Friday, March 29, 2024

படித்ததில் பிடித்தது

 ●X: சார்... நான் T. Nagar லேந்து பேசறேன் உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.


○Y : நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க.


●X : சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா...


○Y : நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!...


●X:  சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! அப்புறம் நான் சொல்லறேன்.


○Y : நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம்.


●X : 6,5,4,3,2,1, அப்படின்ன என்ன?


 Y : 6,5,4,3,2,1ங்கறது என்னதுன்னா..


6 ன்ன பையன் 6 டிஜிட்ல சம்பளம் வாங்கனும் அதாவது குறைஞ்ச பட்சம் மாசம் 1லட்சம் சம்பளம் சம்பாதிக்கணும்.


5 ன்ன பொண்ணுக்கு நிச்சயதார்த்தின் போது 5 லட்சத்துக்கு வைர நெக்லஸ் போடணும்.


4 ன்ன, 4 சக்கரம் உள்ள கார், பையன் பேருலே வச்சு இருக்கணும்.


3 ன்ன, மூணு ரூம் உள்ள சொந்த பிளாட் பையன் பேருலே இருக்கணும்.


2 ன்ன, பையனோட அப்பா, அம்மா கல்யாணத்திற்கு பிறகு, 2 பேரும் பையனோட சேர்ந்து இருக்கக்கூடாது.


1 ன்ன, கல்யாணத்துக்கு பிறகு, என் பொண்ணு 1குழந்தை தான் பெத்துப்பா! அதுவும் அவ விருப்பப்படும் போதுதான்.


அப்புறம் எங்களுக்கு பையனை பிடிச்சுடுத்துன்ன, நீங்க பையனோட salary சர்டிபிகேட் "கொடுக்கனும்.


வைர நெக்லஸ் போடறதுக்கு, தகுதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கு, பையனோட பேங்க் ஸ்டேட்மெண்ட் வேணும்.


பையன் பேர்ல இருக்கிற காரோட RC certificate, பிளாட்டோட property document வேணும்.


●X: மேலே சொன்ன விஷயங்களெல்லாம் உங்க பொண்ணு தன்னுடைய கல்யாணத்திற்கு போட்ட கண்டிஷன்களா?


○Y : என் பொண்ணு சின்ன பொண்ணு சார்! அவளுக்கு இதெல்லாம் தெரியாது! ரொம்ப வெகுளியா பழகுவா சார்! இதெல்லாம் நாங்க போடற கண்டிஷன்கள்!

ஒரே பொண்ணு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்துஇருக்கோம்!" புகுந்த வீட்லே போய் கஷ்டப் படக்கூடாது என்பதற்காக நாங்க போடற கன்டிஷன்கள் இது!

மேலும், அவளுக்கு வாசல் தெளித்து கோலம் போடத்தெரியாது! சமையல் பண்ணத் தெரியாது! லீவு நாளுன்ன 10 மணிக்குத்தான் எழுந்துந்துப்பா, புடவை கட்டிக்கத்தெரியாது! அதனாலே விசேஷங்களுக்கு சுடிதார்தான் போட்டுப்பா!


அப்புறம் இன்னொரு விஷயம்! என் பொண்ணு சுயமரியாதைக்காரி, யார் காலிலேயும் விழுந்து கும்பிடமாட்டா! இதுக்கெல்லாம் நீங்க ok ன்னு சொன்னா மேற்கொண்டு, என் பொண்ணு கல்யாண விஷயமா, என் மனைவி உங்ககிட்ட பேசுவா! 


●X : சார்! எனக்கு நீங்க பேசினதே தலைய சுத்தறது... இதுலே உங்க மனைவி வேறயா? நான் என் பையனுக்கு வரன் தேடலே சார்! 


○Y : அப்புறம் எதுக்கு என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்ன்னு சொன்னீங்க...


●X : என்ன எங்க சார் பேசவிட்டீங்க நீங்க! நான் T Nagar லே இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேசறேன்...

உங்க பொண்ணு, இன்னிக்கு உங்க தெரு மெக்கானிக் ஷாப் பக்கத்திலே இருக்கிற ஒரு பையனை காதலிச்சு, தெருமுனையிலே இருக்கிற கோயிலிலே கல்யாணம் பண்ணிட்டு ஸ்டேஷனுக்கு வந்துருக்கா! 


நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க

மாட்டீங்க! மேலும் நீங்க உங்க ஊரு சனத்தை கொண்டு கல்யாணம் பண்ணினா இவங்களை பிரிச்சுடுவீங்களாம்! அதனாலே, அவங்க குடும்பம் நடத்தறதுக்கு, போலீஸ் protection வேணும்ன்னு கேட்டு வந்துருக்கா சார்!


○Y : என்னது... என்றவாறே மயக்கமாய் கீழே சாய்கிறார்...

Thursday, March 28, 2024

அமெரிக்கா..ஒரு புலிவால்..

 படித்தேன்- உண்மை- யதார்த்தம்-  பகிர்கிறேன்*


*Ground Reality from a US Citizen:

“ சித்ரா ராகவன்.

உ.எண்.1854.


*இதோ ஒரு புதிய பார்வை - தங்கள் கவனத்திற்கு...


*America ஒரு புலிவால்


நான் சமூக வலைதளங்களில் அமெரிக்காவிற்கு படிக்க சென்ற பெண்/ பிள்ளைகள் திரும்பி வருவதில்லை . பெற்றோரின் கடைசி காலத்தில் அவர்களுடன் வந்து இருப்பதில்லை . அவர்கள் அந்த சௌகரியத்திற்கு பழகி விட்டார்கள் திரும்பி வர மனமில்லை என்று பலர் எழுதுவதை பார்த்திருக்கிறேன்.

 

அவர்கள் நினைப்பது அவர்கள் பணமும் வசதியுமே பெரியது என்று அங்கு போகிறார்கள் என்று.....


*ஆனால் Ground reality வேறு. 


நாணயத்துக்கு 2 பக்கம் உண்டு. 

நான் அவர்கள் பக்கத்தையும் பார்க்க விரும்புகிறேன். 


அவர்களாகவே foreign college க்கு apply செய்து போவதில்லை. நாமதான் அனுப்பறோம். ஆனால் தான் விரும்பிய படிப்பை படிக்க வரும் குழந்தைகளின் student life எப்படிபட்டது தெரியுமா? 

Middle class அப்பாவால் fees boarding கொஞ்சம் கைச்செலவுக்கு மட்டும்தான் பணம் அனுப்பமுடியும். எல்லோருக்கும் scholarship கிடைப்பதில்லை .

*நிறைய குழந்தைகள் பணத்தேவைக்காக அந்த குளிரில் part time வேலை செய்யும். 


*வீட்டில் சாப்பிட்ட தட்டை அலம்பாத பையன் அங்கே hotelல் தட்டை எடுத்து table clean பண்ணுவான். *வீட்டில் துடைப்பத்தை எடுத்து பெருக்காத பெண் அங்கு canteenல் தரைக்கு mop போடுவாள். 


வீட்டு வேலை செய்ய ஆண் பெண் வித்தியாசம் இல்லை என்பதை அம்மா சொல்லி தர மாட்டாள். *அமெரிக்கா சொல்லி தரும். 


Vacationல் அமெரிக்க குழந்தைகள் அவரவர்கள் வீட்டிற்கு போய்விடும்.


உறவினர்கள் யாராவது அமெரிக்காவில் இருந்து அவர்கள் மனது வைத்து நம் குழந்தைகளை ticket வாங்கி அழைத்துக்கொண்டால் உண்டு.


*இல்லையென்றால் homesickல் அம்மாவை நினைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும்.

படிப்பு மிகவும் கடினம். 

நல்ல grade வாங்கவில்லை என்றால் collegeல் திருப்பி அனுப்பி விடுவார்கள். *Tension.


படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடத்திற்குள்

வேலை கிடைக்கவில்லை என்றால் திரும்பி போக வேண்டும் . பணம் waste. அப்பா மூஞ்சியை திருப்புவார். *Tension.


வேலை கிடைத்தவுடன் 3 வருடத்திற்குள் h1b work visa lotteryல் விழ வேண்டும்.

இல்லாவிட்டால் திரும்பி போக

வேண்டும். *Tension. 


இத்தனையையும் தாண்டி வந்தால் அடுத்தது கல்யாணம். இங்கே வேலை பார்க்க தகுதி உள்ள பெண்/பையன் அல்லது இங்கேயே வேலை பார்ப்பவர்களை பார்க்க வேண்டும்.


இந்தியாவாக இருந்தால் படிப்பு, வேலை, family background பார்த்தால் போதும்.


*இங்கே location, career முக்யம்.

North carolina, south carolina - 

Low cost area. Bay area, California. அதே area வரன்தான் வேண்டும். cost of living அதிகம்.


வேறு state வரன் என்றால் வேலையை விட்டு விட்டு இங்கு வந்து வேலை தேட முடியாது.  

Visa transfer ,amendment என்று ஏகப்பட்ட ப்ரச்னை.


*ஒருசம்பளத்தில் California வில் குடுத்தனம் பண்ண முடியாது.


Minasotta, Detroit, Chicago - snow area- 

Social drinking- NO


பாதி பேர் west coast california Bay areaல் இருப்பார்கள். *அவர்கள் east coast வரன்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.


இந்தியாவிலிருந்து பெண்/பையன் கல்யாணம் பண்ணிக்கொண்டு இங்கு வந்தால் அவர்கள் இங்கு வேலை பார்க்க EAD permit உள்ள வரன் வேண்டும். 

வீட்டில் வருடக்கணக்கில் வேலைக்கு போகாமல் உட்கார்ந்து இருக்க முடியாது.

அப்படியே வேலை பார்த்தாலும் dependent visa என்றால் ஒருத்தருக்கு வேலை போனால் அடுத்தவருக்கும் போய்விடும். இப்போதெல்லாம் இந்தியாவிலேயே எல்லா வசதியும் இருப்பதால் கல்யாணம் பண்ணிக்கொண்டு அமெரிக்கா வர யாரும் ஆர்வம் காட்டுவதும் இல்லை.

Citizen வரன்கள் born and brought up in USA வரன்தான் வேண்டும் என்பார்கள்.


*அதற்குள் நிறைய குழந்தைகளுக்குஇந்த ஊர் climate ,தண்ணிக்கு முடி கொட்டிவிடும்.😁


*இதெல்லாம் தெரியாமல் இந்தியாவில் அப்பா அம்மா நட்சத்திர பொருத்தம், ஜாதக பொருத்தம் பார்த்துக்கொண்டு வரும் வரனையெல்லாம் reject பண்ணிக்கொண்டிருப்பார்கள்.😁😁


பிறகு 2 வருடத்திற்கு ஒரு முறைதான் 3 weeks leave கிடைக்கும். 

*இரண்டு குழந்தைகளுடன் ஒருமுறை இந்தியா போய் வந்தால் இரண்டு வருட savings காலி. 


பெற்றோர்கள் இங்கு வரும்போது அவர்களை Nayagara falls, New york, Sanfrancisco, Disneyland என்று சுற்றிக்காட்டிவிட்டு கைநிறைய சாமானும் வாங்கி கொடுத்து அனுப்புவார்கள். 


*வயதான பெற்றோர்களை இங்கே அழைத்துக்கொண்டு வந்து வைத்துக்கொண்டால் life, health, பல்லுக்கு என்று தனித்தனியாக insurance எடுக்க வேண்டும்.


*Insuranceல் cover ஆகாத வியாதி வந்தால் அவ்வளவுதான். சொத்தையே எழுதி வைக்க வேண்டும். 


Doctor appointment கிடைக்க நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும்.

அதற்குள் ஒண்ணு வந்த வியாதி அதுவாகவே  போய் விடும் அல்லது நாமளே போய்விடுவோம்.


Doctors உம் சனி, ஞாயிறு லீவு எடுப்பார்கள். 

சனி, ஞாயிறு உடம்புக்கு எதுவும் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ள வேண்டும். 


Weekdaysல் நட்ட நடு பகல் நேரத்தில் doctor appointment குடுப்பார்கள். அப்போதுதான் இவர்களுக்கு office meeting இருக்கும். அதற்கு நடுவில் நமக்காக வருவார்கள். *அதனால்தான் பணத்தை இந்தியாவுக்கு  அனுப்பி இங்கேயே ராஜ வைத்யம் பார்த்துக்கொள் என்கிறார்கள்.


நினைத்தபோது இந்தியா போக முடியுமா? முடியாது.


சமீபத்தில் அப்பா மறைவுக்கு சொந்த ஊருக்கு போய் வந்த ஒரு பையனை companyல் ஆட்குறைப்பு நடவடிக்கையில் வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.


Survival முக்கியம். வேலை எப்போது போகுமோ என்ற பயத்திலேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டும். 

இப்போது இந்தியாவிலும் இப்படித்தான்.


Greencard கிடைக்க வருடங்கள் ஆகலாம். 


Coronaவா? 

ஊருக்கு போக முடியாது. 

Stamping வாங்கலையா..... இந்தியா போனால் stamping வாங்காமல் USA க்குள் திரும்ப முடியாது. 

Stamping வாங்க  Indian embassy slotக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். 

நடுவில் அப்பா போனாலோ, அம்மா போனாலோ USA வை விட்டு கிளம்ப முடியாது. 

*ஊரார் சாபத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டும். 


பெற்றோர்களுக்கு குழந்தைகள் நிலைமை புரிந்தாலும் சுற்றி உள்ளவர்கள் பேசும்போது என்ன செய்வது. 

Society pressure.


சரி. பரவாயில்லை ஊரோடு போய்விடுவோம் என்றால் இங்கேயே பிறந்து வளர்ந்த குழந்தைகள் மக்கர் பண்ணும்.


இந்தியாவுக்கு திரும்பி போவதென்று முடிவு எடுத்தால் வீட்டு கடன், கார் கடன் என எல்லா கடனையும் அடைத்து விட்டு 

எஞ்சிய சொற்ப பணத்தோடு ஊர்போனால் மாசா மாசம் லட்சலட்சமாய் சம்பாதித்தெல்லாம் என்ன செய்தாய் என்று பெற்றோரை அலட்சியம் செய்ததாக சொன்னவர்கள் கேட்பார்கள்.


இந்தியாவுக்கு திரும்பி போனவர்களும் இருக்கிறார்கள். 


அது அவரவர் குடும்ப சூழ்நிலயை பொறுத்தது.


Company மூலமாக onsightல் வந்து போகிறவர்களுக்கு இது பொருந்தாது.


அவர்களுக்கு இந்தியா திரும்பி போனாலும் வேலை இருக்கும்.


இவ்வளவையும் தாண்டித்தான் இங்கு settle ஆனவர்கள் பெற்றோர்களை பார்க்க ஓடி வருகிறார்கள். 

இது அங்கிருப்பவர்களுக்கு புரிவதில்லை.


மொத்தத்தில் அமெரிக்கா புலி வால் பிடித்த கதைதான்.* 

*விடவும் முடியாது. கூடவே ஓடவும் முடியாது.


அட இவ்வளவு கஷ்டம் இருந்தால் அப்படியாவது அமெரிக்கா போகாட்டா என்ன  என்கிறீர்களா???


மற்றவர்கள் நினைப்பது போல் பணம் வசதிக்காக மட்டும் யாரும் இங்கு வருவது இல்லை. இங்கு நிறைய கனவுகளோடு சாதிக்க வந்திருப்பவர்கள் அவரவர் துறையில் சாதித்தும்  இருக்கிறார்கள்.


*இந்த மனித சமுதாயத்துக்கு நாம் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இங்கு படிப்பு/research வசதி வாய்ப்புகள் சற்று அதிகம்.


*சொந்தமாக startup companyகள் ஆரம்பித்து அமெரிக்கர்களுக்கே வேலை கொடுக்கும் கண்ணுக்கு தெரியாத சுந்தர் பிச்சைகள் இங்கு ஏராளம். 


எனக்கு தெரிந்தவர் ஒருவரின் பையன் இங்கு ஆராய்ச்சி படிப்புக்கு வந்து ஒரு குறிப்பிட்ட cancerக்கு மருந்து கண்டு பிடித்து இங்குள்ளவர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்.


*வெறும் பணத்துக்காக என்று பொதுவாக முத்திரை குத்தாமல் “”அவர்களின்  கனவுகளையும் நாம் மதிப்போம்

Monday, March 18, 2024

தேர்தல்...

 எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்

கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும் மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'
 
(ஐம்பதாண்டுகளுக்கு‌ முன்னால் சிகரம் முற்போக்கு மாத இதழில் நான் எழுதியது.திருத்தம் ஏதும்‌ செய்ய வேண்டி‌இல்லாது  சூழல் அப்படியே இருப்பது ஆச்சரியமே.  )

Sunday, March 17, 2024

யாதோ...

 கவிஞனாக அறிமுகமாயிருந்த 

என் நண்பனிடம்தான்
முதன் முதலாக
என் படைப்புகளைக் கொடுத்தேன்
பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த 
அவன் முகம்திடீரெனக் சுருங்கத் துவங்கியது 

"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை
இதை சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை
எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்
"என்ன செய்யலாம்" என பயந்த படி கேட்டேன்
"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்
அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"
 என்றான்

கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்
புத்தகத்தில் புதைந்து கிடந்தார்
படைப்பினில் பாதி கடக்கும்போதே
அவர் உடல் குலுங்கத் துவங்கியது
சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்
"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை
உனக்கு போதிய பயிற்சியும் இல்லை" 
என்றார்

"இதை என்ன செய்வது" என்றேன்
"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ 
அவர்கள் தான் எதையும் 
சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்

எழுதியபடியே இருந்த கதாசிரியர்
என்னைப் பார்ப்பதற்கே அரை மணி நேரம்  ஆனது
நம்பிக்கை இழந்த நிலையில்
என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்
"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா" 
என்றார்

அரசமரத்தடி பிள்ளையாரை
மௌனமாய் வேண்டியபடி
மறுநாள் அவரைப்  பயத்துடன் பார்த்தேன்
அவர் மேசையில் என் படைப்பு இல்லை
தூரமாய் கூடைக்கருகில்
குப்பை போல் இருந்தது

"கதைக்கு அவசியம் கரு வேண்டும்
உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் 
நிகழ்வுகள் வேண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"
இன்னும் என்னென்னவோ சொன்னார்
எனக்கு எதுவுமே விளங்கவில்லை

முடிவாக

"இதனை இப்படியே கட்டி மூலையில் வை
ஓராண்டு தொடர்ந்து படி
பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்
"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி
நடுவீதிக்கு வந்தேன்

"கைகளில் என்ன பார்சல்"
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"
 என்றான்எதிரில் வந்த
பத்தாம் வகுப்பில்தமிழில்
 முப்பது மதிப்பெண்களே எடுத்ததால் 
படிப்பிற்கே முழுக்குப் போட்ட
என் பால்ய நண்பன்.
"எழுத்தில் ஆர்வம் 
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
இது எதில் சேர்த்தி என தெரியாமல் 
அலைகிறேன்" என்றேன் பயந்தபடி

"பிள்ளையை பெற்று விட்டு
பேருக்காக அலைகிறாயா" என்றவன்
ஆவலாய் அதனைப் பிடுங்கி
அவசரம் அவசரமாய் படிக்கத் துவங்கினான்
ஒவவொரு பக்கம் முடிய முடிய
"பேஷ் பேஷ்" என்றான்
அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது

"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்" 
என்றேன் மெதுவாக
கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"
 என்றான்
முதன் முதலாக
எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்
இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்
திடுமென என் தோளைத்  தட்டியபடி
"பிரமாதம்" என்றான்

தமிழில் தோற்றவனா என் எழுத்தை
ஏற்க வேண்டும்
எல்லாம் தலை விதி என்று நொந்து
"எப்படி" என்றேன்

"உன்னை பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாக புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா" 
என்றான்
அவனை அதிசயமாய் பார்த்து 
அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"

அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்
"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிதை கள் கிடைத்தன
அவைகளை புறக்கணித்தா விட்டோம்
எழுதியவரை  " யாரோ "
எனச் சொல்லி சேர்த்துக் கொள்ளவில்லையா"
 என்றான்
நான் அமைதியாய் இருந்தேன்

எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்

போதி மரத்து புத்தன் போல்
என் முன் அவன் பிரசன்னமானான்
எனது சிந்தனைகளை
இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ
ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை
இப்போதெல்லாம் நான்
கதை கட்டுரை கவிதைப் பக்கம்
தலை வைத்துப் படுப்பதே இல்லை
நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்


Wednesday, March 13, 2024

டைம் பேங்க்..

 படித்ததில் பிடித்தது வியந்தது❤️😮


சுவிட்சர்லாந்தில் படிக்கும் ஒரு கல்லூரி மாணவர் எழுதுகிறார்:


சுவிட்சர்லாந்தில் படிக்கும் போது கல்லூரிக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தேன்.

வீட்டு உரிமையாளரான கிறிஸ்டினா 67 வயதான ஒற்றை வயதான பெண்மணி, அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

சுவிட்சர்லாந்தின் ஓய்வூதியம் மிகவும் நன்றாக உள்ளது, அவளது பிற்காலத்தில் உணவு மற்றும் தங்குமிடம் பற்றி கவலைப்படாமல் இருந்தால் போதும்.

இருப்பினும், அவள் உண்மையில் "வேலை" கண்டுபிடித்தாள் - 87 வயதான ஒற்றை முதியவரை கவனித்துக் கொள்ள.

அவள் பணத்திற்காக வேலை செய்கிறாளா என்று கேட்டேன்.

அவளுடைய பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது:

"நான் பணத்திற்காக வேலை செய்யவில்லை, ஆனால் எனது நேரத்தை 'டைம் பேங்கில்' வைக்கிறேன், மேலும் எனது வயதான காலத்தில் என்னால் நகர முடியாதபோது, நான் அதை திரும்பப் பெறலாம்."

"டைம் பேங்க்" என்ற இந்த கான்செப்ட்டைப் பற்றி நான் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, நான் மிகவும் ஆர்வமாக இருந்ததால், வீட்டு உரிமையாளரிடம் மேலும் கேட்டேன்.

அசல் "டைம் பேங்க்" என்பது சுவிஸ் மத்திய சமூகப் பாதுகாப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட முதியோர் ஓய்வூதியத் திட்டமாகும். மக்கள் இளமையாக இருக்கும்போது முதியவர்களைக் கவனித்துக்கொள்வதில் 'நேரத்தை' மிச்சப்படுத்துகிறார்கள், மேலும் அவர்கள் வயதாகும்போது, நோய்வாய்ப்பட்டால் அல்லது கவனிப்பு தேவைப்படும்போது அதைத் திரும்பப் பெறலாம்.

விண்ணப்பதாரர்கள் ஆரோக்கியமாகவும், தொடர்புகொள்வதில் நல்லவர்களாகவும், அன்பு நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். உதவி தேவைப்படும் முதியவர்களை அன்றாடம் கவனிக்க வேண்டும்.

அவர்களின் சேவை நேரம் சமூக பாதுகாப்பு அமைப்பின் தனிப்பட்ட 'நேர' கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.

அவள் வாரத்திற்கு இரண்டு முறை வேலைக்குச் சென்றாள், ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வயதானவர்களுக்கு உதவினாள், ஷாப்பிங் செய்தாள், அவர்களின் அறைகளைச் சுத்தம் செய்தாள், சூரிய குளியலுக்கு அழைத்துச் செல்வாள், அவர்களுடன் அரட்டையடித்தாள்.

ஒப்பந்தத்தின்படி, அவரது சேவையின் ஒரு வருடத்திற்குப் பிறகு, *"டைம் பேங்க்"* அவள் பணிபுரிந்த மொத்த காலத்தைக் கணக்கிட்டு, அவளுக்கு "டைம் பேங்க் கார்டை" வழங்கும்.

மேலும், அவளைக் கவனித்துக் கொள்ள யாராவது தேவைப்படும்போது, "நேரம் மற்றும் நேர வட்டியை" திரும்பப் பெற அவள் "டைம் பேங்க் கார்டை" பயன்படுத்தலாம். முறையான சரிபார்ப்புக்குப் பிறகு, "டைம் பேங்க்" மற்ற தன்னார்வலர்களை மருத்துவமனையில் அல்லது அவரது வீட்டில் கவனித்துக் கொள்ளும்.

ஒரு நாள், நான் கல்லூரியில் இருந்தேன், வீட்டு உரிமையாளர் ஜன்னலைத் துடைக்கும் போது அவள்  விழுந்ததாகச் சொன்னாள்.

நான் அவசரமாக விடுப்பு எடுத்து அவளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினேன்.

வீட்டு உரிமையாளருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில நாட்கள் படுக்கையில் இருக்க வேண்டியிருந்தது.

நான் அவளைக் கவனித்துக் கொள்ள ஒரு வீட்டிற்கு விண்ணப்பிக்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவளைப் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்று அவர் உறவினர் என்னிடம் கூறினார்.

அவள் ஏற்கனவே "டைம் பேங்க்" க்கு திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை சமர்ப்பித்திருந்தாள்.

நிச்சயமாக, இரண்டு மணி நேரத்திற்குள் "டைம் பேங்க்" ஒரு நர்சிங் தொழிலாளியை வந்து வீட்டு உரிமையாளரைக் கவனித்துக் கொள்ள அனுப்பியது.

நர்சிங் தொழிலாளி தினமும் வீட்டுப் பெண்ணை கவனித்து, அவளுடன் அரட்டையடித்து, அவளுக்கு சுவையான உணவைச் செய்தார்.

நர்சிங் தொழிலாளியின் உன்னிப்பான கவனிப்பில், வீட்டுப் பெண் விரைவில் குணமடைந்தார்.

குணமடைந்த பிறகு, வீட்டு உரிமையாளர் "வேலைக்கு" திரும்பினார். தான் ஆரோக்கியமாக இருக்கும் போதே "டைம் பேங்க்" இல் அதிக நேரத்தை மிச்சப்படுத்த விரும்புவதாக அவர் கூறினார்.

இன்று, சுவிட்சர்லாந்தில், முதுமையை ஆதரிக்க "டைம் பேங்க்" பயன்படுத்துவது பொதுவான நடைமுறையாகிவிட்டது.

சுவிஸ் அரசாங்கம் "டைம் பேங்க்" திட்டத்தை ஆதரிக்கும் சட்டத்தையும் இயற்றியது.


நம்ம நாட்டுலயும் இப்படி திட்டம் இருந்தா நல்லா இருக்கும்ல!(இதை நாம் வேறுவிதமாக  புண்ணியத்தை சேர்க்கச் சொல்கிறோம்...அது டைம் பேங்கை விட அனைத்து விதத்திலும் சிறந்து இல்லையா )

Monday, March 11, 2024

படித்ததில் பிடித்தது

 ஒருவேளை வனவாசம் படிக்காமல் இருந்திருந்தால் அண்ணாதுரையை பேரறிஞர் அண்ணா என்றும் கருணாநிதியை கலைஞர் கருணாநிதி என்றுமே நம்பிக்கொண்டிருந்திருப்பேன்-


ஒருவேளை "வந்தார்கள் வென்றார்கள், சென்றார்கள்" படிக்காமல் இருந்திருந்தால் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களெல்லாம் அற்புதமானவர்கள் என்றும் பாபர் காலம் பொற்காலம், அக்பர் காலம் பொற்காலம் என்றே நம்பிக்கொண்டிருந்திருப்பேன்-


பூலித்தேவன் முதல், அழகுமுத்துக்கோன் வேலுநாச்சியார், கட்டபொம்மன் மருதுபாண்டியர்,வீரவாஞ்சி, பாரதியார், வ.உ.சி, சுப்ரமணியசிவா, நேதாஜி, ஜான்சிராணி போன்ற என்னற்ற வீரர்களின் தியாக, போராட்ட வலராறுகளைப் படிக்காதிருந்தால் வெள்ளையர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்காகத்தான் இங்கே ஆண்டார்கள் என்றும் கூட நம்பவைக்கப்பட்டிருப்பேன் -


இவை எதையுமே தெரியாமல் இங்கே வாழும் மக்கள்தான் அதிகம் -


கல்வியறிவு பெருமளவில் இல்லாமலிருந்த மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு இருந்த நாட்டுப்பற்று, ஆன்மிகப்பற்று, போராடும் வீரம் சுதந்திரத்திற்குப் பிறகு இன்று பெருமளவிற்கு மக்கள் கல்வியறிவு பெற்றும் கூட இல்லாமல் போனதற்குக் காரணம் இந்திய அளவில் கல்வித்துறையில் பெருமளவிற்கு ஊன்றிவிட்டிருக்கும் கம்யூனிஸ, மிஷநரிக் கூட்டங்களே -


இந்த நாட்டில் நம்மை அடிமைப்படுத்திய கொடுங்கோலர்களின் வரலாற்றை அவர்கள் செய்த கொடுமைகளை மறைத்து அவர்களை தேவதூதர்கள் என்று நம்மிடம் நம்பவைத்துள்ளனர் -


உதராணமாக தளராத முயற்சிக்கு உதாரணமாக கஜினி முகம்மது 17 முறை படையெடுத்தான் என்று மட்டுமே பதியப்பட்டுள்ளது ஆனால் 17 முறையும் கொள்ளையடிக்க மட்டுமே வந்தான், பல லட்சம் மக்களைக் கொன்றான், பல நூறு கோவில்களை இடித்தான் என்ற வரலாறு எங்குமே காணோம் -


அதே கஜனி முகமதுவின் சொந்த நாடான ஆப்கானில் அவனது கல்லறை இருக்கும் இடம் கூட இன்று யாருக்கும் தெரியாது -

(பல கோவில் சொத்துக்களைக் கொள்ளையடித்த அவனது நாடு இன்று பிச்சைக்கார தேசமாக இருப்பது இறைவன் செயல்)-


இந்தியாவின் இருப்புப்பாதைகளின் தந்தை என்று லார்ட் டல்ஹொசி பெயரைப் படித்திருப்போம், ஆனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் வளங்களை வேகமாகக் கடத்துவதற்காக மட்டுமே அவன் இருப்புப்பாதைகளை அமைத்தான் என்பதுதான் உண்மை -

உதாரணமாக இருப்புப்பாதையே இல்லாத மூனாறு -தேனி இடையே அவன் அந்தக்காலத்திலேயே பாதை அமைத்தது மூனார் பகுதிகளில் அதிக அளவில் கிடைக்கும் தேயிலை மற்றும் ஏலம் போன்ற பணப்பயிர்களைக் கடத்தத்தான் -


இவற்றையெல்லாம் மறைத்து நம்மை முட்டாள்களாக்கியது -


சுதந்திர இந்தியாவில் 35 வருடங்கள் தொடர்ச்சியாக கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள், திராவிடக் கட்சிகளுக்குப் பிறகு 50 ஆண்டுகளாக தமிழக கல்வித்துறையில் வியாபித்து வரும் கிறிஸ்தவர்கள் -


இவற்றையெல்லாம் மாற்றியமைத்து பழம்பாரதத்தின் பெருமைகளையும், பழந்தமிழர் வீரத்தையும், அறிவையும், ஆன்மீகத்தையும் மீட்டெடுக்க -


இங்கே, திராவிடக் கட்சிகள் முற்றிலும் களையப்பட்டு தேசிய, தெய்வீக சிந்தனையுள்ள கட்சிகளின் ஆட்சி அமையவேண்டும் -Mk😍

Sunday, March 10, 2024

ஹாப்பி ஸ்ட்ரீட்????

பெ ரிய பெரிய கிரிமினல் விசயங்கள் தான் மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அப்படியான ஒன்று தான் ” ஹாப்பி ஸ்ட்ரீட் ”.  இதைப் படிச்சா உங்க குடும்பத்திற்கு நல்லது.


ஹாப்பி ஸ்ட்ரீட் என்றவுடன், ஏதோ கலாச்சார சீரழிவு என்று நினைத்துக் கொண்டு கலிகாலம்டா என்று தலையில் அடித்துக் கொண்டு போய் விடுகிறோம். ஆனால், அது லெஃப்ட்ல போட்ட இண்டிகேட்டர். நிஜத்தில் வலதுபுறமா கூட்டிட்டுப் போய் போதைப் பொருள் விற்கும் தளம் அது!


மனிதர்களுக்கு பொதுவாகக் கொண்டாட்ட மனநிலை தேவைப்படுகிறது. பண்டிகைகள் / கோவில் திருவிழாக்கள், நண்பர்களுடன் கூடிக் கும்மாளம் போடுவது, அவ்வளவு ஏன்.... ஞாயிற்றுக் கிழமை கறி எடுத்து குடும்பத்துடன் சேர்ந்து புசிப்பது கூட கொண்டாட்ட மனநிலை தான். இது தனிமையில் கிடைக்காது. குறைந்தபட்சம் சிறு கூட்டம். வாய்ப்பு கிடைத்தால் பெருங்கூட்டம். 


கொஞசம் யோசித்துப் பாருங்கள்... நியூ இயர் கொண்டாட்டம் என்பதில் என்ன நடக்கிறது? யாரும் யாருக்கும் வாழ்த்து சொல்லிக்கலாம். ஆரவாரமாக எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் கெட்ட வார்த்தைகளில் கூட கத்திக் கொள்ளலாம். வாகனங்களை கட்டுப்பாடின்றி ஓட்டிக் கொள்ளலாம். குடித்து விட்டு பொது நாகரீகம் இல்லாமல் அலையலாம். ஏன் பொதுவிடத்திலேயே குடிக்கலாம். இதெல்லாம் கூட்டமாகச் செய்யும் போது குற்றவுணர்வின்றி போகும். 

எல்லாரும் செய்வதால் தவறில்லை என்ற மாயை. எல்லாரும் செய்றாங்க நானும் செய்றேன். 


இப்ப புரியுதா...? கூட்டமா செய்யும் போது சமூக பயம் , சமூக ஒழுங்கு, கட்டற்ற கொண்டாட்ட மனநிலை. 


சரி, ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்கும், போதைப் பொருள் விற்பனைக்கும் என்ன சம்பந்தம்? 


முதலில் பெரிய ஸ்பீக்கர் வைத்து இளைஞர்களின் தினவுக்கு இரையாக ஆடச் செய்வர். ஆண்களுக்கு பெண்கள் முன் வித்தையைக் காட்டவும், பெண்களுக்கு ஆண்கள் முன் ஈர்ப்பைக் காட்டவும், ஆட்டத்தில் உற்சாகமும், அதீத கொண்டாட்டமும் பொங்கும். நிகழ்ச்சி முடிந்ததும், ஏதோ பெரிதாகக் கொண்டாடியது போன்ற ஒரு மகிழ்ச்சி உருவாகும். 


அடுத்து....?


நாமெல்லாம் நண்பர்களுடனோ சில குடும்பங்கள் சேர்ந்தோ டூர் போய்விட்டு திரும்பும் போதே... அடுத்து எங்கே போகலாம் என்று திட்டமிடுவோம் இல்லையா? அதே போல அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டிற்கு இப்படி போகணும், அவனையும் கூப்பிடணும் லைட்டா சரக்கு அடிச்சுட்டுப் போனா கூடுதல் மஜாவா இருக்கும் என்றெல்லாம் திட்டம் எழும்.  அடுத்த சில நாட்களுக்கு ஹாப்பி ஸ்ட்ரீட்டில் ஆடியதை எல்லாம் சற்றே மிகைப் படுத்தி நண்பர்களிடம் பகிரப்படும். ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்குப் போகாதவனெல்லாம் சமகால இளைஞன் அல்ல என்பதாக சித்தரிக்கப்படும். 


அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டில் சீனியர்கள் சரக்கடித்து விட்டு வந்திருப்பார்கள். உடன் வந்த குடிப்பழக்கம் இல்லாத பெண்களை, “இன்று மட்டும் கொஞ்சமா” என்று வற்புறுத்துவார்கள். அவர்களும், அவர்கள் வற்புறுத்துவதால் மட்டும் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு குடிக்கத் தொடங்குவார்கள். இதன்... நீண்ட நாள் இலக்காக...


இந்தக் கூட்டத்திற்குள் ஒருவன் நுழைந்து ஒரு ஸ்டஃப் இருக்கு பாஸ்... யூஸ் பண்ணிப் பாருங்க என்று ஒரு பணக்கார இளைஞனை இழுப்பான். முதலில் ஓசியாக... பிறகு ஷேரிங்காக, அப்புறம் அவனவன் காசில், பிறகு ஸ்டஃப் கிடைக்கவில்லை என்று டிமாண்ட் கூட்டி... வேண்டுமென்றால் கொஞ்சம் மொத்தமாக வாங்கணும். இன்னும் நாலைந்து பேர் ஷேர் பண்ணினால் தான் என்று இன்னும் இளைஞர்களை உள்ளிழுப்பார்கள். இது தான் எல்லா தேசத்திலும் போதை விற்பனை ஆசாமிகளின் சேல்ஸ் டெக்னிக். 


நம்பாதவர்கள் ஹாப்பி ஸ்ட்ரீட் ஸ்பான்சர்களின் நெட்வொர்க்கை தேடிப் பாருங்கள். 


ஒன்று பத்தாகும், பத்து ஆயிரமாகும்.  நாளைக்கு பிடிபடுபவர்கள் எல்லாம் சமூகத்தில் பொருளாதார பெருசுகளாக இருப்பதால், பணத்தை விட்டெறிந்து ரகசியம் காப்பார்கள். இந்த போதைப் பழக்கம் நடுத்தரக் குடும்பத்திற்குள் நுழையும் போது, பணத் தட்டுப்பாட்டால், வழிப்பறி திருட்டு, கொலை வரை சர்வசாதாரணமாகி விடும். 


எச்சூச்மீ.... உங்க வீட்ல இளம் வயதினர் இருக்காங்களா? ஹாப்பி ஸ்ட்ரீட் பத்தி பேசத் தொடங்கும் போதே செருப்பால் அடித்து அடக்கி வச்சுடுங்க. புள்ள முக்கியமா இல்ல அதோட பிடிவாதம் முக்கியம்


இந்த பதிவை உங்கள் குழுவில்/நண்பர்களுடன் பகிருங்கள்.

Tuesday, March 5, 2024

சுய பரிசோதனை.

மறுக்க முடியாத, மூடி மறைக்க முடியாத எதார்த்தத்தை பற்றிய சுயபரிசோதனையில் தமிழ்நாடு....


கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது... 


இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்...


ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்..


இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்... 


எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்..


எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்... 


பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன... 


எங்கு பார்த்தாலும் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற பேச்சுகள்...


இதற்கு பின்னணியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை நண்பர் ஒருவர்

அனுப்பியுள்ள செய்தி......


1. மது & போதை

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம்...


இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகிவிட்டது... 


தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது...


என்கின்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும்...


 அவர்களுக்கு போட்டியாக....

 பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்...


 உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில்...


 இன்று குடிகார்ர்கள் நிறைந்து , 

உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது... 


குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ , குறிப்பிட்ட பணி நேரத்திலோ... 

செய்ய முடிவதில்லை.. 


குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள், 

கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை... 


அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.. அதற்கு 1000 கூலி கேட்கின்றனர்...


 வீட்டுக்கு 500, தனக்கு இருவேளையும் மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு 500 என்று... 


இது மட்டுமல்லாமல் மலட்டுத்தன்மை, பாலியல் குறைபாடுகள் ஏற்பட்டு, முறையற்ற உறவுகள் பெருகுவதும்,...


இதனால் கவனிக்கப்படாத குழந்தைகள் சமூகவிரோதிகளாகவும் உருவாகும்...


மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நம் தமிழகம் வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கிறது...


2. 2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால்....

 பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து....

 அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தனர். 


சிலர் வேறு வேலைகளுக்கு சொற்ப சம்பளத்திற்கு சென்றனர்.. 


சிலர் கவலையில் குடி நோயாளிகளாகிவிட்டனர்...


 மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்க பயந்து பணிக்கு செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு.


3. நூறுநாள் வேலை..


இந்த திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை...

ஆனால் .... 

தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை.. 


இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால்...


 காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், 

வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்


வேறு எந்த வேலையும் இல்லை.. 150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால்....


சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது...


4. இலவசங்கள்...

அரசு தரும் இலவச பொருட்களும், 

ஊரக வேலைவாய்ப்பு திட்டமும்... 

 மக்களை உழைக்க விரும்பாத, 

சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கிவிட்டனர்..


5. நம் கல்விமுறை மற்றும் கல்வியின் தரம்..

அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை... 


இத்தகைய காரணங்களால்.....

 தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது...  


தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர், 

வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்... 


ஓட்டல் முதல் கட்டுமான துறை வரை இதுதான் நடக்கிறது... 

ஒரு நாளைக்கு 850-1000 சம்பளத்திற்கு , 

(பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட...


ஒரு வடநாட்டவர் 2 மணிநேரம் அதிகமாக 500-600 சம்பளத்திற்கு செய்கிறார்.. 


தங்க வீடு, சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது.. 

வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்... 


இதுதான் அனைத்து வேலைகளுக்கும்... 

 

நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை...


கடைசியாக..


நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்களின் மனநிலையில்.... 

ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது... 


வேலையே செய்யக்கூடாது,


சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும்,


சும்மாவே பணம் கிடைக்க வேண்டும்,


சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், 


தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்... 


இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசாங்கம்.... 


கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் , 


இன்னும்... 


எல்லோரும்...?????

 

இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள..நோயை மாற்ற...


வழி தேடினால் மட்டுமே தமிழகம் தப்பிப்பிழைக்கும்...🙏


மதுவை ஒழிக்க வேண்டும்


கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்


படித்துப் பார்த்தேன் இன்றைய தமிழகத்திற்கு தேவையான பதிவு..


©️