் பண்ண முடியுமா என்று பணியாளரிடம் கேட்டார்.  அவர் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது மனைவியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், அதை சாப்பிட அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறினார்.


 "இல்லை,  நீங்கள் அதை இங்கே சாப்பிடலாம். வீட்டிற்கு  நான் இன்னும் 3 தோசையும் ஒரு இனிப்பு  பொதி யும் பேக்செய்கிறேன்."


 இன்று நீங்கள் வீட்டிற்குச் சென்று உங்கள் மகளின் பிறந்தநாளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் இனிப்புகளுடனும் கொண்டாடுங்கள், அவளுடைய நண்பர்களை அழைக்கவும், அதில் எல்லா மிட்டாய்களும் இருக்கும். '


 இதையெல்லாம் கேட்டபோது, ​​என் கண்களில், மகிழ்ச்சியால் கண்ணீர். 


ஒரு நல்ல செயலைச் செய்ய ஒரு சிறிய படி எடுப்பதில் எங்களுடன் சேர பல மனிதாபிமான மக்கள் முன்வருவார்கள் என்பதை உணர்ந்தேன்.


 படித்ததில் பிடித்தது.💐💐

உங்களுக்கும் பிடிக்குது தானே.ர

Saturday, September 19, 2020

BIG BOSS

பால்கனியே
பூங்கா ஆகிப்போக

பிக் பாஸ்கெட்டே
மார்கெட் ஆகிப் போக

செல்போனே
சமூகத் தொடர்பென ஆக

முன்பு
சிலிர்ப்பூட்டிய
சுவாரஸ்யப்படுத்திய

பிக் பாஸ்
இப்போது

சலிப்பூட்டுவதாக
மிக மிக எரிச்சலூட்டுவதாக.                                   
இருக்கவே சாத்தியம் அதிகம்..
ஆம் 
வெளியிலிருந்து
கூண்டுக்குள் இருப்பதைப்
பார்க்கிற சுவாரஸ்யம்....

கூண்டுக்குள் இருந்து
கூண்டுக்குள் பார்க்கச் சாத்தியமா என்ன ?

எம்.ஜி.ஆரின்.கதையும் நம் பதிவரின் கதையும் ( 4)

ஒரு கதையைத் தழுவிப் படம் எடுப்பதுண்டு..ஒரு கதையின் பாதிப்பில் படம் எடுப்பதும் உண்டு..                                                      நம் பதிவர் ஜி.எம்.பி. அவர்கள் 1963ல் எழுதிய அவர் இப்போது பதிவு செய்திருக்கும் கடைசி பக்கங்களைக் காணோம் என்கிற கதையும் 1968 ல் எம்.ஜி.ஆர் அவர்கள் கதையென வந்த கணவன் என்கிற படத்தின் கதையும் மேற்குறித்த இரண்டில் எதற்குப் பொருந்தும் என யோசித்தால்   .........................                                       நிச்சயம்  கணவன் படத்தைப் பார்த்தவர்களுக்கு முதலில் சொன்னதுதான் ஒப்புக் கொள்ளும்படியாய்  இருக்கும் என்பதில்  எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.                                எம்.ஜி ஆர்  அவர்கள் இப்போது இருந்தால் ஒத்த சிந்தனை என்பது சாத்தியம் என்றாலும் கூட. நம் பதிவர் ஜி.எம்..பி அவர்களை நேரடியாக அழைத்துக் கௌரவித்திருப்பார் என்பது என் திடமான  நம்பிக்கை.                                                                               சந்தேகம் உள்ளவர்கள் அவர் பதிவு செய்துள்ள கடைசிப் பக்கங்களைக் காணோம் என்கிற நாடகம் முழுவதையும் ஒருமுறைப் படித்துப் பின் ஒரு  முடிவுக்கு வரலாம்..                                                                                   1963 லேயே 1968 ம் வருடச் சூழலுக்கு அதுவும் புரட்சித் தலைவருக்குப் பொருந்தும்படியான ஒரு கதையை நாடகமாக எழுதிய நம் மூத்த பதிவர் ஜி.எம்..பி அவர்களுக்கு நம் பதிவர்கள் அனைவரின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளைப் பதிவு செய்வதில் மிக்க பெருமிதம் கொள்கிறேன்                                                                                   (படம் பார்க்காது பதிவை மட்டும் படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்காக இப்படத்தின்  கதைச் சுருக்கத்தையும் கீழே பதிவு செய்துள்ளேன்)                                                                                                                             Kanavan (About this soundpronunciation (help·info) English: The Husband), is a 1968 Indian Tamil film, directed by P. Neelakantan, starring M. G. Ramachandran in the lead role and Jayalalithaa, with C. R. Vijayakumari, S. A. Asokan, Cho among others. The film was dubbed into Hindi as Aakhri Nishan.[1]


Kanavan

கணவன்

Kanavan film poster.jpg

Film Poster

Directed by

Pa.Neelakandan

Produced by

Sadayappan

Written by

Sornam

Story by

M. G. Ramachandran

Starring

M. G. Ramachandran

Jayalalitha

C. R. Vijayakumari

S. A. Asokan

R. S. Manohar

Cho

Music by

M. S. Viswanathan

Cinematography

V. Ramamoorthy

Edited by

G. D. Joshi

Production

company

Valli Films

Distributed by

Valli Films (Madras)

Release date

15 August 1968

Country

India

Language

Tamil

Plot Edit

Vellaiya was falsely accused for murdering cashier Ganapathy. Meanwhile. Rani a wealthy daughter of Chidambara Pillai, who hates marriages wand wants to be freed from humiliated Manogar, who comes to see Rani after Chidambara Pillai invitation. Manogar gets angry and insults Chidambara Pillai on Rani's behavior. Chidambara Pillai, gets heart-attack and writes a will based on Manager Mani's advise and dies. To inherit, Rani (Jayalalithaa), has to marry in urgency. She chooses a person sentenced to death, the good Velaiya (MGR). Vellaiya though reluctant initially, he marries Rani. However, due to twist of incident, Vellaiya acquitted at the last minute, Velaiya comes to settle down with his beautiful Rani.


He has decided well to give her a lesson in the hardness of life



அ ன்பின் ரமணி சாருக்கு 

 இந்த நாடகம்  நான் 1963 வாக்கில் மேடை  ஏற்றியது  நன்றி வணக்கம்   ...GMB



Thursday, September 17, 2020

எம்.ஜி.ஆரின் கதையும் நம் பதிவர் கதையும் (3 )

 நான் மதுரையை விட்டு பல ஊர்களுக்கு

சிறு வயதில் போய் வந்திருந்தாலும் கூட

என்னுடைய கல்லூரி நாட்களில்,தான்

சென்னை வரும் வாய்ப்புக் கிடைத்தது


அதுவரை நான் அறிந்திருந்ததெல்லாம்\

சினிமா காட்டிய சென்னைதான்.....


சினிமாவில் சென்னை என்றாலே

அந்த எல்.ஐ.சி கட்டிடத்தையும்

கடற்கரையையும் தவறாது காட்டுவார்கள்.


அந்த வகையில் சென்னை வந்ததுமே

என் வயதொத்த எல்லோரும் விரும்பி முதலில்

சென்ற இடம் மெரினா கடற்கரைதான்


மாலை நேரமாகவும்/ இருக்கும் நேரம்

அதிகம் இருந்ததாலும் /விடுமுறை நாள் 

என்பதால் கூட்டம் அதிகம் இருந்ததாலும்

நாங்கள் கற்பனை செய்து வைத்திருந்ததை விட

கடற்கரை மிக மிக அற்புதமாக இருந்தது.


இங்கு வரும்வரை கடலில் குளிக்கும்

எண்ணம் ஏதும் இல்லாதிருந்தபோதும்

பலர் கடலில் குளிப்பதையும் அலைகளில்

அழகாய் மிதந்து நீந்துவதைப் பார்த்ததும்

எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கும் நீந்தும்

ஆசை வந்துவிட்டது.


குளம் கண்மாய் கிணறு என நீச்சல் அடித்துப்

பழக்கமிருந்தாலும் கடலில் அதுவரை நீந்திப்

பழக்கமில்லை.ஆயினும் இளமை முறுக்கு தந்த

தைரியமா அல்லது முன்னால் நீந்திச் செல்லுகிறவர்கள்

கொடுத்த தைரியமா அல்லது இரண்டுமா

எனத் தெரியவில்லை.``


நானும் என் நண்பனும் தைரியமாக கடலில்

இறங்கிவிட்டோம்.அலைகள் வருகையில்

கரைப்பக்கம் தள்ளிவிடாது உடலை தூக்கிக்

கொடுக்க வேண்டும் என்கிற செய்தி முன்னமேயே

தெரிந்திருந்ததால் விறுவிறுவென கடலுக்குள்

நீந்திச் செல்ல ஆரம்பித்தேன்..


சிறிது நேரத்தில் கடற்கரையில் சப்தமாய்

சிலர் கத்தி அழைப்பது போல் சப்தம் கேட்டது

என்னவென்று திரும்பிப் பார்க்க அதிர்ந்து போனேன்

ஒரு கணம் இருளடித்தது போலாகிவிட்டது


காரணம் நான் கரையை விட்டு வெகுதூரம்

வந்திருந்தேன்.உடன் வந்த நண்பன் பாதி வழியிலேயே

திரும்பிக் கொண்டிருந்தான்.முன்னான் நீந்தி

அசட்டுத் தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்

என்னிலும் வெகு தூரம் போயிருந்தார்கள்.


ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு 

மெல்ல மெல்ல கரை நோக்கி நீந்தி வந்து சேர்ந்தேன்


பின் எல்லோரும் எனக்கு தேறுதல் சொல்லி

ஆசுவாசப்படுத்தும்படியாக என் மன நிலை

இருந்தது..


உடன் நீந்து வந்த நண்பன் மட்டும்

"எந்த தைரியத்தில் முன் பின் பழக்கம்

இல்லாத போதும் கடலில் இவ்வளவு

தூரம் நீந்தி போனாய் " என மிகச் சரியான

கேள்வியைக் கேட்டான்.


"எனக்கு முன்னால் நீந்திச் சென்றவர்கள்

கொடுத்த அசட்டுத் தைரியம்தான்.வேறில்லை "

என்றேன்..


இந்த நிகழ்வை இங்கு சொல்வதற்குக்

காரணமிருக்கிறது


நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும்

எனக்கு உள்ள எழுத்து ஆர்வம் குறித்தும்

வாசிக்கும் விருப்பம் இருக்கும் நேசம் குறித்தும்

அறிந்திருந்த எனது மகள் வலைத்தளம்

ஒன்று இருக்கிறது அதில் எழுத்தத் தெரிந்தவர்கள்

நிறையப் பேர் நிறைய விஷயம் குறித்து

எழுதுவார்கள். உனக்குப் படிக்க அது பிடிக்கும்

நீயும் விரும்பினால் அதில் எழுதலாம் என

ஒரு கணினியும் வாங்கி கொடுத்து 

வலைத்தளத்தையும் உருவாக்கிக் கொடுத்தாள்.-


நான் தொடர்ந்து வலைத்தளத்தில்

வரும் பதிவுகளைப் படித்தும் பின் நானும்

கொஞ்சம் கொஞ்சமாய் எழுதத் துவங்கி

இப்போது ஆயிரத்து ஐநூறுக்கும் மேலாக

எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்குக்

காரணம்........


எனக்கு ஏதோ நீச்சல் தெரியும் என்றாலும்

கடலில் அவ்வளவு தூரம் அசட்டுத் தைரியத்தில்

நீந்தியதற்குக் காரணம் எனக்கு முன்னால்

நீந்திச் சென்ற நன்றாக கடலில்  நீந்தத்

தெரிந்தவர்களே...


அந்த வகையில் வலைத்தளத்தில் அவ்வளவு

பரிச்சியம் இல்லை என்றாலும் இத்தனை

பதிவுகள் எழுதக் காரணம் ....


சிறந்த பதிவுகள் எழுதியும் 

எழுதுபவர்களை மிகவும் ஊக்கப்படுத்திய 

பல இளைஞர்கள் என்றாலும் கூட....


நான் ஊக்கம் கொண்டது என்னிலும்

வயது கூடிய என்னிலும் சிறப்பாகவும்

விடுதல் இன்றி தொடர்ந்து அனைத்து வகையாகவும்

எழுதி ஆச்சர்யப்படுத்திய நான்கைந்து பேர்

அதுவும்  என் வயது கடந்தவர்கள் தான் 

என்றால் அது மிகையில்லை


அதில் ஒருவரே இந்த பதிவுக்குக் காரணமானவர்

அவர் தன்னைத் தானே இப்படி மிகச் சரியாக

அறிமுகம் செய்து கொண்டிருப்பார்.


81 இயர்ஸ் யங் அண்ட் விப்ரண்ட் பர்டிகுலர்

அபவுட் வேல்யூஸ் இன் லைஃப் லவ் ஆல்...


சூரியன் உதிக்கும் திசை இதுவெனச் சொல்லி

திசையையும் காட்டியபின் கிழக்கு என்பது

உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் தானே


(தலைப்பில் குறிப்பிட்டுள்ளதில் எம்.ஜி.ஆரின்

கதை குறித்தும் அதன் சிறப்புக் குறித்தும்

நம் பதிவர் குறித்தும் எழுதி விட்டேன்


அடுத்து அந்தக் கதைக்கும் நம் பதிவர் கதைக்கும்

அப்ப்டி என்ன சம்பந்தம் குறித்து அடுத்த பதிவில்..

நிச்சயம் அது ஏன் இவ்வளவு பெரிய பதிவாக

முக்கியம் கொடுத்து எழுத வேண்டும் என்கிற

கேள்விக்கு சரியான பதிலாக அமையும் ) 

Tuesday, September 15, 2020

எம்.ஜி.ஆரின் கதையும் நம் பதிவர் கதையும் ( 2 )

 தலைப்பில் சொன்னது போல்

எம்.ஜி.ஆரின் கதைக்கும் நம் பதிவர் கதைக்கும்

என்ன தொடர்பு ? அந்தப் பதிவர் யார் ? என

சென்ற பதிவை முடித்திருந்தேன்...


நல்ல சுவையான தண்ணீர் ஆயினும்

நெல்லிக்கனியை உண்டபின்  குடித்தால் கொஞ்சம்

கூடுதல் சுவை கிடைக்கச் சாத்தியம் உண்டு

அதைப் போல் முன் பதிவைப் படித்தபின் இதைப் படிக்க

கூடுதலாய் இரசிக்கவும் சாத்தியம்..உண்டு.


சரித்திரத்தை கி.மு. கி.பி என

பிரித்துக் கொள்வது எப்படி புரிந்து கொள்ள

வசதிப்படுகிறதோ அதைப் போலவே

தமிழகத்தைப் பொருத்தவரை இலக்கியமோ

அரசியலோ சினிமாவோ சமூகச் சூழலோ

மக்களின் மனோ பாவமோ எதுவாயினும்

அறுபத்து ஏழுக்கு முன் அதற்குப் பின்

என பிரித்துப் பார்க்கப் பழகிக் கொண்டோமேயானால்

எதையும் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும்


ஏனெனில் அறுபத்தி ஏழுக்குப் பின்

தமிழகத்தைப் பொருத்தவரை அனைத்து துறையிலும்

மிகப் பெரிய மாற்றமிருந்தது.


மிகப் பெரிய மாற்றம்

என்பதை விட இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும்

என்றால் தலைகீழ் மாற்றமிருந்தது 

எனக் கூடச் சொல்லலாம்..


குறிப்பாக சினிமாத் துறையில்.....

அதன் கதைப் போக்கில்..கதை சொல்லும் விதத்தில்..


சமூகப் படங்கள் எடுக்கத் துவங்கியபின்

ஏறக்குறைய எல்லாத் திரைப்படங்களின்

கதையமைப்பும் நல்லதாக இருக்கிற சூழல்

யாரோ ஒருவரின் தலையீட்டால்,

அல்லது எதோ ஒன்றின் காரணமாக

மிக மோசமான நிலையடைதலும் பின்

அது படிப்படியாய் சீரடைந்து முடிவில்

பழைய நிலையை அதாவது பழைய 

நல்ல நிலையை அடைவது போலவும் இருக்கும்


யாரோ ஒருவரின் தலையீட்டால் என்பது

அதிகமாக வில்லனின் தலையீட்டால் பெரும்பாலாக

எம்.ஆர். இராதா அவர்களின் தலையீட்டால் இருக்கும்


ஏதோ ஒன்றின் தலையீட்டால் என்பது

புதிய நாகரீகமாக இருக்கும்/ ஆணவமாக இருக்கும்

பேராசையாக இருக்கும்...


(பிரச்சனையை மையமாக ஒரு வரிக் கதையாக

வைத்து பின் விரிவு படுத்திய கதைகள் எல்லாம்

எண்பதுக்குப் பின்தான். )


அந்த வகையில் அமைந்த கதைகளுக்கு

சிறுகதையைப் போல பிரச்சனையை முன் சொல்லி

பின் அந்தப் பிரச்சனையை விளக்கி முடிவாக

தீர்வைச் சொல்கிற பாணி சரிப்பட்டு வராது

என்பதால்..


நாவல் போல்  முதலில் விஸ்தாரமாக 

சூழலை விவரித்துப் பின் அந்தச் சூழலில் ஏற்படும் 

பிரச்சனையைக் காட்டி பின் படிப்படியாய்

சுவாரஸ்யமாய் அதை விடுவிக்கும் பாணியே

அதிகம் கையாளப்பட்டது...


அந்தச் சூழலில் அதாவது அறுபத்து எட்டாம்

ஆண்டில் எம்.ஜி.ஆர் அவர்களின் கதை என்கிற

அடையாளத்தோடு வந்த கணவன் என்கிற படமே

சிறுகதை பாணியில் இருந்தது


 ஆம் சிறுகதை பாணியில் படத் துவக்கத்திலேயே

செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனை பெற்ற

ஒருவரைக் காட்டி...... 


அவரைத் திருமணத்தில் ஆர்வமே இல்லாத/

ஆண்கள் மீது வெறுப்புக் கொண்ட/ 


திருமணம் செய்து கொண்டால்தான் தான்

பயன் பெற முடியும் என்பதற்காக/


தன் தாலி அறுந்தாலும் பரவாயில்லை

என ஒரு யுவதி திருமணம் செய்து கொள்வதும்

பின் ஆண் வெறுப்பும் ஆணவமும்

எப்படிப் படிப்படியாய் சரிசெய்யப்படுகிறது

அல்லது அடக்கப்படுகிறது எனத் தொடரும்...


இந்த வித்தியாசமான பாணியை துவக்கி

வைக்கிறோம் என்பதாலேயே எந்தப் படத்திற்கும்

பெரும்பாலாக திரைக்கதை விஷயத்தில்

முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிற

புரட்சித் தலைவர் அவர்கள் முந்தைய

படங்களில் தன்னை கதை விஷயத்தில்

முன் நிறுத்தாத எம்.ஜி.ஆர் அவர்கள்

இதில் தன்னை கதாசிரியராக முன் நிலைப்

படுத்திக் கொண்டார் என்பது என் எண்ணம்


அந்த வகையில் சிறப்புப் பெற்ற 

வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட

படம் கணவன் என்பதைச் சொல்லவே

எம்.ஜி.ஆரின் கதை எனத் தலைப்பிட்டிருந்தேன்


அதன்படி தலைப்பில் முதல் பாதி சரி...

பின் பாதி....


யார் அந்தப் பதிவர்...அவருக்கும் கணவன்

படக் கதைக்கும் என்ன சம்பந்தம்....


நீளம் கருதி அடுத்தப் பதிவில்...  

Sunday, September 13, 2020

எம்.ஜி.ஆரின் கதையும் நம் பதிவரின் கதையும்

ஆகஸ்ட் 15 1968 ஆம் நாள் காலை.

சுமார் எட்டு மணிக்கே ஆசியாவிலேயே

பெரிய தியேட்டர் எனப் பெயர்பெற்ற மதுரை

தங்கம் தியேட்டர் டிக்கெட் கவுண்டரில்

நாங்கள் டிக்கெட் எடுக்க மூச்சுத்திணற வைக்கும்படியான

கூட்டத்தில் முட்டி மோதி முன்னேறிக் கொண்டிருந்தோம்..


ஆம் என்னைப் போன்ற எம்.ஜி.ஆரின் 

தீவிர ரசிகர்களுக்கெல்லாம் அவரின் படம் 

வெளியாகிற அன்றே முடிந்தால் முதல் ஷோவே

பார்ப்பதே ஒரு பெரும் கெத்து.


போலீஸ் அடிவாங்கி சட்டை கசங்கி சமயத்தில்

கிழிந்து டிக்கெட் எடுக்கும்படியான நிலை

என்ற போதும் கூட அதைப் பார்த்து விட்டு

ஊரில் தெருவில் முதல் நாள் முதல் ஷோ

பார்த்துவிட்டேன் என சக நண்பர்களிடம்

பீத்துவதில் உள்ள சுகம் கெத்து அது

அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்


அந்த வகையில் அன்று எம்.ஜி.ஆரின்

கணவன் என்கிற படம் ரிலீஸ் ஆகி இருந்தது

அவர் நடிப்பில் வந்த படத்துக்கே கூட்டம் அள்ளும்

இந்த படத்திற்கு கதை எம்.ஜி.ஆர் என வேறு

போட்டிருந்ததால் கூட்டம் எக்கிக் கொண்டிருந்தது


எழுபது பைசா கௌண்டர் அதை அடுத்து எண்பது

பைசா அதை அடுத்து ஒரு ரூபா பத்து பைசா

கவுண்டர் என வரிசையாக இருக்கும்


முதலில் குறைந்த டிக்கெட் என்பதால் எண்பதில்தான்

அதிகக் கூட்டம் இருக்கும்.முதலில் அதைத்தான்

கொடுக்கவும் செய்வார்கள்.அது முடிந்ததும் அந்த டிக்கெட்

கிடைக்காதவர்கள் சட்டென கம்பித் தடுப்பை

அவர்கள் இருப்பிடத்திலிருந்து அப்படியே

இருக்கிற மேல் இடைவெளியில் அடுத்த

கவுண்டருக்கு லாவகமாக்த் தாண்டுவார்கள்.


அவர்கள் அப்படித் தாவி இறங்குவது

பெரும்பாலும் நம் தலையாகவோ நம்

முதுகாகவோ கூட இருக்கும்.. போலீஸ்

கவுண்டருக்கு வெளிப்பகுதியில் இருப்பதால்

அவர்களால் இதைத் தடுக்க எதுவும்

செய்ய முடியாது.


இந்தக் களேபரத்தில் கழுத்துச் சுளுக்கு

கைகால் சேதாரம் எல்லாம் சர்வ சாதாரணம்.

அதை இரசிகர்கள் வீரத் தழும்பாகவே

ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெற்றிருந்ததால்

நாங்களும் அந்தப் பக்குவத்தோடும்

பெருமிதத்தோடும் தியேட்டருக்குள் போய்

மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் என்ற எழுத்து

வந்ததுமுதல் இறுதிக் காட்சிவரை

விசிலடித்து ஜிகினா பேப்பர் கட்டிங் தூவி

சூடம் காண்பித்து பெரும் ஆரவாரத்தோடு

படம் பார்த்து வெளியில் வந்தால்.......


முதலில் இருந்ததை விட இப்போது

போலீஸ் அதிகம் இருந்தது...இரண்டு மூன்று

போலீஸ் லாரிகள் வேறு ஆயுதம் ஏந்திய

போலீஸோடு இருந்தது..


பயந்து வேகமாக வெளியே வந்து

என்ன வென்று விசாரித்தால் போன

காட்சியில் டிக்கெட் கவுண்டரில்

கூட்ட நெரிசலில் இரண்டு பேர்

நசுங்கிச் செத்ததாகச் சொன்னார்கள்.


நாங்கள் நல்லவேளை அது நாமாக

இல்லாமல் போனோமே என

ஆண்டவனுக்கு வானம் பார்த்து

ஒரு கும்பிடு போட்டு நடக்கத் துவங்கினோம்


அப்போது அங்கு கடையோரம்

நின்றிருந்த ஒரு பெரியவர்

"சும்மாவே ஆடறவன் கொட்டடிச்சா

சும்மாவா இருப்பான்.

அவர் நடிப்பு மட்டும்னாலே கட்டி ஏறுகிறவன்.

கதை வேற அவருன்னா ...

இப்படித்தான் ஆகும் " என

யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.


அது சரி..அது என்ன கதை ?

அது எம். ஜி ஆர் தன் கதை என சொல்லிக்

கொள்ளும்படியாக அதில் என்ன சிறப்பு ?


அதெல்லாம் கூட இருக்கட்டும்

தலைப்பில் சொன்னது போல் 

எம்.ஜி.ஆரின் கதைக்கும் நம் பதிவர்

கதைக்கும் என்ன தொடர்பு ?

அந்தப் பதிவர் யார் ?  ....


நீளம் கருதி அடுத்தப் பதிவில்...

...

Saturday, September 12, 2020

நிஜத்திற்கு வரும் சோதனை..

 👆Hitler and Stalin 

Whole video made with Artificial Intelligence ...only with the help of two pictures...will change the future of movie making...this may finish the career of even all the actors...in a movie of hitler and stalin...they themself will be actors...and now videos can not be taken as an evidence to prove any crime....


Friday, September 11, 2020

நம்ம ஊர் நிலையும் வெளி நாட்டு மிருகக் காட்சி சாலையும்

"அப்பா  இன்னைக்கு நாம இந்த நாட்டில்

உள்ள முக்கியமான

மிருகக் காட்சிச் சாலைக்குப் போறோம்"

என்றாள் என் மகள்..


"நான் நம்ம ஊரூலேயே நிறைய

மிருகக் காட்சிச் சாலையைப்

பார்த்துவிட்டேன் .வேறு

எங்காவது போவோம்  "என்றேன்


"அப்பா இது நம்ம ஊர்

மிருகக் காட்சி சாலைபோல இருக்காது

மிருகங்கள் எல்லாம் சுதந்திரமாய்த் திரியும்

நாம தான் கூண்டு வண்டியில  பாதுகாப்பாய் இருந்து

அதைப் பார்க்கணும்." என்றாள்


"ஓ.. நம்ம ஊருல சட்டத்த மதிக்கிறவங்க

வாழற மாதிரியா.." என்றேன்


"எக்ஸாட்லி " என்றாள் மெல்லச் சிரித்தபடி... 

Thursday, September 10, 2020

தமிழன்னை பாடும் பாட்டு

 தர்பார் மண்டபங்களில்

மன்னனைக்  குளிர்விக்கும் 
வெற்றுச் சாமரமாய் இருந்த என்னை

அந்தப் புரங்களில்
மன்னனுக்கு உண்ர்வூட்டும்
ஆண்மை லேகியமாய் இருந்த என்னை

கோவில் சன்னதிகளில்
ஆண்டவனுக்கும் அடியார்களுக்கும்
இடைத் தரகனாய் இருந்த என்னை

குறு நில மன்னர்கள்
வீட்டுத் திண்ணைகளில்
புலவர்கை திருவோடாய் இருந்த என்னை

அடிமையாய்க் கிடந்த என்னை
அடைக்கப்பட்டுக் கிடந்த என்னை
சிறைபட்டுக் கிடந்த என்னை
சிறப்பிழந்துக்  கிடந்த என்னை

கைவிலங்கொடித்துக் காத்தவனே
ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
பாழ்பட்டுப்  புதையுண்டுப்  போகாது
பாமரருடன் இணைத்து ரசித்தவனே

தன்னிகரில்லாக்  கவிஞனே
என தவப்புதல்வனே
உன்னை  இந்நாளில் நினவு கூர்வதில்
நானும் மகிழ்வு கொள்கிறேனடா
உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
நாளும் பெருமை கொள்கிறேனடா

Wednesday, September 9, 2020

விளையாத முந்திரி..


 இது விளைந்து வந்த முந்திரி அல்ல.பேக்டரியில் செய்கிற முந்திரி.இதைத்தான் முந்திரிப்பருப்பு என்று பஸ்களிலும், இரயில் வண்டிகளிலும் கிலோ ₹400/-க்கு விற்கிறார்கள்,  இது செயற்கையாக மைதா மாவு,முந்திரிபருப்பு எசன்ஸ் மற்றும் பல உடலுக்கு கேடுவிளைவிக்க கூடிய கெமிக்கல்களும் சேர்த்து தயார்செய்கிறார்கள். இதை சாப்பிட்டால் உடலுக்கு நிச்சயம் கேடு...கவனம் கொள்வோம்

Tuesday, September 8, 2020

மிக எளிதெனில் அதிக அலட்சியம்

 மிக மிக எளிதாக இருப்பதனால் /கிடைப்பதனால்  நாம் இவைகளை அன்றாடம்  பயன்படுத்துவதில் அலட்சியம் காட்டுகிறோமோ எனத் தோன்றுகிறது..


Sunday, September 6, 2020

எனக்கு இதுவரை தெரியாது...உங்களுக்கு

 *நண்பர் ஒருவரின் விழிப்புணர்வு பதிவு*



எனது தங்கை சாலைவிபத்தில் உயிரிழந்து ஒருவருடம் ஆகிவிட்டது...

அந்த விபத்து சம்மந்தப்பட்ட வழக்குகள், மற்றும் காப்பீடுகள் சம்மந்தப்பட்ட விசயங்களை நான்தான் *Follow* செய்து கொண்டு இருக்கிறேன்.


*முதலில் வாரிசு சான்றிதழ் வாங்க திருப்பூருக்கும் பல்லடத்திற்க்கும் நான் அலைந்த அலைச்சல் சொல்லிமாளாது..*


ஒருவழியாக வாரிசு சான்றிதழை வாங்கி

சம்மந்தப்பட்ட *காப்பீட்டு நிறுவனத்திற்க்கும்*. வழக்கு நடத்தும்

வக்கீலிடமும் கொடுத்துவிட்டேன்.


அப்படியே *முதலமைச்சர் நிவாரணநிதிக்கும்* விண்ணப்பிதாகிவிட்டது...


இதற்க்கு முன்பாக ,

என் தங்கை இறந்த ஒருமாதம் கழித்து,

 அவள் வங்கிகணக்கு வைத்திருக்கும்  *கனராவங்கி* சென்று *மாதம் ஒருரூபாய் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் பிரதமமந்திரி விபத்துகாப்பீட்டில் இணைந்து இருக்கிறதா?* என்று வங்கி மேலாளரை சந்தித்து கேட்டேன்.


 அந்த தொகையை பிடித்தம் செய்யவில்லை .

அதனால் *அந்த ஸ்கீம் உங்கள் தங்கையின் வங்கிக்கணக்கில் இல்லை கூறி முடித்துக்கொண்டார்.*


கஷ்ட்டப்படும் தங்கை குடும்பத்திற்க்கு என்னால் பணம் காசு கொடுத்து உதவமுடியாட்டாலும், இதுபோன்ற விசயங்களை நான் விடாமல் அழைந்து திரிந்து என்னால் முடிந்த வேலையை செய்துவந்தேன்.


இந்த சூழ்நிலையில் தங்கை இறந்து *நான்கைந்து மாதங்கள் கழித்து வாட்சாப்பில் ஒரு மெஜேஜை பார்த்தேன்*


 அது சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டு காயமடைந்தாலோ ,

உயிரிழந்தாலோ,

_*வங்கி  ATM CARD வைத்துஇருந்தால் காப்பீட்டுத்தொகை கிடைக்கும் என்று இருந்தது*_


இந்த விசயம் நான் கேள்விப்படாத *ஏன் இன்னும் அநேகர் கேள்விப்படாத விசயம்.*


உடனே அருகில் இருக்கும் கனராவங்கிகிளைக்கு சென்று இந்தவிபரம் குறித்து வங்கி மேளாளரிடம் கேட்க,


 ஆம் அப்படிப்பட்ட ஒரு காப்பீடு இருக்கிறது என்று கூறினார்.


நானும் சரியென்று என்தங்கை வங்கிகணக்கு வைத்திருக்கும் கனராவங்கி கிளைக்கு சென்று அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் விசாரிக்க ,

அவர் ஆம் 

*ATM கார்டு* வைத்திருக்கும் *நபருக்கு காப்பீடு உண்டு என்று என் தங்கையின் வங்கிவிபரங்களை வாங்கி சரிபார்த்துவிட்டு, நீங்கள் இந்த காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்*


 என்று கூறி அதற்க்குறிய ஆவணங்களையும் விண்ணப்பங்களையும் கொடுக்க சொன்னார்கள்.


 நான் என்தங்கையின் கணவர் அவரால் வரஇயலாத சூழ்நிலையிலும் அவரை வரச்சொல்லி விண்ணப்பத்தை கொடுத்த்தோம்.


பின்னர் கிளை மேலாளரையும் நேரில்பார்த்து கஷ்ட்டப்படும் குடும்பம் சார். திருமணவயதில் பெண்இருக்கிறாள் இந்த காப்பீட்டுத்தொகை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று காப்பீடு கிடைக்க உங்கள் தரப்பில் இருந்து செய்யவேண்டிய விசயங்களை செய்யுங்கள் சார்னு சொல்லிவிட்டு

அவருடைய போன்நம்பரையும் வாங்கி கொண்டேன். 


 *அவ்வப்போது போன்செய்து என்ன ஆச்சு?* விண்ணப்பம் என்று கேட்டுக்கொண்டு இருப்பேன்.

 அவரும் நான் பார்த்து சொல்கிறேன் ,பார்த்து சொல்கிறேன்,

 என்று *சொல்லிச்சொல்லி காலம் கடந்தது.*


இதற்க்கிடையில் *கொரோனா பிரச்சனையை காரணமாக சொல்லிக்கொண்டு இருந்தார்.*


  பின்னர் நேரில் இரண்டுமுறை சென்று விபரம் கேட்க அது கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது.


இதற்க்கிடையே கடந்த வாரம் போன்செய்து கேட்க்கும்போது 

*உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.*

*விபத்து நடந்து 90 நாட்களுக்குள் விண்ணப்பித்து இருக்கவேண்டும்* என்று


 *நியு இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து மெயில் வந்துள்ளது* என்று கூறினார்.


மீண்டுமாக ,


அவரிடம் சார் நான் என்தங்கை இறந்து ஒருமாதம் இருக்கும்போது *பிரதமமந்திரி காப்பீடு பற்றி நான் விசாரிக்க வரும்போதே இந்த ATM காப்பீடு பற்றி கூறியிருந்தால் நான் அப்போதே விண்ணப்பித்து இருப்பேன். ஏன் வங்கியின் மேளாளராக இருக்கும் உங்களுக்கு என்தங்கை விபத்தில் இறந்துவிட்டார் என்று விபரம் என்னிடம் கூறி காப்பீடு பற்றியும் விசாரிக்கும்போது, அந்த காப்பீடு இல்லைங்க. பரவாயில்லை ATM காப்பீடு இருக்குனு*


 அதை *விண்ணப்பியுங்கள் என்று சொல்லியிருக்கலாமே.?*


ஏன் உங்களுக்கு *ATM காப்பீடு* பற்றி தெரியாதா? 


அப்படினு கேட்க ,


*அவர் மழுப்பலாக பேசி இல்லைங்க சார் 90 நாட்களுக்குள் விண்ணப்பித்து இருக்கனும் நீங்கனு பழைய பல்லவியை படித்தார்.* 


நானும் விடாமல் வங்கி வாடிக்கையாளருக்கு  இதுபோன்று பயன்தரும் விசயங்கள் பற்றி எந்த வங்கியிலும் கூறுவதில்லை,


 நீங்களும் அப்படித்தான் இருக்கிறீர்கள்.


கஷ்ட்டப்படும் சூழ்நிலையில் உள்ள தங்கை மகளுக்கு  அவளுடைய திருமணகாரியங்களுக்கு இந்த தொகை பயன்படும்னுதான் நான் இவ்வளவு பிரயாசைபட்டேன். அதுவும் இப்போ இல்லைனு ஆகிடுச்சு சரிங்க சார்  ரொம்ப நன்றினு சொல்லிட்டு போனை வைத்தேன்.


இப்போது *ஒருசில விசயங்களை* நான் இங்கே முன்வைக்கிறேன்.


*1)வங்கிகளில் பிரதமமந்திரி காப்பீடு திட்டம், ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளருக்கான காப்பீடு திட்டம் பற்றி அறிந்தவர்கள் எத்தனைபேர்???*


*2)இந்த காப்பீடுகள் பற்றி எந்த வங்கிகளாவது வெளியரங்கமாக வாடிக்கையாளர்களிடம் பேசி* அதில் 

இணைய வற்ப்புறுத்தியிருக்கிறார்களா??*

*(எனக்கு நான்கு வங்கிக்கணக்கு இருக்கிறது எந்த வங்கியோ அதன் ஊழியர்களோ இதுபோன்ற விசயத்தை கூறியது இல்லை)*


*3)மக்கள் பெரும்பாலும் அறியாத இந்த விசயங்களை பற்றி வங்கிகள் அக்கறை காட்டாமல் இருப்பது ஏன்??*

அப்படியே அறிந்து விண்ணப்பித்தாலும் ,


*அந்த வங்கியுடன் டையப் வைத்துள்ள காப்பீட்டுநிறுவனங்கள். அந்த விண்ணப்பங்களை பெரும்பாலும் ஏதோ ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி நிராகரிப்பதிலேயே குறியாய் இருப்பது ஏன்.???*


*4)ஒரு மரணம் நிகழ்ந்த குடும்பத்தில் அதுவும் விபத்தில் மரணம்அடைந்தவர்களின் குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவுகள் அந்த துன்பநிகழ்வில் இருந்து மீண்டு வர எவ்வளவு நாட்கள் ஆகும், என்ற உளவியல் ரீதியான ஒரு விசயத்தைக்கூட நினைத்துப்பார்க்காமல் 90 நாட்களில் விண்ணப்பிக்க சொல்வது என்னமாதிரியான நடைமுறை.*



_*( என் தங்கை  விசயத்தில் வாரிசு சான்றிதழ், பிரேதபரிசோதனை அறிக்கை கிடைக்கவே நான்கு மாதத்திற்க்குமேல் ஆகிவிட்டது)*_ 


*5)கார் லோன்மேளா, வீட்டுக்கடன் லோன்மேளா, ஒருபவுனுக்கு அதிகபணம்,குறைந்த வட்டி என்று விளம்பர பதாகைகளை வங்கிக்கு உள்ளேயும் வெளியேயும் வைத்து விளம்பரபடுத்தும் வங்கிகள்.*


_*இதுபோன்ற காப்பீடுகள் பற்றிய விபரங்களை விளம்பரப்படுத்திவைக்க முன்வருவதில்லை.*_ 


அதேவேளையில் வங்கி வாடிக்கையாளர்களிடம் இதுபற்றி *விழிப்புணர்வு செய்யவோ காப்பீடுதிட்டத்தில் இணையவோ சொல்வது இல்லையே என்பதுதான் வேதனையான விசயம்.* 


ஏதோ இந்த காப்பீடுபணம்கிடைத்தால் அடமானம்  வைத்த நகையை திருப்பி தங்கைமகளின் திருமணகாரியத்திற்க்கு உதவியாக இருக்கும் என்று நினைத்த காரியத்திலும் மண்விழுந்த கதையாக போய்விட்டது.


இதற்க்கு முழுமுதல் காரணகர்த்தா யாரென்றால் நான்சொல்வேன் என்தங்கை இறந்த ஒருமாதத்தில் வங்கிக்கு சென்று பிரதமமந்திரிகாப்பீடு பற்றி  நான் விசாரித்தபோது,

 *அந்த திட்டத்தில் உங்கள் தங்கையின் வங்கிகணக்குயில்லை ,*


*விபத்தில் இறந்த உங்கள் தங்கையின் ஏடிஎம் கார்டுக்கு காப்பீடு இருக்கிறது. என்று என்னிடம் சொல்லாமல் மறைத்த அந்த வங்கி மேளாலர்தான் என்று பட்டவர்த்தனமாக சொல்லுவேன்.*


இந்த பதிவை பார்க்கும்  வங்கித்துறையில் உள்ளவர்கள் இனிமேலாவது ,


*ஒரு சம்பரதாயத்துக்காகவாவது இந்த காப்பீடு பற்றிய விசயங்களை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சொல்லுங்கள்.*


இல்லையென்றால் இந்த காப்பீடுகள் குறித்த விளம்பரபதாகைகளை அதிலும் *குறிப்பாய் ATM கார்டு காப்பீடுபற்றி விளம்பரப்படுத்துங்கள்.*


அது கஷ்ட்டப்படும் ஏழைக்குடும்பத்திற்க்கு ஆறுதல் அளிக்கும் *நல்ல விளம்பர சேவையாய் இருக்கும்.*


நன்றி(இது சரிதானா நம் இணைப்பில் உள்ள வங்கி அதிகாரிகள் இது குறித்து விவரம் அளிக்கலாமே) உண்டு என்பதற்கான ஆதாரம் Pdf file ஆக Bandhu அவர்களின் Comment ல் உள்ளது..