Wednesday, November 18, 2020

இது ஒரு மழைக்காலம்...

 வீட்டில் மின் பாதுகாப்பு 

 வழி முறைகள் .


1.எர்த் லீக்கேஜ் சர்குட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும்.


2.வீட்டிலுள்ள வீனாய் போயுள்ள, பழைய சுவிச்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும்.


3.தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிச் போர்ட்,வாஷிங் மிஷின்,ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.


4.எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு,

 வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும்,இதயம் இடது புறத்தில் உள்ளதால்.


4.பாத் ரூம் சுவிச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு,அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.


5.மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால்,

 அதன் விஷயத்தில் மிகவும் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.மும்பையில் ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம்.

தண்ணீர் இல்லாததால்,ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து ஃபேட்டல் ஆகியிருக்கிறார்.

ஹீட்டருக்கு கொடுக்க கூடிய

இன்லெட், அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது.

அவுட்லெட் ,ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னர் ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும்.

ELCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும்.


6.ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின்,கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது,சுவிச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ,மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.


7.இவ்வளவு கவனமாக இருந்தும்,

ஆக்சிடெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால்,

நேர்ந்து விட்டால்,

அருகிலுள்ளவர் ஒரு கம்பால், 

பாதிக்கப் பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி,விக்டிமை நேரடியாக தொடவே கூடாது.

கிரைண்டர் ஷாக் அடித்த மருமகளையும், பேத்தியையும் காப்பாத்த அவர்களை தொட்டு இழுத்து ,இறந்து போன மாமியாரையும்,

பல வருடங்களுக்கு முன்பு,

திருநெல்வேலி அருகே,இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு

 ,கீழே வீழ்ந்து கிடந்த டிவி  ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்ப் போன கணவன் 

தொடர்ந்து தொட்ட மகன், மகள், உறவினர்களென்று கிட்டத்தட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது.

இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல்,அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும்.செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல்.அதனால்,அடித்துக் கூட காப்பாற்றலாம்.


தண்ணீரில் வீழ்ந்தவரைக் காப்பாற்றப் போய் தானும் உயிர் விடற மாதிரி ஆகிவிடக் கூடாது.


8.கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது.


9.சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர்,

இரு முனை அயன்கிளாட் சுவிட்ச்சும்,

3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிட்ச்சும் வைத்திருக்க வேண்டும்.

நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்;

ஃப்யூஸ் போடக் கூடாது.

நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.


10.முதலில் சொன்னதையே இறுதியிலும் சொல்கிறேன்,ELCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள். 


 Lion  க நெடுமாறன் TNEB

 நாச்சியார்கோயில் பிரிவு

 கும்பகோணம் வடக்கு

8 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இக்காலத்திற்கான தேவையான பதிவு.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொன்றும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்... நன்றி...

ஸ்ரீராம். said...

நல்ல குறிப்புகள்.

G.M Balasubramaniam said...

Do what i say and dont do what i do

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பயனுள்ள நல்ல குறிப்புகள். மழை காலம் மட்டுமன்றி எக்காலத்திற்கும் பொருந்துவது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள பதிவு

Bhanumathy Venkateswaran said...

மிகவும் அக்கரையோடு சொல்லப்பட்டிருக்கும் ஆலோசனைகள்.,நன்றி.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக அவசியமான குறிப்புகள். தமிழ் நாட்டில் மழைக்காலம், கொஞ்சம் பழைய வீடு
கட்டாயம் கவனமாக இருக்க வேண்டிய காலம்.
மீண்டும் மீண்டும் நன்றி சொல்கிறேன்.

Post a Comment