Thursday, April 30, 2015

 லகம் தழுவிய மா பெரும் 
கவிதைப்போட்டி-2015 

  ரூபன் & யாழ்பாவாணன்  இணைந்து நடத்தும் 

உலகம் தழுவிய மாபெரும் 
கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்…

 வாருங்கள்… வாருங்கள்…  


கவிதை எழுத வேண்டிய தலைப்பு- 


இணையத் தமிழே இனி... 


கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்

-15-05-2015 

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை 

படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் 
இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்… 
மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் 
ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்…   

போட்டியின் நெறிமுறைகள் 

1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை தோ்வு செய்து 
அதற்கான 15-25 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் 
இருக்கலாம்)

 2.100 மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு 

கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர்
 தோ்வு செய்யப்படுவார்.  

3போட்டிக்கான கவிதையை  தங்கள் வலைப்பூவில்

 தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் 
வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களை 
தறவேற்றம் செய்யலாம்.

 4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே 

அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் 
(இந்திய நேரப்படி) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்.

இறுதி நாள்-15-05-2015



  5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது 


6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது


. 7.கலந்து கொள்பவர்கள்  பெயர், மின்னஞ்சல்  தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும் 


8. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக்   கொள்ளப்படமாட்டது 


9. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் 

அல்லது(WORD)   பயிலாக அனுப்பலாம் 

10.போட்டிக்கான கவிதை  அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி 

:  ramask614@gmail.com  

 நடுவர்கள் 


1.திரு கவிஞர்-ரமணி ஐயா                  

 -இந்தியா 
2.கலாபூசணம்-வே.தங்கராசா ஐயா  
 -இலங்கை 
3.வலைச்சித்தர்.திரு.தனபாலன்-          
இந்தியா

நிருவாகக்குழு 


1.திரு.கில்லர்ஜி-                                     

 அபுதாபி 
2.திரு.பாண்டியன்-                                  
 இந்தியா 
3.திரு.இராஜமுகுந்தன்-                         
 கனடா 
4.திருமதி-அ.இனியா-                              
 கனடா
 5.திரு.கா.யாழ்பாவணன்-                      
இலங்கை 
6.திரு.த.ஜீவராஜ்-                                         
இலங்கை 
7.திரு.கவியாழி.கண்ணதாசன்-            
 இந்தியா 
6.திரு.த.ரூபன்-                                           
  மலேசியா
. 7. கல்குடா றியாஸ் முஹமட் -               
கட்டார்   

முதல் பரிசு, பணப்பரிசு-25 டாலர்.வெற்றிச்சான்றிதழ் 


இரண்டாம் பரிசு, பணப்பரிசு-20 டாலர்.வெற்றிச்சான்றிதழ்


 மூன்றாம் பரிசு பணப்பரிசு-15 டாலர்.வெற்றிச்சான்றிதழ் 


(சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) 


ஏழு ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும்  


அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) 


பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு 

தமிழ்வளர்க்க வாரீர் சம்மந்தமான 
சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய 
மின்னஞ்சல் முகவரி 
இதோ- rupanvani@yahoo.com  

குறிப்பு- 2015ம் ஆண்டு தைப்பொங்கலைமுன்னிட்டு

 நடத்திய சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்ற
 போட்டியாளர்கள் தங்களுக்கான பரிசுப்பொருட்கள்
 வந்து சேர்ந்ததா என்ற தகவலை தயவு செய்து 
தெரியப்படுத்துங்கள்....

.இந்த மின்னஞ்ல் வழி . rupanvani@yahoo.com -நன்றி-


Copy and WIN : http://ow.ly/KNICZ

Sunday, April 26, 2015

கீறல்

திசை மாறாது
பொழுது மாறாது
மிக இயல்பாய்
இருளுண்டு
அனைத்தையும்
விளங்கக் காட்டிப் போகும்
அனைத்தையும்
இயங்கவைத்துப் போகும்
அந்தக் கதிரவனினும்

திசைக் கணக்கின்றி
ஒழுக்க நியதி ஏதுமின்றி
தாறுமாறாய்
ஒளிர்வதாயினும்
இருள் கூட்டிக் காட்டி
அனைத்தையும்
மிரளவைத்துப் போகும்
அந்த ஒரு நொடி
மின்னல் கீற்றே

மனம் கீறிப் போகிறது
அந்த நொடியினை
மறக்காது செய்து போகிறது

புரியச் சொன்னதை விட
புரியாதே
பம்மாத்துக் காட்டிப் போகும்
சில அற்புதக் கவிதைகள் போலவும்...

Tuesday, April 14, 2015

மீண்டும் யாதோ


சின்னஞ் சிறுவயதிலிருந்தே எனக்கு விரும்பியோ 
அல்லது வாழ்ந்த சூழல் காரணமாகவோ 
பொதுப் பணியில்ஈடுபடுவது என்பது 
தவிர்க்க முடியாததாகிவிட்டது

காலப் போக்கில் நானும் அதை விரும்பிச் 
செய்யத் துவங்கியதால் அனைவரை விடவும் 
மிக நேர்த்தியாகவும்எளிமையாகவும் வித்தியாசமாகவும் 
செய்யவேண்டும்என்கிற எண்ணம் என்னுள் 
உறுதியாய் வேறூன்றிவிட்டது

அப்போதெல்லாம் எங்கள் கிராமப் பகுதியில் 
திருமணமண்டபம் என்பது கிடையாது.
தர்ம சிந்தனையுடன் கூடியபெரிய வீடுடைய உறவினர்கள் 
மூன்று நாட்களுக்குதங்களை ஒரு அறைக்குள் 
சுருக்கிக் கொண்டுமொத்த வீட்டையும்
 திருமண வீட்டார்கள் உபயோகித்துக்
கொள்ள விட்டு விடுவார்கள்

அதைப் போல இப்போது போல ஏ முதல் இஜட் வரை
என்கிற காண்டிராக்டர்கள் கிடையாது.ஒரு மெயின்
சமையல் காரரும் இரண்டு மூன்று கைப்பானங்களும்
தவிர மற்ற வேலைகளையெல்லாம் உறவினர்கள்தான்
பகிர்ந்து கொள்வார்கள்.

அந்த வகையில் நான் சிறுவனாக இருக்கையில்
 எனக்குமுதலில் அனைத்து எடுபிடி வேலைகளும்
 பின் கொஞ்சம்கொஞ்சமாக முதலில் இலைபோடுதல்
 தண்ணீர் பரிமாறுகிறவேலையும்பின் அப்பளம் 
வடை நெய் எனத் தொடங்கி பின் காய்கறி 
சாதம் பறிமாறுதல்
  அதுதான் கொஞ்சம் கடினம் )
எனப் படிப்படியாய் முன்னேறி ஒன்பதாவது பத்தாவது
படிக்கையில் ஒட்டு மொத்த பந்தி வேலையையே
பார்த்துக் கொள்கிற அளவு தேர்ச்சிப் பெற்றுவிட்டேன்

அது போன்ற சமயங்களில் எல்லாம் தொடந்து
சாப்பாடு வாடையில் இருப்பதாலோ என்னவோ
சாப்பிடப் பிடிக்காது. ஆனாலும் சாப்பிடாது தொடர்ந்து
வேலை செய்யவும் முடியாது

அந்த நேரத்தில்தான் மெயின் சமையல்கார்கள்
சாப்பிடுகிற முறையை அறிந்து கொண்டேன்

அவர்கள் தொடர்ந்து அனைத்து பதார்த்தங்களையும்
ருசிபார்க்கவேண்டியிருப்பதாலும் தொடர்ந்து 
அடுப்படியிலேயே இருப்பதாலும் சாப்பிடும் ஆர்வம்
இல்லையென்றாலும் கூட தெம்புக்குச் 
சாப்பிடுகிறவகையில் ஒரு சட்டியில் 
கொஞ்சமாக சாதத்தைப் போட்டுக் கொண்டு 
அதனுடன் அனைத்து காய்கறிகளையும் 
உடன் சாம்பார் ரசம் மற்றும் நெய்யையும் ஊற்றி
கெட்டியாகப் பிசைந்து மூன்று நான்கு கவளம்
மட்டும் சாப்பிடுவார்கள்.அதைக்  
கலவை சாதம் என்பார்கள்

அது அத்தனை ருசியாகவும் இருக்கும் .
சத்தாகவும் இருக்கும்தொடர்ந்து அலுப்பில்லாமல்
 வேலை செய்யவும் உதவும்

நான் வெகு நாட்களுக்கு பாதி பந்தி 
வேலை முடிந்ததும்கொஞ்சம் சோர்வு ஏற்படுகையில் 
மெயின் சமையல்காரரைஅணுகி இரண்டு கவளம் 
கலவை சாதம் போட்டுத் தரும் படியே கேட்டு 
வாங்கிச் சாப்பிட்டுவிடுவேன்

அதனால் கால நேர விரயம் மிச்சம் ,ருசிக்கு ருசி
சத்துக்குச் சத்து என அத்தனை அம்சங்களும்
அதில் எளிதாய்க் கிடைத்தது

அது சரி 
அதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் ?


( அடுத்த பதிவில் )

Wednesday, April 1, 2015

மகிழ்வூட்டும் நிகழ்வுகள்

Displaying DSC_0443.JPG

நான்  அரிமா இயக்கத்தில் டிலைட்  என்னும்
அரிமா சங்கத்தில்தலைவராகப் பொறுப்பேற்றுக்
கடந்த ஒன்பது  மாதங்களில்
ஏறக்குறைய 11000 பேர் பயனடையும் படியாக
 28 சேவைத்திட்டங் களை  மூன்று இலட்சம் மதிப்பில்
சங்க உறுப்பினர்களின் பூரண ஒத்துழைப்புடன்
செய்து முடித்தேன்

அதில் 80 ஏக்கரில்   சீமைக் கருவேல  மரத்தை
வேரோடு அழித்ததும் , பொருளாதார நிலையில்
வசிதிக் குறைவான ஒரு மருத்துவக்
கல்லூரி மாணவிக்குமுப்பத்தைந்தாயிரம் மதிப்பில்
 மருத்துவ உபகரணம்வழங்கியதும் ,
புதிய உறுப்பினர்களை    இணைத்ததும்
புதிதாக   ஒரு சங்கத்தைத் தோற்றுவித்ததும்
குறிப்பிடத் தகுந்த அம்சம்

இதனைப் பாராட்டும் விதமாக தேனியில் நடைபெற்ற
மண்டல மா நாட்டில்   எனது சங்கச் செயலாளர்  மற்றும்
பொருளாளருடன்   மாவட்ட ஆளு நரால்
 கௌரவிக்கப் பட்டேன்

அதனை  எனது பதிவுலக  நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்வதில்   மிக்க மகிழ்ச்சியடைகிறேன்